Page 295 of 401 FirstFirst ... 195245285293294295296297305345395 ... LastLast
Results 2,941 to 2,950 of 4010

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 17

  1. #2941
    Junior Member Junior Hubber
    Join Date
    Sep 2011
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2942
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Many more accolades and chocolate returns of this Happy Birthday Murali Sir!

    On (Y)our Majesty's (NT's) Sacred Service!!


    ஆனந்த (வாழ்த்து) மழையில் நனைந்து சந்தோஷ வெள்ளத்தில் படகேறி மகிழ்ச்சிக் கடலில் நீந்தித் திளைத்திட மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்தலைகள்!


    with regards, on behalf of NT/GG threads,

    Senthil







    Last edited by sivajisenthil; 1st February 2016 at 08:37 AM.

  4. Likes Russellmai liked this post
  5. #2943
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    முரளி சார்
    இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

  6. #2944
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    Happy birth day wishes to Mr. Murali sir.

  7. #2945
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    From writter Mr. Sudhangan's face book.

    செலுலாய்ட் சோழன் – 111
    திருவிளையாடற் புராணத்தின் மூல கதையில் பார்த்தால் தன் பாட்டில் பிழை என்று சொன்ன நக்கீரனின் சிவபெருமான் நெற்றிக்கண்ணால் எரித்து பிறகு அவனுக்கு அருள் செய்வார் என்று முடித்திருப்பார்கள்!
    அதை திரைக்கதையாக்கி சிவனையும் நக்கீரனை செண்பக பாண்டியன் சபையில் வாதப் பிரதிவாதங்களோடு மோத விட்டு பிறகு எரிந்த காட்சிகளை நாம் திரைப்படத்தில் பார்த்திருப்போம்!
    இந்தப் படம் வந்த போது சிவன் என்றால் இப்படித்தான் இருப்பார் என்கிற எண்ணத்தை பல பக்தர்கள் மனதில் ஏற்படுத்திய படம் இது!
    அடுத்து இந்த படத்தில் ஏ..பி.நாகராஜன் எடுத்துக் கொண்டது ` விறகு விற்றல்’ படலம் !
    மூலக்கதையில் வரகுண பாண்டியனின் சபைக்கு ஏமநாதன் என்கிற பாடகன் வந்தான்!
    அவன் மன்னன் முன் பாடி பல பரிசுகளைப் பெற்றான்!
    இப்போது இந்த் பாண்டிய நாட்டில் என்னை மிஞ்சக்கூடியவர்கள் யாரேனும் உண்டா ? என்று சவால் விட ஆரம்பித்தான்.
    விறகு விற்க வந்த சிவன் வீதி வீதியாக கூவி விறகை விற்று விட்டு ஒரு வீட்டுத் திண்ணையில் வந்து படுத்துக்கொண்டே பாடுவார்.
    அப்போது இந்த இசையைக் கேட்டு வீட்டிற்குள்ளிருந்து வெளியே வந்த ஏமநாதன் அந்த இசையைக் கேட்டு மெய் சிலிர்த்து ` நீ யாரப்பா ?’ என்பான்!
    நான் பாணபத்திரரின் சீடன் என்பான்!
    ஒரு சீடனுக்கே இந்தப் புலமை என்றால் பாணபத்திரரின் திறன் எத்தைகையதாக இருக்கும் என்று ஏமநாதன் யோசிக்க ஆரம்பிப்பான்!
    `அப்பனே! நீ இப்போது பாடிய அதே இசையை மீண்டும் ஒரு முறை பாடு’ என்றான்!
    இனிய ராகங்களில் ஒன்றான சதாரிப் பண்ணை அசை, வீதிப் போக்கு, வண்ணம், திறம் போன்றவற்றால் அனைவரும் விரும்பும் நல்லிசையை எழுப்பினார்!
    யாழின் இசையும், குரல் இனிமையும் ஒன்று கூடின!
    குற்றமற்ற வகையில் பண் எழுந்து சிறந்து விளங்கியது.
    பாடலின் பல்வகை குணங்களும் மேலோங்கின!
    இன்னிசை கூடிய நல்லிசை தேவகந்தாரி ராகம் எங்கும் பரவியது !
    இதைக் கேட்ட ஏமநாதன் பயந்து ஒடினான் என்பது தான் திருவிளையாடற் புராணத்தின் மூல கதை!
    அதை சிவாஜிக்கு ஏற்ற மாதிரி ஜால வித்தையை மூவர் புரிந்து காட்டினார்கள்.
    ஒருவர் ஏ.பி.நாகராஜன்! இன்னொருவர் கே.வி. மகாதேவன்! மூன்றாமவர் கவியரசு கண்ணதாசன்!
    கவியரசு கண்ணதாசனின் புலமை என்பது உலகமெங்குமுள்ள தமிழர்களுக்கே தெரியும்!
    ஆனால் கே.வி. மகாதேவன் என்பவர் சினிமாவில் அதிக பாடப்படாத ஒரு கதாநாயகன்!
    ஆங்கிலத்தில் UNSUNG HERO ! என்பார்கள்!
    இந்த இடத்தில் கொஞ்சம் திரையிசைத் திலகம் கே.வி. மகாதேவனைப் பற்றி சொல்ல வேண்டும்!
    அவரது திறனை அவருடன் 50 ஆண்டுகள் கூடவே இருந்த புகழேந்தி என்னிடம் ஒரு நாள் மாலை வேளையில் அவரது நுங்கம்பாக்கம் லேக் வீயூ பகுதி வீட்டில் பேசிக்கொண்டிருக்கும் போது சொன்னார்!
    கே.வி. மகாதேவன் மெட்டையோ ராகத்தை தீர்மானித்துவிட்டு இசை அமைப்பை தொடங்க மாட்டார்.
    பாடல் வரிகளின் பாவம் அவருக்கு மிகவும் முக்கியம்!
    அதற்கேற்ப மெட்டமைத்துக்கொண்டு, பல்லவிக்கான மெட்டில் அவர்க்கு திருப்தியான பிறகு தான், அது எந்த ராகத்தில் இருக்க வேண்டுமென்பதை சிந்திப்பார்!
    தாளமும் அப்படித்தான்!
    தாளத்திற்குள் வராத வரிகள் பாடலில் வந்துவிட்டால், பாடலாசிரியரோடு மல்லுக்கு நிற்க மாட்டார்.
    அந்த வரிகளை விருத்தமாகப் பாடிவிட்டு, அடுத்த வரிக்கோ, பல்லவிக்கோ சென்று விடுவார்!
    அது பாடலுக்கு சுவையைக் கூட்டும்!
    பாடல்கள் குறிப்பாக பல்லவிகள், ரசிகர்களின் செவிகளில் ஜில்லென்று பதிந்து, அவர்கள் இதயத்தை எட்ட வேண்டுமென்று நினைப்பார்.
    முடிந்தவரையில் மத்யம ஸ்ருதியில், பாடுவதற்கு சுகமான முறையிலே பாடல்களை அமைப்பார்.
    இந்தப் பாணி தான் கே.வி. மகாதேவனுடையது!
    இதை மனதில் வைத்துக்கொண்டு இப்போது ` திருவிளையாடல்’ படத்தின் பாடல்களுக்குள் வருவோம்!
    இந்தப் படத்தில் கே.பி. சுந்தராம்பாள், டி.ஆர். மகாலிங்கம் பாலமுரளி கிருஷ்ணா, சீர்காழி, பி.பி.எஸ் சுசீலா ஜானகி என்று ஒரு பெரிய பாடகர்களின் அணிவகுப்பே படத்தில் இருந்தது!
    அதனால் தான் இந்தப் படப்பாடல்கள் ஐந்து கோடி தமிழர்களின் பத்து கோடி காதுகளில் இன்றளவும் குடியிருந்து கொண்டிருக்கிறது!
    `கந்தன் கருணை படத்திற்காக தேசிய விருது வாங்கிய இசையமைப்பாளர் அவர்!
    சிவனை விறகு விற்பவனாக அறிமுகம் செய்யும் போது, அது ஒரு பாமர டப்பாங்குத்து பாடல்தான்!
    `பாத்தா பசுமரம் படுத்துவீட்ட நெடுமரம்
    கேட்டா விறகுக்காகுமா ஞானத் தங்கமே!
    தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா ஞானத் தங்கமே!
    இந்தப் பாட்டின் முதல் வரிகளே ரசிகர்களை கூத்தாட வைக்கும்!
    இங்கே இது டப்பாங்குத்து பாட்டுத்தான்!
    ஒரு விறகு வெட்டி பாடும் பாடல் தான்!
    ஆனால் அது விறகு வெட்டியாக வந்திருக்கும் சிவன் பாடுவது!
    அங்கே தான் கண்ணதாசன் பாமரப் பாட்டிலே பெரிய தத்துவத்தை நுழைத்திருப்பார்!
    `பொன்னும் பொருளும் மூட்டை கட்டி போட்டு வெச்சாரு!
    இவரு போன வருஷம் மழையை நம்பி விதை விதைச்சாரு!
    ஏட்டு கணக்கை மாத்தி மாத்தி எழுதி வெச்சாரு!
    ஈசன் போட்ட கணக்கு மாறவில்லை போய் விழுந்தாரு!
    ஈசன் என்று சொல்லும்போது விறகு வெட்டியான சிவன் தன்னையே காட்டிக் கொள்வார்!
    இதில் சிவாஜியின் ஆட்டம் தியேட்டரில் விசில்களை பறக்க விட்டுக்கொண்டிருக்கும்!
    இந்த பாமரப் பாட்டு வருவதற்கு முன் ஏற்கெனவே ஏமநாதரான டி.எஸ்.பாலையாவிற்காக பாலமுரளியின் குரல் ஒலித்திருக்கும்!
    அந்த ராகமாலிகை பாடலுக்காகவே அவரை எப்படி வேண்டுமானலும் புகழலாம்!
    அதுதான் கே.வி.எம்.
    அதற்கடுத்து எட்டுக் கட்டை சுருதியில் டி.ஆர் மகாலிங்கத்தின் ` இசைத் தமிழ் நீ செய்த அருஞ்சாதனை’ முடிந்திருக்கும் !
    அதற்குப் பிறகுதான் இந்த ` பாத்தா பசுமரம் பாட்டு’
    பிறகுதான் அந்த காலத்தில் அழிக்க முடியாத `பாட்டும் நானே! பாவமும் நானே’ பாடல்!
    மூல திருவிளையாடற் புராணத்தில் சதாரிப்பண்ணை அசை,வீதிப்போக்கு, வண்ணம், திறம் என்று தேவகந்தாரியில் சிவன் பாடியதாகப் படித்தோம்!
    ஆனால் இங்கே தான் இயக்குனர் ஒரு சிவாஜிக்கு ஐந்து சிவாஜியை பக்க வாத்யக்காரர்களாக்கி, அந்தப் பாடலை கெளரிமனோகரி ராகத்தில் கனகச்சிதமாக இசையமைத்திருப்பார் கே.வி.மகாதேவன்!
    `திருவிளையாடல்’ படம் என்பதி சிவாஜி ரசிகர்களுக்கு ஒரு அமோக விருந்து!
    அதுவும் தமிழ் இசை விருந்து!
    இந்த படத்தில் பாலையாவின் பாடல் காட்சியின் படப்பிடிப்பின் போது அந்த படப்பிடிப்பை காண சிவாஜியே நேரில் போனாராம் !
    அடுத்து ….
    (தொடரும்)

    12642595_10208106733283367_4324562563530946985_n.jpg
    Last edited by Barani; 31st January 2016 at 11:15 PM.

  8. Thanks Russellmai thanked for this post
    Likes Russellmai liked this post
  9. #2946
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    முரளி சார்!

    இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

    நடிகர் திலகமே தெய்வம்

  10. Likes Russellmai liked this post
  11. #2947
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    முரளி சார்!

    இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  12. #2948
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    எங்கள் மண்ணின் மைந்தர் தகவல் திலகம் முரளி சார் அவர்களுக்கு பிறந்த வாழ்த்துக்கள்.

    நேற்று முழுவதும் தங்கைக்காக படத்திற்காக தியேட்டரில் இருந்ததால், கம்ப்யூட்டர் பக்கமே வரவில்லை. எனவே
    தாமதத்திற்கு மன்னிக்கவும் முரளி சார்.

    தங்களின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த தகவலைப் பகிர்ந்து கொண்டு மக்கள்தலைவரின் ரசிகன் என்பதில் கர்வம் கொள்கிறேன்.
    பிறந்தநாள் இலவச இணைப்பாக தங்கைக்காக தியேட்டர் கலக்கல் செய்தியை மாலையில் பதிவிடுகிறேன். ( இன்று மாலை தான் மின்சாரம் வரும் )



    எவரையும் அளவுக்கு அதிகமாக நேசிக்காதீர்கள்...
    ஏனெனில் அவர்கள் அலட்சியம் செய்யும் அந்த நேரத்தின் வலி...
    உயிர் பிரியும் நேரத்தின் வலியை விட கொடூரமானது...!

    # ஆம்... காங்கிரஸை தன் உயிருக்கும் மேலாக நேசித்த சிவாஜிக்கு ஏற்பட்ட வலியைப் போல...!

    சிவாஜி அரசியலில் வாங்கிய அடி , அவரை விட .... அவரது ரசிகர்களுக்குத்தான் ரொம்பவே வலித்தது...!
    எனக்கும் கூட...! மறந்து விட்ட அன்றைய நினைவுகளை , இன்று பழைய ஜூனியர் விகடன் மூலம் தெரிந்து கொண்டேன்..!

    அன்றைய காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி , சில விஷயங்களில் சிவாஜியை கொஞ்சம் கூட மதிக்கவில்லையாம்..! இந்த நம்பிக்கைத் துரோகத்தால்தான் சிவாஜி , காங்கிரஸை விட்டு விலகினாராம்..!

    இனி ... ஜூ.வி.யின் அன்றைய நேரடி வர்ணனை :
    [ 10.02.1988]

    "கடைசியில், சிம்மக் குரலோன் புதுக் கட்சி தொடங்கியேவிட்டார்! பிப்ரவரி மாதம் 10-ம் தேதி சென்னை - தி.நகர் போக் ரோட்டில் உள்ள சிவாஜியின் வீட்டின் முன் ஆயிரக்கணக்கான 'பிள்ளை’கள் கூடினார்கள். தொடக்க நாளன்று சிவாஜி மிகவும் டென்ஷனாகவே காணப்பட்டார்.
    மெயின் ஹாலில் சிவாஜி தன் மகன் ராம்குமாருடன் அமர்ந்திருந்தார். சிவாஜி மன்ற நிர்வாகிகள் மாவட்ட வாரியாகத் தங்கள் படைகளுடன் வந்து, 'அண்ணன் சிவாஜி வாழ்க...’ ....'தமிழக முதல்வர் சிவாஜி வாழ்க...’ என்று கோஷம் எழுப்பி மாலை போட்டுவிட்டுச் சென்றார்கள்.
    ஒரு ரசிகர் வெகு ஆவேசமாய் வந்து தன் கையை பிளேடால் கீறி ரத்தம் தொட்டு , ''பாரதப் பிரதமர் டாக்டர் சிவாஜி...'' என்று உணர்ச்சிகரமாய்க் குரல் கொடுக்க... ராம்குமார், தளபதி சண்முகம், ராஜசேகரன் உட்பட எல்லோருமே, ''வாழ்க...'' என்றனர்.
    தொடர்ந்து அந்த ரசிகர், ''துரோகி ராஜீவ்காந்தி...'' என்று கத்த, சிவாஜி மிகச் சத்தமாய்... ''வாழ்க...'' என்றார்.(பலே!)

    தொடர்ந்து, ''எல்லாத்துக்கும் ஒண்ணு சொல்றேன்... நம் எண்ணங்கள், செயல்கள் எல்லாம் ரொம்ப உயர்வா இருக்கணும். படிச்சவங்களும் பாராட்டற மாதிரி இருக்கணும்..... யாரையும் 'ஒழிக’ கோஷம் போட்டுத் திட்டாதீங்கப்பா... அதுவும் மறைந்த அந்த அன்னையோட பிள்ளையை - என்ன இருந்தாலும் ரொம்ப பெரிய பதவியிலே இருக்கறவரை , அப்படி சொல்லக் கூடாது.....அரசியல்லே நாமளாவது நாகரிகத்தோட, நாணயத்தோட , நல்லோரோட கைகோத்து நடப்போம்...'' என்றார் கம்பீரமாக!”

    # சிவாஜி சொன்னதைப் படித்தபோது ஒன்று புரிந்தது... அவர் அரசியலில் பிரகாசிக்காமல் இருந்திருக்கலாம்... ஆனால் சும்மாவா சொன்னாங்க அவ்வையார் ..?

    “கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே ; சங்கு
    சுட்டாலும் வெண்மை தரும்”

    முகநுாலில் நண்பர் ஒருவர் பகிர்ந்தது.

    சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

  13. Likes Harrietlgy, Russellmai liked this post
  14. #2949
    Member Regular Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    35
    Post Thanks / Like
    முரளி சார்! மனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!

  15. #2950
    Senior Member Devoted Hubber abkhlabhi's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    Bangalore
    Posts
    400
    Post Thanks / Like
    Dear Murali,

    WISH YOU A HAPPY BIRTHDAY.


    Dear Vasu,

    nice to see you here after a long time. Hope you and your family and all at your place are over come now (after Nov and Dec Rains)

    a.balakrishnan

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •