Page 344 of 400 FirstFirst ... 244294334342343344345346354394 ... LastLast
Results 3,431 to 3,440 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

  1. #3431
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மெய் சிலிர்க்க வைத்த மெய்யான நடிகர். (10 ம் பாகத்தின் மீள்பதிவு)

    தந்தை என்பது தெரியாமல் தங்கம் கடத்தும் தொழிலின் தலைவர் ஸ்பையைப் பிடிக்கப் போராடுகிறான் சிபிஐ அதிகாரி ராஜன். ஒவ்வொரு முறையும் ஸ்பையைப் பிடிக்க முயலும் போதெல்லாம் ராஜனின் திட்டங்கள் தோல்வியுறுகின்றன. ஸ்பை சாமர்த்தியமாக ஒவ்வொரு முறையும் ராஜனிடமிருந்து தப்பித்து விடுகிறான். யாரோ ராஜனுடைய திட்டங்களை ஸ்பைக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தி விடுகிறார்கள். யார் அது?! குழம்புகிறான் ராஜன். அப்படி யாரும் இருப்பதாக அவன் நினைவுக்கு எட்டிய வரையில் வரவில்லை. ஆனால் அவன் தன்னுடைய தொழில் ரகசியங்களை தான் தாயிடம் மட்டுமே கூறுவான். இறுதியாக ஸ்பையை பிடிக்க இருக்கும் திட்டத்தை ராஜன் தன் தாயிடம் தெரியப்படுத்தி இருந்தான். இதிலும் ஸ்பை எஸ்கேப். இப்போது வருகிறது சந்தேகம் ராஜனுக்கு.

    தாயிடம் கோபமும் வருத்தமும் கலந்த நிலையில் வருகிறான் ராஜன். அவன் முகத்தைக் கண்டே அவன் தாய் அவன் உள்ளத்தைப் புரிந்து கொண்டு விடுகிறாள். தன் கணவனான ஸ்பையைக் காப்பாற்ற ராஜனின் திட்டங்களை ஸ்பையிடம் சொல்லி ஸ்பையை தப்பிக்க வைப்பவளே அவள்தானே! மேலும் தன் கணவனைப் பற்றி ராஜனிடம் அவள் மூச்' விட்டதில்லை. அப்படி சொன்னால் ராஜன் தன் தந்தையை அரெஸ்ட் செய்து விடுவானே!

    மகனின் முகத்தை ஏறெடுத்துப் பார்க்க முடியாமல் தவிக்கிறாள் தாய். போன காரியம் வெற்றியடையாமல் திரும்பி வந்ததை மகனின் முகம் காட்டுகிறது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு போன காரியம் வெற்றியடந்ததா என்று மேலுக்குக் கேட்கிறாள். ராஜன் வெற்றியடைந்து விட்டதாக ஜாடை செய்கிறான் வேண்டுமென்றே! பதறுகிறாள் தாய். தன் கணவன் தன் மகனிடம் பிடிபட்டு விட்டானோ என்று ஒருகணம் ஸ்தம்பித்துப் போகிறாள். அந்தக் கணமே தன் தாயின் முக பிரதிபலிப்புகளின் மூலம் தன் திட்டங்களுடைய தோல்விகளுக்கெல்லாம் அவள்தான் காரணம் என்று கண்டுபிடித்து விடுகிறான் ராஜன்.

    எரிமலையாய் வெடிக்கிறான் ராஜன். தன் தாய் யாரோ ஒருவனைக் காப்பாற்ற தன்னை ஏன் பலிகடா ஆக்கினாள் என்று குமுறுகிறான். வார்த்தைகளால் அவளைக் கொல்கிறான். தன் தாய் இரண்டாவதொரு வாழ்க்கை வேறொருவனிடம் வாழ்கிறாள் என்று அவளிடமே கேட்டு அவளைத் துடிக்க வைக்கிறான். அப்போதுதான் அந்தத் தாய் மகன் தேடும் அந்த ஸ்பைதான் அவனின் தந்தை என்ற உண்மையை வெளிப்படுத்துகிறாள். அதிர்ச்சியில் சிலையாய் உறைகிறான் ராஜன். தன் தாய் குற்றமற்றவள் என உணருகிறான். அதே சமயம் ஒரு பயங்கரக் குற்றவாளியைத் தப்பிக்க வைத்த குற்றவாளியாய் தன் தாயைப் பார்க்கிறான். சட்டப்படி நடவடிக்கை எடுத்து, பாச பந்தங்களை அறுத்து, தாயென்றும் பாராமல் அவளைக் கைது செய்கிறான். வேதனையின் விளிம்புக்கே செல்கிறான்.

    தாயாக எஸ்.வரலஷ்மி. தந்தையாக o.a.k.தேவர்.

    சிபிஐ அதிகாரி ராஜனாக நம் நடிகர் திலகம்.

    கேட்கவும் வேண்டுமோ! அற்புதமான சில நிமிடக் காட்சிகள்.

    ஸ்பையைப் பிடிக்கும் முயற்சியில் தோல்வியுற்று, தன் தாயின் மேல் சந்தேகப்பட்டு வீட்டுக்கு வரும் நடிகர் திலகம் எதுவுமே பேசாமல் தடுமாறும் தன் தாயைப் பார்க்கும் அந்தப் பார்வை...தன் தோல்விகளுக்கு அவள்தான் காரணமோ என்ற சந்தேகப் பார்வை... தன் தாய் குற்றவாளியா இல்லையா என்று ஊர்ஜிதம் செய்து கொள்ளத் துடிக்கும் அந்தக் கண்கள்... தன்னிடம் காபி கொடுக்கும் அவளின் கை நடுங்குவதைக் கவனித்து தீர்க்கமாக அவளையே ஆழமாக ஊடுருவிப் பார்க்கும் அழுத்தமான அமைதிப் பார்வை...

    "போன காரியம் வெற்றியா முடிஞ்சுதாப்பா?" என்று கேட்கும் வரலஷ்மியிடம் மெளனமாக "முடிந்தது" என்பது போல தலையாட்டும் பாவம்..."அவுங்களைப் புடிச்சிட்டியா?" என்று தாய் கேட்க "ஆமாம்" என்பதற்கான ஆழமான தலையசைவு... "அவுங்க இப்ப ஜெயில்லதான் இருக்காங்களா" என்பவளிடம் அதற்கும் "ஆமாம்" என்று வசனமில்லாமலேயே பொய்யாக உணர்த்தும் அற்புதம்...

    தன் கணவன் தன் பிள்ளையிடம் மாட்டிக் கொண்டானே என்று அவள் அழும் போது வெடிக்க ஆரம்பிப்பார். தனக்கு நேர்ந்த அவமானத்திற்கு அவள்தான் காரணம் என்று கதறுவார். "அந்த ஸ்பைக்கும் உங்களுக்கும் என்ன உறவு?" என்று கேட்டு "இரண்டாவது வாழ்க்கை வாழ்ந்துகிட்டு இருக்கீங்களா அம்மா?" என்று அவமானத்தால் கூனிக் குறுகிப் போவார். பின் அந்த ஸ்பைதான் ராஜனின் அப்பா என்று விளக்கியவுடன் அப்படியே சிலையாகி விடுவார். பின் அவள் தன்னுடைய பிளாஷ்பேக்கை சொல்லி தன் கணவனும் ராஜனின் தந்தையுமான ஸ்பை எப்படி தேசத்துரோகி ஆனான் என்று விளக்கும் போது சோபாவில் அண்ணாந்து சாய்ந்தபடியே வெறித்து நோக்கியபடி இருப்பார். எதையும் பேசவே மாட்டார்.

    தாயைக் கைது செய்யுமுன் அவளைப் பார்க்க முடியாமல் கண்கலங்கும் காட்சி



    பின் மேலதிகாரியிடம் பெர்மிஷன் வாங்கிக் கொண்டு வந்து தாயை அரெஸ்ட் செய்வார். காவல் அதிகாரிகள் தன் கண்முன்னமேயே தன் தாயை அரெஸ்ட் செய்யும் போது கண்களில் குளமாய் தண்ணீர் தேங்கி நிற்கும். கோட் தோள்களில் சுமக்கப்பட்டிருக்கும். நேராக நிற்க மாட்டார். கதவில் சாய்ந்தபடி நிற்பார். நிற்பதில் ஒரு தொய்வு தெரியும். தன் தாய் கள்ளமற்றவள் என்ற திருப்தியைத் தாண்டி தன் தாய் ஒரு தேசத் துரோகியை தப்பிக்க வைத்தவள் என்ற ஆத்திரம் மேலோங்கி இருக்கும். அவமானத்தால் அசிங்கப்பட்டு நிற்பது போல நிற்பார். அதே சமயம் தன் தாயைத் தவிர யாருமில்லாத தான் எப்படி இனித் தனியாக வாழ முடியும்? என்ற ஏக்கம் அந்த நிற்கும் பாவனையில் பிரதிபலிக்கும். தன் தாய் தன் முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் தன் தாயைப் பார்க்க முடியாமல் (பிடிக்காமல்) வேறு பக்கம் முகத்தை திருப்பிக் கொள்வார். காவலர்கள் தன் தாயை கைது செய்து அழைத்துச் சென்றவுடன் தன் தாயை நானே கைது செய்து விட்டேனே என்ற குற்ற உணர்வில் கோபமும், வேதனையும் கொப்பளிக்க, உணர்ச்சிப் பிரவாகம் வெள்ளமாய்ப் பொங்க, யாரிடமும் சொல்லித் தேறுதல் படுத்திக் கொள்ளக் கூடிய சூழ்நிலை கூட இல்லாமல் சோபாவில் அமர்ந்து கண்களைக் கைகளால் மூடியபடியே, கால்களைத் துடிக்க வைத்தபடியே துவள்வார். மௌனமும், ஆர்ப்பாட்டமுமாய் நெஞ்சு விம்ம அழுவார். அது அமைதியான அழுகையா... ஆர்ப்பாட்டமான அழுகையா என்று அந்த ஆண்டவனுக்கே தெரியாது. அப்படி ஒரு அற்புதம் கலந்த அழுகைக் கலவை அது.

    தாயை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு தன்னந்தனியே துடிக்கும் அற்புத சீன்



    மிக மிக வித்தியாசமான காட்சி. அற்புதத்திலும் அற்புதம். என் மனதை விட்டு இமைப் பொழுதும் நீங்காத காட்சி. ஆண்டவன் படைப்பின் அற்புதங்களில் அற்புதமான அண்ணனின் அற்புத நடிப்பில் நான் மெய் மறந்த, மெய் சிலிர்த்த காட்சி. நிலை மறந்த காட்சி.

    படம்: தங்கச் சுரங்கம்.
    Last edited by vasudevan31355; 16th February 2017 at 06:59 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3432
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  4. #3433
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  5. #3434
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  6. #3435
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  7. #3436
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  8. #3437
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  9. #3438
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    From FB

    நடிகர் திலகமே தெய்வம்

  10. Thanks adiram thanked for this post
    Likes adiram liked this post
  11. #3439
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    From FB

    அன்பு வாசு சார்,

    அருமையான நிழற்படம் தந்துள்ளீர்கள். நன்றி.

    இது ஆல் இந்தியா ரேடியோவில் அண்ணன் ஒரு சுதந்திர தினத்தன்று வழங்கிய சிறப்பு நிகழ்ச்சியின்போது எடுத்த ஸ்டில். தன்னுடைய பொது நிகழ்ச்சி உடையாக சந்தன கலர் குர்தா உடையை தேர்ந்தெடுக்கும் முன் 1967 முதல் 70 வரை பொது நிகழ்ச்சிகளுக்கு (இதில் அணிந்திருக்கும்) வெள்ளை அரைக்கை சட்டை, வெள்ளை பேண்ட் அல்லது வெள்ளை அரைக்கை சட்டை வெள்ளை வேஷ்டி அணிந்து வருவார். அப்போது கலந்துகொண்ட நிகழ்ச்சிதான் இது.

    பின்னர் அவரது பொது நிகழ்ச்சி உடையாக சந்தன கலர் குர்தா பல ஆண்டுகள் (கிட்டத்தட்ட 10 ஆண்டுகள்) தொடர்ந்தது. பின்னர் திரிசூலம் மதுரை விழாவின்போது தன்னுடைய உடையை மாற்றி, மெரூன் கலர் ஜிப்பா, மெரூன் கலர் வேஷ்டி அணிந்தார்.ஆனால் சிறிது காலமே. (நட்சத்திரம் படத்தின் இறுதிக்கு காட்ச்சியில் ஸ்ரீபிரியா உடலுக்கு அஞ்சலி செலுத்த காரிலிருந்து இறங்கி வரும்போது அணிந்திருப்பார்). அதன்பின் மீண்டும் சந்தன கலர் குர்தாவுக்கு மாறினார்.

  12. #3440
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    காவலர்கள் தன் தாயை கைது செய்து அழைத்துச் சென்றவுடன் தன் தாயை நானே கைது செய்து விட்டேனே என்ற குற்ற உணர்வில் கோபமும், வேதனையும் கொப்பளிக்க, உணர்ச்சிப் பிரவாகம் வெள்ளமாய்ப் பொங்க, யாரிடமும் சொல்லித் தேறுதல் படுத்திக் கொள்ளக் கூடிய சூழ்நிலை கூட இல்லாமல் சோபாவில் அமர்ந்து கண்களைக் கைகளால் மூடியபடியே, கால்களைத் துடிக்க வைத்தபடியே துவள்வார். மௌனமும், ஆர்ப்பாட்டமுமாய் நெஞ்சு விம்ம அழுவார். அது அமைதியான அழுகையா... ஆர்ப்பாட்டமான அழுகையா என்று அந்த ஆண்டவனுக்கே தெரியாது. அப்படி ஒரு அற்புதம் கலந்த அழுகைக் கலவை அது.
    தாயை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு தன்னந்தனியே துடிக்கும் அற்புத சீன்



    மிக மிக வித்தியாசமான காட்சி. அற்புதத்திலும் அற்புதம். என் மனதை விட்டு இமைப் பொழுதும் நீங்காத காட்சி. ஆண்டவன் படைப்பின் அற்புதங்களில் அற்புதமான அண்ணனின் அற்புத நடிப்பில் நான் மெய் மறந்த, மெய் சிலிர்த்த காட்சி. நிலை மறந்த காட்சி.

    படம்: தங்கச் சுரங்கம்.
    இந்த இடத்தில டி.எம்.எஸ். குரலில் ஒரு சோலோ சாங் ஒலிக்கவிட்டு காட்சியை கெடுத்து குட்டிசுவராக்காமல் மௌன போராட்டமாக விட்ட இயக்குனர் ராமண்ணா அவர்களுக்கு 10,000 நன்றிகள்.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •