Page 317 of 337 FirstFirst ... 217267307315316317318319327 ... LastLast
Results 3,161 to 3,170 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #3161
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    அசை போட வைக்கும் திருச்சி லோகநாதரின் இசைப் பாடல் மதுரங்கள் !

    ஆசையே துன்பத்துக்கு காரணம் என்பது மேம்போக்கான புத்த ஞானமாக இருக்கலாம் .... ஆனாலும் ஆசையே விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளின் ஆதாரம் .....சைக்கிளிலிருந்து செல்போன் வரை ....

    அலை போன்ற ஆசையில் இலை போட்டுப் பரிமாறுகிறார் இசை விருந்தை !

    Last edited by sivajisenthil; 17th July 2016 at 09:07 PM.

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  4. #3162
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    அசை போட வைக்கும் திருச்சி லோகநாதரின் இசைப் பாடல் மதுரங்கள் !

    காலங்கள் மாறிக்கொண்டேயிருந்தாலும் கதிரவனின் களப்பணி மாற்றமற்றதே ...திருச்சி லோகநாதரின் அமரத்துவம் பெற்ற இப்பாடலும் அந்த வரிசையே !

    வாராய் நீ வாராய் ....போகுமிடம் வெகுதூரமில்லை நீ வாராய் ...
    செல்வோமே இசைமலையின் சிகரம் கண்டிட ....

    Last edited by sivajisenthil; 17th July 2016 at 09:54 PM.

  5. Likes Russellmai liked this post
  6. #3163
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    அசை போட வைக்கும் திருச்சி லோகநாதரின் இசைப் பாடல் மதுரங்கள் !

    கடோதகஜானாரின் கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம் ....காட்சி உருவாக்கத்திற்கேற்ற லோகநாதரின் கனத்த குரலும் ஹஹஹஹ சிரிப்பும் பிரமாதமே ....மாயாபஜாரின் மறக்க முடியாத ...பொறாமைப்பட வைக்கும் ரங்காராவின் சாப்பாட்டு தர்பார் ...

    Last edited by sivajisenthil; 17th July 2016 at 09:56 PM.

  7. #3164
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    நெற்றிக்கண் வழி நீறு பூத்த நெருப்புப் பிழம்பு(டா!) ஜெமினி கணேசன் !

    10 நிறைவுப் பகுதி
    திருநீறு பூசிய எரிமலைக்குழம்பு சிவனார் ஜெமினி கருணையில் வந்தவரே ஆறுமுகக் கந்தன் !

  8. Likes vasudevan31355 liked this post
  9. #3165
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like

    'என் ஆசை என்னோடு' (திருடன்)

    ஒரு அருமையான பாடல். நல்ல சிச்சுவேஷனும் கூட. ஆனால் நல்ல நடிகை இருந்தும் அவரின் அன்றைய உருவத்தால், அவருக்கு பொருத்தமில்லா நடனத்தால் இப்பாடல் உரிய பலனை அடையாமல் போனது. சுசீலா அம்மாவின் அற்புதமான பாடலின் சூழலை உணர்ந்த குரல் பாவங்கள். அதற்கேற்ற அந்த பாத்திரத்தின் மேல் பார்ப்பவர்கள் கருணையோடு பரிதாபப்பட்டு நெகிழச் செய்யும் மன்னரின் துள்ளாட்டத்தோடு கூடிய உருக வைக்கும் இசை.

    திருடனான கணவன் திருந்தி வாழும் போது வறுமைக்கு உள்ளாகிறான். மனைவியும், குழந்தையும் உணவு கூட இன்றி வாழ வேண்டிய சூழ்நிலை. நல்லவனாய் மாறினாலும் திருடன் என்ற முத்திரை மாறாததால் சமூகம் அவனுக்கு வேலை தர மறுக்கிறது. பாலின்றித் தவிக்கும் தன் குழந்தையின் நிலைமை கண்டு அவன் துடிக்கிறான். தவிக்கிறான். மனைவி அவனை எவ்வளவோ சமாதானப்படுத்தியும் அவன் இயல்பு நிலைக்குத் திரும்பாமல் படுக்கையில் விழுகிறான். அரண்டு பிதற்றுகிறான். அவன் உடல்நிலை மோசமாகிறது. படுக்கையில் படுத்தபடியே 'யாராவது வேலை கொடுங்களேன்' என்று அரற்றுகிறான். அவனை படுக்கையில் கண்ட்ரோல் செய்ய முடியாமல் மனைவி அவனை கட்டிலுடன் சேர்த்து சேலையால் கட்டிப் போடுகிறாள் அழுதபடியே. ஓடிச் சென்று டாக்டரை அழைத்து வர, டாக்டர் மருந்து எழுதித் தந்து சத்துள்ள ஆகாரமாக அவனுக்குத் தரச் சொல்லி செல்ல, மனைவி செய்வதறியாது நிற்கிறாள் வறுமையின் கொடுமையை நினைத்தபடியே.

    இப்போது அவள் ஒரு முடிவெடுக்கிறாள். ஹோட்டலில் நடனமாடி, வருவாய் ஈட்ட முடிவு செய்து, அட்வான்ஸும் வாங்கி கணவனுக்கு மருந்துகள் வாங்கி வருகிறாள். கணவன் இவையெல்லாம் 'எப்படி வாங்கினாய்?' என்று வினவ, தான் வேலைக்குப் போவதாகக் கூறுகிறாள். கணவன் அதை எண்ணி துயரமடைகிறான். அவள் கணவனிடம் வேலைக்குப் போவதாகத் சொன்னாளே ஒழிய, தான் ஹோட்டலில் நடனமாடிச் சம்பாதிப்பதாகச் சொல்லவில்லை.

    இப்போது அவள் ஹோட்டலில் நடனமாடச் செல்ல, வீட்டில் தனியே இருக்கும் கணவனிடம் வருகிறான் அவனுடைய பழைய பாஸ். அவனை மறுபடி திருட்டுத் தொழிலுக்கு வரச் சொல்லி வற்புறுத்துகிறான். ஆனால் திருந்தியவனோ தீர்மானமாக அதற்கு மறுக்க, அவனுடைய கொள்ளையர் தலைவன் அவன் மனைவி ஹோட்டலில் பல பேர் அறிய மானத்தை விட்டு நடனமாடி சம்பாதிப்பதை விட திருடுவது எவ்வளவோ மேல் என்று அவன் மனைவி நாட்டியமாடுவதை அவனிடம் போட்டு உடைக்க, அதைக் கேட்டு அதிர்ந்து, உறைந்து போகிறான் கணவன். கோபம் தலைக்கேற தான் பாஸுடன் ஹோட்ட்டலுக்கு புறப்படுகிறான்.

    அங்கே கணவனுக்காக தன் மானத்தையே விட்டு நடனமாடுகிறாள் அவன் மனைவி.

    திருந்திய திருடனான கணவன் வேடத்தில் நடிகர் திலகம். கேட்கவே வேண்டாம். மனைவி ரோலுக்கு கே.ஆர்.விஜயாதான். கொள்ளைக்கார பாஸ் பாலாஜி.

    ஹோட்டலில் நடனமாடும் ரோல் சற்றும் பொருந்தா விஜயா. உடல் பருமன் உடன் பயமுறுத்துகிறது. மரியாதைக்குரிய நாயகி என்று பெயர் எடுத்தது விட்டதால் உடல் முழுதும் மறைத்த கோபிகாஸ்திரி கவர்ச்சி டிரெஸ் விஜாவிற்கு சூட் ஆகவில்லை. இந்த மாதிரி நடனமும் அவ்வளவாக அவருக்குப் பழக்கமில்லை.

    என் ஆசை என்னோடு
    சலங்கை தரும் ஓசை உன்னோடு
    உலகமே ஆடும் பெண்ணோடு
    மயக்கந்தான் ஹா ஹா ஹா மயக்கந்தான்
    ஓஹோஹோ
    அஹா அஹா அஹாஹா
    அஹா அஹாஹா

    (என் ஆசை என்னோடு)

    கூட்டத்தில் விளையாடப் புதிதானவள்
    கோலத்தின் அலங்காரம் பழகாதவள்
    பாட்டுக்கு நடை போட்டு அறியாதவள்
    பாவத்தை பிறர் காண சகியாதவள்
    ஆட்டத்தில் ஆசை உண்டு ஆசைக்கும் தேவை உண்டு
    ஆட்டத்தில் ஆசை உண்டு ஆசைக்கும் தேவை உண்டு

    கேட்டால்.....

    உலகமே ஆடும் பெண்ணோடு
    மயக்கந்தான் ஹா மயக்கந்தான்
    ஓ மயக்கந்தான்

    (என் ஆசை என்னோடு)

    மதுக் குடத்தினில் நனைத்தெடுத்தது எந்தன் உடலல்ல
    வடித்த பொன்னென அணைக்க வந்தவள் நானல்ல நானல்ல
    மணமுள்ள மலர் காண கொடியானவள்
    வாழ்கின்ற துணைக்காக கனியானவள்
    வழி கண்டு சபை தேடி சிலையானவள்
    மானத்தின் நிழலோடு கலையானவள்
    ஆட்டத்தில் ஆசை உண்டு ஆசைக்கும் தேவை உண்டு
    ஆட்டத்தில் ஆசை உண்டு ஆசைக்கும் தேவை உண்டு

    கேட்டால்....

    உலகமே ஆடும் பெண்ணோடு
    மயக்கந்தான் ஹா மயக்கந்தான்
    ஓ மயக்கந்தான்
    (என் ஆசை என்னோடு)

    'புன்னகை அரசி'யை புறந்தள்ளிவிட்டு பாடலை முழுவதும் ஆக்கிரமிப்பது இசையரசியே. பாடலின் முழு அர்த்தத்தையும் உணர்ந்து அதை நம் உள்ளங்களில் உணர்வோடு உணர்த்தும் வித்தையில் கைதேர்ந்த குரல்காரி இந்த பார் போற்றும் பாடகி. நடிகையின் முக பாவங்களையும், உடல் பாவங்களையும் ஒரே ஒரு குரல் தூக்கிச் சாப்பிட்டு விடுகிறது.

    'ஆட்டத்தில் ஆசை உண்டு ஆசைக்கும் தேவை உண்டு
    ஆட்டத்தில் ஆசை உண்டு ஆசைக்கும் தேவை உண்டு'

    என்று வரிகள் முடித்து

    'கேட்டால்'........

    என்று ஒரு வார்த்தை கேட்டு, சிறிது நிறுத்தி,

    'உலகமே ஆடும் பெண்ணோடு
    மயக்கந்தான் ஹா மயக்கந்தான் ஓ மயக்கந்தான்'

    என்று தபேலா வாத்தியங்களுக்கிடையே சுசீலா பாடும் இந்தப் பாடல் என்னுள் ஆழப் புதைந்தது. 'நடிப்புத் திருடன்' என்ற பிரளய சுனாமியால் இந்த பாடல் காணாமல் மறக்கடிக்கப்பட்டு விட்டது என்பதும் ஒரு புறம் உண்மையே. இருந்தாலும் மதுர கானங்கள் இதையெல்லாம் வெளிக்கொணரத்தானே உருவாக்கப்பட்டது?

    கதையறிந்து, காட்சியறிந்து காவிய வரிகள் படைக்க கண்ணதாசனை விட்டால் யார்? விரசம் எதிர்பார்க்கும் பத்து ஆண்களுக்கு மத்தியில் பத்தினி ஒருத்தி தன் மானத்தையும் காத்துக் கொண்டு, அதே சமயம் நாட்டியமும் ஆட வேண்டிய கட்டாய நிர்ப்பந்தத்தில் காலத்தின் கோலத்தை நினைத்து தன் நிலையை எண்ணிப் பாடும் வரிகள் அருமை. 'அனைத்தும் பெண்ணே' என்பதை 'உலகமே ஆடும் பெண்ணோடு' என்ற ஒரே வரியில் கலக்கிய இவனல்லவோ கவி!

    மனைவியை ஹோட்டலில் நடனமாடும் கோலத்தில் பார்த்துவிட்டு அவளைத் 'தரதர'வென வீட்டுக்கு இழுத்து வந்து,ஒரு வார்த்தை கூட பேசாமல் தான் மறுபடி கத்தி, துப்பாக்கி எடுத்து திருட்டுத் தொழிலுக்குப் போவதை பலவேறு முக பாவ உணர்ச்சிகளால் நமக்கும் அவளுக்கும் உணர்த்தும் நடிகர் திலகத்தின் பேராற்றல் நடிப்பு எப்பேற்பட்டதையும் மறக்கடிக்கச் செய்யும் மாயா ஜால வித்தை. அதை வெல்ல எவரால் முடியும்?

    ராகவேந்திரன் சார்,

    உங்களுக்காகவே இந்தக் காட்சியையும் சேர்த்து பாடலுடன் இணைத்துள்ளேன். மூலவர் இல்லாமலா?

    ('Youtube'-ல் ஏற்கனவே அப்லோட் செய்யப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை. எனவே இன்று நான் அப்லோட் செய்தது)

    Last edited by vasudevan31355; 18th July 2016 at 12:44 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. Thanks madhu, Russellmai thanked for this post
    Likes rajeshkrv, RAGHAVENDRA, madhu, Russellmai liked this post
  11. #3166
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Nadigar Thilagam Film Appreciation Association (NTFAnS) Next Programme.

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  12. Likes Russellmai, vasudevan31355 liked this post
  13. #3167
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    ஒரு அருமையான பாடல். நல்ல சிச்சுவேஷனும் கூட. ஆனால் நல்ல நடிகை இருந்தும் அவரின் அன்றைய உருவத்தால், அவருக்கு பொருத்தமில்லா நடனத்தால் இப்பாடல் உரிய பலனை அடையாமல் போனது. சுசீலா அம்மாவின் அற்புதமான பாடலின் சூழலை உணர்ந்த குரல் பாவங்கள். அதற்கேற்ற அந்த பாத்திரத்தின் மேல் பார்ப்பவர்கள் கருணையோடு பரிதாபப்பட்டு நெகிழச் செய்யும் மன்னரின் துள்ளாட்டத்தோடு கூடிய உருக வைக்கும் இசை.

    திருடனான கணவன் திருந்தி வாழும் போது வறுமைக்கு உள்ளாகிறான். மனைவியும், குழந்தையும் உணவு கூட இன்றி வாழ வேண்டிய சூழ்நிலை. நல்லவனாய் மாறினாலும் திருடன் என்ற முத்திரை மாறாததால் சமூகம் அவனுக்கு வேலை தர மறுக்கிறது. பாலின்றித் தவிக்கும் தன் குழந்தையின் நிலைமை கண்டு அவன் துடிக்கிறான். தவிக்கிறான். மனைவி அவனை எவ்வளவோ சமாதானப்படுத்தியும் அவன் இயல்பு நிலைக்குத் திரும்பாமல் படுக்கையில் விழுகிறான். அரண்டு பிதற்றுகிறான். அவன் உடல்நிலை மோசமாகிறது. படுக்கையில் படுத்தபடியே 'யாராவது வேலை கொடுங்களேன்' என்று அரற்றுகிறான். அவனை படுக்கையில் கண்ட்ரோல் செய்ய முடியாமல் மனைவி அவனை கட்டிலுடன் சேர்த்து சேலையால் கட்டிப் போடுகிறாள் அழுதபடியே. ஓடிச் சென்று டாக்டரை அழைத்து வர, டாக்டர் மருந்து எழுதித் தந்து சத்துள்ள ஆகாரமாக அவனுக்குத் தரச் சொல்லி செல்ல, மனைவி செய்வதறியாது நிற்கிறாள் வறுமையின் கொடுமையை நினைத்தபடியே.

    இப்போது அவள் ஒரு முடிவெடுக்கிறாள். ஹோட்டலில் நடனமாடி, வருவாய் ஈட்ட முடிவு செய்து, அட்வான்ஸும் வாங்கி கணவனுக்கு மருந்துகள் வாங்கி வருகிறாள். கணவன் இவையெல்லாம் 'எப்படி வாங்கினாய்?' என்று வினவ, தான் வேலைக்குப் போவதாகக் கூறுகிறாள். கணவன் அதை எண்ணி துயரமடைகிறான். அவள் கணவனிடம் வேலைக்குப் போவதாகத் சொன்னாளே ஒழிய, தான் ஹோட்டலில் நடனமாடிச் சம்பாதிப்பதாகச் சொல்லவில்லை.

    இப்போது அவள் ஹோட்டலில் நடனமாடச் செல்ல, வீட்டில் தனியே இருக்கும் கணவனிடம் வருகிறான் அவனுடைய பழைய பாஸ். அவனை மறுபடி திருட்டுத் தொழிலுக்கு வரச் சொல்லி வற்புறுத்துகிறான். ஆனால் திருந்தியவனோ தீர்மானமாக அதற்கு மறுக்க, அவனுடைய கொள்ளையர் தலைவன் அவன் மனைவி ஹோட்டலில் பல பேர் அறிய மானத்தை விட்டு நடனமாடி சம்பாதிப்பதை விட திருடுவது எவ்வளவோ மேல் என்று அவன் மனைவி நாட்டியமாடுவதை அவனிடம் போட்டு உடைக்க, அதைக் கேட்டு அதிர்ந்து, உறைந்து போகிறான் கணவன். கோபம் தலைக்கேற தான் பாஸுடன் ஹோட்ட்டலுக்கு புறப்படுகிறான்.

    அங்கே கணவனுக்காக தன் மானத்தையே விட்டு நடனமாடுகிறாள் அவன் மனைவி.

    திருந்திய திருடனான கணவன் வேடத்தில் நடிகர் திலகம். கேட்கவே வேண்டாம். மனைவி ரோலுக்கு கே.ஆர்.விஜயாதான். கொள்ளைக்கார பாஸ் பாலாஜி.

    ஹோட்டலில் நடனமாடும் ரோல் சற்றும் பொருந்தா விஜயா. உடல் பருமன் உடன் பயமுறுத்துகிறது. மரியாதைக்குரிய நாயகி என்று பெயர் எடுத்தது விட்டதால் உடல் முழுதும் மறைத்த கோபிகாஸ்திரி கவர்ச்சி டிரெஸ் விஜாவிற்கு சூட் ஆகவில்லை. இந்த மாதிரி நடனமும் அவ்வளவாக அவருக்குப் பழக்கமில்லை.

    என் ஆசை என்னோடு
    சலங்கை தரும் ஓசை உன்னோடு
    உலகமே ஆடும் பெண்ணோடு
    மயக்கந்தான் ஹா ஹா ஹா மயக்கந்தான்
    ஓஹோஹோ
    அஹா அஹா அஹாஹா
    அஹா அஹாஹா

    (என் ஆசை என்னோடு)

    கூட்டத்தில் விளையாடப் புதிதானவள்
    கோலத்தின் அலங்காரம் பழகாதவள்
    பாட்டுக்கு நடை போட்டு அறியாதவள்
    பாவத்தை பிறர் காண சகியாதவள்
    ஆட்டத்தில் ஆசை உண்டு ஆசைக்கும் தேவை உண்டு
    ஆட்டத்தில் ஆசை உண்டு ஆசைக்கும் தேவை உண்டு

    கேட்டால்.....

    உலகமே ஆடும் பெண்ணோடு
    மயக்கந்தான் ஹா மயக்கந்தான்
    ஓ மயக்கந்தான்

    (என் ஆசை என்னோடு)

    மதுக் குடத்தினில் நனைத்தெடுத்தது எந்தன் உடலல்ல
    வடித்த பொன்னென அணைக்க வந்தவள் நானல்ல நானல்ல
    மணமுள்ள மலர் காண கொடியானவள்
    வாழ்கின்ற துணைக்காக கனியானவள்
    வழி கண்டு சபை தேடி சிலையானவள்
    மானத்தின் நிழலோடு கலையானவள்
    ஆட்டத்தில் ஆசை உண்டு ஆசைக்கும் தேவை உண்டு
    ஆட்டத்தில் ஆசை உண்டு ஆசைக்கும் தேவை உண்டு

    கேட்டால்....

    உலகமே ஆடும் பெண்ணோடு
    மயக்கந்தான் ஹா மயக்கந்தான்
    ஓ மயக்கந்தான்
    (என் ஆசை என்னோடு)

    'புன்னகை அரசி'யை புறந்தள்ளிவிட்டு பாடலை முழுவதும் ஆக்கிரமிப்பது இசையரசியே. பாடலின் முழு அர்த்தத்தையும் உணர்ந்து அதை நம் உள்ளங்களில் உணர்வோடு உணர்த்தும் வித்தையில் கைதேர்ந்த குரல்காரி இந்த பார் போற்றும் பாடகி. நடிகையின் முக பாவங்களையும், உடல் பாவங்களையும் ஒரே ஒரு குரல் தூக்கிச் சாப்பிட்டு விடுகிறது.

    'ஆட்டத்தில் ஆசை உண்டு ஆசைக்கும் தேவை உண்டு
    ஆட்டத்தில் ஆசை உண்டு ஆசைக்கும் தேவை உண்டு'

    என்று வரிகள் முடித்து

    'கேட்டால்'........

    என்று ஒரு வார்த்தை கேட்டு, சிறிது நிறுத்தி,

    'உலகமே ஆடும் பெண்ணோடு
    மயக்கந்தான் ஹா மயக்கந்தான் ஓ மயக்கந்தான்'

    என்று தபேலா வாத்தியங்களுக்கிடையே சுசீலா பாடும் இந்தப் பாடல் என்னுள் ஆழப் புதைந்தது. 'நடிப்புத் திருடன்' என்ற பிரளய சுனாமியால் இந்த பாடல் காணாமல் மறக்கடிக்கப்பட்டு விட்டது என்பதும் ஒரு புறம் உண்மையே. இருந்தாலும் மதுர கானங்கள் இதையெல்லாம் வெளிக்கொணரத்தானே உருவாக்கப்பட்டது?

    கதையறிந்து, காட்சியறிந்து காவிய வரிகள் படைக்க கண்ணதாசனை விட்டால் யார்? விரசம் எதிர்பார்க்கும் பத்து ஆண்களுக்கு மத்தியில் பத்தினி ஒருத்தி தன் மானத்தையும் காத்துக் கொண்டு, அதே சமயம் நாட்டியமும் ஆட வேண்டிய கட்டாய நிர்ப்பந்தத்தில் காலத்தின் கோலத்தை நினைத்து தன் நிலையை எண்ணிப் பாடும் வரிகள் அருமை. 'அனைத்தும் பெண்ணே' என்பதை 'உலகமே ஆடும் பெண்ணோடு' என்ற ஒரே வரியில் கலக்கிய இவனல்லவோ கவி!

    மனைவியை ஹோட்டலில் நடனமாடும் கோலத்தில் பார்த்துவிட்டு அவளைத் 'தரதர'வென வீட்டுக்கு இழுத்து வந்து,ஒரு வார்த்தை கூட பேசாமல் தான் மறுபடி கத்தி, துப்பாக்கி எடுத்து திருட்டுத் தொழிலுக்குப் போவதை பலவேறு முக பாவ உணர்ச்சிகளால் நமக்கும் அவளுக்கும் உணர்த்தும் நடிகர் திலகத்தின் பேராற்றல் நடிப்பு எப்பேற்பட்டதையும் மறக்கடிக்கச் செய்யும் மாயா ஜால வித்தை. அதை வெல்ல எவரால் முடியும்?

    ராகவேந்திரன் சார்,

    உங்களுக்காகவே இந்தக் காட்சியையும் சேர்த்து பாடலுடன் இணைத்துள்ளேன். மூலவர் இல்லாமலா?

    ('Youtube'-ல் ஏற்கனவே அப்லோட் செய்யப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை. எனவே இன்று நான் அப்லோட் செய்தது)

    arumai ji

  14. Thanks vasudevan31355 thanked for this post
  15. #3168
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    assignment for vasu

    Good to hear you sing vasu (a Hindi song) ! . . Here is another Hindi song for you to practice and sing for chinnakkaNNan !

    Chaliye kunjanmo........... from the Malayalam movie 'Swathi ThirunaaL' .

    This is a Hindi composition by Swathi ThirunaaL in the raga Brindavana Saranga.

    ( vaathiyaar velai ennai vittu poga maattengudhu. adhaan indha assignment ! )
    Last edited by rajraj; 19th July 2016 at 12:18 AM.
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  16. Thanks vasudevan31355 thanked for this post
    Likes Russellmai, madhu, vasudevan31355 liked this post
  17. #3169
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராஜ்ராஜ் சார்,

    நன்றி!

    கிஷோர் பாடிய இந்தப் பாடல் அம்சமானது. அளவானது. அழகானது. அமைதியானது. அமர்க்களமானது.

    'Chalti Ka Naam Gaadi' காமெடி கலக்கல் படத்தில் மகா அழகி மதுபாலாவுடனான மதுவூற்று பாடல்.

    'Ek Ladki Bhigi Bhagi Si'. என்ன அழகான குரல் கிஷோருக்கு!

    Ek ladki bhigi bhagi si
    Soti raaton mein jaagi si
    Mili ik ajnabi se
    Koyi aage na peechhe
    Tum hi kaho ye koyi baat hai, hmm

    இதே பாடல் தமிழில் 'சுதந்திரம்' என்ற படத்தில் அர்ஜுன், ரம்பாவிடம் சிக்கி சீரழிவதையும் பாருங்கள்.

    கொஞ்சம் சில்லுன்னு இருந்தா என்னம்மா
    நீ சிரிப்பதை ரசிச்சா என்னம்மா
    இந்த நாள் போனபின் நாளை வாராதம்மா
    ரெண்டு கோக் வாங்குறேன் கொஞ்சம் கூலாவம்மா

    கொடுமைடா சாமி!

    Last edited by vasudevan31355; 19th July 2016 at 02:35 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  18. Likes Russellmai liked this post
  19. #3170
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சுசீலா அம்மாவின் இன்னொரு பிடித்தமான பாடல். கண் தெரியாத சரோ, காலில்லாத சௌகார் பங்கு கொள்ளும் பாடல் 'கண்மலர்' படத்தில். அதிகம் பிரபலமில்லைதான். ஆனால் ஈர்க்கக் கூடிய ஆற்றல் உண்டு.

    அடி ஆயீ ஆயீ ஆயீ ஆயீ கல்யாண காலமடி
    கச்சேரி மேளமடி பொற்கோல மேடையிலே
    பூப்போட்ட வாசமடி

    குறமகள் வள்ளியொரு முருகனைக் கண்டாளாம்
    குலமகள் வள்ளியொரு கண்ணனைக் கண்டாளாம்
    முருகனும் வள்ளியுமோ திருத்தணி சென்றாராம்
    கண்ணனும் வள்ளியுமோ தனித்தனி நின்றாராம்.

    அமைதியான அழகான எனக்கு நிரம்ப பிடித்தமான பாடல். இரண்டு நாட்களாக மனதில் ஓடிக் கொண்டே இருக்கிறது. சரி! எழுதி விடுவோம் என்று எழுதி விட்டு வீடியோ எடுக்க 'யூடியூப்' சென்று பாடலை பார்த்து ரசித்து விட்டு அற்புதமான இப்பாடலை அப்லோடு செய்த ரசனையுள்ள மகராஜன் யார் என்று பார்த்தால் அட நம்ம மதுண்ணா. அதானே பார்த்தேன்! அரவிந்த் கார்த்திக் என்ற பெயரில். ஒரே ரசனையை எண்ணி வியந்து இரட்டிப்பு சந்தோஷம்அடைந்தேன். நன்றி மதுண்ணா!

    நடிகர் திலகமே தெய்வம்

  20. Thanks madhu thanked for this post
    Likes Russellmai, madhu, rajeshkrv liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •