Page 220 of 337 FirstFirst ... 120170210218219220221222230270320 ... LastLast
Results 2,191 to 2,200 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #2191
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like

  2. Likes chinnakkannan, Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #2192
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like

  5. Likes chinnakkannan, Russellmai liked this post
  6. #2193
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like

  7. Likes chinnakkannan, Russellmai liked this post
  8. #2194
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    சி.செ ஷீலுவோட பாட்ஸ்க்கு நன்றி.. தெளியக் கூடிய பித்தமா அது.. ம்ம் தாங்க்ஸூ ஈவ்னிங்க் கேட்கிறேன்..

    ஆஷா ஃபரேக் பாடலுக்கு நன்றி.. நல் பாட் தாங்க்ஸ்..

    //இன்று நாள் முழுதும் இப்பாடலில்தான் ஓடப் போகிறது. // எனக்கும் வாசு..ஆனால் கேட்காமலேயே காதுகளில் கேட்கப் போகிறது

    அருண் எஸ்.வாசுதேவன்..கொஞ்சம் கண்ணாடியைக் கழற்றி விட்டு போடுகிற சூப்பர் பாட்டுக்களுக்கெல்லாம் ஒரு வரி இருவரி கமெண்ட் தரலாமே..

  9. #2195
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //அடுத்து சரோஜாதேவி தன் தக்காளி உதடுகளைத் தடவியபடியே சுசீலாம்மா குரலில்....

    'செவ்விதழோரம் பழச்சாறு............ ஈ .ஈ .ஈ .ஈ ஈஹூ ஹூ (அப்படியே சிதார் அடுத்து அழகாக இடம் பிடித்துக் கொள்ளும் )
    சேர்த்து வைத்தேனே சுவை பாரு.... ஈ .ஈ .ஈ .ஈ ஈஹூ ஹூ (சுசீலாவும் அதிர்வுகளில் அதிசயக்க வைப்பார்). // ப்ளாக் அண்ட் ஒய்ட்ல தக்காளி உதடுன்னு கற்பனை பண்ணீங்க பாருங்க நீங்க க்விஞர்

    அதென்ன பஞ்சணைன்னா சின்னா நினைவா..ம்ம்

    செந்தில் சார் சந்தோஷமா வா.. அவர் சம்பகனி ஓப்பன் பண்ணிட்டதா கேள்வி.. (champagne ஓய்.. மேஜர் பாணியில்.. ஷாம்ப்பெய்ன் ஓய் )

    காலீல காலீல குழப்பம் வருது..ஆனா இன்னிக்கு சுதாரிச்சுட்டேன்.. ஆஷா ஃபரேக்னவுடனே ஆராதனா பாட் நினைவுக்கு வந்துச்சா.. அதுல ஆஷா ஃபரேக்னு நினச்சேனா.. அப்புறம் போய்ப் பார்த்து எனக்கு நானே அசடு வழிஞ்சுட்டேன்.. அது ஃபரீதா ஜலால்.. (பாஹர் மே பஹார் ஹை..) பிற்காலப் போட்டோ பக்கெட் வந்துச்சுன்னா நான் விம்மி விம்மி அழுவேனாக்கும்



    பட் இதுவும் நல்ல பாட் தான் இல்லை..

  10. Likes eehaiupehazij, vasudevan31355 liked this post
  11. #2196
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    (வாட்ஸ் அப்பில் படித்தது.
    ஆடை இதுவென
    நிலவினை எடுக்கும்

    இதற்கு அர்த்தம் தெரியாமல் மெட்டைமட்டும் ரசிப்பதுண்டு.
    என்னடா இது!
    அர்த்தம் தெரியாமல் என்ன வரிகள் இவை என்று கூட நினைப்பதுண்டு.ஆனால் இதைப்படித்த பின் பிரமிப்புதான்.)


    படம்: எங்கள் தங்க ராஜா
    பாடல்: இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை
    எழுதியவர்: கண்ணதாசன்
    இசை: கே. வி. மஹாதேவன்
    பாடியவர்கள்: டி. எம். சௌந்தர்ராஜன், பி. சுசீலா

    ஆடை இதுவென நிலவினை எடுக்கும், ஆனந்த மயக்கம்!

    அம்மா குளிர்! என ஒன்றினை ஒன்று அணைப்பது பழக்கம்,

    காலை நேரத்தில் காயங்கள் பார்த்து, களிப்பதென்பதே கவிதையின் விளக்கம்!

    கவிஞர் சொன்னது கொஞ்சம், இனிமேல் காணப்போவது மஞ்சம்!

    ஒரு கவிஞர் தன் பாடலிலேயே தன்னை ஒரு பாத்திரமாக்குவது நுட்பம், அதில் தன்னைத் தானே கேலி செய்துகொண்டு, அதன்மூலம் தன்னுடைய கதாபாத்திரங்களை ஒரு படி மேலேற்றி நிறுத்துவது, இன்னும் அதிநுட்பம்.

    இதற்குச் சிறந்த உதாரணம், இந்த வரிகள்.

    இந்தப் பாடலைப் பாடும் ஜோடிக்குத் திருமணம் நிச்சயமாகியுள்ளது, அதை நினைத்து அவர்கள் ஆனந்தமாக ஆடிப் பாடுவதாகக் காட்சி அமைப்பு.

    ஆனால் கவிஞரோ, வேண்டுமென்றே குறும்பாகச் சில அந்தரங்கக் காட்சிகளைப் பட்டியல் போடுகிறார். அவற்றை ஒவ்வொன்றாக ரசிப்போம்.

    முதலில், அவனும் அவளும் கூடிக் களிக்கிறார்கள், அந்தச் சந்தோஷத்துக்கு நாம் இடைஞ்சலாக இருக்கவேண்டாமே என்று ஆடைகள் விடைபெற்றுக்கொள்கின்றன.

    கூடல் முடிந்ததும் தூக்கம் வருகிறது. ஒருவரை ஒருவர் அணைத்தபடி உறங்கிவிடுகிறார்கள்.

    சிறிது நேரம் கழித்து, அவளுக்கு விழிப்பு வருகிறது. எழுந்து உட்கார்கிறாள். அப்போதுதான், தன் உடலில் ஆடைகளே இல்லை என்பதை உணர்கிறாள். வெட்கப்படுகிறாள். சட்டென்று சுற்றிலும் தேடிக் கீழே இருக்கும் வெள்ளை ஆடையை அவசரமாகக் கை நீட்டி எடுக்கிறாள்.

    ம்ஹூம், ஆடை கையோடு வரவில்லை. என்ன ஆயிற்று?

    அட! அது ஆடையே இல்லை. அவர்கள் இருக்கும் ஜன்னலின் வழியே வந்த நிலா வெளிச்சம் தரையில் விழுந்து கிடக்கிறது. காதல் மயக்கத்தில் அதைத் தன்னுடைய உடை என்று நினைத்துவிட்டாள் அவள்.

    என்ன? கண்ணதாசனின் அழகான கற்பனையை நினைத்துக் கிறங்குகிறீர்களா? பாராட்டவேண்டும் என்று தோன்றுகிறதா?

    ஒருவேளை நீங்கள் பாராட்டினாலும், அவர் அந்தப் பாராட்டை ஏற்றுக்கொள்ளமாட்டார். அதன்மீது Redirected To : ஜெயங்கொண்டார் என்று எழுதி அனுப்பிவிடுவார்.

    காரணம், ஜெயங்கொண்டார் எழுதிய கலிங்கத்துப் பரணியில் வரும் கற்பனை இது. கண்ணதாசன் அதைப் பொருத்தமாக இந்தப் பாடலில் பயன்படுத்தியிருக்கிறார்:

    கலவிக் களியின் மயக்கத்தால்
    கலை போய், அகலக் கலைமதியின்
    நிலவைத் துகில் என்று எடுத்து உடுப்பீர்!

    அடுத்த வரிகளிலும் இதேபோல் ரசமான கற்பனைகள்தாம்.
    இருக்கவே இருக்கிறது, குளிர். லேசாகக் காற்று வீசினாலும், அச்சச்சோ குளிர்! என்று பதறி, ஜோடியை அணைத்து கொள்கிறார்கள், அவன் உடலில் இவளும், இவள் உடலில் அவனும் குளிர் காய்கிறார்கள்.

    மறுநாள் காலை, அவர்கள் தூங்கி எழுகிறார்கள். கன்னத்தில் நகக்குறிகளும் பல் பதித்த காயமும் இருக்கிறது. அந்தக் காதல் அடையாளங்களைப் பார்த்து ரகசியமாகச் சிரித்துக்கொள்கிறார்கள்.

    இந்தக் காட்சிகளையெல்லாம் விளக்கிவிட்டு, நிறைவு வரியில் கண்ணதாசன் ஒரு பஞ்ச் வைக்கிறார், ஜெயங்கொண்டாரும், நானும், இன்னும் பல கவிஞர்களும் இப்படிப் பலவிதமான அந்தரங்கக் காட்சிகளைக் கற்பனை செய்து சொல்லியிருக்கிறார்கள், ஆனால் அதெல்லாம் கொஞ்சம்தான், இனிமேல் எங்களுடைய மஞ்சம் காணப்போகும் ஆசைக் காட்சிகள்தான் நிறைய!

    கண்ணதாசனின் கற்பனைத் திறன், உத்தித் திறனுக்குச் சாட்சி இப்பாடல்.

    இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை
    இதயத்தில் விழுந்தது திருமண மாலை
    உறவுக்கும் உரிமைக்கும் பிறந்தது நேரம்
    உலகம் நமக்கினி ஆனந்த கோலம்
    இருவர் என்பதே இல்லை இனி நாம்
    ஒருவர் என்பதே உண்மை
    இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை
    இதயத்தில் விழுந்தது திருமண மாலை
    உறவுக்கும் உரிமைக்கும் பிறந்தது நேரம்
    உலகம் நமக்கினி ஆனந்த கோலம்
    இருவர் என்பதே இல்லை இனி நாம்
    ஒருவர் என்பதே உண்மை
    ம்ம் இருவர் என்பது இல்லை இனி நாம்
    ஒருவர் என்பதே உண்மை..

    பாதி கண்ணை மூடி திறந்து பார்ப்பதில் இன்பம்
    பாதி தூக்கத்தில் கூந்தலை தடவி ரசிப்பதில் இன்பம்
    ஆ..ஆ..ஆ..பாதி கண்ணை மூடி திறந்து பார்ப்பதில் இன்பம்
    பாதி தூக்கத்தில் கூந்தலை தடவி ரசிப்பதில் இன்பம்
    பாதி பாதியாய் இருவரும் மாறி
    பழகும் வித்தையே பள்ளியில் இன்பம்
    காலை என்பதே துன்பம் இனிமேல்
    மாலை ஒன்று தான் இன்பம்
    காலை என்பதே துன்பம் இனிமேல்
    மாலை ஒன்று தான் இன்பம்

    . இரவுக்கும் பகலுக்கும் .

    ஆடை எதுவென நிலவினை எடுக்கும் ஆனந்த மயக்கம்
    அம்மா குளிரென ஒன்றினை ஒன்று அணைப்பது பழக்கம்
    ஆ,,ஆ,,ஆடை எதுவென நிலவினை எடுக்கும் ஆனந்த மயக்கம்
    அம்மா குளிரென ஒன்றினை ஒன்று அணைப்பது பழக்கம்
    காலை நேரத்தில் காயங்கள் பார்த்து
    தவிப்பதென்பது கவிதையின் விளக்கம்
    கவிஞர் சொன்னது கொஞ்சம் இனிமேல்
    காணப்போவது மஞ்சம்
    ம்ம்..ம்ம்..கவிஞர் சொன்னது கொஞ்சம் இனிமேல்
    காணப்போவது மஞ்சம்

    .. இரவுக்கும் பகலுக்கும்..



    🎵🎵🎵🎵🎵🎵🎵🎵

  12. #2197
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Mr CK


    I do not want spoil your mood when you see Devika by writing any remarks before the song. YOU HAVE TO SEE ONLY

    DEVIKA.



    Regards

  13. #2198
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //I do not want spoil your mood when you see Devika by writing any remarks before the song. YOU HAVE TO SEE ONLY

    DEVIKA.// தாங்க்யூ எஸ்.வாசுதேவன் ஜி அர்ஜூனன் மாதிரி இலை தெரிகிறதா இல்லை கிளை தெரிகிறதா இல்லை மரம் தெரிகிறதா இல்லை..ஒன்லி கிளி தெரிகிறது..

  14. #2199
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    செந்தில்வேல் ஜி.. சின்னக் கண்ணாவோட ட்ரீட்மெண்ட் இந்தப் பாட்டுக்கு (கலிங்கத்துப் பரணியை டச் பண்ணலை ஏன்னா நிறையப் பேர் எழுதிட்டாங்க)

    18.08.14 மதுர கானங்கள் 2ம் பாகத்திலிருந்து மீள் பதிவு..ஓகேயான்னு சொல்லுங்க

    **
    ஆதெள கீர்த்தனாரம்பத்திலே..

    ம்ம் வெளியில் அவ்வளவா வெயில் இல்லை..இருப்பினும் சூடு..உள்ளே உணவருந்தும் மதிய நேரம்..அதனால என்னன்னாக்க.. நான் சந்திரனை நினச்சேன்.. யூ நோ..இந்த நிலா இருக்கே நிலான்னு சொன்னா தான் நிலாவாம்.. நிலாவை மதின்னும் சொல்லலாம்..ஆனா நிலவுன்னு சொல்லப் படாதாம் (குழப்பறேனா. இருக்கலாம்..இன்னும் லஞ்ச் சாப்பிடலை)..

    நிலவு என்றால் மதியில் இருந்து வருகின்ற கிரணங்கள் .. நிலாவெளிச்சம்னு சிம்ப்பிளா புரிஞ்சுக்கலாம்.. நிலவைப் பார்த்து வானம் சொன்னதுன்னு எழுதியிருக்காங்கள்ளன்னு கேக்கப் படாது.. நிலவு என மதியையும், சந்திரனையும் சொல்லும் வழக்கு இருந்து கொண்டுதான் இருக்கிறது..

    அதே பொல்லாத குறும்புக்கார க் கவிஞர் இன்னொரு பாட்டுல என்ன எழுதியிருக்கார்..

    ஆடை இதுவென நிலவினை எடுக்கும், ஆனந்த மயக்கம்!
    ’அம்மா குளிர்!’ என ஒன்றினை ஒன்று அணைப்பது பழக்கம்,
    காலை நேரத்தில் காயங்கள் பார்த்து, களிப்பதென்பதே கவிதையின் விளக்கம்!
    கவிஞர் சொன்னது கொஞ்சம், இனிமேல் காணப்போவது மஞ்சம்!

    படத்தோட காட்சியை விடுங்க.. ஆக்சுவலா என்னன்னாக்க..

    கல்யாணம் ஆச்சு..அப்புறம்..என்ன ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கணுமே.. எல்லா விதத்துலயும்.. ஸோ அந்த ஜோடி என்ன பண்ணுதுன்னா டார்ஜிலீங்க் போறா (பட ஜோடி யில்லை ஓய்)..ஒரு புதுசாக் கல்யாணம் ஆன ஜோடி தேன் நிலவுக்குத் தான்....

    நிலா வெளிச்சம்..மெலிசா சாரல் அடிக்கும் மழையோடக் கொஞ்சம் குளிர் காத்தும் வேற..பகக்த்துலயோ
    பக்பக்னு துடிக்கிற இதயத்தோட படக் படக்குனு அடிச்சுக்கற இமையோட அப்புறம் என்னவெல்லாமோட காத்து இருக்கற புது மங்கை..சுருங்கச் சொன்னா..இருள் மழை இனிமை தனிமை!

    என்ன ஆச்சு அவனும் நிறையக் கேக்கறான்.. அவளும் நிறையக் கொடுக்கறாள்..

    பின்ன தூக்கமும் வருது.. தூங்கிடறாங்க..

    நடு ராத்திரில்ல செல்லக் கண்ணம்மாவிற்கு உறக்கம் கலையுது கொஞ்சம் குளிரவும் செய்யுது..டபக்குன்னு பார்த்தா..பக்கத்தில புருஷன்..வெக்கங்கெட்ட ஜென்மம் நு மனசுக்குள்ள திட்டிட்டுத் தன்னை த் தானே பார்க்கறா..

    அச்சோ..நம்மக் கிட்டயும் ட்ரஸ் காணோமே..ன்னு கொஞ்சம் தேடி சரி சரி இந்த வெள்ளை பெட்ஷீட்டயாவது எடுத்துப் போர்த்திக்கலாம்னு எடுத்தா..ம்ஹீம் வரலை.. மறுபடி ட்ரைபண்ணாலும் வரவேயில்லையே..

    வருமா என்ன..அவ எடுக்க ட்ரைபண்ணினது.. நிலவு..அதாவது படுக்கையறை ஜன்னலூடேவந்த வெண்ணிற நிலா வெளிச்சம்..பின்ன தான் மயக்கத்துலருந்துகொஞ்சம் தெளிஞ்சா ரியலைஸ் பண்றா..

    இது தான் ஆடை இதுவென நிலவினை எடுக்கும் ஆனந்தமயக்கம்..ங்கறார் கவிஞர்..

    வாடையில் தென்றலதும் வாட்டியதால் பெண்ணவளும்
    ஆடை எடுத்த அழகு

    அப்படின்னு ஆன்றோர்கள் (!) சொல்லியிருக்காங்க..

    இனிப் பாட்டு.. கடோசில ஒருவிஷயம் சொல்லுதேன்..

    *
    இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை?
    இதயத்தில் விழுந்தது திருமண மாலை
    உறவுக்கு உரிமைக்கும் பிறந்தது நேரம்
    உலகம் நமக்கினி ஆனந்தக் கோலம்

    இருவர் என்பதே இல்லை இனி நாம்
    ஒருவர் என்பதே உண்மை

    ஆடை இதுவென நிலவினை எடுக்கும் ஆனந்த மயக்கம்
    அம்மா குளிரென ஒன்றினை ஒன்று அணைப்பது பழக்கம் ஆ..

    காலை நேரத்தில் காயங்கள் பார்த்து
    களிப்பதென்பது கவிதையின் விளக்கம்
    கவிஞர் சொன்னது கொஞ்சம் இனிமேல்
    காணப் போவது மஞ்சம்

    **

    ஆக்சுவலா நிலாவப் பத்தி சொல்ல நெனச்ச பாட்டு வேறயாக்கும்..இந்தப்பாட்டு தான்ன்னு நான் சொன்னா நீங்க நம்பணும்..

    ஏ.எம்.ராஜா..சுசிலாம்மா..அமர தீபம்

    *
    தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு
    திரிந்தலைந்து பாடுவதேன் ரீங்காரம் கொண்டு
    பூங்கொடியே நீ சொல்லுவாய்


    நல்ல பாட்டு தானே.. நான் அமரதீபம் பார்த்ததிலலையாக்கும்..

    பின்ன வரட்டா

    அருள்வாய் குகனே

    அன்புடன்
    சி.க

  15. #2200
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //ப்ளாக் அண்ட் ஒய்ட்ல தக்காளி உதடுன்னு கற்பனை பண்ணீங்க பாருங்க நீங்க க்விஞர்//

    உங்க ஆதரவோடு ஜி ஓட்டும் கிடைக்கும்னுதான் 'தக்காளி'ன்னேன். 'பிளாக் அண்ட் ஒயிட் 'ஐந்து லட்ச'த்திற்கு 'செவ்விதழோரம்' அப்படின்னு கவிஞர் இதழின் நிறத்தைக் குறிக்கறப்போ நான் 'தக்காளி' உதடுன்னு ன்னு தரக் கூடாதோ! ஹி..ஹி..ஹி.
    Last edited by vasudevan31355; 5th April 2016 at 12:40 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  16. Likes chinnakkannan liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •