Page 278 of 337 FirstFirst ... 178228268276277278279280288328 ... LastLast
Results 2,771 to 2,780 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #2771
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    மீள் பதிவு

    சந்தனம் தெய்வத்திற்கு பூஜை செய்யப் பயன் படும் பொருள்.. மணமிகு ச்ந்தனம் அழகிய குங்குமம் என்கிறார் மருதமலை
    மாமணியே முருகையா பாடலில் மதுரை சோமு.

    சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் பாடலில் நினைவில் சந்தனம் மணக்கக் கேட்டேன் என்கிறார் வைர முத்து..

    அப்பொழுது தான் மலர்ந்த பெண்ணைப் பற்றி - அரச்சசந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெற்றியிலே என்கிறார் கங்கை அமரன்..

    சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து என்னைத் தடவிக்கொண்டோடுது தென்னங்காத்து ...ந.தி. சாவித்திரி + கண்ணதாசன்..

    தந்தச் சிலையழகாய் தங்கக் கரமழகாய்
    ..சந்தக் கவியழகாய் சிந்தும் நகைகொண்டே
    வந்தாள் வனத்தினிலே வாகாய் வஞ்சியவள்
    ..சொந்த மென்வெனக்கு சொர்க்கம் தனைக்காட்ட
    செந்தேன் குரலினிலே சேலாம் விழியகல
    ..சொக்கத் தான்வைத்தாள் சுந்தர பாவையெனை
    மின்னல் சுடுமென்பார் மங்கை யிவளழகோ
    ..மேனி குளிர்விக்கும் சந்தனம் ஆச்சுதையா..

    என்கிறார் அந்தக்கால சின்னக் கண்ணனார்..!

    இங்க பாருங்கள்..கவிஞர் வாலி என்ன கேக்கறார்.. சந்தனமேடையுமிங்கே சாகச நாடகமெங்கே..

    இன்பமே உந்தன் பேர் பெண்மையோ... ம.தி.. ராதாசலூஜா + இளமை ..படம்.இதயக்கனி..


  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #2772
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹை..இன்னொரு பாட் நினைவுக்குவந்துச்சே.
    .
    நல்ல வரிகள்..

    நிலாவே அழகு..அதுவும் கொஞ்சம் வெளிர் மஞ்சள்ள இருக்கறா மாதிரி இருக்கும் தூரத்தே இருந்துபாக்கறச்சே..

    ஆமா நிலா எப்பவரும்..இது என்ன அபத்தக் கேள்வியா..இந்த இரவு நேரத்தை என்ன சொல்றார் கவிஞர்

    சந்தனம் பூச மஞ்சள் நிலாவும்
    வந்தனம் என்று நெஞ்சில் உலாவும் நேரம்

    ஓகே அது குட் ஈவ்னிங்க் சொல்லிச்சு சரி..அப்புறம் என்ன

    விண்ணிலவு பாலூட்ட பெண்ணிலவு தாலாட்ட
    நீலாம்பரி கேட்கலாம்…நீலாம்பரி கேட்கலாம்

    தூக்கம் வராதோ

    நீ பார்க்கும் நேரங்கள் நிலம் பார்க்கும் நாணங்கள்
    நெஞ்சுக்குள் ஏதோ செய்தன

    இதமாக மைபோட்டு இமையென்னும் கைபோட்டு
    உன் கைகள் என்னை கொய்தன… (ஹை.. நல்லா இருக்கே லைன்ஸ்..)

    *

    கொஞ்சுதற்குத் தோதாய் குளிர்நிலவாய் வஞ்சியவள்
    மிஞ்சுகின்ற வெட்கத்தில் மேனியிலே அச்சமுடன்
    கெஞ்சுகின்றாள் கண்களினால் கேட்கின்றாள் ஓசையின்றி
    விஞ்சுவதும் ஆசையது ஆம்..

    (சரியா வந்திருக்கா..)

    ரஜினி ராதா..+ இளமை..


  5. Likes Russellmai liked this post
  6. #2773
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    மீள் பதிவு..

    சாலையைக் கடக்க நின்றாள்
    அவளைக் கடந்தன
    பல கண்கள்
    *
    கண்களும் கீழே விழுந்தன
    அவள் தவற விட்ட
    புத்தகத்துடன்
    *
    புத்தகத்துள்
    உயிரிழந்த இரு பூச்சிகள்
    நிறையப் படித்திருக்குமோ
    *
    படித்தது எல்லாம் மறக்க
    நீல மசியில்
    தெரிகிறது வெறுமை
    *
    வெறுமையாகிவிட்டது
    அவள் சென்ற
    வீதியும் மனசும்..
    *
    மனசில் மயிலிறகு
    பல நாளின் பின் கேட்ட
    அவள் குரல்
    *
    குரல் கேட்கக்கேட்க
    உருவம் வளர்ந்தது
    நெஞ்சில்
    *
    நெஞ்சில் வலி வந்தாலும்
    முகத்தில் கட்டாயச் சிரிப்பு
    இருக்குமிடம் அ;லுவலகம்
    *
    அலுவலக நேரம் முடிந்தும்
    படபடப்பு
    அவளிடம் பேசவேண்டும்..
    *
    வேண்டும் எனச் சொல்லிவிட்டாள்
    தொலைபேசியில்
    பூத்தூவித் தெரிகிறது சாலை..
    *
    ஒரு ஹைக்கூ (?!) விற்கும் அடுத்ததற்கும் எந்த சம்பந்தமும் இல்லை..ச்சும்மா அந்தாதி ட்ரை பண்ணினேன்..

    பொருத்தமாய் பாட்டா.. பொருத்தமில்லை ஆனா பாட் நன்னா இருக்கே

    ஓர் பூமாலை அதில் தேன் இவ்வேளை.. (இனிய உறவு பூத்தது படமாம் சுரேஷ் நதியா (படம் எப்படி இருக்கும்) பாட் இப்பத் தான் கேக்கிறேன் பார்க்கிறேன்..எனக்குப் பிடிச்சிருக்கே…(கொஞ்சம் ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை மெட்டின் சாயல் என நினைக்கிறேன்)


  7. Likes Russellmai liked this post
  8. #2774
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    சந்தனம் நறுமணப் பொருட்களில் ஒன்றாக விளங்குகிறது. இது மிக அரியதும், விலைமதிப்புள்ளதுமான ஒரு வாசனைப்பொருளாகும்.

    (ஹை என்ன கண்டு பிடிப்பு)

    தோல் சுருக்கங்கள், கறுப்பு தோல்கள் போன்றவற்றை மாற்றுகிறது.

    உலர்ந்த சருமத்திற்கு லேசான ஈர உணர்ச்சியைக் கொடுத்து அதை மிருதுவாகவும்,
    பளபளப்பாகவும் செய்கிறது. சிறுநீர்க்குழாய்களில் உண்டாகும் சில வியாதிகள் இந்த வாசனை எண்ணெயினால் குணமாக்கப்படுகின்றன.

    //ஹை நிறைய உபயோகம் இருக்கே//

    எனக்குத்தெரிந்த சந்தனம் ..ஒரு குட்டி வட்டமாய் ஒரு பலகை வீட்டில் மதுரையில் இருந்தது.. ஏதாவது ஆத்திர அவசரத்திற்கு
    ஃபார் எக்ஸாம்பிள் ட்யூரிங் டிவாலி டைம் ஏதாச்சும் பட்டாசு சுட்டா அம்மா டபக்கென சிலசமயம்
    தண்ணீர் கொஞ்சம் அந்த வட்டக் கட்டையில் விட்டு அதை த் தேய்க்கும் சின்னக் கட்டையில் தேய்த்துத்
    தடவியிருக்கிறார்..மதுரை அக்னி நட்சத்திர நாட்களில் சில சமயம் கரெண்ட் வராத காலத்தில்
    கொஞ்சம் உடலில் பூசிக் கொண்டு தூங்கியதாக நினைவு (வெகு சின்ன வயதில்)

    வந்தனம் சொல்லியே வாகாக வெக்கையை
    சந்தனம் போக்குமே தான்
    ..
    இங்க என்ன சந்தனக்காற்றே செந்தமிழூற்றே சந்தோஷப் பாட்டே வா..வா.. ரஜினி ஸ்ரீதேவி..+ இளமை..
    தனிக்காட்டு ராஜா..

  9. #2775
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    இன்னிக்கு 42 என்று நெட்டில் (107) போட்டிருந்தாலும் 45 க்கும் மேலாகத் தான் இருக்கும் வெயில்..வெளியில் ஷாப்பிங்க் போய்விட்டு வந்தால் தோலெல்லாம் எரிகிறது..ம்ம் 45 என்றால் 113 பார்த்துக்கொள்ளுங்களேன்.. அனல் தகிக்கிறது.. மனமே ஒரு மந்திரச்சாவி என வேண்டி நின்று ஒரு பாட் கொடு ம்ஹூம் இனி இப்படி எழுத மாட்டேன்.. ஒரு பாட்டுக்கொடு எனக் கேட்டதில் கிடைத்தது மழைப் பாட்டு..சூர்யாவின் தந்தை அண்ட் ராதாவின் அக்கா..



    ராகம் தாளம் பல்லவி
    அது நம் காதல் பூபாளமே..

  10. Likes Russellmai liked this post
  11. #2776
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    1973

  12. Likes Russellmai liked this post
  13. #2777
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    1973

  14. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellmai, eehaiupehazij liked this post
  15. #2778
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Dear Gopal
    Enjoyed your spoof and parody in a healthy way! You could have added a relevant video too!!
    senthil

    வ(ச)ம்பு சோ(ப்)பாலின் தழும்பு தரும் அ(ழு)ம்பு தாங்காமல் வெதும்பி கலங்கி குழம்பி தயங்கி மயங்கி பயந்து நயந்து ஏறி இறங்கி மிரண்டு வெருண்டு மருண்டு உருண்டு புரண்டு வெறித்து தெறித்து ஓடி ஒளிந்து வளைந்து நெளிந்து ஒதுங்கி பதுங்கி சுருங்கி விரிந்து குனிந்து நிமிர்ந்து குதித்து மிதித்து வேர்த்து விறுவிறுத்து பதறி உதறி கத்திக் கதறி துடித்து துவண்டு வெந்து புழுங்கி நொந்து நூலாகி நடுங்கி ஒடுங்கும் புதியபறவை கோ(ப்)பால் !!
    கட்டம் கட்டப்பட்ட இத்தனை முக பாவ வர்ண ஜாலங்களையும் கட்டுக்கடங்காமல் வெளிப்படுத்தி பின்னிப் பெடலெடுத்து வட்டமடித்திட நடிகர்திலகத்தினால் மட்டுமே முடியும்!


  16. Likes chinnakkannan liked this post
  17. #2779
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ’பொன்னே,புதுமலரே,பொங்கிவரும் காவிரியே
    மின்னும் தாரகையே வெள்ளி நிலவே………

    அம்புலி வேண்டுமென்றே அடம்பிடித்தே அழுவாய்
    பிம்பம் காட்டி உந்தன் பிடிவாதம் போக்கிடுவேன்
    அந்த நாள் மறைந்ததம்மா ஆனந்தம் போனதம்மா

    நல்ல தங்காளில் ஏபி. நாகராஜன்.. திருவிளையாடலில் தாடி மீசையுடன் நக்கீரனாகப் பலமுறை பார்த்த உருவம்.... ம்ம்



    இந்தப் பாட்டு சிறுவயதில் பலமுறை ரேடியோவில் கேட்டிருக்கிறேன்..சமீபத்தில் எப்போது கேட்டேன் என யோசித்தால்..ம்ஹூஹூம் கேட்டதில்லை..கொஞ்சம் 30 வருடங்களுக்கு மேலேயே இருக்கும்..

  18. #2780
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    திடுதிப்புனு தேடறச்சே கிடைத்ததுஇந்தப் பாட்டு ஜெய்சங்கர், எல்.விஜயலஷ்மி (?) சோ வாணிஸ்ரீ பாடும் பாட்டு..
    இதில் ஜெய்சங்கருக்கும் சோவுக்கும் டி.எம்.எஸ் அண்ட் எல்.விக்கும் வாணிக்கும் சுசீலா..

    நான் யார் தெரியுமா.. முன்னால் வாசு எழுதியிருக்கிறார் அல்லது யாரோ எழுதியிருப்பதைபடித்தது போல் புகையாய் நினைவு..

    பட் பாட் நன்னா இருக்கே..கருப்புக் கண்ணாடி போட்டுக்கிட்டதாலேயே வாணியை அடையாளம் தெரியலையாம்..ம்ம்

    *
    ஆங்கில லிரிக்ஸ் பார்த்து தமிழில் டைப்படித்தேனாக்கும்..

    *
    ஒரு துள்ளல் பாட்டு தான்..

    *

    நினைத்தால் மணக்கும் கிடைத்தால் இனிக்கும்
    தங்க நிறம் வண்டாடும் பூ முகம்
    மஞ்சள் நிறம் தள்ளாடும் மெல்லிடை
    முல்லை நிறம் என்னென்ன வண்ணங்களோ

    \முத்தங்கள் சிந்தாதது முந்தானை பின்னாதது
    கன்னங்கள் பொன்னானது கையோடுதான் சேர்ந்தாடுது

    மானோ மீனோ மாங்கனி தானோ
    வாழைப் பூவில் ஊறிய தேனோ

    அம்மம்மா பெண்ணா இது
    அப்பப்பா என்னாவது


    தித்திக்கும் செம்மாதுளை சிங்காரச் செண்டானது
    அல்லிப்பூ பந்தாடுது அச்சாரம் கொள்ளாதது
    வேலோ வில்லோ விழியொருபாவம்
    மேலும் மேலும் விளையுது ராகம்


    ஈரேழு பருவத்திலே என்னென்ன வைத்தானம்மா
    பாலூறும் பெண்மையிலே பல்லாக்கு செய்தானம்மா

    நானோ நீயோ மாப்பிள்ளையாரோ
    யாரோ யாரோ யாரறிவாரோ
    அம்மம்மா பெண்ணா இது
    அப்பப்பா என்னாவது


Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •