Page 264 of 337 FirstFirst ... 164214254262263264265266274314 ... LastLast
Results 2,631 to 2,640 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #2631
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    சி.செ, ராகவேந்தர், வாஸ்ஸூ, மதுண்ணா..அடி தூள்..கலக்கல் பாட்டுக்கள்.. தாங்க்ஸ்ங்க்ணாவ்ஸ்

    சிசெயில் (சிவகாமியின் செல்வனில்) நானில்லை இல்லை இல்லையில் ந.தி மடிக்கணினி உபயோகப் படுத்தி இருப்பார் என முன்னம் எழுதிய நினைவு

    கோவின் ராகங்களும் படிக்க வேண்டும்..விரிவாக விரைவாக ஈவ்னிங்க் எழுதுகிறேன்..

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2632
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    10)மோகனம்.

    பெயரிலேயே மோகனம் சுமந்து நிற்கும் இந்த ராகம் நிஜத்திலேயே வசீகர மோகனம் கொண்டது. மனதை இதமாய் வருடி ,காற்றில் மிதக்க விடும் உணர்வை தரும் இதமான மெலடி சுமந்த சுலப மெல்லிசை ராகம்.

    அல்லிரானியாய் நிற்கும் ஒரு முசுட்டு பெண்ணை(நண்பனின் தங்கை) டீசிங் செய்யும் துரு துரு இளைஞன், வீட்டின் எதிரில் மொட்டை மாடியில் பாடுவதாக (அதுவன் கம்பன் கண்ட சீதை படிக்கும் நாயகியை குறி வைத்து) வரும் பாடல் என்னை டீன்களில் பித்தாக்கிய ஒன்று. மெல்லிசை மன்னர் சகாப்தம் முடிந்தது என்று கொக்கரித்தவர்கள் வாயை fevicol போட்டு ஒட்டிய பாடல்."கம்பன் ஏமாந்தான் ".

    அதிர்ஷ்டமில்லாத ஒரு அருமையான இசையமைப்பாளர் ஏ.எம்.ராஜா.இவரை மாதிரி ஒரு திறமைசாலி ,தமிழ் திரையுலகில் ஒதுங்கிய காரணம் சமரசமற்ற போக்கு.முன்கோபம்,திலகங்களின் ராஜ்யத்தில் டி.எம்.எஸ் ஐ ஒதுக்கியது (வயசான டி.எம்.எஸ் இன்னொரு இளையவரால் ஒழிக்க பட்டார்.),இவை அவரை அந்நிய படுத்தி விட்டது.நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் இவரை ஒதுக்கி, எம்.எஸ்.வீ - டி.கே.ஆர் அணுக பட்ட போது ,பெருந்தன்மையாக அனுமதி பெற வந்த எம்.எஸ்.வீ (உண்மையாகவே நல்ல குணம்)யுடன் இவர் சொன்னது. நான் தூக்கி போட்டதை யார் எடுத்தால் என்ன?இவரை அந்த குணம் தூக்கி போட்டு விட்டது. கல்யாண பரிசு,தேன் நிலவு, ஆடி பெருக்கு போதுமே. இவர் பெயரை இன்னும் 5000 ஆண்டுகள் சொல்ல? கர்நாடகம்,ஹிந்துஸ்தானி,வெஸ்டெர்ன் என்று இவர் தொட்டு சீராட்டிய பாணிகள் ,மற்றோருக்கு ராஜ பாட்டை போட்டன.தேன் நிலவில் "நிலவும் மலரும் பாடுது" நம்மையும் நிலவொளி -ஓடம் போக வைக்காதா?

    கேமரா மேதை பிரசாத் எனக்கு உவப்பான ஒருவர். புதிய பறவை போதுமே? ரவி ,கே.ஆர்.விஜயா இணைவில் சூப்பர்-ஹிட் படமான இதய கமலத்தில்"மலர்கள் நனைத்தன பனியாலே" ,பிரசாத் அதிசய பட பிடிப்பில் பனியை துல்லியமாக காட்டுவது போல ,நம் மனதில் பனியின் குளுமையை கொடுக்கும் திரை இசை திலகத்தின் அதிசயமல்லவா?

    எனக்கு பிடித்த பிற பாடல்கள் (மோகனம்)

    அமுதை பொழியும் நிலவே- தங்க மலை ரகசியம்.
    என்னை முதல் முதலாக பார்த்த போது -பூம்புகார்.
    என்ன பார்வை உந்தன் பார்வை-காதலிக்க நேரமில்லை.
    சங்கே முழங்கு- கலங்கரை விளக்கம்.
    குழந்தையும் தெய்வமும்- குழந்தையும் தெய்வமும்.
    தேன் மல்லி பூவே- தியாகம்.
    நின்னுகோரி வர்ணம் வர்ணம்-அக்கினி நட்சத்திரம்.

    11)பிருந்தாவன சாரங்கா.


    சொந்தங்களுக்குள் காதல் எண்ணங்களை பரிமாறி கொள்வது,சொந்தங்களை சீராட்டுவது(குழந்தைகளையும் சேர்த்தே), காதலியிடம் உருகி நீதான் என் மனதில் என்று அழுத்தி சொல்வது ,இவற்றுக்கேன்றே ஒரு ராகம் உள்ளதா? உள்ளேன் ஐயா என்று உங்கள் முன் ஆஜர் ஆவது பிருந்தாவன சாரங்கா.

    சிறு வயதில் மூன்று படங்கள் என்னை உலுக்கும்.இவ்வளவு வித்யாசமான கதை கரு, திரை கதை மற்றும் கலை மேதையின் நடிப்பு மூன்றிலும். படித்தால் மட்டும் போதுமா,ஆலய மணி,புதிய பறவை. முற்றிலும் வேறு பட்ட சிந்தனையில் புத்தம் புதிய நமக்கு பழகாத கதையமைப்பு கொண்டவை. இரண்டு இணை பிரியா சகோதரர்கள் (ஒன்று விட்ட) .ஒருவன் sophisticated படிக்காத வேட்டை காரன். மற்றவன் polished படித்த மென்மையான மனிதன். இருவரும் ஒருவருக்கு பார்த்த பெண்ணை மற்றவர் சென்று பார்த்து அங்கீகரிக்க ஏற்பாடு செய்து ,வந்த பிறகு எண்ணங்களை பரிமாறி கொள்ளும் மைல் கல் காட்சி.இதில் படித்தவனின் எண்ணம் திரிபு பட என் விழியில் நீ இருந்தாய் என அப்பாவி வேட்டை காரனும், உன் வடிவில் நான் இருந்தேன் என படித்த வக்கிரமும் பாடும் இந்த பாடலும் இன்றும் எல்லோராலும் நேசிக்க படும் அதிசயம்.டி.எம்.எஸ் ஒரு கட்டை குறைக்க,பீ.பீ.எஸ் ஒரு கட்டை ஏற்ற ,இந்த இரண்டு நேர்த்தியான பாடல் திலகங்களின் அபூர்வ சங்கமம்."பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை".

    இருவர் மேல் எனக்கு அலாதி பற்று. இருவருமே அவரவர்க்கு உரிய அங்கீகாரம் பெறாத மேதை பால்கேக்கள். இருவரும் பெற வேண்டிய இடம் என் மனதில் நிஜமாகாத நிழலாகவே தொடர்கிறது. அடிமைகள், மற்றும் சிலகம்மா செப்பிந்தி என்சற படங்களை தழுவி இயக்குனர் சிகரம் தந்த நிழல் நிஜமாகிறது.ஈர்ப்பு நிறைந்த வசீகரம்.இரு துருவங்களாக கமல்,சுமித்ரா.love teasing concept வைத்து இதற்கு மேல் எதுவும் செய்ய இல்லை என்று பாலு-கமல்-சுமித்ரா கூட்டணி இறுதி செய்து விட்ட முத்திரை படம். தோதுவாய் சரத்-ஷோபா-ஆனந்து. உறுத்தாமல் மௌலி (suspect list லே கூட இல்லியா).ஒரு பாதிக்க பட்டு பெண்ணுக்கு காப்பளனான ஒருவன் தன் ஒரு முனை பட்ட தன்னலமற்ற அன்பால் அந்த பெண்ணின் மனதிலும், அல்லிராணி காதலில் விழுந்தாலும் புகை படர்ந்த சந்தேகத்தால் ,தன் காதலை தள்ளி வைத்து போடும் நாடகம். இரண்டையும் இணைத்து சொந்தங்களின் மன ஓட்டத்தை ,போராட்டத்தை சொன்ன மெல்லிசை மன்னர் தான் யார் என்று ஊருக்குணர்த்திய பாடல். "இலக்கணம் மாறுதோ,இலக்கியம் ஆனதோ".

    70 களில் ,horny teen -ager (இன்றும் அப்படித்தான் .மனிதன் மாறவில்லை.அவன் மயக்கம் தீரவில்லை)ஆக நான் வலம் போது ,ஒரு பாடல்,அது படமாக்க பட்ட பரபரப்பான சூழ்நிலை,அற்புதமான இசை,நடித்தவர்களின் தோதுவான erotic Enactment &expressions என்று கிக் ஏற்றி படத்தின் வெற்றிக்கே துணை செய்தது.அந்த பாடல் "நாலு பக்கம் வேடருண்டு".

    இந்த ராகத்தில் எனது மற்ற விருப்பங்கள்.

    1)பூவரையும் பூங்கொடியே- இதயத்தில் நீ.
    2)முத்து நகையே உன்னை- என் தம்பி.
    3)சிங்கார கண்ணே உன் தேனூறும் சொல்லாலே-வீர பாண்டிய கட்டபொம்மன்.
    4)இது குழந்தை பாடும் தாலாட்டு-ஒருதலை ராகம்.
    5)நெஞ்சாங்கூட்டில்- டிஷ்யூம்.
    Last edited by Gopal.s; 4th May 2016 at 11:17 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  4. Likes madhu liked this post
  5. #2633
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    12)பேஹாக்.

    தாயின் கையை பிடித்து புல்தரையில் நடக்கும் சுகத்தை அனுபவித்ததுண்டா?காதலியின் கரம் கோர்த்து கடற்கரையில் நடந்த த்ரில் எத்தனை பேருக்கு வைத்திருக்கும்? அப்படியே ஒரு மெல்லிய உருளு தளத்தில் சுகமாய் உருண்டு எழுந்த செல்ல அனுபவ நுகர்ச்சி வேண்டுமா?நல்லாவே அனுபவிக்க வேண்டிய மென்னடை சுக ராகம்.

    தமிழில் அத்தனை பாடகர்களும் தொண்டை புடைக்க கத்தி ,சங்கீதத்தை MKT பாணியில் ஓலமாக்கி குதறி கொண்டிருந்த போது (பாவம் bass ,barritone பாடகர் TMS ஐயே உச்ச ஸ்தாயி ஓலத்தில் படுத்தி எடுத்தனர் இசையமைப்பாளர்கள்)அப்போது மென்மை இசையை இசையாக்கி நமக்கு ஆறுதல் கொடுத்தது ஏ.எம்.ராஜா வும்,ஏ.எல்.ராகவனும். ஆனால் ராஜா பல் கடித்து உதடு பிரிக்காமலும்,ராகவன் ஏனோ கொஞ்சம் இனிமை குறைவாகவும் இருந்ததால் கிஷோர் ,ரபி என்று தஞ்சமடைந்த இசை வெறியர்களை தமிழை நோக்கி படையெடுக்க வைத்த வசந்த பாடல்.பிறந்த நாள் விழா கண்ட கண்ணதாசன்-எம்.எஸ்.வீ, டி.கே.ஆர் இணைவில் ,ஒரு velvet குரல் ,மென்மையான ஆண்மை குறையாத ஒரு அதிசய பாடகரின் வாழ்விலும் வசந்தம் தந்த அந்த அதிசய பாடல் "காலங்களில் அவள் வசந்தம்."

    அந்த படத்தின் அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட் ரகம் . திரைக்கதை,நடிப்பு அத்தனையிலும் விந்தை புரிந்த அந்த படத்தில் சத்தமில்லாமல் முதலிடத்தை ஒரே பாடலில் கவர்ந்தார் ஒரு அதிசய பாடலாசிரியர்.(கண்ணதாசனை இந்த படத்தில் ஓரம் கட்டிய அவர்,சித்திர பூவிழி வாசலில் வாலியை ஓரம் கட்டினார்.) மாயவநாதன்.தெய்வ பாடகி அம்மா சுசிலாவின் மெலடி,பாடலின் அழகு, சாவித்திரியின் பாந்தம் எல்லாம் சேர்ந்து இன்றும் நம்மை சொக்க வைக்கும் ராகம்" தண்ணிலவு தேனிறைக்க".

    erotic என்ற ஒரு ரக ரசனையே தமிழில் கொண்டு வந்த புண்ணியம் செய்தவர் நடிகர்திலகம். தன மனம் கவர்ந்த எழில் நாயகி தேவிகாவுடன் நம் மனதை துடிக்க வைத்த (அமைதியின் நிசப்தமும்,சர வெடியின் படபடப்பும் இணைய முடியுமா?முடியுமே)என்று காட்டிய திரை இசை திலகத்தின் பாடலில் உச்ச பட்ச chemistry காட்டிய டி.எம்.எஸ் -சுசிலா இணைவில், பிறந்த நாள் நாயகன் கண்ணதாசனின் சிரஞ்சீவி பாடல் "மடி மீது தலை வைத்து".

    தான் நேசித்த பெண்ணை அடைய நினைத்த பெண் பித்தன் ,தன் அனைத்து தீ வழிகளையும் நேசத்திற்கு ஈடாக அடகு வைத்து, வழி தவறேயாயினும் அடைந்த பெண்ணை ,இனிய கற்பனையால் இணைய விழையும் குதூகல கற்பனை முதலிரவு கானம். வேட்டி சட்டையில் ஒரு ஆண் மகன் எவ்வளவு அழகாக திகழ முடியும் என்பதை திராவிட மன்மதன் உலகுக்கு உணர்த்திய தேவ கானம்.திரை இசை திலகத்தின் "கண்ணெதிரே தோன்றினாள் "

    இந்த ராகத்தின் மற்ற தேர்வுகள்.

    பாவாடை தாவணியில் - நிச்சய தாம்பூலம்.

    ஒரு பெண்ணை பார்த்து நிலவை பார்த்தேன்- தெய்வத் தாய்.

    அவள் ஒரு நவரச நாடகம்- உலகம் சுற்றும் வாலிபன்.

    ஆடி வெள்ளி தேடி உன்னை - மூன்று முடிச்சு.

    13)ரீதி கவுளை.


    கர கர பிரியாவின் ஜன்ய ராகம். எக்கச் சக்க வக்கிர பிரயோகங்களுடன் பாடகரின் கற்பனையை தூண்டி சுடர் விட செய்து ,கேட்போரை சொக்க செய்யும்.
    தாளத்தையும், நீளத்தையும் (metre ) பொறுத்து புது அவதாரம் எடுக்கும் சாத்தியமுள்ள ராகம் ,இது உங்கள் ஆசையை தூண்டி மானசீக காதலில் திளைக்க செய்யும். உங்கள் வயதை குறைக்கவல்ல மார்கண்டேய மாத்திரை போன்ற ராகம்.

    கர்நாடக ராகங்களிலேயே மிக பெருமை மிக்கதான இந்த ராகத்தில் எந்த பாடலும் ரொம்ப பிரபலாகவில்லை 70 வரை. (ராகவேந்தர் சொன்ன தெனாலிராமன் பாடல் நான் கேட்டதில்லை).

    எனக்கு தெரிந்து இந்த ராகத்தில் வந்த முதல் பாடல் சுபதினம்(1969) படத்தில் கே.வீ.மகாதேவன் பெயரில் வெளி வந்த "புத்தம் புது மேனி இசை தேனி தூங்கும் மலர் வண்ணமோ " என்ற பாலமுரளியின் பாடல்.(அசலாக டி.ஜி.லிங்கப்பா போட்ட பாடல். டி.ஜி.லிங்கப்பாவின் மற்றொரு பாடலான குங்கும பூவே சந்திர பாபுவால் கடத்த பட்டு மரகதத்தில் எஸ்.எம்.எஸ் பெயரில் வந்தது.)அற்புதமான பாடல்.
    இதையடுத்து சின்ன கண்ணன் அழைக்கிறான் ,கவி குயிலில். அடுத்து
    தலையை குனியும் தாமரையே ஒரு ஓடை நதியாகிறது படத்தில்.

    வசீகரமான பாடல் அழகான ராட்சசியே ,முதல்வனில். சமீபத்தில் james vasanthan போட்ட கண்கள் இரண்டால் படு பிரபலமாகி படத்தையே தூக்கி நிறுத்தியது.
    Last edited by Gopal.s; 4th May 2016 at 12:27 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  6. Likes madhu liked this post
  7. #2634
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ஒரே ராகத்தில் உருவானதாக சொல்ல பட்டாலும்,இவ்வளவு வேறுபாடுகள் எங்கிருந்து வருகின்றன?

    இங்குதான் இசையமைப்பாளர்களின் மேதமை நிற்கிறது.(கீழ்கண்டவற்றை இசையின் தன்மை கெடாமல் மக்களின் ரசனையை அடிநாதமாய் பிடித்து அவர்களை கேட்ட உடனே அல்லது கேட்க கேட்க (acquired )அடிமை கொள்ள வேண்டும்)

    1)ராகத்தின் tempo எனப்படும் metre மாற்றுவது.
    2)சுருதி (Tonic )மாற்றி பாடலின் tone மாற்றுவது.
    3)ஸ்வரங்களின் அணிவகுப்பில் விளையாடி,கமகம் (ornamentation ),கற்பனை (kalpana ) என்று ஒரு பிடி பிடிப்பது.
    4)பல கலப்பு ராகங்கள் உருவாக்கி விளையாடுவது.
    5)Musical arrangements மற்றும் interludes விளையாட்டுக்கள்.
    6)தாளங்களில் மாற்றங்கள் மற்றும் புத்திசாலி கலப்படங்கள்.(rhythm Arrangement )

    தாளங்களை(Clap ) பற்றி சுளுவாக சொல்லலாம்.

    1)ஒரு தட்டு தொடையில் தட்டினால் அனுத்ருதம்(U ) ஒரு அக்ஷரம்..
    2)ஒரு தட்டு தொடையில் தட்டி ,ஒரு வீச்சு காற்றில் வீசினால் த்ருதம் .(0) 2 அக்ஷரங்கள்.
    3)ஒரு தட்டு தொடையில் தட்டி சுண்டு விரல்,மோதிர விரல்,நடு விரல் என்று கணக்காக்கி விளையாடுவது லகு(1) .(ஒரு தட்டு இரு விரல் என்றால் 3 அக்ஷர திச்ர ஜதி.ஒரு தட்டு மூன்று விரல் என்றால் சதுச்ர ஜதி 4 அக்ஷரம்.ஒரு தட்டு நான்கு விரல்கள் என்றால் கண்ட ஜதி 5 அக்ஷரங்கள்.ஒரு தட்டு 6 விரல்கள் என்றால் மிஸ்ர ஜதி 7 அக்ஷரங்கள். ஒரு தட்டு 8 விரல்கள் என்றால் சங்கீர்ண ஜதி 9 அக்ஷரங்கள் )
    4)சதுஸ்ர ஜதி அடிப்படையில் 4 அக்ஷரங்கள் கொண்ட லகு என்று எடுத்து தாளங்களை அலசினால் சுலபம்..

    ஆதி தாளம் என்பது 100(ஒரு தட்டு மூணு விரல் எண்ணி ஒரு தட்டு ஒரு வீச்சு ஒரு தட்டு ஒரு வீச்சு)- 8 அக்ஷரங்கள்.

    ரூபக தாளம் என்பது U 0 (ஒரு தட்டு ஒரு வீச்சு ஒரு தட்டு)-3 அக்ஷரங்கள்.

    மிஸ்ர சாப்பு என்பது ஒரு தட்டு இரண்டு விரல் ,ஒரு தட்டு ஒரு வீச்சு,ஒரு தட்டு ஒரு வீச்சு .7 அக்ஷரங்கள்.

    இது மாதிரி நிறைய.

    தாளத்தில் விளையாடி ஒவ்வொரு பாட்டுக்கும் புது மெருகு கொடுக்கலாம்.

    இசை மிக சுலபம். கற்பனை வார்த்தைகளாக திரிந்து கெட்டு போகாமல் சுருதி சுரமாகவே பிறவியில் அமையுமென்றால்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  8. Likes madhu liked this post
  9. #2635
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like

    14)காப்பி ராகம் /பிலு ராகம்.


    மேற்குறிப்பிட்ட இரண்டு ராகங்களுமே அண்ணன் தம்பி போன்றவை

    காப்பி ராகத்தை பொறுத்த வரை light classical என்ற வகைக்கே ஏற்படுத்த பட்ட ராகம். அமைப்பிலேயே பலவித கற்பனைகளுக்கு இடமளித்து ,இசையமைப்பாளர்களை மகிழ்விக்கும் மாலை தென்றல்.

    மாலையில் காப்பி குடித்து கொண்டே கேட்டு மகிழலாம்.பக்தி,நெகிழ்ச்சி,காதல்,உருக்கம்,உல்ல ாசம் எல்லாமே இந்த ராகம் தன் note களில் உள்ளடக்கியது.நிறைய இசையமைப்பாளர்களின் ,நிறைய தமிழ் பாடல்களில் புகுந்து புறப்பட்ட ராகம்.

    எனக்கு சிறு வயதில் டி.எம்.எஸ் ரசிகனாக இருந்ததனால்தானோ என்னவோ உரத்த ஓங்கார இசை பிடித்தே இருந்தது.அப்போது இலக்கிய மொழி ஈடுபாட்டினால் பாடல்களில் சங்கம் தேடும் இயல்பினால் ஒரு பாடல் என்னை ஸ்தம்பிக்க வைத்தது."சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி காட்டினிலே". கண்ணதாசன் முதல் முதலில் தான் வசனகர்த்தா அல்ல கவிஞனே என்று ஸ்தாபிக்க தன் நண்பர்களை துணை கொண்டு (விஸ்வநாதன்-ராமமூர்த்தி)மாலையிட்ட மங்கை எடுத்தார்.(நன்றி சிவகங்கை சீமை,முழு கவிஞன் நமக்கு கிடைத்தான்).ஒரு ஆணின் சிருங்காரமும் ஒரு பெண்ணின் உரத்த குரலும் இணைந்த வினோத குரலான் டி.ஆர்.மகாலிங்கத்தின் "செந்தமிழ் தென் மொழியாள் ".

    அந்த காதல் செவிலி மங்கையோ ,ஒரு மருத்துவனை மணந்து இனிய இல்வாழ்க்கை கண்டு மகிழுங்கால் ,அய்யகோ க்ஷயம் வந்து நொந்து கணவன் கடமை துறந்து அவளே கதியென கிடக்க (உயிர் போச்சா இருக்கா,ஐ அம கமிங் ,ஐயம் கமிங்),கணவனை கடமைக்கு இழுக்க தன்னை துறந்து சென்று வெளிநாட்டில் நோய் குணம் கண்டு கணவனை எண்ணி பாடும் தெய்வ திருப்பாடகி அம்மா சுசிலாவின் "காதல் சிறகை காற்றினில் விரித்து".

    கல்லூரி மூன்றாம் வருட படிப்பின் போது ,ஒரு தீபாவளியை முன்னிட்டு ஹாஸ்டல் சிறைவாசம் துறந்து ,நெய்வேலி ஊர் சென்றேன். வழக்கம் போல நண்பர்களுடன் மெயின் பஜார் என்று சொல்ல படும் ஊரின் ஒரே ஷாப்பிங் மால் அருகேயான ஒரு டீக்கடையில் (பட்டாசுடன்)ஒரு பாடல்.(அப்போது ரிலீஸ் ஆகாத)அப்படியே உலுக்கி போட்டது அந்த தாள கட்டும் பாடலின் அமைப்பும் கருவிகளின் துல்லியமும். உடனே அந்த இசை தட்டில் பட பெயர் பார்த்தேன் .பிரியா-ஸ்டீரியோ போனிக் என போட பட்டிருந்தது. இன்று வரை என்னை அடிமை கொண்ட அந்த பாடல் "ஏ பாடல் ஒன்று ராகம் ஒன்று ".

    காப்பியில் என்னை கவர்ந்த மற்ற காப்பி கானங்கள்.

    அன்னையும் தந்தையும் தானே- ஹரிதாஸ்.
    மதுரா நகரில் தமிழ் சங்கம்- பார் மகளே பார்.
    அந்த சிவகாமி மகனிடம்-பட்டணத்தில் பூதம்.
    கண்ணே கலை மானே- மூன்றாம் பிறை.
    காதல் ரோஜாவே- ரோஜா .
    என் மேல் விழுந்த மழைத்துளியே-மே மாதம்.
    அன்ப அன்பே கொல்லாதே-ஜீன்ஸ்.
    உருகுதே உருகுதே ஒரே பார்வையாலே-வெய்யில்.

    பிலு ராக அதிசயங்கள்-

    உனது மலர் கொடியிலே -பாத காணிக்கை.
    மலர்களிலே பல நிறம் -திருமால் பெருமை.
    கேட்டதும் கொடுப்பவனே- தெய்வ மகன்.
    அண்ணன் ஒரு கோவில் என்றால்-அண்ணன் ஒரு கோவில்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  10. Likes madhu liked this post
  11. #2636
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like

    15)கீரவாணி.


    ஒரு ராகம் ,உங்கள் அறியாத உள்மன அடுக்குகளில் புகுந்து, நீங்கள் அறியாத உணர்வுகளை கிண்டி ,இன்ப விகசிப்பை தந்து ,இன்னும் தேடு தேடு என்று உங்கள் கண்களை சொக்க வைக்கிறதா?

    இந்த ராகத்தை நினைக்கும் போது ,இளையராஜாவை எண்ணாமல் இருக்க முடியாது.இந்த ராகத்துக்கே புது பரிமாணம் கொடுத்தவர்.அவருக்கு பட்டமே கொடுக்கலாம் கீரவாணி ராஜா என்று.

    இது ஒரு அசல் கர்நாடக மேளகர்த்தா ராகம். இதற்கு மிக நெருங்கிய இன்னொரு மேளகர்த்தா சிம்மேந்திர மத்யமம்.இதன் ஜன்ய ராகம் கல்யாண வசந்தம் ஒரு அபூர்வ ராகமாகும்.இது ஹிந்துஸ்தானிக்கும் இங்கிருந்து சென்றது.(நம் மேளகர்த்தாவை அவர்கள் thaat என்பார்கள்)மேற்கத்திய இசையில் மிக பிரபல ராகம் இது (harmonic Minor Scale ).மேளகர்த்தா ராகம் 12 சக்கரமாக ஆறு ஆறாக பிரிக்க பட்டுள்ளது.இது நாலாவது சக்கரம் 4 வேதத்தையும் குறிக்கும் பகுப்பில் வரும்.

    என்னுடைய மிக மிக நெருங்கிய குடும்ப நண்பரும் ,பிரபல இயக்குனருமான மகேந்திரன் அவர்களின் land mark commercial படமாக வந்த ஜானி.(எனக்கு அவ்வளவு பிடிக்காவிட்டாலும் ,அற்புதமான சில அழகுணர்ச்சி காட்சிகள் கொண்டது)காதலனை ,காதலை காற்றில் தேடும் அந்த பாடக காதலியின் மழையில் ,ரசிகரின்றி பாடும் மேடை பாடலின் ,ஜானகியின் தேடும் குரலில் ,ராஜாவின் அபூர்வ உன்னத இசையமைப்பு. "காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றை தேடுதே ".இது வரை இந்த மாதிரி பாடல் எங்கே தேடினாலும் காணவில்லை.

    அந்த அபூர்வ இரட்டையர் தமிழின் இசை பொற்காலத்தை நிர்ணயித்த ,தமிழின் மிக சிறந்த பாடல்களை தந்த இணை.அவர்களையே ஒரு பாடல் composition படுத்தி எடுத்ததாம்.முற்பிறவி சூழ்ந்த ,இப்பிறவி ஜோடி பாட வேண்டிய இதயத்தை பல பிறவிகளுக்கு அலைய விட வேண்டிய haunting melody .பல மாதங்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இவர்களை சோதித்து குதித்தோடி வந்த அதிசயம் "நெஞ்சம் மறப்பதில்லை".

    தமிழுக்கு புதிதான ஹிந்துஸ்தானி-கர்நாடக-மேற்கத்திய பாணிகளில் புகுந்து புறப்பட்டு trend -setter ஆக சாதித்த அந்த பாடக-இசையமைப்பாளரின் , இசைக்காகவே இன்றும் பேச படும் அபூர்வ தேனிலவின் ,இன்றும் உங்கள் மனதை குதிரையேற்றி ,வானுக்கு அனுப்பும் "பாட்டு பாடவா".(boogey boogey rhythm என்ற மேற்கத்திய இணைப்பில்)

    கீரவாணியில் என்னை கவர்ந்த மற்ற பாடல்கள்.

    நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்-நெஞ்சில் ஓர் ஆலயம்.

    எனை காணவில்லையே நேற்றோடு-காதல் தேசம்.

    பூங்காற்றிலே - உயிரே.

    என்னை தாலாட்ட வருவாளோ- காதலுக்கு மரியாதை.

    பாடி பறந்த கிளி- கிழக்கு வாசல்.

    போவோமா ஊர் கோலம்- சின்ன தம்பி.

    இன்பமே உந்தன் பேர் - இதய கனி.

    மன்றம் வந்த தென்றலுக்கு- மௌன ராகம்.

    மண்ணில் இந்த காதலன்றி - கேளடி கண்மணி.

    நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு -பொன்னு மணி.

    மனிதா மனிதா இனி உன் விழிகள்-கண் சிவந்தால் மண் சிவக்கும்.

    16)சிம்மேந்திர மத்யமம்.

    சிறு வயதில், ஒரு படம் வெளியாகும் செய்தி தெரிந்து, அந்த படம் போகும் நாளை எண்ணியே 20 நாள் கழித்த அனுபவம் உண்டா?(மாசம் முதல் பத்தில் ரிலீஸ் ஆவது ,அப்பாவிடம் டிக்கெட் சில்லறை வாங்குவதை சுளு வாக்கும்)

    ஒரு பெண்ணிடம் காதல் கடிதம் கொடுத்து ,அவள் வாங்கி சென்றும் ,ஒரு பத்து நாட்கள் reaction இல்லாத,இன்ப எதிர்பார்ப்பில் மிதந்திருக்கிறீர்களா?

    கல்யாணத்திற்கு இன்னும் பத்தே நாட்கள். கல்யாண நாளை எண்ணி எண்ணி காலம் கடத்தியதுண்டா?கல்யாணம் முடிந்த பிறகு ,குல தெய்வம் காவடி எடுத்த பின்பே முதலிரவு.காவடிக்கு இன்னும் ஐந்து நாட்கள் . துடித்திருக்கீர்களா வர போகும் இன்பத்தை எதிர்பார்த்து?

    இந்த ராகம் ஒரு anxiety (positive ) என்ற ஒரு உணர்வை கொடுக்கும்.
    காத்திருப்பு,எதிர்பார்ப்பு ஒரு இன்ப காரியத்துக்காக என்று இந்த ராகம் எல்லாம் இன்பமயம் என்ற உணர்வை கொடுக்கும்.

    ஐயோ, இந்த ஜோடி வாழ்க்கையில் இணைந்திருக்க கூடாதா என்ற எதிர்பார்ப்பு எல்லா ரசிகர்களுக்கு அளித்த ஒரு all time pair சிவாஜி-பத்மினி.(நடிகர்திலகமும் ,நண்பர் சிதம்பரத்திடம் வெளியிட்டுள்ளார். பத்மினி ,இலங்கை எழுத்தாளர் முத்து லிங்கத்திடம் ) பின்னால் வர போகும் இந்த ஜோடியின் சீனியர் அறிமுகம் பப்பிம்மாவிற்கு.என்.எஸ்.கே தயவில் மணமகள் படத்தில்.பின்னால் பணத்தில் (1952) இந்த ஜோடி இணைந்தது. பப்பி வேடிக்கையாக எனக்கு தாலி கட்டிய(ஷூட்டிங் ) பின்பே மனைவிக்கு(நிஜத்தில்) என்பார்.அந்த அறிமுக படத்தில் பிரபல நடன பாடல் "எல்லாம் இன்ப மயம்."

    தான் காதலித்த பெண்,தன் நண்பனை விரும்புவது அறிந்து ,தன் ஆசை துறந்து ,நண்பனுக்கே அவளை மணமுடிக்கிறான்.(மிரட்டி)ஒரு சகோதர ஸ்தானத்தில் நின்று. அவள் பூமுடிக்கும் நாளை கற்பனை கண்டு ,ரகு ராமன் வரவேற்க சிவராமன்-ராஜேஸ்வரி திருமணம் இனிதே நிறைவுற்று விடை பெறுகிறான்.(எங்கே விடை பெற விட்டார் நண்பர்?ஒரேயடியாகவல்லவா விடை கொடுத்து விடுவார்?) அந்த Epic Song "பூ முடிப்பாள் இந்த பூங்குழலி".

    டீன் ஏஜில் இருக்கும் போது நான் நினைப்பதுண்டு. இயக்குனர் ஆனால் இந்த வாழ்கையை பற்றி ஒரு படம் எடுக்க வேண்டும் என்று. அப்போது வாழ்க்கையில் இரண்டே பருவம். குழந்தை(கல்யாணம் வரை)-வாலிபன்(கல்யாணம் ஆனதும்).இரண்டுங்கெட்டான் பருவத்திற்கு மதிப்பே இல்லை. நண்பன் ஒரு நாள் என்னிடம் சொன்னது.... தேவிகலா சென்று பார்.உன் கனவை கோகிலா இயக்குனர் திருடி விட்டார் என்று.அழியாத கோலங்களாய் அப்படம். இதை தொடர்ந்து இன்னொரு ஸ்ரீதர் உதவியாளர்களின் (ஸ்ரீதர் ஒ மஞ்சு அரை வேக்காடு) தொடர்ந்த முயற்சி பன்னீர் புஷ்பங்கள். எனது பிரிய பாடகி உமா ரமணன் (நல்ல வேலை ராஜா புண்ணியம் வைத்து ஜானகி தவிர்த்தார்) அருமையான குரலில் "ஆனந்த ராகம் கேட்கும் காலம்".

    சிம்மேந்திர மத்யமம் மற்ற பாடல்கள்.

    தூது செல்வதாரடி- சிங்கார வேலன்.

    தாலாட்டும் பூங்காற்று நான் அல்லவா-கோபுர வாசலிலே.

    தாஜ் மகால் தேவையில்லை அன்னமே-அமராவதி

    நீ பௌர்ணமி என்றும் என் வாழ்விலே-ஒருவர் வாழும் ஆலயம்.
    Last edited by Gopal.s; 4th May 2016 at 01:45 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  12. Likes madhu liked this post
  13. #2637
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    17)ஆபோகி.

    உலகத்தில் எங்குமே துன்பமில்லை, ஆனந்தம் மட்டுமே எஞ்சியுள்ளது என்று நம்ப ஆசை படுகிறீர்களா?கண்களின் வார்த்தைகள் புரிந்து,காலை நேர பூங்குயிலை தரிசித்து,ரதத்தில் வந்த விருந்தாளிக்கு ,வணக்கம் பல முறை சொல்லி , வசந்த காலம் வந்ததை எண்ணுங்கள் புரியும்.

    அந்த அபூர்வ இரட்டையர்கள் பிரிந்ததாய் வந்த செய்தி இசை வெறியர்களை குலுக்கி போட்டது.விஸ்வநாதனோ கற்பனை சுரங்கம்.(விஸ்வ நாதம் என்று பிரியத்தோடு குறிப்பார் என் நண்பர் விஸ்வேஸ்வரன்).public relation விஷயத்தில் கரை கண்டவர். ராமமூர்த்தி ஞான கடல். அத்தனை மேளகர்த்தாவும் அத்துபடி. விஸ்வநாதனின் குரு. balancing of archestra ,இணைப்பு ராகங்கள் என்று கரை கண்டவர்.இந்த மேதைகளின் இணைப்பு தமிழ் திரை இசையுலகின் பொற்காலம். அங்கங்கே பாக பிரிவினை போன்று தந்திருந்தாலும் ,விஸ்வரூபம் எடுத்தது 1960 இல் மன்னாதி மன்னனில் இருந்து,பாவ மன்னிப்பில் உச்சம் தொட்டு ஆயிரத்தில் ஒருவன்(1965) வரை தொடர்ந்தது.முதலில் இணைந்தது பணம் படத்தில்(1952).பிரிவிற்கு பல காரணங்கள். விஸ்வநாதன் ,தன் குருநாதரின் குடி பழக்கமே என்றார்.கலை கோவில் தோல்வி எதிரொலிப்பு என்று ஒரு புறம்.ராமமூர்த்தி திட்டமிட்டு ஒதுக்க படுகிறார் என்று ஒரு சாரார்.(சர்வர் சுந்தரம் அவளுக்கென்ன ஒரு sample ).இன்னொரு சாரார் ராக்ஷசியை காரணம் காட்டினர்.எது எப்படி இருந்த போதும் பிரிய கூடாத ஜோடியின் பிரிவு.நான் இருவரின் இணைப்பும் மீண்டும் நேராதா என்று ஏங்கிய கோஷ்டி.(சத்யராஜ் படமொன்றில் தள்ளாத வயதில் இணைந்த போது வருந்திய கோஷ்டியும்)இருவருமே பாதிக்க பட்டார்கள். ராமமூர்த்தி ரொம்பவே .ஆனாலும், நான்,காதல் ஜோதி,மறக்க முடியுமா,மூன்றெழுத்து,தங்க சுரங்கம்,சாது மிரண்டால் ,தேன்மழை போன்ற படங்களில் மேதைமை பளிச்சிட்டது.(தனி பெயரில் வெளியானாலும் இணைப்பிசை கொண்ட நீ,கலங்கரை விளக்கம்,நீலவானம் போன்றவற்றிலும்). ஒரு பாடல் போதும் ராமமூர்த்தி யார் என்று உலகிற்கு புரிய வைக்க. ஷெனாய் ஓலத்தோடு "வசந்த காலம் வருமோ நிலை மாறுமோ" என்று ஏங்க வைத்த பாடல். இசை ரசிகர்களின் எண்ணத்தின் பிரதிபலிப்பு.

    இந்நூற்றாண்டின் இணையற்ற நகைச்சுவை எழுத்து மன்னன் கோபுவிற்கு சங்கீதம் என்றால் உயிர். ஸ்ரீதரை இழுத்து விட்டார். இரட்டையர்கள் தயாரிப்பில்,இசையில் கலைக்கோவில். ஸ்ரீதரிடம் ஒரு பிரச்சினை .எடுத்தால் ஓஹோ என்று.இல்லை தரை மட்டம்.(பாலச்சந்தர் போல consistency இருக்காது).கலைக்கோவில் படு போர். ஆனால் பாடல்கள்? இந்த படத்தின் "தங்க ரதம் வந்தது வீதியிலே".

    ஜனநாயக நாட்டில் ,சர்வாதிகார தர்பார். அன்னையும் மைந்தனும்.ஏதேதோ அம்ச திட்டங்கள். தன்னை காத்து கொள்ள.(மக்களிடம் காத்து கொள்ள இயலாதது வேறு விஷயம்) இதற்கு ஜால்ரா போட்டு ஒரு boring பிரச்சார படம்.(சூட்டோடு சூடாக வரி விலக்கு வேறு).ஆனால் இந்த படம் வரும் முன்னே ,எல்லா மேடையிலும் ஆரம்ப வரவேற்பு பாடலாக அலங்கரிக்க தொடங்கி பட்டி தொட்டியெங்கும் popular . படத்திற்கு பலரை ஈர்க்க காரணமானது.
    "வணக்கம் பல முறை சொன்னேன் சபையினர் முன்னே".

    இந்த ராகத்தின் மற்ற பாடல்கள்.

    கண்களின் வார்த்தைகள் பு ரியாதோ- களத்தூர் கண்ணம்மா.
    இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே- வைதேகி காத்திருந்தாள் .
    காலை நேர பூங்குயில் - அம்மன் கோவில் கிழக்காலே.

    18)ஹம்சத்வனி.


    காதல் வயப்பட்டு விட்டீர்கள். காதலி ஒப்பு கொண்டு விட்டாள் .ஆனாலும் ஊருக்கு தெரியாமல்,உலகுக்கு தெரியாமல் ரகசியம் காத்து, உங்களுக்குள்ளேயே மருகி, சுகம் காக்கும் விகசிப்பை, உணர வேண்டுமா?ரகசியமாக அடையும் சுகத்தை ,திருட்டு சுகத்தை ஊரறியாமல் உணரும் சந்தோசம். இந்த பிரத்யேக உணர்வு தரும் ராகம் ஹம்சத்வனி.

    அந்த பாடலையும் ,ஜோடியையும் நிறைய பேர் குறை சொன்னார்கள்.அதனாலேயோ என்னவோ ,அந்த பொன்னூஞ்சல் ஆடிய ஜோடியின் இந்த வித்தியாச கானத்தில் எனக்கு ஒரு ஈர்ப்பு. சாதாரண கனவு பாடல் மார்கழி மாதத்து பனியும் அந்த மங்கையை கண்டதும் பணியும் என்ற அபூர்வ வரி கொண்டது.highlight ஆணின் விருப்பமும்,பெண்ணின் செல்லமான மறுப்பும் ஸ்வரத்தின் வழியாக சொல்ல பட்டது. டி.எம்.எஸ்.-சுசிலா பின்னியிருப்பார்கள்.சிவாஜி-உஷாநந்தினி ஜோடி எனக்கு பிடித்தம். குன்னக்குடி கொடி நாட்டிய வித்தியாச பாடல். "பால் பொங்கும் பருவம் "(படமும் பாடலும் நிறைய பேருக்கு பிடிக்காது)

    வாழ்வில் இணைந்த அந்த ஜோடியின் முதல் படம்.வழக்கம் போல தெரு ரௌடியிடம் காதலில் விழும் இன்ஸ்பெக்டர் மகள். ஆனால் பாடலும் ,படமாக்கமும் வித்யாசம்.(படமும்தான்-அமர்க்களம்)பரத்வாஜின் "உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு".

    எல்லாம் அம்சமாய் நிறைந்த 100% திருப்தி என்பார்களே, அதை அளித்த 2000களின் பாடல். அன்றலர்ந்த தாமரையாய்,அன்று பறித்த வெள்ளரியாய் ,சரியாய் பழுத்த ஸ்ட்ராபெரியாய் சிம்ரன். சந்திரபாபு-விஜய் சரிவிகித கலப்பாய் பிரபுதேவா. அற்புத நடன அமைப்பு.சரியான படமாக்கம். ரகுமானோ என்று திகைக்க வைத்த புதிய ஒருவரின் அற்புத composition -interludes -B G M .(ரஞ்சித் பாலொட் ) "மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே "

    அந்த பிரபலத்தின் (மதுரைதான்)இரண்டாவது படைப்பு.நடிகர்திலகம் வெள்ளிவிழா கேடயம் வழங்கிய தமிழின் சிறந்த படைப்புகளில் ஒன்று. இளைய ராஜா கிராமத்து பின்னணியில் கலப்பிசையில் பெடலெடுத்த கிழக்கே போகும் ரயில்.ஆனாலும் இந்த பாடல் படத்திலில்லை."மலர்களே நாதஸ்வரங்கள்". அருமையான பாடல்.வெட்ட பட்டது நீளம் கருதி.ஆனால் அதே இயக்குனரின் இன்னொரு அரை வேக்காட்டு ரொமாண்டிக் த்ரில்லெர் .இசை புயலின் விஸ்வரூபம்.எடு படாத படத்தில் ஒரு composition marvel . "தீகுருவியாய் தீங்கனியென தீபொழுதினில் தீண்டுகிறாய்." கண்களால் கைது செய்யா விட்டாலும் ,காதுகளால் என்னை கைது செய்த இணைப்பு-படைப்பிசை அபூர்வம்.

    இந்த ராகத்தில் மற்ற பாடல்கள்.

    வனிதா மணியே - அடுத்த வீட்டு பெண்.
    ஸ்ரீ ரங்க ரங்க நாதனின் பாதம்-மகாநதி.
    Last edited by Gopal.s; 4th May 2016 at 02:17 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  14. Likes madhu, Richardsof liked this post
  15. #2638
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like

  16. Likes Russellmai liked this post
  17. #2639
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like

  18. Likes Russellmai liked this post
  19. #2640
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like

  20. Likes madhu, Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •