Page 276 of 400 FirstFirst ... 176226266274275276277278286326376 ... LastLast
Results 2,751 to 2,760 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

  1. #2751
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    அன்பு ஹரீஷ் செந்தில் சார்,

    முகநூலில் இருந்து தாங்கள் எடுத்துப்போட்ட பதிவில் பல தகவல் பிழைகள் உள்ளன. எம்.ஜி.ஆருடன் ஜெ. நடித்த படங்களில் பதிவில் குறிப்பிட்ட ஒன்பது படங்களோடு கீழ்க்கண்டவையும் நூறு நாட்களுக்கு மேல் ஓடிய வெற்றிப்படங்களே. அவை

    முகராசி
    ரகசிய போலீஸ் 115
    காவல்காரன்
    என் அண்ணன்
    குமரிக்கோட்டம்

    அத்துடன் தேடிவந்த மாப்பிள்ளை, கண்ணன் என் காதலன் ஆகியவை 84 நாட்கள் ஓடிய வெற்றிப்படங்கள்.

    நடிகர்திலகத்துடன் நடித்தவற்றுள் பட்டிக்காடா பட்டணமா மட்டுமே வெள்ளிவிழா படம். பட்டியலிலுள்ள மற்றவை 100 நாட்களுக்கு மேல் ஓடியவை தான். (பாட்டும் பரதமும் 100 படம் அல்ல).

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2752
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'அன்பு' படத்திற்கான பாராட்டுதல்களுக்கு மிக்க நன்றி ஆதிராம் சார். மேடம் மறைவுக்கு தாங்கள் பதித்திருந்த அஞ்சலி பதிவு கண்களை குளமாக்கி விட்டது. உங்கள் சோகமான வழியனுப்பல் என்னுள் சோகத்தை இரட்டிப்பாக்கியது. 'அங்கேயும் நான் உங்களுக்கு எதிர்கட்சிதான்' என்ற அவர்கள் மீதான உங்கள் உரிமையை அந்த நேரத்திலும் மிகவும் ரசித்தேன்.
    நடிகர் திலகமே தெய்வம்

  4. #2753
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அன்பு ராகவேந்திரன் சார்,

    ஜெயலலிதா மேடத்துக்கும், 'சோ' அவர்களுக்கும் அற்புதமான புகைப்படங்களுடன் கூடிய சிறப்பான அஞ்சலி செலுத்தி விட்டீர்கள். இன்றைய 'குட் மார்னிங்' அருமையோ அருமை.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #2754
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //அத்துடன் தேடிவந்த மாப்பிள்ளை, கண்ணன் என் காதலன் ஆகியவை 84 நாட்கள் ஓடிய வெற்றிப்படங்கள்.//


    நன்றி ஆதிராம் சார். எம்.ஜி.ஆர் அவர்களின் படங்களையும் எத்தனை நாள் ஓடிற்று என்று தெரிந்து வைத்திருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. #2755
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார்
    தங்களுடைய அபாரமான அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, இவையெல்லாவற்றையும் போற்ற உண்மையிலேயே தமிழில் எனக்கு அந்த அளவிற்கு ஞானம் இல்லை. தங்களுக்கு தலைவரின் ஆசியும் இறையருளும் பரிபூரணமாக உள்ளது என்பது உண்மை. அது நிலைத்து நின்று தங்களுக்கு வாழ்க்கையில் எல்லா வளமும் நலனும் தரவேண்டும் என வேண்டுகிறேன். அன்பு தங்களை பலரின் அன்புக்குப் பாத்திரமாக்கும்.
    அன்புடன்
    ராகவேந்திரன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #2756
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கலைச்செல்வி சகோதரி ஜெயலலிதா அவர்கள் நடிகர் திலகத்துடன் நடித்த படங்களின் மொத்தம் 21. 20 படங்களின் பட்டியல் ஹரீஷ் செய்திருந்த முகநூல் பதிவில் உள்ளது. அவையன்றி 1966ம் ஆண்டில், நடிகர் திலகம் கௌரவ வேடத்தில் நடித்த தாயே உனக்காக படமும் சேர்க்க வேண்டும். காவேரியில் தேம்ஸ் நதி பாடலில் ஜெயலலிதா நடித்திருப்பார்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #2757
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    சாரதா, பம்மலார், ஆதிராம், முரளி ஸ்ரீநிவாஸ், கார்த்திக்,, கோபால்.. இவர்களுக்குள் இறைவன் அந்தக் காலத்திலேயே கணினியை மூளைக்குள் உருவாக்கி விட்டாற்போல. ம்ஹூம்.. யாரும் டபாய்க்க முடியாது.. 100 நாட்கள் ஓடிய படங்களைப் பற்றி விரல் நுனியில் வைத்திருப்பார்கள்..
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #2758
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார்
    காலை வணக்கம் நிழற்படங்களின் பாராட்டுக்களுக்கு உளமார்ந்த நன்றி
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #2759
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. Likes Harrietlgy liked this post
  12. #2760
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 155 – சுதாங்கன்.





    “அதனால் அந்த காட்சிகளை மனதில் வைத்துக்கொண்டுதான் மகேந்திரன் எழுதியிருக்கிறார். இதுதான் கரெக்ட்! தி பெஸ்ட்!” என்றார்.
    அதன்படி காட்சி படமாக்கப்பட்டது. எப்பேர்பட்ட நடிப்பு சக்கரவர்த்தி, ஒரு கதாசிரியனின் கருத்துக்கு எவ்வளவு கவனமும், மரியாதையும் தந்திருக்கிறார்!
    மகேந்திரன் சொல்கிறார், `வாழ்வில் எனக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்று ஒன்று இருக்குமானால், அது எனது கதையின் கதாபாத்திரமேற்று நான் எழுதிய வசனத்தை அந்த மகா கலைஞன் பேசியதுதான்! அதுவே எனக்குக் கிட்டிய மிகப்பெரிய பாக்கியம் என்று சொல்வேன்’ என்றார்.
    ஒரு திருவள்ளுவர் – ஒரு ஷேக்ஸ்பியர் – ஒரு மைக்கேல் ஏஞ்சலோ–- ஒரு பீத்தோவன் – ஒரு நடிகர் திலகம் சிவாஜி கணேசன்! இப்படித்தான் உலக வரலாறு சொல்லப்படவேண்டும் என்றால் அது மிகையல்ல!
    `இன்று வரை நடிகர் திலகத்தை வைத்து ஒரு புதிய கோணத்தில் ஒரு திரைப்படத்தை இயக்க முடியாது போன சோகம் எனக்குள் உண்டு’ என்கிறார் மகேந்திரன். 1974ம் வருடம் வந்த திரைப்படம்தான் ‘தங்கப் பதக்கம்’. அதற்கு முன்னால் அவர் சாதித்த சில படங்களைச் சொல்லாமல் இந்த தொடர் நிறைவுபெறாது.
    சிவாஜி கணேசனின் நூறாவது படம் ஏ.பி.நாகராஜன் இயக்கிய ‘நவராத்திரி’ என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்.
    சிவாஜியின் திரை வாழ்க்கையில் 1962ம் வருடத்தை மறக்கவே முடியாது.
    இந்த வருடம்தான் அவருடைய 9 படங்கள் வெளியாகின.
    ‘பார்த்தால் பசி தீரும்’, ‘நிச்சய தாம்பூலம்’, ‘வளர்பிறை’, ‘படித்தால் மட்டும் போதுமா’, ‘பலே பாண்டியா’, ‘வடிவுக்கு வளைகாப்பு’, ‘செந்தாமரை’, ‘பந்தபாசம்’, ‘ஆலயமணி’.
    1963ம் ஆண்டு ‘சித்தூர் ராணி பத்மினி’, ‘அறிவாளி’, ‘இருவர் உள்ளம்’, ‘நான் வணங்கும் தெய்வம்’, ‘குலமகள் ராதை’, ‘பார்மகளே பார்’, ‘குங்குமம்’, ‘ரத்தத்திலகம்’, ‘கல்யாணியின் கணவன்’, ‘அன்னை இல்லம்’ ஆகிய பத்து படங்கள் வெளியாகின.
    `பாசமலர்’ படத்தின் வெற்றிக் கூட்டணியை வைத்து ஒரு படத்தை உருவாக்க ரங்கநாதன் பிக்சர்ஸ் என்ற படக்கம்பெனி ஏற்பாடு செய்தது. அந்தப் படம்தான் 1962ம் வருடம் வந்த ‘படித்தால் மட்டும் போதுமா’
    `பாசமலர்’ படத்துக்கு வசனம் எழுதிய ஆரூர்தாஸூதான் இந்த படத்திற்கும் வசனமெழுதினார்.
    `பாசமலர் படத்தை இயக்கிய பீம்சிங்குதான் இந்த படத்திற்கும் இயக்குநர்.
    ‘பாசமலர்’ படத்தில் நடித்த சிவாஜி, ஜெமினி, சாவித்திரி ஆகியோரை ஒப்பந்தம் செய்ய பட அதிபர்கள் சென்ற போது படத்தில் நடிக்க சிவாஜி, சாவித்திரி இருவரும் ஒப்புக்கொண்டனர். ஆனால், ஜெமினி கணேசன் மறுத்துவிட்டார். காரணம்– கதை. ராஜசுலோசனாவை திருமணம் செய்ய வேண்டிய அண்ணன் (படித்தவன்) சாவித்திரியையும், சாவித்திரியை திருமணம் செய்ய வேண்டிய தம்பி (படிக்காதவன்) ராஜசுலோசனாவையும் ( ஆள் மாறாட்டம் செய்து) மணப்பதாக கதை.
    `சாவித்திரியை ஏமாற்றி திருமணம் செய்வது போன்ற கதையில் நான் நடிக்க மாட்டேன்’ என்று ஜெமினி கணேசன் மறுத்துவிட்டார்.
    அதனால், ஜெமினி கணேசன் நடிக்க வேண்டிய பாத்திரத்தில் பாலாஜி நடித்தார்.
    இந்த படம் நூறு நாட்களை தாண்டி ஓடியதற்கு கதை, நடிப்பு தவிர, விஸ்வநாதன் – ராமமூர்த்தி, கண்ணதாசன் இணைப்பில் உருவான காலத்தால் அழியாத அற்புதமான பாடல்கள்.
    இந்த படத்தின் எல்லா பாடல்களையும் கண்ணதாசன் எழுதினார். ஒரே ஒரு பாடலைத் தவிர!
    படத்தில் பி.சுசீலா குரலில் திரையில் சாவித்திரி பாடிய ஓர் அற்புதமான பாடல் ` தன்னிலவு தேனிறைக்க தாழைமரம் நீர் தெளிக்க, கன்னி மகள் நடைபயின்று வந்தாள்’ பாடலை மட்டும் மாயவநாதன் எழுதியிருந்தார்.
    அந்த படத்தில் டி.எம்.எஸ்ஸும். பி.பி.ஸ்ரீனிவாஸும் பாடிய `பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை’ பாடல், படத்தின் பாடல்களில் ஹைலைட்!
    அடுத்து கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கிய படம் `கை கொடுத்த தெய்வம்.’
    இதை ‘சிவாஜி படம்’ என்று சொல்வதை விட `சாவித்திரி படம்’ என்றுதான் சொல்ல வேண்டும்.
    வெகுளிப் பெண் வேடத்தில் நடிப்பின் சிகரத்தைத் தொட்டார் சாவித்திரி.இதில் சிவாஜி வெகு இயல்பாக நடித்திருந்தார்.
    இந்த படத்தில் சிவாஜி – எஸ்.எஸ். ராஜேந்திரன் மோதிக்கொள்ளும் ஒரு காட்சியில் அரங்கமே கைத்தட்டலால் அதிரும்.
    அகிலனின் நாவலை வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு ஏ.பி.நாகராஜன் வசனம் எழுதியிருந்தார்.
    கே.வி. மகாதேவன் இசையில் மிகச்சிறந்த பாடல்கள் அமைந்த வெற்றிப் படம் இது.
    இந்தியா – சீனா போரை மையமாக வைத்து பஞ்சு அருணாசலம் தயாரித்த படம் இது!
    இந்த படத்தின் வசனங்களையும், பாடல்களையும் கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற `பசுமை நிறைந்த நினைவுகளே’ என்று சிவாஜியும், சாவித்திரியும் பாடிய கல்லூரி பிரிவுபசார பாடலுக்கு இணையாக பிரிவுபசார பாடல் இதுவரையில் தமிழ் திரையில் வரவில்லை. படம் வெளிவந்த போது போர் முடிவடைந்து, சமாதான சூழ்நிலை உருவானது. அதனால் படம் பிரமாதமாக ஓடவில்லை. பிரசாத் மூவிஸ் தயாரித்த படம் `இருவர் உள்ளம்.’
    பிரபல நாவலாசிரியை லட்சுமி எழுதிய `பெண் மனம்’ என்ற கதை.படத்திற்கு மு. கருணாநிதி வசனம் எழுதியிருந்தார்.
    படத்தை இயக்கியவர் எல்.வி. பிரசாத்!
    `மனோகரா’ படத்திற்கு பிறகு சிவாஜி, கருணாநிதி, எல்.வி. பிரசாத் என்ற `மூவர் கூட்டணி’ இணைந்த படம். மிகப்பெரிய வெற்றிப் படம் இது.
    கஸ்தூரி பிலிம்ஸ் சார்பில் வி.சி. சுப்புராமன் தயாரித்த படம்தான் `பார் மகளே பார்.’ ஆரூர்தாஸ் வசனம் எழுதியிருந்தார். இந்த படத்தையும் பீம்சிங்குதான் இயக்கினார். விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையில் அருமையான பாடல்கள். சிவாஜிக்கு ஜோடி சவுகார் ஜானகி. இந்த தம்பதியரின் மகள்களாக விஜயகுமாரியும், புஷ்பலதாவும் நடித்திருந்தார்கள். இந்த இருவரில் ஒருவர் மட்டும்தான் தன் மகள் என்று பின்னர் சிவாஜிக்கு தெரியவரும்.
    தன் சொந்த மகள் யார் என்ற மனப்போராட்டத்தை சிவாஜி அருமையாக வெளிப்படுத்தியிருந்தார். நூறு நாட்களைத் தொட்ட படம்.
    பி.எஸ். வி. பிக்சர்ஸ் தயாரித்த ‘ஆண்டவன் கட்டளை’ சிவாஜியின் திரை வாழ்க்கையில் ஒரு மைல்கல்லான படம்.
    திருமணமே வேண்டாமென்று உறுதியாக இருந்த ஒரு கல்லூரி பேராசிரியரின் வாழ்க்கையில் வந்த ஒரு பெண்ணால் ஏற்பட்ட சிக்கலை வைத்து எடுக்கப்பட்ட படம். இந்த படத்திலும் விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையமைத்த அத்தனை பாடல்களுமே சூப்பர் ஹிட்.
    இந்த படத்தில் சந்திரபாபுவிற்கு மிகவும் வித்தியாசமான வேடம்.
    சென்னை வெலிங்டன் திரையரங்கில் ஓடி வெற்றி பெற்றது.
    (தொடரும்)

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •