Page 91 of 401 FirstFirst ... 41818990919293101141191 ... LastLast
Results 901 to 910 of 4010

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 17

  1. #901
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    HAPPY BIRTHDAY WISHES TO DEAR NEYVELI VASUDHEVAN SIR



  2. Thanks vasudevan31355 thanked for this post
    Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #902
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. Likes Russellmai liked this post
  6. #903
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    தன்னுள்
    அறிவுச் சுரங்கமும்
    உண்டென்று
    மெய்ப்பிக்கும்
    "நெய்வேலி"யை
    வாழ்த்தி வணங்குகிறேன்.

  7. Thanks vasudevan31355 thanked for this post
    Likes Russellmai liked this post
  8. #904
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    Quote Originally Posted by Muthaiyan Ammu View Post
    many many happy returns of the day my dear vasudevan
    blessings

  9. Thanks vasudevan31355 thanked for this post
  10. #905
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    From Dinamani






    1957ல் பானுமதி நடித்த நாலு தமிழ்ப் படங்களிலும் நடிகர் திலகம் மட்டுமே நீக்கமற நிறைந்திருந்தார். நான்கும் நாலு ரகம்.

    பிப்ரவரி 27ல் வெளியானது மக்களைப் பெற்ற மகராசி. தமிழ் சினிமாவின் முதல் வட்டார மொழிச் சித்திரம்! நன்றாக வசூல் செய்தது. ஏறக்குறைய ‘தாய்க்குப் பின் தாரம்’ போலவே, குடும்பத் தகராறில் காதலர்கள் பிரிவதும் க்ளைமாக்சில் ஒன்று சேர்வதுமாக கதை.

    கொங்கு நாட்டு பாஷை பேசும் செங்கோடனாக சிவாஜியும், அவரது முறைப்பெண் பொன்னுரங்கமாக பானுமதியும் நடித்தார்கள்.

    ‘போறவளே போறவளே பொன்னுரங்கம்’ டி.எம். சவுந்தரராஜனும் பானுமதியும் பாடிய மண் மணக்கும் காதல் கீதம்! மார்ச் 57ல் அதைப் பாடி அன்று வீதிகளில் எத்தனை பேர் டீசிங் கேஸில் மாட்டினரோ தெரியாது.

    -----------------

    பானுமதி அசோகனை ஹீரோவாக்கி மணமகன் தேவை என்ற படத்தைத் தொடங்கினார். பரணி பிக்சர்ஸ் தயாரிப்புகள் பொதுவாகவே மிகக் குறைந்த செலவில் உருவாகும். எதிலும் அகலக்கால் வைப்பது ஆகாது பானுமதிக்கு.

    மணமகன் தேவை முழு நீள காமெடி ஃபிலிம். பானுமதி தன்னை மையப்படுத்தியே திரைக்கதையை உருவாக்கி இருந்தார். அவருக்கு முன் அசோகன் எம்மாத்திரம்! அதுவும் நாயகனாக...?

    அசோகனை அப்புறப்படுத்தி விட்டு சிவாஜி கணேசனை தனக்கு ஜோடியாக்கினார். கணேசனும் பானுமதி மேல் உள்ள அபரிதமான மதிப்பின் காரணமாக, மணமகன் தேவையில் நடிக்க ஒப்புக் கொண்டார்.

    கணேசனுடன், சந்திரபாபு, டி.ஆர். ராமச்சந்திரன், ஏ. கருணாநிதி என்று ஹாஸ்ய நடிகர்களும் நடித்தனர். பானுமதியின் தங்கையாக தேவிகா மணமகன் தேவை மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

    டைட்டிலில் தேவிகா என்று பெயர் வராது. பிரமீளா என்று போடுவார்கள். தேவிகாவின் ஒரிஜினல் பெயர் அது.

    கொடுமையான கோடையில் ஜில்லிப்பாக மணமகன் தேவை மே 17ல் வெளியானது.



    ‘மணமகன் தேவை -‘ஸினோரிட்டா’ ஆங்கிலப்படத்தின் தழுவல் என்றது ஆனந்த விகடன் விமர்சனம். படத்தின் குறைகளைச் சுட்டிக்காட்டினாலும் பானுமதியை வெகுவாகப் பாராட்டி எழுதியது.

    சேகர் ‘கஷ்டமான வேஷத்தை பானுமதி இஷ்டமா நடிச்சிருக்கா. அவளே படம் எடுத்து ஆடியிருக்கா. ஸினோரிட்டா வைரம். இது இமிடேஷன். இட்லி சாம்பாருக்குப் பதில், கேக் சட்னி மாதிரி இருந்தது. நம்ம படமாகவே தெரியவில்லை. நம்ம ஊருக்குக் கொஞ்சம் கூடப் பொருந்தல்லே’.

    சுந்தர் - ‘போகட்டும் டான்ஸ் ஏதாவது... ’

    சேகர் - ‘பானுமதி டான்ஸ் ஆடாம இருப்பாளா’?

    சுந்தர் - ‘சரி, பானுமதி பாட்டு எப்படி’?

    சேகர் - ‘அதுக்கென்ன குறைச்சல்? ஸ்வரம் கூடப் பாடியிருக்கா. ஆனால் அதைக் காட்டிலும் அற்புதமா நடிச்சிருக்கா’.

    கதையிலே ஒரே பெண் இரண்டு வேஷத்திலே நடிச்சிருக்காள் என்பதை, அவள் மாதிரி வேறு யாராலும் நடித்திருக்க முடியாது. பரிசு பெற்ற நடிகையில்லையா’?

    சுந்தர் - ‘போதும்டா ! ஒரேயடியா பானுமதியையே புகழ்ந்து கொண்டிருக்காதே. என்னடா பானுமதியைப் பத்தி பக்கம் பக்கமா சொன்னே, சிவாஜி கணேசன் எப்படியிருக்கார்? ’

    சேகர் - ‘ஏதோ வர்றார்,பேசறார், போறார் அவ்வளவுதான்.’

    சந்தர் - ‘ஏன், நல்லா நடிக்கலியா?’

    சேகர் - ‘அதுக்கு ஸ்கோப் இல்ல. கதை அப்படி. தனக்கு நிறைய ஸ்கோப் இருக்கிறது என்பதற்காகத்தானே பானுமதி இந்தக் கதையையே தேர்ந்தெடுத்திருக்கா!’

    சந்தர் - ‘ஓ, அப்படியா கதை. நாளைக்கு எங்க கிராமத்துக்குப் போறேன். அங்க பார்த்துடறேன்.’

    சேகர் - ‘டேய், இந்தப் படம் கிராமத்திலே எல்லாம் ஓடாது. பார்க்கிறதுன்னா இங்கேயே பார்த்து விடு!’

    ------------------------------------------
    ஒரே படத்தில் பத்தாயிரம் அடிகள் எம்.ஜி.ஆருடன் நடித்து முடித்து விட்டு, மீண்டும் ஆரம்பத்திலிருந்து அதே டாக்கியில் சிவாஜியுடன் நடித்த வித்தியாசமான அனுபவம் பானுமதிக்கு ஏற்பட்டது.

    ஏராளமான வெற்றிச் சித்திரங்களின் கதாசிரியர், வசனகர்த்தா, ‘வாங்க மச்சான் வாங்க’, ‘சொக்கா போட்ட நவாபு, ஜாலிலோ ஜிம்கானா...’ போன்ற சூப்பர் ஹிட் குத்துப் பாடல்களின் ‘பிதா மகன்’ தஞ்சை ராமையாதாஸ். ஆரூர்தாஸின் ஆசான்! அவரது தயாரிப்பு ராணி லலிதாங்கி.

    எம்.ஜி.ஆர். கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்து,

    ‘ஆண்டவனே இல்லையே தில்லை தாண்டவனே உன் போல் ஆண்டவனே இல்லையே’ என்று பாடி நடிக்க வேண்டும்.

    ‘மூட நம்பிக்கை கருத்துகள் வருகிறது. தி.மு.க. கொள்கைகளுக்கு விரோதமாக நடிக்க மாட்டேன்’ என்று விலகி விட்டார்.

    எம்.ஜி.ஆருடன் ஏற்பட்ட மோதலினால் நின்று போனவை நிறையவே உண்டு. ‘புரட்சி நடிகரைப் பகைத்துக் கொள்ள வேண்டாம்...!’ என்று ராமையாதாஸூக்கும் ரகசிய எச்சரிக்கைகள் வந்தன.

    வற்றாத தனது தமிழ்ப் புலமை மீது சபதம் செய்து, அதே படத்தை சிவாஜியை வைத்து எடுத்து முடித்து வெற்றி கண்டார் ராமையா தாஸ்.

    எம்.ஜி.ஆருக்கு எதிரான சவாலில் ராமையா தாஸ் ஜெயிக்க ஒத்துழைத்தவர் பானுமதி .

    பானுமதியைத் தவிர வேறு நாயகி லலிதாங்கியில் நடித்து இருந்தால், எம்.ஜி.ஆருக்குப் பயந்து அவர்கள் அதில் தொடர்ந்து நடிக்காமல் போயிருப்பார்கள். அல்லது எம்.ஜி.ஆரே நடிக்காதே என்று சொல்லி தடுத்து நிறுத்தியிருக்கலாம்.

    அது முடியாமல் போகவே ‘நான் நடித்த கதையில் எப்படி சிவாஜியை வைத்து மீண்டும் எடுக்கலாம்...?’ என்று ராமையாதாஸூக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் எம்.ஜி.ஆர்.

    ராமையாதாஸ் தமிழால் தக்கப் பதில் தந்தார். ‘நீங்கள் நடித்தது லலிதாங்கி. நான் தயாரித்துக் கொண்டிருப்பது ராணி லலிதாங்கி’.



    ராணி லலிதாங்கி செப்டம்பர் 21ல் வெளியானது.

    இத்தனை கலாட்டாக்களும் தெரிந்தவர் தி.மு.க. தலைவர் அண்ணா. ராணி லலிதாங்கியில் சிவாஜி ஆடிய பரதத்தைப் பார்த்து மனமாரத் தன் நண்பர்களிடம் பாராட்டினார்.

    ----------

    யார் கண் பட்டதோ தெரியவில்லை. மணமகன் தேவையில் என்ன இடையூறு நேர்ந்ததோ...?

    பானுமதியும் நடிகர் திலகமும் அம்பிகாபதி படப்பிடிப்பில் டூ விட்டுக் கொண்டார்கள். அதை நேரில் பார்த்த கதாசிரியர் மா. லட்சுமணன் எழுதியவை:

    ‘நள்ளிரவில் அந்தப்புரத்தில் அம்பிகாபதி நூல் ஏணியின் வழியாக ஏறி, அமராவதியின் அறைக்கு வருவார்.

    தடைகளை மீறி காதலர்கள் சந்திக்கும் போது காதல் எல்லை தாண்டும். கண்கள் குளமாகும். உடல் எங்கும் பரவசம் புகுந்தோடும்.

    இந்தக் காட்சியை சிவாஜியிடம் சொன்ன போது,

    ‘நல்ல சீன் தான். ஆனால் நான் நூலேணி வழியா மாடிக்கு வந்து, ‘அமராவதி’ன்னு சொல்லி காதலோடு நெருங்கறேன்னு வெச்சுக்குங்க, அடுத்த ஸ்டெப்பா அவங்க கைகளை என் கைகளோடு சேர்த்துப் பிடிச்சிருக்கிறேன்னு வெச்சுக்குங்க...

    அதுக்குள்ள அமராவதியா நடிக்குற அந்தம்மா,

    ‘வெடுக்குன்னு’ கையை உதறிடுவாங்க. அதை விட நான் கையைப் பிடிக்காமலே ‘ஆக்ட்’ பண்ணிடறேன் என்றார்.

    ‘இருங்க அந்தம்மா (பானுமதி) கிட்டயும் பேசிட்டு வந்துடறோம்’ என்றேன்.

    நேராக பானுமதியிடம் போனேன். ‘ அம்மா... படத்துல முக்கியமான உணர்வு பூர்வமான சீன் இது. ‘பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ...’ மாதிரி அந்த சீன் அமையணும். அது உங்க ரெண்டு பேரோட நடிப்பில் தான் இருக்கு.

    அந்த சீன்ல வர்றது சிவாஜியும் பானுமதியும் இல்ல. அம்பிகாபதியும் அமராவதியும்’ என்றேன்.

    ‘நீங்க போங்க நான் பார்த்துக்கறேன்.’

    மறுநாள் ஒரே டேக்கில் அந்தக் காட்சி ஓகே ஆனது.

    தங்களுக்கிடையேயான சிற்சில பேதங்களை மறந்து, சிவாஜியும் பானுமதியும் அந்தக் காட்சிக்கு உயிர் கொடுத்தார்கள்.’

    அம்பிகாபதி 1957 தீபாவளிக்கு வெளியானது. ஜி.ராமநாதனின் அதி அற்புதமான கர்நாடக இசை வெள்ளத்தில் ‘மாசிலா நிலவே,’ சோகத்துக்குரிய முகாரி ராகத்தில் வாடா மலரே தமிழ்த் தேனே! என்று இரு டூயட்கள். பானுமதி பிரமாதமாக பாடி இருந்தார்.

    தவிர படத்தில் இடம் பெற்ற கண்ணதாசனின் ஒரே பாடல், ‘கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே!’ பானுமதியின் குரலில் இன்றும் உங்கள் விருப்பத்தில் இடம் பிடிக்கிறது.

    அந்தப் பாடலை பானுமதி பாட திரையில் ஆடியவர் ராஜ சுலோசனா. பானுமதி பயங்கர பிசி. இருவரையும் சேர்த்துப் பாடலை எடுக்க முடியாத சூழல். ராஜ சுலோசனாவின் நாட்டியத்தைத் தனியே படமாக்கி இணைத்தார்கள்.



    1939 முதல் 18 வருடங்களாக தென்னகத்தில் தனிக்காட்டு ராணியாக வெற்றிக் கொடியைப் பறக்க விட்டவர் பானுமதி. மெல்ல மெல்ல அவரிடம் பருவம் பறி போனது.

    1954ல் மலைக்கள்ளன் படத்தில் ‘எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’ பாடல் காட்சி. பாவாடை தாவணியில் பானுமதி குதிரை மீது ஏறி சவாரி செய்த படி இருக்க, எம்.ஜி.ஆர். லகானைப் பற்றி அழைத்து வருவார். தியேட்டரில் அதைப் பார்த்ததும் கொல்லென்று சிரிப்புச் சத்தம் எழும்.

    1957ல் ‘ஆனந்த விகடன்’ சினிமா விமர்சனங்கள் வெளிப்படையாக பானுமதி ‘நேற்றுப்பூ’ என்பதைச் சுட்டிக் காட்டின.

    ‘மக்களைப் பெற்ற மகராசி’ பற்றி எழுதுகையில்:

    ‘மீனாட்சி அம்மாள்- அந்தப் பொம்புளை பேர் என்ன? பானுமதியா? முகத்தைப் பார்த்தாக் கொஞ்சம் வயசானா மாதிரி தெரியுது; இருந்தாலும் அவ ஆடறதும்... ஓடறதும்... குதிக்கறதும்...

    கணேசன் வண்டி ஓட்டிக்கிட்டு வருது. பானுமதி குறுக்கே வரா. ஒருத்தருக்கு ஒருத்தர் தகராறு செய்றாங்க. ‘உன் சர்கோஸெல்லாம் நம்ம கிட்டே காட்டாதே’ன்னு செங்கோடன் சொல்றதும், ‘உன் பயாஸ்கோப்பெல்லாம் நம்ம கிட்டேப் பேசாதே’ன்னு அந்தம்மா சொன்னதும் நல்லா இருந்துச்சு.’

    ராணி லலிதாங்கி விமர்சனத்தில்

    முனுசாமி- ‘பானுமதி நல்லா நடிச்சிருப்பாங்களே!’

    மாணிக்கம்-‘பெண்கள் எத்தனை வயசு வரைக்கும் ஹீரோயினா நடிக்கலாம் அண்ணே?’

    முனுசாமி- ‘சினிமாவிலே தான் பெண்களுக்கு வயசே கிடையாதே!’

    அம்பிகாபதி விமர்சனத்தில் இன்னும் கடுமையாகச் சாடியது:

    முனுசாமி - ‘குலோத்துங்க சோழன் மகள் குலேபகாவலி ஆட்டம் டிரஸ் பண்ணிகிட்டு வந்து நிக்குது. ரெண்டு பேரும் கூச்சமில்லாமே நெருங்கிப் பழகறாங்க! தாயும் மகனும் கொஞ்சி விளையாடற மாதிரி இருந்துச்சு.’

    மாணிக்கம் - ‘போங்கண்ணே! உங்களுக்கு வயசாயிடுச்சி. சிவாஜி- பானுமதி ஜோடியைக் கூட குறை கூற ஆரம்பிச்சிட்டிங்க.’

    --------------

    நடிகர் திலகமும் நடிப்பின் இலக்கணமும் இணைந்து பத்துப் படங்களில் நடித்திருக்கிறார்கள். அவை

    1.கள்வனின் காதலி 2.தெனாலி ராமன் 3.ரங்கோன் ராதா 4.மக்களைப் பெற்ற மகராசி 5.மணமகன் தேவை 6.ராணி லலிதாங்கி 7.அம்பிகாபதி 8.சாரங்கதாரா 9.ராஜ பக்தி 10. அறிவாளி

    1955ல் கள்வனின் காதலி, 1956ல் ரங்கோன் ராதா, 1957ல் அம்பிகாபதி என்று மூன்று தீபாவளிகளில் தொடர்ந்து சாதனை முத்திரை பதித்து, ஹாட்ரிக் அடித்த ஒரே சினிமா ஜோடி அவர்கள் மாத்திரமே!

    பானுமதி பிறப்பால் ஆந்திரத்தின் ஆளுமை மிக்க மங்கை ! இருந்தும், 1997ல் இந்திய சுதந்தரப் பொன் விழாவின் போது அவரது நேர் காணலில் என்னிடம்,

    ‘ஏ. நாகேஸ்வர ராவை விட சிவாஜிக்குத்தான் தாதா சாகிப் பால்கே விருதை முன்னதாக வழங்கியிருக்க வேண்டும். இத்தகைய உயர்ந்த விருதுகளை கலைஞர்கள் நல்ல ஆரோக்யத்தோடு வாழும் நிலையிலேயே வழங்க வேண்டும்.’ அவர்கள் உடல் நலிவுற்ற பின்பு கருணையோடு வழங்கத் தேவையில்லை’ என்று மிக வீரியமாக சிவாஜிக்காக ஓங்கிக் குரல் கொடுத்தார்.

    சிவாஜியுடனானத் தனது அரிதார அனுபவங்களை இனிக்க இனிக்க சுவாரஸ்யமாக கூறியுள்ளார் பானுமதி:



    ‘பலதரப்பட்ட படங்களில் நான் நீண்ட காலமாக வெவ்வேறு நடிகர்களுடன் நடித்து வந்திருக்கிறேன். எல்லா ஹீரோவும் என் கிட்டே நெருங்கப் பயப்படுவாங்க. ஏன், எம்.ஜி.ஆர்., சிவாஜி கூட என் கிட்ட மரியாதையோட ஒரு தூரத்திலதான் இருப்பாங்க.

    30 வயசிலேயே நான் என்னை விடப் பெரியவங்களுக்கும் ‘அம்மா’ ஆயிட்டேன். ‘சரி, இதுவும் ரொம்ப சவுகரியமா போச்சுன்னு’ நெனச்சுக்கிட்டேன். அதுக்கப்புறம் சிவாஜியும் என்னை ‘அம்மா’ன்னு கூப்பிட ஆரம்பிச்சார்.

    சிவாஜி நான் நடித்த ஸ்வர்க்கஸீமா படத்தை 18 தடவை பார்த்தாராம். அதை சந்தோஷமாகச் சொல்லி, என்னையும் உற்சாகப்படுத்தியிருக்கிறார். சிவாஜி என்னை விடச் சின்னவர். அவரைத் ‘தம்பி’ என்று தான் அழைப்பேன்.

    எனது இந்த நெடிய அனுபவத்தில் சிவாஜி கணேசன் போன்ற திறமை மிக்க நடிகரை நான் சந்தித்ததே இல்லை.

    சிவாஜி கணேசன் ஒரு பிறவி நடிகர். மாறுபட்ட உணர்ச்சிகளை மின்னல் வேகத்தில் மாற்றி வெளிக்காட்டக் கூடிய அபூர்வ ஆற்றல் பெற்றவர்.

    கணேசனுடன் நான் நடித்த படங்களில் ‘மக்களைப் பெற்ற மகராசி, ரங்கோன் ராதா’ இரண்டையும் என்னால் மறக்கவே முடியாது.

    குறிப்பாக ரங்கோன் ராதாவில் எங்கள் இருவர் மீதே முழுக்கவனம் செலுத்திப் படமாக்கினார்கள். நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர், ஏற்றுக் கொண்டிருக்கும் பாத்திரங்களைப் புரிந்து கொண்டு நடிக்க ஆரம்பிக்கும் போது, செட்டில் வேலை செய்பவர்கள் எங்கள் நடிப்பைக் கண்டு ரசிக்க ஆரம்பித்து விடுவார்கள். அதுவே அவர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்து விடும்.



    நான் எந்தப் படத்தோட ஷூட்டிங் என்றாலும் கொஞ்சம் லேட்டாகத்தான் போவேன். அதை சிவாஜி பல படங்களில் கவனித்து வந்திருக்கிறார். இந்த நிலையில் எங்க கம்பெனி தயாரித்த மணமகன் தேவை படத்தில் நானும் சிவாஜியும் நடித்தோம்.

    அன்றைய படப்பிடிப்புக்கு சிவாஜி உள்பட எல்லாரும் வந்தாச்சு.வழக்கம் போல் நான் மட்டும் லேட். அப்ப சிவாஜி என் கணவர் கிட்ட, ‘அம்மா மத்த கம்பெனி ஷூட்டிங்குக்குத்தான் லேட்டா வராங்கன்னு பார்த்தா, உங்க கம்பெனிக்குமில்ல லேட்டா வராங்க’ என்று சிரிக்காமல் சொல்லியிருக்கிறார்.

    அதை சிரித்துக் கொண்டே என் கணவர் என்னிடம் சொல்ல, நான் வாய் விட்டு விழுந்து விழுந்து சிரித்தேன்.

    எனக்கு கிடைச்ச அபூர்வ சிநேகிதி சிவாஜி மனைவி கமலா அம்மாள். அவங்களுக்கு என் மேல் ரொம்ப அபிமானம் உண்டு. எனக்கும் அவங்கன்னா பிரியம்.

    இந்த அன்பு அதுவரைக்கும் எந்த சினிமாக் கலைஞர் வீட்டுக்கும் போகாத என்னை சிவாஜி வீட்டுக்கு போக வைத்தது. சிவாஜி உடல் நலம் இல்லாம இருந்தப்போ போய்ப் பார்த்து நலம் விசாரிச்சேன். எப்பவும் எனக்கு நல்ல சிநேகிதி கமலா அம்மாள் தான்.’

  11. #906
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    Wish you happy Birthday to Mr. Neyveli Vasudevan sir.

  12. Thanks vasudevan31355 thanked for this post
  13. #907
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    தீபாவளி - சிவாஜி ரசிகனின் சிறந்த நாள் - 5

    1968ம் ஆண்டின் தீபாவளி அன்று தவிர்க்க இயலாமல் நான் தியேட்டருக்கு போக முடியாமல் போய் விட்டது. கொண்டாட்டங்களைப் பின்னர் நண்பர்களிடம் கேட்டறிந்தேன்.

    1970ம் ஆண்டிற்கு வருவோம்.

    1970 தீபாவளி தமிழ் சினிமா வரலாாற்றில் புதிய அத்தியாயத்தை உண்டு பண்ணப் போகிறது என்பது ஓரளவிற்கு முன்கூட்டியே சிவாஜி ரசிகர்களால் கிரகிக்கப்பட்டு விட்டது என்றாலும் பொது மக்கள் மனதில் அது சற்று தாமதமாகவே ஏற்பட்டது.

    அந்த தீபாவளி பற்றி எழுதும் முன்னர் அந்த ரிசர்வேஷனைப் பற்றி எழுதியே ஆகவேண்டும்.

    சொர்க்கம் எங்கிருந்தோ வந்தாள் இரண்டும் ஒரே நாளில் வருவது உறுதியாகி விட்டது. என் நினைவு சரியாக இருக்குமானால். சென்னையைப் பொறுத்த மட்டில் இரண்டும் ஒரே விநியோகஸ்தரின் வெளியீடு கிரெஸண்ட் மூவீஸ் வெளியீடு - சென்னை நகரில் எலைட் மூவீஸ் என்ற நிறுவனம் பெயரிலும், சென்னையைச் சுற்றி செங்கல்பட்டு, வட, தென்னாற்காடு பகுதிகளில் கிரஸெண்ட் மூவீஸ் என்ற பெயரிலும் படங்களை வெளியிடுவார்கள். அவர்கள் அலுவலகம் தேவி திரையரங்கின் பின் பக்கம் இருந்ததாக நினைவு. ரிஸர்வேஷன் விளம்பரத்திற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருந்தோம்.

    அந்த நாளும் வந்தது. ரிஸர்வேஷன் அன்று காலை... சென்னை சாந்தியிலும் தேவி பேரடைஸிலும் ஒரே நேரத்தில் ரிஸர்வேஷன். கூட்டம் என்றால் அப்படி ஓர் கூட்டம். சாந்தியில் ரூ 2.50க்கான டிக்கெட்டுக்கு க்யூ உள்ளேயே வளைந்து வளைந்து கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட வரிசை. ஒரு வரிசையில் குறைந்தது ஐம்பது பேருக்கு மேல் இருக்கலாம். அந்த கூட்டத்தை வைத்து ஒரு காட்சியே நடத்தி விடலாம்.

    ஆனால் நான் தேவி பேரடைஸுக்கு சென்று விட்டேன். ரூ 2.50 மற்றும் ரூ. 3.00 இரண்டு வகுப்புகளுக்கும் ரிஸர்வேஷன். மற்ற படங்களைப் போலல்லாமல், இது முதல் தமிழ்ப் படம் என்பதாலும் கூட்டம் அதிகம் என்பதாலும் இரண்டு வகுப்புகளுக்கும் தனித்தனி க்யூ வரிசை. ரிஸர்வேஷன் கவுண்டர் தேவி பேரடைஸ் நுழை வாயிலுக்கருகில் இருக்கும். அங்கே கம்பிகளைப் போட்டு வரிசைகளை அமைத்திருப்பார்கள். அந்த கம்பிகளெல்லாம் எந்த மூலைக்கு.. இரண்டு வகுப்புகளுக்கும் அருகருகே கவுண்டர். இரண்டு தனித்தனி க்யூ. அந்த க்யூவின் நீளத்தைப் பார்த்தால் அந்த நான்-கிங் சைனீஸ் ரெஸ்டாரெண்டைத் தாண்டி விட்டது. இரண்டு க்யூக்களுமே அருகருகே ரூ.2.50 டிக்கெட்டுக்கான க்யூ இன்னும் சற்று நீளம் சென்று புகாரி வரை சென்று விட்டது. அந்த இரண்டு க்யூவையுமே ஒரே க்யூவாக அமைத்து, சாந்தி திரையரங்கம் பக்கம் திருப்பி விட்டிருந்தால் அது நேரே சென்று வாலாஜா சாலையில் திரும்பி திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை துவக்கம் வரை சென்றிருக்கும். இது சாந்தியில் எங்கிருந்தோ வந்தாள் ரிசர்வேஷன் க்யூவை சேர்க்காமலேயே. அதுவும் சேர்த்திருந்து மூன்றும் ஒரே க்யூவாக இருந்திருந்தால் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையிலும் திரும்பி கிட்டத்தட்ட ஸ்டார் தியேட்டர் வரை நீண்டிருக்கும்.

    ரிஸர்வேஷன் வகுப்புகளுக்கும் சரி, ரிஸர்வேஷன் க்யூவுக்கும் சரி அன்றும் இன்றும் என்றும் சாதனை மன்னன் நடிகர் திலகம் சிவாஜி அவர்களே என்றும் முதன்மை வகிப்பவர் என்பதற்கு அன்றைய க்யூ வரிசை ஒரு சான்றாகும்.

    அவ்வளவு அதிகாலையில் சென்றும் எனக்கு இரண்டாம் நாள் பகல் காட்சியில் தான் அதுவும் கடைசி ரோவில் டிக்கெட் கிடைத்தது. அதுவும் ஒரு ஆளுக்கு ஒரு டிக்கெட் மட்டும் தான் கொடுத்தார்கள். ஒருவருக்கே இரண்டு மூன்று எனக் கொடுத்திருந்தால் ரிஸர்வேஷன் இன்னும் பல நாட்களுக்கு ஆகியிருக்கும் என்பதை யூகித்துக் கொள்ளலாம். இன்று வரை தேவி பேரடைஸ் திரையரங்கைப் பொறுத்த மட்டில் ரிஸர்வேஷன் க்யூவில் சாதனை படைத்த முதல் படம் மக்கள் தலைவரின் சொர்க்கம் தான் என்பது பெருமைக்குரிய விஷயம்.

    1970 அக்டோபர் 29ம் தேதி...







    அன்று மழை என்றால் அப்படி ஒரு மழை. தீபாவளி வெடிகளை வெடிக்க முடியாமல் மக்கள் திண்டாடி விட்டார்கள். காலை 10 மணிக்கு விமானப்படை நிதிக்காக சிறப்புக் காலைக் காட்சி சாந்தி திரையரங்கில் எங்கிருந்தோ வந்தாள் திரையிடப்பட்டது. அது பொது மக்களுக்கு அதிகம் கிடைக்கவில்லை. தியேட்டருக்குச் சென்று பார்த்தால் அந்த தீபாவளியிலும் அந்த காலை நேரத்திலேயே சாந்தியில் கார்கள் மயம். கார் நிறுத்தம் நிரம்பி வழிந்து விட்டது. பட்டாசு வெடிக்க இடமில்லை, மழை வேறு. தோரணங்களெல்லாம் மழையில் நனைந்து விட்டன. சில ரசிகர் மன்றங்கள் கூட காசு செலவு செய்து பிளாஸ்டிக் தோரணங்களைக் கட்டியிருந்ததால் அவை தப்பித்தன. காகித தோரணங்களெல்லாம் மழையில் பாழாகி விட்டன. அதே போல காகித சுற்றில் அமைந்த ஸ்டார்களெல்லாம் பேப்பர் கிழிந்து விட்டன. பிளாஸ்டிக் பேப்பர் சுற்றப்பட்ட ஸ்டார்கள் தப்பித்ன. அவ்வளவு மழையிலும் துணி பேனர்கள் பளிச்சென்று ஒளி வீசின. முதல் நாள் பகல்காட்சிக்கு எங்கிருந்தோ வந்தாள் டிக்கெட் கிடைத்து விட்டதால் தேவி பேரடைஸுக்கு சென்றோம். அங்கும் கூட்டமென்றால் அப்படி ஒரு கூட்டம். தேவி பேரடைஸில் படம் ஆரம்பிக்கும் போது தான் உள்ளே விடுவோம் எனச் சொல்லி விட்டார்கள். எனவே அந்த சுழலும் படிக்கட்டு துவங்கும் கேட்டருகே நின்று வேடிக்கை பார்த்தோம். ஆஹா கண்கொள்ளாக் காட்சி.. பொன் மகள் வந்தாள் பாடல் காட்சியைப் பார்த்ததில்லை ஆதலால் அங்கே வைக்கப்பட்டிருந்த ஒரு செயற்கை மரத்தை வியப்புடன் பார்த்தோம். அந்த மரத்தில் பல கிளைகள் வைக்க்ப்பட்டு அத்தனையும் ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. எதேச்சையாக படத்தை பத்திரிகை காட்சியில் பார்த்திருந்த ஒரு நண்பர் அங்கே வந்திருந்தார். அவர் தான் விஷயத்தைப் போட்டுடைத்தார். இந்த மரம் படத்தில் பாருங்கள்.. சிவாஜியின் ஸ்டைலுக்காகவே இந்தப் படம் நூறு நாள் ஓடும். ஓடா விட்டால் என் பேரை நான் மாற்றிக்கொள்கிறேன் எனக் கூறி எங்கள் ஆவலைத் தூண்டி விட்டு விட்டார். அவ்வளவு தான் இன்றைக்கே டிக்கெட் கிடைத்திருக்கக் கூடாதா என மனம் அல்லாட ஆரம்பித்து விட்டது. அப்புறம் தான் தெரிந்தது, படத்தில் உபயோகிக்கப்பட்ட அந்த மரத்தையே அந்த ரூபாய் நோட்டுக்களையே அப்படியே கொண்டு வந்து இங்கு தியேட்டரில் வைத்து விட்டார்கள் என்பது. சற்று நேரத்தில் தேவி தியேட்டர் வாசல் கதவு திறக்கிறார்கள், அங்கே போய் தலைவர் படுத்துக் கிடக்கும் அந்த கட்அவுட்டைப் பாருங்கள் என இன்னொருவர் சொல்ல, அங்கே ஓடினோம். அங்கே பார்த்தால் கண்ணாடிக் கூண்டுக்குள் தலைவரின் கெட்அவுட். பாடல் துவங்கும் முன் வேஷ்டி சட்டையில் தலைவர் படுத்துத் தலையை மேலே தூக்கிப் பார்க்க அந்த ஒரு விரல் அவர் முகத்தை மறைத்து விலகும் போது தலைவரின் அட்டகாசமான போஸ் வருமே அந்த வேஷ்டி சட்டை போஸில் தலைவரின் கட்அவுட் கண்களுக்கு விருந்தாக பக்கத்திலேயே அந்த இன்னோர் மரம். பாடலின் முதல் பகுதியில் வரும், சர விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மரம், அங்கே வைக்கப்பட்டிருந்தது.

    புதுமையான அனுபவம் நம்மைப் பரவசத்தில் ஆழ்த்த, அப்படியே லயித்துப் போய் நின்றிருக்கும் போது நேரம் ஆகி விட்டது. எங்கிருந்தோ வந்தாள் காலைக்காட்சி முடியும் நேரம் என தகவல் வந்தது. அப்போது சற்றே மழை ஓய்ந்திருந்தது. தேவி பேரடைஸில் ரசிகர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டிருக்கும் போதே கூட உற்சாகத்தில் பங்கெடுத்து விட்டு, சாந்திக்குச் சென்றோம். உள்ளே போனால் படம் விடுவதற்கு அறிகுறியாக கதவுகள் திறக்கப்பட்டன. அந்த நீரூற்று அருகில் போய் நின்று கொள்வதற்கும் மக்கள் படம் முடிந்து வெளியே வருவதற்கும் சரியாக இருந்தது. இதெல்லாம் பெரிய இடத்து ஜனங்களாயிற்றே அவர்களிடத்தில் கேட்டால் சரிப்படுமோ என்று நாங்கள் நினைப்பதற்குள் மற்ற சில ரசிகர்கள் அவர்களிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்து விட்டனர்.

    வந்தவர்களைப் பார்த்தாலோ எங்கள் பயம் வீணாகிப் போனதாக ஆகி விட்டது. அவர்களில மிகப் பெரும்பாலானோர் நம்மைப் போன்ற தீவிர ரசிகர்களாக இருந்தனர். வெளியே வரும் போதே படம் சூப்பர், தலைவர் சூப்பர் என ஒரே உற்சாக மயம் தான். நம்பினால் நம்புங்கள். ஒருவர் கூட நெகடிவ் கருத்தையே சொல்லவில்லை. ஒருமித்த குரலில் அத்தனை பேரும் சிரித்த முகத்தோடு வெளியே வந்ததைப் பார்த்தவுடன் மனம் குதூகலிக்க ஆரம்பித்து விட்டது. எப்போடா மேட்னி ஆரம்பமாகும் என மனம் தவிக்க ஆரம்பித்து விட்டது. அவ்வளவு தான் கொண்டாட்டங்களெல்லாம் இரண்டாம் பட்சமாகி விட்டது. சீக்கிரம் படம் ஆரம்பிக்கவேண்டும் என துடிக்கத் துவங்கியது மனம். காரணம், பல காட்சிகளை ரசிகர்கள் சிலாகித்து உரையாடியதே. குறிப்பாக அத்தனை பேரும் ஒருமித்த குரலில் முதலில் தலைவரைக் கொண்டாடியது நான் உன்னை அழைக்கவில்லை பாடலுக்கே. அதற்குக் காரணமும் இல்லாமல் இல்லை. ஏனென்றால் இந்தப் பாடலைப் பதிவு செய்த போது, டி.எம்.எஸ். அவர்கள் பாடல் முடிந்து வெகு நேரமாகியும் அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்தாராம். அந்த நேரத்தில் மெல்லிசை மன்னரும் சண்முகம் அவர்களும் பாலாஜி அவர்களும் சென்று டி.எம்.எஸ்.ஸை சமாதானப்படுத்தினார்களாம். இப்படி ஒரு செய்தி வந்து அதைக் கேட்டதால், படத்தில் அதன் காட்சியமைப்பு எப்படி இருக்குமோ என்ற பரபரப்பு சில நாட்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நிலவியது.

    இதற்கு மத்தியில் இறைவனருளால் மழையும் சற்று ஒய்வெடுக்க கூட்டமோ அதிகமாகி விட்டது. உள்ளே ஆயிரம் பேர் என்றால் வெளியே பத்தாயிரம் பேர் இருந்திருப்பார்கள். அப்படி ஒர் கூட்டம். இப்படியே அரட்டை அடித்தே நேரம் கழிந்து விட்டது. மேட்னியும் துவங்கும் நேரம். உள்ளே சென்று அமர்ந்து விட்டோம்.

    அவ்வளவு தான். இந்த உலகம் சுத்தமாக மறந்து விட்டது. முதன் முதலில் இரு கால்கள் காட்டப்பட்டன. ஒரே ஆரவாரம், தலைவரின் கால்கள் என்று. பின்னர் சலங்கை மற்றும் பெண்களின் உடை என வர, புஸ்ஸென்றாகி விட்டது. கொஞ்ச நேரத்தில் முதலில் குரல் மட்டும் எழும்பியது. அவ்வளவு தான். சாந்தி தியேட்டர் இடிந்து விழுவந்து விட்டதைப் போன்ற பலத்த கர ஓசை. அந்த பைத்தியக்கார வேடத்தில் தலைவரின் கவிதைகள் வர வர, இங்கே ரசிகர்களின் உற்சாகம் கரை புரண்டு ஓடியது.

    ஒரு வழியாக படத்தில் மக்கள் செட்டிலாகி மூழ்கத் துவங்கிய நேரத்தில் தலைவர் தாடி மழித்து வசீகர தோற்றத்தில் தோன்ற, அவ்வளவு தான் மீண்டும் உற்சாகக் களேபரம். அதற்குப் பிறகு அந்த ராஜாவை நடிகர் திலகம் புரட்டி எடுக்கும் பொழுதெல்லாம் ஒரே கூச்சல் தான். ஒன்றுமே காதில் விழவில்லை.

    எல்லாம் முடிந்து க்ளைமாக்ஸ். ஜெயலலிதா ஒவ்வொன்றாக நினைவு படுத்திக்கொண்டே வர, ஒவ்வொன்றையும் உன்னிப்பாகக் கேட்டு விட்டு, கடைசியில் தெரியாது என தலையை சிரித்தவாறே ஆட்டுவாரே.. அப்போது தான் ஆடியன்ஸைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அத்தனை பேரும் ஒரு சேர கைதட்டல். முத்துராமன் வந்து படம் சுபமாக முடிந்தவுடன் உற்சாகமாக வெளியே வந்தோம்..

    அப்போது...
    Last edited by RAGHAVENDRA; 21st November 2015 at 01:19 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  14. #908
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like


    பிறந்த நாள் வாழ்த்துக்கள் அளித்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைக் கூறி, எல்லாம் வல்ல என் ஆண்டனியை வணங்கி, அனைவருக்கும் என்னுடைய இந்தப் பதிவை அன்புக் காணிக்கையாக்குகிறேன்.

    'டயலாக்' டான். (புதிய பதிவு)

    நடிப்பின் 'பாதுகாப்பு'

    கதாபாத்திரங்களின் வலிமையும், நடிகனின் நடிப்பும் வசனங்கள் மூலம் அதீதமாக வலுப்பெறுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. ஒரு நடிகனுக்கு நடிப்புத் திறமை அதிகம் இல்லாவிட்டாலும் அவன் பேசும் வசனங்கள் மூலம் அவன் புகழ் பெற்று விடுவது உண்டு. பஞ்ச் டயலாக் விட்டே இப்போதுள்ள பல நடிகர்கள் காலத்தை ஓட்டுகிறார்கள். தன்னை யாருக்குமே இணையில்லா நிகரற்றவன் என்ற பொருள்படும் வசனங்களை அவன் பேசும்போது நடிப்பு வாசனையே இல்லாத அந்த நடிகனின் ரசிகர்கள் அந்த வசனங்களை மட்டும் கேட்டு விட்டு அதுதான் நடிப்பு என்று தவறாக முடிவு கட்டி, இல்லை இல்லை அதுதான் நிஜம் என்று நம்பி கைதட்டி 300 ரூபாய் டிக்கெட் எடுத்து நடிகன் கட்-அவுட்டுக்கு கும்பாபிஷேகம் செய்து மகிழ்ந்து போகிறார்கள். இதுவா நடிப்பு? இதுவா திறமை? ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு ஹீரோவுக்கும் அவரவர்களுக்கு ஏற்ற 'பஞ்ச்' வசனங்கள். வசனம் முடிந்து வில்லனின் அடியாட்களை உதைத்து பந்தாடி டிரான்ஸ்பார்மரில் நெருப்புப் பொறி கொட்ட விழச் செய்து கத்தியால் பல பேரின் கழுத்தறுத்து.....போதும்டா சாமி.

    ஒரே மாதிரி ஹேர் ஸ்டைல்...ஒரே மாதிரி வசன டெலிவிரி...ஒரே மாதிரி இறுக்கமான முகம்...ஒரே மாதிரி இன்ட்ரோ பாட்டு. ஜால்ராக்கள் புடை சூழ ஆட்டம். இதற்கும் ரசிகர் கூட்டம். ரசிப்பு என்றால் என்ன? எனக்கு புரியவே இல்லை. கேட்டால் இது இன்றைய ஜெனேரேஷன்.

    இதுக்கு முதல் நாள் வசூல் இதுவரை எந்தப் படமும் இல்லாத வசூல் 10 கோடி.. 100 கோடி... இருநூறு கோடி...அந்த படத்தின் சாதனையை இது விஞ்சியது.... இதை அது மிஞ்சியது என்று அள்ளி விடும் வசூல் தகவல்கள். தங்கள் அபிமான நடிகரின் படம் முதல் நாள் மட்டும் நன்கு வசூலாகி விட்டால் அவர் இதுவரை இருந்த மற்ற எல்லா பெரிய நடிகர்களின் படங்களின் வசூல்களை முறியடித்துவிட்ட பெருமையைப் பெற்று விடுவார். ஆனால் அதற்குப் பின்னால் வரும் அவருடைய 10 படங்கள் தொடர்ந்து அவுட்.

    வாட்ச்-அப், பேஸ் புக், இணையம் என்று வசூல் பற்றி பல புரூடாக்கள் அள்ளி விடப் படுகின்றன. மீடியாக்கள் பரபரப்புக்காக எந்த தகவல்களை வேண்டுமானாலும் ஆராயாமல் அளிக்க போட்டி போடுகின்றன.

    சரி! இனி இதையெல்லாம் எண்ணி வேதனைப்பட்டு புண்ணியமில்லை. காலம் கலிகாலமாகி விட்டது. இதை யெல்லாம் நாம் கேட்டால் 'அட! ஹரஹரசிவசிவ பழைய பரமசிவமே' என்று நம்மைக் கேலிப்பொருளாகப் பார்த்து சிரித்து எள்ளி நகையாடுவார்கள்.

    ஆயிரத்துக்கும் அதிகமான பாத்திரங்கள். ஒன்று கூட சோடை போகாமல் வாகை சூடியவை. ஒவ்வொரு பாத்திரத்திற்கும் அதற்கேற்ற மாதிரி வசன உச்சரிப்புகள். ஏற்ற இறக்கங்கள். பக்கம் பக்கமாக வசனம் பேசிய பராசக்தி, மனோகரா, ராஜா ராணியாக இருந்தாலும் சரி! அளவான வசனங்கள் கொண்ட தேவர் மகனாய் இருந்தாலும் சரி! வசனங்களின் உச்சரிப்பில் 'முதல் மரியாதை' வழக்கம் போல என்றும் நடிப்பின் முதல்வரு க்கே. இங்கும் அவரே முதல்வர்.

    இடைப்பட்ட காலத்தில் ஒரு படம். 'பாதுகாப்பு'. எங்கள் கடலூரில் பாமக்காப்பட்டதால் எங்களுக்கு மேலும் சிறப்பு வாய்ந்தது. நடிகர் திலகத்தை நேரிடையாக கண்டு ரசித்த, வியந்த சிறுவயது பிராயங்கள்.

    இந்தப் படத்தில் படகுத் தோணி செலுத்தும் கந்தன் என்ற பாத்திரம் என் கந்தர்வக் கடவுளுக்கு. அப்பனும், அண்ணனும் (மேஜர் மற்றும் நம்பியார்) அயோக்கிய வேலைகள் செய்ய, அவர்கள செய்யும் அக்கிரமங்களைப் பொறுக்க மாட்டாதவராய், வழக்கமான படகோட்டியாய் இல்லாமல் கொஞ்சம் நவீன, நாகரீக பேண்ட், ஷர்ட் போட்ட படகோட்டி இளைஞனனாய் கொடி நாட்டியிருப்பார் நடிகர் திலகம்.



    படத்தின் துவக்கக் காட்சியில் கடலூர் துறைமுகத்தில் ஸ்டேட் பேங்க் அருகில், உப்பனாற்றின் கரையில் வரிசயாக நிற்க வைக்கப்பட்டிருக்கும் படகுகளில் தாவித் தாவி ஒரு கையில் பேக் உடன் நடிகர் திலகம் ஓடி வருவார். நான் பத்தாம் வகுப்பு வரை படித்த 'செயின்ட் டேவிட்' ஸ்கூலின் பின்புறத்தில் உப்பனாறு ஓடும். அங்கு ஒருவித கெமிக்கல் கற்கள் இறக்குமதி செய்யப்பட்டு குவியல் குவியலாகக் கொட்டிக் கிடக்கும். இந்தக் கற்கள் தட்டை வடிவில் கத்தரிப்பூ நிறத்தில் அதிக எடையுடன் இருக்கும். அது மட்டுமல்லாமல் செதில்செதிலாக வேறு இருக்கும். துருப்பிடித்த இரும்பு உதிர்வது போலவும் உதிரும். இந்தக் கற்கள் கூட்ஸ் வண்டிகளில் கொண்டு செல்லப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும். நாங்கள் பள்ளிகள் படிக்கும் போது இடைவேளைகளின் போது ஸ்கூலின் காம்பவுண்ட் சுவர் ஏறிக் குதித்து அந்தக் கற்குவியல்களின் மேல் ஆட்டமான ஆட்டம் போடுவோம். அந்தக் கற்கள் ஓட்டாஞ்சில் போல வேறு இருப்பதால் அதை எடுத்து ஆற்றில் தண்ணீரில் மேலோட்டமாக படுக்கை வாக்கில் விசிறி வேகமாக எறிவோம். அது தண்ணீரின் மேலே பட்டும் படாமலும், தொட்டும் தொடாமலும் நீண்ட தூரத்திற்கு மிதந்த மாதிரி சென்று பிறகு நீரினில் மூழ்கும். யார் கல் அது மாதிரி அருகிலேயே மூழ்கி விடாமல் நீண்ட தூரம் மிதந்து மிதந்து சென்று விழுகிறதோ அவர்களே வெற்றி பெற்றவர்கள். கூட்ஸ் வண்டி கற்களை ஏற்றிச் செல்வதற்கு வசதியாக அங்கே தண்டவாளங்களின் இருப்புப் பாதை அமைக்கப்பட்டு இருக்கும். தண்டவாளங்களின் இரு பக்கங்களிலும் கற்கள் குவியல் குவியலாக சிறு குன்றுகள் போல் குவிக்கப்பட்டிருக்கும். மேலே உள்ள நிழற்படத்தில் நான் சொல்லியிருக்கும் கற்குவியல்களைக் காணலாம்

    நடிகர் திலகம் கையில் ஒரு பையுடன் இந்தக் கற்குவியல்களைத் தாண்டி தண்டவாளங்களின் மத்தியில் ஓடி வருவது போலக் காட்சிகள். அந்த மாதிரி கற்குவியல்களின் மேல் ஓடுவது, படகுகளைத் தாண்டித் தாண்டி வருவது போன்ற ரிஸ்க்கான காட்சிகளில் சில இடங்களில் திலகத்திற்குப் பதிலாக 'டூப்' நடிகரைப் பயன்படுத்தியிருப்பார்கள்.



    இப்போது நடிகர் திலகம் நேராக போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடி வருவார். எளிமையான ஒரு 'டி' ஷர்ட்டும், சாதரணமான பேண்ட்டும் அணிந்திருப்பார். ஓடிவந்து, மூச்சிரைக்க, தோள்களில் பையைத் தொங்கவிட்டு ஸ்டேஷன் உள்ளே வந்து நிற்பார்.

    இன்ஸ்பெக்டர் 'யார்?' என்று கேட்டவுடன் தோள்களில் கிடக்கும் பேகை மிக அழகாக கைகளுக்குக் கொண்டு வருவார். இப்போது அவர் பதில் அளிக்கும் விதத்தைப் வசனத்தை உச்சரிக்கும் பாங்கை கவனியுங்கள்.

    'இது ஒரு மரத்துக்கடியில கெடச்சுது. திறந்து பார்த்தேன்...அஞ்சாறு டப்பியில அபின் அடைச்சி இருந்தது' (டப்பியில் அபின் அடைத்து இருப்பதை உணர்த்த இடது கையால் வலது கையை சாய்வாகக் கொட்டி அமர்க்களமாகக் காட்டிவிடுவார். பையை காவல் அதிகாரியிடம் கொடுப்பார்.

    தோள்பட்டைகளை மிக லூசாக வைத்திருப்பார். கைகளைத் துவளத் தொங்க விட்டிருப்பார். ஓடி வந்த வேக மூச்சு இன்னும் வாங்கிக் கொண்டிருக்கும்.

    இன்ஸ்பெக்டர் பையை வாங்கி வாங்கி 'செக்' செய்துவிட்டு 'எந்த இடத்தில் கிடைத்தது?' என்று நடிகர் திலகத்திடம் விசாரிக்க,

    'படகுத்துறைகிட்ட ஒரு வேப்பமரம் இருக்குல்லே! அங்கே' என்பார் நடிகர் திலகம்.

    'நீ ஏன் அங்கே போனே?' என்று அதிகாரி மடக்க,

    'நான் ஏன் அங்கே போனேன்னா.... நாங்க படகு ஓட்டிப் பொழைக்கிறவங்க...அதனால அங்கே போனேன்' என்று பதில் சொல்வார் நடிகர் திலகம்.

    இதில் என்ன என்கிறீர்களா? இது ஒரு சாதரண டயலாக்தான். ஆனால் அது இந்த அதிசய மனிதரால் உச்சரிக்கப்படும்போது நம்முள் இறங்கும் விதமே வேற மாதிரி. கொஞ்சம் இழுத்த மாதிரி படகோட்டி பிழைக்கும் இளைஞன் ஒருவன்.. சற்று நாகரீகம் தெரிந்தவன்... நியாயமானவன் எப்படி வார்த்தைகளை உச்சரிப்பானோ அது அப்படியே அவருடைய குரலில் எதிரொலிக்கும்.

    அந்த அபினை அப்பா மேஜரும், அண்ணன் நம்பியாரும்தான் தங்களுடைய படகிலேயே கடத்துகிறார்கள் என்று தெரிந்து, நல்லவராதலால் நொந்து, அண்ணன் அப்பா சொந்தம் என்பதால் அவர்களை போலீசில் காட்டிக் கொடுக்கவும் முடியாமல் அவர்களிடமிருந்து அவர்களுக்குத் தெரியாமல் அபின் பையைக் கைப்பற்றி, அது எங்கோ ஒரு வேப்ப மரத்தினடியில் கிடைத்தது போல போலீஸிடம் சொல்லி, அதை அவர்களிடம் நேர்மையாக ஒப்படைத்தும் விடவேண்டும்.

    இப்போது போலீஸ் விசாரிக்கும்போது இவர் பதில் சொல்லும் முறை மிக வியப்பானது. அண்ணன், அப்பா பெயர் தன் மூலம் வெளியே தெரிந்து அவர்கள் மாட்டிக் கொள்ளவும் கூடாது...அதே சமயம் அபின் பை காவல்துறையிடம் போய் சேர வேண்டும்... எப்படியும் போலீஸ் தன் மேலும் சந்தேகப்படும்...அதையும் சமாளிக்க வேண்டும்.

    இத்தனை விஷயங்களையும் அவர் பேசும் வசன முறையே (அதுவும் வளவளவென்று இல்லாமல் நறுக்காக) அத்தனை பேருக்கும் வெகு இலகுவாக உணர்த்தி விடும்.

    'நாங்கன்னா?' என்று காவல் அதிகாரி கொக்கி போட,

    'நாங்கன்னா... நானு... எங்க அப்பன்... எங்க அண்ணாத்த'

    என்பார் நடிகர் திலகம். கண்களை அதிகமாக இமைத்தபடி இருப்பார்.

    ஒவ்வொரு வார்த்தையின் கடைசி எழுத்துக்களையும் அவர் முடிக்கும் விதம், பயமில்லாத மாதிரி பேசும் தொனி, அப்புறம் 'நிஜமாகவே தப்பு செய்யாம நான் ஏன் பயப்பட வேண்டும்?' என்ற நேர்மையான அலட்சியம்... இருந்தாலும் 'அப்பா அண்ணன் தப்பு பண்ணிட்டாங்களே' என்று அதைக் வெளிக் காட்டிக் கொளாத, வெளிப்படுத்தாத சாமர்த்தியம்..ஆனால் உள்ளூர பொங்கும் வேதனை இத்தனையையும் அவர் உடல் மொழி மூலம் உணர்த்துவதைக் காட்டிலும் அலட்சிய வசன உச்சரிப்பின் மூலமே நம் வாய் பிளக்கும் அளவிற்கு வெளிப்படுத்திவிடுவார். தந்தை, தமையன் செய்த தவறின் குற்ற உணர்ச்சியில் இன்ஸ்பெக்டர் முகத்தை நேருக்கு நேராக பார்த்து பேச மாட்டார். 'நாம் பொய் சொல்லித்தானே அபின் பாக்கெட் பையை போலீஸ் வசம் தர வேண்டியிருக்கிறது' என்ற குற்ற உணர்ச்சியும் அவரிடம் மறைந்து உறுத்துவதை நாம் காணலாம்.



    இன்ஸ்பெக்டர் கையில் வைத்திருக்கும் கைத்தடியை தன் மேஜையில் வைத்திருப்பார். நடிகர் திலகத்தின் பின்புறம் நின்று இன்ஸ்பெக்டர் விசாரித்துக் கொண்டிருக்க, அந்த டேபிள் மேல் இருக்கும் தடியைத் தன் கையில் எடுத்து, மேஜையில் ஊன்றி, அதை சாய்த்து ஆட்டியபடி, அதன் மேல் நுனியைக் கைகளால் சுழற்றியபடியே நடிகர் திலகம் பதிலளித்துக் கொண்டிருப்பார். (கிட்டத்தட்ட படகுத் துடுப்பை பிடித்திருப்பது போல)

    'உன் பேரு?' என்று அதிகாரி கேட்டவுடன்,

    அதுவரை இன்ஸ்பெக்டரைப் பார்த்துப் பேசாதவர் ஒரு செகண்ட்... ஒரே ஒரு செகண்ட் கண்களை இன்ஸ்பெக்டர் பக்கம் சாய்த்துப் பார்த்து 'கந்தன்' என்று படுவேகமாக பதில் சொல்லிவிட்டு, மறுபடியும் பழைய நிலைக்கு வந்து விடுவார். கந்தன் என்று அவர் தன் பெயரை சொல்லும் முறை, நடிப்பு எல்லாமே இதுவரை எவரும் பார்த்திருக்க முடியாதது.

    இப்போது இன்ஸ்பெக்டர் நடிகர் திலகத்தின் உடையப் பற்றி விசாரிக்க ஆரம்பிப்பார்.

    இன்ஸ்பெக்டர் நடிகர் திலகத்திடம்,

    'படகோட்டுறவங்க எல்லாம் இப்படித்தான் டிரஸ் பண்ணியிருப்பாங்களோ'

    என்று நக்கலாகக் கேட்க,

    அது தன்னுடைய பெர்ஸனல் என்பதால் அதற்கு ஒன்றும் பயப்படப்பட வேண்டிய அவசியம் இல்லையே? அதனால் பதில் நேருக்கு நேர். அதிகாரி முகம் பார்த்து அலட்சிய பதிலாகத் தருவார்.

    நடிகர் திலகம் சொல்லும் அந்த அலட்சிய, சுயகௌரவ, தன்மான, திமிர், தெனாவட்டு பதில் இருக்கிறதே. இந்த ஒரு இடத்துக்காகத்தான் இந்தப் பதிவே. ஒரு நடிகன் எந்தெந்தக் காட்சிக்கு எப்படி எப்படி வசனம் உச்சரிக்க வேண்டும் என்பதற்கு இந்தக் காட்சி ஒரு குருபாடம். இந்த சொற்குருவின் பதம் தொட்டுப் பணிந்தால் அது அவரது ஆசியினால் தன்னாலே வரும் அவர் செய்ததில் கோடியில் ஒரு பங்கிற்கு.

    அருகில் நிற்கும் இன்ஸ்பெக்டரை நோக்கி ஒரு அலட்சியப் பார்வை. அந்த அலட்சியத்தை வலதுகையும் விரித்து காட்டும். இடது கை கைத்தடியைப் பிடித்தபடி என்றும் நடிப்பு ராஜ்ய செங்கோலைத் தன் வசமே வைத்திருக்கும் மன்னவரிடமிருந்து பதில் வரும்.

    'ஹ' என்ற அசால்ட் சிரிப்பை 'சட்'டென உதிர்த்து,



    'என் இஷ்டம்...என்ன...என் இஷ்டப்படி டிரெஸ் பண்ணியிருக்கேன்.(டி ஷர்ட்டைப் பிடித்துக் காட்டுவார்) கை நிறைய சம்பாதிக்கிறேன். அதனால பண்ணியிருக்கேன்'

    அடடா! என்ன ஒரு உச்சரிப்பு! என்ன ஒரு மாடுலேஷன்! எப்படிப்பட்ட டயலாக் டெலிவிரி! என்ன ஒரு தன் இறுமாப்பு!

    (நான் சம்பாதிக்கிறேன்....என் இஷ்டத்திற்கு டிரெஸ் போட்டுக்கிறேன்...நீ யார் அதைக் கேட்பதற்கு? ஏன்? நான் இப்படியெல்லாம் டிரெஸ் போடக் கூடாதுன்னு சட்டம் ஏதாவது இருக்கா? நீ போலீஸ்னா எது வேணும்னாலும் கேக்கலாமா?)

    இவ்வளவு கேள்விகளையும் அவர் பதிலளிக்கும் ஒரு சில வார்த்தைகளிலேயே தன்னுடைய ஈடு இணையற்ற உச்சரிப்பின் மூலம் உணர்த்தி விடுவார். ஏற்ற இறக்கங்களெல்லாம் எவருமே நினைத்து கூடப் பார்க்க முடியாதவை.

    'கள்ளக் கடத்தல்லதானே?' என்று எதிர்பாராத கேள்வி ஒன்றை இன்ஸ்பெக்டர் தன்னிடம் கேட்டதற்கு அதைப் பொறுக்க மாட்டாமல் 'சட்'டென்று படு சீரியஸாக மாறுவார். தன்மான ரோஷம் பொங்க, செம கோபத்துடன் டேபிளை வேகமாகத் தட்டியபடி, (அதுதான்யா தலைவன்)

    'இன்ஸ்பெக்டர்' என்று உறுமுவார். இன்ஸ்பெக்டரின் மேல் வெகுவான முறைப்பு இருக்கும். கீழுதட்டைப் பார்க்க வேண்டுமே. கோடிப் பொன் பெறும்

    'உன் மேலே சந்தேகப்படறேன்' என்று இன்ஸ்பெக்டர் நடிகர் திலகத்தின் தோள் பட்டை மீது கை வைத்துவிடுவார். இப்போது நடிகர் திலகத்தின் கண்கள் தன் தோள்களின் மீது பதிந்திருக்கும் இன்ஸ்பெக்டர்
    கைகளை கீழ்நோக்கி முறைக்கும்.

    அப்படியே கண்களை மேல்நோக்கி (இன்ஸ்பெக்டர் இவரைவிட கொஞ்சம் உயரம்) முறைத்தப,டி



    'கை எடு சாரு' ('எடுங்க சாரு' என்று ரொம்ப மரியாதையாய் சொல்ல மாட்டார். கீழ்நிலை படகோட்டி என்பதால் 'எடு சாரு' என்றுதான் சொல்லுவார்)

    இன்ஸ்பெக்டரை மேலும் கீழுமாக 'லுக்' விட்டபடி,

    'சந்தேகப்பட்டீன்னா சங்கடப்பட வேண்டி வரும்'

    கண்கள் அப்படியே அங்கும் இங்கும் உருண்டு சங்கதிகள் பேசும். வார்த்தைகள் வெறுப்பாக வந்து விழும். அதே சமயம் நெருப்பாகவும்.



    பேசிக்கொண்டே இருப்பவர் படுஸ்டைலாக இடுப்பில் வலது கையை வைத்து அழகாக ஒயிலாக நிற்பார்.

    'யாரு?'

    என்று இன்ஸ்பெக்டர் மிரட்ட, அப்படியே சைடில் அவரை முறைத்து, ஏற இறங்கப் பார்த்துவிட்டு சின்ன எக்காளச் சிரிப்பை உதிர்த்து, சிறிது இடைவெளி விட்டு

    'நான்தான்னு வச்சுக்கோயேன்'

    என்று குரலைத் தாழ்த்துவார்.

    'போலீஸ்காரன்...எது வேணும்னாலும் செய்வான்.. கொஞ்சம் உஷாரா இருக்கணும்' என்ற ஜாக்கிரதை உணர்வை அப்போது மிக அழகாகப் பிரதிபலிப்பார். பதில் சொல்லும் போது பார்வை அங்கு பட்டு 'பட்'டென்று வேறு எங்கோ போய்விடும்.

    'இப்போ உன்னை அரெஸ்ட் பண்ணப் போறேன்'

    என்று இன்ஸ்பெக்டர் சொன்னதும்,

    கொஞ்சம் அதிர்ச்சி காட்டி, பிறகு கொஞ்சமும் பயப்படாமல் (இப்போது இரு கைகளையும் இடுப்பில் வைத்து இருப்பார்) போடுவாரே ஒரு போடு!

    'பண்ணிக்கோ' (அலட்சிய உச்சரிப்பில் ஆகாயம் தொடுவார்)



    அமர்க்களமாக சொல்லுவார். சொல்லியபடியே டி ஷர்ட்டை இடுப்பின் வழியே உயர்த்தி, லூஸான பேண்டை மேலே தூக்கி விட்டு சரி செய்து கொள்வார் . அடடடா! இந்த மனிதர் எங்கே இருந்து இதையெல்லாம் கற்றுக் கொண்டார்? இயல்பு என்றால் கோடி சதவீதம் இயல்பு. வெரி நேச்சுரல். வெறி பிடிக்க வைக்கும் நேச்சுரல்.

    'கொஞ்சம் கூட பயமில்லையே' என்று இவர் குணம் தெரிந்து இன்ஸ்பெக்டர் கேட்க,

    'மடியில கனமில்ல'

    என்பார் கவலையே இல்லாமல்.

    'ஆனா உன் மனசுல குழப்பமிருக்கு' என்று இன்ஸ்பெக்டர் கூறியதும் நேரிடையாக 'கட் அண்ட் ரைட்'டாகப் பேச ஆரம்பித்து விடுவார்.

    'தோ பாரு சார்! உண்மையா நடந்துக்கணும்னு நெனைக்கறவங்க பேர்ல எல்லாம் நீங்க சந்தேகப் பட்றதாலதான் உங்களுக்குக் கரெக்ட் நியூஸே கிடைக்கறதில்லே. போலீஸ் ஸ்டேஷன் பக்கமே எந்தப் பயலும் வர்றதில்லே... ஆமாம்!'

    என்று புத்திமதி வேறே கூறுவார். சும்மா ராஜாங்கம் பண்ணுவார். வசன உச்சரிப்பு முறைகளும், உடம்பின் அங்கங்களும், கண்களும், கையில் இருக்கும் தடியும், அவர் அணிந்திருக்கும் பேண்ட், ஷர்ட்டும், கையில் கொண்டு வரும் பேக் கூட அத்தனையும் நடிக்கும்.

    மிக மிக வித்தியாசமான நடிகர் திலகத்தை இந்தக் காட்சியில் காணலாம். ஆயுள் பூரா பார்த்து பார்த்து ரசித்துக் கொண்டே இருக்கலாம். கண்களை மூடிக் கொண்டு வசன உச்சரிப்புகளை, வார்த்தைகளை வழங்கும் முறைகளை நடிகர்கள் கற்றுக் கொள்ளலாம்.

    படம் தோற்று விட்டால் என்ன? பத்மஸ்ரீ பண்ணும் பராக்கிரமங்கள் நண்பர் ஜோ அவர்கள் சொன்னது போல் என்றும் தோற்காதே!

    டயலாக் டெலிவிரி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு வேதம் இந்த 'பாதுகாப்பு' படக் காட்சி.

    காட்சி இன்னும் தொடரும்.

    நான் எழுதியுள்ள இந்தக் காட்சி இரண்டு நிமிடங்கள்தான் வரும். இந்த இரண்டு நிமிட நேரத்தில் தலைவர் பண்ணும் நடிப்பு வித்தைகளை எழுத நான் பட்டபாடு எனக்குதான் தெரியும். அவ்வளவு சாகசங்கள் புரிவார் இந்த காட்சியில். இந்த ஒரு காட்சிக்கே இப்படி என்றால் இந்தப் படத்தில் அவர் நடித்திருக்கும் இதர காட்ச்களைப் பற்றி எப்படி எழுத? என்ன சொல்லி விளக்க? எனக்கே விளங்கவில்லை.

    நடிகர் திலகத்தின் போலீஸ் ஸ்டேஷன் சம்பந்தப்பட்ட பல படங்களின் காட்சியில் இது மிக மிக வித்தியாசமானது. வியந்து வியந்து ரசிக்க வைக்கக் கூடியது. இந்தக் காட்சியை நமக்காக இன்றுதான் 'யூ டியூபி'ல் தரவேற்றினேன்.

    நீங்களே பாருங்கள். நான் சொன்னது எந்த அளவிற்கு உண்மை என்பது உங்களுக்குப் புரியும்.


    Last edited by vasudevan31355; 21st November 2015 at 05:01 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  15. #909
    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2008
    Location
    BANGALORE
    Posts
    211
    Post Thanks / Like
    என் ஆருயிர் அண்ணன் திரு வாசுதேவன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
    TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM

  16. Thanks vasudevan31355 thanked for this post
  17. #910
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Fiji
    Posts
    0
    Post Thanks / Like
    THE UNCOMMON GOD& A COMMON MAN
    In THANGAPADHAKKAM S.P.CHOWDHRY lost his son,my father almost lost me, how?
    i THINK IT WAS DURING VACATION,THAT the movie came to MUSIRI.We all had gone to the theater for the evening show.The entire area was full of sea of human-beings. Lot of bullock carts have come with people around musiri.With speakers all around it was very noisy.In the crowd we were moving towards the ticket counters.In the process somehow I missed my family members.I ,with fear was running here and there shouting amma,amma!for around ten minutes I was wandering without any clue.Same was the case with my parents.I was about to cry.For heaven sake,one of my neighbor saw me crying and i had told him what happened.I dont remember how exactly i got reunited,but the neighbor had done something extraordinary to save me.
    After this drama,I fully enjoyed the movie.The most wonderful thing what I admired,admiring,will admire in that movie,was the make-up to NT.Right from a constable till the end,his age growth was excellently shown with small mustache,to the thick one,and the one with white hair then and there.His shorts,the tight pant in the middle age,to the pant in the old age.
    The most memorable movie for me is VADIVUKKU VALAI KAAPPU,which I haven't seen yet.Why?
    (to be continued)

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •