Page 184 of 337 FirstFirst ... 84134174182183184185186194234284 ... LastLast
Results 1,831 to 1,840 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #1831
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    . Facebook ல் படித்தது

    கவியரசர் கண்ணதாசன் பாடல்கள் ரசனைகள்.. 88

    புராண இதிகாசங்கள் பார்வை வடக்கில் உள்ளவர்க்கு வேறு தெற்கில் உள்ளவர்க்கு
    வேறு .
    அதுவும் இந்தத் தமிழ் இரத்தத்திற்கு .. நன்றி சொல்லுதலும், வாக்கு மாறாமையிலும் ஒரு அதீத பற்று இருக்கவே செய்கிறது . அதையே அந்த சமுதாயம் தங்கள் வேதநீதி யாக்கிக் கொண்டிருப்பதில் வியப்பில்லை. இதிகாசங்களையும் இவர்கள் விட்டு வைக்கவில்லை.
    மகாபாரதத்தில் , கர்ணன் என்ற மகோன்னதமான பாத்திரப் படைப்பை அன்று உபன்யாசம் செய்பவர்கள் அவ்வளவாக விமரிசிக்க மாட்டார்கள் .
    ஆனால் கர்ணன் .. திரைப்படம் வந்தபிறகே எம் போன்றவர்க்கு அதில் பிடிப்பு ஏற்பட்டது .
    இந்த எண்ணங்கள் யாவற்றையும் ஒரே பாடலில் கவிஞர் திறம்பட வெகு அழகாக
    தனது முத்தான வரிகளில் பிரதிபலித்திருப்பார்.
    பாரதப்போரின் இறுதிக்கட்டம் .. ஒரு நல்லவனை வஞ்சகம் செய்தே பாண்டவர் ஜெய்க்கும் நிலை . இப்படிச் சொன்னால் விவாதத்திற்கு உரியதாகிடும். வஞ்சித்த பழியை கண்ணன் ஏற்றதால்தான் .. தர்மம் நின்று வெல்லும் என்றாவது சொல்ல முடிகிறது.
    சரி பாடலுக்கு வருவோம்..

    ' உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
    வல்லவன் வகுத்ததடா ! கர்ணா !
    வருவதை எதிர் கொள்ளடா.

    கர்ணன் சிவாஜி மீது திட்டமிட்டபடியே அம்பெய்து.. குற்றுயிராக.. தர்மதேவதையின் அருளால் அவர் கிடக்க,
    பாண்டவர்க்கு துணை செய்ய கண்ணன் ..என். டி.ராமராவ் தயாராகிறார் . வஞ்சகமாய் தர்மதேவதையின் முழுப்பலனையும் யாசித்துப் பெற ..தனக்கு அற்புதமாக பொருந்திய அந்தணர் வேடமிட்டு .. சீர்காழியார் குரலில் ..இயல்பான கம்பீரத்தில் பாடி வருகிறார்..
    கர்ணன் நல்ல உள்ளம் கொண்டவன். நல்ல உள்ளங்கள் நிம்மதியாக என்றும் உறங்காது. அதாவது சோதனைகளைச் சந்தித்தே நிற்கும் . இது வல்லவன் வகுத்த நியதி எனத்
    ..தானே பரமாத்மா என்ற நிலையில் விளக்கம் சொல்கிறார் ..
    அதனால் அடுத்து அவனிடம் வர இருக்கும் வஞ்சகத்தையும் அவன் எதிர் கொள்ள வேண்டும் ..என்று சூட்சுமமாக உரைக்கிறார்.

    ' தாய்க்கு நீ மகனில்லை
    தம்பிக்கு அண்ணனில்லை
    ஊர்ப்பழி ஏற்றாயடா.... நானும்
    உன் பழி கொண்டேனடா..!'

    வஞ்சிக்கப்பட்ட முறைகள் வரிசையாக
    அறியாத பருவத்தில் ஈன்று அவனை ஆற்றில் விட்டவள் .. அதை மன்னித்து விடலாம் .ஆனால் பின்னாளில் மற்ற மக்களுக்காகவும்.. குறிப்பாக அர்ஜுனனுக்கு கூடுதலாக ஒரு வரம் கேட்டு அவனுக்குத் தாயுமில்லை , தம்பியுமில்லை என்ற அனாதை நிலை தந்தாளே.. வஞ்சித்தாளே.... இதுவே அவர்கள் பக்கத்தில் சேரும் பெரிய பாவம்.
    ஆனால் பாரதம் நடத்தும் கண்ணன் தானே அப்பழியை ஏற்று கர்ணனுக்கு விதியாகிறான்.
    ' மன்னவர் பணியேற்கும்
    கண்ணனும் பணிசெய்ய
    உன்னிடம் பணிவானடா - கர்ணா
    மன்னித்து அருள்வாயடா !'

    கவியரசரின் சொல்லாடல் இங்கு வெகு அழகு.
    ராஜகாரியங்களின் சாதுர்யப் பணிகளை கண்ண பரமாத்வாவே ஏற்றுக் கொண்ட நிலையில் அவரே அவனிடம் கர்ணனிடம்
    பணிந்து செல்ல வேண்டிய நிலைமையை நாசூக்காக உணர்த்துகிறார். ஆமாம் .. தான் அவனிடம் பிச்சை வாங்கத்தானே அந்தணர் வேடத்தில் செல்வது .. யாசிப்பவன் கண்ணன் .. அவனை மன்னித்து அருள் செய் .. உண்மை ..யாசிப்பது வெறும் பொருள் அல்லவே . செய்த புண்ணிய பலன்கள் அனைத்துமன்றோ..?
    இந்த வரிகள் கேட்கும் போதெல்லாம் நல்லவர் உள்ளம் வெதும்பும்.

    அடுத்து, கண்ணன் சொல்லாக
    இறுதியாக விவாதப் பொருளை உண்மையுடன் வஞ்சகமாக வைக்கிறார்.

    'செஞ்சோற்றுக் கடன் தீர்க்க
    சேராத இடம் சேர்ந்து
    வஞ்சத்தில் வீழ்ந்தாயடா- கர்ணா
    வஞ்சகன் கண்ணணடா..'

    சேராத இடம் சேர்ந்தாய் என்று முதலில் சொன்னால் அது பழியாகும் . செஞ்சோற்றுக் கடன் தீர்க்க .. இந்தச் சொல்லில் தர்மநீதி அடங்கி விட்டது.
    வஞ்சகம் கண்ணன் செய்தான் .. சேராத இடம் சேர்ந்து .. எனச் சொன்னால் , அது அந்த வஞ்சகத்தில் அடங்கிவிட்டது.

    எனவே இங்கும் கர்ணனுக்கு வரவிருக்கும் பழியை கண்ணனே சுமந்து கொள்கிறான்.
    நம் உள்ளம் மெல்லிசை மன்னர்களின் இசையில் கரைந்தே போய்விடுகிறது.
    கவியரசின் வரிகளில் ..கர்ணனின் கம்பீரம் நிமிர்கிறது.

    Kothaidhanabalan

    '

  2. Thanks Russellmai thanked for this post
    Likes rajeshkrv, Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1832
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    மதுரகான நண்பர்கள் அனைவருக்கும் உளமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. Thanks Russellmai thanked for this post
  6. #1833
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    Natalie Cole passes away

    Natalie Cole passed away.

    May her soul rest in peace.

    http://nyti.ms/1YTPMIO

    There is a video clip in the news item.

    Here is another video clip: Unforgettable............

    Last edited by rajraj; 2nd January 2016 at 03:24 AM.
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  7. #1834
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Jayetta sounds even younger these days..

    What a song in Ravana prabhu


  8. Likes Russellmai liked this post
  9. #1835
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy: Tamil Hindu

    காற்றில் கலந்த இசை - 36: பருவங்களின் கூட்டிசை!


    இளையராஜாவின் படைப்பாற்றல் உச்சத்தில் இருந்த சமயத்தில் தயாரிக்கப்பட்ட படங்களில் நடிக்கும் பாக்கியம் மோகனுக்கு அதிகமாகவே கிடைத்தது. இன்றும் மோகன் ஹிட்ஸ் என்ற பெயரில் விற்கப்படும் சிடிக்களில் அவரது படத்தைவிடப் பெரிய அளவில் சிரித்துக்கொண்டிருப்பது இளையராஜாதான். தமிழ்த் திரை இசையின் வசந்த காலமான 80-களில் மோகனை நாயகனாக வைத்து ஆர். சுந்தர்ராஜன், கே. ரங்கராஜ் என்று பல இயக்குநர்கள் ‘இனிய கானங்கள் நிறைந்த படங்களாக எடுத்துத் தள்ளிக்கொண்டிருந்தனர்.

    அந்தப் பட்டியலில் இடம்பெறும் முக்கியமான இயக்குநர் மணிவண்ணன். ‘திரில்லர்’, குடும்பக் கதைகள், அரசியல் விமர்சனம் என்று பல்வேறு வகைப் படங்களை இயக்கிய மணிவண்ணன், இறுதிவரை இளையராஜாவின் மீது பெரும் மதிப்பும் அபிமானமும் கொண்டிருந்தார். 1983-ல் அவரது இயக்கத்தில் வெளியான ‘இளமைக் காலங்கள்’ படத்தின் பாடல்கள் மிகப் புகழ் பெற்றவை. கோவைத் தம்பியின் ‘மதர்லேண்ட் பிக்சர்’ஸின் இரண்டாவது தயாரிப்பு இப்படம்.

    இப்படத்தில் எஸ்.பி.பி. ஜானகி பாடிய ‘இசை மேடையில் இன்ப வேளையில்’ பாடல் முகப்பு இசை தரும் சுகந்தம் செழுமையானது. வசந்தத்தை மீட்டும் பெண் குரல்களின் ஹம்மிங்குடன் பாடல் தொடங்கும். ஹம்மிங்கின் மேலடுக்கில் ஜானகியின் அதிரசக் குரல் சிணுங்கும். பள்ளத்தாக்கின் மீது படர்ந்திருக்கும் காற்றில், சிறகை அசைக்காமல் பறந்துகொண்டிருக்கும் பறவையைக் காட்சிப்படுத்தும் வயலின் இசைக் கோவையைத் தொடர்ந்து, ‘இசை மேடையில்…’ என்று பாடத் தொடங்குவார் ஜானகி.

    பல்லவியின் சில நொடிகளில் எஸ்.பி.பி.யின் மெல்லிய ஹம்மிங் வந்துபோகும். இளமையின் உற்சாகத்தை உணர்த்தவோ என்னவோ குதிரைக் குளம்பொலியைப் போன்ற தாளக்கட்டை இப்பாடலுக்குத் தந்திருப்பார் இளையராஜா. நிரவல் இசை முழுவதும் வயலின்களின் ராஜாங்கம்தான். முகப்பு இசையில் பயன்படுத்தியதுபோலவே இரு வேறு அடுக்குகளில் ஜானகியின் ஹம்மிங்கையும், பெண் கோரஸ் குரல்களையும் ‘மிக்ஸிங்’ செய்திருப்பார் ராஜா.

    மோகன் இளையராஜா கூட்டணியின் முக்கியக் கண்ணி எஸ்.பி.பி.யின் குரல். இந்தப் பாடலில் அதை உறுதியாக நிரூபித்திருப்பார் எஸ்.பி.பி. ‘முத்தம் தரும் ஈரம் பதிந்திருக்கும்’ எனும் வரியின் இறுதியில் சின்ன பிர்கா ஒன்றைத் தருவார். ‘கொன்னுட்டான்யா’ என்று தோன்றும். இரண்டாவது நிரவல் இசையில் ‘பாப்பபப பாப்பப’ எனும் ஹம்மிங்கை ஜானகி பாடுவார். அதைத் தொடர்ந்து வரும் ஹம்மிங் ஆண் தன்மையும், பெண்ணின் இனிமையும் கலந்த குரலாக ஒலிக்கும். அது ஜானகியின் ஹம்மிங்கா, எஸ்.பி.பி.யுடையதா என்று குழம்பாமல் அப்பாடலைக் கடந்துவர முடியாது. அந்த அளவுக்கு எதிர்பாராத சுவாரஸ்யங்களைத் தனது இசையில் இளையராஜா புகுத்திய காலம் அது.

    இப்படத்தில் ஷைலஜா பாடும் ‘படிப்புல ஜீரோ நடிப்புல ஹீரோ’ பாடல், அக்கால ‘ஆடம் டீஸிங்’ பாடல்களில் ஒன்று என்றாலும், வேகமான அதன் தாளக்கட்டும் ஷைலஜாவின் கூர்மைக் குரலும் வித்தியாசமான அனுபவத்தைத் தரும்.

    இப்படத்தில் சுசீலாவுடன் ஷைலஜா இணைந்து பாடும் ‘ராகவனே ரமணா ரகுநாதா’ பாடலில் பஜன் பாடல்களுக்குரிய பக்தி மணமும், காதல் ரசமும் ஒரு புள்ளியில் இணைவதை உணரலாம். நிதானமான தாளக்கட்டில் வீணை, புல்லாங்குழல் ஆகிய இசைக் கருவிகளுடன் தனது வயலின் ஆர்க்கெஸ்ட்ரேஷன் முத்திரையை இணைத்து இளையராஜா உருவாக்கிய பாடல் இது. இரண்டாவது நிரவல் இசையில் வயலின் இசைக் கோவையின் மேலடுக்கில் ஒலிக்கும் சுசீலாவின் ஆலாபனை, இப்பாடலின் உச்சபட்ச இனிமைத் தருணம்.

    இப்படத்தில் ஜேசுதாஸ் பாடிய ‘ஈரமான ரோஜாவே’ பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது. பேஸ் கிட்டாரின் அஸ்திவாரத்தில் எழுப்பப்பட்டிருக்கும் காதல் சோக கீதம் இது. தாளக்கட்டில் மிருதங்கத்தின் ஒரு துளி, முதல் நிரவல் இசையில் கனத்த நெஞ்சின் விம்மலைப் போன்ற வயலின் கீற்று, விரக்தியை வெளிப்படுத்தும் விசில் என்று இப்பாடலின் ஒவ்வொரு நொடியிலும் இசை நுணுக்கங்களைப் புதைத்திருப்பார் இளையராஜா. இரண்டாவது நிரவல் இசையில் பனியால் உருவான மேகத்தின் நகர்வைப் போன்ற வயலின் இசைக் கோவை, நம்மைத் தழுவியபடி நகர்ந்து செல்வதை உணர முடியும்.

    இப்படத்தின் மிக முக்கியமான, அற்புதமான டூயட், ஜேசுதாஸ் சுசீலா பாடிய ‘பாட வந்ததோர் கானம்’ பாடல். சுசீலாவின் ‘லாலலா’வுடன் தொடங்கும் இப்பாடலிலும் தாளக்கட்டில் மிருதங்கத்தைப் பயன்படுத்தியிருப்பார் இளையராஜா. பல்வேறு இசைக் கருவிகளின் நடுவே பியானோவைப் பிரதானமாக ஒலிக்கச் செய்த அரிதான பாடல்களில் ஒன்று இது.

    பல்லவியிலிருந்தே பியானோவின் உரையாடல் தொடங்கிவிடும். முதல் நிரவல் இசையில் விண்கல்லின் வீழ்ச்சியைப் போன்ற ஒற்றை வயலின் நீட்சி ஒலிக்கும். சரணத்தில், ‘கண்ணில் குளிர்காலம்… நெஞ்சில் வெயில் காலம்’ எனும் வரியின்போது அந்த இரண்டு பருவங்களையும் இசையாலேயே உணர்த்தியிருப்பார் இளையராஜா. பாந்தமான அமைதியுடன் ஜேசுதாஸும், காதலின் பரவசத்தை வெளிப்படுத்தும் குரலில் சுசீலாவும் அற்புதமாகப் பாடியிருப்பார்கள்.

    இளையராஜா பாடல்களின் உடனடி வெற்றிக்கு, தனித்த சுவை கொண்ட மெட்டுக்கள் காரணம் என்றால் 30 ஆண்டுகள் தாண்டியும் அவை ரசிகர்களின் மனதில் வியாபித்திருப்பதற்குக் காரணம், வெவ்வேறு மனச் சித்திரங்களை எழுப்பும் அவரது ஆர்க்கெஸ்ட்ரேஷன்தான். இப்படத்தில் இடம்பெற்ற அத்தனைப் பாடல்களும் அவரது ஆர்க்கெஸ்ட்ரேஷன் மேதைமைக்குச் சான்றுகள்.

    

  10. Likes Russellmai liked this post
  11. #1836
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    Bhakthi - annaiyin aaNai

    From anniyin aaNai (1958)

    neeye gathi eswari.......

    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  12. Thanks Russellmai thanked for this post
    Likes rajeshkrv, Russellmai liked this post
  13. #1837
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy: Dinamani

    பானுமதி: 11. எனக்குள்ளே நான்...!

    வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெளியான பானுமதியின் பேட்டிகளிலிருந்து சில பகுதிகள்-

    ‘நான் எப்பவுமே வெளியிலே ஒண்ணு மனசுல ஒண்ணுன்னு பேச மாட்டேன். எந்த விஷயம் ஆனாலும் சம்பந்தப்பட்டவங்க கிட்ட நேர்லயே கேட்டுடுவேன். என் நடிப்பெல்லாம் சினிமாவுல மட்டுமே.

    வாழ்க்கையில எனக்கு நடிக்கத் தெரியாது. அப்படி யாரா இருந்தாலும் முகத்துக்கு நேரா ‘பட் பட்னு’ கேட்டுடறதால, ஆரம்பத்துல பல பேர் எங்கிட்ட வராம ஒதுங்கிப் போனாங்க.

    பிற்பாடு அதுவே பிடித்துப் போய் சிறந்த நடிப்புக்காக என்னைத் தேடி வந்தாங்க. இதில ஒரு விசேஷம் என்னன்னா, என்னோட இந்த கேரக்டர் சினிமாவிலும் பிரதிபலிச்சது.

    இந்த ‘ஸ்டைல்’ ஜனங்களுக்கும் பிடிச்சுது. பானுமதின்னா இப்படித்தான் நடிக்கணும்ங்கற அளவுக்கு அவங்க எதிர்பார்ப்பு இருந்தது.

    ‘பெரியம்மா’ வரைக்குமாய் இருபது படம் டைரக்ட் பண்ணினேன். நடிச்ச படங்களை பட்டியல் வெச்சுக்கலை. நூறுக்கும் மேலே இருக்கலாம். அதை ஒரு சாதனையா நெனைச்சா இல்ல, எண்ணிக்கிட்டு இருக்கணும்.



    எனக்குள்ள ‘இசை’ எப்பவுமே பிரவாகமா ஓடிக்கிட்டே இருந்தது. அது அப்பா வழியில் எனக்குக் கிடைத்த சொத்து. அதனால என் இயக்கத்துல வர படங்களில் இசை அமைப்பாளர் பொறுப்பையும் நானே ஏற்று செய்தேன்.

    இப்படியான இசை ஆர்வம் என் டைரக்ஷனில் நாலாவது படமான ‘சக்ரபாணி’யில் முழுமையாக வெளிப்பட்டது. அதில் முத்துஸ்வாமி தீட்சிதர், தியாகராயர் ஆகியோரின் கீர்த்தனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தேன்.

    சென்னை காசினோ தியேட்டரில் சக்கரபாணி ரிலிஸ் ஆகி நாலு வாரம் ஓடுச்சு. இசை ஆர்வம் கொண்ட எல்லாரையும் படம் பெரிசா பாதிச்சது.

    கீர்த்தனைகளுக்குக் கிடைத்த வரவேற்பு, அது மாதிரி வரும் எனது படங்களிலும் தொடரவே செய்தது. மானஸ சஞ்சரரே... என்ற கீர்த்தனையில் ‘நானே ராஜ கண்ணா’ பாடலை ‘இப்படியும் ஒரு பெண்! ’ படத்துக்காகப் பாடினேன்.

    அருணாச்சல கவிராயர் பாடலை மையமா வெச்சு, ‘ராமனுக்கு மன்னர் முடி தரித்தாரே... ’ என்ற பாடலை பத்து மாத பந்தம் படத்துக்காகப் பாடினேன்.

    என் பாட்டுக்கு இருந்த வரவேற்பு காரணமா, நான் தயாரிக்கிற ஒவ்வொரு படத்திலும் ஒரு பாட்டாவது பாடி விடுவேன். கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி சங்கீதம் தவிர மேற்கத்திய இசைப்பாடலையும் விட்டு வைக்கவில்லை.

    எனக்குத் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தியில் நல்ல தேர்ச்சி உண்டு. அவை தவிர சிங்கள மொழியிலும் பாடும் வாய்ப்பு அமைந்தது.

    ‘மணமகன் தேவை’ படத்தில் சிங்களப் பாடல் ஒன்று இடம் பெற்றது. எனக்கு சிங்களம் தெரியாது என்றாலும் கூட, அந்த உச்சரிப்பு பற்றி தெரிந்து கொண்டு பாடி இருக்கிறேன்.

    சிறு வயதிலிருந்தே பூஜை, விரதம் - கோயிலுக்குச் சென்று வருவது, பக்திப் பாடல்களைப் பாடுவது, பெரியவர்களிடம் புராணம் போன்ற நல்ல விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்வது எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

    ‘ஒரு புறம் பார்வதி, மறுபுறம் விநாயகரை அணைத்தவாறு அமர்ந்திருக்கும் சிவன்’ காட்சி அளிக்கும் ரவிவர்மாவின் ஓவியம் என் மனத்தில் எப்போதும் ஆழப்பதிந்துள்ளது.

    கண்களை மூடி தியானம் செய்ய ஆரம்பித்தவுடன் என் கண் முன்னே நிற்கின்ற தெய்வங்கள் சிவன் - பார்வதியே!



    அந்த உணர்வு மற்றக் கடவுள் விக்ரகங்களைக் காணுகையில் எனக்கு ஏற்படாது.

    14 வயதிலேயே ‘கதை’ ஆர்வமும் எனக்குள் வெளிப்பட்டது. என்னை பாதித்த விஷயங்களை எழுத ஆரம்பித்தேன். முப்பது வயதில் எழுதுவதில் ஒரு பக்குவ நிலை வந்தது. அதற்குப் பிறகு நூறு கதைகளுக்கும் மேல் எழுதி விட்டேன்.

    ஞாபகம் வர வேண்டி அவ்வப்போது எனக்குள் தோன்றுவதை டேப்பில் பதிவு செய்வது வழக்கம்.

    எனது கதைகள் தமிழ், தெலுங்கு இரண்டிலுமாக புத்தக வடிவில் வெளி வந்திருக்கிறது.

    நான் என்னைப் பற்றி எழுதிய ‘எனக்குள்ளே நான்’ நூலுக்கு ஜனாதிபதி விருது கிடைத்திருக்கிறது.

    எனக்கு வயல் வேலைன்னா ரொம்ப இஷ்டம். சென்னையை அடுத்த பெருங்களத்தூர்ல பண்ணை இருக்கு. விவசாய ஆர்வம் வந்துட்டா மறு விநாடி அங்கே இருப்பேன். இப்பக் கூட இதுதான் நிலை.

    எங்களுக்கு மெட்ரிகுலேஷன் பள்ளி இருக்குது. ஏழைப் பிள்ளைங்களுக்கு இப்பக் கூட அதுல இலவச படிப்புதான். பணம் இல்லைங்கற ஒரே காரணத்துக்காக திறமையான மாணவர்களுக்கு படிப்பு இல்லைன்னு ஆயிடக் கூடாது.

    முதியோர்களுக்குன்னு ஒரு இல்லம் கட்டணும்ங்கறது என்னோட விருப்பம். என் வாழ்நாளில் நிச்சயம் அதைச் செய்து முடிப்பேன்.

    எங்கள் பரணி ஸ்டுடியோவின் பொறுப்பை என் மகன் பரணி ஏற்றுக் கொண்ட பிறகு எனக்குக் கொஞ்சம் ஓய்வு கிடைக்கிறது.

    மகன் வழியில் எனக்கு ஒரு பேரன், பேத்தி. பேரன் வெங்கடேஷ் எம்.ஏ., பேத்தி மீனாட்சி அவள் அப்பா மாதிரியே டாக்டராக வேண்டும் என்ற விருப்பத்தில் மருத்துவப் படிப்பு படித்து வருகிறாள்.

    என் கலைப்பணிக்கு மட்டும் ஓய்வில்லை. சமீபத்தில் நான் படம் இயக்குவதைக் கேள்விப்பட்ட என்.எப். டி.சி.காரர்கள் ‘எங்களுக்கும் எடுத்துக் கொடுங்கம்மா... ’ என்று கேட்டு இருக்கிறார்கள்.

    தொலைக்காட்சிக்கென நான் எடுத்து வரும் ‘மாமியார்’ சீரியல் எனக்குப் புதிய ரசிகர்கள் பலரை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

    எனக்கு எப்பவுமே மேக் அப் போட்டுக்கப் பிடிக்காது. ‘என்ன மேக் அப் வேண்டிக் கிடக்கு’ என்று பல முறை சலித்திருக்கிறேன்.

    வீட்ல இருந்து செட்டுக்குக் கிளம்பும் போதே, ‘இன்னிக்கு யாரையோ மகனேன்னு சொல்லி கண் கலங்கப் போறோம். யாரையோ புருஷனா வரிச்சிக்கிட்டு குடும்ப விஷயம் அலசப்போறோம்னு’ அலுத்துக்கிட்டே புறப்படுவேன். அது சினிமாவுக்கு அப்பாற்பட்ட பானுமதியோட எண்ணம்.

    நடிகையா செட்டுக்குள்ள போனப்புறம் அதெல்லாம் மறந்துடும். என் கேரக்டர் மட்டுமே மனசிலே நிக்கும்.

    இன்னிக்கும் ரசிகர்கள் என்னை மறக்காம இருக்காங்கன்னா, என்னோட ‘கேரக்டர் ஐக்கியம்‘ தான் காரணம்னு நினைக்கிறேன். ரசிகர்கள் புத்திசாலிங்க. அவங்களுக்குப் புடிச்ச விஷயம் இருந்தாத்தான் ரசிப்பாங்க.

    எம்.ஜி.ஆர். முதல் அமைச்சரான பிறகும் பழசை மறக்கவில்லை. சினிமா கலைஞர்கள் மீது முன்பு வைத்திருந்த அதே பிரியத்தைக் காட்டினார். என் மீது மிகுந்த அன்புள்ளவர்.

    ‘உங்களுக்கு என்னம்மா... மகாலட்சுமி மாதிரி! ’ என்று அடிக்கடி சொல்லுவார் எம்.ஜி.ஆர்.

    1958ல எனக்குக் ‘கலைமாமணி’ பட்டம் கொடுக்கணும்னு வந்தாங்க. அப்ப நான் அதனோட மதிப்பு தெரியாம, அதெல்லாம் வயசானவங்களுக்குத்தான் தருவாங்கன்னு சொல்லி, அந்த விழாவுக்குப் போகலை. நான் அப்படி செஞ்சது தப்பு. அதுக்கு இப்போ கூட ஃபீல் பண்றேன்.

    ‘அந்தம்மாவுக்கு இன்னும் கலைமாமணி பட்டம் கொடுக்கலையான்னு...? ’ எம்.ஜி.ஆர். இப்போ கேட்டாராம். உடனே, ஒரு டைரக்டரா எனக்குக் ‘கலைமாமணி’ கொடுத்துட்டாங்க.

    1985 முதல் 1988 வரை ‘சென்னை இசைக் கல்லூரி’க்கு என்னை முதல்வராக்கி மகிழ்ந்தார். மியூசிக் காலேஜூக்கு முகப்பில் உள்ள ‘ஆர்ச்’ கட்டினது என் காலத்துலதான்.

    தமிழ் இசைக்கும், தியாகராயர் கீர்த்தனைக்கும் பாதிப் பாதி என்று ஒதுக்கீடு செய்து, எல்லாத் தரப்பு இசையும் மாணவர்களிடம் முறையாகச் சென்று சேர ஆவன செய்தேன். - பானுமதி.

    -------------------------

    நேர் காணலுக்காக பானுமதியைச் சந்திக்கும் வாய்ப்பு இரு முறை எனக்கு அமைந்தது. சொந்தப் பட அனுபவம் குறித்து பிப்ரவரி 1993ல் பொம்மையிலும், இந்திய சுதந்தரப் பொன்விழா கொண்டாட்டம் பற்றி ஆகஸ்டு 1997ல் பேசும் படத்திலும் பேட்டி அளித்தார்.

    முதலில் பொம்மையில் பிரசுரமான சில பகுதிகள்-

    ‘பரணி பிக்சர்ஸ் பேனர்ல இதுவரைக்கும் முப்பது படங்களுக்கும் மேலே எடுத்துருக்கோம். இப்ப ‘பெரியம்மா’ படத்தை எடுக்கக் காரணமா இருக்கிறவர் இளையராஜா.

    நான் எடுத்த லைலா- மஜ்னு படத்தை நாற்பது தடவைகளுக்கு மேலே பார்த்திருக்கிறதா இளையராஜா சொன்னார்.

    ஏழு வருஷங்களுக்கு முன் ‘கண்ணுக்கு மை எழுது’ படத்துல இளையராஜா இசையில நான் முதன் முதலா பாடினேன். அப்பத்தான் அவர் என் ரசிகர்னு தெரிஞ்சிக்கிட்டேன்.

    கொஞ்ச நாட்களுக்கு முன்னே ஒரு விழாவில இளையராஜா பேசும் போது,


    ‘லைலா மஜ்னு’ படத்தை பானுமதி மறுபடியும் எடுக்கறதா இருந்தா, இசையமைச்சிக் கொடுப்பேன்’ன்னாரு.

    உடனே பலரும் வற்புறுத்தவே நானும் அதற்கான ஏற்பாடுகளில் இறங்கினேன். ஆனா மஜ்னுவா நான் செலக்ட் பண்ணின ஹீரோ, கேட்ட சம்பளத்தை என்னால கொடுக்க முடியும்னு தோணல.

    அகலக்கால் வெச்சு நஷ்டப்பட நான் விரும்பல.

    இளையராஜாவோட ஒத்துழைப்பு கிடைக்கிற போது புதுசா, வேறே படம் எடுத்தா என்னன்னு, ‘பெரியம்மா’ கதையை எழுத வேண்டிய அவசியம் உண்டாச்சு.

    இப்பவுள்ள டெக்னிகல் விஷயங்கள் எதுவுமே எனக்கு சரிப்பட்டு வரல. டப்பிங் தனியா செய்யறதால படத்தோட தரம் குறைஞ்சி போகுது.

    பாடல் காட்சிகள்ள யதார்த்தத்தை மீறி எக்கச்சக்க கட் ஷாட் வெச்சி எடுக்கறாங்க. கதையில நாம என்ன சொல்ல வரோம்ங்ற ஜீவனே இதனால செத்துப் போகுது. ’

    ---------------பேசும் படம் இதழிலிருந்து-

    நாம் விடுதலை பெற்ற போது நடந்த நிகழ்ச்சிகள் உங்கள் நினைவில் இருக்கிறதா...?

    ‘ 1947 ஆகஸ்டு 15 ஆம் தேதி அகில இந்திய வானொலில அப்போதைய பிரபல கலைஞர்கள் டி.ஆர். ராஜகுமாரி, ரஞ்சன், டைரக்டர் கே. சுப்ரமணியம், டி.ஆர். ராமச்சந்திரன், சூர்யகுமாரி, கே.ஆர்.ராமசாமி, சுந்தரிபாய் இவங்களோட நானும் சேர்ந்து பல்சுவை நிகழ்ச்சியை நடத்திய ஞாபகம் மட்டும் இருக்கு.

    உங்களுக்கும் சுதந்தர போராட்டத்துக்கும் நெருங்கின தொடர்பு ஏதாவது?

    ‘என்னோட அப்பாவுக்கு நாம விடுதலை பெறணும்ங்ற ஆர்வம் அதிகம். ஆனால் கைதாகி ஜெயிலுக்கெல்லாம் போனதில்ல.

    அடிப்படையில காங்கிரஸ் தொண்டர் அவர். கதர் உடுத்துவார். நானும் கல்யாணம் முடிஞ்சுதான் பட்டுப்புடவை கட்டிக்க ஆரம்பிச்சேன். அந்த அறியாப் பருவத்துல பட்டுப் பாவாடைகள் அணியணும்ற விருப்பம் இருந்தது. அப்ப நிறைவேறாத ஆசை அது!

    இசை, சினிமா, இலக்கியம் என்று ஒவ்வொன்றிலும் கொடி கட்டிப் பறந்தவர் நீங்கள். அரசியலை மட்டும் ஏன் விட்டு வைத்தீர்கள்?

    ‘ஆரம்பத்திலிருந்தே அரசியல் ஈடுபாடு அதிகம் கிடையாது. நான் லோக் சபா உறுப்பினராக போட்டி போடணும்னு பல பெரிய தலைவர்கள் வற்புறுத்தினாங்க. ஆனால் என் கணவர் அதை விரும்பல.



    ‘ அரசியல்ல முதல்ல பூமாலைகள் விழும். பின்னால கல்லடிகள் கிடைக்கும்’னு அறிவுரை சொன்னார். இப்ப நடைமுறைல அதுதானே இருக்கு.

    நடிகர் திலகத்துக்குப் பிறகு தமிழ்நாட்டிலிருந்து ‘தாதா சாகிப் பால்கே விருது’ பெறும் பரிபூரணத் தகுதி தங்களுக்கு இருக்கிறது. உங்களுக்கு அப்படிப்பட்ட ஆசை உண்டா?

    ‘எனது பணிக்காக ஏற்கனவே நிறைய கவுரவங்கள் கிடைத்திருக்கிறது. பானுமதி என்றால் இன்னமும் தனி செல்வாக்கு இருக்கிறது.

    நான் நடிக்க வந்து ஆறு தலைமுறைகள் கடந்து விட்டன. தமிழில் தான் அதிகம் நடித்திருக்கிறேன். ரங்கோன் ராதா, அன்னை, மலைக்கள்ளன், கள்வனின் காதலி போன்ற படங்கள் திருப்தியானவை.

    படங்களின் வெற்றிக்காக நான் சொன்ன மாற்றங்களை இயக்குநர்கள் ஏற்றுக் கொண்டு இருக்கிறார்கள். நடிப்பை தவமாக நாங்கள் கருதிய காலம் அது. இன்று அப்படியில்லை.

    விடுதலை பெற்று இந்த ஐம்பது ஆண்டுகளில் நமது பெண்களின் வாழ்க்கைத் தரம் பற்றி?

    ‘பெண்கள் குறித்த கண்ணியம் இப்போது இல்லை. மகளிர் உரிமைகளுக்காகப் போராடுகிற மாதர்கள் குறைந்து வருகிறார்கள்.

    ஆண் தாயாக முடியாது. ஆண் கையில் என்ன இருக்கிறது?

    பெண்கள் தங்கள் பொறுப்புகளை உதறித் தள்ளக் கூடாது. ஆண் வேலி போட்டுவிட்டான் என்று ஏன் எண்ண வேண்டும்?

    பெண்கள் தங்களுக்குத் தாங்களே வேலி போட்டுக் கொள்ள வேண்டும். பெண்ணின் தாய்மை உணர்வுதான் அவளுக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய பரிசு!

    குடும்ப நலம் பேணினால் எல்லா நலமும் தன்னால் கிடைக்கும்.

    1956 -57ல் ஆந்திராவில் எனக்காக நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டார் காமராஜர்.

    அப்போது கூட ‘தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் கொடுங்க’ என்று தான் கேட்டார். அப்படி எப்போதும் நாட்டு நலனையே நினைவாகக் கொண்டவர்களை இப்போது பார்க்க முடிவதில்லை.

    சரோஜினி நாயுடு, இந்திராகாந்தி போன்ற வலிமையுள்ள வழி நடத்தக் கூடிய பெண்கள் இப்போது தேவை! ’

    -----------------------
    மழலை பிறப்பதைக் கொண்டாடுவது போல் அஸ்தமனங்களும் சரித்திரத்தில் இடம் பெறுகின்றன. கலைவாணர், அண்ணா ஆகியோரின் இறுதி ஊர்வலத்துக்கு வந்த கூட்டம் பற்றிய வியப்பு, இன்னமும் அடித்தட்டு மக்களின் மனத்தில் ஜீவித்திருக்கிறது.

    தற்போது திரைப் பிரபலங்கள் சிலரது தகனம் வரை சின்னத் திரைகளில் நேரடியாக ஒளிபரப்பாகின்றன.

    உடல் நலக்குறைவால் படுத்த படுக்கையானார் பானுமதி. 2005 டிசம்பர் 24ல் இறைவனடி சேர்ந்தார். எம்.ஜி.ஆர். மறைந்த அதே தேதி!

    பானுமதி வசித்த தி.நகர். வைத்தியராமன் தெருவைச் சுற்றிலும் ஏகப்பட்ட தமிழ், தெலுங்கு ஸ்டார்களின் குடியிருப்பு உள்ளது. அவர்களில் யாரும் கடைசி நாள்களில் பானுமதியைச் சந்தித்து நலம் விசாரித்ததாகச் செய்திகள் வரக் காணோம்.

    ஏனோ பல்துறை வித்தகியான பானுமதியின் மரணம் மாத்திரம் போதிய கவனம் பெறாமலே போய் விட்டது.



    ஆண் ஆதிக்க சமூகத்தில் பெண் என்பதாலேயே, ‘அஷ்டாவதானி’யாகத் தனி வரலாறு படைத்த, பானுமதியின் மேன்மைகள் அவரது பூத உடலோடு தணலில் வீழ்த்தப்பட்டதா?

    விடை கிடைக்காத வினா!

    பானுமதி என்ன லேசுப்பட்டவரா...?

    ‘பானுமதி’ என்றால் - ஞானத்தில் பானு. (சூரியன்), நளினத்தில் மதி! (சந்திரன்) என்று கவிதைச் சொற்களால் கண்ணதாசனால் கவுரவிக்கப்பட்டவர்.

    துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதைகளுடன் எரியூட்டப் பட்டிருக்க வேண்டிய இரும்பு மனுஷி! இனி எந்தத் தலைமுறைகளிலும் அகப்படாத அபூர்வ சாதனையாளர்!

    தாதா சாகிப் பால்கே விருது கொடுத்து பானுமதியை பரவசப்படுத்தியிருக்க வேண்டும் பாரதம்!

    தொடர்ந்து ஆந்திர, தமிழக அரசுகள் மத்திய சர்க்காரிடம் பானுமதியின் அசாத்திய பங்களிப்பை எடுத்துச் சொல்லாமல் விட்டது தவறு.

    உயிர் நீத்தவர்களுக்கும் பாரத ரத்னா வழங்கும் தருணம் இது. மறைந்த மேதைகளுக்கு ’பால்கே விருது’ தரும் திட்டம் உண்டா என்பது தெரியவில்லை.

    அப்படியொரு சூழல் அமைந்தால் பானுமதிக்கு இனியாவது தாதா சாஹிப் பரிசு கிடைக்க இரு மாநில அரசுகளும் முயற்சித்தல் நல்லது.

  14. Likes Russellmai liked this post
  15. #1838
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Nice melody from En Jeevan Paduthu


  16. Likes Russellmai liked this post
  17. #1839
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Facebook


    கெளரவம் படத்தின் தயாரிப்பாளர் 1973ம் ஆண்டு படத்தின் பாடல்களை எழுதவதற்காக கண்ணதாசனுக்கு முன் பணம் கொடுத்து புக் செய்திருந்தார் ஆனால் கவினரோ தன் வேலைகளை எல்லாம் மறந்து மலேசியாவில் வாழ்க்கையை ரசித்து கொண்டு இருந்தார்.

    இது போன்று தன் வேலையை மறந்து சரியான நேரத்தில் பாடல்களை தராமல் தாமதப்படுத்துவார் என்பது கண்ணதாசனின் மீதான பரவலான கருத்து. அந்த சமயத்தில் அவருடைய உதவியாளர் படத்தின் தயாரிப்பாளரை சந்தித்து அவர் எப்போதும் இப்படிதான் தாமத்தப் படுத்துவார் என்று கவிஞரின் குறைகளை கூறி தனக்கு அந்த வாய்ப்பை தருமாறு கேட்டார் ( அவர் இப்போது பெரிய தயாரிப்பாளர்) ஆனால் தயாரிப்பாளரோ கண்ணதாசனே பாடல்களை எழுதட்டும் என்று காத்திருந்தார்.

    கவிஞர் மலேசியாவிலிருந்து வந்தவுடன் இந்த செய்தியை கேள்விப்பட்டு மிகவும் மனவருத்தம் அடைந்தார். தான் தூக்கி வளர்த்து ஆளாக்கிய ஒருவர் தன்னை கவிழ்க்க பார்ப்பதை எண்ணி மனவேதனை அடைந்தார்.அடுத்த நாள் இயக்குனர் பாடலின் சூழ்நிலையை விளக்கினார். தான் எடுத்து வளர்த்த தன் வளர்ப்பு மகன் தன்னை எதிர்த்து நிற்கிறான் என்றார் இயக்குனர்.

    வழக்கம்போல் தன் வாழ்கையின் வழியை அந்த படத்தின் பாடலில் எழுதியிருப்பார்.படத்தின் சூழ்நிலையை மறந்து இந்த சூழ்நிலையை மனதில் நினைத்தால் ஏதோ தனது உதவியாளர் செய்த துரோகத்திற்காக எழுதியது போலவே முழுப் பாடலும் இருக்கும். காலத்தால் அழியாத இந்த இரண்டு பாடல்களும் என்றும் மறக்க முடியாதவை.

    இதோ வரிகள்

    படம் : கெளரவம்

    நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா
    காலம் மாறினால் கெளரவம் மாறுமா
    அறிவை கொடுத்ததோ துரோணரின் கெளரவம்
    அவர்மேல் தொடுத்ததோ அர்சுனன் கெளரவம்

    நடந்தது அந்தநாள் முடிந்ததா பாரதம்
    நாளைய பாரதம் யாரதன் காரணம்
    வளர்த்த என் கண்ணனோ தந்தையின் நெஞ்சிலே
    மாறும் அவதாரமே இதுதான் உலகிலே.

    ஆனால் இவ்வளவு நடந்தாலும் எல்லாவற்றையும் மறந்து மன்னித்து அந்த உதவியாளரை மீண்டும் சேர்த்து கொண்டார்.

    பாலுட்டி வளர்த்த கிளி பழங்கொடுத்து பார்த்தகிளி
    நான் வளர்த்த பச்சைகிளி நாளை வரும் கச்சேரிக்கு
    சட்டமும் நான் உரைத்தேன் தைரியமும் நான் கொடுத்தேன்
    பட்டம் மட்டும் வாங்கி வந்து பாய்ந்து செல்ல பார்க்கிறது

    செல்லமா எந்தன் செல்லமா

    நீதிக்கே துணிந்து நின்றேன் நினைத்ததெல்லாம் ஜெயித்து வந்தேன்
    வேதனைக்கு ஒரு மகனை வீட்டிலே வளர்த்து வந்தேன்
    ஆண்டவன் சோதனையோ யார்கொடுத்த போதனையோ
    தீயிலே இறங்கிவிட்டான் திரும்பி வந்து கால் பணிவான்

    கண்ணதாசன் எதையும் மனதில் வைத்து பழிவாங்க வேண்டும் என்று எவரையும் நினைத்ததில்லை. தான் நினைத்ததை பாட்டில் அழகாக வெளிபடுத்தும் அற்புத ஆற்றல் பெற்ற காலந் தீண்ட கவிஞர் நம் கண்ணதாசன்.

  18. Thanks Russellmai thanked for this post
    Likes Russellmai liked this post
  19. #1840
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Gemini Ganesan is the Centroid of the Bermuda Triangle of Love Ocean!!

    ஜெமினியே காதல் மகா சமுத்திரத்தின் பெர்முடா முக்கோணத்தின் புவியீர்ப்பு மையம் !!

    இனிது இனிது........ காதல் மன்னரின் காதலே இப்புவியில் என்றும் இனிது!!


    காதலை கொச்சைப் படுத்தாது பார்ப்பவர் மனதில் மென்மையாக இதயத்தில் மேன்மையாக இதமான உணர்வலைகளை பதமாக பதித்திட்ட காதலின் இணையற்ற திரைச்சக்கரவர்த்தியின் கண்ணியம் மீறாத மிருதுவான காதல் வெளிப்பாடுகளின் அமரத்துவமான காட்சியமைப்புகளின் நினைவலைகள்!!

    காதல் கட(ல)லை 1 : மிஸ்ஸியம்மா!!

    சந்தர்ப்ப சூழலால் கிறித்துவப் பெண்ணான சாவித்திரியும் இந்து வாலிபரான ஜெமினியும் புதுமண தம்பதியராக நடித்து ஒரே வீட்டில் தங்க வேண்டிய தர்ம சங்கடமான நிலையில் சில பல ஊடல்களுக்குப் பின் காதல் மலர்கின்ற வேளையில் கடலலையாக இரண்டுங்கெட்டான் ஜமுனாவின் பிரவேசம் !!

    ஜெமினியின் இயல்பான மெல்லிய நகைச்சுவை இழையோடும் வாலிப வயசுக் குறும்புகளும் ஜமுனாவின் ஈர்ப்புகளும் சாவித்திரியின் காதல் படகை தடுமாற வைக்கும் ரசனை மிக்க எல்லை மீறாத காதல் மன்னரின் கண்ணிய இலக்கண வரையறைக்குட்பட்ட காவியக் காதல் காட்சியமைப்புக்களும் தேன் சொட்டும் பாடல் இசை பின்னணியும் ......மனதுக்குள் குளிராக ஊடுருவும் இனிமை!!




    எல்லாம் உனக்கே தருவேனே...... இனிமேல் உரிமை நீதானே



    எத்தனை காலமாயினும் மனதில் பசுமரத்தாணியாகப் பதிந்துவிட்ட காதல் மன்னரின் தோள் குலுக்கல் !!



    Last edited by sivajisenthil; 6th January 2016 at 12:09 AM.

  20. Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •