Page 249 of 400 FirstFirst ... 149199239247248249250251259299349 ... LastLast
Results 2,481 to 2,490 of 3996

Thread: Makkal Thilagam MGR Part -19

  1. #2481
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    எம்ஜிஆர் மாஜிக் -115

    என்ன இது புதிர் என்று எண்ண வேண்டாம் . 1947ல் எம்ஜிஆர் ராஜகுமாரி படத்தில் கதாநாயகன் ,
    1977 வரை 30 ஆண்டுகளில் 115 படங்களில் எம்ஜிஆர் தமிழ் படங்களில் மட்டும் கதாநாயகனாக நடித்தார் .புராண மற்றும் மாயஜால படங்களில் இவர் நடித்ததில்லை இரண்டாம் கதாநாயகனாக ஒரு போதும் நடித்ததில்லை .எல்லா படங்களிலும் இவர்தான் சூப்பர் ஹீரோ .

    எடுப்பான உடற்கட்டு , பொன்னிறம் , வசீகர தோற்றம் இவருக்கு கூடுதல் அங்கீகாரம் .
    இது மட்டுமா ? கடுமையான உடற் பயிற்சி , எல்லா வித சண்டை பயிற்சிகள் , இவருக்கு எவர் கிரீன் ஹீரோ பட்டத்தை கொடுத்தது .இவருடைய படங்களை பார்த்தால் மேற்கண்ட சிறப்புகளை பார்த்து மகிழலாம் .

    எம்ஜிஆரின் வெற்றிக்கு பாடலாசிரியர்கள், பாடியவர்கள் , இசை அமைப்பாளர்கள் , வசனகர்த்தாக்கள், இயக்குனர்கள் என்று பலர் இருந்தாலும் எம்ஜிஆரின் பன்முக நடிப்பு திறமை ரசிகர்களை கட்டிப்போட வைத்த காட்சிகள் பிரதான இடம் பெறுகிறது .

    பேரறிஞர் அண்ணா கூறியது போல ஒரு நாடோடி மன்னன் - அரசியல் மாற்றத்தையே உருவாக்கி
    திராவிட இயக்கம் அரியணை ஏற கருவாக இருந்தது.பின் நாளில் நாடோடி மன்னனே நாடாளும் மன்னனாக அரியணை ஏறியது வரலாற்று நிகழ்வாகும்.115 படங்களின் மாஜிக் இப்போது புரிகிறதா ?

    அன்றும் இன்றும் என்றும் மக்கள் மனங்களில் குடியிருக்கும் எம்ஜிஆர் என்று எங்கள் தங்கம் படத்தில் அவரை பற்றி சொன்னார்கள் . .அது எந்த அளவிற்கு உண்மை என்று புரிகிறது .

    நன்றி - அறிவு சுடர் .முக நூல் .


    Last edited by esvee; 16th March 2016 at 09:46 AM.

  2. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #2482
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    எம்ஜிஆர் 100 | 22 - மதியூகத்தின் மறுபெயர்!

    m.g.r. படங்களில் பாடல் காட்சிகள் மற்றும் முக்கியமான காட்சிகளில் அமைக்கப்படும் அரங்குகள் பிரம்மாண்டமாக இருக்கும். மக்களின் வரவேற்பையும் பெறும். படத்தில் இடம்பெற வேண்டிய காட்சிகள் தன் மனதில் எப்படி விரிகிறதோ அதை கலை இயக்குநரிடம் எம்.ஜி.ஆர். விவரிப்பார். அதை கலை இயக்குநர்கள் கண்முன் கொண்டு வந்து விடுவார்கள். அப்படி எம்.ஜி.ஆர். மனதில் உள்ளதை காட்சியாக கொண்டு வருபவர்களில் முக்கியமானவர் அவரது படங்களின் ஆஸ்தான கலை இயக்குநர் அங்கமுத்து.

    எம்.ஜி.ஆரின் லட்சியப் படம் மட்டுமல்ல; அவரது ரசிகர்களால் மறக்க முடியாத பிரம்மாண்ட படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. அதுவரை தமிழில் வெளியான படங்களின் வசூலை முறியடித்து அபார வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆர். திரையுலகில் இருந்தவரை ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் வசூல் சாதனை முறி யடிக்கப்படவில்லை. இந்தப் படத்தை எடுக்கவும் அதை வெளியிடவும் எம்.ஜி.ஆர். பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அதையே தனியாக ஒரு புத்தகமாக எழுதலாம். படம் முழுவதுமே பிரம்மாண்டம் என்றாலும் எம்.ஜி.ஆருக்கும் நம்பியாருக்கும் இடையே நடக்கும் புத்தர் கோயில் சண்டைக் காட்சி படத்தின் ஹைலைட்.

    கதைப்படி, ஜப்பானில் புத்தபிட்சுவின் வீட்டில் அணுகுண்டு ஃபார்முலா ரகசியம் புதைத்து வைக்கப்பட்டிருக்கும். புத்த பிட்சுவின் வீடே சின்னச் சின்ன புத்தர் உருவங்களாலும் நடுவில் பெரிய புத்தர் சிலையுடனும் புத்த விஹார் போல இருக்கும். அணுகுண்டு ரகசியத்தை மீட்பதற்காக அங்கு எம்.ஜி.ஆர். செல்வார். அதற்கு முன்பே நம்பியார் அங்கு சென்று புத்த பிட்சுவைப் போல மாறு வேடத்தில் இருப்பார். அப்போது, இருவருக்கும் நடக்கும் சண்டை, ரசிகர்களுக்கு விருந்து.

    அன்பையும் அகிம்சையையும் வலியுறுத்திய புத்தரின் கோயில் என்பதால் கோயிலுக்குள் நம்பியாரை எம்.ஜி.ஆர். அடிக்க மாட்டார். நம்பியாரின் அடிகளை வாங்கிக் கொண்டே கோயிலை விட்டு வெளியே வந்துவிடுவார். பின்னர், நம்பியாரைப் பார்த்து, ‘‘உன் பலத்தை நான் பார்த்துட்டேன். என் பலத்தை நீ பார்க்க வேண்டாம்? ஒரு சான்ஸ் கொடேன்’’ என்று எம்.ஜி.ஆர். கூறும்போது ரசிகர்களின் உற்சாக வெறிக் கூச்சலால் தியேட்டர் அதிரும்.

    அந்தக் காட்சியில் புத்தர் கோயிலை கலை இயக்குநர் அங்கமுத்து கண்முன் நிறுத்தியிருப்பார். க்ளைமாக்ஸில் ஸ்கேட்டிங் சண்டைக்காக எம்.ஜி.ஆர். தனது தோட்டத்தில் மாடியிலேயே ஸ்கேட்டிங் பயிற்சி எடுத்துக் கொண்டார். அந்தக் காட்சிக்கான செட்டும் அங்கமுத்துவின் கைவண்ணம்தான்.

    ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்துக்காக ஒரு நாள் சத்யா ஸ்டுடியோவில் ‘செட்’ அமைப்பதில் அங்கமுத்து தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார். பணியில் முழு கவனத்துடன் வியர்க்க விறுவிறுக்க வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் மீது தென்றலாய் காற்றுபட்டது. அதை உணர்ந்தாலும் காரியத்திலேயே கண்ணாக பெயிண்டிங் செய்து கொண்டிருந்தார் அங்கமுத்து. சிறிது நேரம் கழித்து வேலை முடிந்ததும் கைதட்டல் ஒலி. திரும்பிப் பார்த்தால் எம்.ஜி.ஆர். நின்று கொண்டிருக்கிறார். பணியில் தீவிரமாக இருந்த அங்கமுத்துவுக்கு வியர்ப்பதை பார்த்ததும் அவருக்கு காற்று வரும்படி ஃபேனை அவர் பக்கமாக எம்.ஜி.ஆர்.தான் திருப்பி வைத்திருக் கிறார். தொழிலாளர்களின் திறமைக்கு மதிப்பளிப்பதுடன் அவர்களின் கஷ்டத்தை உணர்ந்து செயல்படுபவர் எம்.ஜி.ஆர்.

    திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்ட போது, அவரது ரசிகர்கள் தமிழகம் முழுவதும் கொந்தளித்தனர். புதிய கட்சியை எம்.ஜி.ஆர். தொடங்கும் முன்பே, ஆர்வ மிகுதியால் முதன் முத லாக மதுரையில் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் தாமரைப் பூ உருவம் பொறித்த கொடியை ஏற்றினர். மேலும் சில இடங்களிலும் தாமரைப் பூ கொடி ஏற்றப்பட் டது. ஒரு சில இடங்களில் கொடிகளை மாற்றுக் கட்சியினர் கிழிப்பதாகவும் கொடிக்கம்பங்களை வெட்டுவதாகவும் செய்திகள் வெளியாயின.

    பின்னர், அதிமுக கட்சி தொடங்க எம்.ஜி.ஆர். முடிவு செய்தவுடன் இதுபற்றி அவரிடம் கேட்கப் பட்டது. ‘‘எங்கள் புதிய கட்சியின் கொடியை யாரும் இனிமேல் கிழிக்க மாட்டார்கள்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார். அவர் அவ்வளவு நம்பிக்கையோடும் உறுதியாகவும் கூறியதற்கான காரணம் கட்சிக் கொடி அறிமுகமானபோதுதான் எல்லாருக்கும் தெரிந்தது. அதிமுக கொடியில் பேரறிஞர் அண்ணாவின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. எம்.ஜி.ஆரின் யோசனைப்படி அந்தக் கொடியை வடிவமைத்தவர் கலை இயக்குநர் அங்கமுத்து.

    எம்.ஜி.ஆர். நடித்த ‘மீனவ நண்பன்’படத்தில்

    ‘நேருக்கு நேராய் வரட்டும்; நெஞ்சில் துணிவிருந்தால்...’

    பாடல் காட்சியின் படப் பிடிப்பு கர்நாடகா மாநிலத்தில் நடந்து கொண்டிருந்தது. அந்தப் பாடலில்

    ‘தனி ஒரு மனிதனுக்கு உண வில்லை என்றால் ஜெகத்தினை அழித்திடுவோம்; என்று தமிழ்க்கவி பாரதி பாடிய பாட்டை நடைமுறை ஆக்கிடுவோம்’

    என்ற வரிகள் இடம்பெறும்.

    அந்தக் காட்சியில் பாரதியார் புகைப்படம் இடம் பெற வேண்டும். ஆனால், பெங்களூரு முழுக்க சுற்றியும் பாரதியார் படம் கிடைக்கவில்லை. படத்தின் இயக்குநர் தரோ கண்டிப்பாக பாரதியார் படம் வேண்டும் என்று சொல்லிவிட்டார். தமிழகம் சென்று பாரதியார் படம் வாங்கி வரலாம், அதுவரை வேறு காட்சிகள் எடுக்கலாம் என்று படக்குழுவினர் நினைத்தபோது, அங்கமுத்துவை எம்.ஜி.ஆர். அழைத்தார்.

    ‘‘என்னப்பா, கையிலே வெண்ணையை வெச் சுக்கிட்டு நெய்க்கு அலையறே. உனக்கு பாரதியார் படம் வரையத் தெரியாதா? ’’ என்றார். அப்போது தான் எல்லாருக்கும் உறைத்தது. அடுத்த அரை மணி நேரத்தில் பாரதியார் ஓவியம் ரெடி. எல்லாருக்கும் திருப்தி. ‘மீனவ நண்பன்’ படத்தில் குறிப்பிட்ட காட்சியில் அங்கமுத்து வரைந்த அந்த பாரதியார் படம்தான் இடம் பெற்றிருக்கும்.

    ஓவியத்தைப் பார்த்துவிட்டு எம்.ஜி.ஆர். சொன் னார். ‘‘தமிழன் எங்கே இருக்கிறானோ, அங்கே நிச்சயம் பாரதியார் இருப்பார். இந்த சின்ன விஷயத்துக்காக தமிழகம் போக இருந்தீர்களே?’’

    மதியூகத்தின் மறுபெயர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

    தொடரும்...

    எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது மேல் சபை உறுப்பினராக அங்கமுத்து நியமிக்கப்பட்டார். பின்னர், குடிசை மாற்று வாரியத் தலைவராகவும் ஆனார் அங்கமுத்து. அந்தப் பதவியில் அவரது பணிகளை பாராட்டி ஓராண்டே நிர்ணயிக்கப்பட்டிருந்த குடிசை மாற்று வாரிய தலைவர் பதவியை மூன்று ஆண்டுகளாக நீட்டித்தார் எம்.ஜி.ஆர்.



    courtesy - the hindu tamil .16.3.2016

  5. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  6. #2483
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  7. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  8. #2484
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like




  9. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  10. #2485
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like



  11. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  12. #2486
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  13. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  14. #2487
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    ''மக்கள் யார் பக்கம்'' என்ற தலைப்பில் தந்தி தொலைக் காட்சியில் நேற்று இரவு 10 மணிக்கு ஒளி பரப்பாகியது .
    நிகழ்சியில் மதுரை மாவட்டம் - 10 தொகுதிகள் அலசப்பட்டது ,கடந்த தேர்தல்களில் [1967,1971, 1977,1980,1984]எம்ஜிஆரின் செல்வாக்கு மற்றும் எம்ஜிஆர் யாரை நிறுத்துகிறாரோ அவரே வெற்றி வேட்பாளர் என்று சமூக ஆவலர் கூறியது குறிப்பிடத்தக்கது . தொகுதிக்கு சம்பந்த பட்ட பெரும்பான்மை மக்கள் வசிக்கும் சமூகத்தினர் அல்லது மதத்தினர் சார்ந்த வேட்பாளராக ஒருவர் நிற்பதை எல்லா கட்சிகளும் நடை முறையில் பின் பற்றி வந்தார்கள் .

    இந்த நிலையை மாற்றி அமைத்து வெற்றி கண்டவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் . தொகுதிக்கு சம்பந்தமே இல்லாதவர்களும் , மைனாரிட்டி இனத்தவரையும் மதுரை மாவட்டத்தில் நிற்க வைத்து வெற்றி கண்டவர் எம்ஜிஆர் .மதுரை மற்றும் மதுரை மாவட்டம் என்றென்றும் எம்ஜிஆரின் கோட்டை என்பதை மக்கள் மன்றம் நிருபித்துள்ளது என்று சமூக ஆவலர் கூறினார் .
    Last edited by esvee; 17th March 2016 at 08:39 AM.

  15. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  16. #2488
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    சன் டிவி ,
    சன் லைப்
    கலைஞர் டிவி ,
    முரசு டிவி
    மெகா டிவி
    வசந்த் டிவி
    தந்தி டிவி
    ஜெயா டிவி
    இன்னும் பல தொலைகாட்சிகளில் அரசியல் தொகுப்பில் , விவாதங்களில் , பிரச்சாரத்தில் , பிரதான நாயகனாக
    இருப்பவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் . எம்ஜிஆர் என்ற மையத்தை சுற்றியே ஒட்டு வங்கி உள்ளது.அரசியல் வரலாற்றில் எந்த ஒரு தலைவருக்கும் கிடைக்காத பெருமை . மக்கள் திலகம் எம்ஜிஆர் மறைந்தும் அவருடைய அரசியல் , மற்றும் திரை உலக புகழ் இன்னமும் உயிர்ப்புடன் இருப்பதுஉலகமெங்கும் வாழ்ந்து கொண்டிருக்கும் கோடிக்கணக்கான மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு கிடைத்த பெருமையாகும் .

  17. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  18. #2489
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  19. Likes orodizli liked this post
  20. #2490
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Last edited by esvee; 17th March 2016 at 07:04 AM.

  21. Likes orodizli liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •