Page 145 of 401 FirstFirst ... 4595135143144145146147155195245 ... LastLast
Results 1,441 to 1,450 of 4010

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 17

  1. #1441
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    1500 க்கு வாழ்த்தெழுதிய
    ஈரம் காய்வதற்கு முன்பே
    2000 க்கு வாழ்த்தெழுத வைத்தீர்கள்.

    செந்தில்வேல் சார்...!

    அசராத உழைப்பு உங்களுடையது.

    அலுக்காத வாழ்த்து
    எங்களுடையது.

    நடிகர் திலகம் வாழும்
    மனசிலிருந்து...
    நல்வாழ்த்துகள்.

  2. Likes KCSHEKAR, Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1442
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. Likes Russellmai liked this post
  6. #1443
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மையம் திரியில் குறுகிய காலத்தில் இரண்டாயிரம் பதிவுகளைக் கடந்துள்ள சக்திவேல் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

    கோபு.

  7. #1444
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    தரிசனம்-2.
    -------------
    தாவணிக் கனவுகள்.
    ----------------------
    தொடர்கிறது...
    ----------------

    உடம்பை ஒரு துப்பாக்கி போல்
    நிமிர்த்திக் கொண்டு "ஜெய்ஹிந்த்" சொல்லி சல்யூட்
    செய்த பிற்பாடு, நிமிர்த்திய
    உடம்பைக் கொஞ்சம் கூட
    தளர்த்தாமல், "சர்ர்...ரரட்" என்று
    அரை வட்டமடித்துத் திரும்பும்
    அந்த ராணுவத் திரும்பல்...
    ஒரு நடிப்புக் கலைஞன், தன்னை முழுமையாகக்
    கலையின் வசம் ஒப்படைத்து
    விட்டதன் அற்புத உதாரணம்.
    ---------------
    கொடி வணக்கம் செய்து விட்டு
    கம்பீரம் மாறாமல் நடந்து
    சென்று, சைக்கிள் ஒன்றின்
    பழுது நீக்கும் பணியைத்
    துவக்குகிறார், கேப்டன் சிதம்பரம்.

    பாவாடை,தாவணி அணிந்த, சுப்ரமணியத்தின் மூன்றாம் தங்கை அங்கே வருகிறாள்.
    ஓரக் கண் கொண்டு அவளை
    முறைத்தபடியே கேப்டன்
    அவளிடம் கேட்கிறார்.. "டேய்..
    உன்னைத்தான்டா.. இதுதான்
    வேலைக்கு வர்ற நேரமா?"

    -வயது வந்த ஒரு பெண் பிள்ளையை "வாடா..போடா"
    என்று அழைக்கும் உரிமை
    தாய், தந்தையருக்கே உண்டு.

    கேப்டன் இவ்விதமாய் அந்தப்
    பெண்ணை அழைக்கிறார் என்றால்.. அந்தக் குடும்பத்தின்
    வளர்ச்சியில் அவர் காட்டும்
    அக்கறை நமக்குப் புரிகிறது.

    "அதான்.. ஒரு எட்டு வயசுப் பையனை வேலைக்கு வச்சிருந்தேன்னா.. இந்நேரம்
    'கரகர'ன்னு பம்பரமாச் சுத்திருப்பான். நாலஞ்சு
    பொட்டப் புள்ளங்க இருக்கிற
    குடும்பமாச்சே.. அந்த நாலு
    ரூவாக் கூலி உனக்குக் கிடைச்சா நல்லா இருக்குமேன்னு நினைச்சேன்
    பாரு.. என்னைச் சொல்லணும்.
    ஏன் இவ்வளவு லேட்? தூங்கிட்டு வரியா?"

    -"வசன உச்சரிப்பு" என்பதை
    ஆங்கிலத்தில் "Dialogue delivery " என்று சொல்கிறோம்.
    "Delivery"ஐ "பிரசவம்" எனும்
    பொருள்படப் பார்க்கையில்
    அது, நடிகர் திலகத்திற்கே வெகுவாகப் பொருந்துகிறது.
    அழகு சிதையாத, அம்சமான
    வார்த்தைக் குழந்தைகளைப் பிரசவித்த ஆண் தாய்- நடிகர் திலகம்.

    "இல்ல கேப்டன். எங்க அண்ணனுக்கு முதுகு வலின்னு சொல்லிச்சு. அதான்
    பிடிச்சு விட்டுட்டு வர்றேன்."

    இந்த இடத்தில், அந்தக் குடும்பத்தின் மீது உரிமையும்,
    அக்கறையும் கொண்ட பெரிய
    மனிதரைத்தான் நாம் பார்க்கிறோம்.. நடிகர் திலகத்தின் உருவத்தில்.

    "ஆங்.. துரை பெரிய கலெக்டரு. ராத்திரி பகலா
    வேலை பார்த்துக் களைச்சு
    வர்றாரு. அவருக்கு முதுகு
    புடிச்சு விட வேண்டியதுதான்.
    குடிகாரப் பய.. அப்பன் இல்லாத
    வீடாச்சே..? அவன் ஸ்தானத்துல இருந்து குடும்பத்தை கவனிப்பான்னு
    நெனைச்சேன். என்னிக்கு
    அவன் குடிக்க ஆரம்பிச்சானோ... அன்னிக்கே எனக்கும், அவனுக்கும் விட்டுப் போச்சு.
    அவன் பேச்சே எடுக்காதே.
    அவன் 'டாபிக்'கே வேணாம்."

    வசனம் என்பதை யார் வேண்டுமானாலும் எழுதி,
    பேசுவதை யார் வேண்டுமானாலும் பேசி விடலாம். ஆனால், சுப்ரமணியம் என்கிற இளைஞனின் மீது தனக்கு
    ஏற்பட்டிருக்கிற அவநம்பிக்கையைத் தெரியப்படுத்தும் சிதம்பரம்
    என்கிற பெரியவராகவே, அதைப் பேசுவது ஒரே ஒரு
    நடிகர் திலகத்தால் மட்டுமே
    முடியும்.

    'எனக்கும், அவனுக்கும் விட்டுப் போச்சு' என்று சொல்லும் போது, அவரது கைவிரல்கள் செய்யும் பாவனையை, எந்த வசனம்
    கொண்டு ஈடு செய்ய முடியும்?

    "ஆமா... ஒரு பத்துப் பதினைஞ்சு நாளைக்கு முன்னாடி, ஒரு சிமெண்ட்
    கம்பெனி முதலாளிகிட்ட
    நானே உங்கண்ணனைக்
    கூட்டிட்டுப் போனேன். ஒரு
    வாரம் கழிச்சு வந்து பாருன்னாரே.. உங்க அண்ணன்
    போனானா?"

    "போனாரு."

    "என்ன ஆச்சு?"

    "வேலை இல்லேன்னு சொல்லிட்டாங்க".

    "நான்.. மிலிட்டரிக்காரன்
    ரெகமண்டேஷன்னு உங்கண்ணன் சொன்னானா?"

    - அந்த "நான்" என்பதை கர்வமாக நடிகர் திலகம்
    பேசும் போதுதான் எத்தனை
    அழகு?

    "சொன்னாரு."

    "அதுக்கென்ன சொன்னாரு?"

    "அந்த மிலிட்டரிக்காரன் கிடக்கான். அவனுக்கு வேற
    வேலை இல்லன்னு சொன்னாரு."

    என்னவோ.. கசப்பு மருந்து
    குடித்த குழந்தையாட்டம்,
    இந்த இடத்தில் நடிகர் திலகம்
    முகம் போகிற போக்கைப்
    பார்க்க வேண்டுமே?

    ஒரு சின்னப் பெண்ணின் முன் தான் அவமானப்பட்டு விட்டதை கடுமையாக இல்லாமல், வேடிக்கையாக வெளிக்காட்ட வேண்டிய சவாலான உடல் மொழிகள். அவருக்குத் தெரியாத மொழியா? பின்னுகிறார்.

    கேப்டன், இதைத் திசை
    திருப்புவதற்காக அந்தப்
    பெண்ணைக் கண்டிக்கிறார்.

    "வேலைக்கு லேட்டா வர்றது.
    தொண தொணன்னு பேசிக்கிட்டிருக்கிறது".
    -----------------

    இரண்டு, மூன்று வண்டிகளுக்கு
    "ஓவர் ஆயில்" செய்ய வேண்டும் என்று அதற்கு
    வேண்டிய சாமான்களின்
    பட்டியலைக் கொடுத்து வாங்கி
    வரச் சொல்லி சுப்ரமணியத்தின்
    தங்கையை அனுப்பிய பின்
    பழுது பார்க்க வந்த சைக்கிளின்
    "பங்க்சர்" போடத் துவங்குகிறார் கேப்டன்.

    பழுதுக்காக சைக்கிளை விட்ட
    வாலிபன் வந்து, "பங்க்சர்
    போட்டாச்சுங்களா?" என்று
    கேட்க..

    "உன் "பங்க்சர்" தான்பா பார்த்துக்கிட்டிருக்கேன்." என்று
    கூறி விட்டு, எழுந்து நடந்து
    சென்று காற்றடிக்கும் பம்பு
    ஒன்றை எடுத்து வருகிறார்..
    கேப்டன்.

    "பங்க்சர்" ஒட்டுறதுக்குத் தண்ணி பிடிச்சு வைக்கச்
    சொல்லியிருந்தேன்" என்று
    சொல்லியபடியே கேப்டன்,
    ஒரு தட்டு போட்டு மூடி
    வைத்திருந்த வாளியை மூடியை எடுத்து விட்டுப்
    பார்க்க...

    நீல நிறம் கொண்ட அந்தப்
    பெரிய வாளி, நீரின்றிச்
    சிரிக்கிறது...

    நடிகர் திலகம் இல்லாத திரையுலகம் போல்... வெறுமையாக.


    (...தொடரும்...)

  8. #1445
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    Quote Originally Posted by Muthaiyan Ammu View Post
    congrats mr senthilvel for your wonderful 2000plus messages and pictures in particluer
    rare distintction achieved in a record time
    blessings

  9. #1446
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    முத்தையன்
    தங்களை மிகவும் பாதித்த ராஜபார்ட் ரங்கதுரை, தாங்கள் அளித்த நிழற்படங்களின் மூலம் எங்களையும் பாதித்து விட்டது.
    தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்களும் நன்றியும்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #1447
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மதுரை சென்ட்ரல் திரையரங்கில் 11.12.2015 அன்று மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள் ஸ்டைலில் கலக்கிய ராஜா திரைப்படம் வெளியாகிறது படத்தின் ஸ்டைலான போஸ்டர் உங்கள் பார்வைக்கு....
    தியேட்டரில் வைக்கபட்டுள்ள போட்டோ கார்டு மற்றும் ரசிகர்கள் சார்பில் வைக்கப்டும் வரேவற்பு பேனர்கள். மக்கள்தலைவரின் ராஜா சிறப்பு பக்கம் காண visit www.sivajiganesan.in




    சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

  11. Thanks Georgeqlj, RAGHAVENDRA thanked for this post
  12. #1448
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    2000 பதிவுகளை கடந்த மக்கள்தலைவரின் புகழ் பரப்பி எங்கள் செந்தில்வேல் அவர்களை வாழ்த்த முடியாது... சிரம் தாழ்ந்து வணங்குகிறேன்.

    மதுரை சென்ட்ரல் திரையரங்கில் 11.12.2015 அன்று மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள் ஸ்டைலில் கலக்கிய ராஜா திரைப்படம் வெளியாகிறது படத்தின் ஸ்டைலான போஸ்டர் உங்கள் பார்வைக்கு....
    தியேட்டரில் வைக்கபட்டுள்ள போட்டோ கார்டு மற்றும் ரசிகர்கள் சார்பில் வைக்கப்டும் வரேவற்பு பேனர்கள். மக்கள்தலைவரின் ராஜா சிறப்பு பக்கம் காண visit www.sivajiganesan.in




    சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

  13. Thanks RAGHAVENDRA thanked for this post
    Likes RAGHAVENDRA, KCSHEKAR, Russellmai liked this post
  14. #1449
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Congrats Mr Senthilvel for reaching another milestone. Thanks for posting valuable articles of

    NT.

  15. Thanks Georgeqlj thanked for this post
  16. #1450
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அன்புள்ள மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
    வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கி தவிக்கிறது சென்னை, அகிலஇந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கம் மற்றும் அடையாறு கிளை ஊழியர்கள் இணைந்து நாஞ்சில் மு.ஞா.செ.இன்பா அவர்கள் தலைமையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வேளச்சேரி மக்களுக்கு சுமார் 4,000 உணவுப் பொட்டலங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இதே போல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அருகாமையில் இருக்கும் மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் ரசிகர்கள் தங்களால் முடிந்த உதவிகளையும், மீட்பு பணிகளையும் மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
    இதே போல் பல ஆண்டுகளுக்கு முன் வெள்ளம் வந்த போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள் தனது வீட்டிலே தனது மேற்பார்வையில் உணவு தயாரித்து கொடுத்தார் என்பதனை தற்போது நினைவுபடுத்த விரும்புகிறேன். அதேபோல், மக்கள்தலைவரின் புகழ் காக்கும் ரசிகர்களாகிய நாமும் நம்மால் முடிந்தளவு உணவு தயாரித்து வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
    சென்னை மக்கள் நலமுடன் வாழ அனைவரும் பிரார்த்திப்போம்.



    சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

  17. Thanks RAGHAVENDRA thanked for this post
    Likes RAGHAVENDRA, KCSHEKAR, Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •