Page 315 of 337 FirstFirst ... 215265305313314315316317325 ... LastLast
Results 3,141 to 3,150 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #3141
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    Jugalbandi

    From Akbar (1961), Tamil dubbed version of Mughal E Azam

    undhan sabaiyil endhan vidhiyai.......




    From the Hindi original

    teri mehfil mein kismat.....


    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3142
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajeshkrv View Post
    madhunna happy anniversary
    Thank you Rajesh.. இன்று... இப்போது... சிக்காவை நேரில் பார்த்து பிரம்ம்மித்து போனேன். மிஸ்டர் மஸ்கட் .. அவர் ஒரு தங்க பிஸ்கட்.
    சும்மா ரொம்ப நாள் பழகியவர் போல ஜாலியாக பேசி பழகியவர் உடன் கிளம்ப வேண்டிய சூழ் நிலை. மீண்டும் சந்திப்போம்

    சிக்கா.. உங்கள் அன்புக்கு நான் அடிமை. // வாசுஜி... உங்களை ரொம்ப மிஸ் செஞ்சோம் //

  4. #3143
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சின்னா! மதுண்ணா!

    மன்னிக்க...மன்னிக்க. சின்னவை பார்க்க சென்னை வர எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை. இங்கே பணியில் முடக்கிப் போட்டு விட்டார்கள். ஷட்-டவுன் பீரியட் என்பதால் லீவும் எடுக்க இயலாத சூழல். இந்த தடவையும் சின்னாவை மிஸ் பண்ணியாயிற்று. மது அண்ணாவையும் தான். கோபால் சாரையும் கோட்டை விட்டு விட்டேன். போன் கூட எடுக்க நேரமில்லை.

    மது அண்ணா! தாமதாக வாழ்த்தினாலும் மனமுவந்து தங்களுக்கான மணநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இறைவன் அருளால் தங்கள் குடும்ப வாழ்வு இன்று போல் என்றும் சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.

    மதுர கானங்கள் வழக்கம் போல மணக்கட்டும்.சிறக்கட்டும்.

    ராஜேஷ்ஜி! தங்களை இங்கே மீண்டும் பார்க்கையில் ஆறுதலாக இருக்கிறது. வருக! வருக.

    ராஜ்ராஜ் சார் நலமா? எப்படி இருக்கிறீர்கள்?

    ராகவேந்திரன் சார், கோபால் சார் நலம்தானே? மற்றும் வினோத் சார், ஆதிராம் சார், செந்தில்வேல், வாசுதேவன் சார், ராகதேவன் சார், முரளி சார் மற்றும் அனைவரும் சுகம்தானே!
    நடிகர் திலகமே தெய்வம்

  5. Likes madhu, Richardsof, RAGHAVENDRA liked this post
  6. #3144
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    சி.கா..
    குடுத்துட்டீங்களே.டேக்கா..
    கடுக்கா நேக்கா...

    சொல்லியிருந்தா நானும் வந்திருப்பேனே உங்களைப் பாக்க...

    ஹ்ம்ம்... அடுத்த முறையாவது பார்ப்போம்..

    Anyway All the Best
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #3145
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    கல்தோன்றி மண்தோன்றா கற்கால காவியத் தேன்மதுரங்கள் (மண்ணில் மனிதன் தோன்றியும் மனிதம் தோன்றா) தற்கால மன ஓட்டங்களில்!









    கல்லும் கனிந்திடும் காலம் வருமா ?
    Last edited by sivajisenthil; 16th July 2016 at 09:12 AM.

  8. Likes Russellmai liked this post
  9. #3146
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    சமூக பொறுப்பு

    திரையுலகத்துக்கு சில கருத்துக்களை கூற விரும்புகிறேன். முன்பு திரைப்படங்கள், மனித பண்புகளை வளர்ப்பது, தேசப்பற்றை மக்கள் மத்தியில் உருவாக்குவது போன்ற நற்செயல்களில் ஈடுபட்டன என்று கூறுவதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை.
    ஆனால், அண்மை காலங்களில் டி.வி. தொடர்கள், குடும்பபெண்களின் உயர் பண்புகளை அழிக்கும் விதமாக, பெண்களை ‘வில்லியாக’ சித்தரிக்கின்றன. திரைப்படங்களில் எல்லாம் ஆபாச காட்சிகள், வன்முறை காட்சிகள், கெட்ட எண்ணத்தை தூண்டும் காட்சிகள் அதிக அளவில் இடம்பெறுகின்றன. கொடூர குற்றவாளி கதாபாத்திரம் எல்லாம் முன்னணி கதாநாயகர்கள் நடிக்கின்றனர்.

    இதனால், ரசிகர்கள் மனதில் நஞ்சை விதைக்கிறது. குற்றம் செய்வது தப்பு இல்லை என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. முன்பு எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் போன்ற நடிகர்கள் தங்கள் ரசிகர்களுக்கு நல்லொழுக்கத்தை சொல்லிக் கொடுக்கும் விதமாக நடித்தார்கள். அவர்களது திரைப்படங்கள், சமுதாயத்தில் மிகப்பெரிய சீர்திருத்தத்தை உருவாக்கியது.

    ஆனால், தற்போதுள்ள சூழ்நிலையில், சமுதாயத்தில் நடக்கும் பல குற்றங்களுக்கு, சினிமாதான் காரணம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
    எனவே, முன்னணி கதாநாயகர்கள், கெட்டவனாக நடிப்பதற்கு முன்பு, தன்னுடைய நடிப்பு, சமுதாயத்தில், குறிப்பாக தன்னுடைய ரசிகர்கள் மத்தியில் ஒரு பாதிப்பை ஏற்படுத்துவது குறித்து சிந்தித்து பார்க்கவேண்டும். நடிகர்கள், சினிமாவில் மதுகுடிப்பது, சிகரெட்டு பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்காமல் தவிர்க்கவேண்டும். அதன்மூலம் இந்த கெட்ட பழக்கங்கள், தன்னை விரும்பும் ரசிகர்கள் மத்தியில் ஏற்படாமல் பாதுகாக்க முடியும்.

    வருமானம் முக்கியமல்ல

    எனவே, திரையுலகத்தினர், குறிப்பாக முன்னணி கதாநாயகர்கள், தங்களது திரைப்படங்கள் சமுதாயத்துக்கு நன்மைகளை ஏற்படுத்தும் விதமாக இருக்க வேண்டும் என்று நினைக்க வேண்டுமே தவிர, அதிக வருமானத்தை தரவேண்டும் என்று நினைக்கக்கூடாது. குறிப்பாக தன்னுடைய திரைப்படம் தவறான தகவல்கள், சமுதாயத்துக்கு சொல்லும் விதமாக இருக்கக்கூடாது என்பதிலும் அவர்கள் தெளிவாக இருக்கவேண்டும்.
    இவ்வாறு நீதிபதி என்.கிருபாகரன் கூறியுள்ளார்.

  10. #3147
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy: Tamil Hindu

    மறக்கப்பட்ட நடிகர்கள் 7: ஸ்ரீரஞ்சனி- அக்காவின் பெயரில் கலக்கிய தங்கை!



    ஒரு நடிகை எப்படிப்பட்ட பாத்திரம் கொடுத்தாலும் நடிக்கணுமே தவிர, எதிர்ப்புஉணர்வைக் காட்டக் கூடாது. திறமை இருக்குமானால் ஒரு நடிகைக்கு எந்த வேஷமும் நடிக்கக் கூடியதுதான். சிரமத்தைப் பாராமல் வசனத்தை மனப்பாடம் செய். போகப் போக நடிப்பது சுலபமாகிவிடும்.”

    திமிறிக்கொண்டு வெளியேறத் துடித்த இளம் தெலுங்கு நடிகைக்கு, இதமாக எடுத்துச் சொல்லி நடிக்கவைக்க வேண்டிய பொறுப்பு இயக்குநர் பஞ்சுவுக்கு. கிருஷ்ணன் - பஞ்சு இரட்டையரில் ஒருவர். மு.கருணாநிதியின் உரையாடலைப் பார்த்துப் பயந்து, பேசக் கஷ்டப்பட்டு பராசக்தியில் சிவாஜியின் தங்கை ‘கல்யாணி’யாக நடிக்க மறுத்து விலக விரும்பினார் ஸ்ரீரஞ்சனி.

    விலகிச் சென்றவர் விரும்பி வந்தார்

    ஸ்ரீரஞ்சனி நடித்த வாஹினி ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்புகளான ‘வர விக்ரயம்’, ‘குணசுந்தரி கதா’ ஆகியவை ஆந்திராவில் பிரமாதமாக ஓடியவை. ‘எனக்கு அழுகை பிடிக்காது. ஆனால் நீங்கள் என் மனத்தைத் தொட்டுவிட்டீர்கள்!’ என்று ‘வரவிக்ரயம்’ படத்தில் அறிமுகமான பி. பானுமதியின் பாராட்டுதலைப் பெற்றிருந்தார் ஸ்ரீரஞ்சனி.

    நடிக்கத் தெரிந்தவர். ஆயினும் கலைஞரின் கன்னித் தமிழ் உதடுகளில் ஒட்டாமல் ஓட்டம் பிடித்தது.

    இரட்டை இயக்குநர்களின் கடின உழைப்பின் பலன், ஸ்ரீரஞ்சனி கொஞ்சம் கொஞ்சமாகக் கல்யாணியாகச் செதுக்கப்பட்டார்.

    தொடர்ந்து அதே பராசக்தி படக் குழு. பி.ஏ. பெருமாளின் நேஷனல் பிக்சர்ஸ் தயாரிப்பு. கிருஷ்ணன் பஞ்சு இயக்கம். தோற்றத்திலேயே அச்சுறுத்தும் முரட்டு ஹீரோவுடன் நடிக்க வேண்டிய நிர்ப்பந்தம். முதல் நாள் ஷூட்டிங். ஸ்ரீரஞ்சனி நிஜமாகவே நடுநடுங்கினார்.

    “என்னைப் பற்றி ஏதாவது சொல்லி சிலர் பயமுறுத்தி இருப்பாங்க. அதைக் கேட்டுட்டு நான் ஒரு ரோக்- அப்படின்னு டிசைட் பண்ணி இருப்பே இல்ல. உண்மையில் நான் நல்லவனுக்கு நல்லவன். பொல்லாதவனுக்குப் பொல்லாதவன். நீ பயப்படாமே வொரி பண்ணிக்காமே ஃப்ரீயா நடி பொண்ணே” என்று சுந்தரத் தெலுங்கில் மனம் திறந்து பேசிய எம்.ஆர். ராதாவின் மனம் திறந்த பேச்சுக்குப் பிறகே அவருடைய மனைவியாக ‘ரத்தக் கண்ணீ’ரில் நடிக்கும் தைரியம் ஸ்ரீரஞ்சனிக்கு வந்தது.

    எம்.ஜி.ஆர். - சிவாஜிக்கு இணை

    1952-ல் பராசக்தி, 1954-ல் இல்லற ஜோதி, ரத்தக்கண்ணீர் என ஸ்ரீரஞ்சனி நடித்தவை பகுத்தறிவுப் பாசறை முத்திரைகளோடு இன்றும் பரபரப்பாகப் பேசப்படுபவை. சிவாஜி கணேசனின் மனைவியாக ஸ்ரீரஞ்சனி நடித்த இல்லற ஜோதி, மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பு. அடையாறு ஏரியில் எம்.ஜி.ஆருடன் படகில் டூயட் பாடி நடித்த படம் ‘குமாரி’. அது முகவரியற்றுப் போனது.

    சார்லி சாப்ளின் நடித்துப் பெரும் வெற்றிபெற்றது சிட்டி லைட்ஸ். ஜெமினியின் தயாரிப்பாக அது ‘ராஜி என் கண்மணி’ என்ற தலைப்பில் தமிழுக்கு ஏற்ப உருமாறியது. டைட்டில் ரோலில் ஸ்ரீரஞ்சனிக்குக் கிடைத்த மிக அரிய சந்தர்ப்பம்.

    ‘மல்லிகைப்பூ ரோஜா... முல்லைப் பூ வேணுமா...

    தொட்டாலே கை மணக்கும் பட்டான ரோஜா’

    என்று பாடி நடிக்கும் பார்வையற்ற பூக்காரியாக ஸ்ரீரஞ்சனியை வாரி அணைத்துக்கொண்டனர் தமிழ் ரசிகர்கள்.

    காதலிக்குக் கண் கிடைக்கக் காரணம் காதலன் நாயகன் டி.ஆர்.ராமசந்திரன். காதலியோ கண் மருத்துவரை மணந்துகொள்ள, ஏமாந்துபோவார். ராமச்சந்திரன் முதன்முதலில் முழு நீள குணச்சித்திர நடிகராக இந்தப் படத்தில் மாறியிருந்தார்.

    ‘ராஜி என் கண்மணி’

    எல்லாராலும் எதிர்பார்க்கப்பட்ட ‘ராஜி என் கண்மணி’ தோல்வியைச் சந்தித்தது.

    “ஜெமினி ஸ்டுடியோ எனக்குக் கிட்டாத பொருளாகத் தோன்றியது. அதில் தயாராகும் ஒரு படத்துக்கு நான் ஹீரோயின் என்றவுடன் பெருமை பிடிபடவில்லை. ஜெமினிக்குள் நுழைந்து நானும் மேக்-அப் போட்டு கதாநாயகியாக நடித்ததை மிகப் பெரிய பாக்கியமாகக் கருதினேன். காரணம் ஜெமினியின் ‘மங்கம்மா சபதம்’.

    அதில் நடித்த வசுந்தரா தேவியின் தீவிர ரசிகை ஆனேன். வசுந்தரா தேவி ஒரு விதமாகப் பளபளக்கும் ஆடை அணிந்து, தோள்களைக் குலுக்கி ஆடிய நடனம் இன்னமும் என் கண் முன்னே நிற்கிறது. அவர்தான் எனக்கு சினிமா மீது மோகத்தை உண்டாக்கினார்.

    ‘ராஜி என் கண்மணி’யின் டைரக்டர் கே.ஜே. மகாதேவன். கல்கியின் ‘தியாக பூமி’ படக் கதாநாயகன். ஹாலிவுட் படங்களில் அலாதி மோகம் அவருக்கு. பல மேல் நாட்டுப் படங்களைப் பார்த்து, ஏதேதோ ஐடியாக்களைத் தமிழ்ப் படத்தில் புரியவைக்கப் பார்த்தார். ஆனால் ஜனங்களுக்குப் புரியவில்லை” என்று 1971-ல் பேட்டியளித்திருக்கிறார் ஸ்ரீரஞ்சனி.

    ஏமாற்றமும் ஏற்றமும்

    ‘விக்ரமாதித்தன்’ படத்தில் எம்.ஜி.ஆரின் ஜோடி என்று நம்பவைத்து, கடைசியில் வில்லன் பி.எஸ். வீரப்பாவுடன் இணை சேர்ந்த ஏமாற்றமும் ஸ்ரீரஞ்சனிக்கு உண்டு. ஸ்ரீரஞ்சனியின் இயற்பெயர் மகாலட்சுமி. சினிமாவுக்காக அவரது அக்காவின் பெயரான ஸ்ரீரஞ்சனியைச் சூட்டிக்கொண்டார். அக்காவின் மீது அவ்வளவு பாசம். அவரது அக்கா சினிமாவில் நடித்தாரா என்பது தெரியவில்லை. ஆனாலும் ஸ்ரீரஞ்சனிக்கு ஏற்றம் தந்து கொண்டாடிய ஆந்திரத் திரையுலகம் என்ன காரணத்தாலோ அவரை ஜூனியர் ஸ்ரீரஞ்சனி என்றே அழைத்தது.

    சினிமா நடிகைகள் செயற்கை வெளிச்சத்தில் கதறி அழுது, இன்னொரு குடும்பத்துக்காக மெழுகாகக் கரைந்து உருகி ஓடி ஒளி தருவது ஸ்ரீரஞ்சனிக்கும் நேர்ந்தது.

    தன் அக்காவின் அகால மறைவுக்குப் பிறகு, அக்காவின் கணவர் நாகமணியையும், அவரது மூன்று குழந்தைகளையும் கவனித்துக் கொள்ளும் தவிர்க்க முடியாத பொறுப்பு ஸ்ரீரஞ்சனிக்கு. தொடர்ந்து அரிதாரம் பூச அதிக அவகாசம் அமையவில்லை.

    வெற்றிகரமாக ஓடிய டி.ஆர். ராமண்ணாவின் ஓரிரு வண்ணச் சித்திரங்களில், ஸ்ரீரஞ்சனியை ஜெயலலிதாவின் அம்மா வேடத்தில் பார்க்க முடிந்தது. அதன் பிறகு வி.எஸ். ராகவனின் மனைவியாகவும் பிரமிளா, பி.ஆர். வரலட்சுமி, ஜெயசித்ரா ஆகிய அன்றைய அறிமுக நடிகைகளின் தாயாராகவும் பல படங்களில் நடித்த ஸ்ரீரஞ்சனிக்கு ‘இயக்குநர் திலகம்’ கே.எஸ். கோபாலகிருஷ்ணன் ‘வாழையடி வாழை’ திரைப்படத்தில் மனத்துக்கு நிறைவான வேடம் அளித்தார். அடுத்து அஞ்சுகம் பிக்சர்ஸின் வெற்றிப் படமான ‘பூக்காரி’யில் மு.க. முத்துவின் அன்னையாகத் தோன்றினார் ஸ்ரீரஞ்சனி.

  11. #3148
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Mr CK


    If I know about your arrival to Chennai I could have come & met you.

  12. #3149
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Fire in the shadow of Ash...thy name is GG!

    From the treasure archipelago of GG!!

    நீறு பூத்த நெருப்பு(டா!) ஜெமினி கணேசன் !!

    வாழ்வியல் சந்தர்ப்ப சூழல்கள் நம்மை துன்பவியல் அனுபவங்களில் ஆழ்த்திய நிகழ்வுகள் சகஜமே !

    சில சமயங்களில் நமது வேதனைகளுக்கு காரணமானவரையோ நம்மை துன்பக்குழியில் தள்ளியவரையோ ஏமாற்றியவரையோ சந்திக்க நேரும்போது நீறு பூத்த நெருப்பாக ஒரு கோபம் தலைதூக்கிய வெறுப்பு மனதில் கனலாக கொழுந்து விட்டு எரிவது இயல்பே !இருப்பினும் பண்பாளர்கள் சினத்தை நீறு பூத்த நெருப்பாக வைத்துக்கொண்டு புத்திசாலித்தனமான வழிகளில் பழி தீர்க்கும் திரைக்கதையமைப்புக்கள் ஏராளம் !

    அமரர் ஜெமினியின் இயல்புக்க்கேற்ற காதல் குடும்ப சூழல் கதைப்போக்கில் நீறு பூத்த நெருப்பாக தனது உணர்வுகளை அடக்கிக் கொண்டு பண்பு கெடாது எதிராளியை அணுகும் காட்சிகள் எண்ணிலடங்கா !


    பகுதி 1 வஞ்சிக்கோட்டை வாலிபன் / ராஜ் திலக்!

    அன்னையை கொடுஞ்சிறையில் கண்டிழந்திட்ட கோபம்....தங்கையை கொன்ற கயவனை பழிதீர்க்க நெஞ்சம் நிறைய வெஞ்சினம்....நீறுபூத்த நெருப்புடா...
    என்பதை
    பிரேமுக்கு பிரேம் ஜெமினி வாழ்ந்து காட்டிய தமிழ்த்திரை மறக்கவொண்ணாத மாபெரும் காவியம் !!

    Perceive the greatness of GG the world class actor par excellence and the doyen for his finest portrayal of a vengeance laden youth!








    Last edited by sivajisenthil; 16th July 2016 at 02:39 PM.

  13. #3150
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    நீறு பூத்த நெருப்பு(டா!) ஜெமினி கணேசன் !!

    அமரர் ஜெமினியின் இயல்புக்க்கேற்ற காதல் குடும்ப சூழல் கதைப்போக்கில் நீறு பூத்த நெருப்பாக தனது உணர்வுகளை அடக்கிக் கொண்டு பண்பு கெடாது எதிராளியை அணுகும் காட்சிகள் எண்ணிலடங்கா !

    பகுதி 2 பார்த்தால் பசி தீரும்!!

    சந்திரபாபுவின்அலுவலக குளறுபடியால் அண்ணன்நடிகர்திலகம் அலுவல் பணத்தை எடுத்துக்கொண்டு தன்னை சிக்கலில் விட்டுவிட்டாரோ என்று நீறு பூத்த நெருப்பாக கனன்று பாட்ட்டாலடிக்கும் மன்னர் !


Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •