Quote Originally Posted by pavalamani pragasam
2010

Twenty is followed by its half
Time to feel light and laugh

Two thousand years and ten
Twice and more joy for men

Two tens keep a single ten near
Be not tense, peace descends here

A zero after number two, another after one are seen:
He and she tho’ two become one with love between

Twenty marching ahead, ten trailing behind
Heralds the golden era of sublime mankind

Nought stands after two and nought again after one
No enemy for you and me, one world with war gone

Two thousand and ten is a number round
May health, wealth and mirth then abound!
அருமை!!! pp madam இயல்பான சொற்கள் என்னை போன்ற பாமரனுக்கும் புரியும் விதமாக.

தமிழில், உங்கள் முன்னனுமதி இல்லாமல்...

2010
இருபது பின் தொடர்ந்து அதன் பாதி
சிரிப்பே என்றும் அணையா ஜோதி

இரண்டாயிரம் மற்றும் பத்து
இன்ப மகிழ்வே மனிதனின் சொத்து

இரண்டு பத்து அருகில் பத்து ஒன்று
அழுத்தம் விடுத்து அமைதி காத்தல் நன்று

ஒரு பூஜியம் இரண்டின் பின் மற்றொன்று ஒன்றின்பின் தெரிய
ஆனும் பெண்ணும் காதலால் ஒன்றென அறிய

இருபது முன்செல்ல பத்து பின்செல்ல
மனித இனத்தின் வளர்ச்சியை என்சொல்ல

ஒரு சுழியம் இரண்டின் பின் நிற்க ஒன்று ஒன்றின் பின்
ஒருவருக்கும் பகை இல்லை ஓருலகம் கண்ட பின்

இரண்டாயிரத்து பத்து ஒரு முழு எண்
ஈடில்லா இன்பங்கள் உன் முன்.

-
கிறுக்கன்