Page 10 of 401 FirstFirst ... 891011122060110 ... LastLast
Results 91 to 100 of 4010

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 17

  1. #91
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #92
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நினைப்போம்.மகிழ்வோம்-37


    "தெய்வ மகன்."

    இறுதிக் காட்சி.

    பிறந்த தினத்திலிருந்தே
    அன்னையைப் பிரிந்து,
    தனிந்திருந்த..தவித்திருந்த
    வேதனையுடன், மரணக் கோட்டையின் நுழைவாயிலில்,
    அன்னை மடியிலிருந்து கொண்டு ..

    "மகனே"...என்று கண்ணீரோடு
    தாய் அழைக்க...

    கடைசி முறையாய் நீட்டி
    விளிக்கும்..."அம்ம்...மா".

  4. #93
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நினைப்போம்.மகிழ்வோம்-38


    "உத்தமன்."

    "படகு...படகு" பாடலில் சலீமாக
    பஞ்சணையில் அமர்ந்து, ரோஜா
    முகர்ந்து "அனார் என்றால்
    மாதுளம்" எனப் பாடுகையில்,
    இது வரை யாரும் செய்யாத
    அழகான பாவனையில்,
    மிக அனுபவித்து அவர் செய்யும் அபிநயங்கள்.

  5. #94
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நினைப்போம்.மகிழ்வோம்-39


    "ராஜபார்ட் ரங்கதுரை".

    நாடக ஒத்திகைக்குக் கிளம்பும்
    அவசரத்தில், மனைவி கொடுத்த சூடான பானத்தை
    வேக, வேகமாய்ப் பேசிக்
    கொண்டே குடிக்கும் அழகு.

  6. #95
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நினைப்போம்.மகிழ்வோம்-40


    "தில்லானா மோகனாம்பாள்."

    மோகனாவின் ஆட்டத்தைப்
    பார்க்கிற ஆசையில், தனது
    கோஷ்டியே ஓடிப் போக...
    திரும்பிப் பார்க்கையில்
    அத்தனை படுக்கைகளும்
    காலியாயிருக்க..

    அமைதியாய் எழுந்து, துண்டு
    உதறித் தோளில் போட்டுக்
    கொண்டு, மௌனமாய் நடக்கும்
    இயல்பான அழகு.

  7. Thanks ifohadroziza thanked for this post
  8. #96
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    ராகவேந்தர் சார்,

    ரோஜாவின் ராஜா முத்திரைப் பதிவு முத்தான பதிவாக அமைந்திருக்கிறது. வழக்கமாக ஒரு காட்சியை எடுத்துக் கொண்டு அலசும் பாணியிலிருந்து சற்றே மாறுபட்டு இரண்டு மூன்று தொடர் காட்சிகளை எடுத்துக் கொண்டு நீங்கள் அலசியிருக்கும் விதம் பிரமாதமாக வந்திருக்கிறது. நடிகர் திலகத்தின் காட்சியை மட்டும் எடுத்துக் கொள்ளாமல் வாணிஸ்ரீயின் திறமையும் நீங்கள் எடுத்துக் காட்டியிருப்பது சிறப்பானது.

    நீங்கள் குறிப்பிட்ட காட்சியில் மட்டுமல்ல அதற்கு முந்தைய பெண் பார்க்கும் வரும் காட்சிக்கு முன்பாக வரும் வாணிஸ்ரீ சுகுமாரி வாதம் செய்யும் காட்சியும் குறிப்பிடத் தகுந்தது. மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வரப் போகிறார்கள். புடவையை கட்டிக் கொண்டு கீழே வா என்று சொல்லும் சுகுமாரியிடம் முடியாது. வேணும்முனா நீ அந்த புடவையை கட்டிட்டு போய் உட்காரு என்ற வாணிஸ்ரீயின் பதிலுக்கு அன்றைய நாட்களிலேயே அப்ளாஸ் நிறைய விழுவதை நான் பார்த்திருக்கிறேன். ரோஜாவின் ராஜா வாணிஸ்ரீயின் கேரக்டர் மிகவும் ரசிக்கப்பட்ட ஒன்று. .

    ஜனகனின் மகளை பாடல் காட்சியில் பின்னணியிலிருந்து கவியரசர், மெல்லிசை மன்னர் மற்றும் இசையரசி ஆட்சி செலுத்தியிருப்பார்கள் என்றால் காட்சியில் வாணிஸ்ரீயும் நடிகர் திலகமும் பின்னியிருப்பார்கள்.

    மன்னவர் எல்லாம் சுயம்வரம் நாடி மண்டபம் வந்துவிட்டார்: ஒரு

    மன்னவன் யாரோ வில்லை எடுத்தான்; ஜானகி கலங்கி விட்டாள்


    என்ற வரியை பாடி மேலே பாட முடியாமல் கண் கலங்கி சட்டென்று சுதாரித்துக் கொண்டு மீண்டும் பல்லவியின் முதல் வரிகளை மட்டும் பாடி விட்டு மெத்தையை விட்டு சட்டென்று எழுந்து மாடிக்கு ஓடிவிடும் வாணிஸ்ரீ இன்னும் கண் முன்னே நிற்கிறார் இந்த காட்சியை பார்த்து வெகு நாட்கள் ஆனப் போதும்.

    நீங்கள் நடிகர் திலகம் சம்மந்தப்பட்ட அடுத்த காட்சியையும் எழுதியிருக்கலாம். மகன் நிலை கண்டு வேதனைப்பட்டு மனம் உடைந்து அந்த அதிர்ச்சியில் தாய் இறந்து விட, கீழே விழுந்து கிடக்கும் தாயைப் பார்த்து, அந்த நேரத்தில் மனம் பேதலிக்க தொடங்கி ஒரு சித்தப் பிரமை தொடங்கும் நிலையை நடிகர் திலகம் வசனத்திலும் உடல்மொழியிலும் கொண்டு வரும் அழகு இருக்கிறதே. அடேடே செத்துப் போயிட்டியா என்று பேச ஆரம்பித்து தான் அழாமல் பார்வையாளர்களை கலங்க வைக்கும் அந்த நடிப்பு இருக்கிறதே, அதையெல்லாம் யாரால செய்ய முடியும், இவரை தவிர?

    இந்த காட்சி படமாக்கப்பட்டபோது செட்டில் இருந்த அனைவரும் கலங்கி விட்டனராம். அழாமலே அழ வைத்த சிவாஜி என்ற தலைப்பில் நவசக்தி இதழில் 1973 ஜூன் மாதம் இந்த காட்சி படமாக்கப்பட்ட செய்தி வெளிவந்ததும் அதைப் திரும்ப திரும்ப படித்து சந்தோஷப்பட்டதையும் மறக்கவே முடியாது. அந்த செய்தியை 1973 ஜூலை 14 அன்று மதுரை நியூசினிமாவில் எங்கள் தங்க ராஜா ஓபனிங் ஷோ பார்க்க போகும்போது படம் தொடங்குவதற்கு முன் தியேட்டருக்கு வெளியே நின்று என் கஸினின் நண்பர் குழாமிடம் சொல்லி மகிழ்ந்தது பற்றி இங்கே ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.

    ரோஜாவின் ராஜா மட்டும் 1973 அல்லது 1974-ல் வெளி வந்திருந்தால் மிகப் பெரிய வெற்றிப் படமாக மாறியிருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

    அலங்காரம் கலையாத பாடல் காட்சியை தவிர இந்த படத்தை பார்த்து வெகு நாட்களாகி விட்டது. ஆனால் உங்கள் பதிவு மனதில் உறங்கி கிடந்த நினைவுகளை எழுப்பி விட்டு விட்டது.

    மீண்டும் வாழ்த்துகள் சார்!

    அன்புடன்

  9. Thanks RAGHAVENDRA thanked for this post
  10. #97
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  11. Likes Russellmai, Harrietlgy, sivaa liked this post
  12. #98
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    "ரோஜாவின் ராஜா"
    ராகவேந்திரா சார் அவர் பாணியில் பிரமாதப்படுத்த
    தொடர்ந்து
    முரளிசார் அவர் பாணியில்
    அசத்த
    வாசு சாரும் ரோஜாவின் ராஜாவை
    முரளிசார் முடித்த காட்சியிலிருந்தோஅடுத்த காட்சியில் இருந்தோ
    அவர் பாணியில் தொடர்ந்தால்
    மிகவும் வித்தியாசமாய் இருக்கும்.அதை மற்றவர்களும் அவரவர் பாணியில் தொடலாம்.அது வித்தியாசமாகவும் அமையலாம்.முரளி சாரின் பதிவை படித்தபின் ஏற்பட்ட சிந்தனை இது.

    "சங்கிலித்தொடர் பதிவுகள்"
    தலைப்பும் கூட வைத்துக் கொள்ளலாம்.
    Last edited by senthilvel; 31st October 2015 at 10:58 PM.

  13. Likes RAGHAVENDRA liked this post
  14. #99
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நினைப்போம்.மகிழ்வோம்-41


    "உத்தமபுத்திரன்."

    'யாரடி நீ மோகினி' பாடலில்,
    ஆடலழகி ஆடிக் கொண்டே
    அருகில் வந்து நின்று "தேன்
    வேணுமா?" என்று பாட,
    அகலமாய்க் கண் விரித்து,
    "வேணும்" என்பதாய்ச்
    செய்யும் முகபாவம்.

  15. Likes RAGHAVENDRA, Russellmai, Harrietlgy, sivaa liked this post
  16. #100
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நினைப்போம்.மகிழ்வோம்-42


    "திரிசூலம்."

    சாட்டையடி கொடுக்க ஆள்
    அமர்த்தி தனக்குத் தானே தண்டனை கொடுத்துக் கொள்ளும் கட்டம்.

    அக்காள் மகள் பார்த்து விட்டு
    விபரம் கேட்க,சொல்ல மறுத்து
    விரக்தியும்,வேதனையுமாய்ச்
    சிரிக்கும் அந்தச் சிரிப்பு.
    ( 'முத்து'படத்தில் ரஜினி அதே
    போல் சிரிக்க முயற்சித்திருக்கிறார்.. ஒரு
    காட்சியில்.)

  17. Likes RAGHAVENDRA, Russellmai, Harrietlgy, sivaa liked this post
Page 10 of 401 FirstFirst ... 891011122060110 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •