மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனமிங்கு பகை கொள்வதேனோ
மதம் என்னும் மதம் ஓயட்டும்
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்


மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனமிங்கு பகை கொள்வதேனோ
மதம் என்னும் மதம் ஓயட்டும்
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்

வழிகின்ற கண்ணீரில் இனம் இல்லையே
உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே
வழிகின்ற கண்ணீரில் இனம் இல்லையே
உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே
காற்றுக்கு திசை இல்லை தேசம் இல்லை
மனதோடு மனம் சேரட்டும்

மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனமிங்கு பகைக் கொள்வதேனோ
மதம் என்னும் மதம் ஓயட்டும்
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்

துளியெல்லாம் கைகோர்த்து கடலாகட்டும்
கடலோடு கடல் சேரட்டும்
துகள் எல்லாம் ஒன்றாகி மலையாகட்டும்
விண்ணோடு விண் சேரட்டும்
விடியாத இரவென்றும் வானில் இல்லை
ஒளியோடு ஒளி சேரட்டும்...