மெகா தொடர்களில் அழுகை, பகை, பழிவாங்குதல், விரோதம் போன்றவற்றையே பார்த்து பார்த்து சலித்த நமக்கு காதலை மட்டும் மையமாகக் கொண்டு, தொடரை பார்க்கும் நேயரை சி*றிதும் போரடிக்கச் செய்யாமல் மெகா தொடர் ஃபார்முலாவையே மாற்றி அமைத்த பெருமை விஜய் டிவியையே சென்றடையும்.
இது ஒரு காதல் கதை, காதலிக்க நேரமில்லை போன்ற காதல் வெற்றி தொடர்களின் வரிசையில் வரும் ஜூன் 22 முதல் உங்கள் இல்லங்களை மேலும் அலங்கரிக்க வருகிறது ஒரு மென்னையான காதல் தொடரான அன்பே வா.
கதையின் நாயகன் ஜீவா ஒரு வங்கி அதிகாரி. இவனுக்கு ஆதி, ஜனா என இரண்டு நெருங்கிய நண்பர்கள்! இவர்கள் மூவரும் எங்கனம் தங்களின் வாழ்வில் காதல் வயப்படுகிறார்கள், போராட்டங்களுக்கு பின்னர் இறுதியில் ஜெயிப்பது எது? எ*ன்பதே கதை*யி*ன் மைய*க் கரு.
ஜீவாவுக்கு நெருங்கிய பள்ளிப் பருவத் தோழி சந்தியா. தன் காதலை சொல்ல தயக்கம் கொண்ட சந்தியா, தன் காதலை ஜீவாவிடம் சொல்லாமலேயே போக, ஜீவா பிரியா எனும் ஒரு ரேடியோ ஜாக்கி மேல் காதல் கொள்கிறான். இவர்கள் மூவருக்கிடையே நடக்கும் மனப் போராட்டங்களை தாண்டி, எவர் ஒருவரின் காதல் ஜெயிக்கும்?
ஆதி ஒரு புரட்சியாளர் மற்றும் வழக்கறிஞர். பிராமண குடும்பத்தைச் சேர்ந்த இவன் காதல் கொள்வது ஒரு கிரஸ்தவ பெண்ணான ஏஞ்சல் மீது! இவர்களுக்குள் காதல் மலர்வது எப்படி, எதனால் எதிர்ப்பு கிளம்புகிறது என்பது தான் இவர்களைச் சுற்றி நடக்கும் கதை!
ஜனா ஒரு கபடி விளையாட்டு வீரன். காதல் கொள்வது தனது உறவுப் பெண்ணான தேவி மீது! இரண்டு குடுபங்களுக்கும் இடையே தீராத பகை இருப்பதால், இவர்கள் இருவரின் காதல் கைக்கூடுமா? இறுதியில் ஜெயிப்பது காதலா? லட்சியமா?
இவர்களே விஜய் டிவியின் புத்தம் புதிய காதல் தொடரான அன்பே வாவில் வரவிருக்கும் கதாபாத்திரங்கள்.
முற்றிலும் இளமை ததும்பும் இத்தொடரில் உணர்வு பூர்வமான கதைக் களம் இருக்கும் என்பதில் சி*றிதும் சந்தேகம் இல்லை. காதலை மட்டுமே மையமாகக் கொண்ட இக்கதை எல்லோர் மனதையும் கவர்ந்து தமிழ் தொடர்களில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது உறுதியே!
விஜய் டிவியின் காதல் தொடர்களில் தலை*ப்பு*ப் பாட*ல் எப்போதும் சூப்பர் ஹிட். அதேப் போல் அன்பே வா தொடரின் பாடலும் இளைஞர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்து எல்லோரின் காலர் டியூனாகவும் இது அமைந்துள்ளது.
வெங்கட் ரமணனின் இயக்கத்தில் வரவிருக்கும் இத்தொடருக்கு ரமணகிரிவாசன் திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார். ஒளிப்பதிவாளர் பால குருநாதன் மற்றும் இசை அமைத்துள்ளது ரதன். அன்பே வா தொடரை வரும் இ*ன்*றி*ல் இரு*ந்து முதல், திங்கள் - வியாழன், இரவு 8 மணிக்கு விஜய் டிவியில் காணாத்தவறாதீர்கள்.
Bookmarks