Page 205 of 401 FirstFirst ... 105155195203204205206207215255305 ... LastLast
Results 2,041 to 2,050 of 4010

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 17

  1. #2041
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ( 44 )

    பாணபத்திரர் பாடிப் பாடி
    ஆலய வளாகத்தினுள்
    மயங்கிச் சரிந்திருக்க...

    விறகு வெட்டியாக உருவெடுத்து, லிங்கம் விட்டு
    இறங்கி வந்து, மயங்கிக்
    கிடக்கும் பாடகனை கரிசனத்துடன் பார்த்து,
    உதடு பிரிக்காமல் சிரித்து,
    விறகுக் கட்டுக்காக காற்றில்
    ஒயிலாகக் கையேந்துவாரே?

    கடவுள் நினைத்த மாத்திரத்தில்
    கையில் விறகுக் கட்டு வந்தது
    போல், நம் கடவுள் நினைத்த
    மாத்திரத்தில் அவருக்குத்
    தேவையான பாவனைகள்
    வந்தனவோ...?

  2. Thanks Russellmai thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2042
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ( 45 )

    நடிகர் திலகம் சுமந்து வரும்
    விறகுக் கட்டைப் பார்த்தால்,
    அதில் ஏழெட்டு விறகுகளே
    வைத்து கட்டப்பட்டிருக்கும்.
    பார்த்தாலே தெரியும்.அதைத்
    தூக்கினால் அதிக எடை இருக்காது.

    ஆனால் ஆணும், பெண்ணுமாய்
    கூட்டம் சூழ்ந்து கொள்ள,
    கூட்டத்தினரோடு அவர் பேசும்
    போது கவனியுங்கள். தலையில் சுமையோடு அடுத்தவரோடு பேசுவோர்,
    தலையைக் கழுத்தோடு
    அமிழ்த்திக் கொண்டு பேசுவது
    போலவே தத்ரூபமாய்ச்
    செய்திருப்பார்.

  5. Thanks Russellmai thanked for this post
  6. #2043
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ( 46 )

    "நல்லாப் பேசுறியேப்பா."
    என்று யாரோ பாராட்ட...

    நடிகர் திலகம் அழகாகக்
    கேட்பார்.."பேசத் தெரியலேன்னா ஒங்ககிட்டல்லாம் பொழைக்க
    முடியுங்களா?"

    பதிலுக்குப் பதிலாக கேள்வியைத் திருப்பும் அழகு.

    ஒரு அன்றாடங்காய்ச்சி
    தினந்தோறும் எத்தனை
    மனிதர்களிடம் பேசிக் கொண்டே இருக்க
    வேண்டியிருக்கிறது என்பதை
    உணர்த்துகிறது அந்தப்
    பாமரத்தனமான கேள்வியின்
    வீச்சு.

  7. Thanks Russellmai thanked for this post
  8. #2044
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ( 47 )

    "வாங்க மறந்த கொசுவர்த்தி
    தூக்கத்தை
    விரட்டியது."

    -கொசுக்கடியால் முழுசாய்
    ஓரிரவு தூக்கமிழந்த துக்கத்தில்
    முன்பு எழுதிய கவிதை
    அது.

    கொசு, எப்போது, எங்கே
    கடிக்குமென்று யூகிக்க
    முடியாது.

    நடிகர் திலகம் அதை அப்படியே
    வெளிப்படுத்தியிருப்பார்.
    மட்ட மல்லாக்க படுத்திருப்பவர், திடீரென்று
    உடலின் ஒரு பகுதியில்
    சிலிர்த்துக் காட்டுவார்.

  9. Thanks Russellmai thanked for this post
  10. #2045
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ( 48 )

    ஆணவ ஹேமநாதரை
    சாதுர்யமாக விரட்டிய பிறகு,
    பாணபத்திரரிடம் வந்து
    தன்னை நிரூபிப்பார்.

    "என்னை நல்லாப் பாரு...
    புரியும்" என்று சொன்ன பிறகு,
    "கடகட"வென தனித்தனிச்
    சிரிப்புகளைக் கோர்த்த ஒரு
    பெரிய சிரிப்புச் சங்கிலியால்
    நம்மைக் கட்டிப் போடுவார்.

    ஐம்பது ஆண்டுகளானாலும்
    அந்தச் சிரிப்பிலிருந்து நம்மை
    விடுவித்துக் கொள்ள நமக்கு
    விருப்பமில்லை.

  11. Thanks Russellmai thanked for this post
  12. #2046
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ( 49 )

    தன்னைக் கோபப்படுத்தியது
    தகப்பனின் விளையாட்டுகளில்
    ஒன்றுதான் எனப் புரிந்து
    கொள்ளும் பிள்ளை முருகனிடம் வந்து, "குமரா..
    உன் சினம் தணிந்ததா?" என்று
    கனிவுடன் கேட்பார்.

    கனிவு, கண்டிப்பு, கோபம், பரிவு,
    மீண்டும் கனிவு என்று
    உணர்வுகளால் மாறி,மாறிக்
    காட்சியளிக்கும் ஒரு தந்தையாக கடைசி வரைக்கும்
    வாழ்ந்திருப்பார்... நடிகர்
    திலகம்.

  13. Thanks Russellmai thanked for this post
  14. #2047
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like


    ( 50 )

    எல்லாம் சுபமாக முடிந்து,
    அன்பால் அனைவரும்
    இணைந்து நிற்க...

    ஔவைக் கிழவி வந்து
    உலகாளும் நாயகனை ஒன்று,
    இரண்டு, மூன்று என வரிசைப்
    படுத்திப் பாடப் பாட அந்தக்
    களையான கலை முகத்தில்
    காட்டும் பெருமிதம்...

    ஒப்பற்ற கலைஞனைத் தன்
    தலைமகனாய்ப் பெற்ற
    கலைத் தாயின் பெருமிதத்தோடு ஒப்பிடப்பட
    வேண்டியது.

  15. Thanks KCSHEKAR, Russellmai thanked for this post
  16. #2048
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  17. Thanks Russellmai thanked for this post
  18. #2049
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ஆதவன் ரவி
    மிக்க மகிழ்ச்சி.சிறப்பான பதிவு.
    வாழ்த்துக்கள்.

  19. #2050
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நிஜமான உண்மை

    எங்களுக்கு சிவனையும் தெரியாது.
    சாமியையும் தெரியாது.
    சிவாஜியை மட்டுமே தேரியும்.

    சிவாஜி என்பது ஆத்திகமும் அல்ல
    நாத்திகமும் அல்ல.
    அது அன்பின் வெளிப்பாடு.

    தொலைக்காட்சியா அது சிவாஜியை மட்டுமே காண்பிக்க வேண்டும்.
    திருவிழாவா
    அங்கே சிவாஜியின் குரல் மட்டுமே ஒலிக்க வேண்டும்
    பாட்டுக்கச்சேரியா
    நடிகர்திலகம் பாடிய பாடல்களே
    இசைக்கப்படவேண்டும்.

    பொழுதுபோக்காய் போனது பார்ப்பவனின் நிமிடங்கள்.
    நிமிடங்களை பொன்னாய் மாற்றியது
    சிவாஜியின் படங்கள்.

    கற்பவனை அத்தோடு நிறுத்தியது
    மற்றோரின் நடிப்பு.
    கற்றலை மேம்படுத்தியது
    சிவாஜியின் நடிப்பு.

    சூரியன்கூட நடு உச்சியிலேதான் வெப்பம் கூட்டும்.
    திரையின் எந்த மூலையிலிருந்தாலும்
    இவர் நடிப்பு பிரகாசம் காட்டும்.

    நடிகருக்கெல்லாம் நடிப்பு பாடம்.
    அந்த
    நடிப்பிற்கே இவர்தான் வேதம்.

    பிள்ளையார் சுழிபோட்டு செயலெதுவும் தொடங்கு என்பது முறை
    முறையாக நடிக்க மற்றவர் நாடுவது இவரால் வாசிக்கப்பட்ட கலை
    குருதட்சணை வாங்காமல் பாடம் பயிற்றுவித்த ஆசிரியன் இவன்.

    சிவாஜி என்ற மூன்றெழுத்துச் சொல்
    வசூல் என்ற மூன்றெழுத்துச் சொல்லாய் அளவீடு செய்யப்பட்டது.
    நிர்க்கதியை நின்றவர்களுக்கு நற்கதியை கொடுத்தவன்.

    காலத்திற்கேற்ப வரும், நிற்கும் மழை
    காலகாலமாய் பெய்தது இவன் கலை

    கர்ணனாய் நடித்ததால் கர்ணனை பிடித்தது.
    கட்டபொம்மனாய் நடித்ததால் கட்டபொம்மனை பிடித்தது.
    சகலமும் நடித்ததால் சகலருக்கும் அவன் ஞானம் பிடித்தது.
    அது
    முடியாதவர்களுக்கோ பொறாமை பிடித்தது.


    செய்நன்றியை திரையில் மட்டுமே காட்டியவர்கள் ஏராளம்.
    இவர் மட்டுமே நிஜத்தில் காட்டியது தாராளம்.
    அது
    பரம்பரையாய் இன்றும் தொடர்வதை பாரே அறியும்.

    பிரதிபலன் பாராமல் தலைவர்களுக்கு இவர் உழைத்தது நியாயம்.
    சதிகாரக்கூட்டம் அதைமாற்றி சபையேற்றியது அநியாயம்.
    இதுதான் அவர் பலன் கண்ட அரசியலின் அஸ்திவாரம்.

    விருதை விட மேலானது அவரின் நடிப்பு.
    அதற்கு வஞ்சகம் செய்தது அராஜக அரசியலின் துடிப்பு.

    நப்பாசை கொண்டே வளர்ந்தன அரசியல் கூட்டம்.
    அதை புறந்தள்ளி மென்மையாய்
    நடந்ததுதான் இவர் கொண்ட நாட்டம்.


    குள்ளநரிக்கூட்டத்தையாஎதிர்ப்பது?
    அவர் சிங்கமல்லவா?
    உண்மையில்
    அவரும் நினைத்திருந்தால்
    கரை வேட்டிகள் காணாமல் போயிருக்கும்.
    கட்சிகள் கரைந்து போயிருக்கும்.
    தலைகள் சிலைகளாகக் கூட இருந்திருக்காது.

  20. Thanks Russellmai thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •