Page 204 of 401 FirstFirst ... 104154194202203204205206214254304 ... LastLast
Results 2,031 to 2,040 of 4010

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 17

  1. #2031
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நமது நடிகர் திலகம் திரைப்படத்திறனாய்வு பங்கு பெற்று, நமது அமைப்பின் தலைவர் திரு ஒய்.ஜீ.மகேந்திரா அவர்கள் தோஹா பாங்க் உதவியுடன் இணைந்து நடத்திய திருவிளையாடல் காவியத்திரைப்படத்தின் பொன் விழா நேற்று மாலை சென்னை தேனாம்பேட்டையிலுள்ள காமராஜர் அரங்கில் மிகச் சிறப்பாக நடந்தேறியது. பாடல்கள் இசைக்குழுவால் இசைக்கப்பட்டன, தொடர்பான காட்சிகள் திரையிடப்பட்டன. மேலும் படத்தில் பங்கு பெற்ற கலைஞர்கள் மற்றும் அவரது வாரிசுகள் , பிரதிநிதிகள் என பலர் மேடையில் அழைத்து கௌரவிக்கப்பட்டனர்.

    நடிகர் திலகம் சார்பில் ராம்குமார் அவர்கள், சாவித்திரி சார்பில் அவரது மகள் விஜயசாமுண்டீஸ்வரி, ஓ.ஏ.கே.தேவர் சார்பில் அவரது புதல்வர் ஓ.ஏ.கே. சுந்தர் அவர்கள், ஒளிப்பதிவாளர் கே.எஸ்.பிரசாத் சார்பில் அவரது பிரதான சிஷ்யர் திரு பாபு அவர்கள், டி.ஆர்.மகாலிங்கம் சார்பில் அவரது பேரன் ராஜேஷ் மற்றும் பேத்தி பிரபா ஆகியோர், நாகேஷ் சார்பில் அவரது புதல்வர் ராஜேஷ், இவர்களோடு இறையருட்செல்வர், இயக்குநர் ஏ.பி.நாகராஜன் சார்பில் அவரது துணைவியார் ராணி அம்மாள், புதல்வர் திரு பரமசிவம், புதல்வி திருமதி விஜயலக்ஷ்மி, கவியரசரின் புதல்வர் அண்ணாதுரை கண்ணதாசன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

    படத்தில் பங்கு பெற்ற இசையரசி பி.சுசீலா அவர்கள், முருகனாக நடித்த திருமதி சுசரிதா ஆகியோர் கலந்து கொண்டது வந்திருந்தோர் மனதில் நெகிழ்வையூட்டியது.

    பாலையாவின் வாரிசு, பாடகர் திலகம் டி.எம்.எஸ். அவர்களின் வாரிசுகள் வருவதாக இருந்தது. ஆனால் வரமுடியவில்லை.

    பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் முன்னரே வேறு ஒரு கச்சேரிக்கு ஒப்புக்கொண்டிருந்ததால் அவரால் வர இயலவில்லை.

    சிறப்பு விருந்தினராக திரு ஏ.ஆர்.எஸ். அவர்கள், குமாரி சச்சு அவர்கள் மற்றும் திரு சேரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ராம்குமார் அவர்கள், நடிகர் திலகம் புகழ் பாடும் திரு மகேந்திரா அவர்களின் பணியைப் பாராட்டிப் பேசினார்.

    திரு பரமசிவம் அவர்கள் திருவிளையாடல் படத்தை பிரத்யேகக் காட்சிகளைத் திரையிடத் தருவதாகக் கூறினார்.

    திரு ஓ.ஏ.கே. சுந்தர் தான் நடித்து வரும் தொலைக்காட்சித் தொடரிலிருந்து ஒரு வசனத்தைத் தன் தந்தையின் குரலில் பேசி அசத்தினார்.

    இசையரசி அவர்கள், திரு கே.வி.எம். அவர்களின் இசைச் சிறப்பினையும், திரு புகழேந்தி அவர்களின் ஒருங்கிணைப்புப் பணியையும் நினைவு கூர்ந்தார்.

    விழாவின் சிறப்பம்சமாக அமைந்திருந்தது, ரசிகர்களோடு ரசிகராக உணர்ச்சிகரமாக அமைந்த சேரன் அவர்களின் உரை.

    விழாவில் சீர்காழியைச் சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனத்திற்கு, வசூலான தொகையில் ஒரு பங்கு தானமாகத் தரப்பட்டது.

    இசைக்குழுவின் பணி மிகச் சிறப்பாக அமைந்தது. கே.பி.எஸ்.சின் பாடல்கள் சவாலாக அமைந்தவை. அவற்றை கல்பனா அவர்கள் மிகச்சிறப்பாகப் பாடி அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொண்டார். ஒரு நாள் போதுமா, மற்றும் இசைத்தமிழ் பாடல்களை அனந்து அபாரமாகப் பாடினார். வீணை பாலா அவர்கள் பொதிகை மலை உச்சியிலே பாடலைப் பாடினார். முத்தாய்ப்பாக பாத்தா பசுமரம் பாடலையும் பாட்டும் நானே பாவமும் நானே பாடலையும் கோவை முரளி பாடினார்.

    இசைக்குழுவின் பணி மிகச்சிறப்பாக இருந்தது.

    அரங்கு நிறைந்த விழாவில் அனைவருமே நிகழ்ச்சியில் தங்களை மறந்து லயித்து ஒன்றிப் போயினர்.

    விழா முடிவில் அனைவருக்குமே இது போன்று மேலும் பல விழாக்களை நடத்தவேண்டும் என்கிற ஆவல் பிறந்ததுடன் சிலர் திரு மகேந்திராவிடம் தங்கள் எண்ணதைத் கூறிச் சென்றதும் விழாக்குழுவினருக்கு மனமகிழ்வூட்டியது.

    மறக்கமுடியாத விழா.
    Last edited by RAGHAVENDRA; 28th December 2015 at 03:17 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Thanks Russellmai, Gopal.s thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2032
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நக்கீரன், தமிழ் வளரவேண்டும் என்கிற நல்லெண்ணத்தில் குற்றம் கண்டு பிடித்தான். அதில் அர்த்தம் இருந்தது. ஆக்கபூர்வமான அணுகுமுறை இருந்தது.

    சிண்டு முடித்து வம்பு வளர்த்து அதையே உணவாய் உட்கொண்டு அனைவரின் வெறுப்பையும் சம்பாதிக்கும் வண்ணம் பேசுவோரும் எழுதுவோரும் புலவராகி விட முடியாது. அவர்களிடம் பதிலளிக்க விஷயமும் இருக்காது.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #2033
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நெறியாளர் அவர்களுக்கு,
    இம் மய்யம் இணையளத்தின் பெருமையாக விளங்கி கிரீடமாக ஜொலிப்பது நமது நடிகர் திலகம் திரியின் அனைத்து பாகங்களுமே. இதற்கு காரணம் அனைவருடைய ஆக்கபூர்வமான பங்களிப்பேயாகும். ஆனால் அவ்வப்போது தேவையற்ற கருத்துக்கள் இடம் பெற்று திரியின் திசையை மாற்றுவதோடு தொய்வுறவும் காரணமாக அமைகின்றன. இனிமேலும் இதுபோன்ற தேவையற்ற பதிவுகளுக்கு இடம் தராமல் முற்றுப்புள்ளி வைத்து நடிகர் திலகத்தின் புகழ் பாடுவதில் மட்டுமே அனைத்து நண்பர்களும் ஈடுபடவேண்டும் என்கிற நோக்கத்துடன் நெறியாண்மையை மேற்கொண்டு, நடத்திச்செல்ல வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

    நண்பர்களுக்குள் தேவையில்லாமல் இடைவெளி ஏற்படுத்தக் கூடிய இப்படிப்பட்ட பதிவுகளுக்கு உடனடியாகத் தாங்கள் வழிகாண வேண்டும்.

    இனிமேல் இது போன்ற சிண்டு முடியும் பதிவுகள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது தங்களுடைய கடமை.

    நடிகர் திலகத்தைப் பற்றி எழுத நமக்கு இன்னும் ஆயிரம் பாகங்கள் இருந்தாலும் போதாது. அவ்வாறிருக்கையில் இது போன்ற பதிவுகளுக்கு இங்கே கொஞ்சமும் அவசியம் கிடையாது.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. Likes Russellmai liked this post
  7. #2034
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    முத்தையன்
    நடிகர் திலகத்தின் மிகச் சிறப்பான நடிப்பில் வெளிவந்த படங்களில் குறவஞ்சிக்குத் தனியிடம் உண்டு. பல காட்சிகளி்ல் அவரது அமைதியான நடிப்பு நம்மை வசியப்படுத்தி, பாத்திரத்தோடு ஒன்ற வைத்து விடும். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த குறவஞ்சி திரைப்பட நிழற்படங்கள் தங்கள் கைவண்ணத்தில் அற்புதமாக அமைந்துள்ளன. தொடர்ந்து மேலும் இப்பட நிழற்படங்களைப் பகிர்ந்து கொள்ளவும்.
    நன்றி.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. Likes Russellmai liked this post
  9. #2035
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    புலவர்களை பற்றி பேசினால் பதிலும் கூற இயலுமோ?
    இயன்றது, இயலாதது, கூறியது, கூறாதது, உணர்ந்தது, உணராதது அனைத்தும் நமக்குள் இயங்கும் ! எல்லாம் நம் இயக்கம் !
    Last edited by Murali Srinivas; 29th December 2015 at 12:19 AM.

  10. Thanks RAGHAVENDRA thanked for this post
    Likes RAGHAVENDRA liked this post
  11. #2036
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ( 41 )

    சக்தியெல்லாம் திரட்டி
    சக்தியைப் பொசுக்கியழித்த
    பின் ஒரு ஆவேச நடனம்
    புரிவார்..நடிகர் திலகம்.

    தாண்டவம்.

    குதித்து அவர் போகும் உயரம்,
    அந்த விழி உருட்டல், உருளும்
    விழிகளின் உள்ளோடுகிற,
    'நான் சினந்திருக்கிறேன்' என்பதைத் தெரிவிப்பதாய்
    அடிக் கோடிட்டது போன்ற
    சிவப்பு வரி, ஒவ்வொரு நடன
    அசைவுக்கும் அவர் தருகிற
    வேகம்...

    இவையெல்லாம்...

    திரைப்படத்தில் வருகிற
    திரைப் பாடங்கள்.

  12. Thanks Russellmai thanked for this post
  13. #2037
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ( 42 )

    மீனவனாய்த் தோன்றி அவர்
    நடக்கும் நடையழகைப்
    பேசி வியக்காதவர்கள் இன்னும் பிறக்காதவர்களாகத்
    தான் இருப்பார்கள்.

    அதுவல்ல விஷயம்.

    அவர் நூறடி நடக்கும் போது
    பின்பற்றும் பாணியை இரண்டடி நடக்கும் போதும் பின்பற்றுவாரே...

    அது.

  14. Thanks Russellmai thanked for this post
  15. #2038
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ரவி
    திருவிளையாடல் படத்தைப் பற்றிய தங்கள் கவிதைகளில் ஒவ்வொன்றும் அளவில் குறளினும் சிறியது, குரலிலோ மிகப் பெரியது.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  16. Likes Harrietlgy, Russellmai liked this post
  17. #2039
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ( 43 )

    பாடாய்ப் படுத்திய சுறாவைக்
    கொன்று விட்டு, வெற்றிப்
    புன்னகையுடன்,
    கடலோர மணல்வெளியில்
    சற்றே கவிழ்ந்தபடி அவர்
    ஒடி வரும் ஓட்டம்...

    திரையில் எழுதப்பட்ட
    திறமைக் கவிதை.

  18. Thanks Russellmai thanked for this post
    Likes KCSHEKAR, Harrietlgy, Russellmai liked this post
  19. #2040
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நமது நடிகர் திலகம் திரைப்படத்திறனாய்வு அமைப்பின் சார்பில் ஒவ்வோர் ஆண்டும் அவ்வாண்டில் ஐம்பதாவது ஆண்டைக் கடக்கும் திரைப்படங்களை நினைவூட்டி நிகழ்ச்சிகளை நடத்தி வருவதின் அம்சமாக 2016ம் ஆண்டில் கொண்டாடப் பட வேண்டியவை, 1966ல் வெளியான மோட்டார் சுந்தரம் பிள்ளை, மகாகவி காளிதாஸ், சரஸ்வதி சபதம் மற்றும் செல்வம். இவற்றில் முதலிரண்டும் நமது அமைப்பின் சார்பில் முன்பே திரையிடப்பட்டு விட்டன. மீதமுள்ள இரண்டும் கிட்டத்தட்ட ஆண்டின் கடைசிப் பகுதியில் வருகின்றன.

    அமைப்பின் ஐந்தாம் ஆண்டு விழா வரவிருக்கும் 2016ம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற உள்ளது. விவரம் விரைவில் தெரியப்படுத்தப்படும்.

    மீதமுள்ள மாதங்களில் சில அபூர்வமான, பலர் பார்த்திராத படங்களும் இடம் பெறும் வாய்ப்புள்ளது.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  20. Likes Russellmai, Harrietlgy liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •