Page 309 of 337 FirstFirst ... 209259299307308309310311319 ... LastLast
Results 3,081 to 3,090 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #3081
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    கணக்கற்ற காதல்கீதங்களை மன்னருக்காக வாரிவழங்கிய கவியரசர் கண்ணதாசனின் 90வது பிறந்த தின நினைவலைகள்!

    அமரர் ஜெமினி கணேசனுக்காக கவியரசர் செதுக்கிய பாடல் வரிகளின் ஓவிய காவிய சிற்பத் தொகுப்பில் முதலிடம் சுமைதாங்கிக்கே!

    சோகப்பூச்சு கோலோச்சினாலும் மனசாட்சியின் மாட்சிமை தாங்கிய சொல்லாட்சி கடினமான கலக்கமான மயக்கமான குழப்பமான தருணங்களிலும் ஏழ்மையிலும் எழுச்சி பெறத் துடிக்கும் இளைஞர்களுக்கு காலத்தையும் வென்று நின்று குன்றிலிட்ட விளக்காய் வழிகாட்டும் தன்னம்பிக்கைப் பாடல் பொக்கிஷமே !

    பின்னாளில் கவியரசருக்கு ஈடுகொடுத்து புகழேணியில் ஏறிட தனக்கு உத்வேகமளித்த ரோல்மாடல் பாடல் என்று கவிஞர் வாலி நெஞ்சம் நிறைந்த நன்றி மலர்களால் என்றென்றும் ஆராதனை செய்திட்ட அமர கானம் பெருமைமிகு ஜெமினி திரி சார்பாக...கவியரசரின் பாதகாணிக்கையாக!!


    Last edited by sivajisenthil; 24th June 2016 at 11:41 AM.

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #3082
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    அப்பாவி கோலிவுட்! அடப்பாவி ஹாலிவுட்!!

    Part 3 : Pasamalar Vs Dr No!

    1961ல் நடிகர்திலகத்தின் வாழ்நாள் பெருமைப்படமான பாசமலர் வெளிவந்தது. நடிகர்திலகத்தின் நடிப்பு வைரப்பட்டைகளே பிரதானம் எனினும் சாவித்திரி ஜெமினியின் பாந்தமான நடிப்புப்பக்கங்களும் மறக்க முடியாதவையே! தகுதிக்கு மீறி தங்கை மீதுகாதல்கொண்ட மன்னரை ஜேம்ஸ் பாண்ட் கோட்ஸூட் கெட்டப்பில் ஷூட் பண்ணும் வெறியுடன் பாய்ந்து வரும் நடிகர்திலகம் 'அண்ணன் ஒரு கோயில் தங்கை வெறும் தீபம்' என்றெல்லாம் பின்னாளில் வெளிவரப்போகும் நடிகர்திலகத்தின் பட டைட்டில்களை ஜெமினியிடம் முன்கூட்டியே யூகித்து சாவித்திரி வசனமழை பொழியும்போது துக்கம் தாங்க முடியாமல் கண்களில் அருவியாகப் பொங்கும் கண்ணீரைத் துப்பாக்கித் தோட்டா வெடித்துவிடும் என்ற பயமில்லாமல் துப்பாக்கி நுனியால் துடைக்கும் காட்சியில் ரசிகக் கண்மணிகளின் அலப்பறை தியேட்டர்களை அதிரவைக்கும்....இன்றுவரை!!
    அந்தக்கணம் முதலே மன்னருக்கு துப்பாக்கி அலர்ஜி வந்து பின்னாளில் எந்தப்படத்திலும் துப்பாக்கியைத்தொட்டதேயில்லையாம்!!




    1962ல் வெளிவந்த Dr No அகில உலக முதல் ஜேம்ஸ்பாண்ட் படத்தின் போஸ்டர்களில் நடிகர்திலகத்தின் அதேமாதிரி கோட் சூட்டில் தொப்பி கறுப்புக்கண்ணாடி சகிதம் ஷான் கானரி களமிறங்கி அதே போஸில் துப்பாக்கி நுனியால் கன்னத்தைத் துடைத்துக்கொண்டிருப்பதை என்னத்தை சொல்ல!!

    Last edited by sivajisenthil; 25th June 2016 at 12:36 AM.

  5. #3083
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    தத்து பித்து தத்துவ முத்து 1

    காயமே இது பொய்யடா....காற்றடைத்த பையடா.....!

    Inflated Balloon Vs Deflated Body!

    காற்று நிரப்பப்பட்ட பலூன் தரையிலிருந்து மேலெழும்பி ஆகாயம் நோக்கி மேலே செல்லும்....ஆனால்....உயிர்மூச்சுக் காற்று அடைபட்டிருக்கும் வரையே நமது சரீரபலூன் தரையிலிருக்கும்....காற்று நீங்கினாலோ....ஆகாயம் சென்ற பலூன் பூமிக்குக் கீழிறங்கும்....சரீர ஆத்மாவோ தரையிலிருந்து விண்ணுக்குத் தாவும்...வினோதமே!

    என்னதான் மாப்பிள்ளை மச்சினன் உறவு மெச்சப்பட்டாலும்....ஜெமினிக்கும் சிவாஜிக்கும் அடிப்படையில் மேலே சொல்லப்பட்ட வித்தியாசமும் உண்டு....
    நடிப்புக்காற்று நிரப்பப் பட்டபலூன் போல நடிகர்திலகம் ஆகாயம் வரைகூட பயணித்து நடிப்புப் பூமியின் அற்புத அழகை ரசிக்க எண்ணுவார்....



    காதல்மூச்சு நிரம்பிய மன்னரோ பூமியிலேயே கால் பதித்து காதலியோடு ஆகாய நிலவு நட்சத்திர மேக சூரியன்களை ரசிப்பதில் திருப்தியடைவார்...ஆகாய மார்க்க ரிஸ்கெல்லாம் நமக்கேன் ஸ்வாமீ...


    Last edited by sivajisenthil; 24th June 2016 at 11:57 PM.

  6. Likes Russellmai liked this post
  7. #3084
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    தத்து பித்து தத்துவ முத்து 2

    காயமே இது பொய்யடா....காற்றடைத்த பையடா.....!

    இந்தமாதிரி தத்துவ முத்தெல்லாம் நமக்கு வெத்து என்று......

    கலைநிலவு ரவிச்சந்திரன் கார் டயருக்கு காற்றடித்து காதலியர் உள்ளங்களை நிரப்புவதில் கவனம் செலுத்துகிறார்....கண்டிப்பதற்கு ஒரு கோபால் இல்லாததால்....




    கொலைநிலவு ஜேம்ஸ்பாண்டோ வில்லன் உடம்புக்கு Capsule காற்றடித்து அவன் உயிர்மூச்சை பலூனாக்கி ஆகாயம் அனுப்புகிறார்!

    Last edited by sivajisenthil; 25th June 2016 at 12:34 AM.

  8. #3085
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    காயமே இது பொய்யடா..Vs மெய்யடா






  9. #3086
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    KaNNadasan ninaivu

    The daily calendar in our home says it is KaNNadasan's birthday. It brought back memories of my days as an engineerig student in Annamalai University.

    Somu (S.D.Somasundaram} was my room mate in my first year. One day after lunch I went to my room to pick up my T-Square ( somu's gift) and instrument box. To my surprise I saw KaNNadasan and Nanjil Manoharan sitting on one of the cots. I was so stunned I did not say anything. They smiled at me and smiled back and went to my class.

    May his name and fame live forever ! . kaNNadasan naamam vaazhga !
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  10. #3087
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    அப்பாவி கோலிவுட்! அடப்பாவி ஹாலிவுட்!!

    Part 5 : Goldfinger (1964) vs Manalane Mangaiyin Paakkiyam (1957)!

    எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கவே அலுக்காத ஜேம்ஸ்பாண்ட் கிளைமாக்ஸ் கோல்டுபிங்கர் திரைப்படத்தின் இறுதியில் ஷான் கானரி வில்லனிடம் மோதும் சூப்பர் சண்டைக்காட்சியே ! இந்தப்படம் 1964ல் வெளிவந்து மொத்த உலகத்தையும் ஜேம்ஸ்பாண்ட் பைத்தியமாக ஆட்டி வைத்தது !



    எனக்கென்னமோ இந்தக் காட்சியின் கரு காதல்மன்னரின் உன்னத மந்திர தந்திர மாயாஜால காவியமான மணாளனே மங்கையின் பாக்கியம் கிளைமாக்சிலிருந்து தழுவப்பட்டதோ என்று ஒரு சந்தேகம் ஏனென்றால் இந்தப்படம் 1957ல் வெளிவந்து கலக்கியதய் மறக்க முடியாது !


  11. #3088
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    ஜெமினி பெட்டி Vs ஜேம்ஸ்பாண்ட் பெட்டி !

    ஜேம்ஸ்பாண்ட் படங்களில் அவர் தனது விஞ்ஞான தொழில்நுட்ப உபகரணங்களை வேவு பார்க்கும் நோக்கில் விமானத்திலோ காரிலோ நடந்தோ ஒரு சூட்கேசில் வைத்துகொண்டு செல்லும் காட்சிகள் தவறாமல் இடம் பெறும் !
    ஷான் கானரியின் ஜேம்ஸ்பாண்ட் திரைத்தோற்ற வடிவமைப்பில் அவரது 6 அடி 2 அங்குல உயரமே ஏனைய ஜேம்ஸ்பாண்ட் நடிகர்களுக்கும் வரையறுக்கப்பட்ட உயரம் . சாவில்ரோ தையல் கலைஞர்களால் வடிவமைக்கப்பட்ட அவரது கருநீல கோட்சூட் டை தொப்பி கறுப்புக்கண்ணாடியுடன் இந்த சூட்கேஸைக் கையில் பிடித்தபடி ஜேம்ஸ் பாண்டின் தீம் மியூசிக்குக்கு இணங்க ஷான் கானரி நடக்கும் கம்பீரம் வர்ணிக்க வார்த்தைகளற்றதே !
    ஜேம்ஸ்பாண்ட் படங்களின் தாக்கத்தை நமது தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் பயன்படுத்தியதில் இந்த ஜேம்ஸ்பாண்ட் பெட்டி என்று வர்ணிக்கப்படும் சூட்கேஸ் அல்லது பிரீப்கேஸும் தவிர்க்க முடியாத செட் ப்ராப்பர்டி ஆகிவிட்டது வரலாற்றுப்பதிவே !
    1962ல் முதல் ஜேம்ஸ்பாண்ட் படமான டாக்டர் நோவில் ஆரம்பித்து இவ்வகை ஜேம்ஸ்பாண்ட் பெட்டிகளும் பல்வேறு பரிணாம பரிமாண மாற்றங்களைக் கண்டுகொண்டே இருப்பதும் இன்றுவரை தொடர்கதையே ! அதேவருடம் வெளிவந்த சுமைதாங்கி காவியத்தில் காதல் மன்னர் சோகசக்கரவர்த்தியாக மயக்கமா கலக்கமா பாடல் காட்சியின் இரண்டாவது பதிப்பில் இதே பெட்டியை ஜெமினி பெட்டியாக்கி நடை பயிலுவார் ... எந்தப்பெட்டி முதல் பேட்டி என்று அனுமானிக்க முடியவில்லை ....ஷான் கானரியின் ஜேம்ஸ்பாண்ட் பெட்டிதான் முதல் என்று அறிவுக்குத் தெரிகிறது ....ஆனால் ஜெமினிபெட்டியே முதல் என்று உணர்ச்சி உரைக்கிறது ....எனது கலக்கமான மயக்கத்தை மனதின் குழப்பத்தை வாழ்க்கையின் நடுக்கத்தை நீக்குவீர்களா .....நீக்குவீர்களா ?!


    From Russia with Love....





    ஸ்ரீதர் நடிகர்திலகத்தின் கையிலும் இந்த பெட்டியை முன்பே கொடுத்து விட்டாரே !

    Last edited by sivajisenthil; 25th June 2016 at 06:49 PM.

  12. Likes Russellmai liked this post
  13. #3089
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    Jugalbandi

    From Rama Rajyam (1947)

    veeNaa madhura madhura.......




    From the Hindi original Ram Rajya(1943)

    bina madhur madhur kachbol........

    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  14. #3090
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Towards the 15th Heavenly Abode of NT....Nostalgic glimpses!

    Pin-hole Licence and Pin-drop Silence : Shot-cuts from NT's Start-Cut World !!

    நடிப்பின் நாடித்துடிப்பின் 15வது நினைவஞ்சலி மீள்பார்வை!

    படப்பிடிப்பின் ஊசித்துவாரம் கண்டு ரசித்த நடிப்பின் நாசித்துவாரம் (NT)!

    நடிப்பின் குத்தகைதாரரின் பாத்திரப்படைப்பில் மூழ்கி ஸ்டார்ட் சொல்லி கட் சொல்ல மறந்த தருணங்கள் வரலாற்றுப் பதிவுகள்!

    பராசக்தியின் கோரட் சீன்,மனோகராவின் சங்கிலிப் பிணைப்பின் துடிப்பு, தெய்வமகனின் முப்பரிமாண விஸ்வரூபம், கர்ணனின் மரணாவஸ்தை, பாசமலரின் கைவீசம்மா, நவராத்திரியில் நவரசம், தில்லானாவின் நாதஸ்வர முகபாவங்கள், விக்கிரமனின் உக்கிரம், புதியபறவையாக நிம்மதி தேடியவரின் மன ரணங்கள், .........நினைவலைகள் என்றுமே ஓய்வதில்லை!


    ஷாட்-கட் 1 : பார்த்தால் பசி தீரும்!....பாத்திரப்படைப்பின் தன்மை புரிந்த நடையலங்காரம்!

    குண்டடிபட்டு பாதிக்கப்பட்ட நடையின் வெளிப்பாட்டை அதன் தொடர்ச்சி விடாமல் பாடல் முழுவதும் விந்தி நாமும் கண்ணிமைக்க மறுக்கிறோம்!
    கட் சொல்ல மறந்து காமிராவும் விந்துகிறது!



  15. Thanks Russellmai thanked for this post
    Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •