Page 299 of 337 FirstFirst ... 199249289297298299300301309 ... LastLast
Results 2,981 to 2,990 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #2981
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இதோ 'ராஜா'வின் இசை ரசிகர்களுக்காக 'யூ டியூபி'ல் முதன்முறையாக இன்று தரவேற்றப்பட்ட 'ராஜா' டைட்டில் மியூஸிக்.

    நடிகர் திலகமே தெய்வம்

  2. Thanks eehaiupehazij, Russellmai thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2982
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    வாசுசாரின் திரி Profile Photo நடிகர் திலக ஞான ஒளி ஸ்டில் கண்ணுறும் போ து எனக்கு நினைவில் நிழலாடுவது ஷான் கானரியின் தண்டர்பால் ஜேம்ஸ் பாண்ட் பட அடால்போ சீலி என்னும் நடிகரின் தோற்றமுமே ! கண் அறுவை சிகிச்சைக்குப் பிறகோ மாற்றுக்கண் பொருத்தப்பட்ட பிறகோ இவ்வகை ஒருபக்க சீரமைப்புக் கறுப்புக் கண்ணாடிகளை அணிவது ஸ்டைலாக இருக்கும்!! ஞான ஒளியில் நடிகர்திலகத்துக்கு கதைப்போக்கின்படி இவ்வகை ஒற்றைக்கண் கண்ணாடி அற்புதமாகப் பொருந்தியது!



    Last edited by sivajisenthil; 9th June 2016 at 10:06 PM.

  5. Thanks vasudevan31355, Russellmai thanked for this post
    Likes vasudevan31355, Russellmai liked this post
  6. #2983
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    தீம் மியூசிக் அல்லது டைட்டில் மியூசிக் என்பது பொதுவாகவே தமிழ்த் திரைப்படங்களில் அபூர்வமே! ராஜா திரைப்படத்தில் ஹாலிவுட் பாணியில் ஜேம்ஸ் பாண்ட் மற்றும் கௌபாய் படங்களின் தீம் இசை பின்பற்றி எம் எஸ் வி சிறப்பானதொரு டைட்டில் இசைக் கோர்ப்பை முயற்சி செய்தார். அந்தகால கட்டத்தில் ராஜா திரைப்படத்தின் பரபரப்பான வெற்றியின் பின்னணியில் இந்த இசை நேர்த்தியும் ஒரு சிறிய பங்கை வசித்தது. அதற்கப்புறம் வெகு நீண்டகாலம் கழித்து சூது கவ்வும் திரைப்படத்தின் தீம் இசையும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது !

    The topmost of all theme musics till today....From Russia With Love James Bond theme music!!
    NT starrer Raja has traces of this music and Pink Panther title animations partly embraced to fit the Tamil Screen ambiance!




    Title Music in The Good The Bad and the Ugly by the one and only music genius of Spaghetti Cowboy genre....the Italian based music director Ennio Morricone!



    Another famous theme music! D'Jango!




    Theme musics from such movies as Come September, The Silencers, For a Few Dollars More, .....My Name is Nobody...McKenna's Gold....Naagin/Neeyaa...were also equally good!
    Last edited by sivajisenthil; 10th June 2016 at 12:22 PM.

  7. Thanks vasudevan31355 thanked for this post
    Likes chinnakkannan, Russellmai, madhu liked this post
  8. #2984
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    காலம்
    முன்னோக்கி மட்டுமே பயணிக்கிறது. கடந்த காலம் நினைவுகளில்...நிகழ்காலம் நிஜங்களில்....எதிர்காலமோ கனவுகளில்!
    காலச்சக்கரத்தின் கடிகார முள்சுற்றுவழி சுழற்சியில் வசந்தகாலங்களும் குளிர்காலங்களும் கோடைகாலங்களும் இலையுதிர் காலங்களும் இடையிடையே மழைக்காலங்களும் தளிர்விடு பயிர்க்காலங்களும் பலன்பெறும் பழமுதிர் அறுவடைக் காலங்களும் இயற்கையின் நியதியே!

    ஆண்டொன்று போனால் வயதொன்று போவதும் பிறப்பும் மனித மற்றும் பிற ஜீவராசிகளின் குல வளர்ச்சிப் பருவங்களும் முதுமையும் மரணமும் சகஜமே !
    பூந்தென்றலும் புயலும் இன்பமும் துன்பமும் வரவும் செலவும் வாழ்வியலே! மனிதன் மட்டுமே சிந்திப்பதோடு சிரிக்கவும் தெரிந்த விலங்கினமானது எவ்வளவு வசதியானது! மறதிஎன்னும் மாமருந்தும் துன்பம் தணிந்திட இறைவன் வரமே!

    வாழ்வியல் வசந்தங்களில் அன்பே காட்சிசாட்சியான காதலும் நல்லறமான இல்லறமும் நினைவில் நிற்கும் தேனலைகளே !


    வசந்தம் கடந்த நினைவலைகளால் அழியாத கோலங்கள் ! .......



    காதலில் வீழும்போது நிகழ்காலக் கன்னியரெல்லாம் வசந்தகால முல்லைப்பூக்களே!




    எதிர்கால வசந்தம் கனவலைகளாக !


    Last edited by sivajisenthil; 10th June 2016 at 09:57 AM.

  9. #2985
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    இது வாத்தியாரையாவுக்காக வண்ணமயமாக்கப்பட்ட ஓல்டு வசந்த காலம்


  10. Thanks eehaiupehazij thanked for this post
  11. #2986
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //இன்னொரு அற்புதமான பாடல் கேட்டு என் கண்கள் கலங்கின.. வீணையும் புல்லாங்குழலும் ஜுகல் பந்தி செய்தபாடல்..
    அது ….//

    தணியாத தாகத்தில் ஏ.ஏ. ராஜ் இசையில் இன்னொரு பாடல்..அவள் ஒரு மோகன ராகம்..

    அந்தப் பாடல் வரிகள்..

    அவள் ஒரு மோகன ராகம்
    என்னை விட்டு தனியே.. பிரிந்திட்ட போதும் என் மனக்கோவிலின் தீபம்

    இறைவா என்னிடம் ஏன் இந்த கோபம்..



    நிலவில்லா வானம் அழகில்லா கோலம்
    அவள் இல்லா நெஞ்சம் தனிமையில் வாடும்

    எனக்கென்ன பாடல் அதற்கென்ன ராகம்
    என் இதயத்தின் பாடல் அவள் நினைவையே பாடும்



    என் ஆசை எல்லாம் ஒன்றாக சேர்த்து
    உன் மீது வைத்தேன் மாலையாய் கோர்த்து

    பூஜைக்கு வந்தேன் நீ அங்கு இல்லை..
    என் பாடல் கேட்பார் யார் இங்கு கண்ணே...


  12. Thanks eehaiupehazij thanked for this post
  13. #2987
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    செந்தில் சார்,

    கெல்லியின் கால் கில்லி விளையாட்டுக்களை மீண்டும் பார்த்து ரசிக்க வைத்ததற்கு நன்றி! பின்னாளைய மழை, குடை பாடல்களுக்கு கெல்லிதானே முன்னோடி? அந்தக் கால்கள் எப்படியெல்லாம் ஜாலம் புரிகின்றன! வான் மேகம் பூப்பூவாய்த் தூவ, மேகம் கொட்ட, கெல்லியின் இந்த மழைப்பாடல் ஆட்டத்திற்கு என்றும் நம் மனதில் நீங்கா இடம் உண்டு. மனிதர் குடையிலும் அற்புதங்கள் நிகழ்த்துகிறார் அனாயாசமாக. நடிகர் திலகத்திற்கு இப்படி ஓர் பாடல் இல்லையே என்று அடிக்கடி என் மனம் ஏங்கும். ஆனால் மழைக்குப் பதிலாக உச்சி மண்டை பிளக்கும் வெயிலில் நடனம் தெரியாத நண்பர்கள் இருவரையும் உடன் இழுத்துக் கொண்டு, பேலன்ஸ் செய்து, சென்னையின் சாலைகளில் நடனத்திலும், நடையிலும், நடை ஓட்டத்திலும் வெற்றிக்கொடி நாட்டி, உருவத்தில் வறட்சி காட்டி, இடுப்பொடி நடனத்தில் மிரட்சி காட்ட நடிகர் திலகத்தை விட்டால் ஆளேது? 'நெஞ்சிருக்கும் வரை' மறக்க முடியாத நடனமாயிற்றே!

    நடிகர் திலகம் அவன்தான் மனிதன், அன்பளிப்பு, ஆண்டவன் கட்டளை, தங்கப்பதக்கம் படங்களில் குடையை நடிக்க வைத்திருப்பார்.
    Last edited by vasudevan31355; 10th June 2016 at 01:21 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  14. Thanks eehaiupehazij thanked for this post
  15. #2988
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    நடிகர் திலகம் அவன்தான் மனிதன், அன்பளிப்பு, ஆண்டவன் கட்டளை, தங்கப்பதக்கம் படங்களில் குடையை நடிக்க வைத்திருப்பார்.// அந்த ஆண்டவன் கட்டளை குடை தான் முதல் இடம்.. என்னா ஒரு மிடுக்கா இருக்கும்..

  16. Likes Russellmai, vasudevan31355 liked this post
  17. #2989
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    செந்தில் சார்,

    மழை, குடைப் பாடல்களில் இந்தப் பாடல் இல்லாமல் போனால் அதற்கு அர்த்தமே இல்லை. என் மனம் கவர்ந்த 'ஸ்ரீ 420' 'Pyar Hua Ikrar Hua Hai Pyar Se' பாடல். பிரமாதமான ஒளிப்பதிவு மற்றும் படமாக்கல். ஒரு காலத்தில் பைத்தியமாக கேட்ட பாடல். மன்னா டே மற்றும் லதா கலக்கல்.

    சாரல் காட்சிகள் அருமை. டீ பாய்லரில் இருந்து ஆவி பறக்க டீ பிடித்து, 'கப்'பிலிருந்து சாஸரில் ஊற்றி அந்த குளிரில், மழையில் அந்த மாற்றுக் கண்ணாளி கபூரையும், நரகீஸையும் பார்த்து ரசித்தபடி ருசித்து டீ அருந்துவது (நமக்கு ஒரு கப் கிடைக்காதா என்று மனம் கிடந்து ஏங்கும்) மறக்கவொண்ணா கவிதைக் காட்சி. தெரு விளக்குகள் ஒளிர்வு, வழக்கமான ஆனால் திகட்டாத ராஜின் அப்பாவித்தன இசைக் கருவிகளின் ஈர்ப்பு இசைப்பு, நர்கீஸின் உதடும், கண்களும் துடிக்கும் குளிர் மோக, விரக தாபம் 'திடு'மெனக் கிளம்பும் அந்த 'ஆஹாஹா' சப்த உற்சாகம், பாதைகளில் தேங்கி நிற்கும் மழைத் தண்ணீர், தூரத்தில் தெரியும் தொழிற்சாலை கட்டிடங்கள், குட்டி குட்டியாய் மழைக் கோட்டு அணிந்து வரும் அழகு 'அஞ்சலி' செல்வங்கள்,

    ஆஹாஹா! தமிழில் ஏன் இது போல காவிய பாடல் காட்சிகள் அமையவில்லை எனும் போது வருத்தம் மேலிடும்.

    என் நெஞ்சமெல்லாம் நிறைந்த காவிய பாடல்.

    Last edited by vasudevan31355; 10th June 2016 at 01:23 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  18. Thanks eehaiupehazij thanked for this post
    Likes eehaiupehazij, Russellmai liked this post
  19. #2990
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சின்னா! கரெக்ட். ஆனால் நடிகர் திலகம் குடை பிடித்தாலே கோபால் திட்டுவார். ஏனென்று தெரியுமா? குடை வயதானவர்களுக்கு மட்டும்தானாம். ஒரு வகையில் அதுவும் உண்மைதான். 'தேரு வந்தது போல் இருந்து நீ வந்தபோது' என்று சரோவிடம் வயலில் குடை பிடித்தபடி பாடி வரும்போது காதல் சீண்டல்கள் இல்லாமல் போகுதாம். குடை டிஸ்டர்பாம். அதே போல 'அன்புக்கரங்க'ளில் 'உங்கள் அழகென்ன... அறிவென்ன!' என்று தேவிகா நடிகர் திலகத்தை கொஞ்சும்போது பொய்க்கோபத்தில் குடையைப் பிடித்துக் கொண்டு அவர் நடப்பதும் கோபாலருக்கு மகா எரிச்சலைத் தருமாம்.

    ஆனால் 'அவன்தான் மனித'னில் 'அன்பு நடமாடும் கலைகூடமே'வில் அந்த மழையில் குடையை விரித்து, கால்கள் சரியாகி விட்ட குஷியில் சின்னப் பையன் போல் ஒரு ஓட்டம் ஓடி வருவாரே! என்னா அழகாக ஓடி வருவார்! ஓட்டத்திலும் திலகமே. அதை யாராவது குறை சொன்னால் எனக்கு பொல்லாக் கோபம் வரும்.
    Last edited by vasudevan31355; 10th June 2016 at 01:24 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •