Page 131 of 337 FirstFirst ... 3181121129130131132133141181231 ... LastLast
Results 1,301 to 1,310 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #1301
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஊப்ஸ்... ஓஹ்..கனவுகளே கனவுகளே யா. தாங்க்ஸ் செந்தில்வேல்..இருந்தாலும் தேவன் வந்தாண்டி எனக்குப் பிடிக்கும்..

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1302
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    அட அட அட...

    தீபாவளிக்கு ஒரு வாரம் இருக்குறப்பவே இத்தனை தித்திக்கும் பாடல்களா ?

    ( வாசுஜி... சின்னாவை சின்னாபின்னமாக்கும் வசு(ந்தரா) இருக்க வாசுவுக்கு என்ன கவலை ? இன்னும் இது மாதிரி ரெண்டு பாட் போட்டா சிக்கா.. சிக்க்க்க்கிடுவார்.. என் பங்குக்கு இரும்புத்திரை பாட்டைப் போட்டு எழுப்பி விடலாம்னு நினைச்சேன்..அப்புறம் விட்டுட்டேன் )

    மஞ்சள் குங்குமம் அப்போ பிரபலமாக இருந்த லவ் ஸ்டோரி ஆங்கிலப் படத்தின் கதையைத் தழுவியதுதான். ஏழைப் பெண்ணை காதலிக்கும் பணக்கார வாலிபன். பெற்றோர் எதிர்ப்பு. வீட்டை விட்டு வெளியேறி திருமணம். தீராத வியாதியை மறைத்து செங்கல் சுமந்து அவனைப் படிக்க வைத்து பட்டதாரி ஆக்கியதும் பொட்டென்று போய்விடும் கதா நாயகி... ( படம் கொஞ்சம் அழுவாச்சிதான் ) ... நீங்கள் சொல்வது போல காட்சியைப் பார்க்கும்போது கதை புரியலாம். ஆனால் பார்க்காமல் கேட்ட காலத்தில் துள்ளிக் குதிக்க வைத்தது ...

    இதே படத்தில் தேங்காய், மனோரமாவுக்காக எஸ்.பி.பி, மனோரமா பாடும் ரா ரா நா பாவா என்ற சிக்காவுக்கு பிரியமான பாட்டு ஒண்ணும் இருக்கே !!

  4. Thanks yoyisohuni, vasudevan31355 thanked for this post
  5. #1303
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //இதே படத்தில் தேங்காய், மனோரமாவுக்காக எஸ்.பி.பி, மனோரமா பாடும் ரா ரா நா பாவா என்ற சிக்காவுக்கு பிரியமான பாட்டு ஒண்ணும் இருக்கே !! //

    ரொம்ப ராங்கான பாதையிலே போஸ்தாவா

    அட மூஸ்க்கோய்யா
    நோர் மூஸ்க்கோய்யா

    ஆச்சி சூப்பர். கூலிங் க்ளாஸ் ஆச்சி. புடவை கட்டிய தேங்காய்.

    Last edited by vasudevan31355; 2nd November 2015 at 05:15 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. Thanks madhu thanked for this post
    Likes Russellmai liked this post
  7. #1304
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //அவனைப் படிக்க வைத்து பட்டதாரி ஆக்கியதும் பொட்டென்று போய்விடும் கதா நாயகி//

    இதைப் பார்த்தா படம் பார்த்த மாதிரி

    நடிகர் திலகமே தெய்வம்

  8. Likes Russellmai liked this post
  9. #1305
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //என் பங்குக்கு இரும்புத்திரை பாட்டைப் போட்டு எழுப்பி விடலாம்னு நினைச்சேன்..அப்புறம் விட்டுட்டேன் )//

    பழைய பக்கெட் போட்டுட்டீங்கன்னு சின்னா வருத்தப்படுவார். ஏன்னா வசுந்துரா அதுல தன் மகளுக்கு அம்மாவா வயசானவங்களா நடிச்சிருப்பாங்க இல்லியா?
    நடிகர் திலகமே தெய்வம்

  10. Likes chinnakkannan, madhu liked this post
  11. #1306
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மதுண்ணா!

    மார்னிங் ஷிப்ட் கிளம்பறேன். ஈவ்னிங் சந்திப்போம்.
    நடிகர் திலகமே தெய்வம்

  12. Likes madhu liked this post
  13. #1307
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    இசையரசியின் இனிய கீதங்கள்

    கொலுசு என்ற திரைப்படம். மலேசியா வாசுதேவன் அவர்களின் இசை
    ராஜேஷ் மற்றும் சரிதா நடித்த படம்

    கோபம் என்ன ராசாவுக்கு


  14. Likes Russellmai, madhu liked this post
  15. #1308
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy: Tamil Hindu

    தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதரை மறந்த திரையுலகம்?




    தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான தியாகராஜ பாகவத ரின் நினைவுநாளில், அவருக்கு அஞ்சலி செலுத்த நாடக நடிகர் கள், திரையுலகினர் ஆர்வம் காட்ட வில்லை என்று அவரது உறவினர் கள் வேதனை தெரிவித்தனர்.

    தமிழகத்தில் தொடர்ச்சியாக 3 தீபாவளி பண்டிகையைக் கடந்து வெற்றிகரமாக ஓடிய ஒரே திரைப்படம் என்ற பெருமையை தக்க வைத்திருப்பது ஹரிதாஸ். 1944-ல் வெளியான இப்படத்தின் கதாநாயகனாக நடித்தவர் தியாகராஜ பாகவதர்.

    1910 மார்ச் 1-ம் தேதி மயிலாடு துறையில் கிருஷ்ணமூர்த்தி-மாணிக்கத்தம்மாள் தம்பதியின் மகனாகப் பிறந்த இவர், சிறுவயதி லேயே குடும்பத்துடன் திருச்சி சங்கிலியாண்டபுரம் கல்லுக்காரத் தெருவில் குடிபெயர்ந்தார். 1926-ல் பொன்மலையில் நடைபெற்ற பவளக்கொடி நாடகத்தில் அர்ஜுனன் வேடத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது.

    பொன்னிற மேனி, கந்தர்வக் குரலால் நாடக மேடைகளை வசப்படுத்திய அவருக்கு திரை வாய்ப்பு தேடிவந்தது. 1934-ல் பவளக்கொடி நாடகத்தை திரைப் படமாக தயாரித்தபோது, அதில் இவர் கதாநாயகனாக நடித்தார். தமிழகத்தின் இசை மாமேதையாக கருதப்படும் புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை இவருக்கு பாகவதர் என்னும் பட்டத்தை வழங்கினார்.

    தொடர்ந்து 1936 முதல் 1943 வரை இவர் நடித்த நவீன சாரங்க தாரா, சத்தியசீலன், சிந்தாமணி, அம்பிகாபதி, திருநீலகண்டர், அசோக்குமார், சிவகவி உள்ளிட்ட படங்கள் வசூலை அள்ளிக் குவித்தன. தமிழ்த் திரையுல கின் முதல் சூப்பர் ஸ்டாரான இவருக்கு, 1944-ல் லட்சுமிகாந்தன் கொலைவழக்கு பெரும் பின்ன டவை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் 30 மாதங்கள் சிறையிலிருந்த தியாக ராஜ பாகவதர், பின்னர் விடுதலை யானார். அதற்குப் பின் அவர் நடித்த படங்கள் வெற்றி பெற வில்லை.

    இதையடுத்து திருச்சி திரும்பிய அவர் வறுமையில் வாடினார். 1959 நவம்பர் 1-ம் தேதி உடல்நலக் குறைவால் சென்னை பொது மருத்துவமனையில் தியாகராஜ பாகவதர் உயிரிழந்தார். அவரது உடல் திருச்சி சங்கிலியாண்ட புரத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

    அங்கு அவரது 56-வது நினைவுநாள் நேற்று அனுசரிக்கப் பட்டது. திரைப்பட, நாடக நடிகர்கள் சார்பில் நேற்று மதியம் வரை ஒருவர்கூட அஞ்சலி செலுத்த வரவில்லை. உறவினர்கள் சிலரும், அவர் சார்ந்த சமூகத்தினர் சிலரும் அஞ்சலி செலுத்தினர்.

    இதுகுறித்து திருச்சி கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியின் இசைத் துறை தலைவர் எஸ்.டி.மூர்த்தி கூறும்போது, திருச்சிக்கு பெருமை சேர்த்த தியாகராஜ பாகவதருக்கு மணி மண்டபம் அமைத்து, இசை, நாடக விழாக்கள் நடத்த வேண்டும் என்றார்.

    விஸ்வகர்மா மகாஜன சபை துணைத் தலைவர் சுப்பண்ணா கூறும்போது, பணமிருந்தபோது அள்ளிக் கொடுத்த தியாகராஜ பாகவதர், கடைசிக் காலத்தில் வறுமையில் சிக்கி, நோயால் இறந்தார். எம்.ஆர்.ராதா முயற்சி யால்தான் அவரது உடல் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலை அடக்கம் செய்த இடத்தை நாங்கள் பராமரித்து வருகிறோம். நடிகர்கள் சார்பில் சென்னையிலாவது அஞ்சலி செலுத்தியிருக்கலாம். தமிழகமே போற்றிப் புகழ்ந்த கலைஞனுக்கு உரிய மரியாதையை அரசும், கலை உலகத்தினரும் அளிக்க வேண்டும் என்றார்.

    கருணாஸ் அஞ்சலி

    தேர்தலில் வாக்களித்த நாடக நடிகர்களுக்கு நன்றி தெரி விப்பதற்காக நடிகர்கள் கருணாஸ், பூச்சி முருகன் ஆகியோர் மணப் பாறைக்கு நேற்று வந்திருந்தனர். அவர்களிடம், தியாகராஜ பாகதவர் நினைவு நாள் குறித்து திருச்சி நடிகர் ஜெரால்டு மில்டன் நினைவுபடுத்தியுள்ளார். இதை யடுத்து இருவரும் மாலையில் சங்கிலியாண்டபுரம் வந்து, அஞ்சலி செலுத்தினர்.

  16. Likes Russellmai liked this post
  17. #1309
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்

    (நெடுந்தொடர்)

    48

    'உத்தரவின்றி உள்ளே வா'





    'உத்தரவின்றி உள்ளே வா'

    பாடல்களுக்கென்றே நம்மை சில படங்கள் வசியப்படுத்துவதுண்டு. பாலா தொடரில் வரும் சூப்பர் பாடல்கள் இடம் பெற்ற இந்தப் படமும் கூட சேர்ந்து நம்மை கலகலப்பில் கலக்க வைக்கும். 1971 ல் பொங்கலுக்கு வெளிவந்து வெற்றி வாகை சூடிய படம்.

    அப்படிப்பட்ட தேன் சுவை நிறைந்த பாடல்களோடு நம் விலா நோக சிரிக்க வைத்து இன்றும் நம்மை ரசிக்க வைக்கும் படம்தான் 'உத்தரவின்றி உள்ளே வா'.

    'சித்ராலயா' தயாரிப்பு. வண்ணத்தில் நம் எண்ணம் போல. என்.சி.சக்கரவர்த்தி என்ற ஸ்ரீதரின் உதவி இயக்குனர்தான். இசைச் சஞ்சீவி 'மெல்லிசை மன்னர்'தான் படத்தின் பிரதான தூண். அடுத்த தூண்களாக பாலாவும், சுசீலா அம்மாவும். மற்றதெல்லாம் பிறகுதான்.

    ரவிச்சந்திரன், காஞ்சனா, நாகேஷ், தேங்காய், மாலி, 'வெண்ணிற ஆடை' மூர்த்தி, ரமாபிரபா, சச்சு என்று ஏகத்துக்கும் நகைச்சுவை. ரவி, காஞ்சனாவின் இளமை துள்ளும் காதல் பாடல்கள், 'நகைச்சுவையின் நாயகன்' நாகேஷின் அமர்க்களம், தேங்காயின் டாக்டர் ரோல், யார் பெற்ற குழந்தையோ தன்னை 'அப்பா' என்று அழைக்க அதனுடன் அவஸ்தைப் படும் மாலி, (இறுதியில் குழந்தையை உரியவர்களிடம் சேர்த்துவிட்டு அதைப் பிரிய மனமில்லாமல் மாலி திரும்பிப் பார்த்தபடியே வருவது நெகிழ்ச்சி) பூர்வஜென்ம 'நாதா' நாகேஷ் பைத்தியம் ரமாபிரபா, கலக்கலான 'வெண்ணிற ஆடை' மூர்த்தி என்று படம் பக்கா.

    இப்படத்தின் கதையெல்லாம் தேவையே இல்லை. எல்லோரும் அறிந்த இரு வரிக் கதைதான். நான்கு பிரம்மச்சாரி இளைஞர்கள். அவர்களில் நாயகன் ரவி பணக்காரர். இவர்கள் வாழ்வில் குறுக்கிடும் அழகான இளம் பெண். அவளைக் காதலிக்கும் நால்வரில் நாயகனுக்கே நாயகி. இறுதியின் நாயகி மேல் களங்கப் பழி, துடைத்தெறிய ஹீரோ, வில்லன், அப்புறம் சின்ன பைட். முடிவு எல்லோருக்கும் சுபம் என்று முழுக்க ஜாலிதான்.

    என்.சி.சக்கரவர்த்தி இயக்கமே தவிர அப்படியே ஸ்ரீதர் படமேதான். இன்னொரு 'காதலிக்க நேரமில்லை', 'ஊட்டிவரை உறவு' போல.


    பாடல்கள் ஒவ்வொன்றும் அனைவர் மனதிலும் பசுமரத்தாணி போல் பதிந்தவை. ஒன்றுக்கொன்று சளைக்காமல் பெரிய ஹிட் அடித்தவை. இப்படத்தின் பாடல்களில் மயங்காத மனமே இல்லை என்று சொல்லலாம் நிச்சயமாக.

    காஞ்சனா இளைஞர்கள் கனவில் வந்து இன்பத் துன்புறுத்த, அதில் மூர்த்தி, நாகேஷ், ரவி மூவரும் தனித்தனியே காஞ்சனாவுடன் காதல் டூயட் பாடி சல்லாப சொப்பனம் காணுகின்றனர். இதில் மாலியை டூயட் பாட வைக்காமல் மாபெரும் ஏமாற்றத்தை அவருக்குத் தந்து நம்மைக் காப்பாற்றி விட்டனர். அப்படியே இருந்தாலும் 'கவர்ச்சி' வில்லன் கண்ணன் 'சுபதின' டூயட்டை விட ஓரளவிற்கு நன்றாகவே இருந்திருக்கும்.

    இந்தத் தொடரில் மேலே சொன்ன பாடலை இப்போது தொடரின் பாடலாகப் பார்க்கலாம். தொடர்ந்து தொடரின் அடுத்தடுத்த பகுதிகளில் பாலா சம்பந்தப்பட்ட பாடல்களை தொடர்ச்சியாகப் பார்க்கலாம். என்ன? சரிதானே!

    அதற்கு முன் பாலா சம்பந்தப்படாத இப்படத்தின் பாடல்களை கொஞ்சம் ஊறுகாயாகத் தொட்டு ரு(ர)சிக்கலாம்.



    'பூர்வ ஜென்மப் பைத்தியம்' பிடித்து நாதா நாதா என்று நாகேஷ் பின்னால் அலைந்து அவரைப் படாத இம்சைப்படுத்தும் ரமாபிரபாவை குணப்படுத்த டாக்டராக 'தேங்காய்' வயது முதிர்ந்த நரை டாக்டராக வர அப்போது நடக்கும் ஒரு சின்ன சீனை சொல்லியே ஆகவேண்டும்.




    தேங்காய் நர்ஸ் சச்சுவுடன் உள்ளே நுழையும் போது ரமாபிரபா சோபாவில் அமர்ந்து பொம்மைக்குக் கீ கொடுப்பார். பக்கத்தில் அவர் தாயார் சுந்தரிபாய் 7 கல் பொறுக்கி விளையாடிக் கொண்டிருப்பார். கீழே மாலி, நாகேஷ், மூர்த்தி மூவரும் குழந்தை பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டிருப்பார்கள். ஆனால் இதையெல்லாம் விளையாட வேண்டிய மாலியின் குழந்தையோ (ஆக்சுவலாக அது ஒரு அனாதைகுழந்தை... மாலிக்கு தகப்பன் ஸ்தானம் கட்டி விடுவார்கள்) அங்கிருந்து தள்ளி போய் எதையும் கண்டு கொள்ளாமல் புத்திசாலித்தனமாக புத்தகம் புரட்டிக் கொண்டு இருக்கும். எவ்வளவு சமயோசிதமான சீன்!

    உள்ளே நுழையும் தேங்காய் 'அத்தனையும் லூஸுங்களாய் இருக்கே... இதில் எதுக்கு வைத்தியம் பார்க்கிறது?' என்று குழம்புவார். சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிப் போய் விடும். இது போல ஏகப்பட்ட காட்சிகள். இன்னொன்று காஞ்சனாவின் ரவிக்கை உடை சோபாவில் இருக்க, ரவியின் அப்பா வீரராகவன் அங்கு வந்து அதன் மீது தெரியாமல் சாய்ந்து உட்கார்ந்து விட, அவருக்குத் தெரியாமல் அதை எடுக்க, இழுக்க நாகேஷ் செய்யும் கூத்து இருக்கிறதே... அடடா!


    நட்டநடு ராத்திரி பன்னிரண்டு மணிக்கு தேங்காய் மற்றவர்களுக்கு பேய் கதை சொல்ல, டைமிங்காக ரமாபிரபா பூர்வ ஜென்ம நினைவில் கரெக்ட்டாக 'தேனாற்றங்கரையினிலே... தேய்பிறையின் இரவினிலே' பாடலை மோகினி போல் பாட, அத்தனை பேரும் குறிப்பாக தேங்காய் தொடை நடுங்குவது நமது உடல் நடுங்க சிரிக்க வைக்கும். (இந்த மாதிரி காட்சிகளில் தேங்காயை அடித்துக் கொள்ள வேறு யார்?)

    ராட்சஸியின் பேய்ப் பாடல்களில் முதன்மையானது. பின்னணி இசை பலவிதங்களில் பயமுறுத்தி படத்தின் பாத்திரங்களைக் குலை நடுங்க வைக்கும். நம்மைக் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க வைக்கும்.

    'கலிங்கத்துப் போரில் வெற்றி கொண்டாயே' என்று ஈஸ்வரி பாடியவுடன் போரின் வெற்றி ஒலியை மெல்லிசை மன்னர் பீறிட்டுத் தரும் அழகே அழகு.

    சரி! சொன்னால் சொல்லிக் கொண்டே போகலாம். இப்போது பாடலுக்கு வந்து விடுவோம்.




    முதலில் மூர்த்தி 'ஃபெமினா' புக் கையில் வைத்துக் கொண்டு கனவு காணுவார்.

    மஞ்சள் மேலாடை ஜிப்பாவும், கீழே பூப்போட்ட சிகப்பு கலர் கைலியுமாக ஜப்பான் பொம்மை போல கிராப் அலங்காரத்துடன் கலியுக கட்டழகி காஞ்சனா அட்டகாசமான பார்க்கில் மூர்த்தியை,

    'உத்தரவின்றி உள்ளே வா
    உன்னிடம் ஆசை கொண்டேன் வா'

    என்று காதலாகி அழைக்க, 'ஜேம்ஸ்பாண்ட்' சான் கானரி போல முழுக்கை பனியன் அணிந்து, தத்தி தத்தி காஞ்சனாவின் கைபிடித்து நடந்து 'வெண்ணிற ஆடை' மூர்த்தி கலக்கி விடுவார். காஞ்சனா வேறு கனவு ஜோடி. முகத்தில் சந்தோஷப் பூரிப்புதான் மணிமாலா கணவருக்கு. பெல்ட்டிலோ வட்ட வட்டங்களாக மெல்லிய மெட்டலில் டிசைன்கள்.

    சும்மா நடனத்தில் பிய்த்து உதறுவார் மூர்த்தி. பல்லவி முடிந்து முதல் சரணத்திற்கு முன் வரும் டிரம்பெட் ஒலிக்கு அவர் கைகொட்டியபடி இடையை படா ஷேக் செய்து ஆடுவது பலே காமெடி ஜோர்.

    'பட்டும் படாமல் தொட்டும் தொடாமல்
    பக்கம் வராமல் வெட்கப்படாமல் கா....தலி'

    என்று ஈஸ்வரி நீட்டி முழக்கி அனுமதி வழங்க, உடன் வரும் டிரம்பெட்டின் அதே 'காதலி' இசை ஒலிக்கு ஏற்ப உடலை பின்னுக்கு இழுத்து மூர்த்தி கைவிரல்களால் டிரம்பெட் வாசிப்பது போல பாவனை செய்து காட்டுவது எப்படிப்பட்ட உம்மணாம் மூஞ்சியையும் சிரிக்க வைத்துவிடும்.

    'அந்தப்புரத்தில் நண்பன் இருக்க
    இந்தப் புறத்தில் வா... வா வா... நீ வா'

    என்றபடி காஞ்சனா மூர்த்தியை இறுக்க அணைத்து (இந்த இடத்தில் பொறமை மூச்சை விடாமல் நம்மால் அடக்க முடியவில்லை...ம்..நல்லா இருங்க மூர்த்தி...புர்ர்....) அங்கிருக்கும் பூச்செடியின் பின்னால் இழுத்து மறைத்து வைத்து என்னவோ செய்ய, அந்த செடி ஆடும் ஆட்டம்....இந்த இடத்தில் 'மெல்லிசை மன்னர்' குழுசின் கிடார் வாசிப்பு 'டங் டங் டங் டங் டங் டங் டங் டங்'அவ்வளவு பொருத்தமாக அந்த இடத்தில் இனிமையாக மேட்ச் ஆகும். அந்தி மாலை நேரத்தில் இந்தப் பாடலை எடுத்திருப்பார்களோ! செடி, கொடி , மரங்களின் நிழல்களும் அழகாய்த் தெரிகின்றன.

    முதல் சரணம் மூர்த்திக்கு முடிந்தது.




    அடுத்து நாகேஷ் டர்ன். அந்த மீசையில்லாத, அம்மை வடுக்கள் நிறைந்த, கண்கள் இமைக்காத, கனவு காணும் முகம் பார்க்கும் போதே 'முணுக்' கென்று சிரிப்பு வந்து விடும்.

    கனவிலோ பாகவதர். கழுத்தில் நீள வெண் பட்டு அங்கவஸ்த்திரத்துடன் பாகவதர் கிராப் வைத்து கந்தர்வக் காரிகையுடன்

    'பூமியில் மானிட ஜென்மம் எடுத்தது காதலி உனைக் காண'

    என்று 'பாடகர் திலக'த்தின் 'கணீர்'க் குரலில் ஆலாபனை டூயட். காஞ்சனா தேவலோக ரம்பை போல சந்தனக் கலர் சேலையணிந்து 'சுபாஷணி... மதாங்கினி' களுக்கு அற்புத அபிநயங்கள் பிடிப்பார்.

    நாகேஷ் இரண்டாவது முறை 'சுபாஷினி... மதாங்கினி' பாடும்போது கம்பீரமாக பார்க்கில் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அங்கவஸ்திரத்தின் ஒரு பகுதியின் நுனியை பிடித்து இடது கை அக்குளில் தள்ளி செருகி, 'டபக்'கென்று காஞ்சனாவிடம் கால் மடக்கி குனிந்து காமம் கண்ணை மறைக்க ஒரே ஒரு செகண்டில் போடுவாரே ஒரு அவசரக் கும்பிடு! அப்பாடி! சிரிப்பில் கண்களில் தண்ணீரே வந்துவிடும். மோகத்தின் வேகத்தில் காஞ்சனாவின் கால்களில் கூட விழுவது... அது கூட யாருக்கும் தெரியாமல் கௌரவமாக விழுவது செம காமெடி. அதே போல சரணம் முடிந்து,

    'உத்தரவின்றி உள்ளே வா
    உன்னிடம் ஆசை கொண்டேன் வா'

    என்று கைகளில் தாளம் போட்டு (அதுவும் திமிராக, தெனாவட்டாக ஒரு கையைப் பின்னால் கட்டிக் கொண்டு இன்னொரு கையை உயர்த்தி விரல்களால் தாளம் போட்டபடி நடந்து செல்வார்.) நல்ல மதிய வெயிலிலும், பிறகு மாலையிலும் இந்தக் காட்சி படமாக்கப்பட்டிருக்கும்.


    மூன்றாவது சரணம் முத்தான ரவிக்கு.

    சிம்பிள் சுடிதாரில் காஞ்சனா ரொம்ப ஜோராக இருப்பார். கடைந்தெடுத்தது போல உடலின் அங்க அமைப்புகள். அதில் நச்சென்று பொருந்தும் சுடி. வெளிர் நீல பேன்ட், ஷர்ட்டில் ரவி. (என்ன... சிகையலங்காரம்தான் கொஞ்சம் சிரமம் செய்யும். வேறு மாதிரி 'விக்' வைத்திருக்கலாம். (மேலே தூக்கி வைத்து படிய வாரி விட்ட கிராப்... ஆதலால் இளமை கொஞ்சம் மிஸ் ஆவது போல தெரியும்) மன்மதன் ரதிதேவி இணைந்து நிற்கும் சிலை பின்னால் இருக்க அதன் முன்னால் ரவி, காஞ்சனா ஆடுவார்கள்.

    ரவிக்கு நம் 'தொடரின் நாயகர்' குரல். மூன்றாவது சரணத்தில் இரண்டு வரிகளுக்கு மட்டுமே வாய்ப்பு.

    'கள்ளம் இலாத பிள்ளை நிலாவை கன்னம் தொடாமல் போவேனோ
    கட்டிப் பிடித்து நெஞ்சில் அணைத்து தன்னை மறந்து வாழ்வேனோ'

    இருந்தால் என்ன! அந்த இரண்டு வரிகளும், பின்னால் வரும் பல்லவியின் நான்கு வரிகளும் பாலாவின் குரலில் பகட்டாய் மின்னுகின்றன. அதுவும் சரண இரண்டு வரிகளை கேட்க கேட்க பரமசுகம். திரும்ப ஒரு முறை பாடுவார். சும்மா குரலில் வழக்கத்தைவிட குழைவும், இளமையும் அதிகமாகக் கொஞ்சும். அந்த 'னோ' க்களின் எண்ட் எக்ஸலென்ட். 'தன்னை' எனும் போது அவரின் தனித்தன்மை அப்பட்டமாகத் தெரியும்.

    அது போல'கட்டிப் பிடித்து நெஞ்சில் அணைத்து தன்னை மறந்து வாழ்வேனோ' என்று பாலா முதல் தடவி பாடி முடித்து இரண்டாவது தரம் பாடும் போது அந்த இடைப்பட்ட இரத்தில் மிக அழகான ம்யூசிக் பிட் ஒன்றை 'மன்னர்' மனம் மயக்கத் தருவார். அதே போல ஈஸ்வரி 'மஞ்சள் முகத்தை'ப் பாடும் போதும் இடையில் அற்புதமான இசை. பல்லவி வரிகளான 'உத்தரவின்றி உள்ளே வா' வரிகளின் பின்னணியில் 'டங்டடங்டங்... டங்டடங்டங்' பேஸ் கிடார் ஒலி இந்தப் பாடலை எங்கோ தூக்கிச் சென்று விடும்.



    அந்த வரிகளின் போது பார்க்கின் அந்த க்ரில் கம்பிகளின் சிறிய பாலத்தில் காஞ்சனா ஓடி வந்து நின்று சேனலைப் பிடித்தபடி ஒரு காலை அகற்றி வைத்து இடுப்பை அழகாக அசைத்து மூவ்ஸ் தருவார். அள்ளிக் கொண்டு போகும். அதற்கு முன் ஓடி வரும் ரவியின் வழக்கமான ஒரு ரவுண்ட் டர்னும் உண்டு.

    பின்னால் ஈஸ்வரி 'மஞ்சள் முகத்தை'த் தொடர்வார்.


    பாடகர் திலகம், குழைவுத் திலகம், ராட்சஸி, எம்.எஸ்.வி கூட்டணி. இனிமைக்குக் கேட்கணுமா? காமெடி நடிகர் தானே என்றெல்லாம் எண்ணாமல் அப்போதய 'சூப்பர் ஸ்டாரினி' காஞ்சனா 'வெண்ணிற ஆடை' மூர்த்தியுடன் டூயட் செய்தது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. (இப்போதும் சில முன்னணி நடிகைகள் சந்தானம், வடிவேலு, கவுண்டமணியுடன் காமடிக்காக சில டூயட்கள் சேர்ந்து பண்ணியிருக்கிறார்கள்).

    காஞ்சனாவுடன் ஆடும் நாகேஷ், ரவி இருவருமே பாடுவார்கள்.

    மூர்த்திக்குப் பாடல் கிடையாது. அப்போது பெண் குரல் ஈஸ்வரி மட்டுமே.

    நாகேஷ் பாடும் போது காஞ்சனவிற்குப் பாடல் கிடையாது. டி.எம்.எஸ்.மட்டுமே.

    ரவி பாடும் போது காஞ்சனாவும் பாடுவார் இணைந்து. ஏனென்றால் படத்தில் உண்மையான ஹீரோ ரவி அல்லவா! அதனால் நாயகன் நாயகி இருவருக்கும் சமமாக பாடல் வரிகள். பாலா, ஈஸ்வரி இருவர் குரலும்.

    ஈவ்னிங்கில் படம் பிடித்திருப்பது தெரியும்.

    எப்படி பார்த்துப் பார்த்து யோசித்து யோசித்துப் பண்ணியிருக்கிறார்கள் பாருங்கள்!

    அந்தக் காலத்தில் டூயட் எல்லாம் பார்க்குகளில்தான் பெரும்பாலும். அந்தப் பார்க்குகளை இப்போது பாடல் காட்சிகளில் பார்க்கும் போது என்னவோ ஒரு இனம் புரியா சந்தோஷம் கிட்டுகிறது. இந்தப் பாடலில் கூட பாருங்கள். காட்சிகளுக்குப் பின்னால் எவ்வளவு அழகான பச்சைப் பசேல் தென்னை மரங்கள்... அடர்த்தியாய் வளர்ந்து உயர்ந்த வாழை மரங்கள்...ச வுக்கு கன்றுகள்... குரோட்டன்ஸ்கள். இப்போதிருக்கும் தென்னை மரங்களை, வாழை மரங்களைப் பார்த்தால் அந்த சந்தோஷம் கிடைப்பதில்லையே.

    ஒரே பாடலில் மூன்று ஆண்கள்...ஒரு பெண். பாடக பாடகியோ மூவர். பாடலோ மூன்றரை நிமிடங்களே. அதில்தான் எத்தனை மனநிறைவு! மகிழ்ச்சி! ஈகோ இல்லாமல் நடிக நடிகையர் பங்களிப்பு. முழுத் திருப்தி அளிக்கும் பாடல்.




    உத்தரவின்றி உள்ளே வா
    உன்னிடம் ஆசை கொண்டேன் வா

    உத்தரவின்றி உள்ளே வா
    உன்னிடம் ஆசை கொண்டேன் வா
    உத்தரவின்றி உள்ளே வா
    உன்னிடம் ஆசை கொண்டேன் வா
    உலகினில் ஆடவர் ஆயிரமாயிரம்
    உனக்கும் எனக்கும் பொருத்தம் மிகுத்த ஜாதகம்
    உத்தரவின்றி உள்ளே வா
    உன்னிடம் ஆசை கொண்டேன் வா

    பட்டும் படாமல் தொட்டும் தொடாமல்
    பக்கம் வராமல் வெட்கப்படாமல் கா....தலி
    பட்டும் படாமல் தொட்டும் தொடாமல்
    பக்கம் வராமல் வெட்கப்படாமல் கா....தலி
    அந்தப்புரத்தில் நண்பன் இருக்க
    இந்தப் புறத்தில் வா... வா வா... நீ வா

    உத்தரவின்றி உள்ளே வா
    உன்னிடம் ஆசை கொண்டேன் வா
    உத்தரவின்றி உள்ளே வா
    உன்னிடம் ஆசை கொண்டேன் வா

    ஆ..............ஆ

    பூமியில் மானிட ஜென்மம் எடுத்தது காதலி உனைக் காண
    அ ஆஆ.....
    பூமியில் மானிட ஜென்மம் எடுத்தது காதலி உனைக் காண
    புடவையின் அழகென்ன! கூந்தலின் அளவென்ன!
    புடவையின் அழகென்ன! கூந்தலின் அளவென்ன!
    ஏழையைக் கண் பாரம்மா!
    அந்தரி சுந்தரி என் முகம் பார்த்தபின்
    இன்னொருவன் முகம் பாராதே! பாராதே!
    அந்தரி சுந்தரி என் முகம் பார்த்தபின்
    இன்னொருவன் முகம் பாராதே!
    சுபாஷினி!... மதாங்கினி!
    சுபாஷினி!... மதாங்கினி!
    தோழர்கள் பார்வையில் கேலிகள் ஆகுமுன்
    உத்தரவின்றி உள்ளே வா
    உன்னிடம் ஆசை கொண்டேன் வா
    உலகினில் ஆடவர் ஆயிரமாயிரம்
    உனக்கும் எனக்கும் பொருத்தம் மிகுத்த ஜாதகம்
    உத்தரவின்றி உள்ளே வா
    உன்னிடம் ஆசை கொண்டேன் வா

    கள்ளம் இலாத பிள்ளை நிலாவை கன்னம் தொடாமல் போவேனோ
    கள்ளம் இலாத பிள்ளை நிலாவை கன்னம் தொடாமல் போவேனோ
    கட்டிப் பிடித்து நெஞ்சில் அணைத்து தன்னை மறந்து வாழ்வேனோ
    கட்டிப் பிடித்து நெஞ்சில் அணைத்து தன்னை மறந்து வாழ்வேனோ

    மஞ்சள் முகத்தை மெல்லப் பிடித்து என்னை ரசிக்கக் கூடாதோ
    மஞ்சள் முகத்தை மெல்லப் பிடித்து என்னை ரசிக்கக் கூடாதோ
    வண்ணம் மலர்ந்து எண்ணம் கலந்து மின்னல் மயக்கம் கொள்ளாதோ
    மின்னல் மயக்கம் கொள்ளாதோ

    உத்தரவின்றி உள்ளே வா
    உன்னிடம் ஆசை கொண்டேன் வா
    உலகினில் ஆடவர் ஆயிரமாயிரம்
    உனக்கும் எனக்கும் பொருத்தம் மிகுத்த ஜாதகம்

    உத்தரவின்றி உள்ளே வா
    உன்னிடம் ஆசை கொண்டேன் வா
    Last edited by vasudevan31355; 2nd November 2015 at 04:20 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  18. Thanks adiram, Richardsof thanked for this post
  19. #1310
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    sema paattu vaasu.. enakku..woodlands la utkaarnthukkittu rama prabha.."enakku oru thEnum thiNai maavum koNarka.." enach cholvathu eppOthum ninaivu vanthu smile thaanagavE varum.. mm

    veet pOi type paNRen..

  20. Likes RAGHAVENDRA liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •