Page 162 of 401 FirstFirst ... 62112152160161162163164172212262 ... LastLast
Results 1,611 to 1,620 of 4010

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 17

  1. #1611
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    Another rare image courtesy: a diehard fan of NT. Thank you Sir.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Thanks Russellmai thanked for this post
    Likes KCSHEKAR, Harrietlgy, Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1612
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Delete

  5. #1613
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like








  6. Thanks Russellmai, RAGHAVENDRA thanked for this post
  7. #1614
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  8. Thanks Russellmai, RAGHAVENDRA thanked for this post
    Likes Russellmai, RAGHAVENDRA liked this post
  9. #1615
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  10. Thanks Russellmai, RAGHAVENDRA thanked for this post
  11. #1616
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  12. Thanks Russellmai thanked for this post
    Likes KCSHEKAR, Russellmai, Harrietlgy liked this post
  13. #1617
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  14. Thanks Russellmai, RAGHAVENDRA thanked for this post
    Likes Russellmai, Harrietlgy, RAGHAVENDRA liked this post
  15. #1618
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  16. Thanks Russellmai thanked for this post
    Likes Russellmai, Harrietlgy, RAGHAVENDRA liked this post
  17. #1619
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    தரிசனம்-2.
    --------------
    தாவணிக் கனவுகள்.
    ---------------------
    தொடர்கிறது...
    ----------------

    தப்பித்தல்..

    மோசமான விஷயம்.

    இயலாமையின் பொருட்டு, சின்னச் சின்னக் கஷ்டங்களில்
    இருந்து தப்பித்துக் கொண்டு
    சந்தோஷிப்போருக்கெல்லாம்,
    வாழ்க்கை ஒரு பெரிய வலையோடு சுருட்டிப் பிடிக்கக்
    காத்திருப்பது புரிவதில்லை.

    ஆனால், சாமர்த்தியசாலிகளுக்கு அந்தத்
    துன்பமில்லை. அவர்கள்
    அதிலும் தப்பித்துக் கொள்கிறார்கள்.

    சுப்ரமணியம் சாமர்த்தியசாலி.

    கேப்டனின் நியாயமான கேள்விகளிலிருந்து தன்னை
    புத்திசாலித்தனமாய் விடுவித்துக் கொண்ட சுப்ரமணியம் தனது வீட்டுக்குள்
    போய் விட்டான். வாளியில்
    தண்ணீர் நிரப்பிக் கொண்டு
    சுப்ரமணியம் வீட்டு வாசலைக்
    கடக்கும் கேப்டனுக்கு மனசு
    கேட்கவில்லை.

    வாளியைக் கீழே வைத்து விட்டு, சுப்ரமணியத்தின்
    தங்கைகள் வரிசையாக அமர்ந்திருக்கும் திண்ணையிலேயே திண்ணமாக அமர்ந்து கொள்கிறார்.

    " எக்கச்சக்கமா பேசிப்புட்டான்.
    இன்னிக்கு இவன்கிட்ட இருந்து
    வாடகை வாங்காம இந்த
    இடத்தை விட்டு நகர்றதில்ல."

    வீட்டின் உட்புறம் நோக்கி
    எட்டிப் பார்த்துக் கூவுகிறார்.
    "என்னடா.. பீரோவைத் தெறக்க
    முடியலயா? பணம் கைக்கு
    வர மாட்டேங்குதா?"

    சுப்ரமணியத்திடம் பணமில்லை. அவன் தன்னிடமிருந்து தப்பிக்கவே
    வீட்டுக்குள் ஓடியிருக்கிறான்
    என்பதைப் புரிந்து கொண்ட
    கேப்டனின் கிண்டல்.

    ஆனால், சுப்ரமணியம் தன்
    வீட்டின் பின்புறவாசல் வழியாக
    சுற்றிக் கொண்டு, அருகிலுள்ள
    கேப்டனின் சைக்கிள் கடைக்கே
    வந்து விடுகிறான்.

    அங்கே, பங்க்சர் பார்க்க சைக்கிள் விட்ட இளைஞன்,
    செய்தித்தாள் படித்துக் கொண்டு, தண்ணீர் பிடிக்கப்
    போன கேப்டனின் வருகைக்குக் காத்திருக்கிறான்.

    சுப்ரமணியம், கேப்டனின்
    கல்லாப்பெட்டி வைத்திருக்கிற
    திண்டில், கல்லாப்பெட்டியின்
    அருகிலேயே உட்கார்ந்து கொண்டு அந்த இளைஞனிடம்
    பேச்சுக் கொடுக்கிறான்.

    "என்னய்யா ரங்கராஜு..
    பஞ்சருக்கு வந்த சைக்கிள்
    உன்னோடதா?"

    "ஆமாங்க."

    "ஏய்யா..உனக்கு வேறு கடையே கிடைக்கலயா?"

    "இல்ல... மிலிட்டரிக்காரராச்சே.. தொழில் சுத்தமா இருக்குமேன்னு நெனைச்சேன்"

    "தொழில் சுத்தந்தான்யா. ஆள்
    சுத்தம் வேணாம்? அங்க பாரு.
    வேலைய விட்டுப்புட்டு அங்கே
    ஒக்காந்து நியாயம் பேசிட்டிருக்காரு. போய்க்
    கூப்புடுய்யா."

    அந்த ரங்கராஜ் எட்டிப் பார்த்து
    கேப்டனை அழைக்கிறான்.
    "ஏங்க.. வேலைக்குப் போகணும்னு சொன்னேன்ல.
    அங்கே போய்
    ஒக்காந்துட்டீங்க."

    கேப்டன் அமைதியாகப் பதில்
    கொடுக்கிறார்.

    "உன் அவசரம் எனக்குப்
    புரியுதப்பா. இங்க ஒரு கௌரவப் பிரச்சினை. ஒரு
    பத்து நிமிஷம் பொறு.
    வர்றேன்."

    அந்த ரங்கராஜ், சுப்ரமணியத்தைப் பார்த்துச்
    சொல்கிறான். "பத்து நிமிஷத்துல வர்றேங்கிறாரு."

    "யோவ்.. இப்படியெல்லாம்
    வெத்தல பாக்கு வச்சுக்
    கூப்பிட்டா அந்தாளு வரமாட்டான்யா. சும்மா 'கசமுசா'ன்னு நாலு கெட்ட
    வார்த்தைல திட்டுய்யா.
    அப்பதான் வருவாரு."

    -சுப்ரமணி, ரங்கராஜைத் தூண்டி
    விடுகிறான்.

    கேப்டன் எனும் அரிவாளைப்
    பற்றி அறியாத ரங்கராஜ் எனும்
    பலியாடு, தேவையில்லாமல்
    சிலுப்புகிறது.

    "யோவ்.. மிலிட்டரி. அங்க
    என்னய்யா பொம்பளைப்
    பிள்ளைங்களோட வெட்டிப்
    பேச்சு? நீ இப்ப வரலே.. கெட்ட வார்த்தைல திட்டிருவேன்."

    பொறுமை காத்த அரிவாள்,
    இப்போது கோபத்தில் சாணை
    பிடித்துக் கொள்கிறது.

    "ஒனக்குப் பத்து நிமிஷம் டைம்
    தர்றேன். அதுக்குள்ள ஒன்ற
    சைக்கிளை எடுத்துட்டு ஓடிடு.
    இல்லன்னா உன் கை,காலெல்லாம் இடம் மாறிடும்."

    கேப்டனின் கோப எச்சரிக்கை
    கேட்டு வெலவெலத்துப் போகும் ரங்கராஜ், சுப்ரமணியத்தைப் பார்த்துப்
    பயத்துடன் சொல்கிறான்..
    "என்னங்க.. கையக் காலை
    வாங்குவேங்குறாரு?"

    "அப்படித்தாய்யா சொல்லுவாரு.." என்று மேலும்
    தூண்டி விடும் விதமாய்
    சுப்ரமணி சொல்லிக்
    கொண்டிருக்கையில்,
    சுப்ரமணி அங்கே தன் கடையில் இருப்பதைப் புரிந்து
    கொள்கிற கேப்டன், "அங்க
    யாரு உனக்குச் சொல்லிக்
    குடுத்திருக்கா. யார் பேச்சைக்
    கேட்டு நீ இப்படிப் பேசிக்கிட்டிருக்கே எல்லாம்
    எனக்குத் தெரியும். அவன்கிட்ட
    சொல்லு. அவன் இப்ப இங்க
    வந்து என் கால்ல விழுந்து மன்னிப்புக் கேக்கணும்."

    சுப்ரமணியம் மெல்ல தயக்க
    நடையிட்டு வருகிறான்.
    தன்னைத் தாண்டி வீட்டுக்குள் போக யத்தனிக்கும்
    சுப்ரமணியத்தைத் தடுக்கிறார்..
    கேப்டன்.

    "டேய்.. நில்லுடா. எங்கே போறே?"

    "ஆங்.."

    "என்னடா ஆங்.. ஆக்ட் பண்றியா என்கிட்ட?"

    "என்ன வேணுங்கிறீங்க?"

    "வாடகைடா.வாடகை."

    "ஹவ் மச்?"

    "ஃபோர் மச். குடுக்க வேண்டியது இவ்வளவு இருக்கு.(கைகள் 'நிறைய'
    என்பதைக் காட்டுகின்றன.)
    நீ ஒரு மாச வாடகையைக்
    குடுடா போதும்."

    "நல்லா யோசிச்சுச் சொல்லுங்க.ஒரு மாச வாடகை போதுமா?"

    "நீ ஒரு மாச வாடகையைக்
    குடுடா. அப்புறம் இப்படிப்
    போறேன்."

    "இப்படிப் போறேன்" என்று
    சொல்லும் போது அவரது
    செய்கை, மிக இயல்பான,
    எளிய, பாமரர்களிடையே
    புழங்கும் செய்கை. ஒரு கையால் வாய் பொத்திக் கொண்டு, மறு கையால்
    பின்புறத்தை மறைத்துக்
    கொண்டு ஒரு அடிமை போல
    தன்னைக் காட்டிக் கொள்ளும்
    பாவனை. நான் பார்த்த
    சினிமாக்களில் இதுவரை
    கண்டிராத வித்தியாசமான,
    இயல்பான பாவனை.

    "எப்படிப் போறீங்க?"
    சுப்ரமணியம் கர்வமும்,
    கேலியுமாய்க் கேட்கிறான்.

    "இப்படிப் போறேன்".
    சுப்ரமணியம் பணம் தரப்
    போவதில்லை என்கிற கருத்தில் உறுதியாயிருக்கும்
    கேப்டன், திரும்பவும் அதே
    செய்கையைச் செய்து காட்டுகிறார்.. நகைச்சுவையாய்.

    வெகு கர்வமாய் முகத்தை
    வைத்துக் கொண்டு சுப்ரமணி,
    தன் குட்டித் தங்கையை
    அழைக்கிறான்.

    தன் சட்டைப் பையிலிருந்து
    சில ரூபாய்த் தாள்களை
    எடுத்து குட்டித் தங்கையிடம்
    கொடுத்து, 'இதை இந்தக்
    கிழவனிடம் கொடு" என்று
    அலட்சிய ஆங்கிலத்தில்
    சொல்லிப் போகிறான்.

    அதை வியப்புடன் வாங்கிக்
    கொள்ளும் கேப்டன்,
    சுப்ரமணியத்தின் தங்கைகளிடம் "ஏது..? எதுவும்
    நோட்டு, கீட்டு அடிக்கிறானா?"
    என்று சைகையிலேயே
    விசாரிக்கிறார்.

    மலைப்பு நீங்காத கேப்டனை
    மேலும் மலைக்க வைக்கிறாள்.. சுப்ரமணியத்தின் குட்டித்
    தங்கை.

    பணத்தைக் கொடுத்து விட்டுப்
    போனவள், திரும்ப வந்து
    " கேப்டன்.. எங்க அண்ணா
    'ரிசிப்ட்' குடுத்து விடச் சொன்னாரு" என்கிறாள்.

    உத்தரவுக்கு அடிபணிவதாய்
    ஒரு வேடிக்கைப் பாவனையுடன், அதே அடிமைச்
    செய்கையுடன் தன் சைக்கிள்
    கடை நோக்கி நடக்கிறார்..
    கேப்டன்.
    -----------------

    சுப்ரமணியம், கேப்டனிடம்
    தந்த வாடகைப் பணம்,
    கேப்டனின் சைக்கிள் கடை
    கல்லாப்பெட்டியிலிருந்து
    எடுத்ததுதான் என்று அவனே
    அவனது தங்கைகளிடம்
    தெரிவிக்கிறான்.

    விவரமறிந்து, கேப்டன் வீட்டைக் காலி பண்ணச்
    சொல்லப் போகிறார் என்று
    சுப்ரமணியத்தின் தங்கைகள்
    பயப்படுகிறார்கள்.
    ------------------

    "யோவ் மிலிட்டரியா? முதல்ல
    உன் வாய்க்குப் பஞ்சர் போடணும்."

    அதட்டிக் கொண்டிருக்கும்
    கேப்டனின் முன்னால்,
    அடங்கி, ஒடுங்கி, கைகட்டி,
    வாய் பொத்தி, பயந்து, நடுங்கி
    ரங்கராஜ் அமர்ந்திருக்கிறான்.

    "கன்னாபின்னா"வென்று
    நடிகர் திலகத்தை விமர்சிப்பவர்கள்.. அவரது
    ஒரு திரைப்படத்தைப்
    பார்த்தால்..

    பார்த்த பின், ஒன்றும் செய்ய
    முடியாமல்...

    இப்படித்தான் உட்கார்ந்திருப்பார்கள்.


    (... தொடரும் ...)
    Last edited by Aathavan Ravi; 12th December 2015 at 10:09 PM.

  18. Thanks Russellmai thanked for this post
  19. #1620
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  20. Likes KCSHEKAR, RAGHAVENDRA liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •