Page 159 of 337 FirstFirst ... 59109149157158159160161169209259 ... LastLast
Results 1,581 to 1,590 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #1581
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //இதெல்லாம் சிலோன் ரேடியோவில் கேட்ட பாட்ஸ் எஸ்பிபி தானே எப்போ வ்ரும்..//

    இப்போ வராது. ஆனா கண்டிப்பா வரும்.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1582
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    நீர் சூழ இருக்கேன். ஐ மீன் மழை நீர்.
    aaha enne thazmih pulamai

  4. Thanks vasudevan31355 thanked for this post
  5. #1583
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    நாலு நாள் மழையில் சிக்கிய மல்லிகைக் கொடியாக நனைந்து பாலுமகேந்திராவின் ஊட்டியாக ஈரமாக இருக்கிறேன். அதுக்குள்ள இங்கே ஏழெட்டு பக்கம் நகர்ந்து போச்சா ?

    சிக்கா... கீதாவின் இரட்டைக் குளியல் என்று படிக்கிறப்பவே எனக்கு நீங்க ரெண்டு வாட்டி வீடியோ போஸ்ட் செஞ்சிருப்பீங்கன்னு தோணிச்சு.. ( நீங்க டெலீட் செஞ்சுட்டாலும் கூட )..

    நா.ம வின் க .க. க. பாட்டு உமாவுக்கு.. ஜெ.சிக்கு அல்ல...

    பவர் பிரச்சினையால் பதிய முடியவில்லை. அப்புறமா வரேன்

  6. Likes chinnakkannan liked this post
  7. #1584
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பக்திப்பாடகர் பித்துக்குளி முருகதாஸ் காலமானார்

    சென்னை : பக்திப்பாடகர் பித்துக்குளி முருகதாஸ்(95) சென்னையில் காலமானார். இவர், கோவையில் 1920ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி சுந்தரம் ஐயர், அலமேலு தம்பதியருக்கு மகனாக தைப்பூச திருநாளில் பிறந்தார். இவரது இயற்பெயர் பாலசுப்ரமணியம். பக்திப்பாடகரான இவர் தென்னாப்ரிக்கா, இலங்கை, அமெரிக்கா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இசைக்கச்சேரி நடத்தியுள்ளார். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகள் தெரிந்த இவர், கலைமாமணி, சங்கீத சாம்ராட், தியாகராஜர் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.

    தினமலர் இணையப்பக்கத்திலிருந்து- http://www.dinamalar.com/news_detail.asp?id=1388839&

    திரு பித்துக்குளி முருகதாஸ் மறைவு பக்கி சங்கீதத்திற்கு பேரிழப்பு. பஜனை சம்பிரதாயத்தில் பொது மக்களை மிக அதிக அளவில் பங்கு கொள்ள வைத்த பெருமை இவருக்கும், கே.பி.சுந்தராம்பாள், பெங்களூரு ரமணி அம்மாள் ஆகியோருக்கு உண்டு. அவர்களுடைய தலைமுறையைச் சார்ந்த பித்துக்குளி முருகதாஸ் அந்தக்கால பஜனை சம்பிரதாயத்தின் பிரதிபலிப்பாக நம்மிடையே வாழ்ந்து வந்தார். அவருடைய மறைவுக்கு நமது அஞ்சலியை செலுத்திக் கொள்வோம். அவருடைய ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.

    அவர் நினைவாக அவர் புகழை என்னாளும் கூறும் தெய்வம் படத்தில் இடம் பெற்ற அவருடைய பாடல்..

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #1585
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்

    (நெடுந்தொடர்)

    50-ஆவது சிறப்புப் பதிவு



    50

    'உத்தரவின்றி உள்ளே வா'



    'உன்னைத் தொடுவது இனியது'

    பாலாவின் இன்னொரு அலாதியான உற்சாகப் பாடல் அதே 'உத்தரவின்றி உள்ளே வா' படத்திலிருந்து. பாடல்களுக்கு ஒரு படமல்லவா அது!

    இந்தப் படத்தின் பாடல்கள் பல பேரைக் குழப்பும் திறன் வாய்ந்தவை. ஏனென்றால் ஒன்றையொன்று மிஞ்சும் ரகம். 'உத்தரவின்றி உள்ளே வா' பாடல் அருமை என்றால் 'காதல் காதல் என்று பேசக் கண்ணன் வந்தானோ' தான் டாப் என்பவர்கள் பலர். 'நோ.. நோ... மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி'தான் அனைத்தையயும்விட டாப்' என்று ஒரு வர்க்கம் வரிந்து கட்டிக் கொண்டு வரும். 'அதெல்லாம் கிடையாது...'உன்னைத் தொடுவது இனியது' தான் செம ஜாலி' என்று கூக்க்குரலிடும் ஒரு கும்பல். 'நிறுத்துங்கப்பா! தேன் மாதிரி ஈஸ்வரி பாட்டை மறந்துட்டு ஏதேதோ பேசறீங்களே...'தேனாற்றங்கரையினிலே' மாதிரி பாடல் வருமா?' என்போர் ஒரு குரூப். இப்படி ஆளாளுக்கு தங்களுக்குப் பிடித்த பாடல்களை வரிசைப்படுத்தினாலும் அத்தனைப் பாடல்களும் அத்தனைப் பேருக்கும் அவ்வளவு பிடிக்குமே! இதில் மாற்றுக் கருத்தே இல்லை. இப்படி சில படங்கள்தான் பாடல்களுக்கென்றே அமையும். (எனக்கு இதில் 'வெண்ணிற ஆடை' முதல் இடத்தைப் பிடிக்கும். அப்புறம் 'காவியத் தலைவி'. நடிகர் திலகம் படப் பாடல்கள் கதை வேறே. அதை இதில் கலக்க மாட்டேன்)

    இதில் நான் 'உன்னைத் தொடுவது இனியது' ஆதரவாளர்கள் கட்சியைச் சேர்ந்தவன். முதலிடம் அதற்குத்தான். அவ்வளவு பிடிக்கும்.


    வீட்டிலேயே அடைந்து சதா வேலை செய்து கொண்டிருக்கும் காதலி காஞ்சனாவை வற்புறுத்தி வெளியே பார்க்குக்கு காரில் அழைத்துச் செல்வார் ரவி. அங்கு சென்று பார்த்தால் அவருக்குத் தெரியாமல் நாகேஷ் 'நாதா' பைத்தியத்துக்குப் பயந்து காரில் ஒளிந்து கொண்டு உறங்கி விட்டிருப்பார். நாகேஷுக்குத் தெரியாமல் 'நாதா' ரமாபிரபா காரின் டிக்கியில் ஒளிந்து கொண்டிருப்பார். டிபன் கேரியர் எடுக்க ரவி டிக்கியைத் திறக்கும் போது ரமா அங்கு ஒளிந்திருப்பது தெரிய வரும். ரவி காஞ்சனாவுடன் டூயட் பாட ஒரு பக்கம் செல்ல, நாகேஷை விடாமல் இன்னொரு பக்கம் துரத்தி ரமா செல்வார். இப்போது இரு ஜோடிகளுக்கும் அதியற்புதமான பாடல்.

    அது உங்களையும் என்னை மட்டும் தொட்ட இனிய பாடல் அல்ல..தமிழ்நாட்டையே கலக்கிய தங்கப் பாடல்.

    எப்போது கேட்டாலும் புதிதாகத் தெரியும் பாடல். மின்னல் போல உடலில் துடிப்பை ஏற்படுத்தும் பாடல்.

    முன்பின் இல்லாத அளவிற்கு நம் நினைப்பிலேயே நின்றுவிட்ட பாடல்.

    'உன்னைத் தொடுவது இனியது
    நான் சொல்லித் தருவது புதியது'

    'ஆஹா' என்பதா? 'ஓஹோ' என்பதா? 'பேஷ் பேஷ்' என்பதா? எதைச் சொல்லி இந்தப் பாடலைப் பாராட்டுவது?




    உற்சாகம் என்றால் கரை புரண்டு ஓடும் உற்சாகம். நாயகன் நாயகி இருவரும் இளமை பொங்க 'துறுதுறு'ப்பாயும், 'சுறுசுறு'ப்பாயும் பார்க்கைச் சுற்றி சுற்றி வந்து ஆடிப்ப் பாட, அங்கே நாகேஷ் தன் தலைவிதியை நொந்து தன்னையே சுற்றும் பூர்வஜென்மப் பைத்திய ராமாவின் கேள்விகளுக்கு அறிவுபூர்வமாக பதில் சொல்லிக் கொண்டிருக்க நகைச்சுவையும், நயமும் கொப்புளிக்கும் ஜோரான பாடல்.

    ரவியின் டிரெஸ் நிரம்ப அழகு. ப்ளைன் ஸான்டல் கலரில் முழுக்கை சட்டை ரவிக்கு அவ்வளவு ரம்மியமாக இருக்கும். நீள் கோடிட்ட டிசைன் பிரவுன் பேன்ட் அந்த ஷர்ட்டின் கலருக்கு அவ்வளவு மேட்ச் ஆகும். காஞ்சனா வீட்டிலிருந்து அவசரமாக வெளியில் புறப்பட்டு வருவதால் வீட்டில் உள்ள சாதாரண புடவையையே அணிந்திருப்பார். இந்தப் பாடலிலும் அவருக்கு மிக எளிமையான உடையே. ஆனால் அதுதான் அழகே!

    ரவிக்கு ரசனை மிகுந்த பாலா குரல். காஞ்சனாவிற்கு 'கானக் குயிலி'ன் குரல். இவர்கள் ஒரு பக்கம் தூள் பண்ணிக் கொண்டிருக்க,

    அங்கே நாகேக்ஷுக்கு எனக்கு மிக மிகப் பிடித்த, அவருக்கு பொருத்தமான சாய்பாபாவின் குரல். ரமாபிரபாவிற்கு எனதருமை ராட்சஸி குரல். நால்வர் கூட்டணி. இப்போது புரிகிறதா எனக்கு ஏன் இந்தப் பாடல் முதலிடம் என்று?


    மெலிதாயும் இல்லாமல், வலிதாயும் இல்லாமல், இடைப்பட்ட சுகமான கிடார் ஒலியில் ஆரம்பித்து வயலின்களின் இசை பின்னல் சேர, ஆர்கன்களின் ஓசை பின்னி எடுக்க, செம ஜாலியாக பாலா,

    'லா...லலல்லா
    லா... லலலலலா'

    எடுக்க உங்கள் அங்கமெல்லாம் தேன் மாரி பொழிய ஆரம்பித்துவிடும். அதே ஓசை டிரம்பெட் ஒலியில் கம்பீரமாகத் தொடரும். இத்தனை உபகரணங்களும் இசை மழை பொழிந்த பின்பு பாலா என்ற காமதேனு தன் வழுக்குக் குரலால் மேலும் இனிமையைப் பொழிய ஆரம்பிக்கும்.

    'உன்னைத் தொடுவது இனியது
    நான் சொல்லித் தருவது புதியது'

    என்று குழைவாக அதே சமயம் கம்பீரம் கெடாமல் முழங்க, அதைத் தொடர்ந்து குயில் குரல் தரும்.

    'இதில் மின்னல் போல் ஒரு துடிப்பு
    இது முன்பின் இல்லாத நினைப்பு'

    இந்த நான்கு வரிகள் நானூறு வருஷத்துக்குப் போதுமைய்யா! பாடல் முழுவதையும் அப்புறம் கேட்டுக் கொள்ளலாம்.

    சரணத்தில் பாலா பேஸ் வாய்ஸில், கட்டைக் குரலில்,

    'பாவை முன்பு நானும் இன்று
    பள்ளிப்பாடம் சொன்னாலென்ன?'

    என்று பாடும்போது அப்படியே நம் நெஞ்சம் 'சர்'ரென்று 'பி.எஸ்.எல்.வி' வேகத்தில் பறக்கும். ரத்த நாளங்கள் சுறுசுறுப்பாகும். அதுவும் 'பள்ளிப் பாடம்' சொல்லி முடித்து 'சொன்னாலென்ன?' என்று சற்று வேகமாக ஒரு தூக்குத் தூக்குவாரே பார்க்கலாம். அய்யோ!

    சுசீலா அடுத்த வரிகளை முடித்தவுடன் பாலா,

    'லலலலலலலலலால்லா
    ல லலலலலலலலலால்லா'

    என்று குதூகல ஹம்மிங் போடுவது குஷியோ குஷி! எதிர்ப்புறமும் அப்படியே.

    அப்படியே அவர்களை மறந்து இங்கே வாருங்கள்.


    பூங்காவில் மலை போல நிற்கும் யானை சிலையின் கால்களுக்கிடையில் ரமா புகுந்து வர,

    'ஒரே முறை பார்த்தேன்
    நிலாவினைக் கேட்டேன்'

    என்று திடீரென ஒரு அரக்கியின் அடாவடிக் குரல் கேட்கும். விசாரித்தால் 'ஈடு இணையில்லா ஈஸ்வரி' என்று சொல்வார்கள். நாகேஷின் ஒயிட் ஜிப்பா அவரைப் போலவே காமெடியில் கலக்கும்.

    'சேரன் சோழன் திரும்பவும் வருவான்
    காதல் வீடு கல்யாணமெல்லாம்
    அங்கே பேசு என்னிடம் வேண்டாம்
    அம்மா தாயே! நான் யார்? நீ யார்?
    நானோ எலும்பு.. நீயோ இரும்பு
    கண்ணே பூர்வ ஜென்மம்'

    என்று நாகேஷ் சாய்பாபாவின் சாய வைக்கும் குரலில் ரமாவுக்கு வேண்டுகோள் விடுப்பது வேடிக்கை கலந்த அபாரம். அதுவும் நாகேக்ஷின் உடலை அவரே நையாண்டி செய்து ('நானோ எலும்பு') துரத்தும் ராமாவை 'அயர்னு'க்கு ஒப்பிட்டு ('நீயோ இரும்பு') பூர்வ ஜெமத்தையும் 'கண்ணே!' என்று கனிவோடு அழைத்துச் சுட்டிக் காட்டும் போது எவர் சிரிக்காமல் இருக்க முடியும்? பாபா குரல் பிளஸுக்கும் பிளஸ் பாய்ன்ட். குரலில் குல்கந்து கலந்திருப்பாரோ!

    'அங்கே பேசு என்னிடம் வேண்டாம்' என்று நாகேஷ் இசைக்கும்போது ரமாபிரபா பின்பக்கமாக படிக்கட்டுகளில் இறங்கியபடியே கைகளை பறவை இறகுகள் போல் வைத்து வெகு ஜோராக இடுப்பை அசைத்து வருவது அமர்க்களம். (மறவாமல் pause பண்ணி பார்க்க)

    'நானோ எலும்பு' என்று சொல்லுபோது படிக்கட்டில் ராமாவுக்காக பயந்து சாயும் நாகேஷின் முக அஷ்ட கோணலை பார்க்க மறக்காதீர்கள்.

    இப்போது ரவி, காஞ்சனா டர்ன்.


    சரண இடையிசைக்கு புடவையுடன் காஞ்சனா ட்விஸ்ட் ஆடும் போது நம் எல்லோர் மனமும் ஆட்டம் காணும். உடன் ரவி ஒரு காலை மட்டும் தூக்கி தூக்கி ஆடியபடி மிக அழகாக ஜாயின் செய்வார். பிறகு ரவி அப்படியே காஞ்சனாக் கொடியை 'அலேக்' காகத் தூக்க 'மெல்லிசை மன்னர்' இப்போது புகுந்து புறப்படுவார் பாருங்கள்! பாடலின் பல்லவி வரிகளை அப்படியே இசைக்கருவிகளின் மூலம் இந்த இடத்தில் டைமிங்கில் அற்புதமாக ஒலிக்க வைத்து அம்சமாக பெயரைத் தட்டிக் கொண்டு போய் விடுவார் எம்.எஸ்.வி.எமகாதகன்.



    அதே இசைக்கு (பின் இரண்டு லைன்கள்) இங்கே நடந்ததற்கு தலைகீழாக அங்கே ரமாபிரபா சர்வ அலட்சியமாக நாகேஷை 'அலேக்'காகத் தூக்கி மூன்று முறை சுற்றிக் கிடாசுவார். (ரவி கூட காஞ்சனாவை தூக்கி ஒருமுறைதான் சுற்றுவார்) அப்பப்பா! வயிறு சிரித்து சிரித்து வெடித்தே விடும். என்ன நளினமான அழகான கற்பனை! ஹீரோ ஹீரோயினைத் தூக்குவது வாடிக்கை. காமெடியினி காமெடியனை தூக்கி சுடுவது நிஜமான காமெடி. தியேட்டர் குலுங்கும்.

    அடுத்த சரணத்தில்

    'தேகமெங்கும் மோக வண்ணம்
    சிந்து பாடும் பெண்ணல்லவோ'

    என்று இரண்டாம் தரம் பாடும் போது பாலா 'பெண்ண..ல்லவோ' என்று கொஞ்சிக் குழைந்து 'இன்னும் ஒரு முறை பாலா... ப்ளீஸ்!' என்று நம்மைக் கெஞ்சிக் கூத்தாட வைப்பார். அடடா! இந்த இடத்தில் பாலா குரலால் வாழ்ந்து காட்டுவார்.

    இதே சரணத்தில் காஞ்சனா பாடுவதாக வரும்,

    'மேனி என்னும் காதல் சின்னம்
    தேடும் சொந்தம் நீயல்லவோ'

    வரிகளை மறக்கவே முடியாது. என்னா கவிஞன்யா அவன்! இந்த வரிகளுக்கு அர்த்தம் சொன்னால் என்னை விட மாங்காய் இருக்க முடியாது. காஞ்சனா வேறு அவர் பங்குக்கு இந்த இடத்தில் நமம்க் கொல்வார். எத்தனை இன்ப இம்சைகள்!


    காஞ்சனா, ரவி ஆடுவது நடன மாஸ்டர் சொல்லித் தந்தது போலவே இராது. ரொம்ப இயல்பாக அவர்கள் இஷ்டத்திற்கு ஆடுவது போலவே அவ்வளவு இயற்கையாக இருக்கும்.

    இவர்கள் போர்ஷன் முடிந்தவுடன் திரும்ப நாகேஷ், ரமா. ஆற்றின் குறுக்கே நிற்கும் பாலத்தில்.

    'நீ பாண்டியனின் பிள்ளையோ?' என்று ஈஸ்வரி கொக்கரிப்பார். அந்த 'யோ' அழுத்தம் அய்'யோ'!

    'நான் மாமதுரைக் காதலி
    என் மன்னவனின் நாயகி'

    என்று ராட்சஸி பாடுவதை இரண்டு முறைக்குக் மேல் நிறுத்திக் கேட்காமல் மேலே போக முடியாது.

    நாகேஷ் சொல்லும் பதிலில் நகைச்சுவை மண்டிக் கிடக்கும்.

    'நானும் கொஞ்சம் சரித்திரம் படித்தேன்
    ராஜா ராணி நம்மைப் போல் இல்லை'

    பாருங்கள். 'கொஞ்சம் சரித்திரம்' படித்தாராம். நாகேஷின் படிப்பு மக்குத்தனத்தை, அதே சமயம் புத்திசாலித்தனத்தை ஒருங்கே வெளிப்படுத்தும் வரிகள்.

    'காதல் உலகை வாழ விடம்மா'

    என்று ராமாவிடம் கெஞ்சல் வேறே.

    'சேரன் சோழன் திரும்பவும் வருவான்
    காதல் வீடு கல்யாணமெல்லாம்'

    'நானும் கொஞ்சம் சரித்திரம் படித்தேன்
    ராஜா ராணி நம்மைப் போல் இல்லை'

    என்ற சாய்பாபாவின் வரிகள் இரண்டு சரணங்களிலும் முடிந்தவுடன் விட்டு விட்டு ஒலிக்கும் 4 முறை வரும் அந்த ம்யூசிக். (டைன்... டைன்... டைன்... டைன்) சான்ஸே இல்லை.

    பாடல் முழுதும் எதை ரசிப்பது என்ற குழப்பம் நமக்கு. பாடகர்களின் குரலையா, நடிகர்களின் நடிப்பையா, நாகேஷ் ராமாவின் காமெடியையா, வெளுத்து வாங்கும் 'மெல்லிசை மன்ன'ரின் மகோன்னத இசையையா, வெளிப்புற கலர்புல் படப்பிடிப்பையா, அட்டகாசமான பாடல் வரிகளையா என்று எதை எடுப்பது எதை உடுப்பது போன்ற இன்பக் குழப்பம் ஏற்படுத்தும் இனிமைப்பாடல். இளமைப் பாடல். துள்ளல் பாடல்.


    இனி பாடல் வரிகள்



    லா... லலல்லா
    லா... லலலலலா

    லா லலலலலலா

    உன்னைத் தொடுவது இனியது
    நான் சொல்லித் தருவது புதியது

    இதில் மின்னல் போல் ஒரு துடிப்பு
    இது முன்பின் இல்லாத நினைப்பு

    உன்னைத் தொடுவது இனியது
    நான் சொல்லித் தருவது புதியது

    இதில் மின்னல் போல் ஒரு துடிப்பு
    இது முன்பின் இல்லாத நினைப்பு

    பாவை முன்பு நானும் இன்று
    பள்ளிப்பாடம் சொன்னாலென்ன

    தேவையென்றால் கோடி உண்டு
    தேடித் தேடித் தந்தாலென்ன

    பாவை முன்பு நானும் இன்று
    பள்ளிப்பாடம் சொன்னாலென்ன

    தேவையென்றால் கோடி உண்டு
    தேடித் தேடித் தந்தால் என்ன

    லலலலலலலலலால்லா
    லல்லல்லலல்லலல்லலல்லலால்லா

    லலலலலலலலலால்லா
    லலலலலலலலலலால்லா

    ஒரே முறை பார்த்தேன்
    நிலாவினைக் கேட்டேன்
    ஒரே முறை பார்த்தேன்
    நிலாவினைக் கேட்டேன்
    அதே முகம் என்றாள்
    இதோ என்னைத் தந்தேன்

    சேரன் சோழன் திரும்பவும் வருவான்
    காதல் வீடு கல்யாணமெல்லாம்
    அங்கே பேசு என்னிடம் வேண்டாம்
    அம்மா தாயே! நான் யார் நீ யார்
    நானோ எலும்பு நீயோ இரும்பு
    கண்ணே பூர்வ ஜென்மம்

    உன்னைத் தொடுவது இனியது
    நான் சொல்லித் தருவது புதியது
    இதில் மின்னல் போல் ஒரு துடிப்பு
    இது முன்பின் இல்லாத நினைப்பு

    தேகமெங்கும் மோக வண்ணம்
    சிந்து பாடும் பெண்ணல்லவோ

    மேனி என்னும் காதல் சின்னம்
    தேடும் சொந்தம் நீயல்லவோ

    தேகமெங்கும் மோக வண்ணம்
    சிந்து பாடும் பெண்ணல்லவோ

    மேனி என்னும் காதல் சின்னம்
    தேடும் சொந்தம் நீயல்லவோ

    லலலலலலலலலால்லா
    ல லலலலலலலலலால்லா

    லலலலலலலலலால்லா
    ல லலலலலலலலலால்லா

    நீ பாண்டியனின் பிள்ளையோ
    உன் பால் மனது வெள்ளையோ
    நீ பாண்டியனின் பிள்ளையோ
    உன் பால் மனது வெள்ளையோ
    நான் மாமதுரைக் காதலி
    என் மன்னவனின் நாயகி

    நானும் கொஞ்சம் சரித்திரம் படித்தேன்
    ராஜா ராணி நம்மைப் போல் இல்லை
    தானே பார்த்து தானே சிரித்து
    தானே அணைத்தால் தாங்காது தாயே
    காதல் உலகை வாழ விடம்மா
    கண்ணே பூர்வ ஜென்மம்

    உன்னைத் தொடுவது இனியது
    நான் சொல்லித் தருவது புதியது
    இதில் மின்னல் போல் ஒரு துடிப்பு
    இது முன்பின் இல்லாத நினைப்பு
    Last edited by vasudevan31355; 19th November 2015 at 06:38 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. Thanks rajeshkrv thanked for this post
  10. #1586
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //தானே பார்த்து தானே சிரித்து
    தானே அணைத்தால் தாங்காது தாயே
    காதல் உலகை வாழ விடம்மா
    கண்ணே பூர்வ ஜென்மம் //சேரன் சோழன் திரும்பவும் வருவான்
    காதல் வீடு கல்யாணமெல்லாம்
    அங்கே பேசு என்னிடம் வேண்டாம்
    அம்மா தாயே! நான் யார் நீ யார்
    நானோ எலும்பு நீயோ இரும்பு
    கண்ணே பூர்வ ஜென்மம் // ககக்னு சிரிக்காம யார் தான் இருப்பாங்க.. வாஸ்ஸூ..வழக்கம் போல கலக்கல்ஸ்.. எனக்கு நாகேஷ் ரமாப்ரபா போர்ஷன்ரொம்ப ப் பிடிக்கும்.. நன்னி, தாங்க்ஸ், வளர நன்னியானு, நன்னிலு, ஷூக்ரான் ஹபிபி.. வேற மொழில்ல ராஜ்ராஜும் ராகதேவனும் சொல்வாக..

  11. Thanks vasudevan31355 thanked for this post
    Likes Russellmai liked this post
  12. #1587
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    வாசு சார்
    சூப்பரோ சூப்பர்... இதை விட இந்தப் பாடலைப் பற்றி வேறு யாரும் எழுத முடியாது. அக்கு வேறு ஆணி வேறாக பிய்த்து உதறி விட்டீர்கள்.
    உத்தரவின்றி உள்ளே வா ... சந்தேகமே யில்லாமல் இசைக்கென்ரு ஓர் படம்...

    தங்கள் எழுத்தில் படிக்கப் படிக்க மீண்டும் மீண்டும் பார்க்கும் ஆர்வமே எவருக்கும் மேலிடும்.

    உளமார்ந்த பாராட்டுக்கள்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  13. Thanks vasudevan31355 thanked for this post
    Likes Russellmai liked this post
  14. #1588
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    இசைக்கென்றே ஒரு படமான உத்தரவின்றி உள்ளே வா படத்தின் டைட்டில் இசையும் நாம் கேட்டால் முழுமை அடைந்து விடுமே..

    இதோ உங்களுக்காக உத்தரவின்றி உள்ளே வா திரைப்படத்தின் முகப்பிசை. தரவிறக்கிக் கேட்டு மகிழுங்கள்.

    https://www.mediafire.com/?ol08dj4cc7vo3uy
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  15. Thanks vasudevan31355 thanked for this post
    Likes madhu, Russellmai liked this post
  16. #1589
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    நேத்திக்கு ஒரு பாட் கேட்டேன்..கேட்டேனா..

    ஹிப்பி ஸ்டைல்ல முத்துராமன்.. அப்புறம் யாராக்கும் இது தேர்ந்த சிற்பியால செதுக்கப் பட்ட கருங்கற்சிற்பம் சுடிதார் டைப் ட்ரஸ்ல ஆடுதோ ந்னு வியக்கவைக்கற மாதிரி அழகோட ஃபடாபட்.. படம் உறவுகள் என்றும் வாழ்கன்னு நினைக்கிறேன்

    பாட் சொல்லலாம்போட முடியாத்..வாசு திட்டும்..

    நானூறு பூக்கள் மெருகேற்றும் மங்கை
    ரதிதேவி தங்கை வரவேண்டும் இங்கே.. நல்ல இசை..

    ஆமா என்னவாக்கும் கதை?

  17. Likes Russellmai liked this post
  18. #1590
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    வாசு ஜி..

    உன்னைத் தொடுவது பாடல் எனக்கும் ரொம்பப் பிடித்தது. ( நாலு குரல்களில் ஒரு பஃபே பார்ட்டியே கிடைத்தால் யாராவது வேணாம்னு சொல்லுவாங்களா ? ) முதல் காரணம் அந்தப் பாட்டின் வேகமான மெட்டு. பாலு,சுசீலா,ஈஸ்வரி பற்றி சொல்லவே வேண்டாம். நாகேஷ் என்றால் ஏ.எல்.ராகவன் குரல்தான் சரி என்று நினைத்திருப்போருக்கு "ம்ம்ம்மாட்டிகிட்டான்" படத்தின் ரோமியோவும்... இந்தப் பாட்டும் ஷிர்டியும் புட்டபர்த்தியும் போல.....( சிக்காவுக்கு புரிஞ்சா போதும்.. )


  19. Thanks vasudevan31355, rajeshkrv thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •