Page 91 of 337 FirstFirst ... 41818990919293101141191 ... LastLast
Results 901 to 910 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #901
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //பாலாவுக்கு பொருத்தமாக ஹம்மிங் தேவதை வசந்த வசந்தா. பாலா பாட வேண்டும்...இந்த வசந்த தேவதை ஹம்மிங் தர வேண்டும். காணி நிலம் வேண்டும்...பராசக்தி காணி நிலம் வேண்டும். அங்கு கயிற்றுக் கட்டிலில் இளநீர் அருந்தியபடி இன்பமாக இந்தப் பாடலை மதுரகானங்கள் நண்பர்களுடன் கேட்டு கேட்டு பார்த்து பார்த்து மகிழ வேண்டும். பாலா, வசந்தாவைப் பற்றிப் பேசிப் பேசி மகிழ வேண்டும். நிறைவேறுமா? எண்ணம் நிறைவேறுமா?// தோப்பு மாதிரி இடத்துக்குப் போய் இள நீர் குடிச்சுக்கிட்டே சிடி ப்ளேயர்ல பாட் கேக்கத்தானே முடியும்.. மங்களூர் மடிக்கேரி அந்தப் பக்கம் தான் போய் பார்க்கணும் வின் ட்டர் டயத்துல.. பார்க்கலாம் கால்ம் கனிந்தால் எல்லாமே நடக்கும் வாசு.. வீடியோபாக்கணும்னா கொஞ்சம் குட்டி டிவி டிவிடி தான்..கார்ல வைக்கிறது..அத வச்சு த் தான்பார்க்க இயலுமில்லியோ..

  2. Likes vasudevan31355 liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #902
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    வீட்கு ஒரு பிள்ளை சில பல வருடம் முன் பார்த்தது.. மதுரை கல்பனாவில் ரிலீஸ்..ஆனால் அப்போது பார்க்கவில்லை என நினைக்கிறேன்.. அவ்வளவாக நினைவுக்கு வரவில்லை.. ஒரு மாதிரி பனிமூட்டமாக நினைவில்.. பட்..

    க்ளைமாக்ஸ் நு பார்த்தா இந்தப் படத்தைப் படிக்கும் போது பிரபு வின் மூடு மந்திரம் நினைவுக்கு வருகிறது..ரேகா ரேகா தான் கொலையாளி என எல்லாரையும் நம்ப வைத்துபின் ட்விஸ்ட் கொடுப்பார்கள்..

  5. Thanks vasudevan31355 thanked for this post
  6. #903
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    Launched

    www.mellisaimannar.in

    website for MSV ... in Tamizh
    வாழ்த்துக்கள் ராகவேந்திரா சார்.. நினைவ்லைகளில் நாங்களும்பங்கு கொள்ள இயலுமா..இசை ரசிக்க மட்டுமே எனக்குத்தெரியும்..

  7. Thanks vasudevan31355 thanked for this post
  8. #904
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மெல்லிசை மன்னரின் புகழ் பாடும் புதிய இணையதளமாம் http://www.mellisaimannar.in/ இணையதளத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ராகவேந்திரன் சார். இணைய தளத்தில் இடம் பெறப் போகும் பல்வேறு இணைப்புகளை ரசிக்க ஆர்வமாய் உள்ளேன். திரை இசைப் பாடல்களை சிறுகுழந்தை கூட ரசிக்கும் அளவிற்கு சாதனைகள் நிகழ்த்திய இசையின் மன்னருக்கு மிகச் சிறந்த அர்ப்பணிப்பு இது. என் மனதார வாழ்த்துகிறேன்.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. #905
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி வாசு மற்றும் சி.க. சார்.

    தங்கள் ஒவ்வொருவருடைய வாழ்த்தும் ஊக்கமும் உற்சாகமும் தருவதாய் உள்ளன.

    தொடர்ந்து தங்களுடைய ஆதரவை எதிர்நோக்கி பயணம் தொடரும்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. Thanks vasudevan31355 thanked for this post
  11. #906
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார்
    நடிகர் திலகத்திற்கு வாய்க்க வேண்டிய பல நல்ல பாடல்கள் மற்றவர்களுக்கு சென்று விட்டன. அதில் எனக்கு சற்று வருத்தமே. என்றாலும் சில பாடல்கள் படமாக்கப்பட்டதைப் பார்க்கும் பொழுது நல்ல வேளை தலைவருக்கு இந்த மாதிரி வாய்க்கவில்லையே என மன ஆறுதல் கொள்வதும் உண்டு.

    ஆனால் நிச்சயமாக வீட்டுக்கு ஒரு பிள்ளை அப்படி ஒதுக்கிய பாடல் அல்ல. காரணம் இது நடிகர் திலகத்திற்கு பாலா பாடிய முதல் பாடலாயிற்றே. சொர்க்கம் படத்தில் இடம் பெற்றிருக்க வேண்டிய பாடல். கே.ஆர்.விஜயாவுடன் திருமணம் முடிந்தவுடன் முதலிரவில் பாடுவதாக இப்பாடல். வரிகளும் கதாநாயகனின் மனநிலையை பிரதிபலிப்பதாகவே எழுதப்பட்டிருக்கும். தன்னுடைய எதிர்கால கனவுகளை எண்ணியவாறே அவளை கல்யாணம் செய்த வேளை இதெல்லாம் நடக்கும் என்பதாக நினைத்துப்பாடுவதாக வரிகள் எழுதப்பட்டிருக்கும்.

    "இன்று முதல் செல்வமிது என்னழகு தெய்வமிது வாழ்வு வந்தது" இந்த வரிகளிலேயே சொர்க்கம் பட கதாநாயகனின் பாத்திரத்தின் மன ஓட்டத்தை கவிஞர் கொண்டு வந்திருப்பார்.சிவந்த மண் படம் வெளியான போதே சொர்க்கம் படத்தின் 78 கிராமஃபோன் ரிக்கார்டுகள் வெளிவந்து விட்டன. பாலா வந்த புதிதில் குரல் மக்களை காந்தம் போல் கவர்ந்திழுத்த நேரம். எனக்குத் தெரிந்து பாலா பாடி வசந்தா ஹம்மிங் குரல் கொடுத்த பதிவு செய்யப்பட்ட பாடல் இதுவாகத்தான் இருக்கும்.

    பாலாவின் குரலில் மயங்கினாலும் அந்த ஹம்மிங், படத்தில் கே.ஆர்.விஜயாவின் பாத்திரத்திற்கு ஒத்து வருமா என தலைவர் ஐயம் எழுப்பி, அது எல்லோரிடத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி பின்னர் அப்பாடல் படமாக்கப்படவில்லை என்றும் அதற்காகவே புதியதாக அழகு முகம் பாடல் பதிவு செய்யப்பட்டு படமாக்கப்பட்டது எனவும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஏன் என்றால் எனக்குத் தெரிந்து அழகு முகம் பாடல் 78 இசைத்தட்டில் வெளியிடப்படவில்லை. அப்பாடல் படத்தில் தான் மக்கள் முதன் முதலில் கேட்டதாய் நினைவு. அதற்குப் பிறகு ரிக்கார்டிங் கம்பெனி சொர்க்கம் படப்பாடல்களை எல்பி இசைத்தட்டில் வெளியிட்ட போது அழகு முகம் பாட்டை சேர்த்ததாகத் தான் எனக்கு ஞாபகம்.

    நினைவுகளை அசை போட வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி வாசு சார்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  12. Thanks vasudevan31355 thanked for this post
  13. #907
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    தேங்க் யூ ராகதேவன் சார்.

    இதோ 'யாரோ எழுதிய கவிதை' இசையமைப்பாளர் பெயர்.

    டைட்டிலிலிருந்து.



    'ஆஹா ஆயிரம் சுகம்' 'யாரோ எழுதிய கவிதை' படத்திலிருந்து.

    Last edited by vasudevan31355; 22nd October 2015 at 06:28 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  14. Thanks chinnakkannan thanked for this post
    Likes rajeshkrv liked this post
  15. #908
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அருமை ராகவேந்திரன் சார். எவ்வளவு அரிய விஷயங்கள் தங்களிடம் புதைந்து கிடக்கின்றன! அது போல சரியான சந்தர்ப்பத்தில் வெளி வருகின்றன. ஏற்கனவே நான் தங்கள் மூலம் கேள்விப்பட்டிருந்தேன். இப்போது முழு விவரங்களையும் இங்கு அளித்தமைக்கு நன்றி!

    கே.ஆர்விஜயா விஷயத்தில் தலைவருடைய சந்தேகம் நூற்றுக்கு நூறு நியாயமானது. அதனால் பாடலையே இழந்தாலும் பரவாயில்லை. குடும்பப் பெண்மணியாக விஜயா கதைக்குப் பொருத்தமானவர் என்பதற்காக ராமண்ணா அவரை சொர்க்கத்திற்காகத் தேர்ந்தெடுத்தார். அது இந்த மாதிரி சில இழப்புகளுக்கு காரணமாய் போய் விட்டது. ஆதிராம் சார் அவருக்குத் தெரிந்த தகவல்களை அருமையாக பரிமாறிக் கொள்வார் என்று நம்பலாம்.
    நடிகர் திலகமே தெய்வம்

  16. Likes Russellmai, chinnakkannan liked this post
  17. #909
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மதுண்ணா!

    'பணக்காரக் குடும்பம்' படத்தில் 'இதுவரை நீங்கள் பார்த்த பார்வை' பாடல் கேட்டிருப்பீர்கள். வழக்கத்திற்கு மாறான மிக அமைதியான எம்.ஜி.ஆர் டூயட் பாடல் இது. இதில் ஒரு இடத்தில்

    'பேச முடியாத பெருமை
    இந்த இனிமை இனிமை இனிமை
    இந்த'...... ..... .....

    என்று சரோ தொடராமல் நிறுத்துவார்.

    அப்போது மீதி 'இனிமை... இனிமை' வார்த்தைகளை புல்லாங்குழல் ஓசை நிறைவு செய்யும் வெகு இனிமையாக. நேர்த்தியாக.

    அதே போல 'பாடகர் திலகம்'

    'சுகம் கண்டேன் கண்டேன் கண்டேன்
    சுகம்'..... ..... ......

    என்று தொடராமல் நிறுத்துவார். அதே போல புல்லாங்குழல் இசை மீதி வார்த்தைகளை நிறைவு செய்யும்.

    இப்போது உங்களுடைய ஃபேவரிட் பல்லாக்கு போல வண்டி' பாடலின் 'தள்ளம்மா... தள்ளம்மா... தள்ளம்மா' வரிகளின் டியூனை மட்டும் மேற்கண்ட 'இனிமை... இனிமை... இனிமை'...யுடன் மேட்ச் செய்து பாருங்கள். ஏதாவது புலப்படுகிறதா?
    Last edited by vasudevan31355; 22nd October 2015 at 07:11 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  18. Likes madhu, Russellmai liked this post
  19. #910
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    டியர் வாசு சார்,

    இதெல்லாம் ரொம்ப அநியாயம். வீட்டுக்கு ஒரு பிள்ளையின் 'இன்றுமுதல் செல்வமிது' பாடலை பதிவிட்டு தூக்கம் தொலைக்க வைத்துவிட்டீர்கள். (அடிக்கடி இந்த அநியாயத்தை செய்யுங்கள்). இந்த வயதில் போய் தூக்கம் தொலைத்தாயா என்றெல்லாம் கேட்கக்கூடாது. உஷாநந்தினி எங்க காலத்து... ஸாரி நம்ம காலத்து கனவுக்கன்னிகளில் ஒருவர்.

    வீட்டுக்கு ஒரு பிள்ளை நல்லதொரு பொழுதுபோக்குப்படம். அப்போதெல்லாம் மக்கள் கலைஞரின் வண்ணப்படங்களை காண்பது மிகமிக அரிது. அதிகம் கருப்பு வெள்ளையிலேயே ஜாலங்கள் நிகழ்த்தி வந்தார். (அவர் வில்லனாக மாறியபின் அவருக்கு வண்ணமாக வந்து குவிந்தது. நிச்சயம் இது கொடுமைதானே). இந்த படம் 71 தீபாவளிக்கு வந்து சக்கைபோடு போட்டதையும், பிரம்மாண்ட படங்களை பின்னுக்கு தள்ளியதையும் முன்பு கார்த்திக் சார் 'பாபு' திரைக்காவியத்தின் ரிலீஸ் தின மலரும் நினைவுகளில் விவரித்திருந்தார். வழக்கமான ராமண்ணாவின் பொழுதுபோக்கு மசாலா காவியம். பெரிய அளவில் வெற்றியடைந்தது.

    இப்படத்தின் 'பெண்ணென்றால் நானன்றோ' பாடலுக்கு தவில் அடித்து அசத்தியிருப்பார் மெல்லிசை மன்னர். அவர் தவில் அடித்த பாடல்களில் இன்னொன்று நமது கௌரவத்தில் இதே ராட்சசி தூள் கிளப்பிய 'அதிசய உலகம் ரகசிய இதயம்' பாடல். நம் எல்லோருக்கும் பிடித்த ஜெய்குமாரியின் அழகிய ஆட்டத்துடன்.

    இப்படத்தின் வில்லி ஜி. வரலட்சுமியின் கணவர் பயில்வான் தாராசிங்கின் தம்பி பயில்வான் அஜீத்சிங். உலக அளவில் பல மல்யுத்தப் போட்டிகளில் கலந்து கொண்டவர்.

    ராமண்ணா படங்களின் டுயட்டுகளுக்கான லொக்கேஷன் நமக்கு தெரிந்ததுதான். பார்க், பீச், வெளிநாடு... ஊஹும்.
    பறக்கும்பாவையில் பாத்ரூமுக்குள் டூயட்.
    குமரிப்பெண்ணில் ரயில்பெட்டியில் டீசிங் பாடல்
    நான் படத்தில் சின்ன பியட் காருக்குள் டூயட்
    மூன்றெழுத்தில் சின்ன பெட்டிக்குள் டூயட்
    தங்கசுரங்கத்தில் கிணற்றுக்குள் டூயட்
    இந்தப்படத்தில் அவருக்கு கிடைத்தது வீராணம் குழாய்கள்.
    அதையே அட்டகாசமாக பயன்படுத்தி நம்மையும் அசத்திவிட்டார்.

    'இன்று முதல் செல்வமிது' பாடல் அந்தக்கால விவித்பாரதியின் சூப்பர் ஹிட் பாடல்களில் ஒன்று. அதை மிக விரிவாக அருமையாக ஆய்வு செய்துள்ளீர்கள்.

    பாராட்டுக்கள்.

    அடடே மறந்துட்டேனே. ஆய்வின் இடையிடையே செருகப்பட்டிருந்த கிளுகிளு ஸ்டில்கள் அருமை.

  20. Thanks vasudevan31355 thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •