Page 338 of 400 FirstFirst ... 238288328336337338339340348388 ... LastLast
Results 3,371 to 3,380 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

 1. #3371
  Senior Member Senior Hubber Aathavan Ravi's Avatar
  Join Date
  Aug 2015
  Posts
  830
  Post Thanks / Like
  பசித்தவனிடம் நீட்டப்பட்ட உணவுத் தட்டு -
  ஞாயிறன்று பாசமலர் பார்க்க எனக்குக் கிடைத்த அனுமதிச்சீட்டு.

  பூரித்துத் திரண்ட பெருங்கூட்டம். மேளதாளம், வெடிச்சத்தம்...

  மற்றுமொரு ஆலயமாயிற்று மதுரையின் 'அலங்கார்'.

  தமிழ்த் திரையுலகையும் எங்களையும் ஆண்டவன் - அங்கே ஆண்டவன்.

  ஆண்டவனுக்குரிய இடத்தில் நிம்மதிக்கேது பஞ்சம்?
  நிலைக்கும் கலை அருளி அவன் நிறைத்தான் எம் நெஞ்சம்.

  சராசரி திருப்திகளோடு சமரசம் செய்து கொள்ளாத சரித்திர நாயகரின் சாதனைப் படைப்பை ஓட்டிக் காட்டியது..
  அய்யா நடிகர் திலகத்தின் உள்ளத்தின் நிறம் கொண்ட வெள்ளைத் திரை.

  அவசர, அவசரமாய் ஆலைக்குக் கிளம்பும் அறிமுகக் காட்சியில் துவங்கி அழுது, அழ வைத்து அமரராகும் இறுதிக்காட்சி வரை அய்யாவை விட்டு வேறு புறம் பார்வை நகர்த்தாத ரசிகர்களின் அன்பு போதுமே..

  'பாசமலர்' - வேற்றுக் கிரகத்திலும் வெள்ளி விழாக் காணாதோ?

  'பாசமலர்' - ஓய்வை உல்லாசப் படுத்தும் தமிழ் சினிமா மரபுடைத்து ஓய்வை அர்த்தப்படுத்தியது.

  கறையேறிப் போன நம் இதயப் பாத்திரங்களை கண்ணீர் கொண்டு சுத்தப்படுத்தியது.

  முயன்று, முடியாமல் மூன்று மணி நேரமும் அழுது விட்டு..
  அழாதவர் போல் நடிப்பதில் அய்யாவை ஜெயிக்கப் பார்க்கிறோம் முட்டாள்தனமாக.

  எந்தக் காலமும் வியக்கும் 'பாசமலர்' எனும் அந்தக் கால அதிசயத்தை மீண்டுமெங்கள் கண்களுக்குத் தந்த அத்தனை பேருக்கும் ஒருத்தர் விடாமல் நன்றி.

  காட்சி முடிந்து வெளியேறுகையில் காத்திருக்கிறது ஒரு கூட்டம், பெருங்கூட்டம். அடுத்த காட்சியைப் பார்ப்பதற்கு.

  எனக்குத் தெரியும். அந்தக் காட்சி முடிந்து வெளியேறுகையில் அந்தக் கூட்டமும் சந்திக்கும்..
  அதை விடப் பெரிய கூட்டத்தை.
  ---------------------------------------------------------------------------------

  -மதுரை அலங்கார் திரையரங்கில் டிஜிட்டலில் வந்த "பாசமலர்" பார்த்து விட்டு 21.8.2013 அன்று
  முகநூலில் நான் இட்ட பதிவு இது.

  இதை ரசித்து "அருமை" என்று பாராட்டி விட்டு,
  "நீங்கள் மதுரையைச் சேர்ந்தவரா?" என்று பதிவின் கீழ் கேட்டிருந்தார்.

  அவரையும், என்னையும் இணைத்த பெருமைக்குரிய இந்த பதிவை, பிறந்த நாள் பரிசாக சமர்ப்பிக்கிறேன்.. அவருக்கு.

  அவர் - மரியாதைக்குரிய முரளி சார்.

 2. Likes Barani liked this post
 3. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Posts
  Many
   

 4. #3372
  Moderator Veteran Hubber
  Join Date
  Mar 2006
  Posts
  3,024
  Post Thanks / Like
  வருடம் தவறாமல் என் பிறந்த நாளன்று வாழ்த்துவதை வழக்கமாக கொண்டுள்ள வினோத் சார், உங்கள் பெருந்தன்மைக்கு என் சிரந்தாழ்ந்த நன்றி!

  சிவா சார், அற்புதமான புகைப்படத்திற்கும் அருமையான வாழ்த்துகளுக்கும் என் மனங்கனிந்த நன்றி!

  வாசு, அட்டகாசமான ஸ்டில் மற்றும் அன்பான வாழ்த்துகளுக்கும் மனமார்ந்த நன்றி!

  இதயத்தின் அடித்தளத்திலிருந்து எழுதப்பட்ட அன்பு வாழ்த்துக்களுக்கு மனங்கனிந்த நன்றி ஆதிராம் சார்!

  பிறந்த நாள் வாழ்த்துகளுக்கு நன்றி செந்தில்வேல்

  பிறந்த நாள் வாழ்த்துகளுக்கு நன்றி தம்பி செந்தில்!

  பாசமலர் என்னும் வாடா மலரால் உறவை பிணைத்த ஆதவன் ரவி, உங்களுக்கு மனமார்ந்த நன்றி!

  அழகான புகைப்படத்தோடு என்னை வாழ்த்திய ராகவேந்தர் சாருக்கு நன்றிகள் பல!

  அன்புடன்

 5. Thanks adiram thanked for this post
 6. #3373
  Senior Member Platinum Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  10,032
  Post Thanks / Like
  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

 7. Thanks Gopal,S. thanked for this post
  Likes Gopal,S. liked this post
 8. #3374
  Senior Member Veteran Hubber
  Join Date
  Feb 2012
  Location
  Indonesia
  Posts
  4,127
  Post Thanks / Like
  ராகவேந்திரா சார்,

  உங்களுக்கு ஆயுசு நூறு.நேற்றுதான் என்னை போல் ஒருவன் திருப்பி பார்த்தேன். இன்று உங்கள் காலை செய்தி என்னை போல் ஒருவன்.

  ராமண்ணா ,நடிகர்திலகத்தை பிரதான நாயகனாக வைத்து ஆறு படங்கள் இயக்கி உள்ளார்.

  கூண்டு கிளி, காத்தவராயன்,ஸ்ரீவள்ளி,தங்கசுரங்கம்,சொர்க்கம், என்னை போல் ஒருவன்.

  என்னுடைய தர வரிசையில் சிறந்தவை என்னை போல் ஒருவன்,காத்தவராயன்,தங்க சுரங்கம். என்னை போல் ஒருவன் ,ஏழு வருடங்கள் (1971 முதல் 1978 வரை)தயாரிப்பு தாமதம், ராமண்ணாவின் அகல கால் வைத்த பொருளாதார நெருக்கடி இவற்றால் தாமதமாக வந்தாலும் பிரமாத வெற்றி பெற்ற படம்.இன்றளவும் ரசிகர்களால் போற்ற படும் இப்படம் ,அற்புதமான செண்டிமெண்ட்-நகைச் சுவை-பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த படம்.வரவேண்டிய நேரத்தில் வந்திருந்தால் வெள்ளிவிழாதான்.

  இதன் மிக சிறந்த அம்சங்கள்.

  1)நடிகர்திலகம்-இந்த படத்தின் தன்மை,நீக்கு போக்கு அறிந்து ,இரட்டை வேடத்தில் மிக குறைந்த அளவே வித்தியாச படுத்துவார். நடை உடை பாவனை உருவம் ஒத்து போவதாக கதையமைப்பு. சிறிதே குண திரிபும், குண நலனும் உடைய இரு பாத்திரங்கள். திராவிட மன்மத மேதையின் சித்திரிப்பில் ஜொலிக்கும்.முதலில் ராஜசேகரின் குண சித்திரம் மூன்று காட்சிகளில்.அடுத்த காட்சி இருவரின் சந்திப்பு. அடுத்தடுத்த காட்சிகள் சுந்தரமூர்த்தி,சேகராக நடிக்க வேண்டிய கட்டாய காட்சிகள். இவற்றில் அபார நகைச் சுவை timing ஓடு situation comedy ரகம். விவரங்கள் தெரியாமல், எச்சரிக்கையோடு, சங்கடம் தவிர்த்து,மற்றோர்க்கு இதமாக,உறவின் எல்லை மீறாமல் கத்தி மேல் நடக்கும் சூழ்நிலை.
  ரசிகர்களின் நாடி பிடித்து அசத்துவார். உதாரணம் தான் மயங்கி கிடப்பதாக எண்ணி வாசுவும்,ஆலமும் உரையாடும் காட்சியில் தாளமிடும் கை .மிகவும் கம்பி மேல் நடக்கும் பாத்திரங்கள். உதாரணம் சேகர் தன் அம்மாவுக்கு மருந்து வாங்க அலுத்து கொள்ளும் பணமுடை.

  2) செறிவான,அலுக்காத திரைக்கதை. இன்றைய படங்கள் போல எந்த உணர்ச்சியும் எல்லை மீறாமல் ,ஆனால் மனதில் பதியும் விந்தை. சக்தி கிருஷ்ணசாமி, சரித்திர படங்கள் அளவு, குடும்ப-பொழுது போக்கு சித்திரங்களிலும் தனது வசன திறமையை காட்டுவார்.பொழுதுபோக்கு மன்னன் ராமண்ணா கேட்கவே வேண்டாம். அவரது சிறந்த படங்களில் ஒன்று. நான் முதல், இது இரண்டாவது.

  3)ரஹ்மான் கேமரா, சுந்தரம் நடனம், வெங்கடேசன் சண்டை, விஸ்வநாதன் இசை அனைத்தும் படத்தோடு ஒன்றும். தனித்து தெரியாமல்.

  4)ஆலம் -சிவாஜி இணை அழகோ அழகு. நெருக்கம். இதில் கதாநாயகிகள் உஷாநந்தினி,சாரதாவிற்கு டூயட் கிடையாது. ஆலத்திற்கு இரண்டு.

  5)அத்தனை பாத்திரங்களும் பேசும் முறை, நடிப்பு இயல்போ இயல்பு. சாரதா,ருக்மிணி,வாசு,மனோகர் அனைவரும். உஷாநந்தினி உறுத்தல்.

  6)உட்கார்ந்தால் எழுவது தெரியாமல் ஆறிலிருந்து அறுபது வரை கவரும் அற்புத பொழுது போக்கு.
  நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
  http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

 9. Likes Barani, adiram liked this post
 10. #3375
  Senior Member Veteran Hubber
  Join Date
  Feb 2012
  Location
  Indonesia
  Posts
  4,127
  Post Thanks / Like
  Adhavan Ravi,

  I never miss a word in your post. Highly aesthetic with keen observation with right kind of Word Smithy and craftiness. Kudos.
  நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
  http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

 11. #3376
  Senior Member Senior Hubber Aathavan Ravi's Avatar
  Join Date
  Aug 2015
  Posts
  830
  Post Thanks / Like
  அந்த மோதிரக் கையால் குட்டுப்பட்டாலே குஷியாகி விடுகிறவன் ஆதவன் ரவி.

  மோதிரக் கை தட்டிக் கொடுத்துப் பாராட்டுகிறது.
  கேட்க வேண்டுமா? கிடந்து குதிக்கிறான்.

  கோபால் சாருக்கு நன்றி சொல்கிறான்.

 12. #3377
  Moderator Veteran Hubber
  Join Date
  Mar 2006
  Posts
  3,024
  Post Thanks / Like
  வாசு, ராஜா டிஜிட்டலில் மாற்றி ரீலீஸ் செய்வது பற்றி எழுதியிருந்ததை படித்தேன். அதற்கு முன்னரே அதைப் பற்றி விசாரித்தோம். இப்போது வெளியிட்டவர்களின் உரிமை உடனே முடிவுக்கு வருகிறது என்றும் வேறு ஒரு நபர் தமிழக உரிமையை (மதுரை தவிர்த்து) வாங்கி விட்டதாகவும் செய்தி. ஆனால் வாங்கியவர் பற்றி மேலதிக விவரங்கள் தெரியவில்லை. விரைவில் அதை தெரிந்துக் கொண்டு அவர்களின் பிளான் என்ன என்பதையும் தெரிந்துக் கொண்டு சொல்கிறேன். நன்றி

  அன்புடன்

 13. #3378
  Senior Member Senior Hubber Aathavan Ravi's Avatar
  Join Date
  Aug 2015
  Posts
  830
  Post Thanks / Like
  நினைப்போம். மகிழ்வோம் -141

  "எங்கிருந்தோ வந்தாள்".

  தன்னை வாழ்விக்க வந்தவள் தன்னை விட்டுப்
  பிரிந்து செல்வது பொறுக்காமல், "நான் உன்னை
  அழைக்கவில்லை" பாடியும் தீராமல், கிளம்பிப்
  போனவளே திரும்ப வந்து தேற்றியும் அடங்காமல்
  மடங்கி அமர்ந்து கொண்டு கேவிக் கேவி அழும்
  அழுகை.

  ( அவர் அழும் போது, அழாமல் பார்த்ததாக வரலாறே இல்லை.)

 14. Likes Barani liked this post
 15. #3379
  Senior Member Senior Hubber Aathavan Ravi's Avatar
  Join Date
  Aug 2015
  Posts
  830
  Post Thanks / Like
  நினைப்போம். மகிழ்வோம் -142

  "எங்க மாமா".

  தங்கள் இடத்திற்குப் புதிதாக வந்திருக்கும் பெண்ணுக்கு, தன் பராமரிப்பிலிருக்கும் அனாதைக் குழந்தைகளுக்கு பெயர் வைத்ததை
  விளக்கும் காட்சி.

  ஒரு பையனின் பெயர் "காந்தி" என்று சொல்வார்.
  கனிவும், சாந்தமுமாய் அதிர்வற்ற அந்த உச்சரிப்பில் காந்தியே வந்து போவார்.

 16. Likes Barani liked this post
 17. #3380
  Senior Member Senior Hubber Aathavan Ravi's Avatar
  Join Date
  Aug 2015
  Posts
  830
  Post Thanks / Like
  நினைப்போம். மகிழ்வோம் -143

  "கௌரவம்".

  சின்னவர் பேருந்து நிறுத்தத்தில் கையில் சந்தைச்
  சுமையோடு நிற்பார்.

  காதலியின் தோழியர் கூட்டம் ஆர்ப்பாட்டமாய் அவரிடம் வந்து அறிமுகம் ஆகி கை நீட்ட " கை குடுக்க முடியாது. கையில கறிகாய் இருக்கு"
  என்பார்.. அந்தப் பெண்கள் கூட்டம் பேசிய அதே
  தொனியில்.

 18. Likes Barani liked this post

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •