Page 276 of 401 FirstFirst ... 176226266274275276277278286326376 ... LastLast
Results 2,751 to 2,760 of 4010

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 17

  1. #2751
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    கோபால்
    மையம் பொதுவான திரி .உங்கள அலங்காரம் குப்பை என்று நான் சொல்லமாட்டேன் .உங்கள் மனதில் இருக்கும் குப்பைகளை முதலில் அகற்றவும் .

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2752
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ராஜபார்ட் ரங்கதுரை -1973.

    ராஜபார்ட் ரங்கதுரை பற்றி நிறைய முறை எழுத நினைத்து தள்ளி சென்று கொண்டிருந்தது. இப்போது வலை பூ மற்றும் ராகவேந்தர் தயவில் ஊக்கம் கிடைத்து விட்டது.


    முதலில் கதை பயணிக்கும் திசைகள்......


    ரங்கதுரை இளமை பருவம் ,ஆதரவற்ற நிலை (தம்பி,தங்கை),நாடக ஆசிரியர் ஆதரவு.


    ரங்கதுரை நாடக நடிகன் ஆவது, சில பல நாடக காட்சி பதிவுகள்.


    ரங்கதுரை திருமண பிரச்சினை ,அதை மீறி நடக்கும் திருமணம், தங்கையின் வாழ்க்கை (திருமண) அது சார்ந்த போராட்டங்கள். தம்பியின் தகுதி மீறிய ஆசை,அது சார்ந்த பொய்மை நிறைந்த பிரச்சினைகள் (நன்றி மறத்தல்).


    ரங்கதுரை எதிர்கொள்ளும் எதிர்ப்புக்கள், சில பல வில்லன்கள் (கொலை வரை செல்வது)


    இதில் முன் நிற்பது நடிகர்திலகம்.

    அவருடைய அமெரிக்கையான நடிப்பு முறை. தொழில் சார்ந்த நடிகர்கள் யாரையும் பகைக்கவோ, யாரிடமும் குரல் உயர்த்தவோ இயலாது. அதனால் ஆதரவு வேண்டும் குரலிலேயே அவர் பாத்திர படைப்பு கையாள படும். ஒரு இறைஞ்சும் மெல்லிய குரலில். நடையிலும் ஒரு மென்மையான பெண்மை கலந்த அமெரிக்கை வெளிப்படும். அவரே பாய்ஸ் கம்பெனி நடிகர் என்பதால் இதில் போய் நடிக்கவா வேண்டும்? வாழ்ந்திருப்பார்.


    ஒரு அற்புத விந்தை, அவர் எந்த இடத்திலும் உணர்ச்சிகளை ஓங்கியே வெளிபடுத்த மாட்டார். தனக்கு வசனங்கள் தேவையேயில்லை என்று பல காட்சிகளில் உணர்த்தி அதிசயம் படைப்பார். சுருங்க சொல்ல வேண்டுமென்றால் ,தன் தங்கையின் கணவன் ,இரண்டாம் திருமண காட்சி. சுமார் நான்கு நிமிடங்கள் எந்த வசன துணையுமின்றி ,அவர் பார்க்கும் பார்வை.ஒவ்வொரு பார்வையாளருக்கும் ஒவ்வொரு அர்த்தம் கொடுக்கும். அதில் தெரிவது விரக்தியா,இறைஞ்சலா,எதிர்பார்ப்பா,மிரட்டலா,கொந ்தளிப ்பா, உதாசீனமா,தன்னிரக்கமா,தவிப்பா, ஊமை கதறலா,உண்மை பாசமா,கோழைக்கு விடுக்கும் சவாலா என்று இனம் காண முடியாத ஒரு புதிர்த்தன்மை நிறைந்த நடிப்பின் உச்ச சாதனை. ஒரு எழுத்தாளர் கூட வார்த்தை துணையுடன் ,இந்த உணர்ச்சி கொந்தளிப்பை ,குவியலை கொண்டு வருவது மகா கடினம்.

    அதே போல தங்கை இறந்த செய்தி கிடைத்து, அவர் கோமாளி வேடத்தில் நடித்தே ஆக வேண்டிய இடத்தின் சிரித்தே வெளியிடும் ஊமை துயர கதறல்.

    தங்கையின் கணவனை (இறந்த பிறகு)பார்த்து நீயெல்லாம் மனுஷனா ரீதியில் உதாசிக்கும் சீ போடா .

    தம்பியிடம் உணர்ச்சியை வெளியிட முடியாது,தவிப்புடன் (தகிப்புடன்) பாடும் அம்மம்மா.....


    நாடகம் சார்ந்த காட்சிகள் என்றால் நடிகர்திலகத்திற்கு கேட்கவா வேண்டும்? இதில் முக்கியமாக குறிக்க வேண்டியவை பகத் சிங். இதில் கைகள் கட்ட பட்ட நிலையில்,அதன் துணையின்றி நேர்காட்சி,பின் காட்சி,பக்க வாட்டு காட்சிகள் என உடல் மொழி,முகபாவம் ,நடை தாளம்(திமிறி) கொண்டு அவர் வெளியிடும் உசுப்பேற்றும் வீர சுதந்திர உணர்வு. (இதுதான் ஒரிஜினல் action hero .போலி சண்டை காட்சிகள் தேவையில்லை).


    அவரின் ஹாம்லெட் நாடக காட்சி ,ஒரு ஷேக்ஸ்பியர் பள்ளிக்கு பாடமாக செல்ல வேண்டிய அதிசயம்.


    ஹாம்லெட் ,தன் தந்தையை கொன்று தாயை மணந்த சதிகாரன் சித்தப்பன் கிளாடியஸ் என்பவனை பழிதீர்க்க ,தந்தையின் ஆவியின் வற்புறுத்தலால் மன சாட்சியுடன் உரையாடும் (காதலி ஒபிலியாவிடம் காதலை முறி க்குமுன்பு), காட்சி. வாழ்வதா சாவதா என்ற மன சாட்சி போராட்டம் ,வாழ்வின் அவலங்கள்,சாவுக்கு பின் என்ன எனும் கேள்விகள் என்று மனதத்துவ சிக்கல்கள் நிறைந்த Nunnery Scene என்று connoiseurs குறிக்கும் Act 3 Scene 1.முதல் வியப்பு உலகத்தின் அத்தனை விதமான பாத்திரங்களும் பொருந்தும் முக அமைப்பு.இரண்டாவது வியப்பு ஒதெல்லோ,ஹாம்லெட் பாத்திரங்களுக்கு மற்றவர் குரல் கொடுத்தாலும் அவர் உள்வாங்கி நடித்த சிறப்பு.

    ஹாம்லெட் பாத்திர காட்சி சிறிதே சிக்கலான monologue .(இதே மன போராட்ட காட்சி சாந்தி படத்தில் வேறு வடிவில்),வாழ்வதா சாவதா, சாவுக்கு பின் என்ன என்ற மன போராட்டம்.வாழ்க்கை பற்றிய கேள்விகள். Odipus Complex கொண்டு தன் அன்னையிடம் வெறுப்பு கலந்த நேசம் ,இரண்டாம் தந்தையை (சித்தப்பன்)பழிவாங்கும் உணர்வு, தந்தையின் ஆவியால் துன்புற்று, காதலியை துறக்க முயலும் சிக்கல். வெறித்த விழிகளோடு , கத்தியுடன் stylised முறையில் சிந்தனை கலந்த நடையில் அவர் திரும்பும் விதம் இந்த காட்சிக்கு புத்துயிர்ப்பு கொடுக்கும்.இதற்கு குரல் கொடுத்த பேராசிரியர் சுந்தரம் இந்த பாணியில் இந்த காட்சி நடிக்க பட்டதே இல்லையென்றும் ,வசனங்களை காட்சியுடன் இணைக்க மிகவும் பிரயத்தனம் எடுத்ததாகவும் வியந்து பாராட்டி உள்ளார்.


    இந்த படத்தின் பலம் சிவாஜி,சிவாஜி,சிவாஜி,சிவாஜி,சிவாஜி(எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதி கொள்ளுங்கள்).அதனை தவிர இதன் நற்தன்மை,நன்னோக்கம்,கண்ணியமான படமாக்கம். ஒன்றிரண்டு பாடல்கள் அம்மம்மா, மதன மாளிகையில்.


    பலவீனம் என்றால்,


    அலுப்பு தட்டும் திரைக்கதை , தட்டையான பாத்திர வார்ப்புக்கள்.இதில் வரும் பாத்திரங்கள் நல்லவர்-அல்லாதவர் என்ற பகுப்பு. வாத்தியார் வீ.கே.ஆர் பாத்திரத்தில் சுத்தமாக உண்மை தன்மை இன்றி நல்லவராக மட்டும் glorify பண்ண பட்டுள்ளார்.(சிவாஜியின் கதை படிப்போருக்கு இந்த பாத்திரம் மிக தட்டையான ஒற்றை பரிமாணம்.அந்த கால படங்களின் glorification ).எல்லா பாத்திரங்களுமே உண்மை தன்மை இல்லாதது. Plastic Characters .

    இதில் கூத்து கலை பற்றி,அதில் இருக்கும் நடிகர்களின் வாழ்க்கை பற்றி எந்த ஆழமான பதிவுகளும் இல்லை.


    குடும்ப பிரச்சினைகளை எடுத்தாலும், ஒரு பீம்சிங் கால படங்களை போல பிரச்சினைகளில் ஒரு புத்திசாலித் தன வித்தியாச பாத்திர சிக்கல்கள் இல்லை. வெளிப்படையான ,சுவாரஸ்யமற்ற சிக்கல்கள். வெறும் உருக்கம் மட்டுமே கொண்டது.


    மற்ற பாத்திரங்கள் miscast என படும் தவறான தேர்வு. முக்கியமாக உஷாநந்தினி, ஸ்ரீகாந்த். நவராத்திரி,தில்லானா எடுபட்டதென்றால் ஏ.பீ.என் , அவருடைய troupe ,சாவித்திரி போன்ற சக நடிகர்களின் பங்களிப்பு.இதில் உஷா நந்தினி போன்ற பதுமைகளோ,மாதவன் போன்ற இயக்குனரோ அந்த மாயத்தை சாதிக்க முடியவில்லை. விஸ்வ நாதனிடம் ,கே.வீ.எம் இன் authentic period music கிடைக்கவில்லை. ஆத்மார்த்தமான நிஜமான பங்களிப்பு ஏ.பீ.என்,கே.வீ.எம் கூட்டணிக்கே சாத்தியம்.


    நாடக நடிகனை பற்றிய கதை,சுவையற்ற ,ஜீவனற்ற துணுக்கு கூத்துக்களை தொகுத்தளித்தாலும் ,நாடக நடிகனின் வாழ்கை பற்றி பேசவேயில்லை. மாறாக ,இதன் கதாநாயகன் எந்த தொழில் சேர்ந்தவனாக இருந்தாலும் ,இந்த கதை சொல்ல பட்டு விடலாம் என்பது முக்கிய பலவீனம். பாலமுருகன்-மாதவன் கூட்டு ,இந்த கதைக்கு வலு சேர்க்கவே இல்லை.


    ராஜபார்ட் ரங்கதுரை சிவாஜியை மட்டுமே நம்பியது. சிவாஜியால் மட்டுமே வெற்றி பெற்றது. இதற்கு உரிய கவனம் கொடுத்து செதுக்க பட்டிருந்தால் ,மகா வெற்றி பெற்றிருக்க கூடிய சாத்தியகூறுகள் கொண்ட கரு.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  4. #2753
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Irene Hastings View Post
    PUDHIYA PARAVAI

    PART-1

    அறிமுகம்

    அதாவது , எப்பொழுதும் மேல் தட்டு மனிதர்களையே தினமும் சந்திப்பதாலும் அல்லது அவர்களுடன் பழகுவதாலும் ஒரு பக்குவமும், தனி நாகரிகமும் ஆங்கிலத்தில் DECORUM என்று சொல்வார்களே அதை பின்பற்றுவர் செல்வந்தர்கள் ...

    I also watched ANbe vaa and the introduction of Makkal Thilagam :
    JB is also a very rich business man ..Coming back from an overseas business trip and he is getting down ..
    First thing, He will thank the support staff and then briskly will get down waving to the sea of public . Here the character appears in full suit with hat and gets garlanded by all…


    இங்கும் நாம் பார்க்கிறோம் ..!

    Part - 2 to follow

    சோழியன் குடுமி சும்மா ஆடாதே ன்னு பாத்தேன்.....!!!!

    நடிகர் திலகம் அவர்களை பற்றி தான் எழுதுவதாக பதிவு செய்ததாகக் ஞாபகம் !

    அன்பேவா காட்சியமைப்பும் உயர்திரு மக்கள் திலகம் அவர்களின் அறிமுகம் வேறு முகம் !

    புதிய பறவை காட்சியமைப்பும் உயர்திரு நடிகர் திலகம் அவர்களின் அறிமுகமும் வேறு ஒரு முகம் !

    இரெண்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை...!

    இரெண்டாம் பாகம் பதிவு செய்யும் முன் உங்களுடைய ஒப்பீடுகளை முதலில் ஒப்பீடு செய்து பதிவிடவும் !

    தாங்கள் கோடிட்டு கூறியதற்கும்... காட்சிக்கும் சம்பந்தமே இல்லாத ஒப்பீடுகளை தவிர்க்கவும் திரு ஐரீன் !

    நன்றி !

  5. Thanks Subramaniam Ramajayam thanked for this post
  6. #2754
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by senthilvel View Post

    ஆஹா !

    என்ன அற்புதமான , ஒரு கலையான, களையான, தேஜஸான முகம் !

    திரை உலக சித்தர் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் !

    உலகில் உள்ள அனைத்து முகங்களை வைத்தாலும் .....இந்த திருமுகத்திர்க்கு ஈடும் இணையும் உண்டோ ....யாம் அறியோம் பராபரமே !

    முகத்தை பார்த்தாலே அந்த கலைவாணியின் அருள் முப்பெரும் தேவியரின் அனுக்ரஹம் இவருக்குள் தாண்டவமாடுவது நன்கு விளங்குகிறது !

    Thanks so much senthilvel sir

  7. Thanks Subramaniam Ramajayam thanked for this post
    Likes uzzimah, Subramaniam Ramajayam liked this post
  8. #2755
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  9. #2756
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by gopal,s. View Post
    ராஜபார்ட் ரங்கதுரை -1973.
    கோபால் சார்

    வணக்கங்கள் !

    மேற்கூறிய உங்களுடைய விமர்சனம் படித்தேன் !

    விமர்சனம் யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்ற ஒரு பொது நியதி அடிப்படையில் மட்டுமே உங்களுடைய இந்த விமர்சனத்தை பார்க்கமுடியும் !

    காரணங்கள் பின்வருவன :

    1) ஒரு திரைப்படம் ஓடும் நேரம் இரேண்டேகால் முதல் இரேண்டரை மணிநேரம், பொதுவாக. இரேண்டரை மணிநேரம் என்று வைத்துகொண்டால் கூட நீங்கள் கூறும் முறையில் கதைகள் அமைந்தால் அது கிட்டத்தட்ட நாலு மணிநேரம் தாண்டும் !

    2) ஒரு நாடக கலைஞன் பால்ய வயது தொட்டு வளர்ந்து பெரியவன் ஆகி திருமணம் முடிந்து வயாதாகும் வரை ஒரு திரைப்படம் எடுக்கவேண்டுமானால் நாலுமணிநேரம் போதாது என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். அதன் அடிப்படையில் உங்கள் விமர்சனம் அமையவேண்டும் !

    3) இந்த இரண்டு மணிநேரத்தில் கதாநாயகனின் நடிப்பு ஆளுமை, மற்ற நடிகர்களுக்கு நடிப்பில் சமவாய்ப்பு வரும் வகையில் பாத்திர படைப்பு, கொஞ்சம் ஹாஸ்யம், நல்ல இசை, செவிக்கினிய பாடல்கள், இடம் இருந்தால் ஒரு சிறு கைகலப்பு கொண்ட சண்டைகாட்சி, சிறிது விறுவிறுப்பு இவை அத்தனையும் ஒரு திரைப்படத்தில் இரேண்டரை மணிநேரத்தில் கொண்டுவரவேண்டும் என்பதை புரிந்துகொள்ளுங்கள் முதலில்.

    4) பெரிய இயக்குனர்கள் என்று மாயையில் வாழ்ந்த திரு பாலச்சந்தர், பாரதிராஜா மற்றும் சிலர் எடுத்த சிறப்பான படங்கள் என்று போற்றி புகழப்பட்ட படங்களில் கூட 60 சதவிகிதம் மேல் உங்கள் பாணியில் கூறவேண்டும் என்றால் ஓட்டை உள்ளது என்பதை நீங்களும் உணர்ந்து கொள்ளவேண்டும் !

    இரேண்டேகால் மணிநேரத்தில் மக்களை படத்தோடு ஒன்றிவிடவைத்தது ராஜபார்ட் ரங்கதுரையின் மிகபெரிய சாதனை. ஆகையால்தான் 200 தொடர் அரங்கு நிறைவு அனைத்து திரை அரங்கிலும் சாதியமாயிற்று !

    சமீபத்தில் வெளிவந்த சித்தார்த் நடித்த காவிய தலைவன் படம் சென்று பாருங்கள்...இதே ராஜபார்ட் ரங்கதுரை எப்படி இவர்கள் சின்னாபின்ன படுத்தியிருக்கிறார்கள் என்பது நன்கு விளங்கும் !

    உங்கள் விமர்சனத்திற்கு நான் தரும் மார்க் 0. முதலில் திரைக்களத்தை அதன் நேரத்திற்கு ஏற்ப எப்படி அமைத்துள்ளார்கள் என்பதை உணர்ந்து இனியாவது விமர்சனம் எழுத முயற்சி மேற்கொள்ளுங்கள் !

    உங்களுடைய விமர்சனம் உங்கள் உரிமை என்ற வரையில் ஒத்துகொள்ளபடுகிறது ...அவ்வளவுதான் !
    The content of your review is just falling flat !!!

    Rks

  10. Likes Harrietlgy liked this post
  11. #2757
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Irene Hastings View Post
    PUDHIYA PARAVAI

    PART-1


    இங்கு தான் நாம் பார்க்கிறோம் ..உடனே உணர்கிறோம்...ஒ இவன் அல்ல... இவர் ஒரு மேல் தட்டு மனிதர் !

    Part - 2 to follow
    புதிய பறவை திரைப்படத்தில் நடிகர் திலகம் அவர்கள் கதாபாத்திரம் அப்படி அமைக்கபட்டவிதம் என்று கூறினாலும்....

    ஒரு COSMOPOLITAN BODY LANGUAGE ....MANNERISM ....BEHAVIOUR ....ETTIQUETTE ....முக்கிய இடங்களில் ஆங்கிலத்தில் நடிகர் திலகம் உரைக்கும் பாங்கு ...!

    உதாரணம் ...சௌகார் அவர்களிடம் நடிகர் திலகம் அவர்களை அறிமுகபடுத்தும் காட்சி..

    MEET MR GOPAL ...எ MULTI MILLIONAIRE ....என்றவுடன்...சௌகார் ..OH ...PLEASED TO MEET YOU என்று உரைப்பார் ..!

    நடிகர் திலகம் அவர்கள் உடனே ....SO AM I ! என்று பதில் உரைப்பார் !

    பிறகு சௌகாரை DROP செய்ய முனையும்போது ..சௌகார்...thankyou என்பார் ...உடனே நடிகர் திலகம் "PLEASURE IS MINE ! என்பார் !

    நடிகர் திலகம் ENGLISH PRONUNCIATION ஒரு ஐரோப்பா மற்றும் COSMOPOLITAN ஸ்டைல் தொனிக்கும் !

    வேறு எவரிடமும் அது இன்றுவரை தொணித்ததாக எனக்கு தெரியவில்லை ! அதுதான் நடிகர் திலகம் !

  12. Thanks Subramaniam Ramajayam thanked for this post
  13. #2758
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    தாரை தப்பட்டை




    பாலா



    இளையராஜா




    ஒரு கண்ணோட்டம்...

    ....

    இது விமர்சனமாகக் கருதுவதை விட ஒரு ரசிகரின் கண்ணோட்டமாக எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

    விமர்சனமாக நினைப்பவர்களுக்கு... துக்ளக் பாணியில் ... ஓர் எச்சரிக்கை..

    இப்படித்தான் ஒரு படம் ஆரம்பிக்க வேண்டும், இப்படித்தான் ஒரு படம் பயணிக்க வேண்டும்.. இப்படித்தான் ஒரு படம் முடியவேண்டும் என்கிற அணுகுமுறையை முற்றிலும் மூட்டை கட்டி வைத்து விட்டு வந்தால் மட்டுமே இப்படத்தை ரசிக்க முடியும்.


    முதலில் உங்களுக்குத் தோன்றலாம்.. நடிகர் திலகம் திரியில் இந்தப் படத்தைப் பற்றி ஏன் எழுத வேண்டும்... போகப் போக நீங்களே தெரிந்து கொள்வீர்கள்..

    சன்னாசி (சசிகுமார்) ஒரு நாட்டுப்புறக் கலைஞர். பல கருவிகளை வாசிக்கத் தெரிந்தவர். மிகப் பெரிய கலைஞரின் புதல்வரும் கூட. இவருடைய தந்தை சாமிப்புலவர் (ஜி.எம். குமார்) மிகப் பெரிய பாடகர் மற்றும் தவில் வித்வான். தன் வித்தையை உண்மையிலேயே தெய்வமாக மதிப்பவர். சுயமரியாதை மிக்கவர். தன் கலையை விலைக்கு அளிக்கும் எண்ணம் சிறிதும் இல்லாதவர்.

    ...

    ஒரு சாண் வயிறே இல்லாட்டா இந்த உலகத்தில் ஏது கலாட்டா என்ற பழமொழிக்கேற்ப, வயிற்றுப் பிழைப்பிற்காக வணிகரீதியிலாக தன் கலைத் திறமையைப் பயன் படுத்தி குடும்பம் நடத்துகிறான் சன்னாசி. அவனுடைய அத்தை மகள் சூறாவளி (வரலக்ஷ்மி சரத்குமார்) சன்னாசியைத் தன் கணவனாக வரிப்பவள். சிறந்த நாட்டிய நங்கை. அதே சமயம் தன் மாமனான சாமிப்புலவன் மேல் உயிரையே வைத்திருக்கிறாள்.

    சூறாவளியின் மேல் ஒரு கண் வைத்திருக்கும் கருப்பையா (சுரேஷ்) அடிக்கடி சன்னாசியைச் சுற்றிச் சுற்றி வந்து அவளைப் பற்றி விசாரிக்கிறான். அவனுடைய நோக்கம் தெரிந்த சன்னாசி அவனை அடித்து விடுகிறான். என்றாலும் கருப்பையா சூறாவளியின் தாயாரை சந்தித்து அவள் மனதைக் கவர்ந்து அவள் மூலமாக சூறாவளியை மணக்க அடிபோடுகிறான்.

    சூறாவளியின் ஆட்டத்திறமையைப் பாராட்டி அவர்களுடைய தெரிந்த வட்டத்திலுள்ள சிலர் அவர்களுக்கு அந்தமானில் வாய்ப்புத் தேடித் தருகின்றனர். போன இடத்தில் இவர்களுடைய ஆட்டத்தை அனைவரும் ரசித்துப் பாராட்ட, ஏற்பாடு செய்தவர்களில் சிலர் சூறாவளி மற்றும் குழுப் பெண்களை ரசிக்கின்றனர். அவர்களை காட்டும் படி சன்னாசியிடம் கேட்க, அவனும் அவர்களுடைய உள்நோக்கம் புரிந்தாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல் அவர்களை அந்தப் பெண்களின் அறைக்கு அழைத்துச் செல்கிறான்.

    இவர்களுடைய உள்நோக்கம் புரிந்த பெண்கள், குறிப்பாக சூறாவளி, கோபத்தின் உச்சிக்கே சென்று விடுகிறாள். அவர்களில் ஒருவனை நையப் புடைத்து விடுகிறாள். அவர்களும் கடும் கோபமுற்று இவர்களுடைய நிகழ்ச்சிகளை ரத்து செய்வதோடு, பயண டிக்கெட்டுகளையும் கிழித்துப் போட்டு விடுகின்றனர்.

    நிகழ்ச்சி ரத்து, டிக்கெட் இல்லை போன்ற காரணங்களால் குழுவினருக்கு மிகவும் இக்கட்டான நிலை ஏற்பட்டு விடுகிறது. ஏதாவது சம்பாதித்தால் தான் ஊருக்குத் திரும்ப முடியும் எனத் தவிக்கும் போது ஒரு கட்டிட ஒப்பந்தக்காரர் இவர்களுக்கு வேலை வாங்கித் தருகிறார். கட்டிட வேலை பார்க்கும் இடத்தில் எதிர்பாராத விபத்தால் சூறாவளியின் காலில் அடிபட்டு நகம் பெயர்ந்து விடுகிறது. இதன் நடுவில் களேபரம் ஏற்பட்டு முதலாளியின் கோபத்தின் காரணமாக ஒப்பந்தக்காரர் இவர்களைத் துரத்தி விடுகிறார்.

    இந்தக் காரணங்களால் மிகவும் மனம் வருத்தமுற்ற சன்னாசி உண்ணாமல் உறங்காமல் அப்படியே அமர்ந்து விடுகிறான். இதைக் காணும் சூறாவளியும் மனம் வருந்தி, தன் கால் வலியையும் பொருட்படுத்தாமல் ஆடுகிறாள். இந்த அற்புதமான ஆட்டத்தினால் அவர்களுக்குத் தேவையான பணம் கிடைத்து விடுகிறது. இதனால் மனம் மாறும் சன்னாசிக்கு, அவள் மேல் பதிலுக்கு அன்பும் பாசமும் அதிகமாகிறது. அவளை மருத்துவ மனையில் சிகிக்சை பெற வைத்து திரும்புகிறார்கள்.

    இதன் நடுவில் சூறாவளியின் தாயார் கருப்பையாவின் பேச்சில் மயங்கி சன்னாசியிடம் சூறாவளியை கருப்பையாவுக்கு மணம் முடித்து வைக்க வாக்களித்து விட்டதாக்க் கூறி அவனுடைய சம்மத்த்தை வாங்கி விடுகிறாள். அதன் படி கருப்பையாவுக்கும் சூறாவளிக்கும் திருமணம் நடக்கிறது.

    மீண்டும் குழுவிற்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட, சன்னாசியின் நண்பனின் ஆலோசனையின் பேரில் ஒரு பிரபலமான பெண்மணியை அதிக பணம் கொடுத்து ஆட அழைக்கின்றனர். அவளும் ஒப்புக் கொள்கிறாள். அந்த நேரத்தில் ஒரு சாவுக்கு இசையும் நடனமும் வேண்டும் என ஒரு கோரிக்கை வர பணத்திற்காக அதை ஏற்றுக் கொள்ளும் சன்னாசி அந்தப் பெண்மணியை ஆடவைத்து நல்ல பணம் சம்பாதிக்கிறான்.

    தன் மகன் இப்படி சம்பாதிப்பதை சற்றும் விரும்பாத சாமிப்புலவர் அவனுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். வார்த்தை தடிக்க, தந்தை என்றும் பாராமல் சன்னாசி மிகவும் கடுமையாக பேசி விடுகிறான். இதனால் சாமிப்புலவர் மிகவும் மனம் நொடிந்து போகிறார். என்றாலும் சன்னாசியும் மனம் நொடிந்து போகிறான்.

    இந்த நேரத்தில் சாமிப்புலவனுக்கு ஒரு வெள்ளைக்கார துரை வீட்டில் பாடும் வாய்ப்புக் கிடைக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சாமிப்புலவனின் பாட்டு வெள்ளைக்காரனை மிகவும் மனம் உருக வைத்து விடுகிறது. ஏராளமான பணமும் அணிகலனும் அளிக்க முன் வருகிறான். ஆனால் சாமிப்புலவனோ அதை மறுத்து விடுகிறான்.

    தன் மகன் சன்னாசியிடம் இதை பெருமையோடு சொல்லும் சாமிப்புலவன், நான் ஜெயிச்சிட்டேண்டா என்று சொல்லி தலை சாய்கிறான். அதுவே அவனுடைய கடைசி நேரமாகிறது.

    அந்த நேரத்தில் சூறாவளியின் தாயாரை சந்திக்கும் சன்னாசி அவளைப் பற்றிக் கேட்க, மனக்குமுறலோடு துக்கம் தொண்டையடைக்க நடந்த்தை சொல்கிறாள் சூறாவளி. பல நாட்களாக சூறாவளியைக் காணாததால் கலெக்டரின் உதவியாளர் என கருப்பையா சொன்னதை நம்பி கலெக்டரிடம் விசாரிக்க, அவரோ அப்படி யாரும் தனக்கு ஓட்டுநர் கிடையாது என சொல்லி அனுப்பி விட, மகளைக் காணாமல் பரிதவிக்கிறாள் சூறாவளியின் தாயார். சன்னாசியோ இதை ஏன் முன்பே சொல்லவில்லை என கடிந்து கொள்கிறான்.

    எப்படியோ சூறாவளியின் இருப்பிடத்தைக் கண்டு பிடித்து விசாரிக்கும் சன்னாசியிடம் சூறாவளி தன் அனுபவங்களை சொல்கிறாள். முதலிரவில் கணவனுடன் செல்பவள் காலையில் விழித்துப் பார்க்கும் போது படுக்கையில் வேறு யாரோ இருப்ப்தைப் பார்த்து திடுக்கிடுகிறாள். அவனை நன்றாக அடிக்கிறாள். அவனும் அலறி அடித்து ஓடுகிறான். இதைப் பார்த்த கருப்பையா ஓடி வந்து அவளை மிதித்து சித்திரவதை செய்கிறான். முந்தைய இரவில் அவன் போதைப் பழக்கத்திற்கு அடிமைப் பட்டவனாக காட்டப்படுகிறான். இப்போது இதுவும் சேர்ந்து கொண்டதால் சூறாவளி செய்வதறியாது திகைக்கிறாள். அவளை அடித்து உதைக்கும் கருப்பையா அவளை ஒரு அறையில் அடைத்துப் பூட்டி விடுகிறான். சிறிது நேரம் கழித்து மெதுவாக கதவின் இடுக்கு வழியாகப் பார்க்கும் சூறாவளி திடுக்கிட்டுப் போகிறாள். கருப்பையா ஒரு ஒரு விபசார தரகன் என்பதும் அது மட்டுமின்றி பெண்களை வாடகைத்தாயாக பயன்படுத்தி பணம் சம்பாதிப்பவன் என்றும் தெரிந்து கொள்கிறாள். அந்தப் பெண்களை சித்ரவதை செய்து சம்மதிக்க வைக்கும் கருப்பையா எதற்கும் தயங்காதவன் என்பது அவளுக்கு புலனாகிறது.

    இந்த தருணத்தில் மிகப் பெரிய செல்வந்தர் ஒருவருக்கு ஒரு குழந்தை வாரிசு வேண்டும், அதுவும் அவருடைய கருவிலிருந்து உருவாக வேண்டும் அதற்கு ஒரு வாடகைத்தாய் வேண்டும் என்கிற நிபந்தனையோடு ஒரு ஜோதிடர் கருப்பையாவை அணுகுகிறார். அவன் காட்டிய பெண்களில் அந்த செல்வந்தர் சூறாவளியைத் தேர்வு செய்கிறார். வலுக்கட்டாயமாக அவளை அந்தத் திட்டத்திற்கு உட்படுத்தி பணம் வாங்கி விடுகிறான் கருப்பையா.

    ஜோதிடர் ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தான் அந்தக் குழந்தையை வெளியே எடுக்கவேண்டும் என கண்டிப்பாக சொல்லி விடுகிறார்.

    இதற்கேற்ப ஒரு மருத்துவரை ஏற்பாடு செய்யும் கருப்பையாவிடம் டாக்டரும் செவிலியரும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தான் அந்தக் குழந்தையை எடுக்க முடியுமே தவிர, ஜோதிடர் சொல்லும் நேரத்தில் எடுக்க முடியாது, அப்படி எடுத்தால் ஏதேனும் ஒரு உயிர் நிச்சயமாக ஆபத்தை சந்திக்கும், இறக்கவும் நேரிடலாம் என எச்சரிக்கிறார்கள். இதனால் ஒரு சவக்கிடங்கு ஊழியர் மூலமாக, தாயார் இறந்தாலும் பரவாயில்லை, குழந்தையை அந்த நேரத்தில் எடுத்து விடவேண்டும் என கருப்பையா சொல்லி அதற்கு ஏற்பாடு செய்கிறான்.

    இந்த சம்பவங்களை சன்னாசியிடம் சூறாவளி சொல்லும் போது கருப்பையாஅங்கே வந்து விடுகிறான். சன்னாசியும் கருப்பையாவும் அவனுடைய ஆட்களும் ஆக்ரோஷமாக போராடுகிறார்கள்.

    முடிவை வெள்ளித் திரையில் காண்க என்கிற வழக்கமான பல்லவியை சொல்வதில் அர்த்தமில்லை. முழு கதையையும் கூறினால் தப்பில்லை. பலத்த அடியை வாங்கிக் கொண்டு, சூறாவளியைக் காப்பாற்றவேண்டும் என்கிற நோக்கத்தினால் மீண்டும் மீண்டும் கருப்பையாவின் ஆட்களுடன் போராடும் சன்னாசி ஒரு கட்டத்தில் கருப்பையாவை மாய்த்து விடுகிறான். சூறாவளியைக் காப்பாற்ற உள்ளே போகும் சன்னாசியை சவக்கிடங்கு ஊழியர் வழிமறிக்க, அவனையும் மாய்த்து விடுகிறான்.

    அங்கோ சூறாவளி மாண்டு கிடக்கிறாள்.

    அந்தக் குழந்தை சன்னாசியின் கைகளில் தொப்புள் கொடியோடு.

    இயக்கம் பாலா என்கிற முத்திரையோடு படம் நிறைவடைகிறது.


    தாரை தப்பட்டை - பாலா என்கிற மிகப் பெரிய இயக்குநரின் கிரியேடிவிடியின் புதிய பரிமாணம். அவருக்குள் இருக்கும் நடிகர் திலகம் இப்படத்தில் பாலாவின் ஆசை தீர வெளிப்பட்டிருக்கிறார்... அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கிறார்..

    சாமிப் புலவனின் பாத்திரப் படைப்பு சிக்கல் சண்முக சுந்தரத்தை வைத்து உருவகப்படுத்தப்பட்டிருக்கிறது. என் உள்ளம் கோவில் என்கிற பாடல் ஒரு திருமுறையோடு இணைந்து ஒலிக்கும் காட்சியில் சாமிப்புலவரின் ஒவ்வொரு அசைவிலும் நாம் பாலாவின் உள்ளக்கிடக்கையைக் காண முடிகிறது. அந்தப் பாத்திரத்தை அவர் செதுக்கிய விதம் தில்லானா மோகனாம்பாள் நடிகர் திலகத்தின் குணாதிசயத்தையும் அதே சமயம், குங்கும்ம் படத்தில் சின்னஞ்சிறிய வண்ணப்பறவை பாடலில் நடிகர் திலகத்தின் தோரணையையும் மனதில் வைத்து படமாக்கி யிருக்கிறார் என்பது புலனாகிறது.

    அதே போல தன் குழு உறுப்பினர்களுக்காக தன் கொள்கையில் இருந்து இறங்கி வரும் சன்னாசி அப்படியே ரங்கதுரையை நினைவூட்டுகிறார்.

    அது மட்டுமின்றி மிகவும் பொருத்தமாக அதே சமயம் மாறுபட்ட கோணத்தில் தங்க பதுமை பாடலை பயன்படுத்தியிருக்கும் பாலாவின் துணிச்சலும் நம்மை வியக்க வைக்கிறது.

    கடைசிக் காட்சியில் கையில் குழந்தையோடு சன்னாசி நிற்கும் காட்சியும் அதே போலத் தான் நடிகர் திலகத்தை நினைவூட்டுகிறது.

    இளையராஜா என்கிற மிகப் பெரிய இசைக்கலைஞனை நாம் பாராட்டியே ஆகவேண்டும். மெல்லிசை மன்னருக்குப் பின் பின்னணி இசையிலும் ஈடு இணையற்றவராக விளங்கும் அவருக்கு இது 1000 வது திரைப்படம் என்பது மிகப் பொருத்தமான பேறு. மேற்கத்திய இசைக்கருவிகள் கிட்டத்தட்ட இல்லவே இல்லை என்பதாகத்தான் இப்படத்தின் இசை நமக்குத் தோற்றுவிக்கிறது.

    அத்தனை இசைக்கருவிகளும் பாரம்பரியமான தொன்மையான நமது நாட்டு இசைக்கருவிகளைக் கொண்டே படம் முழுதும் அவர் இசை மழை பொழிந்திருக்கிறார். எந்த இடத்தையும் தனியாக குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதில்லை.

    குறிப்பாக அவர் பாடிய என் உள்ளம் கோவில்.. உள் மனதில் புகுந்து நாடி நரம்புகளையெல்லாம் சிலிர்க்க வைக்கும் அற்புத அனுபவம்... இந்தப் படத்தில் இளையராஜாவின் இசையைப் பற்றி தனியாக ஒரு முனைவர் பட்டமே ஆய்வு செய்யலாம்.

    படம் பார்த்தால் இது போன்ற படங்களைப் பார்க்கவேண்டும் என்கிற எண்ணத்தை என் மனதில் தோற்றுவித்தது தாரை தப்பட்டை.

    தாரை தப்பட்டையோடு மக்கள் மிகப் பெரிய வரவேற்பை அளிக்க வேண்டிய முழுத்தகுதியும் பெற்றது பாலாவின் தாரை தப்பட்டை.

    குறைகள் கண்டு பிடிக்கவேண்டும் என்கிற நோக்கத்தை முற்றிலும் ஒதுக்கி விட்டு ஒரு படைப்பாளியின் அணுகுமுறையில் இதை எழுதியிருக்கிறேன். என்றாலும் இவ்வளவு அருமையான நடிகையான வரலட்சுமிக்கு இன்னும் கொஞ்சம் வாய்ப்பளித்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.
    Last edited by RAGHAVENDRA; 23rd January 2016 at 06:32 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  14. Thanks mappi thanked for this post
    Likes Russellmai, uzzimah, Gopal.s, mappi liked this post
  15. #2759
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    தாரை தப்பட்டை - பின்னூட்டம்...

    வரலட்சுமி சரியான தேர்வு - நடனப் புயலாக பின்னுகிறார்.

    பாத்திரங்களின் தன்மையை சரியாக சித்தரிக்கும் நோக்கில் அவர்களுடைய உடை வடிவமைக்கப்பட்டுள்ளது ஆனால் இதை குறுகிய நோக்கில் ஆபாசம் என ஒரே வார்த்தையில் கூறுவது. ஏற்கத்தக்கதல். வலுவில் திணிக்கப்படும் குத்தாட்டங்களில் இதைப் போன்று பல மடங்கு எக்ஸ்போஸ் செய்யப்படும் அளவிற்கு இதில் ஒரு சதவீதம் கூட திணிப்பு என சொல்ல முடியாது.

    வன்முறை என சிலர் கூறலாம், அந்தக் குழுவினரின் ஆட்டத் தொழில் முறையின் காரணமாக இயல்பாகவே அவர்களுக்கு இருக்கக்கூடிய உடல் வலு தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக சண்டைகள் இயல்பாகவே சற்று குரூரமாக அமைந்ததில் எந்தத் தவறுமில்லை. அது ம்டடுமின்றி அந்த நேரத்தில் போராடவேண்டும் என்கிற உத்வேகத்தில் அந்தப் பாத்திரம் சண்டையிடும் போது தானாகவே எதற்கும் துணியும் மனோபாவத்துடன் மோதும்.

    உரையாடலும், ஒரு பாடல் காட்சியில் வரும் உரையாடல் கலந்த வரிகளும் உள்மனதில் அந்தந்த பாத்திரங்களில் இருக்கும் எண்ணங்களின் வெளிப்பாடே.

    தங்கப் பதுமை பாடலைப் பொறுத்த மட்டில் மெட்டு மட்டுமே பெரும் அளவு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. படத்திற்கேற்ப அந்தப் பாத்திரத்தின் சூழலுக்கேற்ப வரிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தப் பாடல் காட்சியில் சகோதரனும் சகோதரியும் இணைந்து கூத்தாடுவதும், வெளிப்படையாகப் பேசுவதும் மக்கள் மத்தியில் எதிர்ப்பைப் பெறலாம். ஆனால் அதற்கான காரணத்தை அவன் கூறும் போது அந்தப் பாத்திரம் நியாயப்படுத்தப்படுகிறது.

    இறுதிக்கட்ட சண்டைக்காட்சியில் இளையராஜாவின் பின்னணி இசை .. அவருடைய தனி முத்திரையை ஆழமாகப் பதிக்கிறது.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  16. Thanks mappi thanked for this post
    Likes Russellmai, uzzimah, mappi, Gopal.s liked this post
  17. #2760
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    கோவை மாநகரில் பாவ மன்னிப்பு திரைக்காவிய வெளியீட்டினையொட்டி அர்ச்சனா க்ரூப் சிவாஜி பக்தர்கள் வெளியிடும் பதாகையின் நிழற்படம்.

    நன்றி டாக்டர் ரமேஷ் பாபு, கோவை.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  18. Thanks Russellmai thanked for this post
    Likes Russellmai, Harrietlgy liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •