Page 316 of 400 FirstFirst ... 216266306314315316317318326366 ... LastLast
Results 3,151 to 3,160 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

 1. #3151
  Senior Member Diamond Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  9,904
  Post Thanks / Like
  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

 2. Likes sivaa liked this post
 3. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Posts
  Many
   

 4. #3152
  Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
  Join Date
  Apr 2011
  Posts
  9,085
  Post Thanks / Like
  கோபால்!  வார்ரே வா! கலக்கி விட்டீர்கள். என்ன ஒரு அழுத்தமான 'ராஜ' ஆய்வு. மூன்று முறை படித்து விட்டேன். 'ராஜா' என்றால் அப்படியே 'சுர்ர்' என்று ஏறுகிறது. ஆதிராம் சார் சொன்னது போல அட்சயப் பாத்திரம் கொண்டவன் ராஜா. எடுக்க எடுக்க சுரந்து கொண்டே இருக்கும். அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபி. வந்து கொண்டே இருக்கும்.

  //பொறுமையாய் இரு என்று லேசான தலையாட்டலுடன்//

  ஆஹா! அந்த ஒரு அலட்டாத தலையாட்டலில் தரணியே அடிமைப்பட வேண்டும். 'பொறுமையா இரு' என்பதற்கு பொருத்தமான தலையாட்டல். சைட் போஸ்கள் வர்ணிக்க முடியாத அழகு அம்சங்கள்.

  'சாதாரண கான்ஸ்டபிக்கிட்டே நான் பேசறதில்லேன்னு உனக்குத் தெரியுமில்லே' என்று சந்திரபாபுவிடம் அலட்சியமாக சொல்லும்போது ஒரிஜினல் ராஜாவின் குணத்தையும், திருடனாக நடிக்கும் ராஜாவின் குணத்தையும் ஒரு சேர காட்டி அற்புதமாக வியக்க வைப்பார். இது அதிகாரி ராஜாவுக்கும் பொருந்தும். நடிப்புக் 'கள்ளன்' ராஜாவுக்கும் பொருந்தும்.

  //LIghter இல் போட்டோ எடுக்கும் லாவகம்... வேறு ஒரு நடிகன் கனவு கூட காண முடியாத நடிப்பு.//

  வாயில் ஸ்டைல் சிகரெட்டுடன் எதிராளிகள் உணராவண்ணம்... அவர்கள் நம்பும் வண்ணம் அதே சமயம் செய்யும் வேலையை நீங்கள் சொல்வது போல லாவகமாக, சாமர்த்தியமாக செய்வதோடு பார்வையாளர்களுக்கு இது வில்லன் கோட்டையில் 'ராஜா'வின் கள்ளத்தனமான நடிப்பு என்பதையும் புரியவைத்து விடுவார். அந்த சமயத்தில் எதிரிகளுக்கு சந்தேகம் வராத சிரிப்பை உதிர்ப்பார். அந்த சிரிப்பில் ஜாக்கிரதை உணர்வும் இருக்கும். போட்டோ எடுக்கும் போது எச்சரிக்கையாக எடுப்பார். இரண்டு மூன்று snaps எடுத்தவுடன் அந்த சிரிப்பில் வெற்றிப் பெருமிதம் ஜொலிப்பதை புரிந்தவர்கள் வெகு இலகுவாக உணர முடியும். சந்தேகக் கோடு பரவா வண்ணம் அடியாளை பின்புறம் சிரித்தபடி தட்டிக் கொடுத்து அடுத்த ஸ்டெப் முன்னேறுவது அபாரம். Flash பண்ணும் போதும் ஸ்டைல் கொப்பளிக்கும். Handling அருமையாக இருக்கும். கட்டை விரலுக்கும், ஆட்காட்டி விரலுக்கும் இடையே லைட்டரை வைத்து அற்புதமாக சில தடவை ஷேக் செய்வார். Focus பண்ணுவதும் அற்புதமாகத் தெரியும். இவையனைத்தும் சில வினாடிகள்தாம்.

  உலகில் நம் ரசிகர்களை போல கொடுத்து வைத்தவர்கள் எவரும் இல்லை. ருசிக்க ருசிக்கத் தந்தவன் நம் ராஜா.

  //தங்கத்தை தொட்டதும் கையை தட்டி விடும் அவசர அலட்சிய எச்சரிக்கை//

  அற்புதம்...நான் என்னென்ன நினைக்கிறேனோ அது அப்படியே உங்கள் எழுத்தில் வந்து விழுந்து என்னை பிரமிக்க வைக்கிறது. ஜம்பு தங்கத்தைத் தொட்டதும் படுஅவசரமாக 'வெடுக்'கென்று தட்டி விடுவார். அது போல அபின் பெட்டியை முகர்ந்து smell செய்யும் அழகே அழகு.

  பாலாஜி இருக்கும் போதே ஜெயாவை ஜாலியாக சைட் அடிப்பது ஜோரான ஜோர். பாலாஜி அதை அதிகமாக கண்டு கொள்ளாமல் காட்டிக் கொள்வது சூப்பர். (பாஸிற்கு விசுவாசம், கொடுக்கும் வேலையை எப்பாடு பட்டும் முடித்து பெயர் வாங்கும் கொத்தடிமை வில்லன். ராஜா மூலமோ அல்லது யார் மூலமோ காரியம் நடந்ததும் அப்படியே கழற்றி விட்டு செல்லும் பாஸ் பக்தி என்று பாலாஜியும் ரகளை...'ராஜாவுக்கு உன் மேல ஒரு கண் இல்லே' என்ற ராஜாவின் காதலை ராதாவிடம் கேட்டு அதை அப்படியே தனக்கு சாதமாக்கிக் கொள்ளும் எத்தன். எல்லாவற்றையும் பாஸிற்காக செய்யும் பரிதாப பாபு. இறுதியில் அதே பாஸ் 'அவன் துரோகின்னா அவனை இங்க ஏண்டா கூட்டிகிட்டு வந்தே?' என்று விஸ்வத்தை அழைத்துச் செல்லும் பாபுவிடம் புத்திசாலித்தனம் கலந்த நியாயமான கேள்வியைக் கேட்டு பாபுவையும் நம்மையும் அதிர்ச்சிக்குள்ளாக்குவது ஏக களேபரம். அத்தனை நாள் பாபுவின் பாஸ் விசுவாசம் ஒரே நொடியில் தவிடுபொடியாகும்.

  //ஜம்புவிடம் கத்தியை காட்டி ஓடுடா என்ற மிரட்டல் தொனியில் காட்டுவது//

  சண்டையின் இறுதியில் உத்திரத்தைப் பிடித்து தொங்கி, எம்பி, இரு கால்களாலும் எதிரி வில்லனுக்கு kick கொடுப்பது டாப் ஸ்டைல்.

  //தொடரும் ramantic marvel கல்யாண பொண்ணு lead scene (அப்புறம்தான்....)//

  நிற்கவே மாட்டார். 'துறுதுறு'என்று சுழன்று கொண்டே இருப்பார். பாடலின் முடிவில் (லா லா லலல்லா) ஜெயாவை இழுத்துக் கொண்டு ஆடிக் கொண்டே செல்பவர் ஒரு கட்டத்தில் இடது புறமாக அடுத்த ஸ்டெப்பை வைப்பார் என்று நாம் நினைக்கும் மாத்திரத்தில் இனிமையாக ஏமாற்றுவார். எதிர்பாராமல் சடுதியில் வலது பக்கம் மூவ்ஸ் தருவார். அற்புதமாக இருக்கும். சி.வி.ஆர் பாடலோடு 'இடைவேளை' தந்து குதூகலப் படுத்துவார். Boat இல் பின்புறம் பறக்கும் அந்த கத்தரிப்பூ வண்ணக் கோட் அவ்வளவு அழகு. எனக்கு மிகவும் பிடித்த ஷாட்.

  //இன்ஸ்பெக்டர் உடை அற்புதமாக இருக்கும். அந்த காட்சியில் stiffness காட்டி எல்லோரையும் குழப்பி பிறகு போலிசை விரட்டும் நயம்.//

  துப்பாக்கியை முகத்தருகே வைத்தபடி உணர்த்தி ஜெயாவிடம் தான் உண்மையான போலீஸ் அதிகாரிதான் என்று சிறு தலையசைவில் அருமையாக உணர்த்துவார்.

  //தொடர்ந்த நாகலிங்கத்தை சந்திக்கும் காட்சியில் தாராவை கண்டதும் காட்டும் கண நேர சங்கடம் கலந்த முகபாவம்..(தாராவின் நிலைக்கு ராஜாவும் காரணமே)//

  சொல்ல வார்த்தைகள் வரவில்லை. அந்த ஒரு வினாடியில் திகைப்பு, குற்ற உணர்வு, 'இவள் எப்படி இங்கே?!' என்ற ஆச்சர்யம் என்று ஓராயிரம் பாவங்கள் காட்டி விடுவார்.

  //இரண்டில் ஒன்று காட்சி ஊடல் கலந்து காதல் விருந்து//

  'மெத்தை போடும் தேவன் என்று என்னைச் சொல்லம்மா' வரிகளின் போது முழங்கால்களை கொஞ்சம் மடக்கி கைகளை முழங்கால்களில் பதித்து வலது குதிகாலை சற்றே பின்பக்கம் உயர்த்தி ஜெயாவை நோக்கி நடந்து வரும் அழகில் அள்ளிக் கொண்டு போவார். எப்படித்தான் செய்கிறார் என்று ஆச்சர்யம் நம்மிடம் மேலோங்கியபடியே இருக்கும். ஷூவுக்கும், அந்த திராட்சை நிற உடைக்கும் அடடா! எப்படிச் சொல்ல!

  கிளைமாக்ஸ் ரகளைகளைப் பற்றி ஒரு பட்டி மன்றமே நடத்தலாம். என்னைப் பொறுத்தவரை இப்படத்தின் கிளைமாக்ஸ் என்னைக் கவர்ந்தது போல வேறு எதுவுமே இல்லை என்பேன். இதே சிக்கல் கிளைமாக்ஸை சி.வி.ஆர் 'சங்கிலி' யிலும் தொடர்வார்.

  'ராஜா' என்பதால் எவ்வளவோ வேலைகளுக்கிடையில் உங்கள் அற்புதப் பதிவிற்கு பின்னூட்டம் அளித்து விட்டேன். ராஜா பற்றி முழு விவரங்களையும் ரத்தினச் சுருக்கமாக ஒன்று விடாமல் நான் அணுஅணுவாக ரசித்த காட்சிகளை ரகளையான வார்த்தைகளில் எழுதி ஜமாய்த்து விட்டீர்கள். ரசனையில் இருவர் உள்ளமும் ஒன்றே! விரித்து விவரித்து எழுத ஆர்வமே! முயல்கிறேன்.
  Last edited by vasudevan31355; 26th January 2017 at 07:29 AM.
  நடிகர் திலகமே தெய்வம்

 5. Likes Barani, sivaa liked this post
 6. #3153
  Senior Member Diamond Hubber sivaa's Avatar
  Join Date
  Nov 2012
  Location
  canada
  Posts
  8,486
  Post Thanks / Like
  அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.


  Last edited by sivaa; 26th January 2017 at 09:00 AM.
  நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
  உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

 7. #3154
  Senior Member Diamond Hubber sivaa's Avatar
  Join Date
  Nov 2012
  Location
  canada
  Posts
  8,486
  Post Thanks / Like
  இன்றை தினத்தில் வெளிவந்த
  நடிகமன்னனின் திரைக்காவியங்கள்


  மோட்டார் சுந்தரம் பிள்ளை(1966),

  ராஜா(1972),

  சிவகாமியின் செல்வன்(1974),

  தீபம்(1977),

  அந்தமான் காதலி(1978),

  ரிஷிமூலம்(1980),

  ஹிட்லர் உமாநாத்(1982),

  நீதிபதி(1983),

  பந்தம்(1985),

  மருமகள்(1986),

  குடும்பம் ஒரு கோவில்(1987)
  நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
  உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

 8. #3155
  Senior Member Diamond Hubber sivaa's Avatar
  Join Date
  Nov 2012
  Location
  canada
  Posts
  8,486
  Post Thanks / Like
  நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
  உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

 9. #3156
  Senior Member Veteran Hubber
  Join Date
  Feb 2012
  Location
  Indonesia
  Posts
  4,127
  Post Thanks / Like
  படம் - சிவகாமியின் செல்வன். -26 ஜனவரி 1974.
  பாடல்- எத்தனை அழகு கொட்டி கிடக்குது.
  பாடலாசிரியர்- புதுமை பித்தன்
  இசையமைப்பு- மெல்லிசை மன்னர்.
  நடிப்பு- சிவாஜி-வாணிஸ்ரீ.
  இயக்கம்- சீ .வீ.ராஜேந்திரன்.


  நான் பதினைந்து வயது வயதுக்கு வந்த விடலையாய் ,மீசை முளைக்கும் பருவத்தில், இனம் பிரியா குழப்ப இன்ப உணர்வுகள் வாட்டி வதைத்த போது ,நான் மீண்டும் மீண்டும் பார்த்து மகிழ்ந்த படம் (குடந்தை நூர்மஹாலில் வரிசையாய் ஐந்து நாட்கள்,பிறகு விரல்கள் போதாது)

  அதிலும், என் விருப்பமான ஜோடியின் எத்தனை அழகு பாடலுக்காக மட்டும்(amatory மூட்,erotic arousal எப்படி வேண்டுமானாலும் வைத்து கொள்ளுங்கள்)இத்தனை முறை!!!!????

  ஆனால் அதே பாடலை, உலகத்தில் இன்பங்கள் பாக்கி உண்டா என்ற பருவத்தில் பார்க்கும் போதும், ஒரு உருது கவிதை, ஒரு erotic சிற்பம் (அ )சித்திரம் பார்க்கும் புத்துணர்வை தருகிறது என்றால் எழத பட வேண்டியதே.

  பொதுவாக சிவாஜி,பெண்களை விட ,பெண்களின் அம்மாக்களையே குறி வைத்தவைத்த முதல் அறுபதுகளில் இருந்து விடு பட்டு, பெண்களையும்,வாலிபர்களையும் ஈர்க்க தொடங்கி ,வசந்த மாளிகையில் ராஜாவாய் சுமதி சுந்தரியுடன் , இளைய மன்மதனாக ஜொலித்த கால கட்டம். வேறெந்த நடிகையுடன் நடித்ததை விட, வாணிஸ்ரீ.யுடன் அவர் நெருக்கம் உயர்ந்த மனிதனில் தொடங்கி நல்லதொரு குடும்பம் வரை தொடர்ந்தது.

  காதல் காட்சி என்ற போதும் பொத்தாம் பொதுவாக நடிக்காமல், பாத்திர இயல்பு படி,வித்தியாசம் காட்டி ,சூழ்நிலை, கதையமைப்பு புரிந்து நடிக்கும் சுவை ஆஹா!! அதிலும் எத்தனை variety !!!எவன் எவனையோ காதல் மன்னன் என்று அழைக்கிறோமே?இவனல்லவோ காதல் பேரரசன் என்று தோன்றும்.

  பொதுவாக erotism என்பது நமது கோவில்கள்,மத நூல்களில் கொண்டாட பட்ட போதும் ,british inhibitions காரணமாய் ,sexual slavery and deprivation இல் அகப்பட்டு, நல்ல hightened aesthetics என்று சொல்ல படும் erotic sensual intense romance என்று சொல்ல படும் காட்சிகளே எந்த இந்திய படங்களிலும் இல்லை.(அப்படியே ஒன்றிரண்டு வந்தாலும், காஞ்ச மாடு கம்பங்கொல்லையில் புகுந்த case தான்). எனக்கு தெரிந்த வரை இந்த Erotic genre இலும் முழு மதிப்பெண் நம் நடிகர் திலகத்துக்கே.நெஞ்சத்திலே நீ-சாந்தி, மெல்ல நட-புதிய பறவை,பலூன் காட்சி-சுமதி என் சுந்தரி, plum கடிக்கும் வசந்த மாளிகை என்று ஆயிரம் இருந்தாலும் ,இந்த குறிப்பிட்ட பாடல் erotic திலகம்.

  எத்தனை அழகு பாடலில்(ஒரே டேக்கில் படமாக்க பட்டதாம்.hats off ! ஒரு சப்பை முத்த காட்சியை 20 டேக் எடுக்கும் கலிகாலம்) முதலில் களம். தங்களுக்குள் மண பந்த ஒப்பந்தம் புரிந்த(மற்றவர்கள் அறியாமல்) ஒரு ஜோடி ஒரு மழை நிறைந்த குளிர் இரவில்,ஒரு அறைக்குள் மாட்டி, தங்களை இழக்கும் காட்சி. அவனுக்கோ இன்பத்தை சோதிக்கும் ஆர்வமும், சுவைக்க துடிக்கும் அவசரமும்,தன்னை மறந்த நிலை. அவளுக்கோ, தயக்கம் கலந்த சம்மதம், தவிக்க விடும் நாணம்,உரிமையரியா உறவின் அறியா அச்சம் என இந்த ஜோடியின் தவிப்பை, சிவாஜியும் ,வாணிஸ்ரீ யும் அற்புதமாய் expressions ,body language ,suggestive movements என்று பின்னியிருப்பார்கள்.

  முதலில் இந்த பாடலில் சி.வீ.ஆரின் colour sense and psychology யை பாராட்டியே ஆக வேண்டும்.(இதை அவர் சுமதி என் சுந்தரியிலேயே அற்புதமாக கையாண்டிருப்பார்) வாணிஸ்ரீ முதலில் ஒரு பிங்க் நிற புடவை அணிந்து அறைக்குள் வருவார். பிங்க் ஒரு வளர் சிறுமியின் பெண்மை குறியீடு. பிறகு சிவப்பு வண்ண அவசர ஆடைக்கும் மாறுவார்.சிவப்பு feeling of intense excitement ,romantic warmth ஐ enhance பண்ணும் நிறம்.ஆணுடையது வெளிர் பச்சை நிறம்.fertility ,bodily functional assurance குறிப்பது. இந்த இரண்டு நிறங்களின் இணைப்பே பாதி mood elater ஆக காரணியாகும்.

  இதை விட hero -heroine physical ஆன எவ்வளவோ சிவாஜி பாடல்கள் கூட உண்டு. ஆனால், இந்த காட்சி தந்த intensity எந்த காட்சியும் தந்ததில்லை.

  ஒரு இள விமானியை, ஒரு target நோக்கி படையெடுக்கும் adventurism ,experimentation முதலிய உணர்ச்சிகளுடன்,ஒரு அவசரம் கலந்த காம விழைவை அற்புதமாய் பிரதிபலிப்பார் NT .வாணிஸ்ரீ (AVM ராஜன் சொல்வது போல சிவாஜிக்காக பிரம்மா ஸ்பெஷல் ஆய் படைத்த கருப்பழகி) சிவாஜியுடன் இழைந்தும், தயங்கியும், உணர்ச்சி வசபட்டும், சூழ்நிலையறிந்து விலகுவதும், இறுதியில் தொடர் தூண்டுதலால் இணங்குவதும் என அற்புதமாய் NT க்கு ஈடு கொடுத்திருப்பார்.

  தன இடத்திலிருந்து எழுந்த உடன் சிவாஜி தன pant அய் suggestive ஆக கையால் சிறிதே உயர்த்தும் காட்சி(ஆண்டவன் கட்டளை அழகே வாவிலும் இது உண்டு) , பிறகு ஒரு இலக்கில்லாமல் விலகும் வாணிஸ்ரீயை ஒரு குறிப்பின்றி தடவுவார். பிறகு ஒரு இலக்கில்லா passionate முத்தங்கள்(ஒரு awkward அவசரம் தெரியும்),பிறகு குறிப்பை உணர்த்தும் coat -stand காட்சி, திரை காட்சி என அவசர தூண்டல் ,ஓரு அனுபவமின்மையின் awkward desperation ஐ மிக அழகாக உணர்த்துவார். இதில், வாணிஸ்ரீயின் திரையை இறுக்கும் கைகள்,என்று எல்லாமே suggestive erotism .physical ஆக மிக குறைவான ,தேவையான அணைப்புகள் மட்டுமே இருக்கும்.

  பிறகு மஞ்சத்தில் ஓரளவு தயார் நிலைக்கு ஆளானாலும் ,பிறகு அரை மனதுடன் தயங்கி விலகி, தலையணையை மார்புடன் வைத்து காத்து கொள்ள எண்ணும் வாணிஸ்ரீயை ,ஒரு இரையை குறி வைக்கும் இறுதி ஆவேசத்துடன் சிவாஜி அணைத்து இணங்க வைப்பார்.

  ஆபாசம், கவர்ச்சிக்கு விடை தெரியாமல் இன்றும் முழிக்கும், நம் தமிழ் நாட்டு தாய்,தந்தை குலங்களுக்கு, இந்த காட்சியின் அழகும்,அமைப்பும், erotic hightened emotional aesthetics புரியாமல்,இந்த படத்தை கை விட்டனர்.இந்த காட்சியில்,மற்ற காதல் காட்சிகளில் இல்லாத, எந்த மிகையும் இருக்காது. சம்பத்த பட்டவர்களின் உணர்வு மிகு நடிப்பாற்றல்,அழகுணர்ச்சி மிகுந்த suggestive shots &gestures தவிர.,

  அந்த இளம் ஜோடி எதிர்பாராத விதமாக மாலை மாற்றிக்கொண்டு கிட்டத்தட்ட கணவன்-மனைவியாகி விட்ட நிலையில் ,தனியறையில்.
  பக்கத்து இலையில் பாயசம் ஏராளம் என்பது போல மற்றுமோர் இளம்ஜோடியின் கொஞ்சல் மறு அறையில்.

  அந்த இளம் விமானி இவற்றில் தூண்ட பட்டு தன் காதலியை புதிதாக பார்க்கிறான்.அந்த பார்வை என்ன சொல்கிறது? அவள் அழகை ரசிக்கிறதா? தனக்கு கிடைத்த புதிய உரிமையில் அழகை விழுங்கி களிக்கிறதா? மெல்லிய அழைப்பு விடுகிறதா? தன் புணர்ச்சி வேட்கையை பறை சாற்றுகிறதா?அந்த காதலியோ ,இணங்கும் ஆசையிலா, புதிய உணர்வின் ,சூழ்நிலையின் பயம் கலந்த நாணமா,விழைவுக்கு பதில் விழைவா,அழைப்பிற்கு தூது விடும் கண்களா?

  எழும் நாயகன் தன்னுடைய ஆண்மையின் எழுச்சியையும் குறிப்பால் உணர்த்தி கைகளில் முத்தமிட ,ஏற்றாலும் சிறிதே விலகும் பயம் கலந்த நாணம்.எத்தனை அழகு கொட்டி கிடக்குது,எப்படி மனதை தட்டி பறிக்குது ,அம்மம்மா உடலெங்கும் சிலிர்க்குது ஆனாலும் அச்சம்தான் தடுக்குது என்ற வரிகள் மௌனமான காதலர்களின் உடன் மொழியில் பாவத்தில் ,கண்களின் காவிய மொழியில் ,அனுசரணையான இணைவு நடிப்பில் அப்படியே நமக்கு இந்த காட்சியின் மிச்சத்தை கோடிகாட்டும்.

  முதல் அனுபவம் பெற்றவர்களுக்கு புரியும். காதலர்கள் முதலில்
  தொடு உணர்வு,தடவல், சிறிதே முன்னேறி முத்த பரிமாற்றம், இவற்றில் தயக்கம்,தடுமாற்றம்,சிறிதே awkwardness கலந்த அவசரம் பிறகு இணையை தூண்டும் காம இச்சை வெளியிடும் அழுத்தமான பிடிப்புகள்,ஆவேசம், பின் காம கட்டிப்பிடித்தல் ,பின்புறமாக கட்டி முத்தமிடும் முயல்வு ,காதலி காதலன் கையை விரும் இடத்திற்கு நகர்த்தல்,கடைசியில் உணர்ச்சி வயப்பட்டு புணர்ச்சிக்கு இயைதல் என்றுதான் போகும். அதை அப்படியே இந்த காதலர்கள் ,பல காதல்களுக்கு முன்னோடியான பாலபாடமாக்குவார்கள்.

  அவனோ ,அவளை கால் முதல் தலைவரை தொட்டு தடவி, அவளின் நாணி விலகும் முயற்சியால் சிறிதே குறி தவறுவான்.தினம் வந்து கொஞ்சும் மலர்கொண்ட மஞ்சம் இதழ் கேட்கும் நெஞ்சம் இருந்தாலும் அஞ்சும் ,என்ற மஞ்சத்தில் பின்புற அணைப்பில் இதழை கேட்பான். இருவருக்குமே தயக்கம். கைகளை பிணைக்கும் போதும் இசைவின்மை தெரியும் சிறிதே முறுக்குவது போல.

  பிறகு முகத்தை கைகளில் ஏந்தி முத்த பரிமாறல் .coat stand அருகில் எதிர்பார்ப்போடு நிற்கும் காதலியை பதமாக முத்தமிடும் முயல்வு. சிறிதே துணிவுடன் அவள் இடையின் முற்புறத்தில் விழைவின் இறுக்கத்தை விரலில் தேங்கிய தேய்த்தணைப்பு,திரைக்கு ஓடும் காதலியை ,தன்னுடைய வல்லணைப்பால் இடையின் பின்புறத்தின் கீழே இறுக்கி தன்னுடன் பிணக்கும் இறுக்கம்.தயங்கி விலகும் காதலியின் மார்பை தூண்டும் முயல்வு. பிறகு இறுக்கி அணைத்து ஆவேச முத்தம்.உதட்டு கனிக்குள் இருக்கும் சிவப்பு ,விழிக்குள் நடக்கும் விருந்தை படைக்கும். செந்தாழம்பூ மலரவும் ,சிந்தாமல் தேன் பருகவும் ஒரே சுகம் தினம் தினம்.

  மஞ்சத்தில் சரியும் அவளோ ,இனி என்னால் விலக முடியாது என்று சரணாகதி பார்வை பார்க்க ,அவனோ படுக்கையில் சரியும் அவளை ஆவேச பின்புற அணைப்பில் இளக்குவான்.தலையணையை மார்புக்கு காவலாகவோ ,அல்லது இதமாகவோ அணைக்கும் அவளை, நானிருக்க இது ஏன் என்று தலையணை பிரித்து, நாயகியே அவன் கைகளை மார்புக்கு அணையாக கொண்டு செல்லும் நிலைக்கு சென்று ,இறுதி உணர்ச்சி வச பட்ட ஆவேச அணைப்பில் நெருப்பு பற்றி கொழுந்து விட்டு எரிந்து ,காதலர்களின் புணர்ச்சி என்ற காம காவியம் இறுதி காணும்.அணைத்து சுவைக்கும் நினைப்பில் துடிக்கும் ......


  ஆனந்தோ காமம் கரை கண்டவன். அவன் நினைத்தால் நொடியில் அரங்கேற்றி விடுவான் ஆசையை,ஆனாலும் அதற்கு அணை போட்டு விழைவை சொல்வான். இந்த அசோக் அனுபவமற்றவன். சந்தர்ப்ப சூழ்நிலையால் காதலியுடன் உணர்ச்சி வச பட்டு காம சோதனையின் துடிப்பான பயத்துடன் அணையை உடைத்து காமம் வெல்வான்.

  இது இரண்டிற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை சிவாஜியும் ,வாணிஸ்ரீயும் நடித்து காட்டும் விந்தையை ரசியுங்கள். மெல்லிசை மன்னர் காட்சிக்குரிய தயக்கம், தூண்டல் ,அவசரம், ஆவேசம் இவற்றை தனது பாடல் மற்றும் பின்னணியில் தரும் அதிசயம், எஸ்.பீ.பீயின் இச்சை நிறைந்த இளம் குரல் என்று என் மதிப்பில் ரூப்பு தெரா வை விட இந்த சூழ்நிலைக்கு மேலான பாடல் எத்தனை அழகே.

  Last edited by Gopal,S.; 26th January 2017 at 09:48 AM.
  நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
  http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

 10. Likes Barani liked this post
 11. #3157
  Senior Member Veteran Hubber
  Join Date
  Feb 2012
  Location
  Indonesia
  Posts
  4,127
  Post Thanks / Like
  தீபம்- 26/01/1977- சில நினைவுகள்.

  உனக்காக நான் - அரசியல் சூழ்நிலையால் சுமாரான வெற்றியை ஈட்டியது. 1976 -உத்தமன் தவிர மற்ற படங்கள் superhit range இல் இல்லை. தீக்கனல் என்ற மலையாள படத்தின் உரிமையை வாங்கிய பாலாஜி (கே.ஜீ .ஜார்ஜ் - ஸ்ரீவித்யா கணவர் அல்ல)அன்னகிளி யை super ஹிட் ஆக்கி இருந்த தேவராஜ்-மோகனை அணுக, அவர்கள் மறுக்க, ஆஸ்தான இயக்குனர் சி.வீ.ராஜேந்திரனிடம் கேட்க, subject பிடிக்கவில்லை (????) என்று அவரும் மறுக்க, ஏற்கெனவே காவல் தெய்வத்தில் இயக்குனராய் இருந்து, என்.வீ.ராமசாமி புண்ணியத்தில் ரோஜாவின் ராஜாவில் ஒப்பந்தம் செய்ய பட்டிருந்த கே.விஜயனுக்கு அடித்தது யோகம்.

  சிவாஜிக்கு, விஜயனுக்கு பெரிய திருப்பு முனையாய் அமைந்த 1977 இல், சிவாஜியின் மாபெரும் வெற்றி சரித்திரத்தின் ஆரம்பமாய் அமைந்த நல்ல படம். நடிகர்திலகத்தின் அற்புதமான நடிப்பு ,படத்தின் range எங்கேயோ கொண்டு போய் விட்டது.

  சுஜாதாவை கடலை போடும் காட்சி.பேச்சு கொடுத்து, அவர் எதில் impress ஆவார் என்று தேடி, பேச்சை வளர்க்கும் காட்சி.

  அதே போல தன் வீட்டு guest house வந்து போகும் சுஜாதாவை பார்த்து பொறாமையும்,ஆற்றாமையுமாய் அவர் சுஜாதா அப்பா சுப்பையாவிடம் பொருமல்,ஆத்திரம்,ஆங்காரத்துடன் பேசும் கட்டம்.

  சத்யப்ரியாவை piece piece ஆக்கும் ஆழமான ,குரூரம் நிறைந்த சத்தமில்லா மிரட்டல்.

  இருதலைக்கொள்ளி எறும்பாய் அவர் சுஜாதா, விஜயகுமார் இவர்களிடம் தனி தனியாகவும் ,சேர்ந்தும் தன்னை புரியவைக்க முயலும் காட்சிகள்.

  நடிகர்திலகம் நடிகர்திலகம்தான்.
  Last edited by Gopal,S.; 26th January 2017 at 11:23 AM.
  நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
  http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

 12. Likes Barani liked this post
 13. #3158
  Senior Member Veteran Hubber
  Join Date
  Feb 2012
  Location
  Indonesia
  Posts
  4,127
  Post Thanks / Like
  ராஜபார்ட் ரங்கதுரை வெற்றி அடைய வாழ்த்துக்கள். நடிகர்திலகத்தின் அபூர்வ வித்தியாச நடிப்பிற்காகவே பார்த்தே ஆக வேண்டிய படம்.

  ராஜபார்ட் ரங்கதுரை -1973(22 nd Dec 43 Years Completed).  ராஜபார்ட் ரங்கதுரை பற்றி நிறைய முறை எழுத நினைத்து தள்ளி சென்று கொண்டிருந்தது. இப்போது வலை பூ மற்றும் ராகவேந்தர் தயவில் ஊக்கம் கிடைத்து விட்டது.


  முதலில் கதை பயணிக்கும் திசைகள்......


  ரங்கதுரை இளமை பருவம் ,ஆதரவற்ற நிலை (தம்பி,தங்கை),நாடக ஆசிரியர் ஆதரவு.


  ரங்கதுரை நாடக நடிகன் ஆவது, சில பல நாடக காட்சி பதிவுகள்.


  ரங்கதுரை திருமண பிரச்சினை ,அதை மீறி நடக்கும் திருமணம், தங்கையின் வாழ்க்கை (திருமண) அது சார்ந்த போராட்டங்கள். தம்பியின் தகுதி மீறிய ஆசை,அது சார்ந்த பொய்மை நிறைந்த பிரச்சினைகள் (நன்றி மறத்தல்).


  ரங்கதுரை எதிர்கொள்ளும் எதிர்ப்புக்கள், சில பல வில்லன்கள் (கொலை வரை செல்வது)


  இதில் முன் நிற்பது நடிகர்திலகம்.

  அவருடைய அமெரிக்கையான நடிப்பு முறை. தொழில் சார்ந்த நடிகர்கள் யாரையும் பகைக்கவோ, யாரிடமும் குரல் உயர்த்தவோ இயலாது. அதனால் ஆதரவு வேண்டும் குரலிலேயே அவர் பாத்திர படைப்பு கையாள படும். ஒரு இறைஞ்சும் மெல்லிய குரலில். நடையிலும் ஒரு மென்மையான பெண்மை கலந்த அமெரிக்கை வெளிப்படும். அவரே பாய்ஸ் கம்பெனி நடிகர் என்பதால் இதில் போய் நடிக்கவா வேண்டும்? வாழ்ந்திருப்பார்.


  ஒரு அற்புத விந்தை, அவர் எந்த இடத்திலும் உணர்ச்சிகளை ஓங்கியே வெளிபடுத்த மாட்டார். தனக்கு வசனங்கள் தேவையேயில்லை என்று பல காட்சிகளில் உணர்த்தி அதிசயம் படைப்பார். சுருங்க சொல்ல வேண்டுமென்றால் ,தன் தங்கையின் கணவன் ,இரண்டாம் திருமண காட்சி. சுமார் நான்கு நிமிடங்கள் எந்த வசன துணையுமின்றி ,அவர் பார்க்கும் பார்வை.ஒவ்வொரு பார்வையாளருக்கும் ஒவ்வொரு அர்த்தம் கொடுக்கும். அதில் தெரிவது விரக்தியா,இறைஞ்சலா,எதிர்பார்ப்பா,மிரட்டலா,கொந ்தளிப ்பா, உதாசீனமா,தன்னிரக்கமா,தவிப்பா, ஊமை கதறலா,உண்மை பாசமா,கோழைக்கு விடுக்கும் சவாலா என்று இனம் காண முடியாத ஒரு புதிர்த்தன்மை நிறைந்த நடிப்பின் உச்ச சாதனை. ஒரு எழுத்தாளர் கூட வார்த்தை துணையுடன் ,இந்த உணர்ச்சி கொந்தளிப்பை ,குவியலை கொண்டு வருவது மகா கடினம்.

  அதே போல தங்கை இறந்த செய்தி கிடைத்து, அவர் கோமாளி வேடத்தில் நடித்தே ஆக வேண்டிய இடத்தின் சிரித்தே வெளியிடும் ஊமை துயர கதறல்.

  தங்கையின் கணவனை (இறந்த பிறகு)பார்த்து நீயெல்லாம் மனுஷனா ரீதியில் உதாசிக்கும் சீ போடா .

  தம்பியிடம் உணர்ச்சியை வெளியிட முடியாது,தவிப்புடன் (தகிப்புடன்) பாடும் அம்மம்மா.....


  நாடகம் சார்ந்த காட்சிகள் என்றால் நடிகர்திலகத்திற்கு கேட்கவா வேண்டும்? இதில் முக்கியமாக குறிக்க வேண்டியவை பகத் சிங். இதில் கைகள் கட்ட பட்ட நிலையில்,அதன் துணையின்றி நேர்காட்சி,பின் காட்சி,பக்க வாட்டு காட்சிகள் என உடல் மொழி,முகபாவம் ,நடை தாளம்(திமிறி) கொண்டு அவர் வெளியிடும் உசுப்பேற்றும் வீர சுதந்திர உணர்வு. (இதுதான் ஒரிஜினல் action hero .போலி சண்டை காட்சிகள் தேவையில்லை).


  அவரின் ஹாம்லெட் நாடக காட்சி ,ஒரு ஷேக்ஸ்பியர் பள்ளிக்கு பாடமாக செல்ல வேண்டிய அதிசயம்.


  ஹாம்லெட் ,தன் தந்தையை கொன்று தாயை மணந்த சதிகாரன் சித்தப்பன் கிளாடியஸ் என்பவனை பழிதீர்க்க ,தந்தையின் ஆவியின் வற்புறுத்தலால் மன சாட்சியுடன் உரையாடும் (காதலி ஒபிலியாவிடம் காதலை முறி க்குமுன்பு), காட்சி. வாழ்வதா சாவதா என்ற மன சாட்சி போராட்டம் ,வாழ்வின் அவலங்கள்,சாவுக்கு பின் என்ன எனும் கேள்விகள் என்று மனதத்துவ சிக்கல்கள் நிறைந்த Nunnery Scene என்று connoiseurs குறிக்கும் Act 3 Scene 1.முதல் வியப்பு உலகத்தின் அத்தனை விதமான பாத்திரங்களும் பொருந்தும் முக அமைப்பு.இரண்டாவது வியப்பு ஒதெல்லோ,ஹாம்லெட் பாத்திரங்களுக்கு மற்றவர் குரல் கொடுத்தாலும் அவர் உள்வாங்கி நடித்த சிறப்பு.

  ஹாம்லெட் பாத்திர காட்சி சிறிதே சிக்கலான monologue .(இதே மன போராட்ட காட்சி சாந்தி படத்தில் வேறு வடிவில்),வாழ்வதா சாவதா, சாவுக்கு பின் என்ன என்ற மன போராட்டம்.வாழ்க்கை பற்றிய கேள்விகள். Odipus Complex கொண்டு தன் அன்னையிடம் வெறுப்பு கலந்த நேசம் ,இரண்டாம் தந்தையை (சித்தப்பன்)பழிவாங்கும் உணர்வு, தந்தையின் ஆவியால் துன்புற்று, காதலியை துறக்க முயலும் சிக்கல். வெறித்த விழிகளோடு , கத்தியுடன் stylised முறையில் சிந்தனை கலந்த நடையில் அவர் திரும்பும் விதம் இந்த காட்சிக்கு புத்துயிர்ப்பு கொடுக்கும்.இதற்கு குரல் கொடுத்த பேராசிரியர் சுந்தரம் இந்த பாணியில் இந்த காட்சி நடிக்க பட்டதே இல்லையென்றும் ,வசனங்களை காட்சியுடன் இணைக்க மிகவும் பிரயத்தனம் எடுத்ததாகவும் வியந்து பாராட்டி உள்ளார்.


  இந்த படத்தின் பலம் சிவாஜி,சிவாஜி,சிவாஜி,சிவாஜி,சிவாஜி(எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதி கொள்ளுங்கள்).அதனை தவிர இதன் நற்தன்மை,நன்னோக்கம்,கண்ணியமான படமாக்கம். ஒன்றிரண்டு பாடல்கள் அம்மம்மா, மதன மாளிகையில்.


  பலவீனம் என்றால்,


  அலுப்பு தட்டும் திரைக்கதை , தட்டையான பாத்திர வார்ப்புக்கள்.இதில் வரும் பாத்திரங்கள் நல்லவர்-அல்லாதவர் என்ற பகுப்பு. வாத்தியார் வீ.கே.ஆர் பாத்திரத்தில் சுத்தமாக உண்மை தன்மை இன்றி நல்லவராக மட்டும் glorify பண்ண பட்டுள்ளார்.(சிவாஜியின் உண்மை கதை படிப்போருக்கு இந்த பாத்திரம் மிக தட்டையான ஒற்றை பரிமாணம்.அந்த கால படங்களின் glorification ).எல்லா பாத்திரங்களுமே உண்மை தன்மை இல்லாதது. Plastic Characters .

  இதில் கூத்து கலை பற்றி,அதில் இருக்கும் நடிகர்களின் வாழ்க்கை பற்றி எந்த ஆழமான பதிவுகளும் இல்லை.


  குடும்ப பிரச்சினைகளை எடுத்தாலும், ஒரு பீம்சிங் கால படங்களை போல பிரச்சினைகளில் ஒரு புத்திசாலித் தன வித்தியாச பாத்திர சிக்கல்கள் இல்லை. வெளிப்படையான ,சுவாரஸ்யமற்ற சிக்கல்கள். வெறும் உருக்கம் மட்டுமே கொண்டது.


  மற்ற பாத்திரங்கள் miscast என படும் தவறான தேர்வு. முக்கியமாக உஷாநந்தினி, ஸ்ரீகாந்த். நவராத்திரி,தில்லானா எடுபட்டதென்றால் ஏ.பீ.என் , அவருடைய troupe ,சாவித்திரி போன்ற சக நடிகர்களின் பங்களிப்பு.இதில் உஷா நந்தினி போன்ற பதுமைகளோ,மாதவன் போன்ற இயக்குனரோ அந்த மாயத்தை சாதிக்க முடியவில்லை. விஸ்வ நாதனிடம் ,கே.வீ.எம் இன் authentic period music கிடைக்கவில்லை. ஆத்மார்த்தமான நிஜமான பங்களிப்பு ஏ.பீ.என்,கே.வீ.எம் கூட்டணிக்கே சாத்தியம்.


  நாடக நடிகனை பற்றிய கதை,சுவையற்ற ,ஜீவனற்ற துணுக்கு கூத்துக்களை தொகுத்தளித்தாலும் ,நாடக நடிகனின் வாழ்கை பற்றி பேசவேயில்லை. மாறாக ,இதன் கதாநாயகன் எந்த தொழில் சேர்ந்தவனாக இருந்தாலும் ,இந்த கதை சொல்ல பட்டு விடலாம் என்பது முக்கிய பலவீனம். பாலமுருகன்-மாதவன் கூட்டு ,இந்த கதைக்கு வலு சேர்க்கவே இல்லை.


  ராஜபார்ட் ரங்கதுரை சிவாஜியை மட்டுமே நம்பியது. சிவாஜியால் மட்டுமே வெற்றி பெற்றது. இதற்கு உரிய கவனம் கொடுத்து செதுக்க பட்டிருந்தால் ,மகா வெற்றி பெற்றிருக்க கூடிய சாத்தியகூறுகள் கொண்ட கரு.
  Last edited by Gopal,S.; 26th January 2017 at 11:24 AM.
  நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
  http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

 14. Likes Barani liked this post
 15. #3159
  Senior Member Veteran Hubber
  Join Date
  Feb 2012
  Location
  Indonesia
  Posts
  4,127
  Post Thanks / Like
  வாசு,

  எப்போதுமே நமக்குள் ஒரு பந்தம். நான் திருக்குறள் போல் காட்சிகளை சுருக்க, நீ பரிமேலழகராய் விரிக்கும் அழகு அலாதி.

  ராகவேந்தர் காலை வணக்கம் சொல்லி அட்டெண்டன்ஸ் போட,முரளி நேரமில்லாமல் தவிக்க, க்ரிஷ்ணாஜி,சாரதி,போன்றோர் காணாமல் போக, கார்த்திக்,சாரதா கௌரவ நடிகர்களாய் கண்ணா மூச்சி காட்ட, புதிய பதிவர்கள் தன திருப்திக்காக கர மைதுனம் மட்டுமே புரிய,திரி பொலிவிழந்து தள்ளாடுகிறது.செந்தில் வேல்,சிவா, Barani,ஆதவன் ரவி,போன்றோர் சிறப்பாக பங்காற்றியும் ,அவர்களுக்கும் போதிய ஊக்கம் வழங்க ஆளில்லை. ஆதவன் ரவியின் அற்புதமான சி.வீ.ஆர் பதிவுகளை ரசித்தேன். தற்செயலாய் என் பங்குக்கு 26 ஜனவரி அமைய ராஜாவும்,சிவகாமியும் சி.வீ.ஆருக்காய் சமர்ப்பணம்.
  Last edited by Gopal,S.; 26th January 2017 at 11:59 AM.
  நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
  http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

 16. Likes Barani liked this post
 17. #3160
  Senior Member Diamond Hubber senthilvel's Avatar
  Join Date
  Feb 2015
  Posts
  5,140
  Post Thanks / Like
  எழுத வேண்டும் .எல்லோரும் எழுத வேண்டும். யார் முதலில் ஆரம்பித்தார்களோ அவர்களையே அடுத்த திரியை ஆரம்பிக்க சொல்ல வேண்டும்.அதில் பங்கெடுத்தவர்களை மீண்டும் எழுத சொல்ல வேண்டும்.
  நம் மக்கள் மாதிரி யாரால் எழுத முடியும்?அந்த சிறப்புக்கு என்ன காரணம்.
  "அவர் ஒருவரே."
  எழுதுபவர்கள் எல்லோரும் ஜாம்பவான்கள்.ஏதோ என்னால் முடிந்தது, நானும் எழுதலாம் என்று தான் அவ்வப்போது மூளையை கசக்குகிறேன்.அதற்குள் பொக்கிஷம் போல் ஆவணங்கள் வந்து சேர்கின்றன.அவற்றை தவிர்க்க இயலுமா? நாளை எவ்வகையிலேனும் அது பயன்படலாம்.ஒரு விளம்பரத்தை பார்க்கையில் அதன் வரலாறு வந்து போகின்ற நினைவுகள் பெரும் சுகமாகவும், அதே சமயம் கிளர்ச்சியையும் உண்டாக்குகின்றது.இந்த ஆவணப்பதிவுகள் நாளைய வரலாற்றின் தொடர்ச்சிக்காகவும் பயன்படலாம் என்பதற்காககவும் தான்.யாருக்கேனும் இது சோர்வைத் தருமாயின் பொறுத்தருள்க!

  நன்றி!

 18. Likes Barani liked this post

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •