Page 160 of 337 FirstFirst ... 60110150158159160161162170210260 ... LastLast
Results 1,591 to 1,600 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #1591
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நினைத்துப் பார்க்கிறேன்



    இந்தப் பதிவைத் தொடங்குதற்கு முன் முதலில் மேலே காணும் இரு இசைத் தெய்வங்களுக்கும் உளமார்ந்த அஞ்சலி.

    இந்தப் பாடலைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைக்கும் போதே உடல் சிலிர்க்கிறது.

    தமிழ் சினிமா வரலாற்றில் குறிப்பாக தமிழ்த் திரையுலக இசை வரலாற்றில், டி.எம்.எஸ், எல்.ஆர்.ஈஸ்வரி, கண்ணதாசன், விஸ்வநாதன்-ராமமூர்த்தி ... இவர்களுக்கெல்லாம் மிகப் பெரிய மகுடம் சூட்டிய பாடல்...

    ஒரு மனிதன் மரணத்தை நோக்கிப் பயணிக்கும் போது அவன் மனதில் என்னவெல்லாம் தோன்றும்.. அவன் என்னவெல்லாம் நினைப்பான்... இதை நாம் யாராவது சிந்தித்திருக்கிறோமா.. அதுவும் அவன் தான் இறக்கப் போகிறோம் என்பதைத் தானே உணர்கிறான்.. அதற்குக் காரணம் அவன் தற்கொலை முயற்சியில் இறங்குகிறான்.. அப்போது அவன் மன ஓட்டம் எப்படி இருக்கும்...

    இப்படி ஓர் சூழ்நிலை ஒரு படத்தில் உருவாகியுள்ளது. இதற்குப் பாடல் எழுத வேண்டும், இசையமைக்க வேண்டும், பாட வேண்டும்...

    முதல் சவால், பாடலில் எந்த விதமான விஷயங்கள் இடம் பெற வேண்டும், அவை என்ன சொல்ல வேண்டும், என்னென்ன கால கட்டங்கள் இடம் பெற வேண்டும், அதைப் பற்றி அவன் மனதில் என்னவெல்லாம் தோன்றும்.. இப்படிப் பல விஷயங்களைப் பாடலில் கொண்டு வருவதற்கான முதல் படி.

    இரண்டாவது ... இசை ...இப்படிப்பட்ட பாடலுக்கு என்ன மாதிரியான இசையமைக்க வேண்டும்,, என்னென்ன கருவிகளைக் கையாள வேண்டும், பாடலில் என்னென்ன உணர்வுகளைக் கொண்டு வர வேண்டும்...

    மூன்றாவது ... பாடகர்கள்... இத்தனை விஷயங்களையும் தீர்மானித்தபின் இதை மக்களிடம் கொண்டு செல்பவர்கள் பாடகர்கள் தானே.. அவர்களிடம் இருந்து என்ன கொண்டு வர வேண்டும்...

    இப்படி வெவ்வேறு சவால்களை எதிர்நோக்கும் இசையமைப்பாளனுக்கு நிச்சயம் இது மிகப் பெரிய பரீட்சையே...

    ஆனால் இந்த சவாலை சந்தித்தவர்கள் யார்... மெல்லிசை மன்னர்களாயிற்றே.... விட்டு விடுவார்களா என்ன... கூட இருப்பது என்ன சாமான்யரா... கவிச்சக்கரவர்த்தியாயிற்றே...

    ஒரு மனிதன் கடைசி காலத்தில் தான் வாழ்க்கை என்றால் என்ன வென்று புரிந்து கொள்கிறான். அதற்குள் எல்லாமே கடந்து போய் விடுகின்றன.. வாழ்க்கையில் இளமையின் அனுபவங்கள், முதுமையின் துவக்கத்தில் படிப்பினைகள், கடைசி காலத்தில் முக்தியை வேண்டுதல் என மனித வாழ்க்கையின் வெவ்வேறு பரிமாணங்களையும் மன ஓட்டங்களையும் அவன் நினைத்துப் பார்க்கிறான். காலங்கடந்த ஞானோதயம் .. சராசரி மனித மனம் அப்படிப்பட்ட நேரங்களில் என்ன செய்யும்.. இறைவனிடம் புலம்பும்..

    இந்தக் கண்ணோட்டத்தில் இந்தப் பாடலை அமைத்திருக்கிறார்கள் மெல்லிசை மன்னர்கள்.

    ஆடிய ஆட்டமென்ன
    பேசிய வார்த்தையென்ன
    திரண்டதோர் சுற்றமென்ன
    கூடு விட்டு ஆவி போனால்
    கூடவே வருவதென்ன...

    இந்தத் தொகையறாவிலேயே பாடலின் சூழலைக் கொண்டு வந்து விடுகிறார்கள்..

    இங்கேயே ஆரம்பித்து விடுகிறது பாடகர் திலகத்தின் குரல் சாம்ராஜ்ஜியம்...



    வீடு வரை உறவு,
    வீதி வரை உறவு,
    காடு வரை பிள்ளை,
    கடைசி வரை யாரோ

    ... இந்தப் பல்லவியை முதன் முதலில் கேட்டவுடன் நினைவுக்கு வந்து விடக்கூடிய முகம்...
    முதன் முதலாக இந்தப் பாடலைக் கேட்பவர்களுக்கு உடனே நினைவுக்கு வந்து விடக்கூடிய முகம்...



    இப்படி உடனேயே நடிகர் திலகத்தின் முகத்தைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி விட்ட இந்தப் பாடல் பாத காணிக்கை படம் என்ற வுடன் இயல்பாகவே மக்கள் மனதில் இது சிவாஜி படம் போல இருக்கிறது, என அவரை நினைத்து தியேட்டருக்கு வரவழைக்கும் அளவிற்கு இந்தப் பாடல் அமைந்து விட்டது. படத்தின் இயக்குநர் பீம்சிங் எனவும் மக்கள் கணிக்கும் அளவிற்கு முதல் எழுத்து பானாவும் சேர்ந்து கொண்டது.

    போகப் போக பாடலில் சூழ்நிலைகள் வெவ்வேறு வகையாக மாறவும் மக்கள் தீர்மானமே செய்து விட்டனர் இது சிவாஜி படமென்று.

    எல்லாமே படத்தின் இசைத்த்ட்டு பரபரப்பாக விற்பனையாகி சக்கை போடு போட ஆரம்பித்த பிறகு, படத்தில் சிவாஜி இல்லை எனத் தெரியும் வரைதான்.

    இப்படிப்பலவாறாக எதிர்பார்ப்பை உண்டாக்கி, பின்னாளில், இப்படத்தில் நடிகர் திலகம் நடித்திருக்கக் கூடாதா என்று நிரந்தரமாகவே என்னை ஏங்க வைத்த பாடல் - என்னை மட்டுமல்ல உங்களையும் நிச்சயம் ஏங்க வைத்திருக்கும் தானே...

    அசோகன் மிகத் திறமையான நடிகர். இருந்தாலும் இந்தப் பாடலில் மட்டும் நடிகர் திலகம் நடித்திருந்தால் இதனுடைய ரேஞ்ச் எங்கோ போயிருக்கும்... 1962ல் நடிகர் திலகத்திற்கு மற்றுமோர் வெள்ளி விழாப்படமாக அமைந்திருக்கும்.

    மெல்லிசை மன்னர் இப்பாடலை எப்படிப் போட்டிருந்தார்கள்... இதைச் சொன்னாலே நாம் இப்பாடலில் நடிகர் திலகம் இல்லை என ஏன் ஏங்குகிறோம், என்பது புலனாகும்.

    தொகையறா முடிந்து வீடு வரை உறவு பல்லவி முடிந்தவுடனேயே அதே தாளக்கட்டில், இளமையில் ஆட்டம் போடுவதைக் குறிக்கும் வண்ணம் டிரம்பெட்டில் ஒரு மேற்கத்திய இசைக்கோர்வை, இந்த இடத்தில் இயக்குநர் சமயோசிதமாக சில்ஹௌட்டில் நடனத்தை ஒளிப்பதிவு செய்ய வைத்திருப்பார், அப்படியே காமிரா கீழிறங்கி அசோகனிடம் செல்லும்...ஆடும் வரை ஆட்டம் சரணம் தொடங்கும்... அதற்கு அடுத்த சரணம், இளமையின் விளைவுகளைப் பற்றியும் சிற்றின்பம் வாழ்க்கையில் அதன் தாக்கம்,

    அதைச் சொல்லும் விதமாக தன் அன்னையை நினைக்கிறான்.. அப்போது தாயின் தாலாட்டு.. ஹம்மிங்கில் ஒலிக்கிறது...
    இந்த இடத்தில் மெல்லிசை மன்னரின் இசை ஞானம் நம்மை பிரமிக்க வைக்கிறது.. தாய்க்கு தாலாட்டு பாடும் சூழ்நிலையில், அவருக்கு வார்த்தைகள் இல்லாமல் ஆரிரோ மட்டுமே பாட வைத்திருப்பார். சொல்ல வந்த விஷயத்தை வார்த்தைகளை விட ஹம்மிங்கிலேயே சொல்லி விடத் தீர்மானித்து, அதற்கு மிகச் சரியாக அவர் பயன்படுத்திய பாடகி..



    ஹம்மிங் பேர்ட் என நாம் அன்போடு நினைவு கூறும் பி.வசந்தாவுக்கு முன்னோடி ஈஸ்வரி அவர்களே.. இவருடைய ஹம்மிங்கிலேயே பலவிதமான உணர்வுகளைப் பல பாடல்களில் கொண்டு வந்திருப்பார். ஏட்டில் எழுதி வைத்தேன் பாடலில் காதலன் காதலியை நினைவு கூற வைக்கும் குரல், எண்ணிரண்டு பதினாறு வயது பாடலில் காதலனின் காதலை ஏற்று ஆமோதிக்கும் குரல், கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா பாடலில் காதலனின் கலைநயத்தை ரசிக்கும் குரல்.. இப்படி தன் ஹம்மிங்கிலேயே பலவிதமான உணர்வுகளை வெளிப்படுத்திய ஈஸ்வரியை, இப்பாடலில் தாய்மைக்கும் தாலாட்டிற்கும் ஒரே சேர பயன்படுத்தி யிருக்கும் உத்தி மெல்லிசை மன்னருக்கே உரித்தான சிறப்பாகும்.

    இந்த ஹம்மிங் முடிந்தவுடனே வரும் சரணத்தில் நாயகனின் உணர்வுகளை விளக்கும் சரணம்...

    தொட்டிலுக்கு அன்னை
    கட்டிலுக்கு கன்னி
    பட்டினிக்குத் தீனி
    கெட்டபின்பு ஞானி

    இந்த வரிகளின் மூலம் வாழ்க்கையில் சலிப்பும் விரக்தியும் ஏற்படுவதைச் சொல்லி விடுகிறார் கவிஞர்.

    இந்த நேரத்தில் அண்ணன் வீட்டை விட்டு வெளியேறி விபரீதமான எண்ணத்தில் போய்க் கொண்டிருக்கிறான் என்பதை அறிந்து பதைபதைப்புடன் தம்பி அவனைத் தேடி வருகிறான். இதையும் பாட்டில் கொண்டு வரவேண்டும். மெல்லிசை மன்னராயிற்றே சும்மாவா.. இதையும் மிகவும் தத்ரூபமாக டி.கே.ஆரின் வயலினில் அந்த டென்ஷனைக் கொண்டு வந்து விடுகிறார். கேட்கும் போதே நாமும் பதறி விடும் அளவிற்கு உணர்வு பாட்டிலேயே எதிரொலிக்கும்.

    இப்போது பாடலின் நாயகன் செல்லும் வழியில் ஒரு மயானம் குறுக்கிடுகிறது. அந்தக் கல்லறைகள் அவன் மனதில் ஒரு தாக்கத்தையும் தத்துவத்தையும் போதிக்கிறது. இதற்கு கவிஞரின் வரிகள் எப்படி அமைகின்றன.

    சென்றவனைக் கேட்டால்
    வந்து விடு என்பான்
    வந்தவனைக் கேட்டால்
    சென்று விடு என்பான்
    சென்று விடு என்பான்...

    இரண்டே வரிகளில் வாழ்க்கையின் அத்தனை உணர்வுகளையும் அவற்றால் மனிதன் மனதில் ஏற்படும் விரக்தியையும் வெறுப்புணர்வையும் சொல்லி விடுகிறார் கவிஞர். சென்றவனைக் கேட்டால் வந்து விடு என்பான் .. என்ற வரிகளில், ஒரு மனிதன் , மரணமடைந்த ஒருவனிடம் பேசும் வாய்ப்புக் கிடைத்தால் மரணமடைந்தவன் அவனையும் தான் இருக்கும் இடத்துக்கே வந்து விடு என்று கூறுவதாக கவிஞர் உருவகப் படுத்திக்கொள்கிறார். அந்த அளவிற்கு மனித வாழ்க்கை மோசமாக இருக்கமாம். அதற்கு அடுத்த வரி இன்னும் ஆழமானது. வந்தவனைக் கேட்டால் சென்று விடு என்பான்... இந்த வரி எந்தக் காலத்திற்கும் பொருந்தக் கூடியது. ஒரு மனிதனின் இழப்பில் தான் இன்னொருவனின் பிழைப்பே இருக்கிறது என்பதாக உருவகம் செய்கிறார். அதற்காக நீ இன்னும் இருந்து என்ன சாதிக்கப் போகிறாய், நீ செத்தால் இன்னொருவன் பிழைப்பானல்லவா என இருப்பவனையும் மேல் லோகத்துக்கு அனுப்பத் துடிக்கும் மனித மனத்தையல்லவா இந்த வரிகள் கூறுகின்றன.

    இந்தக் கல்லறை அவன் மனதில் ஏற்கெனவே துளிர் விட்டிருந்த தற்கொலை எண்ணத்தை மேலும் அதிகமாகத் தூண்டி விட தான் எந்தக் காரணத்தை முன்னிட்டும் பிழைத்து விழக்கூடாது எனத் தீர்மானித்து உயரமான மலையிலிருந்து குதி்ப்பதுவே மரணத்திற்கு உத்தரவாதமளிக்கும் என்ற எண்ணத்தோடு மலை உச்சிக்குப் போகிறான்.

    இதை உணர்த்துவதற்காக மெல்லிசை மன்னர் இசைக்கருவிகளின் - குறிப்பாக வயலின் இசையில் உச்சஸ்தாயியில் கொண்டு செல்கிறார். அப்படியே மேலே போகப் போக, கேட்பவர்களுக்கு ஒரு பரபரப்பை உண்டு பண்ணி விடுகிறது.

    அவ்வளவுதான்..

    க்ளைமாக்ஸ்.. காட்சியில் மட்டுமல்ல...
    பாடலின் வரிகளில்.. பாடலின் இசையில்...பாடும் குரலில்...

    விட்டு விடும் ஆவி
    பட்டு விடும் மேனி
    சுட்டு விடும் நெருப்பு
    சூனியத்தில் நிலைப்பு...

    அந்த சூனியத்தில் நிலைப்புடன் அவன் நிறுத்திக் கொள்கிறான்.

    ஆனால் அந்த பரபரப்போ நிற்கவில்லை..

    காரணம்.. அவன் தேடப்படுகிறான். உறவால் தேடப்படுகிறான்.. அவன் தம்பி தேடுகிறான்.. அதைப் பற்றிச் சொல்ல வேண்டுமே.. பாடல் முடிந்த பின் தான் அதற்கு விடை கிடைக்கும்.. எனவே இசை அப்படியே மேல் ஸ்தாயியிலேயே சஞ்சரித்து ஒரு ஸ்டேஜில் போய் நிற்கிறது. காட்சியின் தொடர்ச்சிக்காக..

    ....


    இப்படி பல்வேறு வகையில் மகத்துவம் வாய்ந்த பாடலில் பக்கம் பக்கமாக எழுதினாலும் தீராத விஷயமுள்ள காலத்தால் அழியாத காவியப் பாடலில் நம் மனதை மிகவும் பாதித்த ஒரு விஷயம்..


    இப்பாடல் காட்சியில் நம் நடிகர் திலகம் நடிக்கவில்லையே என்கிற மிகப் பெரிய குறையே.



    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1592
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    ராகவ் ஜி...

    இன்றைக்கும் "வீடு வரை உறவு" பாட்டுக்கு என் மனதுக்குள் ஓடும் வீடியோ "சட்டி சுட்டதடா"தான் என்றால் நம்புவீர்களா ? ( இது போல இன்னும் பல பாடல்களை ந.தி. நடிப்பில் மனதுக்குள் ஓட விட்டதுண்டு.. (உ-ம்) மெல்ல மெல்ல அருகில் வந்து )..

    பாட்டை சக்கையாக திறனாய்வு செய்து கசக்கிப் பிழிந்து உலர்த்தி விட்டீர்கள் ... ஆனால் பாட்டின் ரசம் மட்டும் மெல்ல மெல்ல மனதுக்குள் இறங்கிக் கொண்டே இருக்கிறது..

  4. Thanks RAGHAVENDRA thanked for this post
  5. #1593
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    Bhakthi -Pithukli Murugadas

    May his soul rest in peace.

    An article in the Hindu mentions two of his song - alai payudhe kaNNa and aadaadhu asangaadhu- both by oothukkadu Venkatasubbaiyar.

    Here is alai payudhe kaNNa.......



    Pithukuli Murugadas was a welcome change in the days when carnatic vocalists relegated Tamil compositiions to thukkada section towards the end of the concert. That has changed now. I heard one vocalist sing RTP with a Tamil compositon.
    Another one opened the concert with a Tamil composition instead of 'vathapi ganapathim...'. Another had a concert with mostly Tamil compositions. Finally, they are listening to what Bharathiyar said long time back- sing in a language people can understand ! )
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  6. #1594
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    குட்மார்னிங்க் ஆல்

    ராகவ் ஜி.. காலங்கார்த்தால என்ன சோகம்..

    ஆனாக்க

    ட்ரூ.. இந்த வீடு வரை உறவு ந.திக்குக் கிடைத்திருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும்..ஆனால் எப்போது கேட்டாலும் படித்தாலும் ஒரு விதமான சோகம்மனதைக் கவ்வுவது இந்தப் பாடலினால் தான்..

    இன்னும் சில பாடல்கள் உண்டு

    சமரசம் உலாவும் இடமே
    பிறக்கும் போதும் அழுகின்றாய்..

    தத்துவப் பாடல்களில் சிவாஜிக்கு இது அமைந்தால் நன்றாக இருக்குமென நினைத்துப் பார்க்கும் பாடல - ம்ம் சி.செயை வம்புக்கு இழுக்கலாம் மனிதன் என்பவன் தெய்வமாகலாம் வாரி வாரி வழங்கும் போதுவள்ளலாக்லாம்.. ஆனால் இதை டி.எம்.எஸ் குரலில் ஏனோ பொருத்திப் பார்க்க முடியவில்லை..

  7. Likes RAGHAVENDRA, Russellmai liked this post
  8. #1595
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Vanakkam

  9. Likes chinnakkannan liked this post
  10. #1596
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    டியர் ராகவேந்தர் சார்,

    உங்கள் 'வீடுவரை உறவு' பாடல் ஆய்வு படித்து ஒருகணம் ஆடிப்போய்விட்டேன். என்ன அருமையாக ஆய்வு செய்திருக்கிறீர்கள். அற்புதம். உண்மையில் நடிகர்திலகத்துக்கு கிடைத்திருந்தால் மிகவும் சிறப்பாக அமைந்திருக்கும் என்பது சரியான கணிப்புதான். ஆனால் அசோகனும் தனக்கு கிடைத்த அருமையான வாய்ப்பை பயன்படுத்தி சிறப்பாக நடித்திருப்பார். அதற்கு மிகவும் உறுதுணையாக அமைந்தது அவரது மேக்கப் மற்றும் உடைகள்.

    குறிப்பாக பாடலின் துவக்கத்தில், காலூன்றும் கட்டைகளால் தலையில் அடித்துக்கொள்ளும்போது பதற வைப்பார். இசைத்தட்டில் இடம் பெறாமல் படத்தில் மட்டும் இடம் பெற்றிருக்கும் (ஜெமினியின்) 'அண்ணா', 'அண்ணா' என்ற அலறல் சற்று டிஸ்டர்ப்ட் ஆகவே இருக்கும்.

    அசோகன் எத்தனை பாடல்களில் நடித்து இருந்தாலும், இந்த 'வீடுவரை உறவு' பாடலும், இரவும் பகலும் படத்தில் அவரே சொந்தக்குரலில் பாடிய 'இறந்தவனை சுமந்தவனும் இறந்துட்டான்' பாடலும் அவருக்கு பெரிய பெயரையும் புகழையும் தந்தன என்றால் மிகையில்லை.

    பாடலின் ஒவ்வொரு வரிக்கும் உங்கள் சிறப்பான ஆய்வுக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்.

  11. Thanks RAGHAVENDRA thanked for this post
    Likes Russellmai, RAGHAVENDRA liked this post
  12. #1597
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    மதுஜி
    வீடு வரை உறவு பார்த்த உடனே தங்கள் மனதில் மட்டுமல்ல, பலருக்கும் ஆலயமணி பாடல் தான் நினைவுக்கு வரும். பாத காணிக்கை படத்தில் நடிகர் திலகம் நடிக்கவில்லையே என்ற குறை நம்மைப் போலவே இயக்குநர் சங்கருக்கும் இருந்திருக்கும். காரணம் முதலில் சரவணா ஃபிலிம்ஸ் அணுகியது நடிகர் திலகத்தைத் தான். இந்தப் பாத்திரத்தை அவர்கள் உருவாக்கியதே நடிகர் திலகத்தை மனதில் வைத்துத் தான். என்றாலும் தொடர்ச்சியான கால்ஷீட், அமெரிக்கப் பயணம் போன்ற காரணங்களால் நடிகர் திலகத்தால் அதை ஒப்புக்கொள்ள முடியாமல் போய்விட்டது. என்றாலும் சங்கர் விடவில்லை. அதே போன்ற ஒரு பாடல் காட்சியை உருவகப்படுத்தி ஆலயமணி படத்தில் கொண்டு வந்து கிட்டத்தட்ட அதே போன்ற முடவன் வேடத்தில் நடிகர் திலகத்தை நடிக்க வைத்து - மன்னிக்கவும் - நடக்க வைத்து, தன்னுடையை ஆவலைத் தீர்த்துக்கொண்டார். அது நமக்கும் மிகப் பெரிய போனஸாக அல்லவா அமைந்து விட்டது.

    படப்பிடிப்பு நடந்த இடமும் அதுவாகக் கூட இருக்கலாம்.

    தங்கள் பாராட்டிற்கு உளமார்ந்த நன்றி.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  13. Thanks vasudevan31355 thanked for this post
    Likes Russellmai, madhu liked this post
  14. #1598
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    சி.க. சார்
    அன்னக்கிளி படத்தில் சுஜாதா சொல்வது போல, சோகத்திலும் ஒரு சுகம் இருக்கிறதன்றோ..

    மனிதன் என்பவன் பாடல்...
    டி.எம்.எஸ். பாடினாலும் நன்றாக இருந்திருக்கும்.. ஆனால் படமாக்கியிருக்கக் கூடிய முறை வேறாக இருந்திருக்கும்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  15. Likes chinnakkannan liked this post
  16. #1599
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ஆதிராம்
    அசோகன் ... நம்மைப் போன்ற சிவாஜி ரசிகர்களைப் பொறாமைப் படவைக்கக் கூடிய அதிர்ஷ்டசாலி...
    இது மட்டுமல்ல இன்னும் பல பாடல்கள்,, நடிகர் திலகத்திற்குக் கிடைத்திருக்க வேண்டிய பாடல்கள் அவருக்கு வாய்த்து விட்டன.
    அவற்றில் ஒரு சில இத்தொடரில் இடம் பெறவும் உள்ளன.

    பாதகாணிக்கை அவருக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பு - நன்றாக பயன்படுத்திக் கொண்டார்.

    தங்கள் பாராட்டிற்கு என் உளமார்ந்த நன்றி.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  17. Likes Russellmai liked this post
  18. #1600
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    இன்னிக்கு நயன் தாரா பர்த்டேயாமே.. சொல்லவே இல்லை..(கல் நாயக்கா இருந்தா மொதல்ல சொல்லியிருப்பார்.. ராஜேஷ்.. ம்ம் இன்னும் சர்ரூவ விட்டே வரமாட்டேங்கறார்..)

    நல்ல நடிப்பென்றால் நானுண்டு என்றுவந்து
    அல்லதை விட்டே அழகாக - சொல்ல
    வியக்கும் எழிலுடனே வித்தைகள் செய்பவர்
    நயன் தாரா என்றே நவில்



  19. Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •