Page 115 of 401 FirstFirst ... 1565105113114115116117125165215 ... LastLast
Results 1,141 to 1,150 of 4010

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 17

  1. #1141
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    காலத்தை வென்று நிற்கும் காவிய நாயகனின், உன்னதத் திரைக்காவியம், உயர்ந்த மனிதன்...47வது ஆண்டு நிறைவு...

    எங்கிருந்தாலும் வாழ்க எனப் பெருந்தன்மையோடு வாழ்த்திய பேரறிஞர் அண்ணா அவர்களின் கடைசி பொது நிகழ்ச்சியாக அமைந்த, நடிகர் திலகத்தின் 125வது பட விழாவில் அவர் ஆற்றிய உரை, வரலாற்றில் இடம் பெற்ற சிறப்புரையாகும்.

    அப்பேர்ப்பட்ட உன்னதக் கலைஞனின் திரையுலக வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பெற்ற உயர்ந்த மனிதன் வெற்றித் திரைக்காவியத்தின் 47 ஆண்டு நிறைவினைப் போற்றும் வகையில் நினைவூட்டல் பதிவு..

    ஆவணத்திலகம் பம்மலாரின் பொக்கிஷத்திலிருந்து...

    உயர்ந்த மனிதன்

    [29.11.1968 - 29.11.2011] : 44வது ஜெயந்தி

    சாதனைப் பொன்னேடுகள்

    முதல் வெளியீட்டு விளம்பரம்



    முதல் வெளியீட்டு விளம்பரம் : பேசும் படம் : டிசம்பர் 1968



    முதல் வெளியீட்டு விளம்பரம் : தினத்தந்தி : 20.12.1968



    100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 8.3.1969


    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1142
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பதிவுத்திலகம் வாசு சாரின் பொக்கிஷத்திலிருந்து...

    உயர்ந்த மனிதன் ... கண்ணைக் கவரும் அழகிய நிழற்படங்கள்...







    மேலும் அட்டகாசமான நிழற்படங்கள்.. வாசு சாரின் பதிவிற்கான இணைப்பு ...

    http://www.mayyam.com/talk/showthrea...l=1#post775731
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. Likes Russellmai liked this post
  6. #1143
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Belgium
    Posts
    0
    Post Thanks / Like
    the only one uncomparable actor nadigar thilam's
    sivagamiyin selvan
    re release will be in the month of dec 2015/jan 2016.
    be ready to celebrate.

  7. #1144
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like


    "இரு மலர்கள்."

    என்றுமென் இதயம் வாழும்
    இந்தத் திரைக் காவியம் குறித்து நம் நடிகர் திலகம்
    திரியில் நான் எழுதக் கிடைத்த
    பாக்கியத்தை மிகப் பெருமையாக உணர்கிறேன்.

    திரியில் எழுதுகிறவராய் இல்லாவிட்டாலும், திரியில்
    எனது எழுத்துக்களைப் படித்து
    விட்டு,உடனுக்குடனே கைபேசியில் என்னை மனமார
    வாழ்த்தும் பெரியவர், அய்யா
    திரு.நடராஜன் அவர்களுக்கு
    என் நன்றிகள் சமர்ப்பணம்.

    அனுபவம் கரகரக்கும் அவரது
    எழுபத்தைந்து வயதுக் குரலில்,
    இன்னும் தீராத நடிகர் திலகத்தின் புகழ் நாமங்கள்.
    நான் நன்றாக எழுதியிருந்த
    இடங்களை வியந்து பாராட்டியதோடு நில்லாமல்,
    நான் வேகமாகப் போனதில்
    எழுதாமல் விட்ட விஷயங்களையும் அழுகுறச்
    சுட்டிக் காட்டினார்.

    அவரது நுண்ணிய ரசிப்பாற்றல்
    வியக்க வைக்கிறது என்னை.

    சுந்தரும்,உமாவும் பேசிக்
    கொண்டிருக்கும் காட்சியை,
    சாந்தி பார்த்து விட்டதற்கு
    அடையாளமாய் அங்கே கடிதம்
    வைக்கப்பட்டிருக்குமே.. அந்தக்
    காட்சியைக் குறிப்பிட்டு, அந்தக்
    கடிதத்தின் மேல் வைக்கப்பட்டிருக்கிற காபி
    தம்ளருக்குள், அப்போதுதான்
    சாந்தி வந்து விட்டுப் போனதற்கு அடையாளமாக
    காபித் திரவம் ஆடுமே..
    அதைச் சொல்கிறார்.

    நடிகர் திலகமும்,பத்மினியும்
    சந்திக்கும் காட்சியில், கடிதத்துக்காகக் காத்திருந்து
    ஏமாந்த தன் வேதனையை
    நடிகர் திலகம் சொல்லத் துவங்குகையில் பின்னணியில்
    பீறீட்டுக் கிளம்புகிற மெல்லிசை
    மாமன்னரின் இசை வெள்ளத்தைக் குறிப்பிடுகிறார்.

    நடிகர் திலகத்துள் ஆழ்ந்து லயித்தவர்களின் ஆசிகளையும், பாராட்டுதல்களையும் பெறுவதில் உள்ளே சுகமும்,
    பெருமையும் வேறெதிலும்
    கிடையாது.
    -------------------

    தீபாவளி வாழ்த்துகள் சொன்ன
    கையோடு "எனக்கு ரொம்பப்
    பிடிச்ச படம்.. எழுதுங்க" என்று
    வாழ்த்துச் சொன்ன முரளி
    சாருக்கு நன்றி.

    இயற்கைச் சீற்றத்தால் மிகவும்
    இன்னலுற்ற போதும், என்
    மீதான அன்பு மாறாமல் என்னை சந்தர்ப்பம் கிடைக்கும்
    போதெல்லாம் வாழ்த்தி, இந்த
    நிழற்படமும் அனுப்பி வைத்து
    மகிழ்ந்த ஆவணத் திலகம்
    பம்மலாருக்கு நன்றி.

    தன்னைப் பாதித்த என் எழுத்துகளை உடனுக்குடன்
    கத்தரித்துப் போட்டுப் பாராட்டெழுதிய ராகவேந்திரா
    சாருக்கு நன்றி.

    இரு மலர்களை நான் முடித்ததும் திரியில் எனக்கான
    முதல் வாழ்த்து தந்து என்
    சந்தோஷத்தைத் துவக்கி வைத்த நெய்வேலியாருக்கு
    நன்றி.

    'அடுத்த தொடருக்குக் காத்திருக்கிறேன்' என்று
    அன்புடன் வாழ்த்திய செந்தில்வேல் சாருக்கு நன்றி.

    நேரம் ஒதுக்கி இவ்வாறெல்லாம் எழுதுவது
    பெரிய விஷயமென்று என்னை
    வியந்து வாழ்த்திய நண்பர்
    பொன்.ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி.

    அன்புடன் என்னை வாழ்த்திய
    V.C.S சாருக்கு நன்றி.

    சுருக்க ஆங்கிலத்தால் என்
    ஆர்வச் சுடர் தூண்டும்
    S.வாசுதேவன் சாருக்கு நன்றி.

    ராகவேந்திரா சாருக்கெல்லாம்
    நட்பென்று தன்னை அறிமுகம்
    செய்து கொண்டு அலைபேசி
    வழியே அகமகிழ்ந்து பாராட்டிய
    திரு.ராஜபாண்டியன் என்பாருக்கு நன்றி.

    இன்னும் நான் பெயர்கள்
    குறிப்பிட மறந்த இனியவர்களுக்கெல்லாம்
    நன்றி.

    திரி தாங்கும் அறிவு தீபங்கள்
    அத்தனைக்கும் என் நன்றி.
    ------------------

    "இரு மலர்கள்" குறித்த என்
    எழுத்துப் பதிவு, நீண்ட தொலைவு பயணப்பட வைக்கும்ஒரு புனிதப் பயணம்
    நிகர்த்தது.

    இதில் என்னுடைய எழுத்து
    நடை என்பது தொலைதூரப்
    பயணப்படும் ஒரு உள்ளத்தின்
    சந்தோஷம் மட்டுமே.

    திரியின் வணக்கத்திற்குரிய
    பெரியவர்களெல்லோரும்,
    என் எழுத்துக்களின் நிறை,
    குறைகளைத் தெளிவுற எழுதி
    உதவிட அன்புடன் வேண்டுகிறேன்.

    அது.. இந்தச் சிறுவன்
    அடுத்தடுத்த புனிதப் பயணங்கள் தொடர ஆதரவாக
    இருக்கும்.

    நன்றி.

  8. #1145
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    பிரமிப்பூட்டும் தகவல்

    சிவாஜி ரசிகனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா...

    மேலே உள்ள நிழற்படத்தில் நடிகர் திலகம் மீட்டும் இசைக் கருவி கோட்டு வாத்தியம் என அந்நாளில் அடையாளம் காணப்பட்ட சித்ரவீணை. இந்த இசைக் கருவியில் புகழ்பெற்றவர் திரு ரவிகிரண் அவர்கள். அவருடைய தந்தை நரசிம்மனும் மிகப் பெரிய சித்ரவீணைக்கலைஞர், நிபுணத்துவம் பெற்றவர். மங்களூரில் ஒரு படப்பிடிப்பின் போது நரசிம்மன் அவர்களுடன் நடிகர் திலகம் தங்கியிருந்திருக்கிறார். இந்த இசைக்கருவியை வாசிக்க மிகவும் விரும்பி, இரண்டு நாட்கள் பயிற்சி பெற்றிருக்கிறார்.

    இரண்டே நாட்களில் நடிகர் திலகம் ஒரு பாடலையே கிட்டத்தட்ட வாசிக்கும் புலமை பெற்று விட்டாராம். அப்படி அவர் முயற்சி செய்து கிட்டத்தட்ட வெற்றியின் விளிம்பினைத் தொட்டு விட்ட பாடல்...

    பாலும் பழமும் படத்தில் இடம் பெற்ற நான் பேச நினைப்பதெல்லாம்...

    நடிகர் திலகத்தின் வலது புறம் இருப்பவர் திரு நரசிம்மன். இடது புறம் இருப்பவர் நரசிம்மன் அவர்களின் மூத்த சகோதரர் திரு ராமரத்னம் அவர்கள். திரு ராமரத்னம் அவர்களும் மிகப்பெரிய சங்கீத வித்வான். ஆல் இந்தியா ரேடியோவின் தங்கப் பதக்கம் பெற்றவர்.

    உலக அளவில் உச்சத்தில் இருப்பவருக்கு ரசிகராய் இருப்பதில் ஈரேழு உலகங்களையும் வென்று விட்ட பெருமையோடு மார் தட்டிக் கொள்வோம்.

    அபூர்வமான தகவலுக்கு நன்றி, திரு ரவிகிரண், முகநூல் மூலமாக.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. Likes Russellmai liked this post
  10. #1146
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர்திலகத்தின் படவரிசை தொடர்ச்சி

  11. Likes Harrietlgy, RAGHAVENDRA, Russellmai liked this post
  12. #1147
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  13. Likes Harrietlgy, RAGHAVENDRA, Russellmai liked this post
  14. #1148
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  15. Likes Harrietlgy, RAGHAVENDRA, Russellmai liked this post
  16. #1149
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  17. Likes Harrietlgy, RAGHAVENDRA, Russellmai liked this post
  18. #1150
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  19. Likes Harrietlgy, RAGHAVENDRA, Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •