Page 7 of 337 FirstFirst ... 567891757107 ... LastLast
Results 61 to 70 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #61
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    டியர் வாசு சார்,

    எவரும் எட்டாத தரத்தில் எட்டாயிரம் பதிவுகளைத்தந்த உங்களுக்கு என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    அதில் மேலும் ஒரு இன்ப அதிர்ச்சியாக சுமதி என் சுந்தரி பாடலைப் பதித்து எட்டாயிரம் அடிகள் உயரத்தில் தூக்கி நிறுத்தி விட்டீர்கள்.

    எப்படியாவது பதிவுகள் இட்டு எண்ணிக்கையை கூட்ட வேண்டும் என்பது ஒருவகை. எத்தனை பதிவுகள் இட்டோம் என்பதைவிட, எப்படிப்பட்ட பதிவுகள் இட்டோம் என்பது இரண்டாவது வகை இந்த இரண்டாவது வகையில் கூட அதிக பதிவுகள் இட்டு சாதனை நிகழ்த்த முடியும் என்பதற்கு நீங்களே சான்று.

    ஒவ்வொரு பதிவுக்கும்தான் எப்படிப்பட்ட உழைப்பு. அப்பப்பா மலைக்க வைக்கிறது. எந்த ஒரு சீரீஸை எடுத்துக்கொண்டாலும் அதை சிறப்பாக கொண்டுவர வேண்டும் என்பதில் உங்கள் மெனக்கெடல் அற்புதம். பதிவர் என்றால் இப்படியிருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் நீங்கள். உங்கள் துளிவிஷம் பதிவை 'பாட்ஷா' பார்த்திருந்தால் "இந்த ஒரு பதிவு நூறு பதிவு மாதிரி ஹா.ஹா.ஹா." என்று பாராட்டியிருப்பார்.

    எட்டாயிரத்தில்தான் எத்தனை எத்தனை அதிசயப்பதிவுகள். மக்களே மறந்துபோன பழைய படங்கள், பழைய பாடல்கள், பழைய (வெளிச்சத்துக்கு வராத) நடிகர் நடிகைகள், பாடகர் பாடகிகள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள். நினைத்தால் நிச்சயம் தலைசுற்றும். அத்தனை உழைப்பும் இந்த ஒல்லியான உடம்புக்குள்ளிருந்து.

    பாலா நடிகர்திலகத்துக்காக பாடிய பாடல்களை ஒதுக்கி வைத்திருந்தபோதே ஒரு எண்ணம், ஏதோ ஒரு காரணத்துக்காக என்று நினைத்தேன். ஆனால் எட்டாயிரம் என்ற லேண்ட் மார்க்குக்காக என்று நினைக்கவில்லை. ஒளித்துவைத்து சமயம் பார்த்து பிரம்மாண்டமாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்.

    பாடலின் ஒவ்வொரு பிரேமையும் நிறுத்தி நிறுத்தி விவரித்துள்ள பாங்கு உங்கள் தனித்திறமை. அந்த மூன்றாவது சரணத்தை இரண்டாம் முறை பாடிக்கொண்டு நடக்கும் அந்த அசால்ட் நடை எனக்கு எப்போதும் பிடித்தமான ஒன்று.

    பதிவு என்றால் தேடிப்பிடித்து ஏதாவது குறைசொல்ல வேண்டுமல்லவா?. அதுதானே மனித இயல்பு. அந்த நோக்கில் தேடியதில் என் காதலன் சி.வி.ராஜேந்திரனையும், என் மாமா ஒளிப்பதிவாளர் தம்புவையும் குறிப்பிடவில்லை என்பதைத்தவிர வேறு குறைகளையே காணோம்.

    'இரண்டில் ஒன்று' பாடலை ஒன்பதாயிரம் என்ற லேண்ட்மார்க்குக்காக ஒளித்து வைக்காமல் உடனே தாருங்கள்.

    சலியாத உழைப்புக்கு பாராட்டுக்கள்,
    எங்களை பரவசத்தில் ஆழ்த்தியதற்கு நன்றிகள்,
    மேலும் மேலும் சாதிக்க வாழ்த்துக்கள்.

    வாசுவின் பத்தாயிரமாவது பதிவுக்கு எப்படி வாழ்த்துச் சொல்லலாம் என்ற சிந்தனையுடன்.... உங்கள் ஆதி.

  2. Thanks vasudevan31355 thanked for this post
    Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #62
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    விநாயக சதுர்த்தி அன்று மது அண்ணாவின் திருக்கரத்தால் போடப்பட்ட பிள்ளையார் சுழி பாகம் 5 வெற்றி நடை போட எல்லாம் வல்ல அந்த கணேச பெம்மானையும்,ராமச்சந்திர மகாபிரபுவையும் மற்ற எல்லா தேவ தேவதைகளின் அருள் வேண்டி வாழ்த்தும் அன்பு நண்பன்

    கிருஷ்ணா
    gkrishna

  5. Thanks madhu, RAGHAVENDRA thanked for this post
    Likes RAGHAVENDRA, Russellmai liked this post
  6. #63
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    a writeup in the Tamil Hindu on the occasion of 50 years of Pazhani

    பழனி (1965)

    விவசாயம் அழிந்து கொண்டிருக்கும் காலம் இது. விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாறிக்கொண்டிருக்கின்றன. கார்ப்பரேட் நிறுவனங்கள் தொழிலகங்களை அமைக்க விவசாய நிலங்களையே விழுங்குகின்றன. இந்த நிகழ்கால அவலத்தைச் சித்தரிக்கும் திரைப்படங்கள் போதுமான அளவுக்கு சமீபகாலத் தமிழ் சினிமாவில் வெளிவராதது பெரும் சோகம்.

    விவசாயியாக நடித்தால் எந்த சாகசங்களையும் செய்ய முடியாது என இன்றைய நாயகர்கள் நினைக்கலாம். ஆனால், எம்.ஜி.ஆரும் சிவாஜியும் சூப்பர் ஸ்டார்களாக இருந்த காலத்தில் பாமர விவசாயிகளாக நடிக்கத் தயங்கவில்லை. சிவாஜி எளிய விவசாயியாக, கள்ளம் கபடமற்ற அப்பாவியாக நடித்த பல படங்களில் அவருக்கு மகுடமாக அமைந்த படம் 1965-ல் வெளியான ‘பழனி’.

    தியாக தீபம்

    கிராமத்து விவசாயி சேற்றில் கால் வைத்தால்தான் நகரத்தில் வாழ்பவன் சோற்றில் கை வைக்க முடியும் என்று வழக்கமாகச் சொல்வதுண்டு. அப்படிப்பட்ட விவசாயியும் விவசாயம் சார்ந்த கிராம வாழ்க்கையும் காப்பாற்றப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியது பழனி படத்தின் கதை.

    மனைவியை இழந்த கிராமத்து விவசாயி பழனி (சிவாஜி). இவருக்கு வேலு ( ராம்), ராஜூ (எஸ்.எஸ். ரேஜேந்திரன்), முத்து (முத்துராமன்) ஆகிய மூன்று தம்பிகள். இவர்களுடன் நிராதரவான அவர்களது அக்காள் மகள் காவேரியும் (தேவிகா) வசிக்கிறார். கிராமத்துப் பண்ணையார் சொக்கலிங்கத்தின் ( பாலையா) நிலத்தில் குத்தகை விவசாயம் செய்து, ஒற்றுமைக்குப் பேர்போன அண்ணன் தம்பிகளாக வசித்துவருகிறார்கள். இதே கிராமத்தைச் சேர்ந்த எமிலி (புஷ்பலதா) அருகிலுள்ள மதுரை நகருக்கு மிதிவண்டியில் சென்று கல்லூரியில் படித்துவருகிறாள். பழனியின் குடும்பத்தினருடன் நட்புடன் பழகிவருகிறாள். பழனியின் மூத்த தம்பியான வேலுவின் மனைவி நாகம்மா கூட்டுக் குடும்பத்தில் பிடிப்பில்லாமல் இருக்கிறாள். சமயம் பார்த்து சண்டையிட்டுத் தன் கணவனைத் தனியே பிரித்துச் சென்று தனிக்குடித்தனம் நடத்துகிறாள். பாம்பு கடித்து வேலு இறந்துவிட நாகம்மா கைம்பெண்ணாகிறாள்.

    ஏழை விவசாயத் தொழிலாளர்களை வஞ்சிப்பதையே வாழ்க்கையாகக் கொண்ட பண்ணையார், எமிலியைத் தனது வீட்டுக்கு அழைத்துவந்து தவறாக நடந்துகொள்ள முயற்சிக்கிறார். இதனால் தனது தாயாருடன் கிராமத்தை விட்டுப் புறப்பட்டு சென்னை நகருக்குச் சென்றுவிடுகிறாள் எமிலி.

    இதற்கிடையில் வினோபா பாவேவின் பூமி தான இயக்கம் பழனியின் கிராமத்துக்கு வருகிறது. பழனியின் விவசாய ஈடுபாட்டைக் கண்டு அவருக்கு ஐந்து ஏக்கர் நிலத்தைப் பண்ணையார் சொக்கலிங்கத்திடமிருந்து தானமாகப் பெற்றுத்தருகிறது. ஆனால், அது கடும் பாறை நிலம். அதைச் சீர்திருத்தி விளைநிலமாக மாற்ற 2,000 ரூபாயை பழனிக்குக் கடனாகத் தருகிறார் பண்ணையார். ஆனால், பழனி ரூ. 12,000 கடன் வாங்கியதாக ஊரை நம்ப வைத்து நிலத்தையும் பிடுங்கிக்கொள்கிறார். அண்ணனின் ஏமாளித்தனத்தைக் கண்டு குமுறும் தம்பிகள் ராஜு, முத்து இருவரும் அவரைப் பிரிந்து சென்னைக்குச் செல்கிறார்கள். அங்கே எமிலி அவர்களுக்கு வேலைக்கு ஏற்பாடு செய்கிறாள். ஆனால், நகர வாழ்க்கை ராஜூவைச் சிறையில் தள்ளுகிறது. தம்பிகளைக் காண சென்னை வரும் பழனி ராஜூவின் நிலையை எண்ணித் துடித்துப்போகிறார்.

    கிராமத்திலோ பண்ணையாரின் கொடுமைகள் உச்சத்தை எட்டுகின்றன. தன் இச்சைக்கு இணங்காத நாகம்மாள் மீது அவர் இழிபெயர் சுமத்த, சாதுவாக இருந்த பழனி கொதித்தெழுகிறார். சிறையிலிருந்து விடுதலையாகி வரும் ராஜூ நடந்ததை அறிந்து சொக்கலிங்கத்தைத் தாக்குவதற்காகத் துரத்த, அவருடன் மொத்த கிராமமும் சேர்ந்துகொள்கிறது. உயிருக்கு பயந்து ஊர்க்கோயிலில் ஓடி ஒளியும் சொக்கலிங்கத்தை பழனி காப்பாற்றுகிறார். பழனியின் நல்ல குணத்தால் வெட்கித் தலைகுனியும் பண்ணையார் தான் செய்த குற்றங்களை ஏற்றுக்கொண்டு போலீஸில் சரணடைகிறார்.

    இறுதியில் பண்ணையாரின் கைவசம் இருந்த பெரும் பகுதி நிலம் அவருடையது அல்ல என்பது தெரியவர, நிலத்தைக் கூட்டுறவுச் சங்கம் எடுத்துக்கொண்டு விவசாயிகளுக்குப் பிரித்துத் தருகிறது. மீண்டும் விவசாயம் செழிக்கிறது. அறுவடையின் முழுப் பலனும் உழுத விவசாயிக்கே கிடைக்கின்றன. பழனியும் சகோதரர்களும் பாசத்துடனும் ஒற்றுமையுடனும் வசிக்கிறார்கள்.

    ஒரு பொங்கல் இரு திலகங்கள்

    1965-ல் ஜனவரி மாதம் பொங்கல் தினத்தில் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியானது ‘எங்க வீட்டுப் பிள்ளை’. அதே நாளில் சிவாஜி நடிப்பில் வெளியானது ‘பழனி’. இரண்டு படங்களுமே வெள்ளிவிழா கொண்டாடிய படங்கள். ஏ. பீம்சிங் இயக்கம், சிவாஜி, ஜெமினி, சாவித்திரி, சரோஜாதேவி நடிப்பு, கண்ணதாசனின் பாடல்கள், விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை என்கிற வலுவான கூட்டணியில் வெளியான பல படங்கள் வெற்றிபெற்றன.

    ஆனால், பழனி படத்தில் சிவாஜியுடன் எஸ்.எஸ். ராஜேந்திரன், ஆர். முத்துராமன், ஸ்ரீ ராம், தேவிகா, புஷ்பலதா ஆகியோர் இணைந்தனர். வில்லன்களாக டி.எஸ். பாலைய்யாவும் எம்.ஆர். ராதாவும் நடித்தனர். வில்லன்களோடு வளையவந்தாலும் நியாயத்தின் பக்கம் நிற்கும் நகைச்சுவையாளராக நாகேஷ் நடித்திருந்தார். சின்னக் கணக்குப்பிள்ளை சந்தானமாக நாகேஷ் செய்யும் கதா கலாட்சேபம் படத்தில் சிரிப்பு மழையைப் பொழிந்து, சிந்திக்கவும் வைத்தது.

    விவசாயத் தொழிலின் மேன்மையையும் சகோதர பாசத்தின் உன்னதத்தையும் உயர்வாகப் பேசிய இந்தப் படத்தில் தமிழ்க் கலாச்சாரத்தின் முக்கிய அம்சமாக விளங்கிய கூட்டுக் குடும்ப முறையையும் முன்னிறுத்தியது பழனி படத்தின் கதையை எழுதியவர் ஜி.வி. ஐயர். படத்துக்குத் திரைக்கதை எழுதி, இயக்கியவர் ‘குடும்பப் படங்களின் பிதாமகன்’ பீம்சிங். தமிழ் கிராமியத்தைக் கண்முன் நிறுத்திய வசனங்களை எழுதியவர் எம்.எஸ். சோமசுந்தரம்.

    விருதும் தாக்கமும்

    படத்தில் நடித்த அனைவருமே குறைவான நாடகத்தனத்துடன் நடித்திருந்த படம் இது. தனது குடும்பத்தின் நலனுக்காகத் தியாக தீபமாக திருமணம் செய்துகொள்ளாமல் வாழும் அண்ணன் பழனியாக சிவாஜியின் நடிப்பும், தீமையை எதிர்க்கும் அவரது தம்பி ராஜூவாக எஸ்.எஸ். ராஜேந்திரனின் நடிப்பும் ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் பெரிதும் பாரட்டப்பட்டன.

    சிறந்த படத்துக்கான நற்சான்றிதழை (தேசிய விருது) பழனி படம் வென்றது. படிக்காதவர்கள் நகரத்துக்கு வந்தால் பிழைக்க முடியாது என்ற எண்ணத்தை எடுத்துக் காட்டியது பிற்போக்கான கருத்தென்று விமர்சனங்களில் சுட்டிக் காட்டப்பட்டது. அதேபோல் கிராமத்து வாழ்க்கையைப் பற்றிய சித்தரிப்புகளில் வில்லன்கள் பெண் இச்சையோடும், ஏமாற்றுவதை மட்டுமே முழுநேரத் தொழிலாகக் கொண்டிருப்பார்கள் என்பதும் வழக்கமான சித்தரிப்பாக இருந்ததை மறுக்க முடியாது.

    மறக்க முடியாத பாடல்கள்

    இந்தப் படத்தில் கிராமத்து வாழ்க்கையைப் பாடல் காட்சிகள் வழியே சித்தரித்த விதம் இயக்குநர் பீம்சிங்குக்கே உரிய தனித்துவம். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் ‘ஆறோடும் மண்ணில் இன்றும் நீரோடும்’ பாடல் இன்றும் ஏர் உழும் காட்சியையும் நடவு நடும் காட்சியையும் நம் கண்முன் கொண்டுவரும். ஹரி காம்போதி ராகத்தில் சாயலில் அமைந்த இந்தத் தெம்மாங்குப் பாடல் மட்டுமல்ல, படத்தின் அத்தனை பாடல்களும் மறக்க முடியாத கதைப் பாடல்களாக அமைந்தன. இன்றைய சூழ்நிலையில் மறுஆக்கம் செய்யப்பட வேண்டிய படம் பழனி என்பதில் ஐயமில்லை.

  7. Thanks vasudevan31355 thanked for this post
  8. #64
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    the HINDU write-up PAZANI ENGAVEETUPILLAI 1965 JAN 14 RELESES EV PLLAI SIVER JUBLIE PAZANI TAMIL VERSION OF UPKKAR REALISTIC MOVIE BUT A UTTAR FLOP sorry to mention that is the fate of tamilrasanai prevailed thosedays.

  9. #65
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    More in Dwijavanti

    From Madhuraiyai Meetta Sundhara PaNdiyan (1978)

    amudha thamizhil ezhudhum kavidhai......

    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  10. Likes RAGHAVENDRA, chinnakkannan liked this post
  11. #66
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ஆதிராம் சார்!

    தங்கள் மனமுவந்த பாராட்டுதல்களுக்கு மிக்க நன்றி! பாலா பதிவுகளில் தலைவர் பாடல் ஏன் தாமதமானது என்று அழகாகக் கண்டு பிடித்து விட்டீர்களே!

    //பதிவு என்றால் தேடிப்பிடித்து ஏதாவது குறைசொல்ல வேண்டுமல்லவா?. அதுதானே மனித இயல்பு. அந்த நோக்கில் தேடியதில் என் காதலன் சி.வி.ராஜேந்திரனையும், என் மாமா ஒளிப்பதிவாளர் தம்புவையும் குறிப்பிடவில்லை என்பதைத்தவிர வேறு குறைகளையே காணோம்.//

    கண்டிப்பாக சார். நிச்சயம் அது ஒரு குறைதான். பாலா தொடரில் ஒளிப்பதிவாளர்களையும், இயக்குனர்களையும், இதர டெக்னீஷியன்களையும் பெரும்பாலும் குறிப்பிடாமல் இருந்தது கிடையாது. இதில் குறிப்பிடவில்லை. காரணம் இரண்டு.

    ஒன்று

    நம் ஸ்டைல் சக்கரவர்த்தியின் அங்க அசைவுகளிலேயே மைண்ட் செட் ஆகி இருந்தது. வேறு எதையுமே நினைக்கத் தோன்றவில்லை. எத்தனை முறை பார்த்தாலும் அவரது ஸ்டைல் மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தது.

    இரண்டு

    நம் அனைவருக்கும் 'சுமதி என் சுந்தரி' பற்றி புள்ளி விவரமாகத் தெரியும். உங்களுக்கு மட்டுமல்ல... நம் ஒட்டுமொத்த நடிகர் திலகம் ரசிகர்களின் 'டார்லிங்' சி.வி.ஆர் தானே! ஒளிப்பதிவு இயக்குனர் தம்பு என்பதும் அனைவரும் அறிந்ததே.


    இப்போது வட்டியும் முதலுமாகச் சேர்த்து டைட்டில் கார்டையே போட்டால் போயிற்று மூலவரையும் சேர்த்து.

    அப்புறம் இன்னொரு சின்ன உரிமை வருத்தம். திடீரென்று அடிக்கடி சொல்லாமல் கொள்ளாமல் காணமல் போய் விடுகிறீர்கள். அலுவலகப் பணி அதிகமோ? பதிவுகளுக்கு தோதான துணைப் பதிவுகளையும் இணைப் பதிவுகளையும் சப்போர்ட்டாக அளிக்க உங்களை விட்டால் வேறு யார்? அதனால் நிறைய உங்களையும், நீங்கள் அளிக்கும் அற்புதமான விஷயங்களையும் மிஸ் செய்கிறோம். பாகம் 4 இல் நிறைய பதிவுகளுக்கு உங்கள் பின்னூட்டப் பதிவுகள் இல்லாமல் முழுமை பெறவில்லை. நல்லது கெட்டது என்று நடுநிலைமையுடன் எல்லாவற்றையும் சுட்டிக் காட்டுவதில் வல்லவர் தாங்கள். அதனால் திரியில் தொடர்ந்து பங்களிக்க வேண்டுகிறேன்.

    அதே போல 'உங்கள் ஆதி'யை அதே உரிமையுடன் ஆனந்தமாய் அனுபவித்தேன். நன்றி!





    Last edited by vasudevan31355; 20th September 2015 at 11:30 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  12. Thanks adiram thanked for this post
    Likes Russellmai liked this post
  13. #67
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    மனதைக்கவரும் மதுர கானம் பாகம் 5 தொடங்கிய மதுண்ணாவிற்கு வாழ்த்துக்கள்

  14. Thanks madhu thanked for this post
  15. #68
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    அட மீண்டும் கிருஷ்ண விஜயம் ஆம் நமது கிருஷ்ணா ஜி மீண்டுவம் வந்திருக்கிறாரே

    யாரங்கே திருஷ்டி சுற்றி போடுங்கள் ஐயா

  16. #69
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    வணக்கம். வாங்கஜி. இப்பதான் வழி தெரிஞ்சுதா?

    யாரங்கே முதலில் ஜி வந்ததற்கு திருஷ்டி சுற்றி போடுங்கள் ஐயா. அப்புறம் கிருஷ்ணாவுக்கு போடலாம். புலம்ப உட்டுட்டேளே! நியாயமா?
    நடிகர் திலகமே தெய்வம்

  17. #70
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    அன்பின் கிருஷ்ணா சார்.. வருக வருக..

    நேற்றே வரவேற்று இரு பாடல்கள், ப்ளஸ் சில முதல் ராத்திரிப்பாடல்கள் + சில விஷயங்கள் என எழுதியிருந்தேன்..பின் வேண்டாம் என்று
    டெலீட்டும் செய்துவிட்டேன்..அதில் உங்கள் வரவேற்பும் இருந்தது..

    எனில் தாமதமாக ச் சொன்னாலும் - வருக வருக தங்கள் வரவு நல்வரவாகுக

    அன்புடன்

    சி.க

    **

    Eid holdiays புதன் வியாழன் வெள்ளி சனி என இந்த தடவை நாலு நாள் தான்..வெள்ளி சனி வார இறுதி என்றாலும் இரண்டே இரண்டு நாள் விடுமுறையை பாவம் ஓமானியர்களால் தாள இயலவில்லை.. ம்ம்.. ஒர்ரே சோகம் ஆக இருக்கிறார்கள்..

    எனில் வியாழனும் ஒரு எபிசோட் , சனிக்கிழமையும் ஒரு எபிசோட் முடிந்தால் எழுதலாம் என நினைக்கிறேன்..

    இப்போது இரண்டாவதுபகுதி..

    **


    இசையும் கதையும்..

    *

    சின்னக் கண்ணன்.

    *

    கலர்ஸ்..

    *
    2. அவள்
    ****************.

    ஹாய்…

    சந்திப்பு வரும் வழி கண்டு
    மனிதர் சந்திக்கும் இடங்களும் உண்டு
    சிலர் சொந்தங்களாவதும் உண்டு
    சிலர் தொடர்கதையாவதும் உண்டு
    இறைவனும் மனிதனும் பயணம் செய்தாலே
    எவரை எவர் வெல்லுவாரோ..

    என்ற பாடல் வரி தான் எனக்கு நினைவுக்கு வந்தது அன்று..

    ஏனாம்..

    சுந்தரா எனப்படும் சுந்தர்ராஜன் என்ற கட்டுடல் பெற்ற கல்லூரியில் மூன்றாம் வருடம் படிக்கும் மாணவனாகிய நான் கொஞ்சம் அலைந்து திரிந்துகொண்டிருந்தேன்..

    எதற்காக..

    கல்யாண வேலைகள்

    கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க.என்னோடகல்யாண வேலையெல்லாம் இல்லை.. என் இரண்டாவது சகோதரியின் கல்யாணம்..

    மூத்த சகோதரிக்கு நான் ப்ளஸ்டூ படிக்கும் போதே ஆகிவிட்டது..இரண்டாவது சகோதரிக்கு ஒரு மாப்பிள்ளை துபாயிலிருந்து பறந்து வந்து அவரைப்பார்த்து உடன் இருவாரங்களிலேயே கல்யாணம் செய்து கொள்கிறேன் எனச் சொல்ல அதற்காகக் கல்யாண மண்டபம் முதல் எல்லா வேலைகளையும் குறுகிய காலத்தில் செய்து முடிக்க வேண்டிய கட்டாயம்..

    நல்ல வேளை.. மதுரையில் தானப்ப முதலி தெருவில் இருந்த சற்றே பெரிதான கல்யாணமண்டபம் சுலபத்தில் கிடைத்துவிட்டது.. மற்ற வேலைகளை அப்பா அவர் தம்பிக்கும், என் அண்ணனுக்கும், சில்லறை வேலைகளை எனக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டார்..

    அண்ணன் வடக்குவெளிவீதி க் கனராபாங்க்கில் காஷியர் எனில் ப்ராப்ளம் இல்லை..பேங்க் வேலை முடித்து அப்பாவின் சின்ன பிஸினஸ் எனப் பொழுது போய்க்கொண்டிருந்தது அவருக்கு.. எனில் அவரது இன்ஃப்ளூயன்ஸில் கல்யாணச்சமையல் காரர் கூட மாட ஆட்கள் என தேர்வு செய்து சித்தப்பாவிடம் வெரிஃபிகேஷன் செய்து ஃபிக்ஸ்ம் பண்ணிவிட்டார்..

    இந்தக்காலம் போல அந்தக்காலத்தில் காண்ட்ராக்ட்ஸ் எல்லாம் அவ்வளவாகப் பிரபலமடையவில்லை.. எனில் எல்லாமே கல்யாண வீட்டுக்காரர்கள் தான் செய்யவேண்டும்..

    சமையற்காரருக்கு சமையலுக்கான காய்கறிகள் இன்ன பிற விஷயங்களை வாங்கித்தரவேண்டிய மாபெரும் பொறுப்பு இந்தச்சின்னக் குருவி தலையில்..

    லிஸ்ட் போட்டுகீழமாசி வீதியிலிருந்த ஒரு தெரிந்த கடையில் மளிகை சாமான்களுக்கு ஏற்பாடுசெய்தாயிற்று. காய்கறிகளும் மெய்ன் மார்க்கெட் எனச் சொல்லப்படும் இடத்தில் சென்று ஒரு கடையில் லிஸ்ட் கொடுத்தும் விட்டாயிற்று.. கல்யாணத்தன்று முதல் தினமான அவை வந்து இறங்கிவிட்டன..

    அந்தக்காலத்தில் கல்யாணத்தில் தாலி மூன்றாம் பட்சமே.. முதலாவது உபசரிப்பு..அதற்கான உறவுக்கார ஆண்கள் பெண்கள் சித்தப்பாவின் பொறுப்பு..

    இரண்டாவது விஷயம் என்ன

    காப்பி.. டிஃபன்..

    டிஃபன் சமையல்காரர் பார்த்துக் கொள்வார்..ஆனால் காஃபிக்குமெய்ன் இன்க்ரீடியண்ட் ஆன பால்.. அவ்வப்போது தான் வாங்கவேண்டும்..

    எனில் அதுவும் என்னுடையதென்பதால் ஏற்கெனவே சொல்லிவைத்திருந்தேன். வீட்டு அருகாமையில் இருந்த ஆவின்பால் பூத்தில்

    மாப்பிள்ளை அழைப்புக்குக் இவ்வளவு பாக்கெட் கல்யாணத்திற்கு நானூறு பேரோ என்னவோ எண் கொடுத்திருந்தாற்போல கல்யாண நாளின் காலை அஞ்சரைக்கே இவ்வளவு பாக்கெட் எனவும் சொல்லி விட்டிருந்தேன்..

    மாப்பிள்ளை அழைப்பன்றெல்லாம் ஓ.கே..சரியாக முடிந்துவிட்டது.. இல்லை இல்லை..

    மாப்பிள்ளையின் நண்பர்கள் குழாம் ஒன்று..அவர் முன்பு நெய்வேலியில் பாங்க் ஒன்றில் வேலை பார்த்தவராம்..அந்த பிராஞ்ச் ஆட்கள், அதன் பின் சேலத்தில் ஒரு ப்ராஞ்ச் அந்த ப்ராஞ்ச் ஆட்கள் எல்லாரும் வருவதாகச் சொல்லிவிட அவர்களும் ஒரு நூறு பேர் வந்துவிட – இரவுத்தங்கலுக்குச் சமயசஞ்சீவிச் சித்தப்பா சில லாட்ஜ்களில் சொல்லி வைத்திருந்ததால் பிரச்னை ஒன்றுமில்லை.. ஆனால் காஃபிக்கான இன்க்ரீடியண்ட் பால்.

    எவ்வளவு வேணும் மாமா..

    சமையல்கார க் கிருஷ்ணய்யங்கார் பளபள நெற்றியைத் தடவிக்கொண்டு..” வழக்கமா ஆர்டர் பண்ணியிருக்கியோன்னோ.. அத்தோட ஒரு 50 லிட்டர் பாரு”

    ஏன் ஓய்.. தண்ணி கலக்கப்படாதா..

    அதெல்லாம் எனக்குத்தெரியுண்டா குழந்தே.குறைஞ்ச பட்சம் பத்துலிட்டர் வாங்கிடு... பிள்ளை வீட்டில சில மில்க் ஸ்வீட்ஸ் வேணும்னு கேட்டிருக்கா..மாப்பிள்ளை அழைப்புல ஜிலேபி சாப்பிட்டயா நல்லாருந்ததா..

    ஓ..சூப்பர் என மட்டும் சொல்லி மனசுக்குள் நற நற்த்து கல்யாணத்திற்கு வந்திருந்த இரு என்வயது சித்தப்பா பெரியப்பா பிள்ளைகளுடன் கலந்தாலோசித்தேன்.. காலீல வர்றீங்களாடா.. கொஞ்சம் பொன்னகரம் ஆராப்பாளையம் க்ராஸ் பூத்னு சுத்தலாம்.. நம்ம பூத்லயே கிடைக்குமான்னு பார்க்கலாம் பூத்காரன் இங்கேயே வெள்ளென டெலிவர் ஒரு ஆட்டோக்காரரை வச்சுபண்றேன்னு சொல்லியிருக்கான்.. பட் நேர்ல போனாத் தான் நடக்கும்..என்ன சொல்றீங்க...

    இந்தபார் சுந்தரா.. நோ..ஏற்கெனவே பாக்கெட் போடணும் இன்னபிறன்னு பெரியப்பா (என் அப்பா) சொல்லியிருக்கார்.. அதுக்கே டயமாவும்.. உனக்காக நாங்க உசுரவே தருவோம் பட் இப்ப தூக்கத்தைத் தரமுடியாது..டேய் கல்யாணத்தன்னிக்கு நாங்க ஃப்ரெஷ்ஷா இருக்க வேண்டாமா என்ன..”

    போங்கடா இவன்களே.. என்று தான் சொல்ல முடிந்தது

    மாப்பிள்ளை அழைப்பு முடிந்து இரவெல்லாம் பாக்கெட்டில் தேங்காயெல்லாம் உறவுகள் சகிதம் போட்டு தூங்கலாம் என்று கண்சொக்க டயம் பார்த்தால் இரண்டரை.. கண் சொக்கினாலும் தூக்கம் வரவில்லை..கஷ்டப்பட்டு வரவழைத்தாலும் பால் நினைவு தான்.. வந்ததெல்லாம் பால் பாடல்கள் தான்..

    பால் வண்ணம் பருவம் கண்டு
    பால் மலர்ப்பால்

    என்றெல்லாம் பாடல்கள் வர அது முடிந்ததும் கூடவே வாணிஸ்ரீயும் வந்து பால் போலவே வான்மீதிலே பாடியவண்ணம் ரெண்டு மூன்று பக்கெட் பாலை என்மீது ஊற்ற விழித்தால் நான்கு மணி..

    முகம் கழுவி,டபக் டபக்கெனக் குளித்து சைக்கிள் எடுத்துக் கொண்டு பால்பூத்திற்குச் சென்றால் ஏற்கெனவே ஆவின் வண்டி வந்துசென்றிருக்க சோகையாய்ப்பால்பூத்காரன் மட்டும் இருந்தான்..

    என்ன சுந்தரா..அன்ப்பிச்சுட்டேனே

    சரி..எனக்கு எக்ஸ்ட்ரா பாக்கெட் வேணுமே அண்ணா

    உங்கப்பாவ யாரு இன்னிக்குக் கல்யாணம் வைக்கச் சொன்னா..எவ்ளோமுகூர்த்தம் தெரியுமா.. டிமாண்ட் இருக்கற அளவுக்கு சப்ளை இல்லையாம்.. மாடு நிறைய அனேகமா இந்த பட்ஜெட்ல வாங்குவாப்படியாம் தெரியுமோ..

    யோவ் என் அக்காக்கு க் கல்யாணம்யா இன்னிக்கு.நீ ஆவின் பட்ஜெட் பத்திப் பேசற. எனச் சொல்லிக்கொண்டிருக்கையில் புல்லாங்குழல் இசையில் தேன்,சர்க்கரை,பேரிச்சம்பழம் கலந்தாற்போன்ற ஒருகுரல் கேட்டது..

    ஹல்லோ..

    (அடுத்த போஸ்டில் பகுதி 2 தொடரும்)

  18. Likes Georgeqlj, RAGHAVENDRA liked this post
Page 7 of 337 FirstFirst ... 567891757107 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •