Page 3 of 337 FirstFirst 123451353103 ... LastLast
Results 21 to 30 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #21
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  2. Likes vasudevan31355, Richardsof liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #22
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  5. Likes vasudevan31355, Richardsof liked this post
  6. #23
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கொஞ்சம் இடைவெளிக்குப் பின் வரும் வினோத் சார், குமார் சார்

    இருவரையும் வருக வருக என வரவேற்கிறேன்.

    குமார் சார்!

    அருமையிலும் அருமை! எங்கே தேடினாலும் கிடைக்காத ஆவணப் பொக்கிஷங்கள். பாகம் ஐந்தை உங்கள் பங்குக்கு அமர்க்களமாக அலங்கரிக்கத் தொடங்கி விட்டீர்கள். மஜ்னு வேஷத்தில் மகாலிங்கம். ஆனால் படம் வந்த சுவடு தெரியாமல் மறைந்தது. நாகேஸ்வரராவ், பானுமதி நடித்த லைலா மஜ்னு ஹிட்டானது.

    இந்தப் படத்திலிருந்து உங்களுக்காக ஒரு பாடல். திருவாங்கூர் சகோதரிகள் ஆடியது.

    நடிகர் திலகமே தெய்வம்

  7. Likes chinnakkannan liked this post
  8. #24
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹாய் ஆல்..குட்மார்னிங்க்...

    எஸ்.வி.ஸார்.. மன்னிக்க .. நேற்றுக்கே வரவேற்றிருக்க வேண்டும்.. செளக்கியமாண்ணா.. ஆனா ஏன் அடையாளம் தெரியலைன்னா ம.தி பாட்டு நீங்க கொண்டுவரலையே..

    வரதகுமார் சார் வாங்கோ வாங்கோ.. வந்தவுடனே ஹச் நு தும்ம வெச்சுட்டீர்..அதாவது தூள் பரத்துறீங்கன்னு சொன்னேங்க. ஆவணங்களுக்கு நன்றி...

    வாஸ்ஸூ..ஷிப்ட்லாம் ஓவரா.. தூங்கி எழுந்தாச்சா..சரி அடுத்த போஸ்ட்ல ஒம்மோட பேசறேன்..

  9. #25
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி...இல்லை இல்லை இரண்டு நற்செய்தி...

    ஏற்கெனவே ஒன்று எஸ்வி சார் சொல்லிவிட்டார்.. யெஸ்..அதே

    மதுண்ணா எட்டாயிரம் போஸ்ட் கம்ப்ளீட் செய்ததற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..

    சதிராடும் பாடல்கள் தக்கபடி போடுகின்ற
    மதுவண்ணா வாழிநூ றாண்டு.


    .

    ஹடுத்து... டைப்போ அடுத்து


    பூசுமஞ்சள் பூரித்த கன்னி முகமும்
    ...புன்னகையின் கீற்றினிலே பொங்கு தற்போல்
    ஆசுகவி என்றபெயர் பெற்ற கவிஞர்
    ...அழகாகத் திரையினிலே எழுத இங்கே
    பாசமுடன் பக்குவமாய் இலையில் பரப்பி
    ..பந்தியெங்கும் படைத்திட்ட நமது நண்பர்
    வாசுவின்று அடைகின்றார் வகையாய் எட்டில்
    ..ஆயிரமாம் பதிவுகளில் வாழ்த்து வோமே.


    வாஸ்ஸு ஸார்... இன்னும் பலப் பலப் பாடல்கள் தந்து, பலப்பல ரசனைக் கவிதைகட்டுரைகள் படைத்து எங்களுக்குத் தருவீர்கள் தானே.. மிக்க நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் உங்களுக்கு..ப்ளஸ் நன்றிகள்...

    பட்டுப் பூச்சிகள் வட்டமடித்தால் கட்டியணைக்கும் பூச்செண்டு
    பட்டுப்பட்டாய் பாடல் தந்திடும் வாசு வாழிய பல்லாண்டு..


    Last edited by chinnakkannan; 19th September 2015 at 08:48 AM.

  10. Thanks madhu thanked for this post
    Likes vasudevan31355 liked this post
  11. #26
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy: Tamil Hindu


    காற்றில் கலந்த இசை-22 கடற்கரையில் வீசும் இசைத் தென்றல்




    பொதுவாக ஒரு பெண்ணுக்குத் திருமணம் ஆகிவிட்டால், தனது காதலின் நினைவுகளைக் கைவிட்டுக் குடும்ப வாழ்வில் ஈடுபடுவதுபோல் சித்தரித்த திரைப்படங்களுக்கு மத்தியில், கட்டாயத் திருமணம் செய்துவைக்கப்பட்டு ஏமாற்றப்பட்டு, தனது காதலனின் நினைவாகவே வாழ்ந்து மடியும் பெண்ணைப் பிரதானமாக வைத்து எடுக்கப்பட்ட படம் ‘ஆனந்த ராகம்’(1982). பரணி இயக்கிய இந்தத் திரைப்படத்தில் சிவகுமார், ராதா, சிவச்சந்திரன் நடித்திருந்தார்கள். ஆதரவற்ற மீனவ இளைஞராக வரும் சிவகுமாருக்கும், அவரது நண்பர் சிவச்சந்திரனின் தங்கை ராதாவுக்கும் இடையில் மலரும் காதலைப் பற்றிய கதை. தென்னங்கீற்றின் தென்றல் தவழும் மீனவ கிராமத்தில் நிகழும் இந்த எளிய கதைக்குத் தனது உயிர்ப்பான இசை மூலம் காவிய அந்தஸ்தைத் தந்தார் இளையராஜா.

    படத்தின் தொடக்கத்தில் வரும் ‘கடலோரம் கடலோரம்’ பாடலை ஜேசுதாஸும், இளையராஜாவும் பாடியிருப்பார்கள். எல்லையற்று விரிந்துகொண்டே செல்லும் கடல் அன்னையின் புகழ் பாடும் இந்தப் பாடலை உற்சாகமாகப் பாடியிருப்பார்கள் இருவரும். மாலை நேரச் சூரிய ஒளியின் பின்னணியில் பொன்னிறத்தில் மின்னும் கடலுக்கு முன் படமாக்கப்பட்ட அந்தப் பாடலில், பொங்கும் அலையின் கட்டற்ற வீச்சை இசையாக்கியிருப்பார் இளையராஜா. சின்னச் சின்ன இசைத் துணுக்குகளில் கடல் கண் முன் விரியும்.

    இப்படத்தின் மற்றொரு பாடலான ‘மேகம் கறுக்குது… மழை வரப் பாக்குது’ பாடல், கடலோர கிராமத்தின் நாட்டுப்பாடல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட எளிய பாடல். சில்லென்று காற்று வீசும் கடற்கரையில் ஒரு மீனவர் பாடிச் செல்லும் பாடலைத் தொடர்ந்து சிவகுமார் பாடுவார். பாடலை இளையராஜா தொடங்கிவைக்க, கைமாற்றிக்கொள்ளப்படும் மலர் போல அதைச் சுகமாகச் சுமந்தபடி பாடியிருப்பார் ஜேசுதாஸ்.

    பாடல் வரிகளே சூழலின் தன்மையை உணர்த்திவிடும் என்று சமாதானமாகிவிடுவதில்லை இளையராஜா. சூழலுக்கு மிகப் பொருத்தமான இசைக்கோவைகளுடன் பாடலை மிளிரச் செய்துவிடும் அந்தக் கலைஞர், இப்பாடலில் சந்தூர், வயலின், புல்லாங்குழல் போன்ற இசைக் கருவிகளை அடக்கமாக ஒலிக்க விட்டிருப்பார். பள்ளி மாணவியான ராதா, அந்த நாட்டுப்பாடலை சிவகுமாரிடமிருந்து கற்றுக்கொண்டு பள்ளி விழாவில் பாடிக்காட்டுவது போல் அமைக்கப்பட்ட காட்சி அது. பாந்தமும் அன்பும் நிறைந்த இளைஞரின் மனதை அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பார் ஜேசுதாஸ். காதல் அரும்பிய மலர்ச்சியில் குதூகலிக்கும் இளம் பெண்ணின் பாவங்களைக் குரலில் காட்டியிருப்பார் ஜானகி.

    1967-ல் வெளியான ‘மிலன்’ இந்தி திரைப்படத்தில் முகேஷ் லதா மங்கேஷ்கர் பாடிய ‘சாவன் கா மஹீனா… பவன் கரே சோரு’ பாடலின் தாக்கம் இப்பாடலில் உண்டு என்று சொல்பவர்கள் உண்டு. படகோட்டி ஒருவன் தனது காதலிக்கு நாட்டுப்புறப் பாடலைக் கற்றுத்தருவதைத் தவிர இரு பாடல்களுக்கும் இடையில் வேறு பொருத்தங்கள் இல்லை. காதல் மையம் கொள்ளும் பாடல் என்றாலும், மெல்லிய சோகத்தை மீன்பிடி வலையைப் போல் நெய்திருப்பார் இளையராஜா. காதல் தோல்வியில் சிவகுமார் பாடும் ‘கனவுகளே கலைந்து செல்லுங்கள்’ பாடலை, தனிமையின் துயரம் தரும் வலியுடன் பாடியிருப்பார் ஜேசுதாஸ்.

    இப்படத்தின் பிரதானப் பாடல் ‘ஒரு ராகம் பாடலோடு’. ஜேசுதாஸ், ஜானகி பாடிய இப்பாடல் மெல்லிய தென்றலின் வருடலும், கடலலையின் ஸ்பரிசமும் நிறைந்த தேவகானம். அர்ப்பணிப்பான காதல் உணர்வும், ஆழமாக வேர்பிடித்துவிட்ட உறவின் மேன்மையும் நிரம்பிய பாடல் இது. பெண் குரல்களின் ஹம்மிங்குடன் பாடல் தொடங்கும். அந்தக் குரல்களின் கருவி மொழியைப் போல் புல்லாங்குழலும் சேர்ந்து ஒலிக்கும்.

    காதலின் மயக்கத்தில் சூழலை மறந்து வேறு உலகத்துக்குள் நுழையும் ஜோடியின் மனப்பிரதிகளாகப் பாடியிருப்பார்கள் ஜேசுதாஸும் ஜானகியும். காதலுக்கு வாழ்த்துச் சொல்லும் தேவதைகளின் குரல் போல், பெண் குரல்களின் ஹம்மிங் ஓரடுக்கில் ஒலித்துக்கொண்டே இருக்கும். பல்லவியைத் தொடர்ந்து ஒலிக்கும் முதல் நிரவல் இசை, தரையிலிருந்து மேலேறிப் பறக்கும் பறவையைப் போல் படரும். சிதார், வயலின்(கள்), புல்லாங்குழல் என்று காதலுக்காகவே படைக்கப்பட்ட இசைக் கருவிகளைப் பொருத்தமாகப் பயன்படுத்தியிருப்பார் இளையராஜா.

    இரண்டாவது நிரவல் இசையைத் தொடங்கும் சிதார், காதலின் மவுனத்தைக் கலைப்பதுபோல் பரிவுடன் ஒலிக்கும். கைகூடாத காதல் என்பதை உணர்த்தும் விதமாக, பாடல் முழுவதும் மெல்லிய சோகத்தை இழையவிட்டிருப்பார் இளையராஜா. ‘ஏதோ நூறு ஜென்மம் ஒன்று சேர்ந்துவந்த சொந்தம்’ எனும் வரியில் ஏழைக் காதலனின் உணர்வுகளைப் பிரதிபலித்திருப்பார் கங்கை அமரன். அந்த வரியைப் பாடும்போது ஜேசுதாஸின் குரலில் காதலையும் மீறிய கழிவிரக்கத்தை உணர முடியும்.

    காற்றின் அலைகளில் அசைந்தாடும் சிறகு, மேலும் கீழுமாக ஏறி இறங்குவதைப் போல், பாடலும் அலைபாய்வதை உணர முடியும். கடைசி முறையாகப் பல்லவியைத் தொடங்கும் ஜானகி, ‘ஒரு’, ‘ராகம்’, ‘பாடலோடு’ என்று வார்த்தைகளுக்கு இடையில் சற்று இடைவெளி விடுவார். காதலன் மீதான அன்பின் வெளிப்பாட்டில் திணறும் குரல் அது.

  12. Likes madhu, vasudevan31355, chinnakkannan liked this post
  13. #27
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Congrats Mr Madhu Sir for starting the Part V of Madhura Ganam.

  14. Thanks madhu thanked for this post
  15. #28
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சின்னா!



    நன்றி! தங்களைப் போன்றவர்களின் ஊக்கத்தாலும், உற்சாகத்தாலும்தான் 8000 பதிவுகளை கடக்க இருக்கிறேன். இதற்கு உறுதுணையாய் இருந்த நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக ராகவேந்திரன் சார். அவர்தான் ஹப்பிற்கு வரச் சொல்லி என்னை ஊக்குவித்தவர். முரளி சாரும் கூட. நாட்கள் ஓடியே விட்டன. பம்மலார், ராகவேந்திரன் சார், முரளி சார், கோபால், கார்த்திக் சார், சாரதா மேடம் இவர்களுடன் ஒர்க் செய்தது மறக்க முடியாத பொற்காலங்கள்.

    இப்போது மதுர கானங்களில் உயிரான அனைத்து நண்பர்களுடன் பணி புரிவதில் ஆனந்தம்.

    எல்லாவற்றுக்கும் காரணமான நான் வணங்கும் தெய்வம் நடிகர் திலகத்திற்கே அனைத்தும் சமர்ப்பணம்.
    Last edited by vasudevan31355; 18th September 2015 at 12:19 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  16. Thanks chinnakkannan thanked for this post
  17. #29
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //பட்டுப் பூச்சிகள் வட்டமடித்தால் கட்டியணைக்கும் பூச்செண்டு//

    பாலாவின் தொடரில் நிச்சயம் விரைவில் வரும் சின்னா!
    நடிகர் திலகமே தெய்வம்

  18. #30
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    8000 ஆவது சிறப்புப் பதிவு

    எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்

    (நெடுந்தொடர்)

    37

    'பொட்டு வைத்த முகமோ'

    'சுமதி என் சுந்தரி'



    அடுத்து பாலாவின் பாடல்களில் மிக மிக ஸ்பெஷலாக வருவது 'சுமதி என் சுந்தரி' படப் பாடல். தமிழ்த் திரையுலக பாடல்கள் வரலாற்றையே புரட்டிப் போட்ட பாடல். திரு எம்.ஜி.ஆர், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், ஜெமனி, சிவக்குமார் என்று பாலா பலருக்கும் பாடிக் கொண்டிருந்த சமயத்தில் 1971-ல் இளைஞர்களின் கனவுப் படமாக வந்து இளமை விதையைத் தூவி அனைவர் நெஞ்சிலும் புதுமைக் காதல் பயிர் வளர புது வழி காட்டிய, புத்துணர்வுப் படமான 'சுமதி என் சுந்தரி' படத்தில் முதன் முதலாக நடிகர் திலகத்திற்குப் பாலா பாடி, தான் பாடிய அத்தனைப் பாடல்களையும் தானே முந்திச் சென்று 'பொட்டு வைத்த முகமோ' மூலம் எவருமே முந்த முடியாத முதல் இடத்தைப் பெற்றார்.

    இதற்கு பாலா மட்டுமே காரணமல்ல. இதுவரை பாலா பாடிய பாடல்களின் மகத்துவமான வெற்றிக்கு அவரே முழுக் காரணம். ஆனால் 'பொட்டு வைத்த முகமோ' வெற்றிக்கு அவரால் அப்படி முழுக் காரணமாக முடியவில்லை. காரணம் 'நடிகர் திலகம்' என்ற ஜெயின்ட். அதை மீறி யாருமே ஒன்றுமே செய்ய முடியாது. டி.எம்.எஸ்ஸின் கம்பீரக் குரலிலேயே நடிகர் திலகத்தைப் பார்த்துப் பழகிப் போன நமக்கு டோட்டலாக மாறுதலுடன், இளமை பொங்கும் பாலா வாய்ஸுடன், அவர் இப்பாடலுக்கு மிகப் பொருத்தமாக நடித்திருப்பதை இன்று பார்க்கும் போதும் மிரட்சி அடங்கியபாடில்லை. நடிகனுக்காக பாடகனா? இல்லை பாடகனுக்காக நடிகனா? நடிகனுக்காக பாடகன் என்றால் பலர் இருக்கிறார்கள். ஜெமினிக்கு பி.பி.எஸ், எ.எம்.ராஜா. அத்தனை ஹீரோக்களுக்கும் பொதுவாக பாடகர் திலகம், தங்கவேலுவுக்கு எஸ்.சி.கிருஷ்ணன், நாகேஷுக்கு ஏ.எல்.ராகவன் இப்படி. பாடகனுக்காக நடிகனா என்றால் 'அதுவும் என்னால் முடியும்... இதுவும் என்னால் முடியும்' என்று சூளுரைக்க 'சூரக்கோட்டையாரை'த் தவிர வேறு ஒருவரை நினைத்துப் பார்க்க முடியாது.




    1971-லோ நடிகர் திலகம் உடல் வனப்பில் உச்சம் தொட்டிருந்தார். வாளிப்பான உடல். 43 வயது. தோற்றமோ இருபது வயது வாலிபன் போல. கல்லூரிக் கட்டிளங் காளை போல. இத்தனைக்கும் மேக்-அப் ஹெவி எல்லாம் கிடையாது. அதனால் பாலாவுக்கு மிக மிக வாட்டமாகப் போயிற்று. சி.எஸ்.ஜெயராமன், சீர்காழி, மோத்தி, பி.பி.எஸ், சௌந்தர்ராஜன் என்று பாத்திர வார்ப்புகளுக்கு ஏற்ப பலர் நடிகர் திலகத்திற்கு பாடினாலும் பாடகர் திலகமே பின்னால் நடிகர் திலகத்தின் குரலாக பாடல்களில் முழு ஆக்கிரமிப்பு செய்து விட்டார்.

    இப்போது அப்படியே ஒரு சேன்ஜ். இளமை பொங்கும் கலைக்குரிசிலும், கலைச்செல்வியும் ஜோடி. இயற்கை எழில் கொஞ்சும் தேயிலைக் காடுகளின், மலைகளின் சரிவுப் பாதைகள் நடுவே ரசமான பாடல். அடித்தது யோகம் பாலாவிற்கு. எம்.ஜி.ஆர் அவர்களுக்குப் பாடி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தாகி விட்டது. மற்ற துண்டு துக்கடாக்களுக்கும் பாடி ஓகே ஆகி விட்டது. இப்போது நடிப்பின் இமயத்திற்கு பாடி அதுவரை புகழின் 'தொட்டபெட்டா' தொட்டிருந்தவர் 'எவரெஸ்ட்'டில் ஏறி அமர்ந்து விட்டார். அமர்ந்தவர் அமர்ந்தவர்தான். கீழே இறங்கவே இல்லை.

    சரிவருமா, குரல் பொருந்துமா என்ற சந்தேகங்கள் எல்லோருக்கும் பாலா உட்பட. திலகத்திற்கோ தன் திறமை மேல் எப்போதுமே திடமான நம்பிக்கை. பயத்தில் பாலா புலம்ப 'பாலு...நீ பாடு... மற்றதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று சர்வ அலட்சியமாக 'நடிப்பின் சர்வாதிகாரி' சொல்ல, தைரியம் வரவழைத்து அற்புதமாக பாடி முடித்து விட்டார் பாலா. இப்போது ரிசல்ட்டுக்காக வெயிட்டிங்.


    இப்போது நடிகர் திலகத்தின் டர்ன். பாட்டை முழுவதும் கேட்டு உள்வாங்கியாகி விட்டது. கொஞ்சம் வழக்கத்தை விட கவனமாக. தான் நடிகர் திலகம் இல்லை.. 'சுமதி என் சுந்தரி' படத்தின் சுந்தர ஹீரோ...இளம் நாயகன். உடன் அழகு நாயகி. அது மட்டுமே. பாடகர் திலகத்தின் குரலுக்கு வாயசைத்து அசைத்து பழகி ஆகி விட்டது. இப்போது வேறு ஒரு இளைஞன் பாடுகிறான். அதற்கேற்ற மாதிரி வாயசைக்க வேண்டும்.அவ்வளவுதானே ! ஜூஜுபி.ஊதித் தள்ளி நடித்தாகி விட்டது. பாடலை பார் புகழ ஹிட் ஆக்கியும் கொடுத்தாகி விட்டது.

    ரிசல்ட் என்ன! பாலா எவருமே தொட முடியாத புகழை இந்த ஒரு பாடல் மூலம் பெற்று விட்டார் நடிகர் திலகத்தின் வாயசைப்பு மூலமாக. அது போல தன்னுடைய அசாத்திய திறமை மூலமும். நடிப்பின் சமுத்திரமும், பாடல் கடலும் ஒன்று சேர்ந்து ஒரு இசைப் பிரளயத்தையே நடத்தி முடித்து விட்டன எம்.எஸ்.வி என்ற இன்னொரு இசைக் கடல் இணைவின் மூலம்.

    மிக உற்சாகமாக ஆரம்பிக்கும் இசை. புள்ளி மானைப் போல மலைப் பாதைகளுக்கு இடையில் கலைச்செல்வி துள்ளி ஓடி வர, வெகு இயல்பாக 'நடிகர் திலகம்' நடந்து வந்து செடியிலிருந்து இலை கிள்ளிப் போட, அந்த நான்கு நிமிடப் பாடல் நான்கு ஜென்மம் எடுத்தாலும் மறக்க முடியாதது. ஒரு காலை மடக்கி ஸைடில் நிற்கும் போஸாகட்டும்...அல்லது பேன்ட்டின் முன்னிரண்டு பக்க பாக்கெட்டுகளில் கட்டை விரல் கொடுத்து கொக்கி போட்டு, இடுப்பொடித்து நிற்கும் அழகாகட்டும்... வலதுகாலை டைட் செய்து, இடது கால் மடக்கி உயரே செல்வி இருக்க, சரிவில் நின்றபடி 'பொட்டு வைத்த முகமோ' பாடல் தொடங்கும் போதே தியேட்டர் ஓனர் போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்து முடித்திருப்பார். வெளிர் நீல டைட் பேண்ட்டும், ஜவுளிக் கடைகளின் வெளியே அப்போதெல்லாம் விளம்பரத்திற்கு வைக்கப்பட்டு 'சுமதி என் சுந்தரி ஷர்ட்' என்று அமோக விற்பனை ஆன அந்தப் பெரிய செக்டு ஷர்ட்டும் அணிந்து ஏதோ பத்தாம் வகுப்பு பையனைப் போல ஆச்சர்யம் வரவழைக்க நடிகர் திலகத்தை விட்டால் வேறு யார்?




    'தரையோடு வானம்' என்று கலைச்செல்வியின் ஒரு கை பிடித்து, இன்னொரு கையை வானம் நோக்கி உயர்த்தையிலே திரையரங்குகளின் கூரைகள் நொறுங்குமல்லவா? படத்தின் போஸ்டர்கள் இந்தப் போஸைத்தானே தாங்கி நிற்கும்! கை தூக்கி இடையொடித்து செல்வி நிற்கையிலே அவர் இடையின்மீது ஒரு கை வைத்து ('இடையோடு பார்த்தேன்.... விலையாகக் கேட்டேன்') இன்னொரு கையை தன் இடுப்பின் மீது நடிகர் திலகம் வைத்து ஸ்டைலாக நிற்கும் அடுத்த போஸ் அதற்குள் வந்து முன் போஸை ரசித்து முடிப்பதற்குள் நம்மைப் பாடாய்ப் படுத்துமே! அடுத்த சில வினாடிகளில் அதே விலையில்லா வரிகளுக்கு ஜெயா முன் நடக்க, அப்படியே பின்னால் தொடர்ந்து சற்று கழுத்தைச் சாய்த்து புற்களுக்கு மத்தியில் கால்களைத் தூக்கி வைத்து நடக்கும் அந்த ஸ்டெப்ஸ். (போலீஸ் உள்ளே நுழைந்து ஆர்ப்பாட்டம் பண்ணும் ரசிகர்களை அடக்க முயன்று தோற்றுப் போகும்) என்ன நடக்கிறது என்றே தெரியாது. வானம் இடிந்து விழுந்து விட்டதோ என்று எண்ணுமளவிற்கு ரசிகர்களின் ஆரவார சப்தம் ஒலிக்கும். 'செவ்வானம் போலே புன்னகை புரிந்தாள் என்றபடி கால் மடக்கி, படுத்து நாயகி கரம் பிடித்து, விருட்டென்று 'புரிந்தாள்' என்று முடித்தவுடன் கையை விசிறி விலக்குவது விசில் சப்தங்களை வீறிட வைக்கும். திரும்ப அதே வரி வரும் போது தாழ்நிலையில் பாய்வது போல் நிற்க, ஒரு நொடி குளோஸ்-அப் காட்டி பின் காமெரா தூர விலகி விடும். ஜெயாவின் கைபிடித்து ஒவ்வொரு முறையும் பின்னால் நடந்து வரும் ஸ்டைல் விதவிதமாக இருக்கும். 'குழலோ.. ஓ.. ஓ' என்று பாலா பாடும் போது அதற்குத் தகுந்தாற்போல் 'நடிகர் திலகம்' அந்த 'ஓ' வுக்கு தலையை சாய்த்து மிக அழகாக வாயசைக்கும் போது யாருக்குத்தான் 'ஓ' போடத் தோன்றாது?

    'அந்தி மஞ்சள் நிறமோ' என்று வெகு அழகாக நெஞ்சு நிமிர்த்தி அவர் ஓர் முழு ஆண்மகனுக்குரிய தகுதியை உடல் மொழியாகக் காட்டுவார் பாருங்கள். (அதாவது முதல் சரணம் முடிந்து மீண்டும் பல்லவி வரும் போது)
    காட்டிவிட்டு மீண்டும் உடனே உடல் தளர்த்துவார்)

    அடுத்த சரணத்தில் ஜெயாவின் பின் நின்று, அவரது இரு கைகளையும் பின்பக்கம் இழுத்தவாறு பிடித்து ஊஞ்சல் ஆட்டுவது போல 'பொன்னூஞ்சல் ஆடி என்னுடன் கலந்தாள்' என்று பாடுவது கிளாஸ். என்னுடன் கலந்தாள்' இரண்டாம் தரம் ஒலிக்கையில் குளோஸ்-அப்பில் மிக அழகாக சிரிப்பார் கலைச் செல்வியைக் கட்டி அணைத்தபடி. வசந்தா குரலில் 'லலலா லலலா லலலா லால்லா' என்று ஜெயா இவர் அணைப்பிலிருந்து விலகி பின்புறம் சாய்ந்து ஹம்மிங் தரும் போது நடிகர் திலகம் தலையை முன் நீட்டி சைட் போஸில் சிரிப்பது செம ரகளை.



    மூன்றாவது சரணமான 'மலைத் தோட்டப் பூவில்' வரிகளில் நிற்கும் உடல் மொழி அசர வைத்து விடும் நம்மை. தலையை ஒரு வெட்டு வெட்டி இந்த லைனை ஆரம்பிப்பார். வலது கை கட்டை விரல் பேன்ட் பாக்கெட்டில் கொக்கியாய் மாட்டியிருக்க, இடது கை நீட்டி 'மணமில்லையென்று' பாடிக் கொண்டிருப்பவர் சடேலென்று கையை வீச்சருவாள் வெட்டுவது போல விசிறி ஒரு ஆக்ஷன் செய்து கையை பின்னால் கொண்டு செல்வாரே பார்க்கலாம். இதற்கு நடுவில் தலை ஸ்டைலாக ஷேக் ஆவதையும், உடம்புப் பகுதிகள் வளைந்து நெளிவதையும் நாம் கவனிக்கத் தவறி விடக் கூடாது. இரு வினாடிகளில் இடைவிடாத அதிசய அசைவுகளைக் கா(கொ)ட்டி விடுவார். அப்படியே வரிகள் மீண்டும் தொடரும் போது படு அலட்சியமாக ஜெயாவைப் பின் தொடர்ந்து நடை போட்டு செல்வார். அப்படியே நின்று இடது காலை சற்று மடக்கி வலது கையை உயர்த்துவார்.

    'நிழல் போல் மறைந்தாள்' என்னும் போது தியேட்டர் ரெண்டு பட்டு விடும். வலதுகையை மார்புக்கு நேராக நீட்டி ஓடும் ஜெயாவை சுட்டு விரலால் சுட்டிக் காட்டுவார். அய்யோ! அமர்க்களம் சாமி! அடுத்து வரும் போது வேறு வித போஸ்.

    இப்படி பாடல் முழுதிற்கும் வினாடிக்கு வினாடி போஸ் முத்திரைகள், நினைத்துப் பார்க்க முடியாத விந்தை அசைவுகள், ஸ்டைல், நடை என்று தூள் பரத்துவார்.

    பாலா குரலை அப்படியே தன்னுள் உள்வாங்கி, அதே போன்ற வாயசைப்போடு தன்னுடைய முத்திரைகளை மறக்காமல் அளித்து, அனைத்து ரசிகர்களையும் பரவசப்படுத்தி, பார்ப்போரை வியப்பிலாழ்த்தி நடிகர் திலகம் இந்தப் பாடலை எங்கோ கொண்டு சென்று விட்டார்.


    கலைச்செல்வியும் நல்ல கம்பெனி. எளிமையான கண்களை உறுத்தாத சிம்பிள் மேக்-அப். உடையும் அது போலவே ரொம்ப எளிமை. வெளிர் வயலட் நிற சேலை மிகப் பொருத்தம். அழகில் அள்ளுகிறார். பி.வசந்தாவின் குரல் அப்படியே மேடம் பாடுவது போல அவ்வளவு பொருத்தம். இன்னும் கொஞ்சம் அந்த 'லலலா லலலா லலலா லால்லா' ஹம்மிங் வராதா என்று ஏங்குமளவிற்கு அற்புதம்.

    பாடல் முழுதுமே இயற்கை எழில் கொஞ்சும் மலைப் பிரதேசங்களில் படமாக்கப்பட்டது. எத்தனயோ இயற்கை எழில் கொஞ்சும் மலைப் பிரதேசங்களில் பல பாடல்கள் படமாக்கப்பட்டிருந்தாலும் இந்தப் பாடல் அவற்றையெல்லாம் மீறிய தனிச் சிறப்பு கொண்ட காந்தத் தன்மை மிக்கது. அழகான காதலியை ரசித்து அவளைப் பின்பற்றியபடியே தொடரும் அவளைவிட அழகான இளைஞனின் காவிய ரசனைப் பாடல் இது.


    'மெல்லிசை மன்னரி'ன் ஒவ்வொரு இசைக்கருவிகளும் இப்பாடலின் ஒவ்வொரு எழுத்தோடு இசைந்து இன்பம் தரும். சிதார், ஷெனாய், சந்தூர், கிளாரினெட், சாக்ஸ் , தபேலா, டோலக் என்று மனிதர் விளையாடி இருப்பார். நடிகர் திலகமும், கலைச்செல்வியும் தங்களை மெய்மறந்த நிலையில் அந்த பூங்காவின் பெஞ்சில் தழுவி கட்டுண்டு கிடக்க, பின்னால் ஒலிக்கும் அந்த கோரஸ் தொடர்ந்து வர இருக்கும் இந்த அற்புதப் பாடலுக்குக் கட்டியம் கூறி விடும். 'லாலா ஹாஹா ஹாஹா' என்று பெண்களின் குரல் ஒன்று சேர்ந்து கோரஸாக ஒலிக்கும் போது ஒவ்வொரு இளைஞனும் புளகாங்கிதம் அடைந்து விடுவான். மனதுக்குள் இனம்புரியாத கிலேசம் தோன்றி அனைவரையும் இன்பச் சித்ரவதை செய்துவிடும்.

    படத்தின் துவக்க இசையே நம்மை உற்சாகத் துள்ளல் போட வைத்து விடும்.

    பாலா நாம் யாருக்குப் பாடுகிறோம் என்பதை உணர்ந்து வெகு அழகாக பாடியிருப்பார். நடிகர் திலகத்திற்கே உரித்த கம்பீரமும் குறைந்து போகாமல், அதே சமயம் காதல் பாடலென்பதால் தன்னுடைய பாணி குழைவுகளையும் விட்டுக் கொடுக்காமல் வார்த்தைகளை தெள்ளத் தெளிவாக உச்சரித்து பாலா புகுந்து விளையாடியிருப்பார். தினைமாவுடன் சேர்ந்த தேனாக வசந்தாவின் ஹம்மிங் உலகம் உள்ளவரை பேசப்பட்டுக் கொண்டிருக்கும்.

    இறப்பே இல்லாத சாகாவரம் பெற்ற பாடல்.




    பொட்டு வைத்த முகமோ
    கட்டி வைத்த குழலோ
    பொன்மணிச் சரமோ
    அந்தி மஞ்சள் நிறமோ
    அந்தி மஞ்சள் நிறமோ

    பொட்டு வைத்த முகமோ
    ஆஆஆ… கட்டி வைத்த குழலோ
    பொன்மணிச் சரமோ
    அந்தி மஞ்சள் நிறமோ
    அந்தி மஞ்சள் நிறமோ

    தரையோடு வானம் விளையாடும் கோலம்
    தரையோடு வானம் விளையாடும் கோலம்
    இடையோடு பார்த்தேன் விலையாகக் கேட்டேன்
    இடையோடு பார்த்தேன் விலையாகக் கேட்டேன்
    செவ்வானம் போலே புன்னகை புரிந்தாள்
    புன்னகை புரிந்தாள்

    பொட்டு வைத்த முகமோ
    கட்டி வைத்த குழலோ
    பொன்மணிச் சரமோ
    அந்தி மஞ்சள் நிறமோ
    அந்தி மஞ்சள் நிறமோ

    ஆஆஆஆஆஆஆஅ………

    மறுவீடு தேடி கதிர் போகும் நேரம்
    மறுவீடு தேடி கதிர் போகும் நேரம்
    மணமேடை தேடி நடைபோடும் தேவி
    பொன் ஊஞ்சல் ஆடி என்னுடன் கலந்தாள்

    லலலா லலலா லலலா லால்லா

    என்னுடன் கலந்தாள்

    லலலா லலலா லலலா லால்லா

    ஆஆஆஆஆஆஆஆ……. ஹ ஹா ஹா

    மலைத்தோட்டப் பூவில் மணமில்லை என்று
    மலைத்தோட்டப் பூவில் மணமில்லை என்று
    கலைத்தோட்ட ராணி கை வீசி வந்தாள்
    ஒளியாகத் தோன்றி நிழல் போல் மறைந்தாள்

    லலலா லலலா லலலா லால்லா

    நிழல் போல் மறைந்தாள்

    லலலா லலலா லலலா லால்லா

    பொட்டு வைத்த முகமோ

    ஓஓஓஓஓ….

    கட்டி வைத்த குழலோ

    ஓ...ஓஓஒ

    பொன்மணிச் சரமோ
    அந்தி மஞ்சள் நிறமோ

    லலலா லலலா லலலா லால்லா

    அந்தி மஞ்சள் நிறமோ

    லலலா லலலா லலலா லால்லா


    Last edited by vasudevan31355; 26th September 2015 at 11:37 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  19. Thanks chinnakkannan thanked for this post
Page 3 of 337 FirstFirst 123451353103 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •