Page 101 of 113 FirstFirst ... 519199100101102103111 ... LastLast
Results 1,001 to 1,010 of 1127

Thread: TV Serial Songs

  1. #1001
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    உறவுகள் -- சன் தொலைக்காட்சி தலைப்புப் பாடல் உங்களுக்காக இங்கு வலை ஏற்றப்பட்டுள்ளது

    ஒலி வடிவில்

    பாடல்: பத்மஸ்ரீ வைரமுத்து

    இசை: ரமேஷ் கிருஸ்ணா

    பாடியவர்: விஜய் ஜேசுதாஸ

    இயக்கம்: ஹரிபாபு

    திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் 12 மணிக்கு சன் டி.வி.யில் ஒளிபரப்பாகும் `உறவுகள்' தொடர் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற தொடராகியிருக்கிறது. உணர்வுகளின் சங்கமமாக கூடிக்கலக்கும் குடும்பப் பிரச்சினைகள் நெகிழவைக்கும் விதத்தில் அமைந்திருப்பதுவே இதற்கு காரணம் என்கிறார், இத்தொடரின் இயக்குநர் ஹரிபாபு. கூட்டுக் குடும்பமாய் இருந்த அண்ணாமலை, அழகேசன் குடும்பம் தேவி என்ற பெண்ணின் வரவால் இன்று இரண்டாக பிரிந்து கிடக்கிறது. குடும்பப் பிரிவை தாங்கமுடியாமல் அண்ணாமலை தன் உயிரையே, விட்டுவிட, கிருஷ்ணனின் குடும்பம் அனாதையாய் நிற்கிறது.

    இந்நிலையில் மனம் திருந்தி வந்த கிருஷ்ணனìன் மனைவி காயத்ரியை கிருஷ்ணனின் அம்மா ஏற்க மறுக்கிறாள். கிருஷ்ணனுக்கு தன் மனைவியுடன் சேர்ந்து வாழ ஆசை. இருந்தாலும் அம்மாவிற்காக அமைதியாய் இருக்கிறான். இதை அறிந்த கிருஷ்ணனின் அக்கா ரஞ்சனி தம்பியை அவன் மனைவி காயத்ரிìயுடன் சேர்த்து வைக்க பெரும் முயற்சி எடுக்கிறாள். அதே சமயம் கிருஷ்ணனின் அண்ணன் முகுந்தனின் கள்ளத்தனம் தெரிந்த மனைவி சித்ரா அவனை விட்டுப் பிரிகிறாள். அழகேசன் குடும்பத்தில் அடுக்கடுக்காய் வரும் பிரச்சினைகளால் முகுந்தனும் திருந்துகிறான். தன்னால் பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர முகுந்தன் முயற்சிக்கிறான்.

    முகுந்தனின் எண்ணப்படி இரண்டு குடும்பங்களும் ரஞ்சனியின் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவில் ஒன்று கூடுகிறது. அப்போது நடக்கப் போகும் விஷயம் தான் தொடரின் மிக முக்கியமான அடுத்த திருப்பம்'' என்று சஸ்பென்ஸ் வைக்கிறார், திரைக்கதையாசிரியர் குமரேசன்.

    குடும்பத்தில் அன்றாடம் நிகழும் பிரச்சினைகளை மையப்படுத்தி காட்சிகள் வருவதால் உறவுகளுக்கு ரசிகர்களிடம் மரியாதை அதிகம் என்கிறார் இவர்.

    தொடரில் பீலிசிவம், அமரசிகாமணி, ஸ்ரீகுமார், ராஜ்காந்த், ராமச்சந்திரன், வின்சென்ட்ராய், அர்ச்சனா கிருஷ்ணப்பா, துர்கா, ராஜேஸ்வரி, ரேவதிசங்கர், நித்யா, சிவகவிதா, கிச்சா, பரத், சுதா, ஆர்த்தி, கல்பனா நடித்து உள்ளனர்.

    திரைக்கதை: குமரேசன். வசனம்: பாலசூர்யன். ஒளிப்பதிவு: தண்டபாணி. இயக்கம்: ஹரிபாபு, தயாரிப்பு: சேன் மீடியா.

    ஒளி வடிவில் பார்த்து மகிழ:



    பாடல் : கவிஞர் வைரமுத்து
    பாடியவர்: நித்யஸ்ரீ
    இசை: டி.இமான்.
    இயக்கம்: எஸ்.ஹரிபாபு.




    வில்லனே இல்லாத புதிய தொடர் -`உறவுகள்' சன் டிவி



    `அகல்யா', `பந்தம்' - வெற்றித் தொடர்களைத் தொடர்ந்து சேன் மீடியா நிறுவனம் தயாரிக்கும் புதிய மெகா தொடர் `உறவுகள்'. இந்தப் புதிய தொடர் சன் டிவியில் வரும் திங்கள்கிழமை முதல் (June01) ஒளிபரப்பாகிறது.


    `உறவுகள்' தொடரில் ஒரு கூட்டுக் குடும்பத்தை கதைக்களமாகக் கையாண்டு உள்ளனர். இன்றைய நாகரீக உலகில் கூட்டுக் குடும்பத்தின் அருமையும், தேவையும் முற்றிலுமாக மறைந்து விட்டது என்றே சொல்லலாம். கணவன், மனைவி ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் அவர்கள் கூட மனதளவில் தனித்தனி மனிதர்களாகவே உலா வருகின்றனர்.

    இன்னும் சில வருடங்களில் கூட்டுக் குடும்பம் என்றால் என்ன என்பதே இன்றைய இளைய சமுதாயத்தினருக்குத் தெரியாமல் போய்விடும் அபாயத்தில் நாம் இருக்கிறோம் என்பதை மனதில் கொண்டு, கூட்டுக் குடும்பத்தின் அவசியத்தை உணர்த்தும் வகையில் இத்தொடரின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்தத் தொடரில் வரும் அனைத்துக் கதாபாத்திரங்களும் நல்ல மனது கொண்டவர்கள். வழக்கமாக தொலைக்காட்சி தொடர்களில் இடம் பெற்றிருக்கும் வில்லன் கதாபாத்திரம், இத்தொடரில் இல்லை என்பதே இத்தொடரின் புதுமையாகும்.

    இந்தத் தொடரில் புதுமுக கதாநாயகியாக பெங்களூரை சேர்ந்த அர்ச்சனா கிருஷ்ணப்பா அறிமுகமாகிறார். மேலும், பீலிசிவம், ஸ்ரீகுமார், அமரசிகாமணி, ராஜ்காந்த், ராமச்சந்திரன், வின்சென்ட்ராய், `அலைகள்' துர்கா, சிவகவிதா, ரேவதிசங்கர், ராஜேஸ்வரி, நித்யா, ஜெ.லலிதா, ஆர்த்தி, சுதா மற்றும் ஜெயந்த் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

    கதை, சேன் மீடியா. திரைக்கதை: குமரேசன். வசனம்: சரவணன். பாடல்: கவிஞர் வைரமுத்து. முகப்புப் பாடல் இசை: டி.இமான். பாடியவர்: நித்யஸ்ரீ. பின்னணி இசை: கலைக்கதிர். இயக்கம்: எஸ்.ஹரிபாபு. தயாரிப்பு: சேன் மீடியா.

    சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகிறது. `உறவுகள்'.
    Last edited by aanaa; 27th December 2011 at 12:24 AM.
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1002
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    தென்றல் --சன் தொலைக்காட்சி - 12-22-2009 பாடல் உங்களுக்காக இங்கு வலை ஏற்றப்பட்டுள்ளது


    ஒலி வடிவில்

    ஒரு முறை ஒளி வடிவில் பார்த்து மகிழ:







    http://www.mayyam.com/hub/viewtopic.php?t=13909&start=0



    <p align="right">Thanks : Chaitanya</p>
    Last edited by aanaa; 6th September 2011 at 05:37 AM.
    "அன்பே சிவம்.

  4. #1003
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    மாதவி --சன் தொலைக்காட்சி - பாடல் உங்களுக்காக இங்கு வலை ஏற்றப்பட்டுள்ளது


    [quote]

    மாதவியின் வெற்றிப்போராட்டம்

    திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் மாதவி. `கோலங்கள்' தொடரை இயக்கிய திருச்செல்வம் இந்த தொடரை இயக்குவதால், இந்த தொடருக்கு எடுத்த எடுப்பிலேயே எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாகியிருக்கிறது.

    சினிமா கோரஸ் பாடகி மாதவி போராட்டங்களுடனே தன் வாழ்க்கையை எதிர்கொள்ளும் இளம்பெண். பொறுப்பில்லாத குடிகார அப்பா, பொறுமையே வடிவான அம்மா, சந்தேகத்தை ஒட்டுமொத்த குத்தகைக்கு எடுத்திருக்கும் மாதவியின் அக்கா கணவன் என குடும்பத்திலேயே அவள் மும்முனைப் போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டியதாகி விடுகிறது.

    மனஉறுதியும் தன்னம்பிக்கையின் அவதாரமுமான மாதவி இந்தப்பிரச்சினைகளை தன்அனுதின போராட்டமாக எடுத்துக் கொண்டாலும் அவளுக்குள்ளும் இதயம் வருடும் காதல் எட்டிப் பார்க்கிறது. ஐ.ஏ.எஸ். அதிகாரியாவதை தன் வாழ்க்கை லட்சியமாக வைத்திருக்கும் மனோகரனுடனான அவள் நட்பு ஒரு கட்டத்தில் காதலாகி கனிந்து நிற்கிறது. ஒரு நல்ல காதல்தோழியாக அவள் மனோகரனின்ஐ.ஏ.எஸ். முயற்சிக்கும் பக்கபலமாக நிற்கிறாள். அதோடு நில்லாமல் பொருளாதாரப் போராட்டத்தில் அவ்வப்போது தரை தட்டும் கப்பலாய் தடுமாறும் மனோகரன் குடும்பத்தையும் தன் வருமானத்தில் தாங்கிப் பிடிக்கிறாள்.

    ஆனால் கொஞ்சமே கொஞ்சமான இந்த காதல் மகிழ்ச்சிக்கும் மாதவியின் குடிகார அப்பா வடிவில் சோதனை வருகிறது.
    தன்மகள் மனோகரன் குடும்பத்துக்கு உதவுவதை மாதவியின் குடிகார அப்பாவே கொச்சைப் படுத்தி பேசுகிறார்.

    மாதவிக்கு ஒரு அண்ணன். அவன் தனக்கென ஒரு வேலை கிடைத்ததும் திருமணம்செய்துகொண்டு குடும்பத்தை விட்டே ஒதுங்கி விடுகிறான். இப்போது மாதவிக்கு இருக்கிற பிரச்சினை போதாதென்று அண்ணி வடிவிலும் ஒரு பிரச்சினை எட்டிப் பார்க்கிறது. இந்தப்பிரச்சினையை மட்டும் வழக்கம் போல தன்னை வந்து சேரும் பிரச்சினைகளில் ஒன்றாக மாதவியால் கருத முடியவில்லை. அதற்குக் காரணம் அந்தப்பிரச்சினை ஏற்படுத்தப் போகும் தாக்கம் அப்படி.

    அடுத்தடுத்து வரும் காட்சிகள் மாதவியின் வெற்றிமுயற்சிக்கான போராட்டங்கள் என்கிறார், இயக்குனர் திருச்செல்வம்.

    தொடரில் இப்போது சினிமா பைனான்சியர் தங்கப்பாண்டி என்ற நகைச்சுவை கலந்த
    புதிய வில்லன் கேரக்டர்அறிமுகமாகியிருக்கிறது. இந்த கேரக்டரும் கூட மாதவி வாழ்வில் திருப்பம் ஏற்படுத்தக்கூடியது என்று ஒரு சஸ்பென்ஸ் பொறியை பற்ற வைக்கிறார், திருச்செல்வம்.

    மாதவி கேரக்டரில் வருபவர் நடிகை சாரா. மலையாளத்தில் பிரபல நடிகையான இவர், `சொல்ல சொல்ல இனிக்கும்' என்ற தமிழ்ப் படத்திலும் நாயகியாக நடித்தவர்.

    தொடரின் மற்ற நட்சத்திரங்கள்: சீனு, நளினி, வனிதா, ஏ.நட்ராஜ், ஜோக்கர்துளசி, டி.ஆர்.பாலு, சோனியா, ரவிஷங்கர், ஸ்ரீஹரி.

    ஒளிப்பதிவு: பிலிப் விஜய்குமார். இசை: நவ்நீத் சுந்தர். டைட்டில் பாடல்: ஆண்டாள் பிரியதர்ஷினி. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: திருச்செல்வம்.

    தயாரிப்பு: ஹோம் மீடியா சார்பில் சுஜாதா விஜயகுமார், விஜயகுமார்.



    The title song goes – “Kadhaloru Maayama NeyangaLin Daayama.
    Music : NAVNEETH SUNDAR
    Vocals : DIVYA RAMANI
    Lyrics : AANDAL PRIYADARSHINI
    Backing vocals : NAVNEETH SUNDAR, DIVYA RAMANI, JANANI PADMANABHAN, POORNIMA SUBRAMANIAN
    Flute : NAVIN IYER
    Veena : PUNYA SRINIVAS
    Percussions : VIKRAM
    Strings conducted by : DAYALAN
    Recorded at Elsons studio and Mixed at 20dB studios.
    The actors in the video are Shri Mohan Vaidhya as music director and Sara as the singer.


    ஒரு முறை ஒளி வடிவில் பார்த்து மகிழ:

    Last edited by aanaa; 6th September 2011 at 05:31 AM.
    "அன்பே சிவம்.

  5. #1004
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    உறவுகள் -11-16-2009 பாடல் --சன் தொலைக்காட்சி - உங்களுக்காக இங்கு வலை ஏற்றப்பட்டுள்ளது



    ஒரு முறை ஒளி வடிவில் பார்த்து மகிழ:

    பாடல்: பத்மஸ்ரீ வைரமுத்து

    இசை: ரமேஷ் கிருஸ்ணா

    பாடியவர்: விஜய் ஜேசுதாஸ

    Last edited by aanaa; 7th August 2011 at 06:38 PM.
    "அன்பே சிவம்.

  6. #1005
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    இளவரசி --சன் தொலைக்காட்சி - பாடல் உங்களுக்காக இங்கு வலை ஏற்றப்பட்டுள்ளது


    ஒலி வடிவில்
    பாடல் : சினேகன்
    பாடியவர்: நித்யஸ்ரீ மகாதேவன்
    இசை: கிரண்
    இயக்கம்: என்.சந்தானம்


    திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் பிற்பகல் 1.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர், `இளவரசி'.

    நடுத்தர வர்க்க குடும்பத்தினரின் பிரச்சினைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த தொடரில், சந்தோஷி, மனு, காத்தாடி ராமமூர்த்தி, ஜெயமணி, ரேவதி சங்கர், நந்தகுமார், சாந்தி கணேஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

    சித்தி, அண்ணாமலை, செல்வி, அரசி, செல்லமே தொடர்களை தந்த `ரடான்' நிறுவனத்தின் அடுத்த படைப்பு `இளவரசி'. நடுத்தர வர்க்கத்து குடும்ப சூழ்நிலைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

    இளவரசி நடுத்தரக் குடும்பத்துப் பெண். சாதாரண சீட்டுக் கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கிறாள். தகப்பனார் கதிரேசன் ஒரு கார்பென்டர். அவர் தனது மகள் இளவரசிக்குத் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறார். அவளை மணக்கப் போகும் கார்த்திகேயன் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். மணமகனின் பெற்றோர் பணத்திற்கு ஆசைப்பட்டு இளவரசி வீட்டில் அதிக வரதட்சணை கேட்கிறார்கள். தன் மகளின் திருமணத்தை எப்படியாவது நடத்திவிட வேண்டும் என்ற ஆசையில் தனது தகுதிக்கு மீறி பல இடங்களில் கடன் வாங்கியும், தன் இளைய மகள் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த பணத்தையும் கொடுத்து திருமணத்தை நடத்த முற்படுகிறார்.

    இதனால் ஏற்படுகின்ற பல்வேறு மன உளைச்சலில் அவர் தவியாய் தவித்துக் கொண்டிருந்த போது, யாரும் எதிர்பாராத வகையில் ஒரு சம்பவம் நடக்கிறது. இதனால் திருமண ஆசைக் கனவுகளோடு காத்திருந்த இளவரசி அதிர்ச்சிக்குள்ளாகிறார். இந்த நிலையில் இளவரசிக்கும், கார்த்திகேயனுக்கும் நிச்சயித்தபடி திருமணம் நடக்குமா? வரும் எபிசோடுகளில் அதிரடியான விடை கிடைக்கும்.'' என்கிறார், கிரியேட்டிவ் ஹெட்டான ராதிகா சரத்குமார்.



    கதை-திரைக்கதை எழுதி இயக்குபவர் என்.சந்தானம்.
    ஒளிப்பதிவு: பாலகுருநாதன்.
    வசனம் சுரேஷ் கிருஷ்.
    சினேகன் எழுதிய டைட்டில் பாடலை பிரபல பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் பாடியுள்ளார்.
    இசையமைத்திருப் பவர் கிரண்.
    கிரியேட்டிவ் ஹெட்: ராதிகா சரத்குமார்.
    தயாரிப்பு: ரடான் நிறுவனம்.


    ஒரு முறை ஒளி வடிவில் பார்த்து மகிழ:


    Last edited by aanaa; 27th December 2011 at 12:36 AM.
    "அன்பே சிவம்.

  7. #1006
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    றோஜாக் கூட்டம் --விஜய் தொலைக்காட்சி - பாடல் உங்களுக்காக இங்கு வலை ஏற்றப்பட்டுள்ளது


    ஒரு முறை ஒளி வடிவில் பார்த்து மகிழ:


    [html:1a3b40baa6]<div align="center"><object width="480" height="385"><param name="movie" value="http://www.youtube.com/v/N2A-jzXo-aY&hl=en_US&fs=1&"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/N2A-jzXo-aY&hl=en_US&fs=1&" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"></embed></object></div>[/html:1a3b40baa6]
    "அன்பே சிவம்.

  8. #1007
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    அன்பே வா --விஜய் தொலைக்காட்சி - பாடல் உங்களுக்காக இங்கு வலை ஏற்றப்பட்டுள்ளது

    ஒரு முறை ஒளி வடிவில் பார்த்து மகிழ:




    Last edited by aanaa; 7th August 2011 at 06:40 PM.
    "அன்பே சிவம்.

  9. #1008
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    அனுபல்லவி --சன் தொலைக்காட்சி - பாடல் உங்களுக்காக இங்கு வலை ஏற்றப்பட்டுள்ளது


    ஒலி வடிவில்


    ஒரு முறை ஒளி வடிவில் பார்த்து மகிழ:






    புதிய தொடர் அனுபல்லவி


    அபிநயா கிரியேஷன்ஸ் சார்பில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் 12.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் `திருப்பாவை' தொடர், வருகிற 23-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதைத்தொடர்ந்து இதே நிறுவனம் தயாரிக்கும் புதிய தொடர் அனுபல்லவி. இந்ததொடர் 26-ந்தேதி முதல் இதேநேரத்தில் ஒளிபரப்பைத் தொடங்குகிறது.

    வாழ்க்கை ஒரு இனிமையான சங்கீதம். அந்த சங்கீதம் ஸ்ருதிலயத்துடன் அமைய பல்லவி, அனுபல்லவி மற்றும் சரணம் முக்கியம்!

    ஒரு பாடலில் சரணம் சிறக்க வேண்டுமெனில் பல்லவியும், அனுபல்லவியும் சரியாக இருக்க வேண்டும். சங்கீதத்தை பற்றிய பொது விதி இது.

    தொடராக வரும் இந்த `அனுபல்லவி'யில் சரணமாக இன்ஜினீயர் ராஜாராமன் விளங்க, பல்லவியாக அவனின் முதல் மனைவி அனுவும்; அனுபல்லவியாக இரண்டாவது மனைவி பல்லவியும் திகழ்கின்றார்கள்.

    இவர்களின் வாழ்க்கை சங்கீதத்திலும் ஸ்ருதி, லய பேதங்கள் ஏற்படுகின்றன. அதை எல்லாம் சரி செய்து இவர்களால் இசைபட வாழமுடிந்ததா என்பதே இந்த `அனுபல்லவி' தொடர்.

    இன்ஜினீயர் ராஜாராமன் தன் இரு மனைவியருமே நன்றாக வாழவேண்டும்; அவர்களின் நிம்மதியும், சந்தோஷமும் எக்காரணத்தைக் கொண்டும் பறிபோய் விடக்கூடாது என்று நினைப்பவர். உலகத்தில் உள்ள எல்லா ஜீவராசிகளுடனும் அன்போடு பழகி அரவணைத்து செல்லும் குணம் கொண்டவர். ஆனால், முதல் மனைவி பற்றி இரண்டாவது மனைவியிடமோ, இரண்டாவது மனைவி பற்றி முதல் மனைவியிடமோ இவர் கூறவில்லை. இரு குடும்பங்களையும் தனித்தனியாக நடத்தி வருகிறார்.

    முதல் மனைவி அனுவிற்கு மூன்று குழந்தைகள்... இதில் இரண்டு பெண்கள், ஒரு பையன்!

    இரண்டாவது மனைவி பல்லவிக்கு இரண்டு குழந்தைகள்... இதில் ஒரு பெண்; ஒரு பையன்!

    தனலட்சுமி, ஸ்ரீவித்யா, சங்கீதா, `மின்னல்' தீபா
    பிள்ளைகள் அனைவரும் கல்லூரி மற்றும் பள்ளிகளில் பயில்கிறார்கள்.

    சமூகம் போற்றும் நிலையில் வாழும் ராஜாராமனின் வாழ்க்கையில் இரண்டு பெண்கள் எப்படி நுழைந்தார்கள்? அதற்கான சூழல் என்ன?

    ராஜாராமன், தனது இரு மனைவியரிடமும் உண்மையை மறைப்பது ஏன்?

    இந்த உண்மை எப்படி வெளிப்படப்போகிறது? அப்போது ராஜாராமன் மற்றும் குடும்பத்தினரின் நிலை என்ன? இந்த உண்மை, அவரின் குழந்தைகள் வாழ்க்கையை எப்படி பாதிக்கப்போகிறது?

    இரு குடும்பங்களும், மனைவியரும் ஒன்று சேர்ந்தார்களா?

    கேள்வி முடிச்சுகளை அவிழ்த்து சுவாரசியங்களும், ரகசியங்களும் வெளிப்பட பதில்களை தரப்போகிறது `அனுபல்லவி' என்கிறார் தொடரின் இயக்குனர் ஜே.கே.

    ராஜாராமனாக நடிகர் அபிஷேக் நடிக்கிறார். மற்றும் நட்சத்திரங்கள்: யுவஸ்ரீ, தீபாநரேந்திரன், சங்கீதா, ஸ்ரீவித்யா, தனலட்சுமி, `மின்னல்' தீபா, காத்தாடி ராமமூர்த்தி.

    கதை:ஜே.கே. திரைக்கதை: சி.யு.முத்துச்செல்வன். வசனம்:ஆர்.எஸ்.பாலமுருகன். ஒளிப்பதிவு: ஆர்.பார்த்திபன். இசை: சத்யா. பாடல்: காதல்மதி. டைட்டில் பாடல்: ஸ்ரீனிவாஸ். கிரியேட்டிவ் ஹெட்: ஜே.கே.ஆனந்த். தயாரிப்பு: ராதா கிருஷ்ணசாமி. இயக்கம்: மணிபாரதி தண்டபாணி
    Last edited by aanaa; 7th August 2011 at 06:42 PM.
    "அன்பே சிவம்.

  10. #1009
    Senior Member Regular Hubber sakthii's Avatar
    Join Date
    Jul 2007
    Posts
    151
    Post Thanks / Like
    Can i have the MP3 link to download Kathalikka Neram Illai Title Song of Vijay tv the song starts like this "Ennai thedi Kadhal endra vaarthai"

  11. #1010
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    Quote Originally Posted by sakthii
    Can i have the MP3 link to download Kathalikka Neram Illai Title Song of Vijay tv the song starts like this "Ennai thedi Kadhal endra vaarthai"
    PM your email - I will send it
    "அன்பே சிவம்.

Similar Threads

  1. Raja's unpicturized songs and Songs in unreleased movies
    By Sureshs65 in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 38
    Last Post: 22nd January 2012, 01:54 PM
  2. Sun Tv New Serial - MUTHARAM A NEW TAMIL TV SERIAL
    By anbupani in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 26th November 2011, 08:27 PM
  3. Request of Sun Tv Serial songs
    By aarthikasturi in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 11th June 2007, 10:35 PM
  4. Creating a new website to watch and listen to Serial Songs
    By gta129 in forum TV,TV Serials and Radio
    Replies: 26
    Last Post: 13th March 2007, 02:34 AM
  5. songs in serial: Sahana
    By Poppoy in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 17th August 2006, 02:23 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •