Page 161 of 337 FirstFirst ... 61111151159160161162163171211261 ... LastLast
Results 1,601 to 1,610 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #1601
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy: Tamil Hindu


    Mr C K for you

    நயன்தாரா: வசீகர நடிகருக்குப் பின்னால் 10 ருசிகரங்கள்!


    தமிழ்த் திரையுலகில் ஒரு நாயகி தனது எந்தப் படத்தையும் விளம்பரப்படுத்த மாட்டார்... ஆனா, அந்தப் படங்கள் ரசிகர்களின் கவனம் ஈர்ப்பது உறுதி. 2015-ல் 'மாயா', 'தனி ஒருவன்', 'நானும் ரவுடிதான்' என வரிசையாக மூன்று ஹிட்களில் வலம் வந்த நயன்தாராதான் அந்த நாயகி.

    நம்மில் பலருக்கும் வெள்ளித்திரையில் நடிக்கும் நயன்தாராவைத் தெரியும். ஆனால், திரைக்கு பின்னால் நயன்தாராவிடம் இருக்கும் பல குணங்கள், அவரது துறையிலேயே பெரும்பாலானோரிடம் இல்லை என்பதால், தனித்துவமானது என்றே சொல்லலாம்.

    * 'வில்லு' படத்தின் படப்பிடிப்பு நடந்த்போது, அப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றியவர் வெங்கட் மாணிக்கம். மூளையில் கட்டி வந்ததால், அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது நயன்தாரா ஒரு பெரிய தொகையை அளித்தார். அறுவை சிகிச்சை எல்லாம் முடிந்து, நயன்தாராவுக்கு நன்றி சொல்ல பூங்கொத்தோடு சென்றார் வெங்கட்மாணிக்கம்.

    "ஏன் பூங்கொத்து. இதெல்லாம் வேண்டாம். எனக்கு தோணுச்சி பண்ணினேன். அவ்வளவு தான்." - இதுதான் நயன்தாராவின் பதில்.

    * விரைவில் வெளிவர இருக்கும் 'திருநாள்' படத்தின் படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடைபெற்றது. அப்போது, அந்த ஊரில் உள்ள ஒரு பையனை நயன்தாராவுக்கு உதவியாளராக நியமித்தார்கள். ஒரு கட்டத்தில் அந்தப் பையன் படப்பிடிப்புக்கு வரவில்லை. படக்குழுவினர் விட்டுவிட்டார்கள். 'ஏன் வரவில்லை' என்று விசாரித்தபோது, அந்தப் பையனின் அப்பாவுக்கு உடம்பு சரியில்லை என தெரிந்திருக்கிறது. உடனே நயன்தாரா அளித்த தொகை சுமார் 2 லட்சம். இத்தனைக்கு அந்தப் பையன் நயன்தாராவுக்கு தெரிந்த நாட்கள் வெறும் 5 மட்டுமே!

    * நயன்தாரா ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால், அவரைப் போல படப்பிடிப்பு தளத்துக்கு மிகச் சரியான நேரத்துக்கு வர முடியாது. 8 மணிக்கு படப்பிடிப்பு என்றால், 7:55 மணிக்கு மேக்கப் எல்லாம் முடித்து படப்பிடிப்பு தளத்தில் இருப்பார். கேராவேனில் இருந்து மேக்கப் எல்லாம் போட்டு படப்பிடிப்பு தளத்திற்கு வந்துவிட்டார் என்றால் மதியம் மற்றும் மாலை வேலைகளில் ப்ரேக் விடுவார்கள். அப்போது தான் கேராவேனுக்கு செல்வார். காட்சிகள் இல்லாவிட்டாலும், படப்பிடிப்பு தளத்திலேயே உட்கார்ந்திருப்பார். ஏன் இப்படி உட்கார்ந்திருக்கிறீர்கள் என்று ஒரு இயக்குநர் கேட்டதற்கு, "சார்.. திடீரென்று நாயகன் அல்லது வில்லன் உள்ளிட்ட படக்குழுவினர் வர தாமதமாகலாம். அந்த சமயத்தில் நாயகியை வைத்து ஒரு க்ளோஸ்-அப் காட்சி எடுக்கலாமே என உங்களுக்குத் தோன்றும். அப்படி தோன்றும் போது நான் இங்கு இல்லையென்றால்.." என்று தெரிவித்திருக்கிறார் நயன்தாரா.

    தெலுங்கில் 'ஸ்ரீராம ராஜ்ஜியம்' என்ற படத்தில் சீதையாக நடித்தபோது, ஒருநாள் கூட அசைவம் சாப்பிடாமல் விரதம் இருந்து நடித்துக் கொடுத்தார். அந்தளவுக்கு தொழில் மீது பக்தி.

    * உதவியாளர்கள் மீது அக்கறை தன்னிடம் இருக்கும் உதவியாளர்கள் அனைவரிடமும் மிகுந்த அக்கறைக் கொண்டவர் நயன்தாரா. அது போலவே, அவர்களுக்கு மட்டும்தான் நயன்தாராவின் கோபமும் தெரியும். அவருடன் நீண்ட நாட்களாக பணியாற்றும் ராஜீவுக்கு வீடு, மறைந்த தன்னுடைய மேலாளர் அஜித்துக்கு கார் என தன்னிடம் பணிபுரிபவர்கள் யாருமே கஷ்டத்துடன் இருக்க கூடாது என்று நினைப்பார். தன்னிடம் பணிபுரிந்த ஒருவரின் மனைவி நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்திருக்கிறார். அப்போது சென்னையில் வெள்ளம் வந்திருக்கிறது. நயன்தாராவோ வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்திருக்கிறார். உடனடியாக தன்னிடம் இருந்தவருக்கு போன் செய்து "அவருடைய மனைவி எப்படி இருக்கிறார், அவருடைய வீடு வெள்ளம் பாதித்த பகுதியில் இருக்கிறது. உடனே போய் ஒரு லட்ச ரூபாய் கொடுங்கள். நான் இந்தியா வந்தவுடன் தருகிறேன்" என்று தெரிவித்தார் நயன்தாரா. அவர்கள் கொண்டு போய் பணம் கொடுக்கும் வரை, அடிக்கடி போன் செய்து என்னாச்சு என்று விசாரித்துக் கொண்டே இருந்திருக்கிறார்.

    * மற்ற நாயகிகள் போல நயன்தாரா கிடையவே கிடையாது. எப்போது தன்னிடம் நடிப்பவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து சாக்லெட், பரிசுப் பொருட்கள் என ஏதாவது வந்து கொண்டே இருக்கும். தன்னுடம் இருப்பவர்கள் எப்போதுமே சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பது தான் அவருடைய எண்ணம். 'நண்பேன்டா' படப்பிடிப்பு தளத்தில் ஒரு லைட்மேனுக்கு குறைந்த அழுத்தம் வந்து மயக்கம் போட்டு விழுந்துவிட்டார். முதல் ஆளாக ஒடிச் சென்று, அவருடைய காலை எடுத்து தன் மீது வைத்து நன்றாக தேய்த்து முதலுதவி எல்லாம் செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தவர் நயன்தாரா.

    * நயன்தாராவுடன் ஒருநாள் பழகிவிட்டால் போதும், பிறகு எப்போது எங்கு பார்த்தாலும் அவரே நேரடியாக போய் பேசுவார். அவர்கள் வந்து தம்மிடம் பேசட்டுமே என்று எந்த ஒரு இடத்திலும் நினைக்கவே மாட்டார்.

    * ஒருநாள் 'நண்பேன்டா' படத்தின் படப்பிடிப்பில் நயன்தாராவைக் காண ரசிகர்கள் கூட்டம் கூடிக் கொண்டே இருந்தது. திடீரென்று இயக்குநரிடம் மைக்கை வாங்கிய நயன் "ஹாய் எவ்ரிபடி... இங்கு பல லட்சம் செலவு செய்து படப்பிடிப்பு நடத்துக்கிறோம். நீங்கள் படப்பிடிப்பைக் காணலாம், ஆனால் எதுவும் இடைஞ்சல்கள் வராமல் பாருங்கள்" என ஒரு பெரிய உரையே நிகழ்த்தி இருக்கிறார். அவருடைய உரைக்குப் பிறகு ஒரு சத்தம் இல்லாமல் படப்பிடிப்பு இனிதே நடந்திருக்கிறது.

    * சமீபத்தில் ஒரு நகைக் கடை திறப்பு விழாவுக்கு சென்றார் நயன்தாரா. அங்கு வந்திருந்த கூட்டத்தைப் பார்த்து "எனக்கு இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களா, என்னால் நம்பவே முடியவில்லை" என்று தனது உதவியாளரிடம் மிகவும் நெகிழ்ந்து போய் கூறியிருக்கிறார்.

    * சில பல பர்சனல் பின்னடைவுகளைக் கடந்து, இன்னமும் முன்னணி நடிகையாக வலம் வருவதற்கு, நடிப்புத் திறமையைத் தாண்டி, அவரிடம் நிறைந்துள்ள நல்ல பண்புகளும் முக்கியக் காரணம் என்பார்கள் நயன்தாராவுக்கு நெருக்கமானவர்கள்.

    * நயன்தாராவின் நலம் விரும்பிகள் சிலரிடம் பேசியபோது, அவர்கள் அனைவரும் தவறாமல் ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டார்கள். உலகின் பிரபல நடிகைகள் சிலரிடம் காணப்பட்ட விஷயம்தான். அது... "நயன்தாரா ரொம்ப வெகுளி சார். அவருடன் பழகிவிட்டால் கண்மூடித்தனமாக நம்பிவிடுவது பலம் என்றாலும், பல நேரங்களில் பலவீனமாகவும் மாறிவிடுகிறது."

    இன்று - நவம்பர் 18 - நடிகர் நயன்தாரா பிறந்தநாள்

  2. Thanks chinnakkannan thanked for this post
    Likes Russellmai, RAGHAVENDRA liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1602
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    நடிகையோ நடிகரோ பர்ஸனல் லைஃப்லாம் எப்படின்னு எந்த்க் காலத்திலும் நான் நினைத்ததுகிடையாது.. நயன் தாரா வைப் பொறுத்தவரை ஆரம்பம் முதலே ஆத்மார்த்தமான உழைப்பு தான்..எந்தக் கஷ்டகாலத்திலும் சரி மனதைர்யம் இழக்காமல் மறுபடியும் முன் வந்தது அசுரத்தனமான உழைப்பினால் தான்.. நல்லமனம் அவருடைய கூடுதல் ப்ளஸ்..

    தாங்க்ஸ் எஸ்.வாசு சார்..

  5. Thanks JamesFague thanked for this post
    Likes Russellmai, RAGHAVENDRA liked this post
  6. #1603
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சரித்திரத்தை மாற்றிய பாடல்

    தமிழ் சினிமா சரித்திரத்தை,அது சென்று கொண்டிருந்த பாதையை,
    அது தமிழ் மக்களுக்கு அளித்துக்கொண்டிருந்த பங்களிப்பை அதனினும் உயர்ந்த,ஏன் உலகமே திரும்பிப்பார்த்து வியக்க வைத்த பெருமை இந்தப் பாடலில் நடித்த இளைஞரையே சாரும்.தமிழ் பேசும் அனைத்து உள்ளங்களிலும் எதிரொலித்த பெருமை இந்தப் பாடலுக்குண்டு.அந்த இளைஞரின் கண் அசைவும் காலசைவும் கூட கூர்ந்து கவனிக்கப்பட்டன.பெரும் பேரிகைகள் கூட ஏற்படுத்த முடியாத கிளர்ச்சியை அந்த இளைஞரின் ஒரு விரலசைவு ஏற்படுத்தியது.அவருடைய கண்களின் தீட்சண்யத்தை தாங்கும் சக்திகள் கூட அவர் எதிரில் நின்றுபேச தயக்கம் காட்டியது .ஒரு மனிதனின் மூலம் இத்தனை கலை நுட்பங்களை சகல அவயங்களிலும் வெளிப்படுத்தமுடியுமா?என்று வியப்புண்டாயிற்று.அந்த வியப்பு பிரமையாய் மாறி அந்த பிரமையிலிருந்து மக்கள் விடுபடும் முன்னரே அந்த இளைஞனின் அடுத்தடுத்த நடிப்புக்கணைகளால்
    தாக்குண்டு அந்த பிரமையிலிருந்து விடுபட இயலாத நிலைமை இன்று வரை தொடர்கிறது.
    அது எந்த திரைப்படம் என்பதையும் அந்த நடிகர் யார் என்பதையும் தமிழ்நாட்டில் கேட்டால்அதற்கான பதிலை கோடி உதடுகள் உரக்கச்சொல்லும்.
    அந்த இளைஞரை தான் நடிப்புலக மகானாக பின்னாட்களில் தமிழ்மக்கள் தம்நெஞ்சங்களில்
    ஏற்றிக்கொண்டனர்.
    அவரின்சிறுசிறு அசைவுகள் கூட ஒரு பிரளயத்தையே திரையரங்குகளில் ஏற்படுத்தியது.

    குணசேகரனாக அவதாரம் எடுத்த
    அந்தக் காவியத்தில் ,தீப்பிளம்பு போல் வந்து
    நின்று தாண்டவமாடிய அந்தப் பாடலை பார்த்தோமானால் நம்மை
    மீறிய ஒரு உணர்ச்சி உடலிலே பரவுவதை உணரலாம்.

    சின்ன அசைவுகள்தான்.
    இசைக்குத் தகுந்தபடி தலையாட்டலிலும் உடலசைவிலும்காட்டப்படும் அந்த புது விதமான நடிப்பு , இப்பொழுது கூட சிந்தையிலபெரும் வியப்பை விதைக்கின்றது என்றால் அன்று வந்த காலகட்டத்தில் அது எத்தனை பிரமிப்பை ஏற்படுத்தியிருக்கும்.
    முழங்கால் அளவுக்கு சுருட்டிய பேன்ட்,இன் செய்யப்பட்டும்,முன் நெற்றிக்கு சற்று மேலே அணிந்த தொப்பியும்,முழங்கை அளவுக்கு மடித்த சர்ட்டும் அணிந்த அந்த உருவம்தானே உலகத்தரம் வாய்ந்த முத்திரையாக மாறிய கதையை அப்பொழுதல்லவா அரங்கேற்றியது.
    உடம்பை திருப்பி கால்களை விந்திவிந்தி நடந்து ஆடியபடி ஆரம்பிக்கும் அந்த வித்தியாசமான நடையுடன் ஆடும் ஆட்டத்தை திரையுலகம் இன்றுவரை வியப்புடன்தானே பார்த்துக்கொண்டிருக்கிறது.
    அப்படியே சென்று தண்ணீர் பைப் திட்டை பச்சைக்குதிரை தாண்டி அதே குதூகலத்துடன்

    திட்டின் மேல்நின்று,

    "தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை யெல்லாம்
    காசுமுன் செல்லாதடி - குதம்பாய்
    காசு முன் செல்லாதடி."

    பொதுஜனப் பார்வையாளர்கள் அதிகம பேர் ஒரு நடிகருக்கு ரசிகர்களாக மாறியது இந்தப்பாடலுக்காகத்தான் தான் இருக்கும்.
    காசு எனும் போது சுண்டிக்காட்டுவது,
    தொப்பியை சரி செய்வது
    இது போன்ற மின்னலாய் வந்து போகும் அந்த சின்னஞ்சிறு ஷாட்களில கூட நடிப்பின் வீச்சு கூர்மையாக இருக்கும்.

    ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில்
    காசுக்குப் பின்னாலே - குதம்பாய்
    காசுக்குப் பின்னாலே.

    சாட்சியான பணம் கைவிட்டுப்
    (இமைக்காமல் உற்று கவனித்தால் மட்டுமே இந்த இடத்தில் அவர் போடும் அசத்தலான ஸ்டெப்பை பார்க்கமுடியும்.)

    அது போனபின்
    சாட்சி கோர்ட்டு ஏறாதடி - குதம்பாய்
    சாட்சி கோர்ட்டு ஏறாதடி.

    நாடக சபாக்களில் இருந்தபோது எல்லோருக்கும் கிடைத்த அனுபவமும் பயிற்சியும்தானே இவருக்கும் கிடைத்திருக்கும்? ஆனால் அதையெல்லாம்
    மீறிய அதிசய நடிப்பை முதல் படத்திலேயே எப்படி வெளிப்படுத்தினார்? என்பதுதான் அப்போதைய கலைஞர்களின் கேள்வியாக இருந்திருக்கும் என்பது திண்ணம்.

    பைபையாய் பொன் கொண்டோர்
    பொய் பொய்யாய் சொன்னாலும்
    மெய் மெய்யாய் போகுமடி - குதம்பாய்
    மெய் மெய்யாய் போகுமடி.

    பெருமாள் முதலியாரின் இலட்சியம் எவரெஸ்ட் தொட்டதும்,
    கணேசனை தவறாக எடை போட்டவர்களின் கணிப்பு தரைமட்டமும் ஆகியிருக்கும் இப்பொழுது.

    கைகளை பக்கவாட்டில் மேலே தூக்கி,விரல்களை விரித்தும், சுழற்றிக்கொண்டும் சுற்றி சுற்றி ஆடும் அந்த ஆட்டத்தை,கடும் நடன பயிற்சி பெற்றவர்கள் கூட அவ்வளவு அழகாக வெளிப்படுத்தமுடியுமா?




    நல்லவரானாலும் இல்லாதவரை
    நாடு மதிக்காது - குதம்பாய்
    நாடு மதிக்காது.

    கல்வி இல்லாத மூடரை கற்றோர் கொண்டாடுதல்
    வெள்ளிப் பணமடியே - குதம்பாய்
    வெள்ளிப் பணமடியே
    பாடிக்கொண்டே சூதாடிகளிடமிருந்து பணத்தை தூக்கிக்கொண்டு

    சடாரென்று திரும்பி கைககளை ஆட்டிக்கொண்டே கால்களை மாற்றி மாற்றி குத்தாட்டத்தில் கலக்கியெடுப்பார்.
    ஆர்ப்பாட்டமில்லாத ஆட்டம் தான்.ஆனாலும் அது விளைவித்த பாதிப்பு? அதை நாடே அறியும்.

    ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே - காசு
    காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே

    தெருக்கூத்தாட்டத்தை ஏளனமாக பார்க்கும் எண்ணத்தை கொண்டவர்கள் யாராவது இந்த ஆட்டத்தை பார்த்தால் அவர்கள் தங்களின் எண்ணத்தை மாற்றிக்கொள்வார்கள்.அந்த தெருக்கூத்தைஅவர் பார்த்ததால்தானே நமக்கு இந்த சிவாஜிகணேசன் கிடைத்தார்.அதற்கு பிரதியுபகாரமாக இந்த காட்சியின் மூலம்அதற்கு ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக்கொடுத்து விட்டாரல்லவா!

    உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே
    உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே

    முட்டாப் பயலையெல்லாம் தாண்டவக்கோனே - காசு
    முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே

    கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே -

    தாண்டவக்கோனேவை இழுக்கும்போது பெரியவரின் மேல் சாய்ந்திருப்பார்.அப்போது பின் முதுகு குலுக்கலில் எதிரொலிப்பார் தாண்டவக்கோனே என்பதில் 'னேனேனேனேனே 'என்பதை. உடல்மொழி நடிப்பை உலகிற்கு காட்டிய அவதார புருஷனல்லவோ அவர்.
    மூக்கைச்சிந்தி பெரியவரின் மேல் துடைத்துவிட்டு ஒரு பார்வை பார்ப்பார் பாருங்கள்.யப்பா.என்ன பார்வை அது?என்ன ஒரு தீட்சண்யமான பார்வை.மின்னல் மின்னி விட்டுப் போவது போலே.

    பிணத்தைக்
    கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே - பணப்
    பெட்டிமேலே கண் வையடா தாண்டவக்கோனே

    பாடலின் முடிவில் நடக்கும் நடை,தொப்பி வீசும் ஸ்டைல்,அந்த கையசைப்பு,நடந்து செல்லும் கம்பீரம்
    எல்லாம்,
    மற்ற இந்திய சினிமாக்களையெல்லாம் புறந்தள்ளி வரலாறானது தனிக்கதை.


  7. Thanks vasudevan31355 thanked for this post
    Likes sss, Russellmai, rajeshkrv, vasudevan31355 liked this post
  8. #1604
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராகவேந்திரன் சார்,

    நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு தங்களின் 'நினைத்துப் பார்க்கிறேன்' பதிவு அற்புதம். அத்தனை பேர் மனதில் இருப்பதையும் ஒட்டுமொத்தமாக ஒரே பதிவில் கொண்டு வந்து விட்டீர்கள். இறக்கப் போகும் மனிதனின் மனநிலையை அழகாய் விளக்கியமைக்கு நன்றி!

    இந்தப் பாடலுடன் 'ஆலயமணி' பாடல் காட்சியைத் தொடர்புபடுத்தி நினைவூட்ட தங்களால் மட்டுமே முடியும். அருமையான பாடல் ஆய்வு. கடைசி வரை மறக்க முடியாதது.

    இணையத்திலும் சரி! வெளியிடங்களிலும் சரி! பாதகாணிக்கை இன்னமும் நடிகர் திலகத்தின் பட வரிசையில்தான் இருக்கிறது. 'பாத காணிக்கை' படத்தில் நடிகர் திலகம் நடித்திருப்பதாகத்தான் பல இணையத் தகவல்கள் இன்றும் கூறுகின்றன.

    ராட்சஸியின் அமர்க்களமான வண்ணப் புகைப்படத்திற்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. Thanks RAGHAVENDRA thanked for this post
    Likes Russellmai, RAGHAVENDRA, rajeshkrv liked this post
  10. #1605
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    vanakkam ji nalama

  11. #1606
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy: Dinamani

    பானுமதி: 5. அண்ணா எனக்கு அளித்த தனி கவுரவம்!


    1953-ல் சண்டிராணி, 1954-ல் மலைக்கள்ளன், 1955-ல் கள்வனின் காதலி என ஹாட்ரிக் அடித்த பானுமதியின் ஆண்டாக 1956 ஆகிப்போனது. காரணம், அலிபாபாவும் 40 திருடர்களும், மதுரை வீரன், தாய்க்குப் பின் தாரம், ரங்கோன் ராதா என்று ஒரே வருஷத்தில் அவர் அடுத்தடுத்து விளாசித் தள்ளிய மகத்தான நாலு சிக்ஸர்கள்!

    முதலில் தைத்திருநாளுக்கு அலிபாபா வெளியானது. எம்.ஜி.ஆர்., டைட்டில் ஹீரோ அவ்வளவே. அவரை ஆட்டுவிக்கும் பம்பரமாக அதிபுத்திசாலி ‘மார்ஜியானா’ மீதே முழுக் கதையும் பயணிக்கும்.

    ‘எனக்கு டான்ஸ் பிடிக்கவே பிடிக்காது. சுட்டுப்போட்டாலும் வராது’ என்று தனது ஒவ்வொரு நேர்காணலிலும் ரிபீட் செய்வார் பானுமதி. அலிபாபாவில், மார்ஜியானாவாக ஆடிய அவரது நடனங்கள் பேசப்பட்டன.



    ‘உன்னை விடமாட்டேன் உண்மையில் நானே’, ‘அழகான பொண்ணு நான் அதுக்கேத்த கண்ணுதான்’ போன்ற நாட்டியங்களிலும் சரி, ‘மாசிலா உண்மைக் காதலி’ டூயட்டிலும் சரி, மெல்லிய அசைவுகளும், தமிழ் சினிமாவின் முதல் வண்ண ஓவியத்தை ஓஹோவென்று ஆக்கின.

    அலிபாபா விளம்பரங்களில், ஆரம்பத்தில் பானுமதிக்கே பிரதான இடம் கிடைத்தது. காலப்போக்கில், எம்.ஜி.ஆர். வசூல் ராஜா ஆன பின்பு அது மாறியது.

    எம்.ஜி.ஆர். நடித்த ஹிந்தி ரீமேக்குகள் எதுவும், அலிபாபாவின் புகழைக் கடைசி வரையில் பெறவில்லை. அதற்கு அடிப்படைக் காரணம், பானுமதியின் ஒப்பற்ற நவரச நடிப்பு!

    பானுமதி நடித்து தமிழ், தெலுங்கு இருமொழிப் படமாக விக்ரம் ஸ்டுடியோஸின் ‘தெனாலிராமன்’, பிப்ரவரியில் வெளியானது. அதில் கிருஷ்ணதேவராயராக வரும் என்.டி.ராமாராவை ஆடிப்பாடி மயக்கும், டெல்லி பாதுஷாவின் பெண் ஒற்றன் வேடம் பானுமதிக்கு.

    தெலுங்கு பேசிய தெனாலிராமன், ஏ. நாகேஸ்வர ராவ் என நினைக்கிறேன். பின்னாளில், ‘சித்தூர் வி. நாகையா, சிவாஜி, பானுமதி, என்.டி.ஆர். என்று நான்கு பத்மஸ்ரீ பட்டம் பெற்றக் கலைஞர்கள் பங்கேற்ற ஒரே தமிழ்ப் படம்!’ என்கிற பெருமை, தெனாலிராமனுக்குக் கிடைத்தது.

    அதில் ஜோடியாக நடித்த சிவாஜி – ஜமுனா இருவரும் எம்.பி.யாகவும் பதவி வகித்தனர். தி.மு.க.விலிருந்து சிவாஜி வெளியேறிய தருணம். அதனால், தமிழில் தெனாலிராமன் தோல்வி அடைந்தது என்று கண்ணதாசன் போன்றவர்கள் குறிப்பிட்டனர்.

    முதலும் கடைசியுமாக, பானுமதியின் 7 தமிழ்ப்படங்கள் 1956-ல் வெளியாகின. மற்றதில் - சதாரம், ஜெமினி கணேசன் ஜோடியாக பானுமதி நடித்த முதல் படம்.

    ‘பானுமதியோடு நடிக்கத் தவம் கிடந்தார் காதல் மன்னன்!’ என்று எழுதினால், அமரர் ஜெமினி கணேசன் நிஜமாகவே பூரித்துப்போவார். அந்த அளவுக்கு அவருக்கு பானுமதியைப் பிடிக்கும்!

    ‘ஸ்வர்க்கஸீமா பார்த்ததிலிருந்து உங்களின் கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவனானேன்’ என, வருஷக்கணக்கில் பானுமதியிடம் நேரிடையாகச் சொல்லத் துடித்தவர், சதாரம் பட செட்டில் அதைக் கூறி சந்தோஷமாக நடித்தார்.



    சதாரம் என்பது கதையில் பானுமதியின் பெயர். ஜெமினிக்காக டி.எம். சவுந்தரராஜன் குரலில் ஒலித்த ‘நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே...’ என்கிற கா.மூ. ஷெரீஃபின் உள்ளத்தை உருக்கும் வரிகள் மட்டுமே சதாரத்துக்கு இன்றும் முகவரி.

    சதாரம் தோல்வி அடைந்த அதே தமிழ்ப் புத்தாண்டு தினத்தில், மக்கள் திலகத்தின் முதல் வெள்ளிவிழாப் படமான மதுரை வீரனும் ரிலீஸானது. அது, படத்தில் பொம்மியாக வாழ்ந்த பானுமதிக்குப் புது மகுடம் சூட்டியது.

    எம்.ஜி.ஆரும் சிவாஜியும் சேர்ந்து செய்த கலவை பானுமதி. நடிப்பில் அவர் கணேசனுக்கும் மேலே. மற்ற தொழில்நுட்பத் தலையீடுகளில், பானுமதி வாத்யாருக்கும் வாத்யார்.

    முதல் படமான ‘வர விக்ரயம்’ தெலுங்கு சித்திரத்தின் டைரக்டர் சி.புல்லையாவை, பானுமதியின் அப்பா பிடுங்கி எடுத்தார். தந்தை சொல் தட்டாமல், அதைத் தன் நடிப்புத் தொழிலில் ஓர் அங்கமாகவே ஆக்கிக்கொண்டவர் பானுமதி. பானுமதிக்குத் தெரியாமல் அவர் நடிக்கும் படங்களில் காற்றுகூட நுழைய முடியாது.

    தமிழ் சினிமாவுக்கு கிருஷ்ணா பிக்சர்ஸ் லேனா செட்டியார் வழங்கிய வெற்றிகள் நிறைய. மதுரை வீரன் அவர்களது மகத்தான தயாரிப்பு. அதன் இயக்குநர் டி. யோகானந்த், மதுரை வீரனுக்கு முன்பாக அதே நிறுவனத்துக்கு, என்.டி. ராமாராவ் - பத்மினி நடிக்க, தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் ‘மருமகள்’ படத்தை டைரக்ட் செய்தவர். மருமகளுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது.

    மதுரை வீரனில் பானுமதி நடிக்க வந்தது பற்றி யோகானந்த் கூறியது -

    ‘பானுமதியை, ரத்னகுமார் ஷூட்டிங்கில் நான் உதவி கேமராமேனாக இருந்தபோது பார்த்திருக்கிறேன். நேரிடையான அறிமுகம் கிடையாது. லேனா செட்டியார், பானுமதியை மதுரை வீரன் படத்தில் ஒப்பந்தம் செய்துவிட்டு, அவரிடம் ‘இதை யோகானந்த் டைரக்ட் செய்யப்போகிறார்...’ என்று சொல்லி இருக்கிறார்.



    ‘டைரக்டர் பெயர் புதுசா இருக்கே. ஏற்கெனவே இவர் பணியாற்றிய படத்தை நான் பாத்தால் தேவலை!’ என்றிருக்கிறார் பானுமதி.

    லேனா செட்டியார், நான் இயக்கிய ‘அம்மலக்கலு’ படத்தை அனுப்பிவைத்தார். பானுமதி தன்னுடைய தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வெளிவரும்போது, தற்செயலாக நானும் லேனா செட்டியாரும், வேறொரு வேலையாக பரணி ஸ்டுடியோவுக்கு சென்றிருந்தோம்.

    பானுமதியிடம் உடனே என்னை அறிமுகப்படுத்தினார் லேனா.

    ‘என்ன செட்டியாரே... யோகானந்த் என்றால் பெரிய ஆளா, மீசை முறுக்கோடு இருப்பார் என்று பார்த்தால், இவர் ரொம்பச் சின்னவராக இருக்கிறாரே...!’ என்று என்னைப் பார்த்துச் சிரித்தார் பானுமதி.

    என்னிடம், ‘அந்தப் பெரிய மருமகள் வேஷத்தை (படத்தில் லலிதா நடித்தது), எனக்குக் கொடுத்திருந்தால் பிய்த்து உதறியிருப்பேன்’ என்றார்.

    உடனே லேனா, ‘லலிதாவுக்குத் தெலுங்கே தெரியாது. அவரையே இவ்வளவு நல்லா நடிக்க வெச்சிருக்கார். படமும் நன்றாக ஓடியது’ என்றார்.

    ‘சரி. உங்க படத்துல, டைரக்டர் சொல்றபடி நான் நடிக்கிறேன். இன்னொன்றையும் ஆருடமாகச் சொல்கிறேன் - உங்க படம் சக்ஸஸ்’ என்றார் மகிழ்ச்சியோடு.

    அனுபவ நடிகையாக இருப்பினும், புதியவனான நான் சொல்வதையெல்லாம் கவனமாகக் கேட்டு, எதிர்த்து எதுவும் சொல்லாமல், ஒரு குழந்தையைப்போல மிகவும் இயல்பாகப் பழகி நடித்தார்.

    காமெடி, சோகம், உணர்ச்சிகரமான காட்சிகளில் பொம்மி வேடத்துக்கு உயிர் ஊட்டினார். அவர் ஆரூடம் சொன்னபடி, படமும் வெள்ளிவிழாவைத் தாண்டி ஓடியது.

    எங்கள் இருவருக்கும் இப்படத்தின் மூலம் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

    *

    சாண்டோ சின்னப்பா தேவர், எம்.ஜி.ஆரை வைத்துப் படம் தயாரிக்க விரும்பி, முதலில் அவர் தேடிச் சென்ற கதாநாயகி பத்மினி. அவரது கால்ஷீட் கிடைக்கவில்லை.

    தேவர், நாயகி கிடைக்காத அவஸ்தையை எம்.ஜி.ஆரிடம் சொன்னார்.

    ‘அண்ணே ஹீரோயின் விஷயமெல்லாம் பெரிய பிரச்னையா. பத்மினி கிடைக்கலேன்னா பானுமதியை நடிக்கவெப்போம்’ என்றார் எம்.ஜி.ஆர்., அலட்சியமாக.



    ‘பானுமதியா...!’ தேவர் வாயைப் பிளந்தார். பானுமதி அப்போது நடித்து வந்தது, மிகப்பெரிய ஸ்டூடியோ அதிபர்களின் படங்களில். சினிமாவில், அடியாள்களில் ஒருவராக ஆஜராகி, ஓரளவு தெரிந்த முகமாக வளர்ந்துகொண்டிருந்தார் தேவர்.

    எம்.ஜி.ஆரை நம்பி, சொந்தத் தயாரிப்பிலும் முழு மூச்சாக இறங்கிவிட்டார்.

    ‘அந்த அம்மா ஒத்துக்குவாங்களா...? நானும் புதுசு. டைரக்ட் பண்ணப்போற என் தம்பிக்கும் முதல் படம்’ - தேவரின் குரல், அவரையும் அறியாமல் நடுங்கியது.

    ‘நான் இருக்கேன் இல்ல. நானே அவங்ககிட்ட பேசி கால்ஷீட் வாங்கித் தரேன். போதுமா...!’ சொன்னதோடு இல்லாமல், தேவரை அழைத்துச் சென்று பானுமதியிடமும் அறிமுகம் செய்தார்.

    ‘இவர் என்னோட உயிர் நண்பர். என்னை ஹீரோவா போட்டு புதுப்படம் எடுக்கப்போறாரு. நீங்க ஜோடியா நடிக்கணும்னு கேட்க வந்திருக்காரு’.

    ‘அதுக்கென்ன ஆக்ட் பண்ணாப் போச்சு. சந்தோஷமா போங்க. மலைக்கள்ளன் மாதிரி உங்க படமும் சக்சஸ் ஆகும்’.

    பானுமதியின் நாக்கு பலித்தது. தேவருக்கும் நல்ல நேரம் வாய்த்தது!

    1955 ஜூலை 7-ல், தேவர் பிலிம்ஸின் முதல் கதாநாயகியாக பானுமதி நடிக்க, ‘தாய்க்குப் பின் தாரம்’, வாஹினியில் தொடங்கியது. 1956 செப்டம்பர் 21-ல் வெளியானது.

    ‘ஆஹா நம் ஆசை நிறைவேறுமா...’ டி.எம்.சவுந்தரராஜன் - பானுமதி குரல்களிலும், ‘அசைந்தாடும் தென்றலே தூது செல்லாயோ’, ‘என் காதல் இன்பம் இதுதானா...?’ பானுமதி தனித்துப் பாடியும் சூப்பர் ஹிட் ஆயின. இன்றுவரையில், அனைத்து வானொலிகளிலும் ஒலிக்கிறது.

    தேவர் பிலிம்ஸ் தயாரிப்புகளில் அது மிக அதிக லாபத்தை ஈட்டியது. முதல் முயற்சியிலேயே சுளையாக முப்பதாயிரம் லாபம் வந்ததாக தேவரே பெரும் பூரிப்புடன் குறிப்பிட்டுள்ளார்.

    தாய்க்குப் பின் தாரம் வெளியான அடுத்த வெள்ளிக்கிழமை ரிலீஸானது, ரம்பையின் காதல்.

    தென்னாட்டின் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்தவர், இமேஜ் பார்க்காமல் ‘டணால்’ தங்கவேலுவுடனும் நடித்தார்.

    எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களைப்போல ‘ரம்பையின் காதல்’ பல மறுவெளியீடுகளை வெற்றிகரமாகச் சந்தித்தது. அதைத்தவிர, ‘சமரசம் உலாவும் இடம்’ என கம்பீரமாக சீர்காழியின் பாடல், வான் அலைகளில் இன்றும் மிதக்கிறது.

    மெகா கூட்டணி என்பார்கள். தமிழ் சினிமாவில், நிஜமாகவே அண்ணாதுரை, என்.எஸ். கிருஷ்ணன், மு.கருணாநிதி, வி.சி. கணேசன், பானுமதி என்று ஜாம்பவான்கள் ஐவர் இடம் பெற்ற ஒரே படம், ரங்கோன் ராதா.

    ‘தி.மு.க.விலிருந்து நம்மை பிரிந்த கணேசன்தான், எனது இந்தக் கதையில் நடிக்க வேண்டும்’ என்று அண்ணா வலியுறுத்திக் கூறினார்.

    மேகலா பிக்சர்ஸ் சார்பில், கலைஞர் திரைக்கதை வசனம் எழுதித் தயாரித்த படம்.

    திருப்புமுனையை ஏற்படுத்தும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் முதலும் கடைசியுமாக கலைவாணர். அன்றைய இளம் ஹீரோ எஸ்.எஸ். ராஜேந்திரனின் அம்மாவாக பானுமதி நடித்தார்.

    1956 நவம்பர் முதல் தேதி, தீபாவளியன்று ரங்கோன் ராதா வெளியானது.

    மைத்துனி தங்கம் (எம்.என். ராஜம்) மேல் காதல் வயப்பட்டு, அவளையும் சொத்துக்காக மணந்துகொள்ளும், சீமான் ‘கோட்டையூர் தர்மலிங்க முதலியாராக’ சிவாஜி கணேசன்!



    மிக மாறுபட்ட உடல்மொழி, கூரிய பார்வை, கத்தி போன்ற கருணாநிதியின் உரையாடல்களை நடிகர் திலகத்தின் உதடுகள் உச்சரித்த பாங்கு, ஓங்கிய குரலில் சத்தம் போடாமல், மெல்லப் பேசியே சதி வலை விரிக்கும் கள்ளத்தனம்... அவை எதுவுமே, அதற்கு முன்போ பின்போ சிவாஜி படைத்தது கிடையாது. அப்படியோர் அமுத மழையான நடிப்பை அவரது வேறு எந்த சினிமாவிலும் நீங்கள் பார்த்திருக்க முடியாது.

    நெருப்பைக் கக்கும் கணவரின் சுடு சொற்களைப் பொறுத்துக்கொண்டு வாழும் மகா பத்தினியாக, புருஷனால் பைத்தியம், பேய் பிடித்தவள் என ஊராரிடம் அடையாளம் காட்டப்படும் பரிதாபத்துக்குரிய ரங்கம்மாளாக பானுமதியின் அழுகையும் ஆர்ப்பாட்டமும், ஹிட்லரையும் கண்ணீர் விடச் செய்யும்!

    ‘ரங்கோன் ராதாவில் நான்தான் கதாநாயகியாக நடிக்க வேண்டும். பானுமதியால் மட்டுமே ரங்கம்மாளாகச் சிறப்பாக நடிக்க முடியும் என்று ஆணித்தரமாகச் சொல்லி என்னையே நடிக்கவைத்தார் அண்ணா. என் நடிப்பில் அந்த அளவுக்கு அண்ணாவுக்கு நம்பிக்கையும் பிடிப்பும் உண்டு. நான் நடித்த பல படங்களைப் பார்த்துப் பாராட்டி இருக்கிறார். ரங்கோன் ராதா படப்பிடிப்பு நடந்த சமயம். நான் நடிக்கும் நேரத்தில், தினந்தோறும் அண்ணா செட்டுக்கு வருவார். அண்ணா எனக்கு அளித்த தனி கவுரவம் அது!’ - பானுமதி.

    அரசியல் காரணமாக, ரங்கோன் ராதாவை வி.சி.கணேசன் தவிர்த்திருந்தால், தமிழ் சினிமாவின் நடிப்புக் களஞ்சியத்தில் சில வைரக்கற்கள் காணாமல் போயிருக்கும்.

    ‘பானுமதியா... சிவாஜியா... நடிப்புப் போட்டியில் யார் ஜெயிப்பார்கள்...?’ என அனைத்து ரசிகர்களையும் வாய் பிளக்கவைத்தது ரங்கோன் ராதா. இறுதியில், இருவருமே வென்றார்கள்.

    சிவாஜியும் பானுமதியும், 1956-ம் ஆண்டின் மிகச் சிறந்த கலைஞர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சென்னை சினிமா ரசிகர் சங்கம் அதற்காக நடத்திய விழா மியூசிக் அகாடமியில் நடைபெற்றது. பானுமதியால், வேலைப் பளு காரணமாக நேரில் வந்து விருது பெற முடியவில்லை.



    நடிகர் திலகமே பானுமதிக்கான பரிசையும் மாலையையும் பெற்றுக்கொண்டு, நேரே வாஹினி ஸ்டுடியோவுக்கு பறந்தார். அங்கு நடித்துக்கொண்டிருந்த பானுமதியிடம் அவற்றைக் கொடுத்து மனமாரப் பாராட்டினார். வேறு யாருக்கு அந்தப் பாக்கியம் கிடைத்திருக்கும் பானுமதியைத் தவிர!

    பானுமதியை நடிப்பின் இமயமாக, இதயத்தில் வி.சி. கணேசன் பதியம் போட்டு வைத்ததன் பலன், நமக்கு ரங்கோன் ராதா கிடைத்தது.

    ரங்கோன் ராதாவில் பானுமதியோடு நடித்ததை கணேசன் தன் சுயசரிதையில் நினைவுகூர்ந்துள்ளார்.

    ‘கேஸ் லைட்’ என்கிற ஆங்கிலப் படத்தின் தழுவல்தான் ரங்கோன் ராதா. அதில் நல்லவன்போல் நடிக்கும் ஒரு தீயவன் பாத்திரம். வில்லனாகவும் நடிக்க வேண்டும்; மக்களிடம் இருக்கும் நல்ல பேர் போகாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். எனவே, மிகவும் கவனமாக நடிக்க வேண்டிய வேடம்.

    கள்வனின் காதலி, ரங்கோன் ராதா இந்த இரண்டு படங்களிலும் விசேஷம் என்னவென்றால், நான் ஒரு பெரிய நடிகையுடன் நடித்தேன் என்பதுதான். பானுமதி போன்ற பெரிய நடிகையின் நடிப்புக்கு ஈடு கொடுக்க வேண்டும். நமது நடிப்புத் திறமையால்தான் அதைக் காட்ட வேண்டும். பானுமதி அம்மா மிகத் திறமைவாய்ந்த நடிகை. அவர்களுக்கு இணையே கிடையாது எனலாம்.

    அறிஞர் அண்ணாவே நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் என்று அவர்களைப் பாராட்டிக் கூறியுள்ளார். அவர்களுடன் நடிக்கும்போது, எனக்கு ஒரு புது அனுபவம் ஏற்பட்டது. அப்பொழுது நான் மிகச் சின்னப் பையன். பானுமதி அவர்களுடன் நடித்தேன் என்பதில் எனக்குப் பெருமை!’

  12. Likes Russellmai liked this post
  13. #1607
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy: Tamil HIndu

    சினிமா எடுத்துப் பார் 34: காதல் பூக்கும் தருணம்!


    எஸ்பி.முத்துராமன்

    ‘பெத்த மனம் பித்து’ படம் வெற் றிக்குப் பிறகு எங்கள் குழுவின் மேல் நம்பிக்கை வைத்து, அடுத்தடுத்து படம் எடுக்க அட்வான்ஸ் கொடுக்க பலர் முன் வந்தார்கள். நல்ல கதை, நல்ல கம்பெனி என்று பார்த்து இறங்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தோம். இந்நிலையில் ‘விக்டரி மூவிஸ்’ பட நிறுவனத்தில் தயாரிப்பு நிர்வாகியாக இருந்த விஜய பாஸ்கர் படம் எடுக்க ஆசையோடு எங்களை அணுகி ‘‘என் கையில் 25 ஆயிரம் ரூபாய் உள்ளது. தொழிலும் தெரியும், எல்லா விநியோகஸ்தர்களும் நல்ல பழக்கம், படம் தொடங்குவோம்’’ என்று சொல்லி அவர் பெயரிலேயே ‘விஜய பாஸ்கர் பிலிம்ஸ்’ என்ற கம்பெனியை ஆரம்பித்தார்.

    அப்போது பஞ்சு அருணாசலம் நகைச் சுவை கதைகளை எழுதி நல்ல பெயர் பெற்று வந்தார். கவியரசு கண்ணதாச னின் அண்ணன் கண்ணப்பனின் மக னான பஞ்சு அருணாசலம், கண்ணதாச னிடம் உதவியாளராக இருந்துவந்தார். பின்னர் ஒருகட்டத்தில் படங்களுக்கு வசனம் எழுதச் சென்றார். அவர் எழுதிய முதல் மூன்று படங்கள் பாதியிலேயே நின்றுவிட்டன. அதனால் ‘பாதி படம் பஞ்சு அருணாச்சலம்’ என்றே அவருக்கு பெயர். அதன் பிறகு நகைச்சுவை கதை களுக்குத் திரைக்கதை எழுதி வெற்றி பெற்றார். சினிமா உலகில் தோல்வி களைக் கண்டு அஞ்சாமல், தொடர்ந்து போராடி வெற்றிபெற்றவர் பஞ்சு அருணாசலம்.

    அவர் எங்களுக்கு முதன்முதலில் எழுதி கொடுத்த படம் விஜய பாஸ்கர் தயாரித்த ‘எங்கம்மா சபதம்’. இதில் முத்து ராமன், சிவகுமார், ஜெயசித்ரா, விதுபாலா, மனோரமா, அசோகன் நடித் தார்கள். இசை விஜய பாஸ்கர். கன்னடத் திரை இசையுலகில் புகழ் பெற்றிருந்த அவரை ‘கன்னடத்து எம்.எஸ்.வி’ என்றே அழைப்பார்கள். அவருடைய இசையில் ‘அன்பு மேகமே இங்கு ஓடி வா’என்ற அருமையான பாடலுக்கு, சென்னை கடற்கரையில் இரவு 9 மணி முதல் 2 மணி வரையில் சிவகுமார், ஜெயசித்ரா இருவரையும் நடிக்க வைத்து படமாக் கினோம். சிவகுமாருக்கு அப்போதுதான் திருமணம் முடிந்திருந்தது. அவர் என் அருகில் வந்து ‘‘சார் இந்த ராத்திரி நேரத் துல படப்பிடிப்பு வைக்கிறீங்களே’’ என்றார். ‘‘மனைவியைக் காக்க வைப்பதிலும் ஓர் இன்பம் இருக்கு’ என்று சொல்லி நாங்கள் அவரை கிண்டலடித்தோம்.

    ‘எங்கம்மா சபதம்’ நகைச்சுவை பட மாக உருவாகி பெரிய அளவில் பேசப்பட்டது. அதே கதை மீண்டும் ‘வனஜா கிரிஜா’ என்ற பெயரில் எடுக்கப் பட்டதில் இருந்து பஞ்சு அருணாசலத் தின் கதை ஆற்றலைப் புரிந்து கொள்ளலாம்.

    ‘எதையும் பெரிதாக பொருட்படுத் தாத இளம் வயதில் காதலில் இறங்கும் போது, அது ஆத்மார்த்தமான காதலாக மலராமல், டைம் பாஸ் காதலாக முளைத் தால் அதன் விளைவு என்னவாகும்?’ என்பதைப் பின்னணியைக் கொண்ட கதைதான் ‘மயங்குகிறாள் ஒரு மாது’. எங்களை ‘கமர்ஷியல் இயக்குநர்’ என்று சிலர் சொல்கிறார்கள். கருத்துள்ள, கதை அம்சம் கொண்ட படங்களை நாங்களும் எடுத்துள்ளோம் என்பதற்கு 1975-ல் எடுக்கப்பட்ட ‘மயங்குகிறாள் ஒரு மாது’ ஒரு சாட்சி!

    மக்கள் கலைஞர் ஜெய்சங்கர், ‘‘சேலம் மாடர்ன் தியேட்டர் ஸ்டுடியோவை முழு படத்துக்கும், குறிப்பிட்ட தொகைக்கு வாடகைக்குத் தரத் தயாராக இருக் கிறார்கள். அங்கு படமெடுக்க முன்வந் தால் ராமப்பாவிடம் சொல்லி, முழு உதவியும் வாங்கித் தருகிறேன்’’ என்றார். தயாரிப்பாளர் விஜய பாஸ்கருக்கு ஒரே கொண்டாட்டம். அங்கு போய் ‘மயங்கு கிறாள் ஒரு மாது’ படப்பிடிப்பைத் தொடங்கினோம். படப்பிடிப்புக்கான அத்தனை வசதிகளையும் மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம் செய்து வைத்திருந்தார். அப்போது சென்னை யில் மின் தடை (கரண்ட் கட்) இருந் தது. ஆனால், சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் மின் தடையே இல்லை. காரணம், ஸ்டுடியோ முழுவதும் ஜெனரேட்டர் வசதி செய்திருந்தார் சுந்தரம். அவரெல்லாம் சினிமாவின் தீர்க்கதரிசி!

    ‘மயங்குகிறாள் ஒரு மாது’ படத்தில் முத்துராமன், விஜயகுமார், சுஜாதா, தேங்காய் சீனிவாசன், படாபட் ஜெய லட்சுமி ஆகியோர் நடித்தனர். சுஜாதா ஒரு கல்லூரி மாணவி. அவர் அணிய வேண்டிய உடைகளை மேக்கப் அறை யில் பார்த்துவிட்டு அழ ஆரம்பித்து விட்டார். ‘‘மாடர்ன் டிரெஸ் எனக்கு வேண் டாம். சேலை கட்டிக் கொள்கிறேனே’’ என்றார். ‘‘அது கவர்ச்சி உடை இல்லை. கல்லூரிக்கு அணிந்து செல்கிற சுடிதார் போன்ற உடைதான்’’ என்று எவ்வளவோ சொல்லி பார்த்தும், அவர் பிடிவாதமாக மறுத்தார். சுஜாதாவின் அறைக்கு அருகில் இருந்த குணச்சித்திர நடிகை காந்திமதியிடம் ‘‘என்ன செய் வீர்களோ தெரியாது. சுஜாதாவிடம் கதாபாத்திரத்தை எடுத்துக் கூறி, அந்த உடையை அணிவித்து அழைத்து வர வேண்டியது உங்கள் பொறுப்பு’’ என்றேன். அடுத்த சில மணித் துளிகளில் சுடிதார் உடையில் வந்து நின்றார் சுஜாதா. சாமர்த்தியமான பேச்சிலும் கெட்டிக்காரர் என்பதை நிரூபித்தார் காந்திமதி.

    படத்தில் விஜயகுமாருக்கும் சுஜாதா வுக்கும் காதல் பூக்கும். வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தன் வீட்டுக்கு சுஜாதாவை அழைத்து வருவார். இனிமையான தனிமை காதலர்களை எல்லை மீற வைத்துவிடும். அதன் விளைவு, கரு கலைப்பு வரைக்கும் சென்றுவிடும். அப்போது சுஜாதாவுக்கு சிகிச்சை செய்த டாக்டர் எம்.என்.ராஜம், ‘‘நடந்ததை மறந்து விடு. இந்த விஷயம் நம்மைத் தவிர யாருக்கும் தெரியாது. இனி, அடுத்து உன் வாழ்க்கையை அமைத்துக்கொள்’’ என்பார் சுஜாதாவிடம்.

    கதாநாயகன் முத்துராமன் வீட்டில் இருந்து சுஜாதாவைப் பெண் பார்க்க வருவார்கள். சுஜாதாவுக்கு பேரதிர்ச்சி. டாக்டர் எம்.என்.ராஜத்தின் தம்பிதான் மாப்பிள்ளை முத்துராமன். எம்.என்.ராஜம் சுஜாதாவை வீட்டுக்குள்ளே தனியாக அழைத்துச் சென்று, ‘‘அன்று சொன்னதைத்தான் இப்போதும் சொல் கிறேன். என் தம்பியைத் திருமணம் செய்துகொண்டு, நல்லபடியாக வாழ்க் கையைத் தொடங்கு’’ என்று கூறி திருமணம் செய்து வைப்பார்.

    தேங்காய் சீனிவாசன் எதிர்பாராத விதமாக தான் எடுத்த விஜயகுமார், சுஜாதா இணைந்திருந்த புகைப்படங் களை வைத்துக்கொண்டு, சுஜாதாவை பிளாக்மெயில் செய்வார். சுஜாதா மனதள வில் உடைந்து, உடல்நிலை பாதிக்கப் பட்டு இறந்துவிடும் நிலை யில் தன் கணவ னிடம், தன் தவறை சொல்லி மன்னிப்பு கேட்பார். அதற்கு முத்துராமன், ‘‘உன்னை பெண் பார்க்க வரும்போதே எனக்கு அந்த உண்மை தெரியும். நீயும், என் அக்காவும் பேசியதை நான் அன்றைக்கு கேட்டேன். தெரியாமல் செய்த தவறை மன்னிப்பதுதான் மனித குணம்’’ என்று அவரை ஏற்றுக்கொள்வார். சுஜாதா இறுக்கம் குறைந்து உடல் நலம் பெற்று மகிழ்வோடு வாழ்வார். இதோடு படம் முடியும். இந்தப் படத்தை பார்த்த விநியோகஸ்தர்கள் ‘‘தவறு செய்த கதாநாயகி சாக வேண்டும். அப்படி கதையை முடித்தால் படத்தை வாங்கிக்கொள்கிறோம்’’ என்றார்கள்.

    எங்களுக்கு மிகுந்த பண நெருக்கடி. நாங்கள் என்ன செய்தோம்?

  14. Likes chinnakkannan, madhu, Russellmai liked this post
  15. #1608
    Member Regular Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    35
    Post Thanks / Like
    நடிகர் திலகம் காலமான போது "இருந்த ஒரு நடிகனையும் கொன்னுடீங்களேடா" என்று ஒரு ரசிக வெறியன் சொன்னதை வடிவேலு அவர் பாணி சொல்லும் யூ டீயூப்...


  16. Likes Russellmai liked this post
  17. #1609
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by s.vasudevan View Post
    தேங்காய் சீனிவாசன் எதிர்பாராத விதமாக தான் எடுத்த விஜயகுமார், சுஜாதா இணைந்திருந்த புகைப்படங் களை வைத்துக்கொண்டு, சுஜாதாவை பிளாக்மெயில் செய்வார். சுஜாதா மனதள வில் உடைந்து, உடல்நிலை பாதிக்கப் பட்டு இறந்துவிடும் நிலை யில் தன் கணவ னிடம், தன் தவறை சொல்லி மன்னிப்பு கேட்பார். அதற்கு முத்துராமன், ‘‘உன்னை பெண் பார்க்க வரும்போதே எனக்கு அந்த உண்மை தெரியும். நீயும், என் அக்காவும் பேசியதை நான் அன்றைக்கு கேட்டேன். தெரியாமல் செய்த தவறை மன்னிப்பதுதான் மனித குணம்’’ என்று அவரை ஏற்றுக்கொள்வார். சுஜாதா இறுக்கம் குறைந்து உடல் நலம் பெற்று மகிழ்வோடு வாழ்வார். இதோடு படம் முடியும். இந்தப் படத்தை பார்த்த விநியோகஸ்தர்கள் ‘‘தவறு செய்த கதாநாயகி சாக வேண்டும். அப்படி கதையை முடித்தால் படத்தை வாங்கிக்கொள்கிறோம்’’ என்றார்கள்.

    எங்களுக்கு மிகுந்த பண நெருக்கடி. நாங்கள் என்ன செய்தோம்?
    வாசு சார் பதித்திருந்த பதிவைப் படித்தவுடன் எனக்கு ஒன்று ஞாபகத்துக்கு வந்தது. அப்போது ஒரு பத்திரிகை அதாவது குமுதமா அல்லது விகடனா என்று சரியாகத் தெரியவில்லை. 'மயங்குகிறாள் ஒரு மாது' படத்துக்கு விமர்சனம் எழுதியிருந்தது. அதில் மேற்குறிப்பிட்டுள்ள படத்தின் சம்பவத்தை எழுதி,

    "படத்தின் முடிவில் சொல்ல வேண்டியதை எல்லாம் தெரிந்த முத்துராமன் ஆரம்பத்திலேயே சுஜாதாவிடம் சொல்லியிருந்தால் கால் மணி நேரத்தோடு நிம்மதியாக நாம் தியேட்டரிலிருந்து கிளம்பி வந்திருக்கலாம். சுஜாதாவுக்கும் நிம்மதி...நமக்கும் விடுதலை"

    என்று பண்ணியிருந்தார்களே ஒரு அமர்க்களம். அன்றிலிருந்து இன்றுவரை எப்போது நினைத்தாலும் எனக்கு சிரிப்பு பொத்திக் கொண்டு வரும்.

    படம் அவ்வளவு அறுவை என்பதை எவ்வளவு எள்ளலாக தெரிவித்திருந்தார்கள்!
    நடிகர் திலகமே தெய்வம்

  18. Likes Russellmai, chinnakkannan liked this post
  19. #1610
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    எவ்ளோ தடவை கேட்ட பாட் தான் நன்னாவும் இருக்கும் கேக்கறதுக்கு..பட் இப்பத் தான் ஐ ஸா.. சாமி சத்தியமா இப்படி இருக்கும்னு தெரியாது..ம்ம்

    ஒரு நாளில் வளர்ந்தேனே மலர்ந்தேனே தேவனே( ராமா ராமா )



  20. Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •