Page 166 of 337 FirstFirst ... 66116156164165166167168176216266 ... LastLast
Results 1,651 to 1,660 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #1651
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    மதுஜி
    கற்பூரம் படத்தில் ஈஸ்வரியின் இந்தப் பாடலை வைத்து, டிக்கெட் வேணுமா, காசு வேணுமா என பள்ளியில் நண்பர்கள் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்ததுண்டு. பாடல் ஹிட்டாகவில்லை. ரேடியோவில் எப்போதாவது ஒலிபரப்புவார்கள். எதேச்சையாக நண்பர்கள் சிலர் இந்தப் படத்தைப் பார்த்து விட்டு மறுநாள் பள்ளியில் இந்தப்பாட்டைப் பாடி கிண்டல் செய்வார்கள்.
    கற்பூரம் படம் வெளிவந்த புதிதில் அழகு ரதம் பொறக்கும் பாடல் தான் அடிக்கடி ஒலிபரப்புவார்கள். அம்மா வேணுமா பாடல் கூட சிலோன் ரேடியோவில் தான் அதிகம் இடம் பெற்றது.
    அபூர்வமான பாடலை நினைவூட்டியமைக்கு உளமார்ந்த பாராட்டுக்கள். நன்றி.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Likes Russellmai, madhu liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1652
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    குணசுந்தரி படம் டிவிடியில் வந்த போது ஆர்வத்துடன் வாங்கி ஏமாந்ததுண்டு. கலையே உன் விழி கூட கவி பாடுதே பாடல் இல்லை.

    பின் நீண்ட நாட்களுக்குப் பின் யூட்யூபில் இப்பாடலின் காணொளி தரவேற்றப்பட்டுள்ளது. வேம்பார் மணிவண்ணன் அவர்கள் தரவேற்றியுள்ளார்.



    இந்தப பாடலின் ஒரிஜினல் வீடியோ தானா என்பது சரியாக எனக்குத் தெரியவில்லை. என்றாலும் பாடலைப் பார்க்கும் வாய்ப்பிற்கு நமது உளமார்ந்த் நன்றி.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. Likes rajeshkrv, Russellmai liked this post
  6. #1653
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பாவாடை தாவணி கட்டிய பருவச்சிட்டாக அன்றைய வாலிப மனங்களை நாளுக்கு நாளாய் வாடைக்காற்றாய் வாட்டி எடுத்த புஷ்பலதா. கற்பூரமாய் இப்போது பிடித்துக் கொள்வீர்கள்தானே! இரட்டைஜடை பின்னலில் ஒற்றை ரோஜா வைத்து அம்மா என்று தேடி அழுது தவழும் குழந்தையைத் தூக்கி // அந்தக்குழந்தையே இப்போ பாட்டி ஆகியிருக்குமோன்னோ.. அம்மா வேணுமா அக்கா வேணுமா பாட் முத தபா கேக்கறேன் பாக்கறேன். ட்டாங்க்ஸூ மதுண்ணா அண்ட் வாசுவிற்கு..

    ராம பக்த ஹனுமான் பாடலுக்கும் ரா அண்ட் ம விற்கு தாங்க்ஸ்..

    சரவெடியா.. ஏற்கெனவே இருமல் லொக்லொக் மீட்டிங் கில் பேச்சு பாதி லொக்கில் போய் காற்று வந்து வர்றேங்க்ணா எனச் சொல்லி வீட் வந்தாயிற்று..சரி என்பங்கிற்கு - இப்போது என்னால் முடியா விட்டாலும் - நா ஆஆன் சத்தம் போட்டு தான் பாடுவேன்...



  7. Likes rajeshkrv, Russellmai, madhu liked this post
  8. #1654
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    காமெரா மேதை கர்ணன் படங்களின் பாடல்கள்.

    குறுந்தொடர் 5

    மதுண்ணா!

    சரவெடியா இல்லையா தெரியாது. ஆனால் புதுவெடி. 'கர்ணன்' படங்களின் வரிசையில்.

    எதற்கும் துணிந்த கர்ணனைப் பற்றி நமக்குத் தெரியும். அதையும் மீறி சிவக்குமார் கர்ணனின் படத்தில் 'கௌபாய்' பாணியில் நடித்தது உண்மையாகவே மகா துணிச்சல்தான். அதனால்தான் சிவக்குமார் 'எதற்கும் துணிந்தவ'(ரோ)னோ.

    பாரதிராஜா பாடல்களின் வெள்ளை உடை தேவதைகளை அப்போதே கர்ணன் ஜெயலட்சுமி ரூபத்தில், அதுவும் ஸ்லோமோஷனில் காட்டியிருப்பது வியப்புதான். அசாத்திய திறமை. அதை விழலுக்கிறைத்த நீராய் வீணாக்கிக் கொண்டவர் கர்ணன். இந்த உழைப்பையெல்லாம் வேறு இயக்குனர்களிடம் சிந்தியிருந்தால் பின்னாளில் நல்ல பெயர் பெற்று இருக்கலாம்.

    சிவக்குமாரும் வெள்ளை உடையில் ஸ்லோமோஷனில் எகிறி எகிறிக் குதித்து ஓடி வருகிறார்.

    அப்புறம் வழக்கம் போல குதிரை சப்ளையர் கொடுத்த குதிரைகள் மேல் நாயகன், நாயகி உல்லாசம்.

    பாடலின் பின்னணியில் தவறாது மணியோசை ஒலிக்கும்.

    இப்போது பெய்து வரும் மழை வெள்ளம் போல கழுத்து வரை வெள்ளத்தில் நடந்து வரும் குதிரைகள். ஹீரோயின் துணிச்சல் மிக்கவர்தான். பயமில்லாமல் குதிரையை ஆற்றில் ஓட்டி வருகிறார். இல்லையென்றால் கர்ணன் தோலை உரித்துவிடுவார். குதிரையின் தோலை. அப்புறம் நடிகையின் தோலையும். இரு குதிரைகளுக்கிடையில் பால இணைப்பும் உண்டு. 'குளோஸ்-அப்' குதிரைகளின் கால்களுக்கு மத்தியில் தூரத்தில் ஓடி வரும் ஹீரோ..ஹீரோயின். மணியோடு ஒலிக்கும் ஏதோ புரியாத மொழி கோரஸ். சங்கர்-கணேஷ் இசை.

    ஆனால் பாடலில் ஏதோ ஒரு இனம் புரியா இனிமை இருக்கிறது என்பதுதான் உண்மை. இரண்டாவது கர்ணன் முத்திரைகளான முகம் சுளிக்க வைக்கும் ஆபாசக் கூத்துக்கள் அவ்வளவாக இப்பாடலில் இருக்காது. அதுவே பெரிய விஷயம்.

    ஆனால் லொகேஷன்கள், குதிரைகள், பெரிய பெரிய ஆறுகள், வெட்டவெளிப் பொட்டல்கள் என்று கர்ணன் இதிலெல்லாம் காம்ப்ரமைஸ் ஆகவே மாட்டார்.

    டி.எம்.எஸ், ராட்சஸி இணைந்த இந்தப் பாடல் பல பேருக்கு இப்போதுதான் அறிமுகமாகும். ஆனாலும் இரண்டு மூன்று முறை திரும்ப திரும்பக் கேட்க ஆரம்பித்தால் சுவையான பாடல்தான். கொஞ்சம் வித்தியாசமும் கூட.

    'சுகம் பெற ஒரே வழி துணையென இணைவதுதான்'

    என்று பல்லவி வரி கட் அண்ட் ரைட்டாக ஆரம்பிக்கும்.

    'ஓர் உலகம்.... ஓர் இதயம்' என்று பாடகர் திலகம் இழுத்து லயித்துதான் பாடியிருக்கிறார்.

    ஈஸ்வரி கொஞ்சம் குரலைக் கொஞ்சம் கட்டையாக்கி,

    'தினம் மேகத்தில் ஊறிய துளிகள்' என்று பாட அது வேறு ஏதோ ஒரு பாடலை நினைவுபடுத்தி படுத்தி எடுக்கிறது.

    'தேன்... நிலவு ஹோய்' என்பது அசல் அரக்கி முத்திரை.

    Last edited by vasudevan31355; 22nd November 2015 at 04:16 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. Likes Russellmai, madhu liked this post
  10. #1655
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார்
    எதற்கும் துணிந்தவன் பாடல் அபூர்வமான ஆனால் அட்டகாசமான பாடலைப் பகிர்ந்துள்ளீர்கள். ஏற்கெனவே ஃபடாபட் ஜெயலக்ஷ்மி இருந்ததால், இவருக்கு கர்ணன் ஜெயலக்ஷ்மி, என்றும் ஒரு பெயர் அந்தக்காலத்தில் இருந்ததுண்டு. பாடல் சூப்பர். விவித்பாரதியில் அடிக்கடி இடம் பெறும். சிலோன் ரேடியோவில் சொல்லவே வேண்டாம். இந்தப் பாடலை இசைத்தட்டில் தான் கேட்கவேண்டும். வீடியோவில் ஒலியமைப்பு சரியில்லை.
    இசைத்தட்டின் துல்லியமான ஒலியில் பாடலைக் கேட்டால் அதன் சிறப்பே தனி.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. Likes Russellmai liked this post
  12. #1656
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராகவேந்திரன் சார்!

    'கலையே உன் விழி கூட கவி பாடுதே' பாடல் ஒரிஜினல் பாடல்தான் என்று நினைக்கிறேன். வாயசைப்பு எல்லாம் மிகச் சரியாகவே உள்ளது. அதனால் ஒரிஜினலாகவே இருக்கலாம். நல்ல பாடலுக்கு நன்றி.
    நடிகர் திலகமே தெய்வம்

  13. Likes Russellmai liked this post
  14. #1657
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஏதோ கொயந்த பாட் பக்திப் பாட்லாம் போடறாகளே நாமளும் நம்ம பங்குக்கு கொயந்தபாட் போடலாம்னு வந்தா கர்ணன் பாட் வந்துடுச்சு

    ஆளுக்கொரு முத்தம் உங்க அம்மா கன்னத்திலே
    நாளுக்கொரு கனவு உஙக் அம்மா நெஞ்சத்திலே

    Last edited by chinnakkannan; 22nd November 2015 at 04:23 PM.

  15. Likes Russellmai liked this post
  16. #1658
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராகவேந்திரன் சார்,

    என்னைப் போலவே 'சுகம் பெற ஒரே வழி' பாடலும் தங்களுக்குப் பிடித்தம் என்பதில் ஆச்சர்யம் இல்லாத சந்தோஷம். இந்த ஜெயலட்சுமியின் தங்கையோ, அல்லது மகளோதானே டிவி மற்றும் சினிமா நடிகை மோகனபிரியா?
    நடிகர் திலகமே தெய்வம்

  17. #1659
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'ஆளுக்கொரு முத்தம்' தராமல் மறுபடியும் 'சத்தம் போட்டு' பாடுகிறீர்களே சின்னா! என்ன ஆச்சு?
    நடிகர் திலகமே தெய்வம்

  18. #1660
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //குதிரையை ஆற்றில் ஓட்டி வருகிறார். இல்லையென்றால் கர்ணன் தோலை உரித்துவிடுவார். குதிரையின் தோலை. அப்புறம் நடிகையின் தோலையும்// பட்குதிரைக்கால்களுக்கு ப் பின்னால் காமரா வைத்திருப்பது ரிஸ்க் இல்லியோ..பாடல் என்னமோ மனதில் ஒட்டவில்லை.

    முத்ல் பாட்டும் பாரதி பாட் என்பதால் இதுவும் அஃதே என்பதை..

    நீயில்லாமல் எந்தன் வாழ்வை நினைத்துப் பார்க்க முடியுமா...


  19. Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •