Page 320 of 337 FirstFirst ... 220270310318319320321322330 ... LastLast
Results 3,191 to 3,200 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #3191
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    Jugal bandhi ஹி ஹி..

    இளம் கன்னி உன்னைக் காண வந்தாள்... குபேரத் தீவு தேவிகா..



    ஜங்க்லீயில் ஷம்மிகபூர் சைரா பானு..


  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3192
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    About the state of the world

    C.S.Jayaraman in manidhanum mirigamum(1953)

    kaalam enum sirpi seyyum kavidhai thaai koviladaa.......


    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  4. #3193
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    திரைப்படம்: அழியாத கோலங்கள் (1979)
    வரிகள்: கங்கை அமரன்
    இசை: சலில் சௌத்ரி
    பாடகர்: எஸ்.பி. பாலசுப்ரமணியம்


    நான் எண்ணும்பொழுது
    ஏதோ சுகம் எங்கோ தினம்
    செல்லும் மனது...





    Hindi original by Lata Mangeshkar from the classic movie ANAND (1971):



    Lata Mangeshkar's Bengali copy:


  5. #3194
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    August. 5th. - J.P.Chandrababu's Birthday. A jugalbandi in his memory

    From peN(1953)

    kalyaaNam kalyaaNam.......

    Chandrababu sings for veeNai Balachander.




    From the Hindi remake Ladki

    shaadhi shaadhi..............

    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  6. #3195
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    1950களில் நடிகர்திலகத்தின் பாடும் குரலாக இருந்தவர்களில் குறிப்பிட தக்கவர்கள் சிதம்பரம் ஜெயராமன்,சீர்காழி கோவிந்தராஜன் ,ஏ.எம்.ராஜா, டி.எம்.சௌந்தரராஜன். அது தவிர, கண்டசாலா,கிருஷ்ணன், சுந்தரம்,பீ.பீ.ஸ்ரீனிவாஸ் ,சந்திரபாபு,டி.ஏ. மோதி போன்ற பலரும் பாடி வந்தனர். நடிகர்திலகமும் எந்த வித மறுப்பும் சொல்லாமல் எல்லோரையும் ஆதரித்து வந்தார்.

    ஆனால் 59இல் இருந்து நிலைமை தலை கீழ். டி.எம்.எஸ் குரல் நடிகர்திலகத்தின் அங்கீகரிக்க பட்ட குரலாக மாறி ,வெற்றி கூட்டணி ஆகி விட்ட படியால் ,நடிகர்திலகத்தால் எந்த சோதனைக்கும் இடம் கொடுக்க முடியாமல் போனது.

    இரண்டு சுவாரஸ்யங்கள்.

    பாலும் பழமும் படத்துக்கு பாடல் பதிவு முடிந்து படப்பிடிப்பு தொடங்க வேண்டிய தருணத்தில் டி.எம்.எஸ் க்கு கடும் ஜலதோஷம். பட குழுவினர் வேறு பாடகரை வைத்து முடிக்கலாம் என்று முடிவெடுத்த போது ,நடிகர்திலகம் சொன்னது. ஜலதோஷம் என்றாலும் டி.எம்.எஸ் பாடட்டும். டி.எம்.எஸ் பாடி கொடுத்தார் மென்மையான nasal tone இல்.(என்னை யாரென்று,நான் பேச ,பாலும் பழமும்) இதை கேட்ட சிவாஜி துள்ளி குதித்து தன் பேசும் குரலை முடிவு செய்து கொண்டார். விஞ்ஞானி மருத்துவருக்கு தூக்கி வாரிய இள நரை முடியுடன் ,மென்மையான மூக்கின் குரலே கதாபாத்திரத்துக்கு அமெரிக்கையான மெருகு அளிக்க முடியும் என்று. குறையே ,கூடுதல் நிறையானது நடிகர்திலகத்தின் மேதைமையால்.

    குங்குமம் படத்தில் சின்னஞ்சிறிய வண்ண பறவை பாடல் ,ஹிந்துஸ்தானி பாணியும் ,சுர பிர்காக்களும் நிறைந்த தனித்துவ பாடல். சீர்காழியின் பிர்கா சாரீரமே இதற்கு உகந்தது என்று முடிவு செய்து பாடல் பதிவு செய்தாயிற்று. ஆனால் நடிகர்திலகம் சொன்னது. அபசுரம் பாடினாலும் சௌந்தர்ராஜனே பாடட்டும்.(அந்த பாட்டில் டி.எம்.எஸ் திணறி தண்ணீர் குடித்திருப்பார். ஜானகியும் சுவற்றில் ஆணி போல கீறுவார்) அற்புதமான composition . காலத்தை வென்று நின்றாலும் பாடகர்களின் தேர்வு கேள்விக்குரியதே.கோபமாக இருந்த சீர்காழியை ,அவர் இசை நிகழ்ச்சியொன்றில் நடனமாடி நடிகர்திலகம் குஷி படுத்தி வழிக்கு கொண்டு வந்து விட்டார் என்பது வேறு விஷயம்.
    Last edited by Gopal.s; 10th August 2016 at 07:26 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  7. #3196
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மோகம் பிறந்ததம்மா

    வாசுவிற்கும் எனக்கும் பிடித்த பாடல் மற்றும் situation . உங்களை துள்ளி குதிக்க வைக்கும் இசை மற்றும் சம்பந்த பட்ட நடிகர்களின் பாடகரின் தேர்ச்சியான ,உற்சாக,பங்களிப்பு. அடடா போட வைக்கும். இந்த உணர்வை எனக்கு தந்த மாற்று முகாம் பாடல்களில் முக்கியமானவை அச்சம் என்பது மடமையடா,உலகம் பிறந்தது, கண்ணென்ன கண்ணென்ன, நான் ஆணையிட்டால், மூன்றெழுத்தில் என் ,பெண்ணை பார்த்து, அதோ அந்த பறவை போல,சுகமெதிலே இதயத்திலா ,வெற்றி மீது வெற்றி வந்து,இடமோ சுகமானது ,சொர்க்கத்தை தேடுவோம்,தொட்டுக்காட்டவா,பம்பை உடுக்கை கொட்டி மற்றும் இப்போது நான் குறிப்பிட போகும் பாடல்.

    சூழ்நிலை,மாறுவேடம் எல்லாம் வழக்கம் போலவே. எம்.எஸ்.வீ இணைப்பு கூத்து டப்பாங்குத்து,மேற்கத்திய இணைப்பிசை அப்பப்பா என்ன அருமை. டி.எம்.எஸ் குரல்,சம்பத்த பட்ட நாயகி நாயகர் புரிதல், சுறு சுறுப்பு, நடன பாங்கு,நளினம் அனைத்தும் பாடலுடன் இழையும். கிளாஸ் என்று சொல்ல முடியாவிட்டாலும், ஒரு ஈர்ப்பு இந்த பாடலின் மீது. அதிகப்ரசங்கி தனமான வரிகள் தவிர்த்து கதைக்கு தேவையான பாடல்.(வாலிதானே) இந்த படத்தில் கலைஞர் குறும்பில் காலட்சேபம் மிளிரும். பாருங்கள் ,கேளுங்கள். வாசு உனக்கும் சேர்த்து.

    எம்.எஸ்.வீ. இசையில் ஒரு விஷயம் கவனித்தால் ,பாடல்கள் உருமாறும் விதம். பாட்டொன்று கேட்டேன் பாசமலர் கிளாசிக் பாடலின் அடிநாதத்தில் ,அவர் இந்த ஜனரஞ்சகம் கொண்டு வந்திருக்கும் அதிசயம் விளங்கும்.

    Last edited by Gopal.s; 10th August 2016 at 07:29 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  8. #3197
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மறைந்த முன்னாள் கவர்ச்சி புயல் ஜோதிலட்சுமி அவர்களின் மறைவுக்கு எங்கள் ஆழ்ந்த அநுதாபங்கள் .

    எங்கள் ஆஸ்தான கவர்ச்சி நடிகைகளான சகுந்தலா,விஜயலலிதாவை விட எங்களுக்கு பிரியமானவர்கள் ஜோதிலட்சுமி, ஆலம் ,விஜயஸ்ரீ,ஜெயக்குமாரி,ஜெயமாலினி ஆகியோரே. இங்கு ஜோதிலக்ஷ்மியை கவுரவிக்கும் வகையில் ஒரு எதிரொலி பாடல்.மற்றோருக்கும் ஒவ்வொரு பாடல் என் பிடித்தம்.



    ஆலம் ,காஞ்சனா.



    விஜயஸ்ரீ



    ஆலம்



    ஜெய்குமாரி



    ஜெயமாலினி

    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  9. #3198
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    பஞ்சு அருணாச்சலம் , மறைவு நமக்கு அதிர்ச்சி தரும் ஒன்று. இளையராஜா என்ற பொக்கிஷம் நமக்கு கிடைக்க காரணகர்த்தா., 1976இல் அன்னக்கிளி என்ற திருப்பு முனை படம் (16 வயதினிலே படத்திற்கு முன்பே வந்த trend setter )கிராமிய மணத்துடன், வெளிப்புற படப்பிடிப்பு எல்லாவற்றிலும் புதுமை விருந்தானது . மருத்துவச்சி என்ற செல்வராஜ் (முதல் மரியாதை) கதையே அன்னக்கிளி ஆனது.

    கண்ணதாசனுக்கு உறவினர். பல்முனை வித்தகர். ரஜினி,கமல் இவர்களை வியாபார ரீதியாக வளர படிக்கல்லாக இருந்தவர்.

    நடிகர்திலகத்தின் ரத்த திலகம் தயாரிப்பாளராக இவர் பெயர் இடம் பெற்ற நினைவு. அவன்தான் மனிதன்,கவரிமான் வெற்றிக்கு ஒருவன்,வாழ்க்கை என்ற படங்களுக்கு வசனகர்த்தா.

    இவருடைய படங்களில் என்னை பெரிதும் கவர்ந்த படம் "அவர் எனக்கே சொந்தம்". இதில் வரும் ஒரு வீடு இரு உள்ளம் எனக்கு பிடித்த பாடலும் கூட.

    பல கதைகளை உரு தெரியாமல் சிதைத்து திரைக்கதை அமைத்தாலும் (மகா கொடுமை காயத்ரி,இது எப்படி இருக்கு ,பிரியா,) வெற்றி பெற வைத்தவர்.



    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  10. #3199
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    உலகம் இவ்வளவுதான்(1969) என்று ஒரு படம். செம நாட் . ஒரு வரி கதை சொன்னால் துள்ளியெழ வைக்கும். ஒருவன் பெரியப்பாவுக்கு
    (கெட்டவர்) கொடுத்த வாக்கு படி நல்லவனாகவும், அப்பாவுக்கு (நல்லவர்)கொடுத்த வாக்கு படி கெட்டவனாகவும் இருக்க வேண்டிய நிர்பந்தம். கிட்டத்தட்ட எங்கள் தங்க ராஜா, அந்நியன் அளவு வர வேண்டிய நாட் . குரங்கு கையில் கிடைத்த பூமாலையாய் நாகேஷ்(ஹீரோ),சுப்பு ஆறுமுகம் (கதை-வசனம்),வேதாந்தம் ராகவையா (இயக்குனர்) கையில் மாட்டி சீரழிஞ்சு சிரிப்பாய் சிரித்தது.
    சர்வர் சுந்தரம்,நீர்க்குமிழி,எதிர்நீச்சல் ,பனமாபாசமா படங்களின் வெற்றி நாகேஷை போட்டு ஹீரோவாக்கும் அசட்டு துணிச்சலை வேதாந்தம் ராகவையா, திருமலை மகாலிங்கம் ஆகியோருக்கு தந்ததால் , உலகம் இவ்வளவுதான்,சோப்பு சீப்பு கண்ணாடி போன்ற படங்கள். நடிகர்திலகத்தின் பாடும் குரலாய் உச்சத்தில் மிளிர்ந்த டி.எம் .எஸ், ங்கே என்று குரலை மாற்றி நாகேஷுக்கு பாட வேண்டிய கேவலம்.அவலம்.

    உலகம் இவ்வளவுதான் படத்தின் கூட்டல் அம்சங்கள் ராஜஸ்ரீ,விஜயஸ்ரீ (வீணடிக்க படுவார்கள்), வேதாவின் இசை. ஒரு தத்துவ பாடல்(காலம் போற), ஒரு இரட்டை அர்த்த பாடல்(மாம்பழம் வாங்குங்க )இலந்தை பயம்,ஏழு வயசிலே இளநி பாணி. சென்சார் இருப்பது ரெண்டுதானுங்கவை படத்தில் நாலாக்கி , ராஜஸ்ரீயின் மாம்பழத்தை மாட்டின் மாம்பழம் ஆக்கினர். ,ஒரு படு ஜாலி வெஸ்டர்ன் (இவ்வளவுதான் உலகம் இவ்வளவுதான்), ஒரு குத்து (ஊத்தி கொடுத்தாண்டி ஒரு ரவுண்டு).அப்போதெல்லாம் சோவுக்கும் பாடல் கொடுத்து விடுவார்கள். சோவும் வீணாக்கி தொலைவார்.(வானும் நிலமும் வீடு,ஊத்தி கொடுத்தாண்டி) வா வாத்யாரே விதி விலக்கு.

    பாருங்களேன் எவ்வளவு ஜாலி இந்த உலகம் இவ்வளவுதான்.

    Last edited by Gopal.s; 11th August 2016 at 10:07 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  11. #3200
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    தங்கை.

    நடிகர்திலகத்தின் திருப்புமுனை படம். அவரை C centre superstar ஆக்கிய படம்.

    புதிய பறவை போல Duets கிடையாது. எல்லாமே solo பாடல்கள்தான்.

    ஆனால் பாடல்களுக்கான leads பிரமாதமாக இருக்கும்.(Hats off டு திரிலோக் team )

    கேட்டவரெல்லாம்- பாட சொல்லி எல்லோரையும் கேட்ட பிறகு ,ஒன்றிலிருந்து பத்து idea சொல்லி அவர் NT பேரிலே வந்து.....



    இனியது- காரில் ரேடியோ திருப்ப அது உப்பு ,புளி ,மிளகாய் விலைகளை பட்டியலிட ,சூழ்நிலை இறுக்கத்தை மறந்து சிரிப்பை கட்டுபடுத்தி ,மேஜர் உடன் உரையாடல் தொடர்வார் பாருங்கள் ,ஏன் இவரை தினமும் துதிக்கிறோம் என்று புரியும்.கட்டாயமாக
    காரிலிருந்து இறக்கி விட பட்டதும் இந்த பாடல்....




    சுகம் சுகம்- கே.ஆர்.வீ , NT இடம் அவர் நிலையை கேட்க,வாக்குவாதம் முற்றி அவர் அறைந்து விட்டு நடக்க ஆரம்பிக்க இந்த பாடல்.(சிவாஜி-கே.ஆர்.வீ pair நன்றாக இருக்கும்)



    நினைத்தேன் உன்னை- வில்லன்களின் பிளான். காஞ்சனாவின் சிவாஜி காதலினால் அவரை தப்பிக்க வைக்க என்று இறுக்கமான சூழல். சிவாஜி படு rugged handsome ஆக தெரிவார்.

    வீடியோ காணோம்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •