Page 1 of 15 12311 ... LastLast
Results 1 to 10 of 145

Thread: நெஞ்சம் மறப்பதில்லை

 1. #1
  Senior Member Platinum Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  10,107
  Post Thanks / Like

  நெஞ்சம் மறப்பதில்லை

  பேசும் படம் தொடங்கிய காலத்திலிருந்து இன்று வரை நம் மனதில் நீங்கா இடம் பெற்ற பழைய திரைப்படங்களைப் பற்றிய நினைவுகள், அவற்றுக்கும் நம் வாழ்க்கைக்கும் உள்ள உளரீதியான தொடர்பு போன்றவற்றை பகிர்ந்து கொள்ளலாம். புதிய தலைமுறையினருக்கு பழைய திரைப்படங்களை அறிமுகப் படுத்தும் பாலமாகப் பயன் படுத்தலாம். படங்களின் விமர்சனம் என்பதைத் தாணடி அவற்றைப் பற்றிய தகவல் களஞ்சியமாகவும் பயன்படுத்தலாம்.  நம் நெஞ்சம் மறக்காத பழைய திரைப்படங்களை அசை போட இது நல்ல வாய்ப்பாக அமையட்டுமே..

  நெஞ்சம் மறப்பதில்லை.. திரியை நெஞ்சம் மறப்பதில்லை என ஆக்குவோம்.. நினைவுகளைப் பகிர்ந்து கொள்வோம்...

  இந்த இழை துவங்குவதற்கான எண்ணம் நெய்வேலி வாசுவுடனான உரையாடலின் போது உதித்தது. எனவே இதனுடைய பெருமையும் சிறப்பும் அவருக்கு உரித்தாகிறது.

  குறிப்பு..

  1. கீற்றுக்கொட்டகை திரிக்கும் இதற்கும் சற்றே வேறுபாடு உள்ளது. இத்திரியில் திரைப்படங்களைப் பற்றிய விமர்சனங்கள், தகவல் துணுக்குகள் போன்றவை இடம் பெறலாம்.

  2. Tamil Film Classics - Avoid films of Sivaji, M.G.R., Jai Shankar, Ravichandran and others for whom there are already separate threads.

  3. திரைப்படங்களுக்கான காலகட்ட வரையறை - 1931 முதல் 1970 வரை.

  4. இதில் வரிசைக்கிரமம் எதுவும் தேவையில்லை. அவரவருக்குத் தோன்றிய நினைவுகள், பாதித்த அல்லது பிடித்த படங்கள் போன்றவற்றைப் பற்றி பகிர்ந்து கொள்ளலாம்.

  5. குறிப்பிட்ட படத்தைப் பற்றி விவாதிக்கும் போது, நடிக நடிகையர் அல்லது இதர பங்கேற்பாளர்கள் இவர்களைப் பற்றிய தனிப்பட்ட விமர்சனங்கள் வேண்டாம்.

  6. முடிந்த வரை மக்கள் அதிகம் அறிந்திராத அல்லது கேள்விப்பட்டிராத படங்களைப் பகிர்ந்து கொண்டால் இன்னும் சுவையுள்ளதாய் அமையும்.
  Last edited by RAGHAVENDRA; 6th June 2015 at 10:54 PM.
  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

 2. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Posts
  Many
   

 3. #2
  Senior Member Platinum Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  10,107
  Post Thanks / Like
  பல பழைய படங்கள், அவை எந்த நட்சத்திரங்களையும் சாராதவை, நம் மனதில் அவ்வப்போது நிழலாடும். அவ்வாறான திரைப்படப் பாடல்களைக் கேட்கும் போதெல்லாம் அப்படம் தொடர்பான நினைவுகளும் வந்து போகும். அதனை மறந்து விடாமல் நமக்கு நாமே பாதுகாத்துக் கொள்ளவும் இது பயன்படும்.

  அவ்வகையில் நமக்குள் ஓர் பந்தத்தை ஏற்படுத்திய படங்களைப் பற்றி விவாதிக்கும் வகையில் என் மனதிற்கு நெருங்கிய படங்களை நானும் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

  திக்குத் தெரியாத காட்டில்  முழுக்க முழுக்க ஒரு காட்டில் நடக்கும் கதை. ஒரு குழந்தை காட்டில் தொலைந்து போவதும் அதைத் தேடும் பணியில் ஈடுபவர்களின் தவிப்பும் விறுவிறுப்பாக சொல்லப் பட்ட படம். மெல்லிசை மன்னரின் இசையமைப்பு இப்படத்தில் ஒரு கதாநாயகன் ரேஞ்சுக்கு அமைந்துள்ளது. படத்தைத் தூக்கி நிறுத்துவது அவருடைய இசையே. பாடல்கள் சூப்பர் ஹிட். குறிப்பாக எம்.எஸ். ராஜேஸ்வரியின் பூப்பூவா பறந்து போகும் பாடல், கேட்கும் போதே நம்மை ஓர் கானகத்துள் வித்தியாசமான அனுபவத்தைத் தரும் வகையில் அமைந்துள்ளது. நாகேஷ், வி.கே.ராமசாமியின் நகைச்சுவை அன்று ரசிக்கத் தக்கதாக இருந்தாலும் இன்றைய கால கட்டத்தில் சற்று போரடிப்பது உண்மை.

  என்றாலும் சஸ்பெனஸ் திகில் நிறைந்த காட்சிகளுடன் படம் பார்வையாளரை ரசிக்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

  பாடல்கள் மிகப் பெரிய பலம்.

  முழுப்படத்தையும் பார்ப்பதற்கான இணைப்பு

  http://www.veoh.com/watch/v19340043q...techsatish.net

  இப்படத்தில் குளிரடிக்குதே கிட்ட வா கிட்ட வா பாடலில் உள்ள சிறப்பம்சம், ஒரு கானகத்தில் நீரோடையில் என்ன சலசலப்பு ஏற்படுமோ அதை அப்படியே தன் இசையில் மெல்லிசை மன்னர் கொண்டு வந்திருப்பார். முன்பே ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு படத்தில் சலசல ராகத்திலே பாடலில் இசையரசியின் குரலில் அருமையான பாடலை இதே சூழலில் தந்திருந்தாலும் இப்பாடலுக்குள்ள விசேஷம், குழுவாக குளித்து கும்மாளமிடுவதையும் வெளிப்படுத்தும் வண்ணம் வைப்ரஃபோன் பயன்படுததியிருப்பார்.

  மேலும் மாலி, மூர்த்தி, ஜூனியர் பாலையா, வி.கோபாலகிருஷ்ணன், ஜம்பு [நடிகை இளவரசியின் தந்தை] போன்ற நாயகனுக்கு அடுத்தடுத்த வரிசை நடிகர்களுக்கும் பாடல் காட்சி அமைத்திருப்பது சிறப்பு.

  பார்க்கவும் கேட்கவும சலிக்காத பாடல்

  குளரடிக்குதே கிட்டவா கிட்டவா

  Last edited by RAGHAVENDRA; 6th June 2015 at 11:36 PM.
  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

 4. Likes vasudevan31355, gopu1954 liked this post
 5. #3
  Senior Member Platinum Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  10,107
  Post Thanks / Like
  திக்குத் தெரியாத காட்டில் படத்தில் வாலிபர்களின் குழுவுக்கு பெயர் என்ன தெரியுமா

  வருத்தமில்லா வாலிபர் சங்கம்

  ஆமாம்.. இதையெல்லாம் அப்போதே செயது விட்டார்களாக்கும்..

  இந்தப் பாடலைப் பாருங்கள்..  திக்குத் தெரியாத காட்டில்... எஸ்.பி.பாலாவின் புகழை உச்சியில் கொண்டு சேர்த்ததில் இப்படத்திற்குப் பெரிய பங்குண்டு.

  இந்தப் பாடல்களைப் பற்றிய விரிவான பதிவை நெய்வேலி வாசு சாரின் தொடரில் மதுரகானம் திரியில் படிக்கும் வரை பொறுத்திருப்போம்.
  Last edited by RAGHAVENDRA; 6th June 2015 at 11:26 PM.
  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

 6. Thanks vasudevan31355 thanked for this post
  Likes gopu1954 liked this post
 7. #4
  Senior Member Diamond Hubber chinnakkannan's Avatar
  Join Date
  Apr 2006
  Location
  BOOLOGAM
  Posts
  8,018
  Post Thanks / Like
  அன்பான ராகவேந்திராசார்

  புதிய திரி துவக்கியதற்கு முதற்கண் என்னிடமிருந்து ஒரு ஓ!

  திக்குத்தெரியாத காட்டில் குளிரடிக்குதே கிட்ட வா கிட்டவா தெரிந்த பாடலென்றாலும் என் நினைவில் இருக்கும்பாடல் பூப்பூவாப்பறந்து போகும்பட்டுப் பூச்சியக்கா நீ பளபளன்னு போட்டிருப்பது யாரு கொடுத்த சொக்கா பாட்டு..

  அல்லது இது பிள்ளைச் செல்வம் பாட்டா தெரியவில்லை..

  6வது கண்டிஷனை தளர்த்திக் கொண்டால் சில பல படங்கள் கிடைக்கும் டைட்டில் படம் உள்பட

  குரு.


  சினேகிதனின் ஊருக்கு வருகிறான் கதானாயகன்.. அவன் பார்த்தறியாத கிராமம் அது..அவன் பாம்பேயைட் பம்பாய் வாசி..மும்பாய் என மாறாத பம்பாய்..வந்தவன் ட்ராவல் செல்லும் மாட்டுவண்டியை நிறுத்தி சினேகிதனிடம் சொல்கிறான்..

  இவனே இங்கிருந்து கொஞ்சம் நடந்தால் ஒரு ஆலம்ரம் அதற்குப் பின் ஒரு ஏரி

  நண்பனுக்கோ ஆச்சர்யம்..எப்ப்டிடா சரி போய்ப் பார்ப்போம்

  பார்த்தால் உண்மை. ஆலமரமதன் பின்னால் ஏரி

  எப்படிடா

  தெரியலை குரு..இந்த கிராமம் அதன் சூழல் எனக்கு ஏற்கெனவே பழகினாற்போல்

  ஏய்.. நீ பாம்பேக் காரன் தானே.. நிறைய இந்தி சினிமா பார்த்திருப்ப .. அதான்..சரி சரி வா வீட்டிற்குப் போலாம்

  சொய்ங்க் என்று வீட்டில் போய் ஹீரோவை மாடியறையில் விட்டு..”இவனே நீ தூங்கு சமர்த்தா .. நாளைக்காலை கிராமம் சுற்றலாம்..”

  காலை வருவதற்குத் தான் ஒரு முழு நீண்ட இரவு இருக்கிறதே

  கதானாயகனோ இளைஞன் வாலிபன்

  கனவுகளைத் தீட்டி கலைகளாய்க் கண்டே
  நனவில் மிதந்துதான் நாளும் - கணப்பொழுதும்
  துள்ளும் இளமை தூண்டிவிடும் தன்மையில்
  அள்ளும் அழகாய் அவன்

  (நல்லா இருக்கில்லை குரு (யொசிக்காமல் கரெக்*ஷன் பன்ணாமல் எழுதிய வெண்பா இது..கண்ணா நீ எங்கேயோ போறடா ..இல்லை இல்லை பழைய காலத்துக்கு)

  இரவில் உறங்கலாம் என்றால் ஹீரோவிற்கோ உறங்க இயலவில்லை..காரணம் சிரிப்பு..சிரித்ததுபெண்

  கேட்டான்..பின் அதேவீட்டினொரு அறையில் பார்த்தும் விட்டான்

  தூரிகை தீட்டாத துன்பங்கள் பேசிடும்
  காரிகை கண்ணென்றால் ஆமென்பேன் - வேறிடத்தில்
  எங்கெங்கோ பார்த்த எழிலாய்த் தெரிகிறதே
  சங்குக் கழுத்தழகும் தான்..

  ஒரு அறையின் பின்னால் ஜன்ன்லைனூடே இரு கண்கள்..பின் அழகிய முகம் துடிக்கும் உதடுகள்..விலகிய தாவணி..ததும்பும் இளமை

  யார் நீ எனக்கேட்க கண்கள் விலகின..அவளும் அறையினுள் காணாமல் போக பின் வந்து கதானாயகன் கண்ணை இறுக்க மூடி
  வராத தூக்கத்தைகஷ்டப்பட்டு வரவழைத்து ப் பின்..கொர்ர்ர்.. இளைஞன்ர் தான் என்ன செய்ய..களைப்பு வந்தால் குறட்டை தானே வரும்..ஆன்றோர் வாக்கு (இல்லையா வாசு சார்)


  மறு நாள் காலை நண்பனுடன் கிராமத்தை அறியப்புறப்பட கிராமத்தின் கோடியில் ஒரு பங்களா.

  அதில் வசித்து உறவாடியது போல ஒருபிரமை

  பின்


  நாளின் முடிவில் என்ன வரும்

  வழக்கம் போல் இரவு தான்

  இரவு

  இளமைப் பருவத்தில் ஏதும் சொலாமல்
  கலகம் செய்யுமே காண்

  ஆமங்க ஆண்ட்ரோஜன் ஈஸ்ட்ரோஜன் எனச்சொல்லப்படும் கெமிஸ்ட்ரி நார்மலா வாலிப வயசுல தூண்டித் தான் விடும்

  இந்த ஹீரோ பயபுள்ள கல்யாண் நு அவன் பேர் வெச்சுக்கலாமா

  கல்யாணுக்கு உறக்கம் வரவில்லை..

  படுத்தான்..புறண்டான் உறக்கமில்லை..சங்க காலக் கதா நாயகிகள் போலே

  பின்...

  ரிக் ரிக் ரிக்னு இரவுக்கோழிகளோட கூச்சல்..இனம் புரியாத பறவைகலோட பரிபாஷை..”என்னய்யா ஒன்னோட் மாமா வந்துட்டானா பறந்து போயிருந்தானே’ ஒரு பறவை கேட்க மறு பறவை “என்ன வோய் கொஞ்சம் கூட தில்லில்லாத மனுஷனாங்காட்டியும் நீர்.. அவர் பக்கத்தூருக்குப்போயிருக்கார் அனேகமா காலைல தான் வருவார்..:

  “ஏட்டி..இப்ப நா என்ன பண்ண”

  ‘அதையும் நாஞ்சொல்லணுமாங்காட்டியும்.. வாவேன்..” எனகிள்ளை மொழியில் அடுத்த பறவை சொல்வது அவன் காதில் விழுந்தாலும் அதையும் மீறி கேட்கும் குரல்..இல்லை இல்லை வீறிடும் குரல்

  ஆஆஆஆஆ

  வெளிச்சென்று பார்த்தால் முன்தினம் பார்த்த அறை பூட்டப்பட்டிருக்க நண்பணிடம் கேட்டால் மழுப்பியது நினைவுக்கு வர சரி போய் த்தூங்கலாம் எனக் கல்யாண் திகைத்தப்டி கட்டிலுக்குச் செல்ல அந்த கானம்...

  ஆஆஆ...

  நெஞ்சம் மறப்பதில்லை.. அது நினைவை இழப்பதில்லை

  அது பாட்டா என்ன..எனக்கென்ன ஆகிறது என் நரம்புகளில் உட்புகுந்து ரத்த நாளங்களில் பாய்ந்து
  என் உணர்வுகளைச் சூடேற்றி என்னவோ செய்கிறதே.. என் கண் நரம்புகள் துடிக்கிறது..என் உதடும்

  என் இதயம் அதன் துடிப்பை ப் பலமடங்கு அதிகரிக்கிறது..

  இது என்ன பாடல்.. என் உள்ளம், ஊன், உயிர் எல்லாவற்றையும் கொள்ளை கொள்கிறதே

  பாடல் நேர்ந்த திசையில் செல்லலாமா

  கல்யாண்முடிவெஉத்து நண்பனின் வீட்டிலிருந்து கீழிறங்கி,

  கதவைத் திறந்து,
  வெட்ட வெளியில் கலந்து,
  நடுச் சாலையில்
  பித்துப்பிடித்தவன் மாதிரித் தொடர

  அந்த்க் குரல் அவனைக் கொஞ்சிக் கொஞ்சிப் பின் கெஞ்சிக் கெஞ்சி

  அவன் இளமனது ப்ளஸ் வயதைத் தூண்டித்தூண்டி அவனை நடக்கவைத்துக்
  கூட்டிச் செல்வது ஒருபாஆஆஆழடைந்தபஙகளா


  அவனும் அங்குச் எல்ல அங்கே தான் புகையாய் ஒரு காரிகை அவளைப் பார்க்கிறான்..பாடியவாறே
  அந்தப் புகை நங்கை அவனை அந்தப் பாழடைந்த சிலந்திக்கூடுகள் அடர்ந்த பங்களாவுக்குக்கூட்டிச் சென்று


  ஓரிடத்தில் நிற்க

  நம் கதானாயகன் கல்யாண் “ஹேய் பொம்பள..யார் நீ”

  அந்தப் பெண் திரும்புகிறாள்..இல்லை இல்லை..

  அவளது பலப்பலவான கதை சொல்லும் கண்கள் திரும்புகிறது..

  இவள் இவள்..

  வீலென்று கத்தியவண்ணம் நண்பன் வீட்டில்பார்த்த நங்கையின் கண்..

  கல்யாணின் மனம் குழம்ப ஆரம்பிக்க

  மேலும் பாடல் தொடர

  அந்த புகை உருவம் அந்தப் பங்களாவின் மாடிப்படிமேல் ஏறி

  ஒரு சமமான இடத்தில் நிற்க

  அவனும் சென்றுபார்த்தால்..ஆச்சர்யம் தான்

  அங்கு தென்படுவது அவனின் புகைப்படம்..

  அதைப்பார்க்கப்பார்க்க

  குளத்தில் கல்லெறிந்தால் குழம்பி

  குட்டிக் குட்டி வட்டங்களாய் ஆரம்பித்துபெரிதாவது போல நினைவு


  முன் ஜென்மத்தில் பண்ணையார் மகன் அவன்..அவள் கணக்கப்பிள்ளையின் மகள் நிறைவேறாக்காதல் பண்ணையார் எதிர்க்க பின் அவரால் காதல் ஜோடி மரணித்ததும்
  ஒரு மணி நேரத் திரைப்படமாய்க் கண் முன் விரிய

  பண்ணையார் மகன் தான் அவன் இந்த ஜென்மத்தில்.. நண்பனின் தங்கை தான் அவனது பூர்வ ஜென்ம மனைவி

  சரி சரி என ந்ண்பனிடம் கதை சொல்லி நம்பாவிட்டாலும்

  அவனது பைத்தியத் தங்கையைக் காட்டுக்குள் கூட்டிச் செல்லுகையில்ல்  அருவருப்பு என்பது இதுவா

  ஒரு கிழ உருவம்..கூனல் நடை..

  தாத்தா..

  என்ன

  இதுஎன் மனைவியாகப் போகிறவள்  பார்த்துக்கொள்ளுங்கள் இதோ வருகிறேன் எனச் சொல்லி எதற்கோ பிரிந்து செல்ல

  அந்தக் கிழம் வேறு யாருமல்ல கல்யாணின் முன் ஜென்மத் தந்தை

  சிரிக்கிறது

  என்றோசொன்ன வார்த்தைகள் அதன் காதில் அலைமோதுகின்றன

  இந்த ஜென்மமில்லை எத்தனை ஜென்மமெடுத்தாலும் உங்கள் காதலை நிறைவேற்ற விடமாட்டேன் எனச் சொன்னது

  அதே போல இந்த ஜென்மத்திலும் போன ஜன்மக் கதானாயகனின் தந்தையான தன்னிடம்
  அடைக்கலம் வந்திருக்கும் யுவதியைக் கொல்ல ஆவல் மிகக் கொண்டு கிழம் தூக்கிச் செல்ல முற்படுகையில்


  கதானாயகனுக்குப் புரிய கிழத்துடன் சண்டை

  முடிவில் புதைகுழியில் அவனது போன ஜன்மத்து அப்பா பண்ணையார் இறக்க இந்த ஜென்மத்தில் நண்பனின் தங்கைக்கு
  சுய நினைவு திரும்பி வர

  என்னாச்சு நீங்கள் யார்..

  நானா நான் உன் அண்ணனின் நண்பன்

  கல்யாண்..அவள் உதடுகளில் மென் முறுவல்..மனம் நெகிழ்ந்ததைக் சேலை காட்ட கொஞ்சம் இறுக்கிக் கொண்டு

  என்ன ஆச்சுங்க எனக்கு..உங்களைப்பற்றி அண்ணா சொன்னதுபுகையாய்

  கவலைப்படாதீர்கள்.. நாம் உங்கள் வீட்டிற்குப் போவோம் ..பின் அங்கிருந்த் நம் வீட்டிற்கு..

  புதிராய் முதலில் புருவம் உயர்ந்தாலும் பின் புரிந்ததால் பருவம் உந்த அவன் மார்பில் சாய்கிறாள் அவள்

  *

  இது நெ.ம படத்தின் சுருக்க்கம்

  கல்யாண் குமார் தேவிகா நம்பியார் நாகேஷ் என நட்சத்திரப்பட்டாளம்

  த்ரில்லரில் முன்னோடி என்பேன் நான்..முதன் முதலில் சாந்தி தியேட்டர் (மதுரை) யில் பார்த்த போது
  அந்தக் கிழ நம்பியார் தோன்றும் காட்சி என்னைத் திடுக்கிட வைத்தது.. மற்றவர்களையும் திடுக்கிட வைக்காமல் இருந்திருக்காது

  கண்ணதாசன் எம்.எஸ்வி கூட்டணியில் இசையமைக்க வெகு நாள் எடுத்துக்கொண்ட பாடல் நெஞ்சம் மறப்பதில்லை எனக் கேள்விப் பட்டிருக்கிறேன்

  தேனடி மீனடி, காடுமலை மேடுகண்ட மாட்டுப் பெண்ணெ, அழகுக்கும் மலருக்கும் ஜாதியில்லை, முந்தானை பந்தாட அம்மானை ஆடுங்கடி எனப் பாடல்கள் ஃபேமஸ் தான்..

  அதன் பின் இதுவரை த்ரில்லர் என்பது தமிழ் சினிமாவில் வாராதது ஒருவித சோகம் தான் (சமீபத்திய டிமாண்டி காலனி த்ரில்லராம்.. நான் இன்னும் பார்க்கவில்லை)

  ஸாரி ராகவேந்தர் சார்..எனக்கு த் தெரியாத பரிச்சயமில்லாத படங்களை நான்பார்த்ததில்லை..மன்னிக்கவும்..
  Last edited by chinnakkannan; 7th June 2015 at 11:06 AM.

 8. Thanks vasudevan31355, RAGHAVENDRA thanked for this post
  Likes gopu1954, RAGHAVENDRA liked this post
 9. #5
  Senior Member Platinum Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  10,107
  Post Thanks / Like


  சி.க. சார்
  உள்ளபடியே மிகவும் அருமையாக நெஞ்சைத் தொடும் வகையில் நெஞ்சம் மறப்பதில்லை பற்றி எழுதியுள்ளீர்கள் [இது திரிக்கும் பொருந்தும்].

  6 நிபந்தனையே அல்ல. ஒரு ஆலோசனை மட்டுமே.. தங்கள் நினைவிலாடும் எந்தத் திரைப்படமானாலும் தாங்கள் எழுதலாம், எழுத வேண்டும்.

  தாங்கள் மட்டுமல்ல இம்மய்ய உறுப்பினர்கள் அனைவருமே பங்கேற்கலாம்.
  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

 10. Thanks vasudevan31355, chinnakkannan thanked for this post
 11. #6
  Senior Member Platinum Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  10,107
  Post Thanks / Like
  த்ரில்லர் வகையில் தமிழில் அதிகம் வந்ததில்லை என்பது நம் அனைவருக்குமே ஒரு வகையில் சோகம் தான். ஓரளவிற்கு எஸ்.பாலச்சந்தர் சார் செய்திருக்கிறார். வரும் காலங்களில் அவருடைய படங்கள் பற்றி நாம் பகிர்ந்து கொள்வோம்.
  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

 12. #7
  Senior Member Platinum Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  10,107
  Post Thanks / Like
  குளிரடித்தும நடுங்கலாம். பயத்திலும் நடுங்கலாம்...

  இரண்டாவதை இப்போது பார்ப்போமா..

  சி.க. சார், இதோ நீங்கள் கேட்ட த்ரில்லர்...

  எஸ்.பி. சாரின் நடு இரவில்... 1966ம் ஆண்டு வெளிவந்த வெற்றித் திரைக்காவியம்.  எஸ்.பாலச்சந்தர், சௌகார் ஜானகி, வி.எஸ்.ராகவன், சோ, எம்.எஸ்.எஸ்.பாக்கியம், கே.விஜயன், சதன், கொட்டாப்புளி ஜெயராமன், மாலி, எஸ்.என்.லட்சுமி, கல்பனா, மேஜர் சுந்தரராஜன், வி.கோபாலகிருஷ்ணன், பண்டரிபாய், எஸ்.ஆர்.ஜானகி மற்றும் பலர் நடித்தது. தயாரித்து இயக்கி இசையமைத்தவர் எஸ். பாலச்சந்தர்.

  ஒரு வீட்டில் குடியிருப்பவர்களில் ஒவ்வொருவராக மர்மமான முறையில் மரணமடைகிறார்கள். கொலையாளி யார்.

  இவ்வளவு தான். இதை விட சிறப்பாக இந்தக் கதையை சொல்ல முடியுமா என நம்மை வியக்க வைக்கிற அளவிற்கு அருமையான திரைக்கதை, பின்னணி இசை. இரண்டே பாடல்கள், அநதக் காலத்திலேயே நீளம் குறைவான படம் என்று பல சிறப்பைப் பெற்றது.

  திரையிட்ட அனைத்து திரையரங்குகளிலும் வெற்றி வாகை சூடிய படம் நடு இரவில்.

  இளம் வயது சிறுவர்களை கட்டாயமாக திரையரங்குகளில் அனுமதிக்க மறுத்தது இப்படத்தின் சிறப்புக்கு எடுத்துக்காட்டு.

  ஈஸ்வரியின் நாலு பக்கம் ஏரி, சுசீலாவின் கண்காட்டும் ஜாடையிலே இரண்டுமே நம்மை சொக்கிப் போட வைத்த பாடல்கள்.

  கொலையாளி யார் என்பது தெரிய வரும் போது அனைவரின் முகத்திலும் எதிர்பாராத வியப்பு மேலிடும்..

  நடு இரவில் தமிழ் சினிமா வரலாற்றில் தனியிடம் பிடித்த படம்.

  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

 13. Thanks vasudevan31355 thanked for this post
  Likes gopu1954 liked this post
 14. #8
  Senior Member Senior Hubber
  Join Date
  Jan 2008
  Location
  Saudi Arabia
  Posts
  739
  Post Thanks / Like
  Quote Originally Posted by RAGHAVENDRA View Post
  2. Tamil Film Classics - Avoid films of Sivaji, M.G.R., Jai Shankar, Ravichandran and others for whom there are already separate threads.
  ராகவேந்தர் சார்,

  மேற்குறிப்பிட்டவர்கள் தவிர ஜெமினி கணேஷ், ஸ்ரீகாந்த், முத்துராமன், ஜெயலலிதா ஆகியோருக்கும் தனித்திரிகள் உள்ளன.

  திக்குத்தெரியாத காட்டில் பட ஆய்வு முத்துராமன் அல்லது ஜெயலலிதா திரிகளில் இடம்பெறத்தக்கது.

  இவர்களை நீக்கிவிட்டுப்பர்த்தால், ஆனந்தனின் ஒருசில படங்களும் மதுரகானங்கள் திரியில் தீர அலசப்பட்டுள்ளன. எஸ்.எஸ்.ஆர். படங்களை வரிந்துகட்டிக் கொண்டு அலசுவோர் யாரும் தென்படவில்லை. பார்ப்போம்.

  நடுஇரவில் ஆய்வு நன்றாக உள்ளது. பாராட்டுக்கள்.

 15. Thanks RAGHAVENDRA thanked for this post
  Likes RAGHAVENDRA liked this post
 16. #9
  Senior Member Diamond Hubber chinnakkannan's Avatar
  Join Date
  Apr 2006
  Location
  BOOLOGAM
  Posts
  8,018
  Post Thanks / Like
  ராகவேந்திரரே.. இரவு போய் நடுஇரவில் எழுதலாம் என்றிருந்தேன்.. நீங்க்ள் முந்தி விட்டீர்கள்..

  அந்த ந்நாலு பக்கம் ந் நாலுபக்கம் ந் நாலுபக்கம் ஏரி பாடும் போது அந்த ந் நின் அழுத்தம்.. நல்ல பாட்டு

  சோ வின் இரண்டாவது படம்.. விஷத்தையாய்யா கொடுக்கப் போறேன் என்று விளையாட்டாகப் பேச, ஒரு கை விஷ பாட்டிலை க் கொண்டுவந்து போட,

  அடுத்த காட்சி அந்தப் பாலை அருந்திய மனிதர் தூக்கில்...

  அம்மாக்குத் தெரியாமல் பீரோவில் நகை எடுக்கலாம் என அலையும் நபர்கள்..கடைசியில் பீரோவில் அம்மாவின் உடல்...

  ஒரே திக் திக் திடுக் திடுக் தான்..

  ஒரு கை வந்து பண்டரிபாயைத் தள்ளிவிட அவரது முழியும் அலறலும்..

  இன்னும் சில பல கொலைகள் நினைவிலில்லை.. நல்ல த்ரில்லர்..அறிமுகக் காட்சியில் இவ்வளோ கதா பாத்திரங்களா என க் கொஞ்சம் நினைக்க வைக்கும்..

  படகில் தப்பி ஓடுபவனைச் சுடும் துப்பாக்கி..
  ம்ம்

  சரி சரி இன்னொருமுறை பார்த்தால் போயிற்று

 17. Likes vasudevan31355, RAGHAVENDRA liked this post
 18. #10
  Senior Member Diamond Hubber chinnakkannan's Avatar
  Join Date
  Apr 2006
  Location
  BOOLOGAM
  Posts
  8,018
  Post Thanks / Like
  //எஸ்.எஸ்.ஆர். படங்களை வரிந்துகட்டிக் கொண்டு அலசுவோர் யாரும் தென்படவில்லை. // ஆதிராம் த்ரில்லர் வகையில் பார்த்தீர்களானால் எஸ் எஸ் ஆரும் நடித்திருக்கிறார். முத்துமண்டபம் மர்மப் படமென்க் கேள்விப் பட்டிருக்கிறேன் பார்த்ததில்லை..

  அப்புறம் ஏன் அலசவில்லைஎனில் எஸ் எஸ் ஆரின் கூடவே வி.குமாரியை பற்றியும் பேசவேண்டும் என்பதால் இருக்கலாம்!

Page 1 of 15 12311 ... LastLast

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •