Page 279 of 337 FirstFirst ... 179229269277278279280281289329 ... LastLast
Results 2,781 to 2,790 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #2781
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சி.க,

    நான் யார் தெரியுமாவில் வாணியும் இல்லை,எல்.வீயும் இல்லை.
    இவ்வளவு எழுதி குவிக்கிறீர்கள். நாங்கள் அவதரித்த அதே பூமியில் எங்களுடன் அவதரித்து எங்களுடன் வளர்ந்தீர்கள். (இன்னும் கொஞ்சம் பட்டிகாட்டு சினிமா மோக மதுரையில்) சராசரி நடிக நடிகையர் பற்றி கூட தெரியாமலா இவ்வளவு அலட்டல்?
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2782
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'கீதா... ஒரு நாள் பழகும் உறவல்ல' பதிவுகளை மனமுவந்து பாராட்டிய சின்னா, மதுண்ணா, ஆதிராம் சார், வினோத் சார், கோபால் சார், ராகவேந்திரன் சார் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
    நடிகர் திலகமே தெய்வம்

  4. #2783
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ஆதிராம் சார்

    'என்னென்னவோ நான் நினைத்தேன்' பாடலைப் பற்றிய தங்களது நினைவூட்டல் வியக்க வைக்கிறது. நல்ல ஞாபகசக்தி.

    இது போன்ற அபூர்வ அட்டகாச பாடல்களுக்கு சிலர் மனதில் தனி இடம் உண்டு. அந்த வரிசையில் ராகவேந்திரன் சார், கோபால் சார், மதுண்ணா, ஜி, கார்த்திக் சார், முரளி சார் ஆகியோரும் கண்டிப்பாக இடம் பெறுவார்கள்.

    'தெய்வத்தின் கோவில்' பாடலும் அப்படியே. தாங்கள் எந்த அளவிற்கு அந்தப் பாடலை மனதில் வைத்துள்ளீர்கள் என்பது தங்களது உற்சாகப் பதிவிலேயே தெரிகிறது. தங்கள் உயரிய ரசனைக்கு எனது நன்றிகள். அப்படியே அப்பாடலைப் பற்றிய பாராட்டிற்கும் சேர்த்து.
    Last edited by vasudevan31355; 16th May 2016 at 08:52 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #2784
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராகவேந்திரன் சார்,

    சசிகுமார் பற்றி தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. நடிகரே திலகத்திற்காகவே வாழ்ந்தவர் அவர். அவரை நினைக்கும் போதெல்லாம் நிச்சயம் நம் மனம் மகிழ்ச்சியடையும்.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. #2785
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    சி.க,

    நான் யார் தெரியுமாவில் வாணியும் இல்லை,எல்.வீயும் இல்லை.
    இவ்வளவு எழுதி குவிக்கிறீர்கள். நாங்கள் அவதரித்த அதே பூமியில் எங்களுடன் அவதரித்து எங்களுடன் வளர்ந்தீர்கள். (இன்னும் கொஞ்சம் பட்டிகாட்டு சினிமா மோக மதுரையில்) சராசரி நடிக நடிகையர் பற்றி கூட தெரியாமலா இவ்வளவு அலட்டல்?
    கோ.. நான் எங்கே ஓய் அலட்டினேன்.. பிடிச்ச பாட்டு போட்டேன்.. இனிமேல் நடிக நடிகை என்று எழுதிவிடுகிறேன் சரியா..

    ஹப்புறம் சாமி சத்தியமா எனக்குத் தெரியலை..இந்த விடியுமட்டும் பேசலாம்ல கூட ராஜஸ்ரீ மாதிரி இருக்கேன்னு நினச்சேன்.. கூகுள் தேடல்லையும் டீடெய்ல் கிடைக்கலை..இருந்தா கொஞ்சம் சரியா எடிட்டாவது செஞ்சுருப்பேன்..

    அப்புறம் நேற்று ஈவினிங் ஆஃபீஸிலிருந்து வந்த பின்னர் வேறு வேலைகள்..கொஞ்சம் திருவாய்மொழி, அச்சுதம் கேசவம் ஒரு அத்தியாயம், புயலில் ஒரு தோணியில் ஒரு அத்தியாயம், ஒரு ஆங்கில புத்தகம் ஆல் யுவர்ஸ் ஸ்ட்ரேஞ்சர்னு அதில் ஒரு அத்தியாயம் ப்ளஸ் கொஞ்சம் கலிவிருத்ததிற்கான பாடங்கள் - எழுதிப் பார்க்க வேண்டும் என்று திடீர் ஆசை எனப் படித்துக் கொண்டிருந்தேனா டைம் சரியா இருந்தது..( நேற்று தான் இப்படி.. மற்ற நாட்களில் இரண்டு புத்தகங்கள் படித்தல் இரு பக்கங்கள் எழுதிப்பார்த்தல் குறைந்தபட்சம் ஒரு நாலு விருத்தம் வெண்பாவது எழுதிப்பார்ப்பேன்..உங்களிடமிருந்து ஏதாவது திட்டல் வந்தால் ஸ்பீட் ப்ரேக் போட்டது போல மனது அல்லாடும்..பின் நிமிர்ந்து நம்ம கோபால் என தேற்றிக்கொண்டு என் ரொட்டீன் தொடர்வேனாக்கும்..இன்ஃபேக்ட் உங்கள் ராகங்களுக்கு விழுந்து விழுந்து வேறுபாடல்கள் தேடிக் கேட்டு ப் போட்டதில் அன்று எதுவும் படிக்க இயலாமல் போனது..அதற்கேற்ப நீங்கள் மறு நாள் ஜஸ்ட் லைக் தட்கொஞ்சம் மென்மையான வன்மையுடன் திட்டி விட்டீர்கள்.. பரவாயில்லை.. ந.கோ. தா. ) அப்புறம் பதினொன்றரைக்கு மறுபடியும் செக்பண்ணலாம் என நினைக்கையில் உறக்கம் என்னைத் தழுவிக் கொண்டு விட்டது..பாடல் வரிகள் இரண்டு முறை பாட்டைக் கேட்டு டைப் செய்து இரண்டு விருத்தம் எழுதிப் பார்த்து பின் அதை இடாமல் விட்டு விட்டேன்.. எனக்கு நடிக நடிகையரை விட( ந.தியை த் தவிர) மற்ற பாடல் வரும் இடங்களில் தமிழ் பிடிக்கும்..அதனால் தான்..

    ஆன்லைன்ல அந்தப் படம் கிடைக்கவில்லை..கிடைத்தால் தாருங்களேன்..அப்படியே அந்தப் படத்தைப் பற்றி முன்பு நீங்களோ மற்றவரோ எழுதியிருந்தால், திட்டுவதைத் தவிர தேடுவதற்கும் நேரம் கிடைத்தால், கொஞ்சம் இடுங்களேன் குரு. நானும் அறிந்து கொள்கிறேன்..

  7. #2786
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பட்டுவுடை பாவையவள் பட்டுடலை தொட்டணைக்க
    கொத்துமலர் கூந்தலிலே கொற்றமிட்டுத் தானிருக்க
    கட்டவிழ்த்த கோபத்தில் கன்னியவள் பார்வையதோ
    வட்டநிலாச் சுட்ட வடு

    ஈற்றடி- கடைசி அடி மட்டும் தென்றல் பத்திரிகையில்கண்ணதாசன் கொடுத்த வரி.. அதற்கு மற்றவெண்பாக்களைப் படிக்காமல் முன்பு எழுதிப் பார்த்திருந்தேன்..

    பொருத்தமாய்ப் போடுவதென்றால் சில நினைவுக்கு வருகின்றன

    ராதே உனக்குக் கோபம் ஆகாதடி

    நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது

    பொன் மானே கோபம் ஏனோ

    இப்போது உமா ரமணன் குரல்கேட்க ஆவலாய் இருப்பதால்..
    பொ மா கோ ஏ


  8. Likes vasudevan31355 liked this post
  9. #2787
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பக்திப் பாடல் மெட்டுப் பாடல்கள் - 1


    ரொம்ப காலத்துக்கு முன்னால சிக்கா இஸ்கோல்ல படிச்சுக்கிட்டிருந்தாப்லயாம்.. அதாவது இந்த ப்ளஸ் ஒன் நு சொல்வாங்கள்ள அந்தப் படிப்பாம்..ஆளப் பார்த்தா எப்படி இருப்பாங்கறீங்க.. ஒல்லிப்பிச்சு முருங்கைக்காய்க்கு பேண்ட் சொக்கா மாட்டினா மாதிரி, கொஞ்சம் முகத்தில அங்கங்க கரப்பு கடிச்சா மாரி தாடி.. கொஞ்சம் கரு கரு மீசை..அதுவும் இந்த பார்பர் பஞ்சமலை இருக்காரே அவர் போன தபா ஹேர்கட் பண்ணப்ப கிருதாவ வேற நீட்டமா வெச்சுட்டாரா சொம்மா துருதுருன்னு இருந்தானாம்..

    அப்போ அந்த சான்ஸ்க்ரிட் வாத்யார் கூப்பிட்டாராம்.. இந்தாபா இந்த மாரி ஆண்டுவிழா இர்க்கு அதுக்கு நீ என்ன பண்றே

    சிக்காக்கு உதறலாம் நான் என்ன செய்யணும் சார்..

    கவலைப் படாதே நீயும் இன்னொரு பையனும் சேர்ந்து இந்த ஸ்லோகத்தை ஆரம்பத்துல பாடுங்கோ..அப்புறம்..

    அப்புறம்

    உங்க க்ளாஸ்லயே சாந்தகுமாரோ சத்யகுமாரோ கொஞ்சம் பொம்மனாட்டி போல இருப்பானேடா..

    ஆமா

    அவனோட டான்ஸ் வச்சுடலாம்னு டிராயிங் மாஸ்டர் சொல்லியிருக்கார்..

    அவ்வளவு தான் சிக்கா ஒடனே தன்னோட பாடப்போற மோகன் புள்ளையாண்டானைத் தேடிப் போனானாம்.. மோகனா

    என்னடா கண்ணா

    இப்படி வாத்யார் பண்ணிப்புட்டாரேப்பா

    அதெல்லாம்கவலிய விடு கொஞ்சம் ப்ராக்டீஸ் பண்ணிக்கலாம்..

    அப்படியே கொஞ்ச நாள் ப்ராக்டீஸ் பண்ணி பாடின பாட்டு தான் கீழே வரும் பாட்டில ஆரம்பத்துல வர்ற ஸ்லோகம்

    ஸ்டேஜ்க்கு போனவுடனே - முத ஸ்டேஜ் .. சிக்காகு மொத மாலை நேரம் . ஸோ கொஞ்சம் உதறல்தான்..ஆனா மோகனோட சேர்ந்து கோரஸா பாடினதுல வேகமா முடிஞ்சது..(கீழ வர்ற பாட்டுல அந்த ஸ்லோகம் ரெண்டு ஸ்டான்ஸா தான் வருதா..ஆனா நிஜத்துல நிறையவாக்கும்)

    கொஞ்சம் சொதப்பினாலும் யாரும் அதை நினைவுல வெச்சுக்கலை..எதனாலங்கறீஞ்களா

    பின்னாடி வந்த சாந்தகுமார்ப் பையன் ஜம்னு சூப்பர் ஆட்டம் போட்டான் பாருங்க பெண்வேஷத்துல..கலக்கலா இருந்துச்சு..அவன் ஆடின பாட்டு எதுக்குத் தெரியுமா.. மன்னவன் வந்தானடி தோழி.. அதனால எங்களை எல்லாரும் மறந்துட்டாங்க..

    மறு நாள் டிராயிங் மாஸ்டர் சிக்காவைக் கூப்பிட்டாரா.. என்னா சார்..

    பரவால்லைடா தைரியமா சொல்லிட்ட ஸ்லோகம்..

    தாங்க்ஸ் சார்..

    இந்தா என எடுத்துக் கொடுத்தது ஒரு பேனா - கருப்பு நிறத்தில் கொழுக் மொழுக்கென கொஞ்சம் தங்க நிறக் கொண்டை தரித்து - அந்தக் கால கிரீடம் வைத்த ப்ளாக் அண்ட் ஒய்ட் படஅரசகுமாரி போலவே இருந்ததாக்கும்.. ( கொஞ்சம் காஸ்ட்லி தான் பேர் தான் மறந்துவிட்டது)

    வீட்டிற்குப் போனால் ஒரே குஷி எனச் சொல்லவும் வேண்டுமா..

    இந்தப் பாடல் இடம்பெற்ற படம் பார்ததில்லை ஆனால் கேட்டிருக்கிறேன் பலதடவை..இப்போது தான் பார்க்கவும் செய்கிறேன்..லிரிக்ஸ் வாலியாம்..

    *

    பார்த்திபன் குஷ்பு தாலாட்டுப் பாடவா படம்.. அருண்மொழி ஜானகி..ஆனாக்க

    பார்த்திபனுக்கு லாங்க் ஷாட் வெச்சதுனால அவ்வளவா பயமுறுத்தலை..ஒல்லி குஷ்புவும் பரவாயில்லை..


    முதாக ராத்த மோதகம் சதா விமுக்தி சாதகம்
    கலா தறாவ தம் சகம் விலாசி லோக ரக்ஷகம்
    அனாயகைக நாயகம் வினாசி தேப்ர தைத்யகம்
    நதாசு பாசு நாஷ்யகம் நமாமி தம் விநாயகம்

    முதாக ராத்த மோதகம் சதா விமுக்தி சாதகம்

    வராது வந்த நாயகன்.. ஒரே சிறந்த ஓர் வரன்
    வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன்
    தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்
    வரம் தரும் உயர்ந்தவன் கரம் கரம் இணைந்தவன் இவன் தலைவி நாயகன்

    தொடாமலும் படாமலும் உலாவும் காதல் வாகனம்
    வராமலும் தராமலும் விடாது இந்த வாலிபம்

    உன்னோடுதான் பின்னோடுதான் வந்தாடும் இந்த மோகனம்
    கையோடுதான் மெய்யோடுதான் கொஞ்சாமல் என்ன தாமதம்

    உன் பார்வை யாவும் நூதனம்
    பெண்பாவை நீயும் சீதனம்

    உன் வார்த்தை அன்பின் சாசனம் பெண் உள்ளம் உந்தன் ஆசனம்

    அள்ளாமலும் கிள்ளாமலும் தள்ளாடும் இந்த பூவனம்

    கல்யாணமும் வைபோகமும் கொண்டாடும் நல்ல நாள் வரும்

    அந்நாளிலே பொன்னாளிலே என் மாலை உந்தன் தோள் வரும்

    சல்லாபமும் உல்லாசமும் கண் காணும் நேரம் சொபனம்

    சொல்லமாலும் கொள்ளமாலும் திண்டாடும் பாவம் பெண்மனம்
    இந்நேரம் அந்த ஞாபகம் உண்டாக நீயும் காரணம்
    கண்ணார நாமும் காணலாம் செவ்வாழை பந்தல் தோரணம்
    என் ஆசையும் உன் ஆசையும் அந்நாளில் தானே பூரணம்

    *

    இப்படிக் காதல் மயமாய் ஆன பக்திப் பாடல் இதோ கீழே..

    *

    Last edited by chinnakkannan; 16th May 2016 at 11:54 PM.

  10. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355 liked this post
  11. #2788
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பக்திப்பாடல் மெட்டுப்பாடல்கள் - 2

    என் வீட்டிற்கு அடுத்த வீடு ஒரு செட்டியார் வீடு..வட்டிக்கடை வைத்து அந்தக்காலத்திலேயே மூன்று மாடி கட்டியிருந்தார்..அவர் வீட்டுக்கு அடுத்த வீடு..அதுவும் செட்டியார் வீடுதான்..ஆனால் அந்தச் செட்டியார் ஒரு நகைக்கடையில் வேலை செய்துகொண்டோ பார்ட்னராகவோ இருந்தார்..அவருக்கு இரண்டு பெண்கள் மூன்று பிள்ளைகள்..அதில் மூத்தவன் சோமுதான் என் வயதொத்தவன்..ரெண்டு பேரும் நாலாப்போ அஞ்சாப்போ படிச்சுக்கிட்டு இருந்தோம்..

    சோமுவின் அம்மாவிற்கு கள்ளந்திரியில் கொஞ்சம் நிலங்கள் இருந்தன எனில் அறுவடை முடிந்து நெல் மூட்டைகள் வீட்டில் உள்ளே இரண்டு அறைகளில் அடுக்கப் பட்டு இருக்கும்..அந்தப்பக்கம் இந்தப்பக்கமென தாவி ஓடி விளையாடிக்கொண்டிருப்போம்..

    இப்படி இருக்கையில் ஒரு நாள்..

    நாளைக்கு சோமவாரம்ப்பா நீயும் வந்துடு

    என்னடா

    சோமு சொன்னான்..சோமாவாரம் அன்று திருப்பரங்குன்றத்தில் அன்னதானம் செய்வதாக அவன் அம்மா வேண்டிக்கொண்டிருக்கிறார்கள் என..

    அதுக்கு

    நீ சும்மா வாவே.. பஸ்ஸுல போய்ட்டு வந்துடலாம்..வீட்ல தான் புளியோதரை செய்வாங்க..வேன்ல எடுத்துக்கிட்டு போய் அங்க கோவில்ல வச்சு டிஸ்ரிபூட் பண்ணிடலாம்

    என்ன பூட்டு

    டிஸ்ரிபூட் - போடா.. எனக்குதான் இங்க்லீஷ் வராதுல்ல..

    மறு நாள் காலை பத்து பதினோரு மணீக்கு அவன்வீட்டுக்குப் போனால்..

    கொல்லைப்புறத்தில் பெரிய அண்டாவில் சாதம் கொதித்துக் கொண்டிருக்க, செட்டியாரம்மா..வாடா கண்ணா.. சோமூ எலே சோமு..பாரு அய்யரூட்டுப் புள்ளைய சுறுசுறுப்பா இருக்கு..எழுந்திருடா..

    கொல்லைப்புறத்திலிருந்து இருவர் வந்தனர் (சமையல்காரர்கள்) கொஞ்சம் அகலமாக இருந்த சோமு வீட்டு ஹாலில் பெட்ஷீட்டாட்டம் இரண்டு ஓலைப்பாய்களை விரித்து பின் கொ;புறத்திலிருந்து இன்னொரு பாத்திரத்தில் சாதம், பின் இன்னொரு பாத்திரத்தில் புளிக்காய்ச்சல் என எடுத்து வந்து சாதத்தை ப் பரத்தி அதில்புளிக்காய்ச்சலை மரக்கரண்டியால் கலக்க..பார்த்துக்கொண்டிருந்த எனக்கு எச்சிலூறியது

    கண்ணைக்கசக்கி வந்தான் சோமு.. அம்மா கண்ணாக்குகொடு..

    இப்ப கிடையாதுடா சாயந்திரம் கோவில்ல..சரியா..

    சரி என்றுவிட..

    கிட்டத்தட்ட பல நாலோ ஐந்தோ பெரிய பெரிய பாத்திரங்களில் புளியோதரை ஏற்றப்பட்டு திருப்பரங்குன்றம் பயணித்தது..

    சொல்லமறந்துவிட்டேனே.. செட்டியாரம்மா ஆட்களை வேலை வாங்கி இன்ன பிற வேலைகள் செய்து கொண்டிருந்தாலும் அந்தத் தமிழ் பக்திப்பாட்டை மனப்பாடமாகச் சொல்லிக்கொண்டிருந்தார்..

    திருப்பரங்குன்றம் போய் முருகன் வள்ளி தெய்வானை வணங்கி கோவிலில் இருந்து எல்லாருக்கும் ஒரு தொன்னை அல்லது இலை (சரியாக நினைவிலில்லை) கொடுத்து பின் சாப்பிட்ட புளியோதரையின் சுவை இன்னும் நெஞ்சகத்து நினைவில்..

    (அப்போதெல்லாம் காஸெட் வந்திருக்கவில்லை என நினைக்கிறேன்)

    பிற்காலத்தில் அந்தப் பாட்டையே மெட்டை மட்டும் எடுத்துக்கொண்டு திரைப்பாடலாக்கினார்கள்.. பக்திப்பாடலாய் சூலமங்கலம் சகோதரிகள் எல்பியில் பாடுவார்கள்..

    பதினெட்டு வயது இளமொட்டு மனது என்று ஜானகி அண்ட் கோ பாடுவது..இசை தேவா. நிறையப் பேர் கோபப்பட்டார்கள் இந்தப் பாட்டுக்கு..முதாகராத மோதகம் அவ்வளவு யாரும் கோபப்பட்டதாகத் தெரியவில்லை..

    பட் காரணம் புரிகிறது..வரிகள்..



    சரத்குமார் ரோஜா. சூரியன்..
    Last edited by chinnakkannan; 16th May 2016 at 11:55 PM.

  12. Likes vasudevan31355 liked this post
  13. #2789
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பக்திப் பாடல் மெட்டுப் பாடல்கள் - 3

    *

    மதுரையில் ஸ்ரீதேவி தியேட்டரின் வலதுபுற்முள்ள மெய்ன் ரோட்டில் கொஞ்சம் நடந்தால்சரேலென கனகவேல்காலனிக்குள் போகும் பாதை வரும்..மெய்ன்ரோட்டிலேயே இன்னும் நடந்தால் இடப்புறம் மங்கையர்க்கரசி ஸ்கூல் வலப்புறமும் அதன் ப்ராஞ்ச்..

    பட் அந்த க.வே.கா போவதற்கு முன்னாலேயே ஒரு குட்ட்டிக்கோவில் உண்டு ..வீரகாளியம்மன் என நினைக்கிறேன் ( நான் சொல்வது நாற்பது வருடங்களுக்கு முன்னால்)

    அங்கு ஆண்டுவிழாவிற்கும் சரி, மார்கழி மாதமானாலும்சரி வாடகைக்கு ரெகார்ட்ப்ளேயர் அப்புறம் பச்சைப்பெயிண்ட் அடித்த கொண்டை கொண்ட ஒலிபெருக்கி வைத்துபக்திப்பாடல்கள், சரஸ்வதி சபதம் திருவிளையாடல் தில்லானா மோகனாம்பாள் வசனம் எனப் போடுவார்கள்

    பக்திப்பாடல்கள் என்று பார்த்தால் மார்கழி காலையில் எழுப்புவது எல்.ஆர். ஈஸ்வரிதான்..

    மாரியம்மா எங்கள் மாரியம்மா உன்னை வணங்குகிறோம் கருமாரியம்மா என ராகத்தில் குரல் மனதை உள்ளிழுக்கும்

    பின் வரும் இந்தப்பாட்டு

    நெற்றியிலே குங்குமமும் நிலவ வேண்டும் அம்மா
    நெஞ்சில் உன் திரு நாமம் மலர வேண்டும்
    பக்திவளம் மென்மேலும் பெருக வேண்டும்... எனச்செல்லும் அந்தப்பாடல்..

    அம்மா.. எனச்சொல்லும் அழகு..பின்

    கற்பூர நாயகியே கனகவல்லி காளி மகமாயி கருமாரியம்மா என அழைக்கும் உருக்கம்..

    அதிகாலை (அதாவது அஞ்சு அல்லதுஆறுமணி) அரைத்துக்கத்தில்பலமுறை சின்னக்கண்ணா கேட்டு விழித்திருக்கிறான்..

    பட் பிற்காலத்தில் அந்த மெட்டே திரைப்பாடலில் வந்து கொலைபடப்போவது அவனுக்குத் தெரியாது..

    ம் பிற்காலம் என்றால் கொஞ்ச காலம் முன் வந்த பாடல்..

    கருப்பான கையாலே என்னைப் பிடிச்சான்..எனப் போகும் அப்பாடல்..

    விஷால்..அப்புறம் அரை ஆழாக்கு உழக்குக்கு பாவாடை சட்டை தாவணி போட்ட மாதிரி துறுதுறுவென உயரம் கம்மியான பானு..

    கேக்கலாமா இப்போ.. வேறு வழியில்லை..

    Last edited by chinnakkannan; 16th May 2016 at 11:56 PM.

  14. Likes vasudevan31355 liked this post
  15. #2790
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பக்திப் பாடல்கள் மெட்டுப் பாடல்கள்- 4

    அள்ளும் இளமையுடன் ஆழமாய் நெஞ்சிருக்கும்
    கல்லூரிக் காலமது காண்

    சரிதானே..

    சொல்ல வந்தது என்னன்னாக்க

    ஸ்வீட் யூத் சின்னக்கண்ணா.. காலேஜ் மூன்றாம் வருடம் முடிக்கற சமயம்..

    திடீர்னு எங்க கேங்க்ல சிலருக்கு டூர் போகணும்னு ஆசை காலேஜ் லெக்சரரை க் கூட்டிக்கிட்டு பெங்களூர் மைசூர்லாம் போய்ட்டு வந்தோம்..இல்லை வரும்வழியில் உடன் இருந்த சினேகிதன் ராஜாராமன் (பெயர் மாற்றியிருக்கிறேன்) அவனுக்கு அவனது காதலியைப் பார்க்க ஆசை..அவள் இருந்தது திருச்சியில் பொன்மலை என்னும் இடத்தில் இருந்தாள் அவனதுகாதலி.. செவந்த் டே ஸ்கூல் மதுரை ரயில்வே காலனிக்குள்ளாற இருக்கும்.. அந்த வகுப்பில் தான் ரா.ரா வும் அவன் காதலியும் ப்ளஸ் டூ படித்து பின் காதலானதென பலகதை சொல்வான்..

    அவனைப் போகவிடவில்லை என்ன காரணத்தாலோ நாங்கள்..

    பட் சில மாதங்கள் கழித்து அவனுடனேயே போய் அவனது காதலியை சந்திக்க நேர்ந்தது..இந்த முறை அவன் காதலியின் தகப்பனார் கோயம்புத்தூருக்க்கு மாற்றலாகி இருந்தார்..

    போத்தனூர்..

    ஒரு இளங்காலையில் மதுரை டு கோயம்புத்தூர் அடைந்து பஸ்ஸில் போய் போத்தனூர் செல்கையில் குளிர்காற்று.. ஸ்டாப்பில் இறங்கி க்ராஸிங்க் கடந்து ரா.ரா வின் காதலி வீட்டுக்குப் போகையில் மெல்லிய தூறல் சாரல்..அவளைப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் ரா.ராவின் மனதில் ஆரலாய்ப் பற்றிக்கொள்ள புஸு புஸு என மூச்சு விட்டான்

    சாரல் நனைத்தாலும் சத்தியமாய் என் நெஞ்சம்
    ஆரலாய்க் காய்கிறது ஆம்

    (ஆரல் நெருப்பு) எனச் சொல்லாமல் வேகமாய் நடந்து செல்ல நானும் உடன் நடக்க வீடு சேர்வதற்குள் நல்லமழையில் நன்றாகவே நனைந்து விட்டோம்..
    வாசலில் “ஹாய் “ யுடன் அவன் காதலி.இஞ்சினியரிங்க் மாணவி.. பின் பின் என்ன..

    வெளியில் மழை பெய்து கொண்டிருக்க அவர்கள் வீட்டு வாசலில் இளமை மழை.. ஓ. நோ என் நண்பனின் காதலி அல்ல..அவளது தங்கை..

    ப்ளஸ் ஒன் படிக்கிறாளாம்..பெயர் கல்பனாவோ காயத்ரியோ இப்போது நினைவிலில்லை (அதானே..சொல்லமாட்டேனே).. செவேலென்று -நன்றாககாரம் போட்ட கடலைமாவில் தோய்த்தெடுத்த வாழைக்காய்ப் பஜ்ஜி போல- கொஞ்சம் என்னுயரம் ப்ளஸ் செந்நிறம் கொண்டு சிரித்து ஹாய் சொன்னது தேவதை..(பின்ன நாங்கள் அங்கு சென்ற போது எங்களுக்கு நல்லபசி..பசியில் உவமைஇப்படித்தான் வரும்..

    ஹாய்..

    அந்த ஹாய் சொல்லித்தெரிந்த மூரலில் என் கவியுள்ளம் பொங்கி (பலவருடங்களுக்கு அப்புறம் இப்போது) எழுந்தது!

    தூறல் வருடதற்போல் தூய உதட்டினிலே
    மூரலால் தீண்டினாள் மெய்

    (மூரல் – முறுவல்)

    மெய்யாலுமே சிலிர்த்துட்டேங்க.. சொன்னா நம்பணும்..

    உள்ளிருந்து இருவரின் அம்மா வந்து வாடா ராஜா, கண்ணா என அழைத்து டிஃபன் உப்புமாவோ என்னவோ கொடுக்க உண்டால்.. கொஞ்சம் ஒரு மணி நேரத்தில் கிளம்பணும் இன்னொரு இடத்தில் ஒருவரைப் பார்க்கவேண்டும் என கல்பனாவின் அம்மாவிடம் நான் சொல்லிக்கொண்டிருக்க, ரா ராவும் க.அக்காவும் கண்ணால் பேசிக்கொண்டிருந்தார்கள்.

    சரி சரி என்றான் ராஜா ராமன்..இடைமறித்து.. நாங்க கிளம்பறதுக்கு முன்னாடி நீங்க ரெண்டுபேரும் பாட்டுப் பாடணும் என்றான் கல்பனாவையும், காதலியையும் பார்த்து..

    கொஞ்சம் கூட ஃபஸ் அடித்துக்கொள்ளவில்லை அவர்கள்.. சுடிதார் போட்ட அக்காவும் பாவாடைசட்டை தாவணி தங்கையும் சப்பணம் கூட்டி தரையில் அமர்ந்து பாடிய பாட்டு என்றைக்கும் மறக்கமுடியாதாக்கும்..

    காற்று சிலிர்த்திடக் காரிகையர் கானமது
    ஊற்றாகப் பொங்கிவந்த தே

    அதன்பிறகு அந்தப் பெண் கல்பனாவை மதுரை வரும்போது ரா.ராவின் காதலியுடன் சில முறை பார்த்திருக்கிறேன்.. .. அப்போதெல்லாம் அந்த மென்சிலிர்ப்பு போய்விட்டிருந்தது.. ( நான் வளர்ந்தேனே மம்மி) ஏனெனில் ரா.ராவின் காதல் முறியும் நிலைமையில் இருந்து பின் முறிந்தே விட்டது..(அதெல்லாம் சாவகாசமா நாவல் எழுதினா சொல்றேன்..ஓ.கேயா )

    ம்ம் அப்படி என்ன பாட்டு பாடினாங்க
    என்ன தவம் செய்தனை யசோதா..
    எங்கும் நிறைபரப்பிரம்மம் அம்மா என்றழைக்க..

    *

    பிற்காலத்தில் இந்தப்பாட்டு இறுதியில் அதே ஒருசில வரிகளுடன் வந்து கொஞ்சம் அழகாகவும் மிளிர்ந்தது ஹரிணியின் குரலாலும் சினேகாவாலும்

    பார்த்திபன் கனவு ஸ்ரீகாந்த் சினேகா..

    ஆலங்குயில் கூவும் ரயில் ஆரீரரோ ஏலேலேலோ..
    யாவும் இசை ஆகுமடா கண்ணா..

    Last edited by chinnakkannan; 16th May 2016 at 11:57 PM.

  16. Likes vasudevan31355 liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •