Results 1 to 10 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

Threaded View

  1. #11
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like


    "பொங்குதல்...
    ஆனந்த முழுமையின்
    அடையாளம்."

    - அன்புத் தலைவனின் திருமுகத்தை அனுதினமும்
    ஆயிரம் முறைகள் தொலைக்காட்சிகள் காட்டினாலும், திரையரங்கின் "வெள்ளி" விரிப்பில்
    அந்தப் "பொன்" முகத்தைக் காண்பதே பிறவிப் பயனென்று வாழும் நூற்றுக்கணக்கான ரசிக நெஞ்சங்களின் உணர்வுகள் பொங்குமிடத்தில்
    "சொர்க்கம்" கண்டேன்.

    அன்புச் சகோதரர் திரு. சுந்தர்ராஜன் அவர்களின்
    செயல் எழுச்சி, திரு. பிரபு வெங்கடேஷ் அவர்களின் சுறுசுறுப்பு , சென்னை திரு. ஜெயக்குமார் அவர்களின் வெறித்தனமான சிவாஜி பித்து, பிப்ரவரி 10-ல் "ராஜபார்ட் ரங்கதுரை" யை உலகெங்கும் உலவ விடும் நற்செய்தியோடு கை குலுக்கிய திரு. பாலகிருஷ்ணன் அவர்களின் பேருழைப்பு, அகில
    இந்திய சிவாஜி மன்றம், தலைவன் சிவாஜி மக்கள் இயக்கம், சிவாஜி பேரவை போன்ற அய்யனின் கீர்த்தி சொல்லும் அற்புத இயக்கங்களோடு தம்மைப் பிணைத்துக் கொண்டு
    அயராது பணியாற்றிய அன்பு நெஞ்சங்களின்
    ஆர்வம், ஒரு பெரிய பொறுப்பிலிருக்கும் கர்வம்
    காட்டாது எல்லோரோடும் அன்போடு கலந்து நின்று அய்யன் புகழ் பாடிய அகில இந்திய சிவாஜி மன்றத்தின் இணைப் பொதுச் செயலாளர்
    அண்ணன் திரு. முருகவிலாஸ் நாகராஜன் அவர்களின் பேரன்பு...

    இவற்றின் மீதான வியப்புகளுடனே "சொர்க்கம்"
    கண்டேன்.

    உள்ளே மூன்றே நபர்களை வைத்துக் கொண்டு,
    வெளியே நூறு நாள், வெள்ளி விழாவெல்லாம்
    காணுகிற பொய்ப் படங்களுக்கு மத்தியில், ஒரு
    திருவிழாவிற்குப் போல் திரண்ட பெருங்கூட்டத்தின் பூரிப்பில் "சொர்க்கம்" கண்டேன்.

    ஒரு பொழுது போக்குச் சித்திரம் காட்டப்படுகிற
    திரையரங்கத்தை, காலங்கள் வியக்கும் கலைக்
    கூடமாய் மாற்றத் தெரிந்த எங்களய்யன் நடிகர்
    திலகம் சிருஷ்டித்த "சொர்க்கம்" கண்டேன்.

    " எனக்கு ஒரு லட்சியம் உண்டு. எல்லோரும் என்னைப் பத்தியே பேசணும்." - எல்லோரையும்
    தன்னைப் பற்றியே இன்றளவும் பேச வைக்கிற
    தலைவன் இந்த வசனம் பேசுகிற போதும்...

    அட்டகாசமான ஆடை மாற்றத்திற்குப் பிறகு "பொன்மகள் வந்தாள்" பாடலின் துவக்கத்தில்
    ஒயிலாய்த் திரும்பி நிற்கும் போதும்...

    முதல் தடவையாய் குடித்து விட்டு வந்து, மனைவியிடம் அழுது புலம்பும் போதும்...

    "நீல வானம் மெல்ல மெல்ல சிவந்து போனதே"
    என்ற வரியின் போது நிஜமான செவ்வானத்தை
    கண்களில் காட்டுகிற போதும்...

    தன்னை விட்டுப் பிரிந்து போக எண்ணும் மனைவியிடம் உரையாடும் போது, நடந்து போனவர் மிடுக்காய் திரும்பி நின்று பார்க்கும்
    போதும்...

    ஜூலியட் சீஸராக நேர் நடை நடந்து வரும்
    போதும்...

    "உன்னையா மறப்போம் உத்தமனே?" என்று உள்ளங்கள் வினவுவதைக் கரவொலியாக்கி,
    அரங்கமெங்கும் பரவ விட்ட அன்பு நெஞ்சங்களோடு நானும் கலந்த நிம்மதியில்
    "சொர்க்கம்" கண்டேன்.
    *****

    நல்லதையே வாழ்நாள் முழுக்க செய்து வந்தாலும்,
    செத்தால்தான் "சொர்க்கம்" .

    நல்லவரான தன்னை மிக நேசிக்கும் நல்லவர்களுக்கு வாழும் போதே "சொர்க்கம்"
    காட்டினான் தலைவன்.

    வணங்குவோம்... நமக்கு "சொர்க்கம்" தந்தவனை.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •