Page 370 of 401 FirstFirst ... 270320360368369370371372380 ... LastLast
Results 3,691 to 3,700 of 4010

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 17

  1. #3691
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    Neelavanam photo album lovely like littlefower thanks muthiyan ammu

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3692
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    இன்று மாலை நமது இனிய நண்பர்கள் திரு சந்திரசேகர் மதுரை, திரு முரளி ஸ்ரீநிவாஸ், திரு சுப்ரமணியம், திரு சுந்தர் ஆகியோருடன் அடியேனும் சேர்ந்து நமது அன்பிற்கும் பாசத்திற்குமுரிய இயக்குநர் திரு சி.வி.ஆர். அவர்களை சந்தித்தோம். சிவகாமியின் செல்வன் எண்ணியல் முறையில் நவீனமயமாக்கப்பட்டு விரைவில் வெளியிடப்பட உள்ள நிலையில் அவருடைய ஆசியைப் பெறவேண்டி நாங்கள் சென்ற போது விருந்தோம்பலின் உச்சத்தில் இருக்கும் அவருடைய உயர்ந்த உள்ளம் எங்களை நெகிழ வைத்தது. நடிகர் திலகத்தின் மேல் அவர் கொண்டிருக்கும் பக்தியைக் கண்டு அளவற்ற மகிழ்ச்சியும் மரியாதையும் ஏற்பட்டது. சிவகாமியின் செல்வன் உள்பட நடிகர் திலகத்துடன் அவர் பணியாற்றிய நாட்களை பசுமையான நினைவுகளுடன் அவர் எங்களுடன் பகிர்ந்து கொண்டார்.
    கிளம்ப மனமில்லாமல் அங்கிருந்து புறப்பட்டோம். ஆனால் மனசு நிறைந்திருந்தது.



    திரு சந்திரசேகர், சிவகாமியின் செல்வன் ஃபோட்டோ கார்டினை சிவிஆரிடம் காட்டி அதனுடைய வடிவமைப்பைப் பற்றிச் சொல்லியபோது...



    திரு சி.வி.ராஜேந்திரன் அவர்களுடன் ...

    இடமிருந்து வலம் - திரு சுப்ரமணியம், திரு முரளி ஸ்ரீநிவாஸ், திரு ராகவேந்திரன், திரு சி.வி.ஆர். அவர்கள், திரு சந்திரசேகர்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. Thanks eehaiupehazij, Russellmai thanked for this post
  5. #3693
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    புதுமை இயக்குனர் ஸ்ரீதர் அவர்களின் பாசறையில் பட்டை தீட்டப்பட்ட இளமை இயக்குனர் சிவிஆர் அவர்களுடன் நண்பர்களின் மலர்ந்த முகங்களைக் காணும்போது மனதில் மலரும் சிவிஆர் கால நினைவுகள் .....!
    For the ensuing World Water day, Forest Day and Environmental day celebrations this month!!

    'உள்ளேன் ஐயா'வாக நடிகர்திலகம் பசுமை பாய் விரிக்கும் இயற்கை வனப்பு கிறங்கடிக்கும் சுற்றுச் சூழல் தின கொண்டாட்டங்களுக்கு முன்னோடியாக இளமைத் துடிப்பு மிக்க நடையில் மனதுக்கு இதமாக வலம் வருவது மனத் துள்ளலை தூண்டுகிறது !

    For Environmental Day!



    மனதை 'அள்ளேன் ஐயா' என்று காந்தமாக ஈர்க்கும் நடிகர் திலகத்தின் இளமை வனப்பை வடிவமைத்திட்டமைக்கு சிவிஆர் அவர்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள் !

    For World Water Day!



    காதலில் விழுந்து காதலியைக் கவர எத்தனிக்கும்போது நண்பனே நீ கொஞ்சம் 'தள்ளேன் ஐயா' என்று உதாரடிக்கும்
    நடிகர்திலகம் !

    For Forest Day!



    இதயத்தைக் 'கிள்ளேன் ஐயா' என்று ரசிகர்கள் வேண்டுகோளை ஏற்று நடிகர்திலகம் சொல்லி அடித்த கில்லி சிவிஆர் இயக்கத்தில் வெளிவந்த
    கலாட்டா கல்யாணம்! சிவிஆர் நடிகர்திலகம் Combo என்றும் கண்களுக்கும் செவிகளுக்கும் உணர்வுகளுக்கும் இளமை விருந்தே!

    For next Valentine's Day!

    Last edited by sivajisenthil; 11th March 2016 at 07:05 PM.

  6. Thanks Russellmai thanked for this post
    Likes Harrietlgy, Russellmai liked this post
  7. #3694
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள்தலைவரின் மகத்தான வெறறிக் காவியம் வசந்தமாளிகை மதுரை சென்ட்ரலில் 11.03.2016 வெள்ளி முதல் தினசரி 4 காட்சிகள். வெற்றிநடை போட வருகிறார் அழகாபுரி ஜமீன்.
    மதுரையில் சித்திரையில்
    வைகை ஆற்றில் இறங்குவார்
    கள்ளழகர்,
    மாசியில் சென்ட்ரல்
    தியேட்டரில் இறங்குகிறார்
    கலை அழகர்.




    சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

  8. Thanks Russellmai thanked for this post
    Likes Harrietlgy, Russellmai liked this post
  9. #3695
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மதுரை சென்ட்ரல் தியேட்டரில் மறுவெளியீடு காணும் வசூல் சக்கரவர்த்தி, மக்கள்தலைவரின் வசந்தமாளிகை திரைக்காவியத்திற்கு அகில இந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்......



    சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

  10. Likes Harrietlgy liked this post
  11. #3696
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மதுரை சென்ட்ரல் தியேட்டரில் மறுவெளியீடு காணும் வசூல் சக்கரவர்த்தி, மக்கள்தலைவரின் வசந்தமாளிகை திரைக்காவியத்திற்கு அகில இந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்......



    சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

  12. Thanks Russellmai thanked for this post
    Likes Harrietlgy, Russellmai liked this post
  13. #3697
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மதுரை நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப் பேரவை சார்பில் வசந்தமாளிகை திரைக் காவியித்திற்கு சென்ட்ரல் தியேட்டரில் இதுவரை யாரும் ஒட்டாத பிரமாண்ட போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இதனை ஏற்பாடு செய்தவர் பாண்டி அவர்கள்.



    சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

  14. Thanks Russellmai thanked for this post
    Likes Harrietlgy liked this post
  15. #3698
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள்தலைவரின் வசந்தமாளிகை சாதனைகள் குறித்த தகவல்களை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் தியேட்டரில் வைக்கப்பட்டுள்ள பேனர்....



    சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

  16. Likes Harrietlgy liked this post
  17. #3699
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழ் சினிமாவில் அதிஅற்புத
    நடிப்பசைவுகளைத் துவக்கி
    வைத்தவர் நம் நடிகர் திலகமே.

    தமிழ் சினிமாவில தன்
    நடிப்பால் ஒரு ரசனைப் புரட்சியைத் துவக்கி வைத்தவர்
    நம் நடிகர் திலகமே.

    மனிதனை ரசிகனாக்கி, ரசிகனை மேம்படுத்தி மீண்டும்
    பண்பட்ட மனிதனாக்கும்
    வியப்பைத் துவக்கி வைத்தவர்
    நம் நடிகர் திலகமே.

    இன்னமும் கூட சிறப்பான
    விஷயங்களைத் துவக்கி
    வைப்பவராகத்தான்
    இருக்கிறார்.. நம் நடிகர் திலகம்.

    ஆம்.

    கரூர் மாவட்டம், கரூர் நகரில்
    சில காலமாக மூடிக் கிடந்த "லட்சுமி ராம்" என்கிற
    திரையரங்கம் நிறைய வசதிகளுடன் சிறப்பாகப்
    புதுப்பிக்கப்பட்டு, புதுப்பொலிவுடன் நாளை
    11.03.2016 - வெள்ளி முதல்
    துவங்கவிருக்கிறது.

    "லட்சுமி ராம்" திரையரங்கம்,
    முதல் திரைப்படமாக நாளை
    திரையிட இருக்கிற படம்:
    கடந்த 2015 ஆகஸ்ட் மாதத்தில்
    புதிய தொழில் நுட்ப அழகோடு
    வந்து, நம்மைப் பேரின்பத்தில்
    ஆழ்த்திய சிங்கத் தமிழனின்
    "வீரபாண்டிய கட்டபொம்மன்".

    காலம் கொண்டாடும் கலை
    மன்னவராம் நம் நடிகர் திலகத்தின் காவியத்தோடு
    நாளை துவங்கவிருக்கிற
    கரூர்- "லட்சுமி ராம்"
    திரையரங்கத்தாருக்கு நமது
    நன்றிகளையும், நல்வாழ்த்துகளையும் சொல்வோம்.

    அகில இந்திய சிவாஜி மன்றத்தின் கரூர் மாவட்டத்
    தலைவர் திரு.பாபு அவர்களிடமிருந்து இந்த
    இனிப்புச் செய்தியைப் பெற்று
    நமக்குத் தந்து மகிழ்வித்திருக்கிற அகில இந்திய சிவாஜி மன்றத்தின்
    சிறப்பு அழைப்பாளர் திருச்சி.
    திரு.அண்ணாதுரை அவர்களுக்கு நமது நெகிழ்வான
    நன்றிகளைச் சொல்வோம்.

    என்றும் சிவாஜி புகழ் இருக்கும்.
    எங்கும் நமது கொடி பறக்கும்

    தகவல் ஆதவன் ரவி.



    சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

  18. Thanks Russellmai thanked for this post
    Likes Harrietlgy, Russellmai liked this post
  19. #3700
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நன்றி சுந்தர்ராஜன் சார்.

    "கரூர் நகரில், பராமரிப்புப்
    பணிகளுக்காக இரண்டு மாத
    காலமாக இயங்காதிருந்த
    லட்சுமி ராம் என்கிற திரையரங்கம்" என்று திருத்திக்
    கொள்ள வேண்டுகிறேன்.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •