Page 263 of 337 FirstFirst ... 163213253261262263264265273313 ... LastLast
Results 2,621 to 2,630 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #2621
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மதுண்ணா!

    மதுர கானங்கள் பாகம் 4 ல் பாலா தொடரில் நான் எழுதிய 'வருவாயா வேல்முருகா'. மீண்டும் ஒரு நினைவூட்டலுக்கு.


    எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்



    (நெடுந்தொடர்)

    14

    'வருவாயா வேல்முருகா '

    'ஏன்' படத்தின் இன்னொரு அருமையான பாலாவின் பாடல். மிக மிக அருமையான பாடல். அந்தப் பாடல்தான் பாலாவின் தொடரில் அடுத்து வருவது.

    அண்ணன் சிரமப்பட்டுப் படித்து பி.ஏ.பட்டம் வாங்கி வருகிறான். அவன் பட்டம் வாங்க அல்லும் பகலும் இறைவனிடம் வேண்டிய அன்புத் தங்கையிடம் இந்த சந்தோஷ விஷயத்தைச் சொல்லுகிறான். தங்கை மகிழ்ச்சி அலைகளில் துள்ளிக் குதிக்கிறாள். அண்ணன் தனக்கு அதிக சம்பளத்தில் நல்ல வேலை கிடைத்து விட்டதாகவும், இனி அந்த சின்ன வீட்டில் குடித்தனம் நடத்த வேண்டாம்...பெரிய வீடாகப் பார்க்கலாம் என்று கூறுகிறான்.

    தங்கை அந்த வீட்டின் வாசலில் தன் அண்ணன் வக்கீல் என்பதை பெருமையுடன் உணர்த்த 'ராமு பி.ஏ' என்று போர்டு வைத்து அழகு பார்க்கிறாள். அவள் மனமெல்லாம் மகிழ்ச்சி.

    அழகாகப் பாடவும் ஆரம்பிக்கிறாள்.

    லா லா
    லா ல ல ல ல லா

    என்று மிக இனிமையாக ஹம்மிங்குடன் பாடல் தொடங்குகிறாள். அவளுடன் சேர்ந்து அவள் அண்ணனும் பாடி மகிழ்கிறான்.

    'மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும்
    மங்கை என் கோயிலிலே'

    என்று அந்த மங்கை மயங்கிப் பாட, அண்ணன் அந்த வரிகளில்

    'மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும்
    தங்கையின் கோயிலிலே'

    என்று 'மங்கை' யின் இடத்தில் 'தங்கை' யை வைத்து மகிழ்கிறான்.

    அண்ணனுக்குத் தங்கையும், தங்கைக்கு அண்ணனும் துணை தேடி மகிழும் வரிகள்.

    'திருமணத் திருநாளுக்கு வரும் விருந்தினர்கள் இந்தப் பாவையின் உறவினர்கள்' என்ற வளமான, யாரும் நினைத்துப் பார்க்க முடியாத, எதிர்பாராத திடீர் தித்திப்பு வரிகள். பொருத்தமென்றால் பாடலுக்கு அப்படிப் பொருந்தும் பொருத்தம்.

    'திருநாளுக்கு வருகின்ற விருந்தினர்கள்
    அவர் பாவையின் உறவினர்கள்'

    கண்ணதாசன் ஒருவனாலேயே முடிந்த ஒன்று.



    வருவாயா வேல்முருகா
    என் மாளிகை வாசலிலே
    மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும்
    மங்கை என் கோயிலிலே

    வருவாயா வேல்முருகா
    என் மாளிகை வாசலிலே
    மாதுளம் பூக்கள்
    தீபம் ஏற்றும் தங்கையின் கோயிலிலே

    அண்ணனுக்குப் பெண் பார்க்க
    வரும் என் அண்ணியை என் கண் பார்க்க

    ஹாஹா ஹா ஹா ஹா....(அற்புதம்... அற்புதம்)

    அண்ணனுக்குப் பெண் பார்க்க
    வரும் என் அண்ணியை என் கண் பார்க்க

    என் தங்கையின் துணையை நான் பார்க்க
    அந்த இன்பத்தை நீ பார்க்க

    நீ வருவாயா வேல்முருகா
    என் மாளிகை வாசலிலே
    மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும்
    தங்கையின் கோயிலிலே

    மார்கழியில் மாயவனும்
    தை மாசியிலே நாயகனும்

    ஹாஹா ஹா ஹா ஹா....

    மார்கழியில் மாயவனும்
    தை மாசியிலே நாயகனும்

    திருநாளுக்கு வருகின்ற விருந்தினர்கள்
    அவர் பாவையின் உறவினர்கள்

    நீயும் வருவாயா வேல்முருகா
    என் மாளிகை வாசலிலே
    மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும்
    மங்கை என் கோயிலிலே

    முன்னவனோ ஆலமரம்
    தம்பி முளைத்து வரும் சின்ன மரம்

    எங்கள் தோட்டத்தில் இன்று மூன்று மரம்
    எங்கள் வாழ்வே அன்பு மாயம்

    நீ வருவாயா வேல்முருகா
    என் மாளிகை வாசலிலே
    மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும்
    மங்கை என் கோயிலிலே

    பாடல் முடிந்து பார்த்தால் அந்தப் பேதை தங்கை அண்ணனை நினைத்து கனவு காணுகிறாள்.

    அண்ணனாக ஏ.வி.எம்.ராஜனும், தங்கையாக லஷ்மியும் வழக்கம் போல. இவர்களை யார் பார்த்தார்கள்?

    பாடலின் உண்மையான நாயகர்கள் பாலா, மற்றும் டி.ஆர்.பாப்பா மற்றும் சரளா.

    கோடி முறை கேட்டாலும் திகட்டாத தேவ கானமோ இந்தப் பாடல்!

    அடடா! 'இப்படியெல்லாம் பாடல்கள் இருக்குமா'?! என்று எண்ணி எண்ணி வியக்க வைக்கும் பாடல். அணு அணுவாகக் கேட்டுப் பாருங்கள். நான் சொல்வதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்று உணர்வீர்கள்.

    இந்தப் பாடலை அபூர்வமான பின்னணிப் பாடகி எஸ்.சரளா தொடங்கும் போதே டோட்டலாக நாம் ஆ(ல்)ள் அவுட் ஆகி விடுவோம்.

    லா லா லா
    லா ல ல ல ல லா

    என்று இந்த வசியக் குரல் பெண்மணி பின் தொடர்ந்து 'லலல லலல லலல லலலலலா லலாலா' என்று இந்த ஹம்மிங்கை முடிக்கும் போது பாடலுக்குபோகவே மனசு வராது. அந்த ஹம்மிங்லேயே ஒன்றிப் போய் ரீவைண்ட் பண்ண ஆரம்பித்து விடுவோம் நம்மை அறியாமலேயே.




    சரளா பற்றி ஒரு சிறுகுறிப்பு (இலவச இணைப்பு)

    சரளா ஒரு அருமையான குரல்வளம் கொண்ட பாடகி. நிறைய இஸ்லாமிய பக்திப் பாடல்கள் பாடியவர்.

    முக்தாவின் 'தேன் மழை' காமெடிப் படத்தில் அறிமுகம். 'என்னடி! செல்லக் கண்ணு...எண்ணம் எங்கே போகுது?' மிக அருமையான பாடல் இது. சச்சு விஜயாவிடம் பாடுவது போல் வரும்.

    'பூனை கண்ணை மூடினால் உலகம் இருளுமா?' தாராபுரம் சுந்தரராஜனுடன் இணைந்து 'பொம்மலாட்டம்' படத்தில். இதுவும் முக்தாவின் படம்தான்.

    அப்புறம் 'நினைவில் நின்றவள்' அதே முக்தாவின் படத்தில் 'நந்தன் வந்தான் கோவிலிலே' என்ற அருமையான பாடல். சச்சுவிற்குப் பாடுவார்.

    மூன்றுமே முக்தாவின் முத்தான காமெடிப் படங்கள்.

    முக்தாவின் படங்களில் சச்சுவுக்கு நிறையப் பாடல்கள் பாடியது சரளாதான்.

    அவ்வளவு ஏன்? நம் 'இசைஞானி' இளையராஜாவின் இசையில் கூட 'பொண்ணு ஊருக்குப் புதுசு' படத்தில் அவருடனேயே இணைந்து,

    'ஒனக்கெனத்தானே இந்நேரமா
    நானும் காத்திருந்தேன்
    ரகசியம் பேச மனசிருக்கு
    ராத்திரி நேரம் நெலவிருக்கு'

    என்ற அழகான பாடலைப் பாடியிருப்பார். (கிட்டத்தட்ட ஜென்ஸியின் குரல் போல)

    இஸ்லாமியப் பாடல்களில் கொடி நாட்டியவர்.

    http://www.inbaminge.com/t/allah/Nag...uslim%20Songs/

    'எல்லாமே நீதான்
    வல்லோனே அல்லா'

    பாடலை எவரால் மறக்க முடியும்?

    'சிந்தனையில் மேடை கட்டி
    கந்தனையே ஆட வைத்தேன்
    செந்தமிழில் சொல் எடுத்து
    எந்தனையே பாட வைத்தான்'

    என்று 'திருமலை தென்குமரி' திரைப்படத்தில் 'சீர்காழி'யுடன் சரளா இணைந்து பாடிய பாடல் மிகவும் பிரசித்தம். (இந்தப் பாடல் 'திருவருட்செல்வர்' படத்தில் இடம் பெற்றதாக பல இணைய தளங்கள் கூறும் கொடுமையை எங்கே போய் முட்டிக் கொண்டு அழ?!)

    சரளா இப்போது கோயமுத்தூர் ஆசிரமம் ஒன்றில் தன் மகளுடன் வசித்து வருகிறார். ஆசிரமத்தில் உள்ள பள்ளி, கல்லூரியில் ஸ்டோர் வைத்து நடத்தி வருகிறாராம். பிள்ளைகளுக்கு இசைப் பயிற்சியும் அளிக்கிறாராம்.

    சரளா பற்றிய அபூர்வ வீடியோவை இணையத்தில் தேடித் பிடித்தேன். அதில் சரளா வயதானவராக சிறிது நேரம் பேட்டி தருகிறார். ஆனால் அவர் தான் பாடிய பாடல்களைப் பாடிக் காட்டும் போது குரல் வளம் அப்படியே உள்ளது. மிகவும் எளிமையாக காணப் படுகிறார். பாவமாயும் பரிதாபமாயும் இருக்கிறது. சரளா பற்றிய அற்புத பொக்கிஷம் இந்த வீடியோ. அவசியம் பாருங்கள்.

    பாலா தொடரில் அவருடன் பாடிய இந்தப் பாடகியைப் பற்றி எனக்குத் தெரிந்ததை உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் பெருமையும், மகிழ்ச்சியும் கொள்கிறேன்.



    இப்போது தொடருக்கு மீண்டும் வந்து விடுவோம்.

    உடன் வருவார் தொடரின் நாயகர். குரல் ஜாலங்களின் மன்னர். மிக அழகான வெண்ணெய்க் குரலுடன். அப்படியே குரல் மெழுகாய் உருகும். மிக இளமையான, இதமான வெண்கலக் குரல். அண்ணன் தங்கை பாச உணர்வுகளை வெகு அழகாகப் பிரதிபலிப்பார். பாலசுப்ரமணியம் பாடிய வேல்முருகன் பாட்டு.

    வழக்கம் போல அம்சம். இனிமையைக் குழைத்துத் தந்து தன் முத்திரையை நிலைநாட்டும் அந்த அமர்க்களமான இடம் ஆழ்ந்து அனுபவிக்க வேண்டிய ஒன்று

    'அண்ணனுக்குப் பெண் பார்க்க-வரும்
    என் அண்ணியை என் கண் பார்க்க'

    என்று சரளா முடித்தவுடன் ஒரு ஹம்மிங் எடுப்பாரே இந்த பாலாடைப் பாடகர் பாலா! என்னத்தை சொல்ல!

    'ஹாஹா ஹா ஹா ஹா....என்று தொடர்ந்து 'ம்ஹூம் ம்....ம்' என்று ஒரு பிரளயமே நிகழ்த்துவாரே! உடம்பு அப்படியே சில்லிட்டுப் போகுமே! நாம் நார்மலுக்கு வர நாளாகுமே!

    பாலா! இந்த ஒரு ஹம்மிங் போதுமய்யா! நீ வேறெதுவும் பாடவே வேண்டாம். அடப் போய்யா!

    இதுவரை பாலாவின் பாடல்கள் பதின்மூன்று எழுதியிருக்கிறேன். சில பாடல்கள் ஒன்றையொன்று மிஞ்சும். எது டாப் என்று எழுதுவது சிரமம். இப்போதும் மாட்டிக் கொண்டேன்.

    இதுதான் டாப். இந்தப் பாடல்தான் டாப்.

    இந்த இன்பக் குழப்பத்தை இந்த இனிய குரலோன் அன்றி வேறு யார் தர முடியும்?

    இதற்கு மேல் வேண்டாம்.

    சொர்க்கத்தை அனுபவிக்கத் தயாராகுங்கள்.

    Last edited by vasudevan31355; 3rd May 2016 at 10:39 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. Likes Russellmai, chinnakkannan, madhu liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2622
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சரி! சரி! முறையாவும் ஒன்னு தந்துடறேன்.

    எங்களது சொந்தம் 'நடிகர் திலகம்' இல்லாமலா? அவருடனான எங்கள் 'சொந்தம் எப்போதும் தொடர்கதை'தானே!

    அது 'முடிவே இல்லாதது'. 'எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனியகதை' அவர் கதை. அவரை எங்களோடு சேர்த்த தெய்வம் எழுதிய அருமைக் கதை இது. அப்பாடா! மனம் குளிர்ந்தது.





    அவர் இல்லாமல் எங்களுக்கு ஒரு

    'சொந்தமுமில்லே! ஒரு பந்தமுமுல்லே'


    நடிகர் திலகமே தெய்வம்

  5. Likes Russellmai, chinnakkannan, madhu liked this post
  6. #2623
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    vis-a-vis Songs!!

    கேட்டது கிடைக்கும் நினைப்பது நடக்கும் .........



    நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை !!


  7. Likes Russellmai, chinnakkannan liked this post
  8. #2624
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    எதிரெதிர் கான்செப்டில் நாங்களெல்லாம் வாசு சார் கட்சியாக்கும். ஒரே பாட்டில் சொல்லிடுவோமில்லே..

    பாருங்க.. இல்லேன்னு ஆரம்பிச்சு ஆமாம்னு முடிக்கிறதை..

    இப்படி நிலையில்லாத மனசை வெச்சி காதலில் இறங்கினா என்ன ஆகுமோ.. இந்தக் காலக் காதல் மாதிரி ஆகிடுமோ...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. Likes Russellmai, chinnakkannan, madhu liked this post
  10. #2625
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    சி.செ.ஜி, ராகவ்ஜி, வாசு ஜி... செம தூள்.. எதிரெதிர் பாட்டுன்னு சொன்னதும் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து விட்டோமே !!

    ஒரே பாட்டில் எதிரெதிர் கான்செப்ட் வராப்பல நானும் ஒண்ணு போட்டுக்குறேன்.. இதுல முதல் வரி அப்படியேதான் இருக்கும். ஆனால் அந்த முதல் வரியில் கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில் எதிராக மாறிவிடும்..

    தேரேது சிலையேது திருநாள் ஏது ? தெய்வத்தையே மனிதரெல்லாம் மறந்தபோது என்று சொல்லும் நாயகி தேரேது சிலையேது திருநாள் ஏது ? தெய்வம் போல் மனிதரெல்லாம் மாறும்போது என்று உல்டாவாக்கிடுறாங்க.


  11. Thanks eehaiupehazij thanked for this post
  12. #2626
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    ம்ம்.. அப்புறம் ஒரே படத்திலிருந்து எதிரெதிர் பாடல்கள்

    காதோடுதான் நான் பாடுவேன் என்று எப்போதும் அருவியாய் ஆர்ப்பரிக்கும் ஈஸ்வரி



    நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேன் என்று எப்போதும் சாரல் மழையாய் நனைக்கும் சுசீலாம்மா



    போனஸாக... இப்படியாகத்தானே ஜெயந்திக்கு ஈஸ்வரியும், வாணிஸ்ரீக்கு சுசீலாவும் எதிர்ப்பாடல்கள் பாடிவிட்டு ஒன்றாகப் பாடும்போது குரலை எதிரெதிராக மாத்திக்கிட்டாங்க..


  13. #2627
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Blast from Past.

    1)சிந்துபைரவி.

    சிறு வயதில் ஒரு பாடலை கேட்டால் அப்படியே அசந்து நின்று உருகி ,அழுது கொண்டிருந்தாலும் ,நிறுத்தி கவனிப்பேனாம்.

    நாஸ்திக பேயான நான் ,ஒரு பக்தி பாடலில், பள்ளி நாட்களில் ,ஒரு பாடலில் மெய் மறந்து கடவுளை உணர்வேன்.அனைத்து விழாக்களிலும் நான் பாடும் முதன்மை பாடல் அது.

    ஒரு கல்யாண விழாவில் ,நாதஸ்வரம் வாசித்தவர் ஒரு திருப்புகழ் வாசிக்க ,பதினான்கு வயது சிறுவனான நான் அம்மாவிடம் ஒரு ஐந்து ரூபாய் கேட்டு வாங்கி அவர் காலடியில் கண்ணீருடன் வைத்தேன்.

    பிறகு ,ஸ்ரீநிவாசன் youth coir நண்பியான சுதா வெங்கட்ராமன் (இப்போது ரகுராமன்) ஒரு முறை ஒரு எம்.எல்.வீ பாடலை பாடும் போது ,என்னை மறந்து சிலையாக சமைந்தேன்.

    ஒரு ஆறாண்டுகள் கழித்து ,திருமணாகி ,முதல் மகன் இரண்டு வயதில் இருந்த போது ,கதறி கதறி இரு மணிகள் அழுது கொண்டிருந்த போது ,இசையை ஓரளவு தெரிந்து ,விஷயம் தெரிந்ததால் ஒரு பாடலை ,அவன் காதில் முணுமுணுத்தேன்.அப்படியே அழுகை ,நின்று குழந்தை முகத்தையே வெறித்தான்.

    நான் உங்களை மேளகர்த்தா,சம்பூர்ணம்,ஸ்வர பிரவாகம் என்றெல்லாம் technical ஆக சோதிக்க போவதில்லை.(ஏற்கெனெவே ரொம்ப புரியும் படி எழுதுவதாக நல்ல பெயர்).ராகங்கள் என்னளவில் ஏற்படுத்திய இசைவுகள்,அசைவுகள்,அலைவுகள் ,சுவடுகள், இவைதான்.

    சிந்து பைரவி ராகம் ஒரு துடிப்புடன், சோக மயமான உயிர்காதலுடன் ,பக்தியை குழைத்து இதயத்தில் வர்ணமாக தேய்த்தால் எப்படி இருக்கும் ? அப்படி பட்ட அற்புத என் ஊன் உயிருடன் கலந்த ,சினிமா இசையமைப்பாளர்களுக்கும் உகந்த ஒன்று.

    நான் குறிப்பிட்ட முதல் பாடல், என்னை யாரென்று எண்ணி எண்ணி .(பாலும் பழமும்)

    இரண்டாம் பாடல் சித்தமெல்லாம் எனக்கு சிவ மயமே(திருவருட்செல்வர்).

    சுதா பாடிய பாடல்- வெங்கடாசல நிலையம்.

    நான் என் மகனின் காதில் முணுமுணுத்தது-என்ன சத்தம் இந்த நேரம்(புன்னகை மன்னன்).

    என் மனம் கவர்ந்து என்னை கதற வைக்கும் பாடல் அன்னமிட்ட கைகளுக்கு(இரு மலர்கள்)

    புரிந்ததா சிந்து பைரவியின் சந்தம் என் சொந்தம் ?.

    2)சுப பந்துவராளி.


    மனதிற்குள் ஒரு வெறுமை அல்லது தோல்வி மனப்பான்மை.அதை உணர்ந்து மென்று கொண்டே, சிறிது நம்பிக்கை பெற வேண்டும். பிரிவை உணர்ந்து துக்க பட்டு ,சிறிதே ஆசுவாசமும் அடைய வேண்டும்.

    ஒரு மெல்லிய இழையில் ஓடும் மெலடி உன் உள்ளத்தின் நாண்களை வீணை மாதிரி மீட்ட வேண்டுமா?

    சிறு வயதில் tape recorder எல்லாம் பார்த்தேயிராத போது ,ஒரு பாடலை கேட்கும் போதெல்லாம் ,இரவு பதினோரு மணிக்கு மேல் ஊரடங்கிய பின் ,இந்த பாடலை கேட்டால் என்று மனம் ஏங்கும் .பின்னாளின் பீ .டெக் படிக்கும் போது ,மூன்றால் வருட ஹாஸ்டல் வாழ்க்கையில் அந்த கனவு நிறைவேறியது.

    அந்த பாடல்- உன்னை நான் சந்தித்தேன்.

    அப்படியே கண்களில் நீர் துளிர்க்க,அந்த நீரை வெளியே விடவே மனமின்றி கண்களை மூடி ,ட்ரான்ஸ் அனுபவம் பெற்றேன்.இதை மீறியா தியானம் எல்லாம்??

    இந்த ராகம் ,உன் உணர்வின் தன்மையை உணர்த்தி,ஆசுவாசமும் தந்து விடும். உண்மை நடப்பையும் மறைத்து மனதுக்கு திரையிடாமல்,அதே நேரம் மனதை அலை பாய செய்யாமல் ,மென்மையாய் திட படுத்தும்.பொய் நம்பிக்கை தராமலே.

    கேளுங்கள் இந்த ராகத்தின் கீழ்கண்ட அதிசய பாடல்களை....

    ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே-அவன்தான் மனிதன்.
    கேளடி கண்மணி பாடகன் சந்ததி-புது புது அர்த்தங்கள்.
    ராமன் எத்தனை ராமனடி- லட்சுமி கல்யாணம்.
    ஆயிரம் தாமரை மொட்டுக்களே- அலைகள் ஓய்வதில்லை.
    விழியோரத்து கனவோ இங்கு -ராஜ பார்வை.
    வைகறையில் வைகை கரையில் -பயணங்கள் முடிவதில்லை.

    இது ஒரு மேளகர்த்தா, சம்பூர்ண ராகம்.சப்த ஸ்வரங்களுடன்(ஆரோகணம் அவரோகணம்)

    குறிப்பாக ஆட்டுவித்தால், உன்னை நான் இரண்டும் இரவில் தனிமையில் கேளுங்கள்.கண்ணீருடன் ,கண் மூடுவீர்கள்.
    Last edited by Gopal.s; 8th May 2016 at 03:03 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  14. Thanks vasudevan31355 thanked for this post
    Likes madhu liked this post
  15. #2628
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    In Indian classical music, 'Sampūrṇa rāgas (संपूर्ण, Sanskrit for 'complete', also spelt as sampoorna) have all seven swaras in their scale. In general, the swaras in the Arohana and Avarohana strictly follow the ascending and descending scale as well. That is, they do not have vakra swara phrases (वक्र, meaning 'crooked').

    In Carnatic music, the Melakarta ragas are all sampurna ragas, but the converse is not true, i.e., all sampurna ragas are not Melakarta ragas. An example is Bhairavi raga in Carnatic music (different from the Bhairavi of Hindustani music). Some examples of Melakarta ragas are Mayamalavagowla, Todi, Sankarabharanam and Kharaharapriya.

    3)மாயா மாளவ கௌளை .

    நான் ஏற்கெனெவே கூறிய படி இந்த ராகத்தை technical ஆக அலச போவதில்லை.ஒரு ராகம் என்றால் என்னவென்றே தெரியாத பாமரனாக என்னிடம் அது ஏற்படுத்திய கிளர்ச்சிகளை,உணர்வுகளை விவரித்து ,அதற்கு பெயர் எனக்கே பிறகுதான் தெரிந்ததால்,இது ஒரு புது பாதையில் விவரணை. தொடரும் அன்பர்களுக்கு நன்றி.போரடித்தால் சொல்லுங்கள் .நிறுத்தி விட்டு உங்களோடு அரட்டையில் ஜாலியாக பங்கு பெறுகிறேன்.

    தமிழில் ஓடி கொண்டேயிருக்கும் பாடல்கள் சொற்பம். அப்படி ஒரு அற்புத பாடல் .இத்தனைக்கும் கதாநாயகர் விபத்தால் ஊனமுற்றிருப்பார்.உட்கார்ந்தே நாயகியின் சித்திரத்தை வரைய தலை படுவார்.அவளை சகுந்தலையாக வரித்து. பின்னழகி சகுந்தலையோ துள்ளி துள்ளி ஓடி நம் மனதை அலை பாய வைப்பார்.

    பார்த்த உடனே எனக்குள் அதிர்வை ஏற்படுத்திய ஒரு வித்தியாச படத்தில் இந்த பாடல். கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?

    உங்கள் மனதை மலர்ச்சியாக்கி ஜெட் வேகத்தில் ஓட செய்து இலகுவாக்கி ,காதல் உணர்வை ஊட்டி ,கேள்விகளையும் எழுப்பி பதிலும் தரும் இதத்தை இந்த ராகம் கொடுக்கும். எல்லா நேரமும்,காலமும் எப்போது இந்த ராகத்தை கேட்டாலும் மனம் வானில் பறக்கும்.

    மற்றொரு எனக்கு பிடித்த படத்தில் பிடித்த பாடல்.நாயகன் இடம் மாறியிருப்பான்.திடீரென ஸ்பெயின் மாடுபிடி விளையாட்டாய் ஒரு அற்புதமாக கோரியோ க்ராப் செய்யப்பட்ட துள்ளிசை. ராட்சச பாடகிக்கு ,எனக்கு பிடித்த பம்பிளிமாஸ் செக்ஸி பாம் ஒருத்தியின் காளை சண்டை ஆட்டம்.சிறு வயதில் நான் மிக ரசித்த படம்,மற்றும் பாடல்.சரிவிகிதத்தில் அனைத்தும் கொண்ட எங்கள் எம்.எஸ்.வீ சாரின் அழியா உற்சாக பாடல்.

    "துள்ளுவதோ இளமை"


    இப்படி ஒரு கிளாஸ் மற்றும் மாஸ் பாடலை தர முடிந்த ஒரு அற்புத ராகமே மாயா மாளவ கவுளை.

    என்னை கவர்ந்த மற்ற பாடல்கள்.

    நிலவே நீ இந்த சேதி சொல்லாயோ- அருண கிரி நாதர்.

    மதுர மரி கொழுந்து வாசம்-எங்க ஊரு பாட்டு காரன்.(போச்சு முரளி !!!)

    ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்-முள்ளும் மலரும்.

    காதல் கவிதைகள் படித்திடும் நேரம்-கோபுர வாசலிலே.

    மாசறு பொன்னே வருக- தேவர் மகன்.

    பூவ எடுத்து ஒரு மாலை-அம்மன் கோவில் கிழக்காலே.

    பூப்போலே உன் புன்னகையில் -கவரி மான்.

    சொல்லாயோ சோலை கிளி - அல்லி அர்ஜுனா .

    4)சாருகேசி .

    சிறிய வயதில், தாத்தா பெரிய கிராமபோன் வைத்து கொண்டு ,family தோசை சைசில் ரெகார்ட் போட்டு கேட்பார்.உச்ச ஸ்தாயியில் அலறும் அந்த குரல் என்னை ஒன்றும் கவரவில்லை.(அந்த கால cult சூப்பர் ஸ்டார் பாகவதர்).இன்று டி.எம்.எஸ் சில பாடல்கள் நீங்கலாக இதே உணர்வைத்தான் கொடுப்பார். கால,ரசனை மாற்றம்.ஆனாலும் ஒரு ஐந்து பாடல்களின் music content என்னை மிக கவரும்.அப்படி என்னை ஈர்த்த ஒன்றுதான் "மன்மத லீலையை வென்றார் உண்டோ?"

    என் சிவாஜி மன்ற முதிய நண்பர் (அவருக்கு அப்போது 50 வயது.நான் பதினொன்று),மன்றத்தில் உட்காரும்போதெல்லாம் இரண்டு பாடல்களை பாடுவார்.(மற்றதை இன்னொரு சந்தர்ப்பத்தில்)அதில் ஒன்றை எனது பள்ளி பாட்டு போட்டிக்கு என்னை தேற்றி முதல் பரிசு வாங்க செய்தார். அந்த பாடல் "வசந்த முல்லை போலே வந்து".

    நான் ,என் தங்கை உட்கார்ந்து லிஸ்ட் போட்டு பழைய பாடல்களை (பாண்டி பஜார் அருகே ஒரு கடை) டேப் செய்து கேட்போம்.(pre -recorded அலர்ஜி .நிறைய குப்பை சுமந்து வரும்).அப்போது எங்கள் லிஸ்டில் தவறாமல் முதலாக (இன்றும்தான்)இடம் பெரும் உன்னத அழியா இசை அதிசயம் "தூங்காத கண்ணென்று ஒன்று".

    இந்த ராகமும் மேளகர்த்தா சம்பூரணம்தான். ஒரு ராகம் மெல்லிய காதல் உணர்வை கிளர்ந்தெழ செய்து ,உங்கள் காதலியிடம் உங்கள் உணர்வை அமைதியாக சொன்ன பிறகு, ஒரு திருப்தியை தருமே ?அதை உணர்ந்திருக்கிறீர்களா? அந்த உணர்வுடன் ,இனிய தாலாட்டை கலந்து கண் மூடினால் வரும் பரம சுகத்தை இந்த ராகம் அனுபவிக்க வைக்கும்.

    இந்த ராகத்தில் எனது மற்ற தேர்வுகள்

    மலரே குறிஞ்சி மலரே -டாக்டர் சிவா.
    தூது செல்வதாரடி- சிங்கார வேலன்.
    முத்து குளிக்க- அனுபவி ராஜா அனுபவி.
    சின்ன தாயவள் தந்த-தளபதி.
    உதயா உதயா - உதயா.
    ஊரெங்கும் தேடினேன் - தேன் நிலவு.
    Last edited by Gopal.s; 8th May 2016 at 03:04 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  16. Thanks vasudevan31355 thanked for this post
    Likes madhu liked this post
  17. #2629
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    5)நட பைரவி.

    ஓங்காரத்துடன் முழக்கம் போல அப்படியே positive energy level கூடிய நிறைய பாடல்கள் வந்து கொண்டிருந்த காலம்.டி.எம்.எஸ். கொடி நாட்டி ,கோலோச்சி கொண்டிருந்த வசந்த காலம்.அப்போது ஒரு நடிகர் கை காலை ஒரே மாதிரி அசைத்து (ஆனால் கொஞ்சம் நடன பாங்கு கெடாமல்),cliched என்றாலும் ,விசையுறு பந்தினை போல அந்த முழக்கத்தின் வீறு கெடாமல்,பாமர மக்களின் நாயகனாக high energy உடன் அந்த பாடல்களுக்கு பரிமாணம் கொடுத்து கொண்டிருந்தார்.எனக்கு பிடித்த பாடல்களேயாயினும் எல்லாம் ஒரே பாணியாக தெரியும்.

    பிறகுதான் அதோ அந்த பறவை போல,நான் ஆணையிட்டால், கொடுத்ததெல்லாம் கொடுத்தான் என்று எம்.எஸ்.வீ.,டி.கே.ஆர் இணைவுக்கு தோதாக கை கொடுத்த ராகம் நட பைரவி என்ற மேளகர்த்தா ராகமே என்று புரிந்தது.

    open voice இல் பாடும்போது எழுச்சியையும்,ஹஸ்கி குரலில் பாடும் போது காம கிளர்ச்சியையும் மீட்ட கூடிய படு ஜனரஞ்சக ராகம் இது..இப்படி வீர எழுச்சியுடன் கூடிய நம்பிக்கையையும், erotic காதலின் மலர்ச்சியையும் ஒரு ராகம் கொண்டு வர முடியுமானால் தமிழர்களின் காதல்,மானம்,வீரம் என்ற அடிப்படைக்கு தோதான தமிழர்களின் ராகம்தானே?

    எனக்கு பிடித்த நட பைரவியின் மற்ற பாடல்கள்.

    நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான் -அன்பே வா.
    ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து- நினைத்ததை முடிப்பவன்.
    நினைக்க தெரிந்த மனமே- ஆனந்த ஜோதி.
    கொடியிலே மல்லிகை பூ - கடலோர கவிதைகள்.
    வெண்ணிலாவின் தேரிலேறி - டூயட்.
    வசீகரா என் நெஞ்சினிக்க - மின்னலே.
    மடை திறந்து ஆடும் நதியலை நான்- நிழல்கள்.
    புத்தம் புது காலை - அலைகள் ஓய்வதில்லை.
    ஒ பட்டர் பிளை - மீரா.
    என் இனிய பொன்னிலாவே -மூடுபனி
    கடவுள் அமைத்து வைத்த மேடை -அவள் ஒரு தொடர்கதை.
    ஆத்து மேட்டுலே ஒரு பாட்டு -கிராமத்து அத்தியாயம்.

    6)பாகேஸ்வரி(பாகேஸ்ரீ?)

    எனக்கு சிறு வயதில் ஒரு obsession உண்டு.(இன்றும்).நான் விரும்பும் பொருளையோ,ரசிக்கும் விஷயங்களையோ,நண்பிகளையோ இன்னொருவர் விரும்பினாலே பொத்து கொண்டு வரும்.அந்த ஒரு குறிப்பிட்ட பாடலில் எனக்கு அப்படி ஒரு மோகம். அந்த பாடலில் வேறு ஒருவன் துர்பாக்ய நிலையை உணர்த்த அதிகபட்சமாய் நிகழ்ந்திருக்க கூடிய சாத்திய கூறு ஒன்று அழகாக வரைய பட்டிருக்கும்.அந்த வைர வரிகள் "அமைதியில்லாத நேரத்திலே அந்த ஆண்டவன் எனையே படைத்து விட்டான்". இந்த பாடல் என்னவோ எனக்கே சொந்தம் என்று நினைத்து கொண்டாடி கொண்டிருந்தேன், இன்று எந்த டி.வீ யை பார்த்தாலும் தெரிகிறது தமிழ்நாடே இன்றும் கொண்டாடி களிக்கும் பாடல் என்று.

    என் மகன் ஒரு பாடலை கேட்டு பாடகருக்கு ரசிகனாகி ,எனக்கு அவரை தெரியும் என்று கண்டு,சென்னை வரும் போது நேரம் ஒதுக்கி என்னை கூட்டி அவரை பார்க்க ,அப்போது இடி படாத உட்லண்ட்ஸ் drive -in சென்றோம். பீ.பீ.எஸ் அவர்களை கண்டு சுமார் இரு மணிநேர அரட்டை.12 வயது பையனிடம் அந்த 80 வயது மனிதர் பேசிய குதூகல பேச்சு. (நிலவே என்னிடம் நெருங்காதே)

    பாக்யஸ்ரீ ராகத்தில் அமைந்த இப்பாடல் "ராமு" ராகம் என்றே குறிக்க படுவதாக எம்.எஸ்.வீ என்னிடம் குறிப்பிட்டார்.எல்லாமே சரியாக அமைந்த classic இன்று வரை தமிழறிந்த எந்த குடிமகன் எந்த வயதில் இருந்தாலும் ஈர்ப்பதில் அதிசயம் என்ன? இந்த ராகம் உங்கள் மனதில் உங்களாலேயே அறிய படாத இடத்தை போய் நிரப்பி ,வருடும் சுகத்தை வார்த்தைகளில் வர்ணிக்க இயலுமா?

    இந்த ராகத்தில் அமைந்த மற்ற பாடல்கள்.

    காணா இன்பம் கனிந்ததேனோ?- சபாஷ் மீனா.

    கலையே என் வாழ்க்கையை திசை மாற்றினாய்-மீண்ட சொர்க்கம்.

    பொன்னெழில் பூத்தது புது வானில்- கலங்கரை விளக்கம்.

    மழை வருது மழை வருது- ராஜா கைய வச்சா
    Last edited by Gopal.s; 4th May 2016 at 07:49 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  18. Thanks vasudevan31355 thanked for this post
    Likes madhu liked this post
  19. #2630
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    7)ஆபேரி(கர்நாடக பெயர்)/பீம்ப்ளாஸ் (ஹிந்துஸ்தானி )

    டி.எம்.எஸ் எவ்வளவுக்கெவ்வளவு நல்ல பாடல்களை தந்துள்ளாரோ ,அந்த அளவு சொதப்பியும் உள்ளார்.His voice is more enjoyable in Bass and baritone. high Octave(Tenor and counter tenor) with nasal tone is not at all bearable. His is a karvai not Birka sareeram and this is a limitation in some fine notes.

    ஆனால் எனக்கு பிடித்த ஒரு பாடலை கேட்கும் போது ,ஆரம்பத்தில் தொண்டையை உருட்டி ஒரு பிர்க்கா கொடுப்பார்..பிறகு பூ என்று சொல்லும் போதே கட கட உருட்டல்.அப்படியே தென்றல் என்னை தடவி கொஞ்சுவது போல அந்த பாடல் இதம்.நடித்த ,படமாக்கிய விதத்திலும் மந்த மாருதம் தவழும்.ஊட்டி வரை உங்களை கூட்டி போக போவதில்லை.பூமாலையில் ஓர் மல்லிகை இப்போதே தயார்.

    சகோதர ராகங்களான ஆபேரி ,பீம்ப்ளாஸ் ஒரே சாயல் கொண்ட கரகர ப்ரியா என்ற மேளகர்த்தா ராகத்தின் தத்து குழந்தை(மகாராஜன் உலகை ஆளாமல் போனது எனக்கு வருத்தமே.ஏன் கட் பண்ணினார்கள்?)

    இந்த ராகத்தின் வசீகரம் சொல்லி மாளாது. cheers சொல்லி கிளாஸ் இடிபடாமல்,மாலை வேளையில் பீச் காற்றை தனியாக அல்லது ஒத்த நண்பர்களுடன் அனுபவிக்கும் சுகத்தை இந்த ராகம் நமக்கு தரும்.

    என்னை கவர்ந்த மற்றவை.

    வாராய் நீ வாராய்- மந்திரி குமாரி.
    நாதம் என் ஜீவனே- காதல் ஓவியம்.
    தேவதை போலொரு- கோபுர வாசலிலே.
    கண்ணோடு காண்பதெல்லாம்-சரணம் மட்டும் ,பல்லவி வேறு.
    சிங்கார வேலனே தேவா- கொஞ்சும் சலங்கை.
    இசை தமிழ் நீ செய்த -திருவிளையாடல்.
    நாளை இந்த வேளை பார்த்து- உயர்ந்த மனிதன்.
    வசந்த கால கோலங்கள்-தியாகம்.
    ராக்கம்மா கைய தட்டு- தளபதி.

    8)சக்கரவாகம்.(கர்நாடக பெயர்)/ஆஹிர் பைரவ் (ஹிந்துஸ்தானி)

    தமிழ் இசை சக்ரவர்த்தி சீர்காழி அவர்களின் மறக்க முடியாத ,ஒவ்வொரு தமிழனின் நெஞ்சிலும் ஒரு உலக தமிழ் நடிகன் மரண மூச்சை நினைவுறுத்தி தொண்டையில் முள் உருள செய்யும் அதிசய பாடல்.ஆரம்பம் எங்கேயோ பாட்டை கொண்டு நிறுத்தும். சரணம் சரஸாங்கி சாயல் என்று டி.கே.ராமமூர்த்தி விளக்கினார்.அவர் போட்ட பாடலல்லவா? அந்த அபிமானம். (குறுக்கே ஒரு இசை அரசியல் வந்து நாம ஏம்பா பேசி போரடிக்கணும் ,ஜனங்க பாட்டை கேட்கட்டும் என்று வெட்ட கண்ணதாசன் விழாவில் அந்த அடக்க திலகத்தின் சாயம் வெளுத்தது) "உள்ளத்தில் நல்ல உள்ளம் " விட்டு கொடுத்து ஒதுங்கி நின்றது.(சொந்தமில்லை என்பதாலோ என்னவோ இந்த காவியம் மறு வெளியீட்டில் சக்கை போடு போட்டு விழா எடுக்கும் போது கேரளா வல்லிசை வேந்தர் ஒதுங்கியே நின்றார்.)

    சக்கரவாகம் ,ஆரம்பமே களை கட்டும் ரக ராகம்.உருக்கத்தை வார்த்து எடுத்து உருக வைத்து உலுக்கும்.இது ஒரு மேளகர்த்தா சம்பூரணமே .

    என்னை கவர்ந்த மற்றவை.

    மேகங்கள் என்னை தொட்டு போனதுண்டு-அமர்க்களம்.
    கற்பனைக்கு மேனி தந்து காற்சலங்கை-பாட்டும் பரதமும்.
    பிச்சாண்டி தனை கண்டு- கங்கா கௌரி.



    9)கல்யாணி .

    65 ஆவது மேளகர்த்தா ராகமான இது மெல்லிசைக்கு இசைவான classic ,semi classic,Gazhal ,melody,folk ,என்று எல்லா ரக பாடல்களுக்கும் தோது. மனோரஞ்சித மலர் போல காதலென்றால் காதல்,பாசமேன்றால் பாசம்,குதூகலமென்றால் குதூகலம் என்று இந்த ராகத்தின் plasticity சொல்லி மாளாது.தமிழில் அதிக பட்ச மெல்லிசை ,இந்த ராகத்தில்தான் வந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

    சிறு வயதில் ,நடிகர்திலகத்தின் பரம ரசிகரான எங்கள் அம்மா வழி தாத்தாவுடன் 1968 இல் இந்த படம் குடந்தை ஜுபிட்டர் திரையரங்கில் பார்த்தேன்.(எங்கள் குடும்பத்தில் அனைவருமே நடிகர்திலகத்தின் பக்தர்கள்).ஒரு அரச சபையில் நடன காட்சி. சரி. அந்த கால வழக்க படி நிரவல் காட்சி என்று அசுவாரஸ்யமாய் இருந்தேன்.(அப்போதெல்லாம் எவ்வளவு ரீல் என்று அடித்து கொள்வார்கள். ஒரு ரீல் கிட்டத்தட்ட 1000 அடி10 நிமிட படம்)ஆனால் பல திரை ஒன்றால் பின் ஒன்றாக விரிந்து ,ஒரு அற்புத நடன நடை. நடன மாதுவிடமிருந்து அல்ல. நடைக்கென்றே பிறந்த உலக நடிகனின் தாளத்தோடு இசைந்த சிருங்கார நடன நடை.இந்த பாடலை connoisseurs என்று சொல்ல படும் பல இசை மேதைகள் சிலாகித்து ,இதற்கு மேல் கல்யாணியில் என்ன சாதிக்க முடியும் என்று திரை இசை திலகத்தை போற்றி புகழ்ந்த பாடல் "மன்னவன் வந்தானடி தோழி".

    அண்ணன் தங்கை பாசமென்றாலே உருக்கம் நிறைந்த demonstrative பாணியில் அமைந்த போது ,ஸ்ரீதர் அழகாக நட்போடு தங்கை மனதை உணரும் மென்மையான அண்ணனை காட்டிய அற்புத பாடல். கசல் (gazal )பாணியில் இரட்டையர் இசையமைப்பில் ,தமிழில் வந்த பாடல்களிலேயே சிறந்தவைகளில் ஒன்றாக நான் சிலாகிக்கும் பாடல்."இந்த மன்றத்தில் ஓடி வரும்". இந்த இடத்தில் இரட்டையர்களின் மேதைமையை நான் புகழ்ந்தே ஆக வேண்டும். ராஜா இசையமைப்பில் ராகங்களை சுலபமாக இனம் காணலாம்.இரட்டையர் இணைவில் அது மிக கடினம்.தமிழின் மிக மிக சிறந்த பாடல்களின் பொற்காலம் என்றால் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இணைவில் 60 முதல் 65 வரையே.

    நாயகனை முழு படமும் ஊனமுற்றவராக சித்திரித்த ,நடிப்பில் இன்றும் எல்லோருக்கும் benchmark ஆக திகழும் பாக பிரிவினை படத்தில் (அடடா ,அந்த ஆரம்ப குதூகல நடனம்)இமேஜ் பாராது உலக நடிகன் எருமை ஏறிய folk wonder (வடக்கு சாயலில்)தாழையாம் பூ முடிச்சு.

    பாரதியின் ஜனரஞ்சக தெரிந்த பாடல்கள் பல இருக்க ,அவரின் படு வித்யாசமான தனி பாடலான ,இன்றைய பேரரசுகளுக்கு அன்றே விட்ட சவாலான பாடல் நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே..இதை தேர்வு செய்து இசையமைத்த ஞானிக்கு எனது ஆத்மார்த்த நன்றிகள்.

    இப்போது தெரிகிறதா இந்த ராகத்தின் வீச்சு.ஜனரஞ்சகம்.வித்தியாச range . அதுதான் கல்யாணி.

    இந்த ராகத்தில் மற்ற சுவையான பாடல்களில் சில.(அத்தனையும் லிஸ்ட் போட முடியாது.)

    துணிந்த பின் மனமே - தேவதாஸ்.
    சிந்தனை செய் மனமே- அம்பிகாபதி.
    முகத்தில் முகம் பார்க்கலாம்-தங்க பதுமை.
    அத்திக்காய் காய் காய்- பலே பாண்டியா.
    கண்ணன் வந்தான் -ராமு.
    அடி என்னடி ராக்கம்மா- பட்டிக்காடா பட்டணமா.
    இசை கேட்டால் புவி அசைந்தாடும்-தவ புதல்வன்.
    வெள்ளை புறாவொன்று- புது கவிதை.
    நதியிலாடும் பூ வனம்- காதல் ஓவியம்.
    ஜனனி ஜனனி- தாய் மூகாம்பிகை.
    அம்மா என்றழைக்காத- மன்னன்.
    சுந்தரி கண்ணால் ஒரு சேதி- தளபதி.
    உப்பு கருவாடு ஊற வைத்த சோறு-முதல்வன்.
    அவள் அப்படி ஒன்றும் அழகில்லை-அங்காடி தெரு.
    Last edited by Gopal.s; 4th May 2016 at 08:00 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  20. Thanks vasudevan31355 thanked for this post
    Likes madhu liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •