Page 94 of 401 FirstFirst ... 44849293949596104144194 ... LastLast
Results 931 to 940 of 4010

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 17

  1. #931
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    பரணி சார்,

    Dr. Seetharaman வீடியோவிற்கு நன்றி!
    நடிகர் திலகமே தெய்வம்

  2. Thanks Harrietlgy thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #932
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    முத்தையன் அம்மு சார்,

    உலகம் போற்றும் உத்தமனின் ஸ்டில்கள் அமர்க்களம். லோகோ இல்லாமல் ஸ்டில் போடும் வித்தையைக் கொஞ்சம் கற்றுக் கொடுங்கள்.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. Likes ifohadroziza liked this post
  6. #933
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji Ganesan - Definition of Style 30

    நல்லதொரு குடும்பம்


    பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது...?


    ராஜா ஒரு மிகச் சிறந்த மருத்துவர். தன் இளமைப்பருவத்தில் வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்கத் துடிப்பவர். அவருடைய ஒரே பிடிமானம், தன்னுடைய தாத்தா. தாத்தா சொல் தட்டாதவர்.

    ராஜாவின் வீட்டில் உரிமையோடு வளைய வருபவள் ராதா. ஒரு கட்டத்தில் தாத்தா, ராஜாவின் பொறுப்பற்ற தன்மையைக் கண்டு மனம் வேதனைப்படுகிறார். ராஜா வேலை நிமித்தமாக வெளிநாடு சென்றிருக்கும் நேரத்தில் திடீரென தாத்தாவின் உடல் நிலை பாதிக்கப்பட்டு மரணமடையே நேரிடுகிறது. இறப்பதற்கு முன் தன் சொத்துக்களை உயில் எழுதி வைத்து விடுகிறார். ராஜா திருந்தி நல்லபடியாக வாழ்ந்து ராதாவைக் கல்யாணம் செய்து கொண்டால் அவனுக்கு அதில் உரிமை உண்டு, இல்லையென்றால் ராதாவின் பெயருக்கு சொத்து சேர வேண்டியது என எழுதி விடுகிறார். நாடு திரும்பும் ராஜாவிற்கு தான் உயிரையே வைத்திருந்த தாத்தாவின் மரணம் பாதிப்பு ஏற்படுத்தியது என்றால் உயில் அதை விட அதிகமாய் அவருடைய சுயமரியாதையை சீண்டி விடுகிறது.


    உயில் மூலம் தன்னை சிறுமைப் படுத்தி விட்டதாக பெரியவர் படம் முன் டாக்டர் ராஜா கோபமுடன் பார்க்கும் காட்சியில் நடிகர் திலகம்.

    பணம் என்ன பெரிய பணம், அது எனக்கு நத்திங், சுயமரியாதை இருக்கே அது தான் எனக்கு எவரிதிங் என ராதாவிடம் கூறி விடுகிறார்.




    ராஜா உயிலைப் பற்றிச் சொல்லச் சொல்ல அதைப்பற்றி ஒன்றும் தெரியாத ராதா, திகைத்து நிற்கிறார்.

    பின்னர் விஷயத்தை கிரஹித்துக் கொண்டு அந்த உயிலில் தனக்கு சம்மதமில்லை எனக் கூறி அந்த சொத்துக்களுக்கும் தனக்கும் எந்த வித பாத்தியதையுமில்லை என பதில் பத்திரத்தை எழுதி ராஜாவிடம் தந்து விட்டு வீட்டை விட்டுக் கிளம்புகிறார்.

    வீட்டை விட்டுக் கிளம்பும் ராதாவின் முடிவால் ராஜாவின் மனம் தடுமாறுகிறது. தான் அவசரப்பட்டு அவளிடம் கடுமையாய் நடந்து கொண்டு விட்டோமோ என பேதலிக்கும் மனம், அவள் மேல் அனுதாபம் உண்டாக்குகிறது., அது அன்பாய் மாறி, திருமணத்தில் முடிகிறது.



    கால ஓட்டத்தில், குழந்தை ஒன்றைப் பெற்றெடுக்கிறாள் ராதா. குழந்தை நன்று வளர்கிறது.

    இந்த சமயத்தில் ராஜாவின் பழைய சிநேகிதி ஒருத்தி (விஜயலலிதா)மீண்டும் அவனிடம் தொடர்பு கொள்கிறாள். ஆனால் இன்னொருவரின் (பாலாஜி) மனைவியாக, ஒரு குழந்தைக்குத் தாயாக. ஆம். அவருடைய குழந்தைக்கு உடல்நலமில்லை என்ற காரணத்தினால் அவரைத் தொடர்பு கொண்டு மருத்துவம் பார்க்க அழைக்கிறார். குழந்தைக்கு நோயின் பாதிப்பு தீவிரமாக இருப்பதை உணர்ந்த டாக்டர் ராஜா பெற்றோரிடம், தன்னை எப்போது வேண்டுமானாலும் கூப்பிடலாம் எனக் கூறுகிறார்.



    மற்றோர் நாள் - இரவில் குழந்தை மிகவும் துடிக்கிறது. பெற்றோர் டாக்டரை அழைக்கிறார்கள். ராதாவோ டாக்டர் மீண்டும் தன் பழைய பழக்க வழக்கத்தின் காரணமாகவே அங்கு செல்கிறார் என சந்தேகமுற்று அந்த தொலைபேசி இணைப்பைத் துண்டித்து விடுகிறாள். டாக்டர் வராத காரணத்தால் குழந்தை சிகிச்சை கிடைக்காமல் இறந்து விடுகிறது.

    மறுநாள் காலை குழந்தை இறக்கும் செய்தியை அறிந்த டாக்டர் ராஜா பதறிப் போய் விடுகிறார். இதற்குக் காரணமான தன் மனைவியின் மீதூ கடும் கோபமுற்று வீட்டை வீட்டு வெளியே போகச் சொல்லி விடுகிறார். வாக்குவாதம் முற்ற ராதாவும் வெளியேறுகிறாள். அவ்வாறு போகும் போது மகனைத் தந்தை தானே வளர்த்துக்கொள்வதாக்க் கூறி அனுப்பாமல் நிறுத்துகிறார். அவளோ என் வயிற்றில் உள்ள குழந்தையை உங்களால் பிரிக்க முடியாது எனக் கூறி, தான் அந்தக் குழந்தையை நன்றாக வளர்ப்பதாகக் கூறிச் சென்று விடுகிறாள். ராதாவிற்கு இரண்டாவதும் ஆண் குழந்தை பிறக்கிறது. மூத்த பிள்ளைக்கு ராமு எனப் பெயர் வைத்திருப்பதால் இரண்டாவது பிள்ளைக்கு லக்ஷ்மணமன் எனப் பெயர் வைக்கிறார்கள்.

    ராஜாவிடம் வளரும் மூத்த பையன் ராமு தந்தையிடம் அன்போடு இருக்கிறான் என்றாலும் சற்றே துடுக்கானவன். அவனை அம்மா ஏக்கம் தெரியாமல் வளர்க்க ராஜா படாத பாடு படுகிறார்.

    ராதாவிடம் வளரும் இளைய மகன் லக்ஷ்மணன், அன்பு, பாசம், கருணை போன்ற நல்லொழுக்கங்களுடன் வளருகிறான். தந்தை ஏக்கம் தெரியாமல் அவனை வளர்க்க ராதாவும் படாத பாடு படுகிறார்.

    நாட்கள் ஆண்டுகளாகின்றன. லக்ஷ்மணனும் ராமும் தாங்கள் சகோதரர்கள் எனத் தெரியாமலேயே நண்பர்களாக நெருங்கிப் பழகுகின்றனர். இருவருமே காதல் வயப்படுகின்றனர்.

    லக்ஷ்மணனின் நல்ல பழக்க வழக்க்கங்கள் ராஜாவிடம் தனி ஈர்ப்பை ஏற்படுத்துகின்றன. அதே போல் சந்தர்ப்ப வசத்தால் ராமுவுக்கும் லக்ஷ்மணனின் தாயாரிடம் ஓர் ஈர்ப்பு ஏற்படுகிறது.

    ஒரு சமயத்தில் ராமுவும் அவன் காதலியும் பதிவுத் திருமணம் செய்து கொள்கின்றனர். கோவிலுக்குச் செல்ல வேண்டும் என ராமுவின் மனைவி கூறும் போது, ராமு லக்ஷ்மணனின் தாயார் வீட்டுக்குப் போகலாம் எனக் கூறுகிறான்.

    லக்ஷ்மணனின் தாயார் முதலில் மறுத்தாலும் ராமுவின் பேச்சிலிருந்து அவன் தன் மகன் என்பதை அறிந்து கொள்கிறார். இருந்தாலும் உடனே அதைக் காட்டிக்கொள்ளாமல், அவர்களை ஆசீர்வதிக்கிறார்.

    அதே சமயம் லக்ஷ்மணன் காதல் வயப்பட்ட பெண், ராஜாவின் சிநேகிதரின் மகள் என்பதை ராஜா அறிகிறார், முதலில் மறுத்தாலும் பின்பு அவரும் அவன் தன் மகன் என்பதை அறிந்து கொள்கிறார். அதைக் காட்டிக் கொள்ளாமல் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறார்.

    இதற்குப் பின் அந்தக் குடும்பம் ஒன்று சேர்கிறார்களா என்பது தான் படத்தின் மீதிக் கதை.

    *****


    ராமுவின் பதிவுத் திருமணத்தை அங்கீகரிக்கும் ராதா, இதை ராஜாவிடம் சொல்லத் தீர்மானிக்கிறாள். அதற்கு முன் அவரிடம் பேச வேண்டுமே. தொலைபேசியில் தொடர்பு கொள்கிறாள்.

    இந்த்த தொலைபேசி உரையாடலும் அதைத் தொடர்ந்து வரும் நிகழ்வுகளும் தான் இன்று நம் ஆய்வு செய்யவிருக்கும் காட்சிகளாகும்.



    கணவன் மனைவி இருவரும் பல ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்து ஒரு தொலைபேசி அழைப்பின் மூலமாக மீண்டும் உரையாடி சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கும் போது அவர்களின் ரியாக்ஷன் எப்படி இருக்கும்..

    உடனே மக்களின் கவனம் திரிசூலம் காட்சிக்குச் சென்று விடுவது இயல்பு. ஏனென்றால் அதிலும் இதே காட்சியமைப்பு அப்படி. இயக்குநரும் அதே கே.விஜயன் அவர்களே.

    ஆனால் நடிக நடிகையர் வேறு, பாத்திரங்களின் அமைப்பு வேறு.



    திரிசூலம் திரைப்படத் தொலைப்பேசி காட்சியை வைத்து நடிகர் திலகத்தையும் இந்தக் காட்சியையும் மனம் போன போக்கில் விமர்சனம், நையாண்டி செய்பவர்களுக்கு நல்லதொரு குடும்பம் தொலைபேசிக் காட்சி சரியான சம்மட்டி அடியாக விளங்கும்.



    இரண்டுமே ஒரே ஆண்டில் வெளிவந்த படங்கள். இரண்டிலும் தம்பதியர் நீண்ட நாட்களுக்குப் பின் தொலைபேசி மூலமாக முதலில் உரையாடுகின்றனர். ஆனால் எத்துணை வேறுபாடுகள்.

    திரிசூலம் படத்தில் இருவரும் வெவ்வேறு நாடுகளில் வசிக்கிறார்கள். இருவரிடமும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. இருவருமே ஒருவரை ஒருவர் மிகவும் நேசிக்கிறார்கள். ஒருவர் மீது ஒருவர் மிதமிஞ்சிய அன்பு செலுத்துகிறார்கள். இந்த அடிப்படையில் இருவருமே நீண்ட நாட்களுக்குப் பின் பேசும்போது இயல்பாகவே உணர்ச்சி மிகுந்து வெளிப்படுகிறது.

    ஆனால் நல்லதொரு குடும்பம் திரைப்படப் பாத்திரங்களின் நிலைமை வேறு. இருவருக்குமிடையே வசிக்குமிடம் அவ்வளவு தூரமில்லை. நினைத்தால் சந்தித்துக்கொள்ளக் கூடிய தூரம் தான். ஆனால் இடைவெளி மிகவும் அதிகமானது அவர்களின் மனத்தளவில். இருவருக்குமிடையே நிலவும் ஈகோ அவர்களை ஒன்று சேர விடாமல் இடையூறு செய்கிறது.

    இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் இந்த்த் தொலைபேசி உரையாடல் துவங்குகிறது.



    ஒரு தாய் என்கிற முறையில் இயல்பாகவே பொறுப்புணர்ச்சியுடன் விளங்கும் ராதா, தங்களுடைய மகன் திருமண விஷயத்தைக் கணவனிடம் சொல்ல வேண்டும் எனத் தீர்மானித்துத் தானே தொலைபேசியில் அவரை அழைக்கிறாள்.


    மறுமுனையில் டாக்டர் ராஜா போனை எடுக்கிறார். டாக்டர் ராஜா என அறிமுகப்படுத்திக்கொள்கிறார்.

    மறுமுனையில் ராதா, தயங்கித் தயங்கி, நான் ராதா பேசறேன் என்கிறாள்.

    ராதா என்ற பெயர் ராஜாவுக்குள் ஒரு சலனத்தை ஏற்படுத்துகிறது. தன் மனைவியின் பெயர் ஞாபகம் வருகிறது. ராதா என லேசாக ஒரு சந்தேகத்துடன் கேட்கிறார்.


    இந்த இடத்தில் நடிகர் திலகத்தின் முகத்தைப் பாருங்கள். முதலில் ராதா என்ற பெயர் ஏற்படுத்தும் சலனத்திற்கு ஒரு பாவனை, பின் தன் மனைவியாக இருப்பாளோ என்று லேசாக ஒரு மின்னல், சரி யாரெனக் கேட்போம் என்பதை உணர்த்தும் விதமாக ராதா என்ற பெயரையே கேள்வியாக மாற்றும் சாமர்த்தியம்...





    ஒரு பெயரையே கேள்வியாக மாற்றும் விதமாக நடிப்பைக் கொண்டு வர முடியும் என்ப்தையும் இலக்கணமாக வகுத்தவரன்றோ தலைவர்... இதிலும் அப்படியே...


    மறுமுனையில் அவளோ வார்த்தை வராமல் தேம்புகிறாள்.

    அதைக் கேட்ட ராஜா, எந்த ராதா என மீண்டும் நேரடியாகவே கேட்கிறார்.

    மனைவியாயிற்றே... அவரை நன்கு அறிந்தவராயிற்றே... ராதாவிற்கு இந்த நேரத்திலும் ஈகோ மட்டுமின்றி அவரை இன்னும் பழைய ராஜாவாகவே பாவித்து, நான் அந்த ராதா தான் பேசறேன் என தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.


    அந்த என்கிற அந்த வார்த்தையில் எவ்வளவு அர்த்தம் தொனிக்கிறது. இங்கே வாணிஸ்ரீ அநாயாசமாக ஸ்கோர் செய்து விடுகிறார். நடிகர் திலகத்தின் மிகச் சிறந்த இணைகளில் ஒன்றல்லவா.. நடிப்பு அவ்வளவு சுலபமாக வருகிறது.




    தன் கணவனை தான் நன்கு உணர்ந்தவள் என எண்ணும் வெளிப்பாடாக, அவருக்கு ராதா என ஒன்றுக்கு மேல் இருப்பதாக தான் நினைப்பதாகவும், அதை அவரிடம் தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவும் அந்த ராதா என சற்றே நக்கலாக சொல்கிறார்.

    மறுமுனையில் டாக்டர் ராஜா, என் ராதாவா என உரிமையோடு கேட்கிறார்.


    இந்த இடத்தில் ராஜாவின் பாத்திரத்தின் மேன்மையை இயக்குநர் நன்கு விளக்குகிறார். அவர் பழைய ராஜா இல்லை. அன்பும் பண்பும் மனைவி மேல் அளப்பரிய பாசமும் வைத்துள்ள ராஜாவாக அவரைக் காட்ட வேண்டும். வசனகர்த்தா ஏ.எல்.நாராயணன் ஒரே வார்த்தையில் அத்தனை அர்த்தங்களையும் சொல்லி விடுகிறார்.


    அவளும் ஆமோதித்தவாறு, உங்களுக்கு நேரம் இருந்தா சாயங்காலம் 5 மணிக்கு நேரு பார்க்கிற்கு வருகிறீர்களா என அழைக்கிறாள்.

    அவரும் பார்க்கிற்கா எனக் கேட்கிறார்.


    இந்தக் கட்டத்தில் நடிகர் திலகத்தின் முகத்தில் தோன்றும் பாவனைகள்.. ஆஹா.. எத்தனை உணர்வுகளை சித்தரிக்கும் தன்மை வாய்ந்த அந்த முகம்... அந்தக் குரலில் அரங்கே ஆர்ப்பரிக்கும் கர்ஜனை இல்லை.. ஆர்ப்பாட்டமில்லை.. ஆனால் அந்த மென்மையான வார்த்தைகளை மென்று விழுங்கும் பேச்சில் நம்முடைய நாடி நரம்பெல்லாம் உட்புகுந்து நம்மையும் ஏதோ செய்கிறதே...

    நடிகர் திலகம் சிம்மக் குரலோன் மட்டுமல்ல... சிலிர்ப்புக்குரலோனுமாயிற்றே...


    உடனே ஒன்றுக்கு மூன்று முறை தான் வருவதை அவளுக்கு உணர்த்துவது மட்டுமின்றி தனக்கும் தானே உறுதிப்படுத்திக் கொள்கிறார். கண்டிப்பா வர்றேன், நிச்சயமா வர்றேன், உறுதியாக வர்றேன் என கூறுகிறார்.

    இருவருக்குமே உரையாடலைத் துண்டிக்க மனம் வரவில்லை. தயக்கத்தோடு இருவருமே கூறிக் கொள்கிறார்கள். அவளோ அரை மனதோடு வெச்சிட்ட்டுமா எனக் கேட்க, இவரோ வெச்சிடறேங்கிறியா எனக் கேட்கிறார். எங்கே போன் வைத்து விடுவாளோ என்று ஒரு எண்ணம் தோன்றுகிறது.

    உணர்ச்சி சற்றும் அடங்கவில்லை. என்றாலும் நிலைமையை நார்மலுக்குக் கொண்டு வர, இயல்பாகவே ஆண்களுக்கு இருக்கும் மன உறுதியை நிலைநாட்டும் விதமாக, அவரே கூறுகிறார். அதான் பார்க்கில் நேரில் பேசப் போகிறோமே.. வெச்சிடறேன் என தொலைபேசி உரையாடலை முடித்துக் கொள்கிறார்.

    அப்போதும் விடவில்லை ராஜாவின் கோபம்.. இருக்கும் கொஞ்ச நஞ்சம் கோபத்தையும் அவள் மீது செய்யும் விமர்சனத்தின் மூலம் தணித்துக்கொள்கிறார்.

    இவ்வளவு நாளைக்கப்புறும் இப்ப தான் கொஞ்சம் திமிர் அடங்கியிருக்கு..
    இதை சொல்லும் போது குரலில் என்னவொரு subdued pronounciation.

    இனி இப்போது அவர் சந்தோஷம் உற்சாகம் பீரிட அவளை சந்திக்கத் தயாராகிறார்.


    இந்தக் கட்டத்தில் இளையராஜாவின் இசை ராஜாங்கம் துவங்குகிறது. அவருடைய பின்னணி இசை அந்த சூழ்நிலையை அத்தனை அருமையாக வெளிப்படுத்துகிறது. மெல்லிசை மன்னருக்குப் பிறகு தமிழ்த்திரையுலகம் கண்ட மிகப் பெரிய இசைமேதை இளையராஜா என்பதற்கு இந்தப் படத்தில் அவர் அமைத்த பாடல்கள் மட்டுமின்றி பின்னணி இசையும் சான்றாகிறது.

    வயலின்,ட்ரம்பெட், கிடார்.. இது மூன்றுமே அவ்வளவு உயிரோட்டமான பின்னணி இசையைத் தருகின்றன.




    தலைவரோ கேட்கவே வேண்டாம். கண்ணாடி முன் நின்று உடம்பு முழுதும் ஸ்ப்ரே செய்யும் காட்சி.. சும்மா அதிருதில்லே... என்ப்தையெல்லாம் தாண்டி சூப்பரோ சூப்பராக விளங்குகிறது...


    இப்போது டாக்டர் ராஜா, விசிலடித்தவாறே படிக்கட்டில் உற்சாகமாக இறங்குவதை ஊழியர்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.


    இந்தக் காட்சியில் படிக்கட்டில் தலைவர் இறங்கும் ஸ்டைலைப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம். முதலில் ஒரு ஊழியர் பார்க்க, ஒரு விநாடி நின்று விட்டு நடையைத் தொடர்கிறார். அடுத்த முறை இன்னும் சிலர் பார்க்க அங்கேயும் அவர்களை ஒரு பார்வை பார்த்து விட்டு, தன் ஸ்டைலான நடையைத் தொடர்கிறார்.


    பார்க்கில் ராஜாவின் கார் நுழைகிறது. அங்கே ராதா காத்துக் கொண்டிருக்கிறாள். அலட்சியமாகவும் அதே சமயம் பரபரப்புடனும் கார் கதவைத் தள்ளி மூடுகிறார்.

    ராதா தன் கண்ணாடியே கீழிறக்கி டாக்டர் ராஜாவைப் பார்க்கிறாள். நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்ப்பதால் ஒரு வித க்யூரியாஸிட்டி அவள் முகத்தில் தென்படுகிறது.



    இந்த இடத்தில் இந்த உணர்வை வாணிஸ்ரீ வெளிப்படுத்தியிருக்கும் விதம்.. ஆஹா...

    தேவிகாவும் வாணியும் இன்னும் பல ஆண்டுகளுக்கு முன்பே பிறந்திருக்க்க் கூடாதா, இன்னும் பல படங்கள் முன்னமே அவருடன் நடித்திருக்க்க் கூடாதா என்கிற ஏக்கம் என்னைப் போன்ற ஏராளமான சிவாஜி ரசிகர்களிடம் உருவாக்கியவர்களாயிற்றே...



    இப்போது தலைவரின் சான்ஸ்... காரிலிருந்து இறங்கி உடனே வருவாரா மனுஷன்... ஒரு விநாடி நிற்கிறார். டையை சரி செய்து கொள்கிறார். கோட்டை சரி செய்து கொள்கிறார். ஆண் மகனாயிற்றே.. அந்த சூப்பிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் இல்லாமல் இருக்குமா.. நடையில் ஒரு அலட்சியம் கலந்த கம்பீரம்... உள்ளுக்குள் அவளைப் பார்க்கப் போகிறோமே என்கிற சந்தோஷம் இருந்தாலும் அதைக் காட்டிக்கொள்ள விடாத ஈகோ .. அதைத் தன் நடையில் கொண்டு வருகிறார்..


    மீண்டும் ஈகோ...

    யார் முதலில் பேசுவது என்று இருவருக்குமே ஈகோ தலைதூக்குகிறது...

    நான் எப்படி பேச முடியும் என அவள் நினைக்கிறாள்.



    இருவருமே ஒருவரையொருவர் நீண்ட நாட்களுக்குப் பின் பார்ப்பதால் கண்ணுக்குத் தென்படும் உருவ வேறுபாட்டை நினைத்துப் பார்க்கின்றனர்.

    இந்த இடத்தில் தான் பாத்திரங்கள் மிக வலுவாக நிலை நிறுத்தப்படுகின்றன.


    நீண்ட நாட்களுக்குப் பின் நேரில் பார்த்தாலும் உணர்ச்சி வசப்படுவதில்லை. நேரடியாக விஷயத்திற்கு வந்து விடுகின்றனர்.

    ராஜா ஆரம்பிக்கிறார். வந்து ரொம்ப நேரமாச்சா...

    ராதா.. இப்பத்தான் வந்தேன்.. அந்த இப்பத்தான் வந்தேன் என்பதை விட்டேத்தியாக சொல்வது சிறப்பு.

    ஏதோ பேச வேண்டும் என்பதற்காக மணி இப்பத்தான் அஞ்சாவுது எனக் கூறும் ராஜா, எதுக்காக வரச்சொன்னே என்று அவளை நேரடியாகக் கேட்கிறார்.

    ராதா ஆரம்பிக்கிறாள். குழந்தைங்களை வளக்கறதுக்கு தாய் ஒருத்திக்குத் தான் தெரியும்., உங்களுக்கு ஆஸ்தி ஆள் மாகாணங்கள் நிறைய இருக்கலாம். ஆனால் தாய் வளக்காத பிள்ளைங்க தறுதலையாப் போயிடுவாங்கங்கிற உண்மையை புரிய வெக்கத்தான் உங்களை இங்கே வரச்சொன்னேன் என்கிறாள் ராதா.

    உடனே இவர் தன்னைத்தான் சாடுகிறாள் எனப் புரிந்து கொண்டு நீ ராமுவைப் பத்தியா சொல்றே எனக் கேட்கிறார்.

    அவள் ஆமாம் என அலட்சியமாக சொல்கிறாள்.

    நீங்க வளத்த உங்க செல்ல மகன் யாரோ ஒரு பொண்ணை ரிஜிஸ்டர் கல்யாணம் செஞ்சிக்கிட்டு என் வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டான். என சொல்கிறாள்.

    அதைக் கேட்டு அவர் ஒரு நொடி திடுக்கிட்டாலும் உடனே சுதாரித்து சாதாரணமாக ஓ என ஒரு ரியாக்ஷன் தருகிறார்.

    நீ யாருன்னு அவன் கிட்டே சொன்னியா என அவர் ராதாவைக் கேட்கிறார்.

    இல்லை. கல்யாணம் பண்ணிக்கிட்டு ரெண்டு பேரும் மாலையோட எங்கிட்டே தான் வந்தாங்க.. நான் அவங்க ரெண்டு பேரையும் வாழ்த்தி வரவேற்று உள்ளே கூப்பிட்டுக்கிட்டேன். என பெருமை பொங்க சொல்கிறாள் ராதா.

    ராஜாவோ என்ன செய்வதெனத் தெரியாமல் கையைப் பிசைகிறார்.

    உடனே இது தான் சாக்கென்று குரலை உயர்த்துகிறாள் ராதா.
    என்ன யோசிக்கிறீங்க.. நடந்த்து நடந்து போச்சு.. இப்போ அவனைக் கூப்பிட்டு தாம்தூம்னு குதிச்சீங்கன்னா உங்களுக்குத் தான் அவமானம். நான் ரெண்டு பேரையும் அனுப்பி வெக்கறேன் உள்ளே கூப்பிட்டுக்குங்க..

    ஒரு சிறிய மௌனம். இருவரும் ஒருவருக்கொருவர் முதுகைக் காட்டிய படி நிற்கின்றனர்.

    ராஜா கிளம்ப யத்தனிக்கிறார்.

    உடனே ராதா, கொஞ்சம் இருங்க. என அவரை நிறுத்துகிறாள்.

    இப்போது அவளுக்குள் கர்வம் தலை தூக்குகிறது. தான் வளர்த்த மகன் லக்ஷ்மணனைப் பற்றி அவர் வாயாலேயே பெருமையாக சொல்ல வைக்கிறாள். அவர் அவனைப் பற்றி சொல்லி விட்டு அவனைப் பத்தி ஏன் கேக்கறே என வினவுகிறார்.

    அப்போது தான் அவள் அந்த உண்மையை உடைக்கிறாள். தாங்கள் பிரியும் போது தன் வயிற்றில் வளர்ந்த அந்த சிசு தான் அந்த லக்ஷ்மணன் என அவரிடம் கூறுகிறாள். தான் மகனைத் தான் வளர்த்த விதம் பற்றி பெருமையாக அவர் சொன்ன வார்த்தைகளை வைத்தே அவரிடமே சொல்லிக் காட்டி விட்டுக் கிளம்ப யத்தனிக்கிறாள்.



    இப்போது ராஜா மனம் கேளாமல், அவளிடம் சென்று அவ்வளவு தானா வேறொன்றும் இல்லையா என, தங்களுடைய இல்லற வாழ்க்கையப் பற்றிக் கேட்க முற்படுகிறார். ஆனால் அவளோ தான் நினைத்ததை சாதித்து விட்ட பெருமை மட்டுமே போதும் என்பவளாக நினைத்து வேறொன்றும் இல்லை என முகத்தில் அடித்தாற்போல் அவரிடம் சொல்லி விட்டுக் கிளம்பிவிடுகிறாள்.

    ஆனால் ராஜாவோ நமக்குள்ளே என்ன இருக்கா என்று அவள் கேட்டதை நினைத்து மனம் குமுறுகிறார். தவறா நடந்துகிட்டேன், என்னை மன்னிச்சுடுங்கன்னு ஒரு வார்த்தை சொல்லியிருந்தா நான் இந்நேரம் வீட்டுக் கூட்டிக்கிட்டுப் போயிருப்பேன் இல்லே என தன் மன ஓட்டத்தை வெளிப்படுத்துகிறார். இப்போது கோபம் அதிகமாகிறது. உன் திமிர் இன்னும் அடங்கவேயில்லையா... எத்தனை நாளைக்குத் தான் நீ இப்படி இருப்பேன்னு பாக்கிறேன் எனக் கூறியவாறு அந்த இடத்தை விட்டு அகலுகிறார்



    காட்சி முடிகிறது.

    மேற்குறிப்பிட்டுள்ள காட்சிக்கான காணொளி..



    காட்சி 1.50 நிமிடத்தில் துவங்குகிறது.
    நன்றி யூட்யூப் இணையதளம்


    தன் இறுதித் திரைப்படம் வரையிலும் நடிப்பில் தன் முத்திரையைப் பதித்து தன்னிகரில்லா கலைஞனாக வாழ்ந்து காட்டிய நடிகர் திலகத்தின் புகழ்க்கிரீடத்தில் மட்டுமல்ல, வாணிஸ்ரீ அவர்களின் நடிப்பு மகுடத்திலும் நல்லதோர் குடும்பம் ஓர் வைரக்கல்லாக விளங்குகிறது. ஒவ்வொரு காட்சியிலும் இந்த இணை சிறப்புற நடித்திருப்பது மட்டுமின்றி, அந்தப் பாத்திரங்களுக்கு ஜீவனூட்டியிருப்பது இவர்களுடைய திறமைக்கு சான்று.



    நேற்றுப் பிறந்த நாள் கொண்டாடிய நமது அன்புச்சகோதரர் வாசு அவர்களுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்.
    Last edited by RAGHAVENDRA; 22nd November 2015 at 11:38 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #934
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    தரிசனம்-1. இரு மலர்கள்.
    ---------------------------
    தொடர்கிறது...
    --------------

    "சாந்தி... இந்த லெட்டரைப் படி"

    சுந்தரால் நம்ப முடியவில்லை.
    உமாவா? உமாவா இந்தக்
    கடிதத்தை எழுதியிருக்கிறாள்?
    அவளது அண்ணன் அவளுக்கு
    வேறொரு பணக்கார மாப்பிள்ளையைப் பார்த்திருப்பதாகவும், தன்னை
    மறந்து விட வேண்டியும்
    கடிதம் எழுதியிருப்பது
    அவளேதானா?

    அதிர்ச்சியை தாங்க முடியாத
    சுந்தர், சாந்தி கடிதத்தைப்
    படிக்கப் படிக்க மேலும் அயர்ச்சியாகிறான். அவனுக்கு
    கிறுகிறுக்கிறது. கண்கள்
    செருகுகின்றன.

    தள்ளாடுகின்றான்.

    மயங்குகின்றான்.

    கனவுகளின் சந்தோஷம்
    மனிதனை எத்தனை உயரத்தில்
    வைத்திருப்பினும், நிஜம்
    தரும் ஏமாற்றம் அவனை
    உடனடியாக பூமிக்கு இழுத்து
    வந்து விடும்.

    இதோ...

    உமாவால் சுந்தருக்கு ஏற்பட்ட
    ஏமாற்றம், அவனை தடதடவென படிகளில் உருட்டி
    பூமியில் கொண்டு தள்ளியது.
    -------------
    அன்பான தந்தை.
    அத்தை மகள்.
    சுந்தரின் குடும்பம் மிகச் சிறியதுதானென்றாலும், அவன்
    மீது அவர்கள் காட்டும் அன்பு
    பெரியது.

    அன்புடைய இரண்டு நெஞ்சங்களும் பதறுகின்றன.
    சுந்தரின் நிலை கண்டு கதறுகின்றன.

    மருத்துவர், சுந்தரைப் பரிசோதிக்கிறார். இன்னும் சுந்தருக்கு நினைவு திரும்பவில்லையே என
    வினவும் பெரியவரிடத்தில் மருத்துவர் வேதனையாய்ச்
    சொல்கிறார்...

    "எவ்வளவுதான் மருந்து,மாத்திரை சாப்பிட்டாலும்
    நோயாளிக்கு உயிர் வாழணுங்கிற ஆசை வேணும்.
    இந்தச் சின்ன வயசில இவர்
    சாகணும்னு நினைக்கிறாரு.
    ஏன்னு எனக்குப் புரியல."

    சாந்திக்குப் புரிகிறது.
    அவனைப் பிழைக்கச் செய்யும்
    மருந்து, தான் ஊட்டும் நம்பிக்கைதானென்று புரிகிறது.
    அவள் என்ன செய்ய வேண்டும் என்று புரிகிறது.

    தன் நினைவற்று நோய்ப்படுக்கையில் கண்மூடிக் கிடக்கும் அத்தானின் காதுகளில், அவளது
    உதடுகள் நம்பிக்கை வார்த்தைகளை உறுதியுடன்
    ஓதுகின்றன.. மந்திரம் போல்.

    "நீங்க வாழணும்.
    வாழ்ந்தே ஆகணும்."
    ----------------

    அன்றாடம் நாம் பயன்படுத்திப்
    பேசும் வார்த்தைகள் நமக்கு
    எந்தப் பெருமையும் தருவதில்லை.ஆண்டவனுக்கு முன் மனம் குவித்து நாம் உச்சரிக்கும் மந்திர வார்த்தைகள் நமக்கு மனநிறைவைத் தருகின்றன.

    சாதாரண வார்த்தைகள்-
    வாடிக்கை.

    மந்திரம்-
    நம்பிக்கை.

    -------------
    சுந்தர் பிழைத்துக் கொண்டான்.

    சாந்தியின் நம்பிக்கை மந்திரம்
    ஜெயித்து விட்டது.

    இரண்டு மாதங்கள் ஒடி விட்டன.

    நோய் குணமாகிவிட்டாலும், நோய் தந்த உடல் களைப்பும், உயிர் பிழைத்துக் கொண்டதில் கொஞ்சம் கூட சந்தோஷமில்லாத ஓர் மனசலிப்புமாய் சாய்வு நாற்காலியில் அமர்ந்து
    நடிகர் திலகம் பேசும் இந்தக்
    காட்சியிலிருந்து
    துவங்குகிறது...
    கதைப்படி மட்டுமல்லாமல்
    நடிப்பிலும் அவரது புதிய அவதாரம்.

    தான் சாக வேண்டும் என்று
    விருப்பப்பட்டதையும், தன்னுயிர் தன்னை விட்டுப்
    பிரிவதாய் உணர்ந்த பல
    தருணங்களிலெல்லாம் தன்
    காதுகளில், "நீங்க வாழணும்,
    வாழ்ந்தே ஆகணும்" என்கிற
    குரல் ஒலித்துக் கொண்டே
    இருந்ததையும் புன்னகை அரசியிடம் களைப்புக் குரலில்
    சொல்லிக் கொண்டே வருபவர்,
    "ஏன் சாந்தி என்னை சாக விடாம காப்பாத்தினே?" என்று கேட்குமிடத்தில், ஒரு இயக்குநரை, ஒரு வசனகர்த்தாவை, உடன் நடிக்கும் புன்னகை அரசியை,
    தன்னையே நம்பி விழி விரித்துக் காத்திருக்கும்
    கோடானுகோடி ரசிகர்களை..
    ஒரே நிமிடத்தில் திருப்தி
    செய்கிறது...

    நடிகர் திலகத்தின் வெகு இயல்பான நடிப்பு.
    ----------------

    உலகெங்கும்
    தலைமுறை இடைவெளி
    காரணமாக மிகச் சரியான
    கோணத்தில் புரிந்து கொள்ளப்படாதிருக்கும்
    தந்தை-மகன்
    உறவின் மேன்மையையும்
    "இரு மலர்கள்" விட்டு வைக்கவில்லை.

    தான் மரணப்படுக்கையிலிருந்த
    போது, தனக்காக வேண்டிக்
    கொண்டு, தன்னையே நினைத்து தன் தந்தை உருகிக்
    கிடந்தாரென்று சாந்தி மூலமாக
    சுந்தர் அறிகிறான்.

    அந்தப் பாசத்தை மெய்ப்பிக்கிற
    விதமாய் மகனுக்குப் பிரியமான இனிப்போடு வருகிறார் தந்தை.

    மகனுக்கு இனிப்பைத் தந்தவர்,
    சாந்திக்கு கசப்பைத் தருகிறார்.

    தனது பால்ய நண்பரும்,
    சுந்தர்-உமா படித்த கல்லூரியின் பேராசிரியர்
    சுந்தரவதனத்தின் உறவினருமான ஒருவரின்
    மகனை சாந்திக்கு மணமுடிக்க
    இருப்பதாகத் தெரிவிக்கும்
    செய்தியே.. அந்தக் கசப்பு.
    ---------------
    சுந்தரின் தந்தை சொன்ன அந்தப் பையனின் குடும்பம்
    சாந்தியைப் பெண் பார்க்க
    வருகிறது.

    மனசின் அழுகை அலங்காரத்தை மீற..சாந்தி
    வருகிறாள்.

    எல்லோரையும் நமஸ்கரிக்கிறாள்.

    சிவக்கொழுந்து அவளை வீணை வாசிக்கச் சொல்கிறார்.

    வேதனையுடன்,மனசேயில்லாமல் வீணை
    மீட்டும் சாந்தியை, முற்றிலும்
    உடல் நலம் தேறாத சுந்தர்
    திடீரென்று மாடியிலிருந்து
    இருமும் இருமல் வருத்தமுறச்
    செய்கிறது.

    வீணை வாசிப்பை தொடரச்
    சொல்லும் மாமாவின் கண்ஜாடை உத்தரவுக்கும்,
    அத்தானின் சங்கிலித் தொடர்
    இருமல் சத்தத்துக்கும் ஊடே
    சாந்தியின் பெண் மனம் தவிக்கிறது.

    நெஞ்சடைத்துப் போய், இருமல்
    தொடர, தண்ணீர் கேட்டு
    மாடியறையை விட்டு
    வெளியே வந்து திண்டாடும்
    சுந்தரைக் காணச் சகியாத
    சாந்தி, அங்கிருந்த தண்ணீர்
    டம்ளரை எடுத்துக் கொண்டு
    மாடிக்கு ஓடுகிறாள்.

    சிவக்கொழுந்து திகைக்கிறார். பெண்பார்க்க வந்த கூட்டம்
    அதிர்கிறது. மாடிக்கு ஓடிய
    சாந்தி, இருமல் ஓயாத தளர்வில் நெஞ்சைப் பிடித்துக்
    கொண்டு தள்ளாடும் சுந்தரை
    தன் நெஞ்சோடு தாங்கிக் கொண்டு தண்ணீர் பருகச்
    செய்கிறாள்.

    பெண் பார்க்க வந்த கூட்டம்
    இப்போது வம்பு பார்க்கிறது.

    இனிப்பு தின்று ஓய்ந்த வாய்கள்
    குப்பை வார்த்தைகள் பேசத்
    துவங்குகின்றன.

    வேறு வழி தெரியாத நிலையில்
    தன் உடல் நலக் குறைக்கு
    நிவாரணம் தேடி வந்த சுந்தரையும், அந்தக் குறை
    போக்கும் மனிதாபிமானத்துடன் சுந்தரை
    மார்போடு தாங்கிக் கொண்ட
    சாந்தியையும் அந்த சந்தேகக்
    கண்கள் ஆபாசக் கயிற்றால்
    கட்டிப் போட்டன.

    அந்த ஆபாசமே நிஜமென்று
    அந்தக் கூட்டம் ஆர்ப்பாட்டம்
    செய்தது.

    "என்னய்யா இதெல்லாம்" என்று ஆதங்கப்பட்ட பெரியவர்
    சிவக்கொழுந்துவை அலட்சியம்
    செய்து அந்தக் கும்பல் வெளிநடப்பு செய்தது.

    எதையும் தடுப்பதற்கியலாத
    சுந்தரவதனமும், அவர் மனைவியும் பெரியவருக்கு
    மௌன ஆறுதல் கூறி நகர,
    பெரியவரின் கோபம் சாந்தியை
    நோக்கித் திரும்புகிறது.

    அத்தான் இருமித் துடிக்கையில்
    தான் வேறென்ன செய்யட்டும்
    என்று கேட்கும் சாந்தியின்
    மனம் இன்னும் நோகும்படியாய் பெரியவரின்
    சுடு சொற்கள்...

    "அவன் இருமுறான்.துடிக்கிறான். செத்துதான் மடியறான்.. உனக்கென்ன?"

    கட்டுப்படுத்த முடியாத இருமலும், கட்டுப்படுத்த
    முடியாத அன்பும்.. ஒரு
    பெண்ணின் கல்யாண ஏற்பாடுகளைத் தடுத்தன.

    கெடுத்தன.
    ---------------

    கொட்டும் மழையின் சாரல்
    தன்னைப் பெரிதும் நனைத்தாலும், அதை இலட்சியம் செய்யாமல் சுந்தர்
    சாய்வு நாற்காலியில்
    அமர்ந்திருக்கிறான்.

    மழைச் சாரலில் நனையாதிருக்க அறிவுறுத்தும்
    புன்னகை அரசியிடம், "நல்லா
    தெறிக்கட்டும் சாந்தி.. அப்பவாவது என் உள்ளத்துல
    எரிஞ்சுகிட்டிருக்கிற நெருப்பு
    அணையுதான்னு பாக்கிறேன்."
    என்று சொல்லும் நடிகர்
    திலகத்தின் குரலில் த்வனிக்கிற
    கோபம், விரக்தி, குற்ற உணர்ச்சி, இயலாமை...
    இதெல்லாம் சும்மா ரசிப்பதை
    எல்லாம் தாண்டி ஆய்வுக்கு
    உட்படுத்த வேண்டியவை.


    ( ...தொடரும்...)

  8. #935
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    முத்தையன் அம்மு சார்,

    உலகம் போற்றும் உத்தமனின் ஸ்டில்கள் அமர்க்களம். லோகோ இல்லாமல் ஸ்டில் போடும் வித்தையைக் கொஞ்சம் கற்றுக் கொடுங்கள்.
    இது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை வாசுதேவன் சார்..போட்டோ சாப் தெரிந்திருக்க வேண்டும்..அப்புறம் கொஞ்சம் ஸ்டில் எடுக்கும் பயிற்சி இருக்கவேணும்..இதற்க்கு மேல் ஆர்வம் இருக்கவேண்டும்..எனக்கு எங்கள் தலைவரின் திரைப்படங்களும்..நடிகர் திலகத்தின் திரைப்படங்களும்..ச்டில்ல்கள் மிக சரியாக தெரியும்..சினிமா ஆபரேட்டராக இருந்த நாட்களில் மிகவும் ரசித்து மனதுக்குள் வைதிருகேறேன்..அவைகள் தான் இப்போது பதிவுகளாக பதிவு செய்யபடுகிறது...நண்பர்கள் எல்லோரும் முயற்சி செய்யுங்கள்..என்னைவிட மிக சிறந்த பதிவுகளை உங்களால் செய்யமுடியும்..போட்டோ சாப் புத்தகத்தை வாங்கி படித்து..பயிற்சி செய்யவும்..உங்களால் முடியும்..நம்பிக்கையுடன்..முத்தையன் அம்மு.. வாசுதேவன் சார் உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..நான் கொஞ்சம் லேட்..பொறுத்துகொள்ளவும்..நன்றி..
    Last edited by Muthaiyan Ammu; 22nd November 2015 at 12:28 PM.

  9. Thanks vasudevan31355 thanked for this post
  10. #936
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    "பெயரைக் கூட கேள்வியாக்குபவர்..."

    "சிம்மக்குரலோன் மட்டுமல்ல
    சிலிர்ப்புக் குரலோனும் கூட..."

    -அருமை.. ராகவேந்திரா
    சார்.

    பணிந்த நன்றிகளும் ..
    வாழ்த்துகளும்.

  11. Likes KCSHEKAR liked this post
  12. #937
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    தரிசனம்-1. இரு மலர்கள்.
    --------------------------
    தொடர்கிறது...
    ---------------

    மிதமிஞ்சிய குற்ற உணர்வும்,
    இயலாமையும் ஒரு நல்ல
    மனிதனை ஆட்கொள்ளும்
    போது, அந்த நல்ல மனிதனின்
    எரிச்சலும், கோபமும் சார்ந்த
    நல்ல உயிர்களையும் காயப்படுத்தி விடுகிறது.

    சுந்தரிடமிருந்த வெளிப்பட்ட
    அத்தகைய கோபமும், எரிச்சலும் சாந்தியை நோக்கிப்
    பாய்ந்தது.

    அவளை நிலை குலையச்
    செய்தது.

    "என்னை விட்டுப் போ... என்னைத் தொடாதே" என்பன
    போன்ற விரக்தியின் உச்சத்திலிருந்து சுந்தர் சொன்ன
    வார்த்தைகள், சாந்தியின் மென்
    மனதை ரொம்பவும்தான்
    இம்சித்து விட்டன.

    "போறேன்... இனி திரும்பி
    வரவே மாட்டேன்.."

    பொறுமை சோதிக்கப்பட்ட
    உயிர்களுக்கும் கோபம் உறவுதான் என்று நிரூபித்த
    சாந்தி, வேகப் புயலாய் வெளியேறுகிறாள்.

    பளீரென்று தன் தவறுணர்ந்த
    சுந்தர், அவளைத் தடுக்கும்
    முயற்சியில் பின்னாலேயே
    ஓடுகிறான்.

    மூடிக் கிடக்கும் வாசல் கதவை
    திறந்து கொண்டு ஓடும் சாந்தியும், பின்னால் அவளை
    விரட்டி ஓடி வரும் சுந்தரும்
    காணும் காட்சி, அவர்களின்
    உணர்ச்சி வேகத்தைக் காணாமலடிக்கிறது.

    கொட்டும் மழையில், வாசல்
    படியில் மயங்கிச் சரிந்து
    கிடக்கிறார்.. சிவக்கொழுந்து.

    அன்று, உமாவின் கடிதம் கண்டு மயங்கி விழுந்து முடியவிருந்த சுந்தரின் வாழ்க்கை, இன்று மயங்கி
    விழுந்த அவனது தந்தையின்
    மூலமாக.. சாந்தியோடு அவன்
    தொடரப் போகும் இன்ப வாழ்க்கையைத் துவக்கி வைக்கப் போகிறது.

    எல்லா மயக்கங்களும் கெடுதல்
    செய்வதில்லை.
    -----------------

    மயக்கம் தெளிந்து ஆசுவாசப்படும் பெரியவரின்
    முன் கூனிக் குறுகி நிற்கும்
    சுந்தருக்கு, அவரால் புதிய
    பாடங்கள் எடுக்கப்படுகின்றன.
    சுந்தருக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் சாந்தியின்
    மாண்புகள் விளங்க வைக்கப்படுகின்றன. தனது
    தள்ளாத வயதில் தன் தந்தை
    வேலை செய்து துன்புறுவது
    தன் பொருட்டே என்பது
    சுந்தருக்கு அவன் துடிக்கத்
    துடிக்க உணர வைக்கப்படுகிறது.

    சுந்தர் அனைத்தையும் புரிந்து
    கொள்கிறான். புரிதல் மிகுந்த அவனது கண்ணீர் அவன்
    தந்தையின் புனிதப் பாதங்களை
    நனைக்கிறது.

    தனக்காகவே வாழ்ந்திருக்கும்
    சாந்தியை அவன் மனம்
    நன்றிகளோடு நினைக்கிறது.

    "பல குறைகள் நிறைஞ்ச என்னை உன்னோட கணவனா
    ஏத்துக்குவியா சாந்தி?" என
    மன்றாடும் சுந்தரை, அவனை
    அடைதலே தன் இலட்சியமாக
    வாழும் சாந்தியிடம் இணைக்கிறது.

    இவர்களிருவரும் இணையும்
    காட்சி, இவர்களின் நல்வாழ்வே
    கனவாயிருக்கும் பெரியவரின்
    நெஞ்சோடு நிம்மதியைப் பிணைக்கிறது.
    -------------------

    ஒருத்தியால் ஏற்பட்ட ஏமாற்றம் தந்த வெறி..

    இன்னொருத்தி தந்த அன்பு
    வாழ்க்கை தந்த நிறைவு...

    வேறென்ன வேண்டும்..சுந்தர்
    ஜெயிப்பதற்கு..?

    மேன்மை மிக்க அவனது பேருழைப்பு அவனைச் செல்வந்தனாக்கிற்று.

    கோட்டும், சூட்டுமாய் அவனைப் பளபளப்பாக்கிற்று.

    மிகச் சிறந்த தொழிலதிபராக்கிற்று.

    இயற்கை வளம் பொங்கும்
    கொடைக்கானலில், செல்வ
    வளம் கொழிக்க சுந்தரைக்
    குடியமர்த்தியது.

    அவனுக்கான புகழ் மேடைகளை உருவாக்கிற்று.
    அன்பே உருவான மனைவியையும் அவன்
    அருகமர்த்தி அழகு பார்த்தது.
    ---------------
    அப்படி ஒரு புகழ் மேடை
    சுந்தருக்காக கொடைக்கானலில்..

    பண்பு மிக்க மனைவியும்
    அருகிருக்கும் அந்த மேடையில் சுந்தரின் பெருமை
    பேசப்படுகிறது. அவன் அள்ளிக்
    கொடுத்த கொடை அங்கே
    போற்றப்படுகிறது.

    அங்கிருக்கும் ஒரு பள்ளியில்
    பணியாற்றும் சுந்தரின் பழைய
    பேராசிரியர் சுந்தரவதனமே
    இந்த மேடையில் அவனது
    பெருமைகளைப் பேசுகிறார்.

    அங்கே அநாதை விடுதி ஒன்று
    கட்ட நிதியுதவி கேட்டு
    தான் சென்ற போது, "ஒரு நிமிஷம்" என்று அனுமதி
    கேட்டு உள்ளே போன சுந்தர்,
    திரும்ப வந்து கட்டிடம்
    கட்டுவதற்கான முழுத் தொகைக்கான 'செக்'கையும்
    கொடுத்து விட்டதை பெருமிதத்துடன் மேடையில்
    குறிப்பிடும் சுந்தரவதனம்,
    அந்த ஒரு நிமிஷத்தில் என்ன
    நடந்ததோ..? என வியந்தும்
    பேசுகிறார்.

    அடுத்துப் பேச வரும் சுந்தர்,
    தனது முன்னேற்றத்துக்கும்,
    வாழ்வின் வெற்றிகளுக்கும்
    காரணமான ஒருவரிடம் கலந்து
    பேசவே தான் அந்த ஒரு நிமிஷத்தைப் பயன்படுத்திக்
    கொண்டதாகத் தெரிவித்து, "அவரை அடுத்துப்
    பேச அழைக்கிறேன்" எனக்
    கூறி விட்டு, "திருமதி.சாந்தி
    சுந்தர் அவர்கள் இப்போது நீண்ட சொற்பொழிவு ஆற்றுவார்" என்று
    குறும்பு தவழச் சொல்லி விட்டுப் போகிறான்.

    எதிர்பாராத அழைப்பில் அதிர்ச்சியானாலும், ஒலிபெருக்கி முன் வந்து
    மளமளவெனப் பேசி ஆனந்த
    வெள்ளத்தில் ஆழ்த்தி விடுகிறாள் சாந்தி.

    தயக்க நடை போட்டு நடந்து
    வந்து, மெல்ல ஒலி பெருக்கி
    முன்னாலே வந்து நின்று, ஒரு
    நொடி இறுகக் கண் மூடி
    எதையோ தியானித்து, அர்த்தமாய், ஆழமானதாய்ப்
    புன்னகை அரசி பேசத் துவங்கும் இந்தக் காட்சிதான், நிறையப் பேரை பத்மினி கட்சியிலிருந்து
    கே.ஆர். விஜயா கட்சிக்கு மாற
    வைத்திருக்கும்.
    -------------------
    "சுந்தரைப் பேச அழைக்கிறேன்"
    என்று நாகேஷ் அழைத்ததும்
    எந்த பந்தாவுமில்லாமல் வெகு
    இயல்பாய் ஒலிபெருக்கியில்
    பேசுவது...

    "நீண்ட சொற்பொழிவாற்றுவார்"
    என்று செய்யும் கிண்டல்...

    கே.ஆர்.விஜயாவின் பயந்த
    முகம் பார்த்து மேலும் அதிகமாகும் குறும்பு...

    கிண்டல் சிரிப்பு...

    கே.ஆர்.விஜயாவின் தெளிவான பேச்சைக் கேட்கக்,
    கேட்க முகத்தில் காட்டும்
    மகா வியப்பு...

    -இவையெல்லாம், இடைவெளியே இல்லாமல்
    நம்மை அசத்துவதெனத் திட்டம் போட்டு நடிகர் திலகம்
    நடித்த படங்களில்
    "இரு மலர்கள்" படமும் ஒன்று
    என்பதற்கான சில உதாரணங்கள்.


    ( ...தொடரும்...)
    Last edited by Aathavan Ravi; 22nd November 2015 at 04:27 PM.

  13. #938
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    இடைவெளியே இல்லாமல்
    நம்மை அசத்துவதெனத் திட்டம் போட்டு நடிகர் திலகம்
    நடித்த படங்களில்
    "இரு மலர்கள்" படமும் ஒன்று
    Super...o...super...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  14. Likes Subramaniam Ramajayam liked this post
  15. #939
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ராகவேந்திரா சார்
    நல்லதொரு குடும்பம் பதிவு வழக்கம்போலவே அமர்க்களம்.
    உங்களுடைய சரளமான எழுத்துநடையில் நீங்கள் எது பதிவிட்டாலும் படிக்கும் சுவாராஸ்யத்தை
    அதிகப்படுத்துகின்றது. அலுப்பு இல்லாமல் கொண்டு செல்லும் எழுத்துநடை உங்களிடம் இயல்பாகவே அமைந்திருக்கிறது.

  16. Thanks RAGHAVENDRA thanked for this post
    Likes Russellmai, RAGHAVENDRA liked this post
  17. #940
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ஆதவன் ரவி
    இருமலர்களின் மேல் தாங்கள் கொண்டுள்ள மோகம் எங்களை பரவசப்படுத்துகின்றது.
    நன்று
    தொடருங்கள்...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •