Page 234 of 337 FirstFirst ... 134184224232233234235236244284334 ... LastLast
Results 2,331 to 2,340 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #2331
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மதுண்ணா!

    படங்களில் இடம் பெறாத சுசீலாவின் பாடல்களை பட்டியல் போட்டுட்டீங்க ஜோராகவே. இதோ முன்பு நான் பதிந்த 'கண்ணழகின் சன்னதியில்'

    http://www.mayyam.com/talk/showthrea...990%3B/page324
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2332
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like


    இதில் 7 நிமிடம் சென்று 11 நிமிடம் வரை குதூகலம்.குமார் என்ற இசையமைப்பாளர் கொடுத்த இன்ப அதிர்ச்சிகளுக்கு கணக்கே இல்லை.1965 முதல் 1975 வரை தொடர்ந்தவற்றில் இந்த மாப்பிள்ளை அழைப்பும் வாலியுடன் அவர் கொடுத்த இன்ப அதிர்வே 1972 இன் மாப்பிள்ளை அழைப்பு..

    வழக்கொழிந்து போன ராகவன் ,ராட்சஷி இணைவில் இது ஒரு ஜாலி திருவிழா. நமது ஈஸ்வரி கடாத்ஷத்தில் அந்த ஹ , வ்வா வ்வா வ்வா வ்வா ,அடடா.....என்ன குழைவு....என்ன கொஞ்சல்.....என்ன ஜாலி இசை..... ராகவன் தனது அற்புதமான பாடும் முறையால் ஈஸ்வரியுடன் இழையும் -இணையும் அழகு.

    சராசரி காட்சி.நாகேஷிடம் இருந்து ஜூனியர் காஞ்சனா (என்னா சூடு,வீ.பா குழந்தை,உணர்ச்சிகள் உணர்ச்சி விதவை,கிண்ணத்தை ஏந்திய நம் குறுகிய கால அண்ணி)எதையோ எடுக்க ,தேங்காய் துணையுடன் நடிக்கும் சாதாரண காட்சி.

    மாப்பிள்ளை அழைப்பில் உள்ளத்தில் நூறு நினைக்கும் நாயகி நமது விஜயலலிதாவாக்கும்.காலம் வெல்லும் புகழ் மாதங்கன் கதை .வசனத்தில் ,நமது மருத நாட்டு வீரன் ரகுநாத் இயக்கம்.

    இந்த படத்துக்கு ரெண்டு பேர். பலே ஆனந்தன் என்று நினைக்கிறேன்.
    ஜாலி படம் ஹீரோ miscast ஆனதால் படு தோல்வி கண்டது.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  4. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355 liked this post
  5. #2333
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    ஹாய் வாஸ்ஸூ நீவிர் போட்ட பாட் ஏற்கெனவே போட்டாச் போட்டாச்சாக்கும்.. நெய்வேலி யானையும் மஸ்கட் பூனையிடம் சறுக்குமாக்கும்.. இருப்பினும் கோ வைக் கொஞ்சி தாங்கள் செய்த வர்ணனை யாமும் ரசித்தோம்.. நன்றி ந்றி றி...
    சின்னா!

    நீங்க தான் யானை. உங்க அவ்தாரை ஒருதரம் பாருங்கோ. பூனையாய் இருப்பதே பூலோகத்தில் சிறந்தது. அப்போதான் இருட்டில் திருட்டுத்தனம் பண்ண முடியுமாக்கும். ஐ மீன் பால் குடிப்பதை சொன்னேன். பசும்பால். ஒரு பாட்டை மறுதரம் போட்டா சறுக்கலா? அதற்க்கும் முன்னாடியே அதை நான் போட்டுட்டேங்காணும். அது எனக்கும், கோபாலுக்கும் மட்டுமே சொந்தம் என்று நாங்கள் சொல்லிக் கொள்வது. அந்தப் பதிவு அவருக்கு மட்டுமே. ராமு ராஜா நட்பு. ஆமா! அது என்ன? 'கோ'வைக் கொஞ்....சி..... ('நற நற நன்றி ந்றி றி' வேற) நான் எங்கேப்பா கொஞ்சினேன்? 'புதுப் புது அர்த்தங்கள்' நகம் கடிக்கும் கீதா கணக்கா பொசஸிவ் கிளம்பி பூந்து விளையாடுதே! நீர்தாம்பா எனக்கு சித்தாரா. கொஞ்சிக் கொஞ்சி அலைகள் ஆட....
    Last edited by vasudevan31355; 15th April 2016 at 11:23 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. Likes chinnakkannan liked this post
  7. #2334
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இதே எல்.காஞ்சனா அதே நாகேஷுக்கு தங்கையாக ஒரு படம் நடித்து 'ஸ்ரீ' யுடன் ஜோடி சேர்ந்து ஒரு அட்டகாசமான டூயட் அடித்தாரே. டூயட்டில் பாலா குரல் வருவதால், தொடர் பாதிக்கும் என்பதால் பாட்டி சொன்ன விடுகதையா... புதிரா சொல்றேன். புதிரை மதுண்ணா அவிழ்த்துடுவார்னு தெரியும். சின்னா கவிழ்த்திடுவார்னும் தெரியும்.
    நடிகர் திலகமே தெய்வம்

  8. Likes chinnakkannan liked this post
  9. #2335
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //புதுப் புது அர்த்தங்கள்' நகம் கடிக்கும் கீதா கணக்கா பொசஸிவ் கிளம்பி பூந்து விளையாடுதே! நீர்தாம்பா எனக்கு சித்தாரா. கொஞ்சிக் கொஞ்சி அலைகள் ஆட// கொஞ்சிக்கொஞ்சி அலைகள் ஆட (எனக்குப் பிடிக்காத ) ரோஜாவோன்னோ...” கோபாலுக்குத் தெரிந்த நல்லவர் நீர் மட்டும் தான்.. நீங்களும் சும்மா இல்லை..கோ சுடச்சுட பஜ்ஜி கொடுத்தாலும் அதை ஐஸ்க்ரீமா நினச்சு உருகுவீர்..” என்றெல்லாம் ஆன்றோர்கள் சொல்வார்கள் (ஆனா இப்பல்லாம் கோபால் முன்பை விட வெகு அழகாக பிரமாதமாக எழுதுகிறார் என்று நான் சொல்வதை ரசிக்காவிட்டாலும் அது அவருக்கே தெரியும்..இப்படியே தொடர்வார் என எதிர்பார்க் பார்க் க்கிறேன்.. ஹைய்யா கோச்சுண்டு ஒருமாசம் வரமாட்டாரே )

    உமக்குத்தான் உவமை சொல்லத்தெரியுமா..சலங்கை கட்டிக்கொண்டு ச்சும்மா சுழன்று சுழன்று ஆடிக்கொண்டே பானுப்ரியா மம்முட்டியிடம் அழகனில் சொல்வாரே..லவ் இஸ் நாட் பொஸாஸிவ்.. நு என்னமோ ஒரு தத்வம்..அந்த மாதிரி பொஸஸிவ்வா இருந்தா தப்பா. ஆனா நான் பொ..இல்லை.. நட்புல பொ இருக்கப்படாது..இருக்கவும் இருக்காது..இல்லியோ..ராமு ராஜா நட்பா.. ம்ம் பாவம் விழி..அடிக்கடி இமை கோச்சுக்குமே..

    எல்.காஞ்சனாவை இனிமே தான் பார்க்கணும்..

  10. Likes vasudevan31355 liked this post
  11. #2336
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    நன்றி எஸ்வி சார்..ம.தி படங்களில் இன்னும் விட்டுப்போன வராத பாடல்கள் இருக்கின்றதா..

    Quote Originally Posted by esvee View Post
    சின்ன கண்ணன் சார்
    உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்காக பதிவு செய்ய பட்ட சுசீலாவின் பாடல் படத்தில் இடம் பெறவில்லை .நினைத்ததை முடிப்பவன் படத்திற்காக பதிவு செய்யப்பட்ட சுசீலாவின் பாடல் ஒன்று படத்தில் இடம் பெறவில்லை .

  12. Likes Richardsof liked this post
  13. #2337
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //கோபாலுக்குத் தெரிந்த நல்லவர் நீர் மட்டும் தான்//

    கோபாலுக்குத் தெரியாத கெட்டவனும் நான்தான்
    நடிகர் திலகமே தெய்வம்

  14. #2338
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    //
    எல்.காஞ்சனாவை இனிமே தான் பார்க்கணும்..
    இதுக்கு மட்டும் ஸ்மைல் எப்படி வருதுன்னே புரியலையே!
    நடிகர் திலகமே தெய்வம்

  15. Likes chinnakkannan liked this post
  16. #2339
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'அவளுக்கென்று ஓர் மனம்' அடுத்து ஸ்ரீதருக்கு 'அலைகளா'ய் தோல்வி. முன்னதை விட தோல்வி. சொல்ல முடியாத அளவுக்கு அலைஅலையாய் அடுக்கடுக்காய் துன்பங்களை ஸ்ரீதர் நாயகி இதிலும் அனுபவிக்க, அநியாய தோல்வி கிடைத்தது மீண்டும் ஸ்ரீதருக்கு.



    விஷ்ணு ஜெயச்சந்திரன் மூலம் 'சந்திரகலா' சுவைத்து 'பொன்னென்ன பூவென்ன கண்ணே'வை வைத்த போது 'அலைகளி'ல் அது மட்டுமே நம் கண்ணாடி உள்ளத்தில் அழியா பிம்பமாய் இன்றும் பிரதிபலிக்கிறது.

    முன்னது பாடல்களில் மணிமகுடம் தரித்தது. சுசீலா, ஜானகி அவரவர்களுக்கென்று நம் மனதில் மீண்டும் ஓர் இடத்தைப் பிடித்தார்கள்.

    ஆனால் 'அலைகளி'ல் ராட்சஸி பிரளய சுனாமி நடத்துவர். ஆனால் சுனாமி எடுபடாமல் அடங்கிவிட்டது. பிரபலம் ஆகாவிட்டால் என்ன! நம்மில் சிலர் இருக்கிறோமே அந்த அபூர்வ முத்துக்களைப் பொறுக்கி ரசிப்பதற்கு. அது போதும்.

    'பச்சை இலை போலே பட்டுச் சிறகாலே
    ஆகாயம் செல்லும் பறவைகளே!
    உச்சிவரை பறந்து பூமியை மறந்து
    ஊர்வலம் நடத்திடும் அழகுகளே!
    அச்சம் என்பதில்லையே!
    ஆசை கொண்டதில்லையே!
    என்றும் உங்கள் வாழ்வில் விடுதலையே!'

    என்று உல்லாச குதூகலமிட்டு காதுகளுக்கு அமுதூட்டும் ஈஸ்வரியை மிஞ்ச யார்? எழுபத்து மூன்றோடு மறந்து விட்ட பாடல். ஆனால் எந்நாளும் நான் கேட்டு கேட்டு இன்புறும் பாடல். 'பிராப்த'த்தின் 'சலசல ஆத்தோட்ட'மும் நினைவுக்கு வந்து போகும். இதுவும் சந்திரகலாவே.

    ஜானகியும் அழ வைப்பார் அபூர்வமாக.

    'ஊமைப் பெண்ணை பேசச் சொன்ன உறவோ...
    இது நினைவோ... வெறுங்கனவோ'

    கேட்கையில் வெறுமையில் நம் மனம் வெதும்புவதை உணர முடியும். மனதில் இனம் புரியா பாரங்கள் வந்து அழுத்தும். கண்களில் நீர் மல்கும்.

    'கானல் சிலர் கண்ணில் நீராகத் தெரியும்
    காணும் கண் செய்த தவறு'

    முடிந்தவுடன் வரும் புல்லாங்குழலின் அவசர ஓசைகள் அநியாய அதிசயம். 'நெஞ்சிருக்கும் வரை' நினைவிருக்கும் ஒற்றுமையும்.

    'இது நினைவோ... வெறுங்கனவோ' வருகையில் மனம் உருகாமல் இராது.

    'வாங்கையா..பேரெடுக்க' ராவடி பாட்டு. சுமார் ரகம் 'வாத்தியாரே'. அரங்கேற்றம்...வாயாடி பாணி.

    'அவளுக்கென்று ஓர் மனம்' போல பாடல்கள் அமையாவிட்டாலும் 'அலைகளு'க்கென்று தனி ரசனை மனங்கள் உண்டு. அதிலொன்று இந்த மனம்.

    இன்று கேட்டு கொஞ்சம் அப்செட்தான்.

    நான்கு அலைகளுக்கும்

    http://www.friendstamilmp3.com/index...&spage=Alaigal
    Last edited by vasudevan31355; 17th April 2016 at 09:42 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  17. Likes Russellmai, chinnakkannan liked this post
  18. #2340
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி!

    எனக்கு மிகவும் பிடித்த பழைய திரைப்படப் பாடல்களிலொன்று 'ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி'. எம்.எஸ்.வி/ டி.கே.ராமமூர்த்தி ஆகியோரின் இசையில் எஸ்.ஜானகியின் நெஞ்சையள்ளும் குரலில் ஒலிக்கும் இந்தப் பாடல் எம்ஜிஆர்/சரோஜாதேவி இணைந்து நடித்த 'பாசம்' திரைப்படத்தில் வருகிறது.

    டி.ராமண்ணாவின் இயக்கத்தில் எம்ஜிஆர் திருடனாக நடித்திருப்பார். அத்திருடனைக் காதலிக்கும் நாயகியாக வரும் சரோஜாதேவி மாட்டு வண்டியில் மேற்படி பாடலைப் பாடியபடி வருவார். திருடனைக் காதலிக்கும் நாயகி தன் காதலைப் கூறும் பாங்கு சுவையானது. ஒரு திருடனின் வாழ்வுடன் சம்பந்தப்பட்டிருக்கும் விடயங்களைக் கொண்டே கவிஞர் இப்பாடலை இயற்றியிருப்பார். காட்டில் நாயகியைக் கண்ட திருடனான நாயகன் தன் இயல்பின்படி அவளிடன் உள்ளதைக் கொடு என்று வற்புறுத்தவே நாயகியோ கையில் எதுவும் இல்லாத காரணத்தால் தன் கண்ணில் உள்ளதைக் கொடுத்து விட்டேன் என்று பின்வருமாறு பாடுகின்றாள்.

    காட்டில் ஒருவன் எனைக் கண்டான்
    கையில் உள்ளதை கொடு என்றான்
    கையில் எதுவும் இல்லை என்றே
    கண்ணில் உள்ளதை கொடுத்து விட்டேன்

    அது மட்டுமா திருட வந்த அவனைத் தானே திருடி விட்டதாகவும் கூறுகின்றாள். நாயகிக்கோ திருடுவதில் நாயகனைப்போல் பரிட்சயமில்லை. இதுதான் அவளது முதல் திருட்டு. முதல் திருட்டு என்பதால் அவளுக்குப் போதிய அனுபவமில்லை. அதனால் அவனை அவளால் முழுவதுமாகத் திருட முடியாமல் போய் விட்டதாம்.

    அவன்தான் திருடன் என்றிருந்தேன்.
    அவனை நானும் திருடிவிட்டேன்
    முதல் முதல் திருடும் காரணத்தால்
    முழுதாய் திருட மறந்துவிட்டேன்

    அத்துடன் அவன் மேல் காதல் கொண்ட நாயகி தன் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட அந்தத் திருடனைக் கைது செய்து தன் உள்ளத்துச் சிறையினில் வைக்கப்போவதாகவும் அதிலிருந்து அவனை என்றுமே விடுதலை செய்யப்போவதில்லையென்றும், இவ்விதம் அவனைக் கைது செய்து ஆயுள் தண்டனைக் கைதியாகச் சிறையினுள் வைப்பதற்குத் தான் ஒருபோதும் விளக்கம் கூறப்போவதில்லையென்றும் கூறுகின்றாள்:

    இன்றே அவனை கைது செய்வேன்
    என்றும் சிறையில் வைத்திருப்பேன்
    விளக்கம் சொல்லவும் முடியாது
    விடுதலை என்பதும் கிடையாது

    ஒரு திருடனைக் காதலிக்கும் நாயகியென்பதால், திருடனுடன் சம்பந்தப்பட்ட திருட்டு, சிறை, கைதி, விடுதலை போன்ற சொற்களை வைத்தே பாடலை இயற்றிய கவிஞரின் சொல்நயம் என்னைக் கவர்ந்தது. அத்துடன் மெல்லிசை மன்னர்களின் இசையும், எஸ்,ஜானகியின் குரலும் மேற்படி பாடல் என்னைக் கவர்வதற்கு மேலதிகக் காரணங்கள். அத்துடன் கன்னடத்துப் பைங்கிளியின் காதல் ததும்பும் குறும்புடன் கூடிய நடிப்பையும் தவிர்ப்பதற்கில்லை.

    எத்தனை தடவைகள் கேட்டாலும் ஜானகியின் உள்ளத்தைக் கவரும் அந்தக் குரல் என் உள்ளத்தைத் திருடத் தயங்குவதில்லை. அவ்விதம் என் உள்ளத்தைத் திருடிவிடும் இந்தக் குரலுக்கும் என்றுமே என் உள்ளத்திலிருந்தும் விடுதலை கிடையாது. நீங்களும் ஒருமுறை கேட்டுப்பாருங்கள். உங்கள் உள்ளங்களையும் திருடிவிடுமிந்தப் பாடல். அதன்பின் உங்கள் உள்ளங்களிலிருந்தும் என்றுமே இந்தப் பாடலுக்கு விடுதலை கிடைக்கப்போவதில்லை.

    courtesy - giridharan.net

  19. Likes Russellmai, vasudevan31355 liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •