Page 370 of 400 FirstFirst ... 270320360368369370371372380 ... LastLast
Results 3,691 to 3,700 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

  1. #3691
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3692
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. Likes Harrietlgy liked this post
  5. #3693
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 172– சுதாங்கன்.





    சிவாஜி தன் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் யாருடைய பாணியையாவது மனதில் உள்வாங்கி கொள்வார்.
    அதாவது நிஜ வாழ்க்கையில் அவர் சந்திக்கும் மனிதர்களின் நடை, உடை பாவனைகளை பார்த்து கிரகித்துக் கொள்வார்.
    உதாரணமாக 'திருவருட் செல்வர்' அப்பர் வேடம் – காஞ்சி பரமாச்சாரியார் 'வியட்நாம் வீடு' பத்மநாப அய்யர் - டி.வி.எஸ். கிருஷ்ணா. கெளரவம் பாரிஸ்டர் ரஜினிகாந்த – சித்ரா நாராயணசாமி! யார் இந்த சித்ரா நாராயணசாமி?
    இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தை இவர் தான் உருவாக்கினார்.
    இப்போதும் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் சி.பி. ராமசாமி சாலையில் மயிலாப்பூர் பக்கமாக வந்து நுழைந்தால், அங்கிருக்கும் மேம்பாலத்திற்கு கீழே இடது பக்கம் ஒரு பிரம்மாண்ட பங்களா இருக்கும்.
    அதுதான் நாராயணசாமியின் வீடு. அதாவது வைஜெயந்தி மாலா வீட்டிற்கு எதிர்ப்புறம். இவர் தான் இந்தியா சிமெண்ட்ஸ் அதிபர் என்.ஸ்ரீனிவாசனின் தந்தை. இந்த தகவலை சிவாஜியே என்னிடம் சொன்னார்!
    கெளரவம் பட வெற்றிக்கு இன்னொரு முக்கிய காரணம் விஸ்வநாதன் – கண்ணதாசன் கூட்டு! தந்தைக்கு மகனுக்குமான போராட்டம். அதில் தந்தையின் மனத்துடிப்புக்கான பாடல் இரண்டு!
    ஒன்று 'பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து பார்த்த கிளி நான் வளர்த்த பச்சைக் கிளி நாளை வரும் கச்சேரிக்கு செல்லம்மா என் செல்லம்மா'
    இன்னொரு 'பாடல் நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா' பாடல்! அந்த பாடலின் ஆழத்தை ஒவ்வொரு முறை கேட்கும்போதுதான் புரியும்.
    அதில் ஒரு சரணம் `மூன்றடி மண் கேட்டான் வாமனன் உலகிலே! மூன்றென வைத்ததோ மன்னவன் தலையிலே’வளர்த்த என் கண்ணனோ தந்தையின் நெஞ்சிலே! மாறும் அவதாரமே இதுதான் உலகிலே’ புராணத்தை கொண்டு வந்து நிஜ வாழ்க்கை நிகழ்வுகளோடு இணைக்கிற திறன் கண்ணதாசனுக்கு மட்டுமே சாத்தியம்!
    படம் சென்னை சாந்தி தியேட்டரில் வெளியாகி நூறு நாட்களைத் தாண்டி ஒடியது. அடுத்து சிவாஜி கெளரவ வேடத்தில் நடித்த படம் ` மனிதருள் மாணிக்கம்’ பல சிவாஜி ரசிகர்களுக்கு இந்தப் படம் பெருத்த ஏமாற்றம். சிவாஜியை ஒரு கோமாளி டாக்டராக காட்டியிருப்பார்கள்.
    அதில் ஒரு பாட்டு மட்டும் ஹிட் ஆனது! சிவாஜி படங்களில் மைல்கல்லாக விளங்கிய படம் ` ராஜபார்ட் ரங்கதுரை’. இந்த படத்தில் அவருக்கு ஒரு நாடகக்காரன் வேடம்! சிவாஜிக்கு மிகவும் பொருத்தமாகவே இருந்தது.
    நூறு படங்களுக்கு மேல் நடித்துவிட்டு, தன் நாடக வாழ்க்கையை அவர் திரையில் காட்டுவது மாதிரி அமைந்தது இந்த படம்.
    இந்த படத்தில் அவருக்குத்தான் நடிக்க எத்தனை வாய்ப்புக்கள்! பிச்சு உதறிவிட்டார். மேடையில் பகத் சிங்காக, திருப்பூர் குமரனாக, ஹாம்லெட்டாக வந்து கலக்கிய படம்.
    சிவாஜி ரசிகர்களுக்கு நல்ல தீனி போட்ட படம் இது. பாடல்கள் அத்தனையும் அருமை! இதில் ஒரு காட்சியில் ஹாம்லெட்டாக வருவார்! ஆங்கிலத்தில் வசனம் பேசுவார்! சிவாஜிக்காக ஷேக்ஸ்பியர் சுந்தரம் என்பவர் குரல் கொடுத்திருந்தார்.
    ஆனால் சிவாஜி ஆங்கிலம் பேசும்போது, தியேட்டரில் விசில் பறக்கும்! சென்னை பைலட் தியேட்டரில் வெளியான படம் இது!
    1974ம் வருடம் வந்த சிவாஜி படங்கள் ஆறு. இதில் இரண்டு படங்கள் பெரும் வெற்றி! ஒரு படம் வெற்றி! மற்ற படங்கள் சுமார் ரகம்!
    இதில் ஒருபடம் தயாரிப்பாளருக்கு வசூலை குவித்தது! ஆனால் சிவாஜி அந்தப் படத்தில் நடித்திருக்கக் கூடாது என்பது ரசிகர்களின் எண்ணமாக இருந்தன.
    அந்தப் படத்திற்கு வருவோம்
    இந்த வருடத்தில் வந்த படத்தில் முக்கியமானது 'தங்கப் பதக்கம்'. அதைப் பற்றி இங்கே ஏற்கனவே சொல்லிவிட்டோம்,
    'சிவகாமியின் செல்வன்' வழக்கமாக இந்தியில் பெரும் வெற்றி அடைந்த படங்களை தயாரிப்பாளர் பாலாஜிதான் அதன் உரிமையை வாங்கி, தமிழில் எடுப்பார்.
    அகில இந்தியாவிலும் மாபெரும் வெற்றியை குவித்த இந்தி படம் 'ஆராதனா' !
    இந்தியில் ராஜேஷ் கன்னாவும், சர்மிளா டாகூரும் நடித்திருப்பார்கள்.
    இந்த படத்தில் வந்த ரூப்பு தேரா மஸ்தானா’ பாடலை இந்தி தெரியாத நமது குக்கிராம மக்கள் கூட முணுமுணுத்துக்கொண்டிருந்தார்கள். பாடல்கள் அத்தை பிரபலம்!
    ஆனால் இந்த படத்தை ஜெயந்தி பிலிம்ஸார் தமிழ் உரிமையை வாங்கியிருந்தார்கள்.
    இந்தி `ஆராதனா’ படத்தின் தமிழாக்கம் தான் சிவாஜி – வாணிஸ்ரீ நடித்த 'சிவகாமியின் செல்வன்'!
    இந்தி படப்பாடல்களின் சாயலே தெரியாமல் அருமையாக இசையமைத்திருந்தார் எம்.எஸ். விஸ்வநாதன்.
    இந்தப்படத்தை இயக்குனர் சி.வி. ராஜேந்திரன் இயக்கியிருந்தார். படம் நன்றாகவே ஓடியது. இந்த வருடத்தில் வந்த இன்னொரு பாலாஜியின் படம் ` என் மகன்’ இதுவும் ஒரு இந்தி படம் தான்.
    இதில் சிவாஜிக்கு அப்பா – பிள்ளை என்று இரட்டை வேடம்! சிவாஜி பாணியில் அமைந்த ஒரு மசாலாப் படம் இது! நூறு நாட்களைத் தாண்டி சென்னை தேவி தியேட்டரில் ஓடியது.
    `தாய்’ சிவாஜி ரசிகர்கள் மனதை எட்டவே எட்டாத ஒரு படம்! `அன்பைத் தேடி’ இதில் சிவாஜிக்கு பொருத்தமில்லாத ஒரு வேடம். இதில் சிவாஜிக்கு ஜோடி ஜெயலலிதா! கனவுகாணும் கதாபாத்திரம் சிவாஜிக்கு!
    இந்தப் படத்தை முக்தா பிலிம்ஸார் எடுத்திருந்தார்கள். அதே போல் சிவாஜி ரசிகர்களை ஏமாற்றி, தயாரிப்பாளருக்கு வசூலை குவித்த படம் 'வாணி ராணி' இந்த படத்தில் வாணிஸ்ரீக்கு இரட்டை வேடம்.
    இந்தியில் ஹேமாமாலினி நடித்து பெரும் வெற்றி பெற்ற படம் ` சீதா அவுர் கீதா ‘. உண்மையில் பார்த்தால் இது ` எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தின் பெண் பதிப்பு என்றே இந்த படத்தை சொல்லலாம்.
    அதே கதை!
    'எங்க வீட்டுப் பிள்ளை'யில் ஒரு
    எம்.ஜி.ஆர். சாது, இன்னொருவர் வீரர்.
    அதையே அப்படியே கதாநாயகிக்கு மாற்றினார்கள்.
    ஒரு கதாநாயகி சாது! இன்னொருவர் வீராங்கனை
    இந்தியின் இரட்டை வேடம் ஹேமாமாலினிக்கு!
    இந்த படம் இந்தியில் பெரும் வெற்றியைப் பெற்றது.
    `எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தை எடுத்த விஜயா வாஹினி புரொடக்*ஷன்ஸ் இதை தமிழில் எடுக்க முடிவு செய்தார்கள். தமிழுக்காக வாணிஸ்ரீ! படத்தின் முழு அமைப்பும் கதாநாயகி மேல்தான். அவருக்கு பக்கபலமாக இரண்டு கதாநாயகர்கள். ஒருவர் சிவாஜி, இன்னொருவர் முத்துராமன்! சிவாஜிக்கு இதில் தீனியே இல்லை! இதை சிவாஜியிடமே கேட்டார் எழுத்தாளர் ஆரூர்தாஸ். சிவாஜி சொன்னார்,`ஆரூரான், சில சமயம் பெரிய முதலாளிகள் கேட்கும்போது தட்ட முடியாது!’
    (தொடரும்)

  6. #3694
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    பாகுபலி திரைப்படத்தை கர்நாடக மாநிலத்தில் திரையிட விடமாட்டோம் என்று கன்னட அமைப்புகள் சில வழக்கம் போல போராட்டம் நடத்தியதும், பின் நம்முடைய சத்யராஜ் அவர்களும் அதற்கு வருத்தம் தெரிவித்து விட்டதனால் போராட்டம் கைவிடப் பட்டது என்ற செய்தியை மொத்த ஊடகங்களும் திரும்ப திரும்ப ஒளி பரப்பியதால் செய்திகளை தெரிந்து கொண்டோம்,
    சரி பாகுபலி கர்நாடகத்தில் தடைபடுவதால் தமிழகத்திற்கு என்ன இழப்பு என்பது புரியவில்லை,
    சரி அதை விடுவோம்,
    இதே கன்னட அமைப்புகள் சில வருடங்களுக்கு முன் செய்த ஒரு அட்...டூழியத்தை நினைவு படுத்துகிறேன்
    1996 ல் கன்னடத்தில் திரு சாய்குமார் நடிப்பில் வெளி வந்த" போலிஸ் ஸ்டோரி" திரைப்படம் பெரும் வெற்றி அடைந்தது, படம் ஒரு வருடங்களுக்கும் மேல் ஓடி வசூலில் சாதனை புரிந்தது படம் தமிழ், தெலுங்கு என்று டப்பிங் செய்யப்பட்டு தமிழகம் மற்றும் ஆந்திராவிலும் செக்கப் போடு போட்டது என்றே சொல்ல வேண்டும்,
    ஒரே படத்தின் வெற்றி திரு சாய்குமார் அவர்களை திரையுலகத்தை திரும்ப பார்க்க வைத்தது, அந்த வெற்றி கன்னட முன்னோடி நடிகர்களை பொறாமை கொள்ள வைத்தது.
    படத்தின் இத்தனை பெரிய வெற்றிக்கு முக்கிய காரணம் என்ன என்ற மீடியாக்களின் கேள்விக்கு நடிகர் திலகம் சிவாஜி தான் காரணம் என்றார் திரு சாய்குமார்
    மேலும் அவர் கூறுகையில் நடிகர் திலகத்தின் நடிப்பு எனக்கு சினிமா ஆசையை தூண்டியது தங்கப் பதக்கத்தை மனதில் கொண்டு போலிஸ் ஸ்டோரியில் நடித்தேன் என்றும் எனது பூஜை அறையில் நடிகர் திலகத்தை வைத்து வணங்கி வருகிறேன் என்று வெளிப்படையாகவே புகழ்ந்தார், போலீஸ் ஸ்டோரியின் வெற்றியைத் தொடர்ந்து ஏராளமான படங்கள் குவியத் தொடங்கின, ஏற்கனவே பொறாமை கொண்ட கன்னட முன்னணி நடிகர்கள் சாய்குமார் அவர்களின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த கன்னட அமைப்புகளை தூண்டி விட்டனர், கன்னட அமைப்புகளும் அவரை எதிர்க்க எந்தக் காரணமும் இல்லாமல் போக இறுதியாக சிவாஜி தமிழர் அவரை எப்படி இங்கு புகழலாம், இங்கு எங்கள் ராஜ்குமாரை மட்டுமே புகழ வேண்டும் என்ற நிபந்தனையை விதித்தனர், கொஞ்சமும் பணிந்து போகாத திரு சாய்குமார் அவர்கள் அதுவரை ஒப்பந்தம் செய்து கொண்ட படங்களை மற்றும் நடித்து முடித்து விட்டு வெளியேறி தெலுங்கு பட உலகில் கவனம் செலுத்தி வருகிறார், அவ்வப்போது தமிழ் திரைப்பட ங்களிலும் நடித்து வருகிறார்,
    இப்படி தமிழர் சிவாஜி அவரை போற்றியதனால் எத்தனை பெரிய இழப்பை ஏற்றுக் கொண்டார் திரு சாய்குமார் அவர்கள், இத்தனை பெரிய தமிழருக்கு எதிரான ஒரு செய்தியை எந்த ஒரு நடுநிலை ஊடகங்களும் அப்போது வெளியிடவில்லை,
    நடிகர் திலகம் பற்றிய செய்திகளை தமிழக மக்கள் அறியாத வண்ணம் பார்த்துக் கொள்வது மட்டுமே தமிழ் ஊடகங்கள் மேற்கொண்டு வரும் முதல் துரோகச் செயலாக இன்று வரை இருந்து வருகிறது, அதற்கு சிறந்த உதாரணமாக ஆந்திர மாநிலத்தின் நகரி. அருகே அமைந்துள்ள நடிகர் திலகத்தின் இரண்டு திரு உருவச் சிலைகள் திறப்பு விழா நடைபெற்ற மிக முக்கிய செய்தியை மூடி மறைத்தது..












    முகநூலில் இருந்து
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. Likes Harrietlgy liked this post
  8. #3695
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    ஆந்திர மாநில எல்லையில் மிக குறுகிய இடைவெளியில் நகரியிலும், சத்தியவாடாவிலும் நடிகர் திலகத்தின் இரு முழு உருவசிலைகள் திறக்கப்பட்டு நடிகர்திலகத்துக்கு பெருமை சேர்த்திருப்பது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கும் அதே வேளையில்....

    மனதில் வலியாக இருப்பது, திருச்சி மாநகரில் பாலக்கரை பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டும் இன்னும் திறக்கப்படாமல் போர்த்தப்பட்டு இருக்கும் நடிகர்திலகத்தின் முழு உருவச்சிலை, அதற்கான முறையான அனுமதி கிடைக்காமல் இருப்பது வருத்தமாக உள்ளது.

    சென்னை மெரினா வில் அமைந்துள்ள நடிகர்திலகம் சிலை தொடர்பாக நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவையின் நிலைப்பாடு போற்றுதலுக்கு உரியது. அந்த சிலையை நீதிமன்ற உத்தரவுப்படி அகற்ற நேரும் பட்சத்தில் அது மெரினா கடற்கரையிலே காந்தி, காமராஜ் சிலைகளுக்கு நடுவே வைக்கப்பட வேண்டும். மணிமண்டபத்தில் வேறு ஒரு சிலை நிறுவப்பட வேண்டும்.

    (மணிமண்டபத்தின் பணிகளும் அவ்வளவு திருப்திகரமாக இல்லை. ஏதோ கடனுக்கு செய்வது போல உள்ளது. அவ்வளவு பெரிய இடத்தில, சுற்றிலும் இடத்தை வேஸ்டாக விட்டுவிட்டு நடுவில் மட்டும் ஒரே ஒரு ஹால் போல கட்டப்படுகிறது)

  9. #3696
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #3697
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    முத்தையன் மறைவு நமக்கு பேரிழப்பு. ஆண்டவனுக்கு யாராவது தேவை என்றால் நான் தேர்ந்தெடுத்து சிலரை அனுப்பி இருப்பேன். நல்லவர்களை ஏன் கூட்டி போகிறான் என்பது தெரியவில்லை.

    அவரது குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்கள்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  11. #3698
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    இன்று தொலைக்காட்சிகளில் நடிகர் திலகம் திரைப்படங்கள்,
    காலை 10 மணிக்கு ராஜ் டிஜிட்டல் ப்லஸ்
    " அவன் ஒரு சரித்திரம் "
    பிற்பகல் 1:30 க்கு ராஜ் டிஜிட்டல் ப்லஸ்
    " மண்ணுக்குள் வைரம் "
    ... பிற்பகல் 2:30 க்கு ஜெயா தொலைக்காட்சி
    " முதல் மரியாதை"
    மாலை 7 மணிக்கு சன் லைப் சேனலில்
    " பலே பாண்டியா "
    இரவு 10 மணிக்கு ஜெயா மூவியில்
    " அன்னை இல்லம் "
    கண்டு மகிழ்வோம்



    (முகநூலில் இருந்து)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  12. Likes Harrietlgy liked this post
  13. #3699
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  14. #3700
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மஸ்தான்,

    எங்கள் தலைவரின் புகழ் ,திறமையின் அடிப்படையில், உருவானது. பொய்மையினால் தூக்கி பிடிக்க வேண்டிய அவசியம் வேண்டாதது. நாங்கள் ஒவ்வருவரும் நேர்மையாய் பதிவுகள் இடுவதால் எங்களுக்கு காவல் தேவையில்லை.

    பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்தவர்களுக்குத்தான் காப்பு தேவை.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •