Page 306 of 401 FirstFirst ... 206256296304305306307308316356 ... LastLast
Results 3,051 to 3,060 of 4010

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 17

  1. #3051
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    டாக்டர் சிவாஜி செந்தில் சார் தங்களின் முத்தான மூவாயிரம் பதிவுகளுக்கு என்னுடைய வாழ்த்துக்களும் நன்றிகளும. மேலும் பல லட்சம் பதிவுகள் காண ஆவலாய் உள்ளேன்

    c ramachandran

  2. Thanks eehaiupehazij thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #3052
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Honeydews and Hailstorms of NT starrers!

    நடிகர்திலகத்தின் திரைக்காவியங்களில் தேன்மழையும் ஆலங்கட்டி மழையும் !

    புதிய பறவை : புதிய பாதையில்...புதிய பார்வையில்!

    Part 1.2 Pudhiya Paravai songs!!

    புதிய பறவை நனைந்த பாடல் மழைத்துளிகள் !

    இந்திய திரைக் கலாசாரத்தில் நவரச உணர்வுகளையும் ரசிக நெஞ்சங்களை ஈர்த்திடும் வண்ணம் வெளிப்படுத்திட இனிய இசையும் இனிமையான இதமான பாடல்களும் பொருள் பொதிந்த பாடல் சூழலுக்கேற்ற வரிகளும் உணர்வுகளின் வடிகாலான பாடகரின் குரல்வளமும் இன்றியமையாத அம்சங்களாகவும் தவிர்க்க இயலாத ரசனை தீனியாகவும் இன்றளவும் நம்மை ஆட்கொண்டு வருகின்றன !

    பத்து பக்க வசனமாகட்டும் பத்து வரிப் பாடலாகட்டும் முத்திரை நடிப்பால் மெய்மறக்க வைப்பதில் எவரும் எட்டிப் பிடிக்க இயலாத உயரத்தில் நடிகர்திலகம் கோலோச்சினார் என்பதே மிகையற்ற உண்மை!!

    புதியபறவை திரைப்படத்தில் கண்ணுக்குக் குளுமையான வண்ணக் கலவையில் காதுக்கு இனிமையான கானங்கள் இசைவிருந்தாக அவரது மேன்மையான நடிப்பால் மெருகேறின !

    சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து.....பார்த்த ஞாபகம் இல்லையோ....உன்னை ஒன்று கேட்பேன்....மெல்லநட மெல்லநட.....பாடல்கள் தேன்மழை என்றால்..... பார்த்த ஞாபகம் இல்லையோ (sad version).. எங்கே நிம்மதி.... பாடல்கள் பளீரென்று இறையும் ஆலங்கட்டி மழை போல குளிருடன் மனதையும் அறையும் வரிகளுடன் இன்றளவும் ரசிக நெஞ்சங்களில் கூடுகட்டி புதிய பறவையை வரவேற்றுக்கொண்டே இருக்கின்றன !!


    தேன்மழை Honey dew1

    பார்த்த ஞாபகம் இல்லையோ பருவ நாடகம் தொல்லையோ

    தாயை இழந்த வேதனையை மறைக்க மனப் போராட்டங்களுக்கு மருந்தாக இரவு விடுதி நடன ஆடல் பாடல் கேளிக்கைகளை நாடிச் செல்கிறார் நடிகர்திலகம் !

    இரவு ஏழரை மணிக்கு மேல் லேசான மது மயக்கத்திலும் புகைபிடிப்பிலும் மனதுக்கு ஒத்தடம் தர ஆரம்பிக்கும்போது அவருக்கு ஆரம்பிக்கிறது 7.5!

    காந்தப் புயலாக கவர்ச்சிக் கதிர்வீச்சாக கானக் குயிலாக பார்த்த ஞாபகம் இல்லையோ பருவ நாடகம் தொல்லையோ என்று தூண்டில் போட்டு மீனைப் பிடிக்கிறார் சௌகார் ஜானகி ! பாடல் வரிகளும் விஸ்வநாதரின் இசைக் கோர்ப்பும் சுசீலாம்மாவின் குயில் குரல் வளமும் டாக்டர் நோ ஜேம்ஸ் பாண்ட் / ஷான் கானரியின் Bond...James Bond .... அமர்க்கள அறிமுக காட்சியமைப்பில் லண்டனில் வடிவமைக்கப் பட்ட டக்ஷிடொ வகை கோட் சூட் டை நீலநிற வடிவமைப்பில் அதே ஸ்டைலில் கையில் புகையும் சிகரெட்டுடன் இன்னொரு கையில் பாங்காக மதுக் கோப்பையை ஏந்தும் பாந்தமும் இன்றுவரை இக்காட்சியை அமரத்துவம் பெற்ற நடிகர்திலகத்தின் அக்மார்க் ஸ்டைல் அமர்க்களங்களில் ஒன்றாகவே உருவகப் படுத்தி தேன் மழையாக செவிகளையும் மனதையும் நனைத்து இனிமை சிறகடிக்க வைக்கின்றனவே!!



    ஆலங்கட்டி மழை
    Hailstorm 1 எங்கே நிம்மதி.....

    The Signature song of NT!

    பணத்தை தொலைத்தாலும் பதவியை தொலைத்தாலும் மீண்டும் நிமிர்ந்து விடுவான் குறிக்கோளில் தெளிவான மனிதன் !

    அவனே வரிசையாக நடக்கும் எதிர்மறை நிகழ்வுகளில் மனம் பேதலித்து மனம் குழப்பக் குட்டையாக சேறு படியும்போது நிம்மதியை தொலைத்து மீள முடியாமல் தேடி அலைகிறான் !

    மனக்குழப்பங்களை தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்தும் முக லட்சணம் உலகளவில் முதன்மை கொண்டது நடிகர் திலகத்துடனே !

    அதுவும் ஒரு துன்பவியல் பாடல் வழி நடிப்பில் இதை பல்வேறு பரிமாண கோணங்களில் உடல்மொழி முகபாவ மின்னல் வேறுபாடுகளில் உலகே வியக்கும் வண்ணம் இப்பாடலில் உருவகப் படுத்தி அந்த வேதனையின் வீச்சை ரசிகனும் உணர்ந்து வலியால் துடிக்க வைத்த அற்புத நிகழ்வை நடத்திக் காட்டி இப்பாடல் காட்சி நடிப்பை தனது முத்திரையாக்கினார் நடிகர்திலகம் !

    எனது கைகள் மீட்டும்போது வீணைஅழுகின்றது ............இவ்வரிகளுக்கு நடிப்புத் தந்தையின் கைகளின் காற்றில் கோலமிடும் அசைவுகளும் முகத்தில் ரேகைக் கீற்றுகளும் உயிரூட்டும் விந்தை சிந்தையில் என்றும் பசுமையே !!


    Last edited by sivajisenthil; 9th February 2016 at 05:20 AM.

  5. Thanks Russellmai thanked for this post
    Likes ifohadroziza, Harrietlgy, Russellmai liked this post
  6. #3053
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. Thanks eehaiupehazij thanked for this post
  8. #3054
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Melody and Melancholy from NT starers!

    புதிய பறவை : புதிய பாதையில்...புதிய பார்வையில்!

    Part 1.3 : Pudhiya Paravai!

    அனைத்துப் பாடல்களும் செவிகளில் தேனமுதமாகப் பாய்ந்து பாடலுக்கான காட்சியமைப்புக்களும் இசைக் கோர்வையும் கலைஞர்களின் நடிப்புப் பங்களிப்பும் சிறப்பாக அமைந்த நடிகர்திலகம் திரைக் காவியங்களில் முதலிடம் புதிய பறவைக்கே!

    பழைய பறவையின் நினைவலைகள் அமிழ்ந்து புதிய பறவையின் அணைப்பில் சுகம் கமழ்ந்து வாழ்வின் இனிமையை மீட்டு சந்தோஷத்தில் திளைத்து கற்பனை சிறகுகளை விரித்து சிட்டுக் குருவிகளாய் காதலர் ஒருமித்தாலும் அதையும் மீறி மனதில் ஆழமாக பதிந்த வடுவின் வலியும் இன்ப முகத்தில் துன்ப ரேகையாகப் பளீரிடும் நடிப்பின் வீரியத்தை தனது முகபாவங்களில் லாவகமாக கையாண்டிருப்பார் நடிப்பின் இமயம் !
    சரோஜாதேவியின் இணைவில் இன்ப துன்ப நிலைப்பாடுகளாக வெளிப்படும் பாடல்கள் !

    Melody மனதில் இன்ப சிறகடிப்பு 1 சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து.....



    Melancholy மனதின் துன்ப நெருடலில் இதமான இன்ப வருடல் 1 உன்னை ஒன்று கேட்பேன் (வருத்த நிலை)

    Last edited by sivajisenthil; 9th February 2016 at 05:18 AM.

  9. Thanks Russellmai thanked for this post
    Likes ifohadroziza, Harrietlgy, Russellmai liked this post
  10. #3055
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Whodunit?! Motive? Modus Operandi?...is the basis and backbone of all Hitchcock thrillers that are unparelleled and incomparable by all means till this day...the way frames are sequenced...the logic behind the actions of characters...exotic locations...mood paced music...totally unexpected twists and turns...unpredictable climax segment...psycho analyses.....justification of the crime committed....The Master weaver always shines and excels!

    In Tamil Cinema quite a few movies were made with near perfection for all elements of a Hitchcock type thriller...of which Pudhiya Paravai was daring and a darling in the minds of viewers in depicting the negative characterization in a believable way by the most famous emperor of acting NT evoking sympathy rather than anger!Of course films of similar genre like Adhe Kankal, Nadu Iravil, Saavi (direct adaptation of Hitchcock's Dial M for Murder), Andha Naal (by S. Balachander)....could also please the viewers and fed them to their hunger for different story bases amidst the sentiment driven family dramas!

    உளவியல் ரீதியான குற்ற நிகழ்வுகளின் பின்புலத்தில் இறுகிக் கிடக்கும் மர்ம முடிச்சுகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்க்கப் பட்டு குற்றவாளி எத்தகைய சமூக அந்தஸ்தில் இருப்பவராயினும் தண்டிக்கப்படுவதே ஆல்பிரட் ஹிட்ச்காக் என்னும் ஹாலிவுட் மர்மப் பட மேதையின் திரைக் காவியங்கள் சொல்லும் பாடம் !

    தனது மனைவியின் மரணத்திற்கு காரணமாக இருக்கும் சமூக அந்தஸ்துள்ள செல்வந்த இளைஞன் அக்குற்றத்தை மறைத்து இன்னொரு பெண்ணிடம் காதல் வயப்பட்டு வாழ்கை மாற்றம் நிகழும் தருணத்தில் தன்னைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் சதிவலை உணராது மர்மங்களைத் தனது வாயாலேயே
    வெளிப்படுத்த வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டு வலையில் சிக்கும் அதி அற்புதமான திரில்லர் புதிய பறவை !
    ஆரம்பம் முதல் முடியும்வரை நடிப்பிலக்கணத்தின் அனைத்து சாராம்சங்களையும் நடிகர்திலகம் பிரித்தெடுத்து பின்னியிருப்பார் !


    Last edited by sivajisenthil; 10th February 2016 at 02:05 AM.

  11. Thanks Russellmai thanked for this post
    Likes Russellmai liked this post
  12. #3056
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Congratulation Dr for reaching another milestone.


    Regards

  13. #3057
    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2008
    Location
    BANGALORE
    Posts
    211
    Post Thanks / Like
    Dear sivajisenthil sir,
    congratulations for crossing another milestone of 3000 posts
    TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM

  14. Thanks eehaiupehazij thanked for this post
  15. #3058
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    congratulations senthil sir crossing 3000 posts.

  16. Thanks eehaiupehazij thanked for this post
  17. #3059
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    Congrats Mr. Sivaji senthil sir.

  18. Thanks eehaiupehazij thanked for this post
  19. #3060
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    திருவிளையாடல் - 50-ம் ஆண்டு விழா

    (தொடர்கிறது)

    நமது NT FAnS அமைப்பு தொடங்கப்பட்ட பிறகு நடிகர் திலகத்தின் பல படங்களுக்கு 50-வது வருட மற்றும் 60-வது வருட விழாக்களை கொண்டாடியிருக்கிறோம். அந்த நேரத்தில் கூட ஏதேனும் படங்களின் பொன் விழாவை பெரிய விழாவாக நடத்த வேண்டும் என்று யோசித்தோம் என்றால் அது இரண்டு படங்களுக்குதான். ஒன்று புதிய பறவை மற்றொர்ன்று திருவிளையாடல். [அதாவது 1965 வரை உள்ள காலகட்டத்தில் வெளியான படங்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டே சொல்கிறேன்], இதில் புதிய பறவையின் விழா அந்த நேரத்தில் நடக்கவில்லை.[ஆனால் அதையும் விரைவில் நடத்தப் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறோம்]. ஆகவே திருவிளையாடல் படத்தின் பொன் விழாவை கொண்டாடியே ஆக வேண்டும் என்று தீர்மானமாய் முடிவெடுத்து செயல்பட்டோம்.

    இதற்கு நாம் மட்டும் முடிவெடுத்து தன்னிச்சையாக செயல்படாமல் படத்தயாரிப்பாளர் இயக்குனர் அருட்செல்வர் ஏபிஎன் அவர்களின் புதல்வர் திரு பரமசிவம் அவர்களையும் கலந்துக் கொள்ள வைக்க வேண்டும் என்று முயற்சி செய்தோம். ஆனால் திரு பரமசிவம் வெளிநாட்டு வாழ் இந்தியராக [NRI] இருக்கும் காரணத்தினால் அவரை தொடர்பு கொள்வதே கடினமாக இருந்தது. சரி நாமே விழாவை நடத்தி விடுவோம் என்று முடிவெடுத்து 2015 செப்டம்பர் மாதம் தேதி குறித்தோம். ஆனால் நமது அமைப்பின் தலைவர் வெளிநாடு செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டதால் விழா தள்ளிப் போனது. பிறகு டிசம்பர் மாதம் 27-ந் தேதி என்று முடிவானது. நமது அமைப்பின் சார்பாகவே விழாவை நடத்தி விட ஏற்பாடு செய்தபோது வெளிநாடு சென்றிருந்த நமது அமைப்பின் தலைவர் திரு YGeeM அவர்கள் நடிகர் திலகத்தின் பக்தரும் தோகா வங்கியின் சேர்மனுமான திரு சீதாராமன் அவர்களிடம் இதை பேச்சுவாக்கில் பகிர்ந்துக் கொள்ள, திருவிளையாடல் படத்தின் அதி தீவிர ரசிகரும் கூடியான சீதாராமன் விழாவை தானே sponsor செய்வதாக ஏற்றுக் கொண்டார். Event Management நிறுவனமாக செயல்படும் அப்பாஸ் [ABBAS] குழுவின் ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் அவர்களும் நமது இந்த முயற்சியில் கைகோர்க்க விழா டிசம்பர் 27 என்று முடிவானது.

    டிசம்பர் முதல் வாரம் பேய் மழையும் பெரு வெள்ளமும் மக்களின் இயல்பு நிலை பாதிப்பும் பயமுறுத்திய போதும் இந்த விழா மூலம் வசூலாகும் தொகை ஒரு நல்ல காரியத்திற்காக பயன்படப் போகிறது என்பதால் விழா ஏற்பாடுகளை முன்னெடுத்து சென்றோம். அதன் பிறகு ஏற்பாடுகள் துரிதமாக நடந்தேற டிசம்பர் 27-ம் வந்தது. விழாக்களுக்கு இலவச அனுமதி கொடுத்தாலே மக்கள் வராத இந்த காலகட்டத்தில் பணம் கொடுத்து மக்கள் டிக்கெட் வாங்குவார்களா என்ற சிலரின் ஐயத்தையும் போக்கி ஏராளமான மக்கள் வருகை தந்தபோது நடிகர் திலகம் இருக்க பயமேன் என்பது மீண்டும் நிரூபணம் ஆனது.

    தடைகளையும் தயங்கங்களையும் கடந்து வெற்றிகரமாக விழா தொடங்கியதைதான் சென்ற பதிவில் பார்த்தோம். இனி விழாவில் அடுத்து வந்தவை ---

    (தொடரும்)

    அன்புடன்

  20. Thanks Russellmai thanked for this post
    Likes KCSHEKAR, Harrietlgy, Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •