Page 258 of 337 FirstFirst ... 158208248256257258259260268308 ... LastLast
Results 2,571 to 2,580 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #2571
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    குழந்தை போல மனவளர்ச்சி குன்றிய, கள்ளம் கபடம் அறியாத, 'வெடுக் துடுக்' நாயகி சாவித்திரி மேல் ஊர் களங்கப்பழி சுமத்த, அந்தக் குழந்தையைப் பற்றி எல்லாம் அறிந்த 'நடிகர் திலகம்' மனம் ஒடிந்து, அதே சமயம் அந்தக் குழந்தைக்கு ஆதரவாக குரல் தருவதைப் பாருங்கள். //

    வாஸ்ஸூ..கொஞ்சம் லேட்டு தான்..பதிலிடுவதற்கு..பட்..வெகுளி வேற மனவளர்ச்சி குன்றியங்கறது வேறயோல்லியோ.. அந்தப் பொண்ணுக்கு வெகுளியான வெள்ளந்தியான சுபாவம்.. கட்டக் கடோசில எஸ் எஸ் ஆர் கிட்டக்க சீறுவார் பாருங்க நதி.. நானா இருந்தா அந்தாளைத் தேடிப் பிடிச்சு வெட்டிப் போட்டிருப்பேன்..உன்னைமாதிரி ஓடி வந்திருக்க மாட்டேன் என.. அது ஒரு வாவ் காட்சியோன்னோ.. அதே போல ஒல்லி ஒல்லி ஹைஹை விஜயாவையும் தன்னையும் சம்பந்தப் படுத்தி மற்றவர்கள் பேசுவதை எஸ் எஸ் ஆரிடம் பொங்குவது.. இன்னொரு வாவ்.. கடோசில்ல சாவித்ரியை அனாவசியமா சாகடித்திருக்க வேண்டாம் என்பது எனக்கு அந்தக்காலத்திலிருந்தே ஒரு எண்ணம்..

    பேஸிக்கா பார்த்தா அந்தப் பெரிய மனிதரோட பொண்ணு சரியில்லைன்னு ஊர் சொல்றதுக்கெல்லாம் பெம ரங்காராவ் வேதனைப்படறதும் சரியில்லைன்னு தான் படறது இப்போ.. ஆள்படை அம்பு இருக்கறச்சே எம் ஆர் ராதாவை ஆள் விட்டாவது அடிச்சுருக்கலாமில்லை அந்தப் பெரியவர்..

    ம்ம் மறுபடிஒருக்கா பாக்கணும்..

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2572
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    மதுண்ணா! ராகவேந்திரன் சார்,

    நீராட்டுத் தீராமல் தேரோட்டும் புஷ்பங்கள்
    பாராட்டிப் பேசட்டுமே
    மேலாகக் கிள்ளைகள் ஆராத்தித் தட்டோடு
    தாலாட்டுப் பாடட்டுமே.

    படம் வரும்போதோ, அதற்கு முன்னாலோ மேற்கண்ட வரிகளில் ஒரு வார்த்தை மாறி இருந்ததா? அது பற்றி சர்ச்சை எதுவும் எழுந்ததா? ரொம்ப நாள் சந்தேகம் எனக்கு. 'கண்மணி ராஜா'க்களாக உங்களை நினைத்துக் கேட்கிறேன். சந்தேகம் தீர்க்க. ப்ளீஸ்.
    எனக்குத் தெரிந்த வரை இந்தப் பாடலில் "போராட்டிப் பேசட்டுமே" என்று எஸ்.பி.பி.பாடியிருந்தார். அது பற்றிய சர்ச்சைகள் வெகு நாள் வரை நடந்து கொண்டுதான் இருந்தன. படம் ரிலீசானபோது நான் பார்க்கவில்லை. பல காலம் சென்று நான் பார்த்த சமயத்திலும் அது போராட்டி என்றுதான் இருந்தது. அந்த ஒரிஜினல் வெர்ஷன் இங்கே http://shakthi.fm/ta/album/show/d87d1c99. எப்போது மாற்றினார்கள் என்று தெரியவில்லை

    ஆடியோவில் போராட்டியவர் வீடியோ வெர்ஷனில் பாராட்டுகிறார்


  4. Likes Russellmai liked this post
  5. #2573
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    கடோசில்ல சாவித்ரியை அனாவசியமா சாகடித்திருக்க வேண்டாம் என்பது எனக்கு அந்தக்காலத்திலிருந்தே ஒரு எண்ணம்..
    எனக்கும் அதே எண்ணம்.. ( ந.தி. தாலி கட்டியதும் சாவித்திரி கண்ணைத் திறந்து சிரித்து அவர் கண்ணையும் துடைப்பார் என்று எதிர்பார்த்தபடி இருந்தேன் ) இப்படி ஒரு எண்ணத்தை எல்லார் மனசிலும் வரவழைத்ததுதான் படத்தின் வெற்றி.

  6. Likes chinnakkannan liked this post
  7. #2574
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //எனக்குத் தெரிந்த வரை இந்தப் பாடலில் "போராட்டிப் பேசட்டுமே" என்று எஸ்.பி.பி.பாடியிருந்தார்.//

    கரெக்டாகக் கண்டு பிடித்து விட்டீர்கள். கிரேட். அதை மனதில் வைத்துதான் சந்தேகம் கேட்டேன். தெளிவு படுத்தியதற்கு ஒரு 'ஓ'.

    இதே போல பி.பி.எஸ்.'பொன்னித் திருநாளி'ல், சுசீலாவுடனான ஓர் டூயட் பாடலில் 'வீசு தென்றலே வீசு வேட்கை (சரியா?) தீரவே வீசு' வார்த்தை தவறு செய்திருப்பார்தானே? அது பாடலாசிரியர் தவறா அல்லது பாடகர் தவறா என்று தெரியவில்லை.

    'பாடு கோகிலம் பாடு
    பாசமாக நீ பாடு'

    என்பதை

    'பாடு கோகிலம் பாடு
    பாட்டமாக நீ பாடு'

    என்று பாடியது போல ஞாபகம். ஒருவேளை நான்தான் தவறு செய்கிறேனா? உங்களுக்கு இது பற்றி தெரிந்தால் கூறவும். இல்லையென்றால் வேதாளம் விக்ரமாதித்தனிடம் சொன்னது போல ஆகி விடும்.

    அது போல

    'பணங்களை சேர்த்து பதுக்கி வைத்தால் அது மடமை'

    'நிச்சய'மாக இந்த வரி சரியா? 'பணங்கள்' என்று வருமா?
    நடிகர் திலகமே தெய்வம்

  8. #2575
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Telugu version of Sivagamiyin selvan- Direction S.S.Balan- My dear Uncle. But it is a mokkai version.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  9. #2576
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார்
    பாராட்டி போராட்டி... இதோடு சிலோன் ரேடியோ போராடியே விட்டது. ரிக்கார்டில் போராட்டி என்று தானிருக்கும். ஏதோ ஒரு அறிவிப்பாளர் புண்ணியவான் போனால் போகட்டும் என்று ஒரு சப்பைக்கட்டு விளக்கம் கூட கொடுத்தார். யார் ஞாபகமில்லை. வைக்கோல் போரை அவர்கள் ஆட்டும் போது அது எப்படி ஆடுகிறதோ அது போல மனம் காதல் வசப்பட்டவர்களை ஆட்டிப்பார்க்கும் என்று ஒரு விளக்கம். இதையறிந்தவுடன் படத்தில் மாற்றி விட்டார்கள். இசையமைப்பாளரின் கவனத்திற்கு இந்த விவாதம் போனவுடன் படத்தில் அவர்களே மாற்றி விட்டார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

    இதைப் போல பல பாடல்கள்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. Thanks vasudevan31355 thanked for this post
    Likes Russellmai, vasudevan31355 liked this post
  11. #2577
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வீசு தென்றலே வீசு பாட்டைப் பற்றியும் வேறு சில பாட்டுக்களைப் பற்றியும் கேட்டிருந்தீர்கள்.

    பி.பி.எஸ்.ஸாகட்டும், எஸ்.பி.பாலாவாகட்டும், ஜேசுதாஸாகட்டும்... தமிழ் உச்சரிப்பு என்பது சற்று யோசிக்கவேண்டிய விஷயம் தான். ஆனால் பாலாவைப் பொறுத்த மட்டில் துவக்க காலத்தில் சற்று தடுமாற்றம் இருந்திருந்தாலும் போகப் போகத் திருத்திக் கொண்டு அருமையாகப் பாடப் பழகி விட்டார். திருச்சி லோகநாதன், டி.எம்.எஸ்., சீர்காழி கோவிந்தராஜன் போன்ற பலரின் தாய்மொழி தமிழாக இருந்ததால் அவர்களின் உச்சரிப்பில் சிறிதும் பிழை இருக்காது. ஆனால் பி.பி.எஸ். அவர்களைப் பொறுத்த மட்டில் சில எழுத்துக்கள் தடுமாற்றமே. ல ர வாக மாறலாம். பல எழுத்துக்கள் துல்லியமாக உச்சரிக்கப்பட்டிருக்க மாட்டாது. இன்றும் அவற்றை கவனித்தால் தெரியும். ஜேசுதாஸ் கேட்கவே வேண்டாம். இதர மொழியைத் தாய் மொழியாய்க் கொண்டு தமிழில் மிகத் தெளிவாய் உச்சரித்துப் பாடக் கூடியவர்களில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவர்கள், ஜெயச்சந்திரனும் மலேசியா வாசுதேவனும் ஆவர்.

    பெண் பாடகியரைப் பொறுத்தமட்டில் உச்சரிப்பில் பிழை செய்வர்கள் அவ்வளவாக இல்லை.
    Last edited by RAGHAVENDRA; 2nd May 2016 at 07:58 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  12. Thanks vasudevan31355 thanked for this post
    Likes Russellmai, vasudevan31355 liked this post
  13. #2578
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    'பாடு கோகிலம் பாடு
    பாசமாக நீ பாடு'
    நல்லவேளை மோசமாக நீ பாடு என்று சொல்லாமல் விட்டார்களே..
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  14. Likes vasudevan31355 liked this post
  15. #2579
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்

    (நெடுந்தொடர்)

    53-ஆவது பதிவு

    'எதிர்பார்த்தேன்...உன்னை எதிர்பார்த்தேன்'



    நான் உங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கச் சொன்ன பாலா பாடல்.

    'அன்புச் சகோதர்கள்' படத்திலிருந்தே.

    மன்னிக்கவும். பாடல் வெகு சுமார்தான். டியூன் வறட்சி. மாகாதேவனுக்கே வெளிச்சம். 'சப்'பென்று ஒரு டூயட் பாடல். அருமையான பாலாவின் பாடல்களை இதுவரை பார்த்த நமக்கு இப்பாடல் ஒரு ஏமாற்றமே. சுரத்தே இல்லாமல் இருக்கும். போர். என்னைப் பொருத்தவரை சோடை போன சொத்தைப் பாடல். உங்களுக்கெப்படியோ?

    பாடலில் வீணையின் பங்கு அதிகம். வெளிப்புறப் படப்பிடிப்பு.



    நாயகி முன்னால் இரு கைகளையும் ஊன்றி புல்வெளியில் சாய்ந்திருக்க, அவளுக்கருகே பக்கவாட்டில் படுத்தவாறு அந்த கைகளுக்கு கீழே முகம் நுழைத்து, கீழிருந்தபடி அவள் முகத்தை பார்ப்பது ஜெய்சங்கருக்கு வாடிக்கை. நிறையப் படங்களில் இது போலச் செய்வார். (மேலே உள்ள படத்தை கவனிக்க) சில சமயங்களில் இவர் எங்கு பார்க்கிறார் என்பது நமக்கே குழப்பமாய் இருக்கும். 'ஜம்பு' பார்த்தவர்கள் இதை நன்றாக உணருவார்கள்.

    கவிழ்ந்து படுத்தபடி நிர்மலா தரையில் நீச்சல் அடித்தபடி இருப்பார். உட்கார்ந்த இடத்திலேயே காதலிக்கும் வேலையை கச்சிதமாக முடித்து விடுவார்கள் ஜெய்யும், நிர்மலாவும். பாடலின் நடுவில் வரும் ஹம்மிங் கூட அவ்வளவு சுகமில்லை.


    அப்போதைய காதல் பாடல்களில் 'மடல் விடும் வாழை' பெரும்பாலும் வராமல் போகாது. சின்னா! கவிதை வடிவில் அர்த்தமெல்லாம் கூறி விடாதீர்கள்.

    'படர்ந்திருக்க' என்பதை பாலா இன்னும் சரியாக முடித்திருக்கலாம். நிறைய தரம் கேட்க வைத்துவிட்டார். சரியா என்பது மது அண்ணா கையில் உள்ளது.

    கேமரா டிராலி ஒரு ரோஜாப் பூவைக் கவர் செய்து காதலர்களை 'தேமே' என்று தண்டமாகச் சுற்றிக் கொண்டிருக்கிறது.

    பாடல் முடியும்போது பாருங்கள். நிர்மலா ஏதோ கடமைக்கு படுத்திருக்கும் ஜெய் மீது சாய்ந்து அணைத்து அணைத்து எழுந்திருப்பார். இயக்குனரோ அல்லது நடன இயக்குனரோ சொல்லிக் கொடுத்ததை அப்படியே கிளிப் பிள்ளை போலச் செய்வார் நிர்மல்.

    ஒளிப்பதிவு 'பளிச்'தான். ஜெயசங்கரின் 'கருகரு' எண்ணெய் தடவிய முடி பொறாமைப்பட வைக்கும். நிர்மலா அஸ் யூஷுவல்.

    ஒன்றும் சொல்லிக் கொள்ள இயலாத பாடல். சுசீலாவின் தெள்ளத் தெளிவான உச்சரிப்பு பெரும் ஆறுதல்.

    எதிர்பார்த்து ஏமாந்த பாட்டு. பாட்டு பிடித்தவர்கள் என் மேல் கோபம் கொள்ளாமல் மன்னித்தருள்க.

    இதே பாலா பின்னாளில் இன்னொரு 'எதிர்பார்த்தேன்' பாடி அசத்தோ என்று அசத்தி எதிர்பார்த்ததற்கும் மேலாக தூள் கிளப்பியதை பின்னால் தொடரில் பார்க்கலாம்.

    இனி பாடல் வரிகள். உள்ளது உள்ளபடியே. (பாடல் வரிகள் பெரும்பாலும் 'க' வில் முடிவதை கவனிக்க)


    எதிர்பார்த்தேன்
    உன்னை எதிர்பார்த்தேன்
    சொல்லமுடியாத சேதி ஏதோ சொல்வதற்காக
    அதற்காக

    எதற்காக

    அதற்காக

    எதிர்பார்த்தேன்
    உன்னை எதிர்பார்த்தேன்
    சொல்லமுடியாத சேதி ஏதோ சொல்வதற்காக
    அதற்காக

    எதற்காக

    அதற்காக

    ம்ஹூம் ம்ஹூம் ம்ஹூம்

    பனித்துளி படுக்கும் பஞ்சணையாய்
    பசும்புல்வெளி இங்கே படர்ந்திருக்க
    பனித்துளி படுக்கும் பஞ்சணையாய்
    பசும்புல்வெளி இங்கே படர்ந்திருக்க

    காய் பழுத்திருக்கும் தாய் மடியாய்
    இளம் பூங்கொடி இங்கே பாய் விரிக்க
    காய் பழுத்திருக்கும் தாய் மடியாய்
    இளம் பூங்கொடி இங்கே பாய் விரிக்க

    உன் மடி வேண்டும் நான் படுக்க

    கண் உறக்கமில்லாமல் நான் துடிக்க

    எனக்குன் மடி வேண்டும் நான் படுக்க

    கண் உறக்கமில்லாமல் நான் துடிக்க

    அதற்கா...க

    எதிர்பார்த்தேன்

    ம்

    உன்னை எதிர்பார்த்தேன்
    சொல்லமுடியாத சேதி ஏதோ சொல்வதற்காக
    அதற்காக

    எதற்காக... ஆங்?

    அதற்காக

    ஆ............ ஆ

    மலைமுடி வானை அளந்திருக்க
    அதில் மழை முகில் வந்தே அமர்ந்திருக்க

    ம்ஹூம் ஹூம்.........ம்

    மலைமுடி வானை அளந்திருக்க
    அதில் மழை முகில் வந்தே அமர்ந்திருக்க

    குளிர்தரும் வாடை ஒளிந்திருக்க
    நல்ல மடல் விடும் வாழை இடம் கொடுக்க
    குளிர்தரும் வாடை ஒளிந்திருக்க
    நல்ல மடல் விடும் வாழை இடம் கொடுக்க

    ஒருவரையொருவர் மறைத்திருக்க

    அந்த உணர்வினில் உலகை மறந்திருக்க

    நாம் ஒருவரையொருவர் மறைத்திருக்க

    அந்த உணர்வினில் உலகை மறந்திருக்க

    அதற்கா....க

    எதிர்பார்த்தேன்

    ம்ஹூம்

    எதிர்பார்த்தேன்
    உன்னை எதிர்பார்த்தேன்
    சொல்லமுடியாத சேதி ஏதோ சொல்வதற்காக
    அதற்காக

    ம்ஹூம் ஹூம் ஹூம்

    ம்ஹூம் ஹூம் ஹூம்

    ம்ஹூம் ஹூ...ம் ஹூம்
    ம்ஹூம் ஹூம் ஹூம்


    Last edited by vasudevan31355; 2nd May 2016 at 09:10 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  16. Likes Russellmai, madhu liked this post
  17. #2580
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    வாசு ஜி..

    சில பாடல்களில் உச்சரிப்பு சரியாகக் கேட்காத காரணத்தால் சரியாகப் பாடி இருந்தாலும் கூட தவறான வார்த்தையாக காதில் விழ சான்ஸ் உண்டு. அந்த வகையில் சுசீலா, ஈஸ்வரி போன்றோரின் குரல் தெளிவால் பாட்டை பதிவு செய்கையில் ஏதேனும் காரணத்தால் தவறாக உச்சரித்திருந்தால் கூட அப்போதே கண்டுபிடித்து சரி செய்திருப்பார்கள்.

    பாலுவுக்கு கொடுத்த பாடல் வரிகளில் தவறு இருந்திருக்கலாம். போராட்டி என்பது தமிழ் வார்த்தையா இல்லையா என்பது பற்றி அவருக்குத் தெரிய நியாயமில்லை. அத்னால் எழுதிக் கொடுத்ததைப் பாடி இருப்பார். அல்லது அவர் தெலுங்கில் எழுதிப் படித்திருந்தாலும் தவறு நடந்திருக்க வாய்ப்பு உண்டு.

    அந்தமான் காதலியின் பாடல் "திருக்கோயிலா" அல்லது "தெருக்கோயிலா" என்று ஒரு ஆராய்ச்சி வெகு நாள் நடந்தது. ( எனக்கென்னவோ திருக்கோயில் என்று தான் கேட்கும்..).

    // அன்பு சகோதரர்கள் பாடல் நான் கேட்கவில்லை. முதல் முறை கேட்டதுமே மறந்து விட்டேன் //

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •