Page 94 of 337 FirstFirst ... 44849293949596104144194 ... LastLast
Results 931 to 940 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #931
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    வாசு சார்
    நைட் ஷிஃப்ட் முடிஞ்சு காலைலே வந்திருப்பீங்க...
    ஹப்பிற்கு வந்தவுடனே உங்களுக்கு ஒரு ப்ளெஸண்ட் சர்ப்ரைஸ்...

    அன்னை சொன்ன சொல் படத்தின் ஸ்டில்... இணையத்திலேயே முதன் முறையாக... அதுவும் உங்களுக்காக...

    அங்கே ஒருத்தர் சுனாமி ஊர்லேந்து பறந்து வரப்போறார் பாருங்க...

    ஆஹா... என்னா ஸ்டில்..

    ஓடம் பொன்னோடம்
    அது உன்னோடும் என்னோடும் ஓடும்
    ஓடட்டும் ஓடமென்ன இனி என்வாழ்வு உன்னோடு ஓடும்..

    என்ற பாட்டு நினைவுக்கு வருகிறது

    பொன்வண்ண நிலவதுவும் பூமியதைப் பார்த்தே
    ..பூஞ்சிட்டுக் கண்சிமிட்டும் கண்டதுண்டு நீரே
    எண்ணமெலாம் பொங்கிவர அழகுதனை ஏந்தி
    ..எழில்நிலவும் வான்பார்க்கக் கண்டதுண்டா நீவிர்
    கன்னமதில் கவிதைகளைப் படித்ததனால் காளை
    ..கண்முடிச் சொக்கித்தான் நிற்கின்றான் அன்றோ
    வண்ணமிலா படமுந்தான் இருந்தாலும் என்ன
    ..வாகாக உளமதைனைக் கிளர்த்திடுது அன்றோ..

    ம்ம் கொ. வை. ரவி நற நற.. ( ரொம்ப நேரம் தூங்காதடா..இளமேனி தாங்காது )

    நன்றி ராகவேந்திரா சார்..
    ..

  2. Thanks vasudevan31355 thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #932
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajeshkrv View Post
    vijaya T.Rajendar
    vijaya samundeeswari(Savitiri's daughter though she is not an actress )
    ரா ராஜேஷ் நற நற

  5. #933
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    Bhakthi - aadhi parasakthi

    Don't be content with the cover page of pesum padam !

    Here is a bhaktthi song from vedhaLa ulagam.

    aadhi parasakthi......

    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  6. Thanks vasudevan31355 thanked for this post
    Likes chinnakkannan, Russellmai, madhu liked this post
  7. #934
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    விஜய சந்திரிகா என்ன படமாக்கும்
    விஜய ஸ்ரீ
    எல். விஜயலட்சுமி
    விஜயலட்சுமி (விஷால் புகழ்!)
    விஜயலலிதா

    இன்னும் எத்தனை விஜய உண்டு.?
    விஜய நிர்மலா, விஜய சாந்தி பிடிக்காதா சிக்கா ?

  8. Likes vasudevan31355, rajeshkrv, Russellmai liked this post
  9. #935
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    வாசுஜி...

    நான் இன்னமும் வீராணம் குழாய்க்கு உள்ளேதான் இருக்கேன். அதனாலே காரைத் தள்ள வர மாட்டேன்.

  10. Likes vasudevan31355, rajeshkrv, Russellmai liked this post
  11. #936
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    madhunna

    malayalathai kalakkiya "Vijayasree"

    aprom Vijayalakshmi-1 (friends pugazh)
    vijayalakshmi -2(chennai 28)

  12. Likes vasudevan31355 liked this post
  13. #937
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    விஜய ஸ்ரீ, விஷால் விஜயலட்சுமி சொல்லிட்டேனே..பட் ஃப்ரெண்ட்ஸ் விஜயலட்சுமி சொல்லலை.. நல்ல நடிகை.. சான்ஸ் தானில்லை..

  14. #938
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    1986-ல் 'ஒக ராதா இடரு கிருஷ்ணலு' என்று தெலுங்கில் ஒரு படம் வெளியானது. முழுக்க முழுக்க வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் காமெடி. ஹீரோ யார் தெரியுமா. கமல். ஜோடி நம் எல்லோருக்கும் பிரியமான ஸ்ரீதேவிதான். இந்த நேரடி தெலுங்குப்படம் கமல், ஸ்ரீதேவி நடித்திருந்ததால் தமிழில் துட்டு பார்க்காமல் விடுவார்களா? தமிழில் 'டப்' செய்து வெளியிட்டு சுமாராக ஓடியது.

    இப்படத்திற்கு மிகப் பெரிய பலம் இளையராஜாவின் இசை. மனிதர் அசத்தியிருப்பார். அப்போதெல்லாம் இப்படத்தின் பாடல்கள் மீது மிக பற்றுதல் ஏற்பட்டு TDK 90 ஆடியோ கேசட்டில் ரெகார்டிங் சென்டரில் பதிவு செய்த ஞாபகம் மட்டுமல்லா...இன்று வரை அப்பாடலின் தரம் அந்த கேசட்டில் மெருகு குலையாமல் அப்படியே உள்ளது.

    இளையராஜா வரும் வரை தெலுங்கு டப்பிங் பாடல்களை ஈசியாக கண்டுபிடித்து விடலாம். ராஜா வந்து அப்படி கண்டுபிடிக்க இயலாத அளவில் ஓரளவிற்கு அந்தக் குறையை சரி செய்தார். வார்த்தை ஜாலங்களும் அதற்கேற்றார் போல் மாறின.

    முன்னமெல்லாம் இல்லாது போனா, பாருங்க... (ச்சூடுக்கு தமிழ்), அப்புறம் பிரேமம், பிரேமை, ஒ..பெண்ணே! இந்த மாதிரி நிறைய வார்த்தைகள் பிற்காலத்தில் மாறிப் போயின. சரி! அதை விடுவோம்.

    இந்தப் படத்தின் கற்கண்டுப் பாடல்களைப் பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.

    'பருவம் உருக இதயம் துடிக்க
    இனிய குழலில் யமுனை முழுதும் பொங்க
    அலை பொங்க
    இன்று பிருந்தாவனம் தன்னில் ஒண்ணா'

    ஜானகியும், பாலாவும் ஜோராப் பாடியிருப்பாங்க. கோபிகாஸ்திரி கோலத்தில் தாவணி அணிந்து ஸ்ரீதேவி அழகு இளமை. கமலும் சரியான இளமைத் துள்ளல். இதில் ஸ்ரீதேவி இடுப்பில் கயிற்றைச் சுற்றி அவரை பானை ஒன்றில் நிற்க வைத்து இந்த பூலோகக் கண்ணன் தயிர் கடைவது போல் கடைந்து வெண்ணெய் வேறு எடுத்துக் காட்டுவார். (அந்த ஜாலி காமெடி கமல் இப்போது எங்கே! இப்போது அவர் நடிக்கும் படங்களில் காமெடி என்பது மருந்துக்குக் கூட இல்லையே! எப்படியெல்லாம் நம்மை சிரிக்க வைத்த நாயகன்! ம்... சிங்கீதம், கமல் இணைவுக் கலக்கல்கள், கமல், ரவிக்குமார் கலக்கல்கள் காலம் சரியான காமெடி காலம். பஞ்சதந்திரம், பம்மல் கே.சம்பந்தம், தெனாலி போன்று கமல் நடித்து காமெடிகள் வராதா என்று மனம் ஏங்குகிறது)

    கோபிகாஸ்திரிகளுடன் கண்ணன் வேடத்தில் வி.ஜி.பி.கோல்டன் பீச்சில் கமல் புல்லாங்குழல் வாசித்து ஓடி வரும் போது வழியில் கிடக்கும் சாணத்தை காலணியில் மிதித்துவிட்டு அருகில் கிடக்கும் கல்லில் அதைத் தேய்த்து விடும்போது நமக்கு 'கிளுக்' கென்று சிரிப்பு வராமல் இருக்காது. அது போல கழுத்திலிருந்து இரு பக்கமும் தொங்கும் அங்கவஸ்திரத்தின் நுனியில் கலர்ப்பொடி வைத்து பறக்கவிட்டு தூசியில் தும்முவது செம வேடிக்கை.

    பெரிய புல்லாங்குழல் செட்டில் அமர்ந்து ஆடியபடியே கமலும், ஸ்ரீதேவியும் குச்சி ஐஸ் தின்னுவதும் காமெடியே. காமெடியில் ஸ்ரீதேவி கமலுக்குத் தோதான இணை.

    'முத்தம் வைத்தாலும் மடியில் விழுந்தாலும்
    நித்தம் கள்ளூறும் ஸ்ரீதேவியே'

    என்று பொருத்தமாக தேவியிடம் பாடுவது போல வார்த்தைகளை சாமர்த்தியமாக சேர்த்திருப்பார் பாடலாசிரியர். தமிழுக்கு தமிழுமாச்சு...கமல் ஸ்ரீதேவி ஜோடியை புகழ்ந்ததுமாச்சு.

    ஸ்ரீதேவியிடம் கோலாட்டக் கழி வாங்கி கீழே வாட்டமாக வைத்து தன் கோலாட்டக் கழியால் அதை அடித்து கிட்டிப்புல் விளையாடுவார் கமல் செம ஜாலியாக. அடித்த புள் எங்கே போனது என்று தேடுவார் வேற. இந்த மாதிரி சின்ன சின்ன விஷுவல் காமெடி செய்வதில் அசகாய சூரர் கமல். (கமல் சார்! இந்த மாதிரி ஜாலியான ஒரு படம் கொடுங்கள் ப்ளீஸ்!)

    பாடலில் அழகான தமிழ் வார்த்தைகள் தெலுங்கு என்று நம்ப முடியாத அளவிற்கு. கமல், ஸ்ரீதேவி என்பதால் பாடலின் நடனத்திற்கு சொல்லவும் வேண்டுமோ!

    வெகு அழகான பாடல்.



    அதே பாடலை இப்போது ஒரிஜினல் தெலுங்கில் பாருங்கள்

    'மதுர முரளி ஹ்ருதய ரவளி' (பருவம் உருக இதயம் துடிக்க) பாலாவும், ஜானகியும் தெலுகில்.

    Last edited by vasudevan31355; 23rd October 2015 at 12:13 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  15. Likes madhu, Russellmai, RAGHAVENDRA liked this post
  16. #939
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அடுத்து கமலும், ஸ்ரீதேவியும் ஆடும் செம ஆட்டம்.

    ராஜாவின் உற்சாக கொப்புளிக்கும் இசை. சும்மா தூள் பறக்கும். தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்ப பாஸ்ட் பீட். அதே பாலாவும், ஜானகியும்.

    எனக்கு ரொம்பப் பிடித்த பாட்டு. கேசெட்டே தேய்ந்து போய் விட்டது.

    'ஜினுக்கு ஜினுக்கு ஜினுக்கு சிட்டான் ஜினுக்கு ஜினுக்கு' என்று பாலாவும், ஜானகியும் அதி வேகமாக பாட ஆரம்பிப்பார்கள். உடனே ராஜா தரும் அந்த உற்சாக இசை....வாவ்! சான்ஸ் நஹீ.

    'பச்சை மணி பவழ மணி ஓம் மேனி
    கட்டழகு வட்ட முக ராணி
    குண்டுமல்லி பட்டுமல்லி ஒன் கண்ணு
    கொஞ்ச வந்தா ஒட்டிக் கொள்ள எண்ணு
    வாம்மா! கன்னிக் குயிலே! நான்தான் மாமா
    ஏதோ காதல் ஜுரம் கண்டால் வரும்'

    சும்மா பாலா பிய்த்து உதறுவார்.

    ஜானிகியும் செம ஈடு.

    'பட்டு மெத்த பஞ்சு மெத்த பூ மேனி' என்று.

    ஸ்ரீதேவி என்ன அழகாகச் சிணுங்குவார் தெரியமா!

    'தத்துகின்ற தத்தை இது மெத்தையிட்டு
    ஒட்டி உறவாட நெஞ்சு வாட'

    'அச்சடிச்ச சித்திரம் போல் இங்கொருத்தி
    கண்ணோடு கண் பாட காதல் தேட'

    என்ற சரண வரிகளுக்கு ராஜா அலை அலையாய் அவ்வளவு அழகாக டியூன் போட்டிருப்பார்!

    அப்படியே கமல் பாலா குரலில்,

    'நெஞ்சிரண்டு இஷ்டமானது
    இதில் யாருக்கொரு கஷ்டமானது'

    என்று கேட்டு வைக்க,

    (கமல், ஸ்ரீதேவி காதலைக் காண சகியாமல் ஒளிந்து நின்று அவர்களின் காதல் களியாட்டத்தை வேடிக்கைப் பார்க்கும் ராவ் கோபால் ராவ். இது தெரிந்து வேண்டுமென்றே அவரைக் கலாய்க்க கமல் தேவி நெருக்கம்)

    ஆஹா... ஜாலியோ ஜாலி!

    குத்துன்னா செம குத்து. ஆனா டீசென்ட் குத்து.

    ராஜா ராஜாதான்.

    அப்புறம் ஸ்ரீதேவி வயிறு தள்ளி ஐந்தாறு குழந்தைகளுடன் வயதான மாதிரி இடுப்பு பிடித்து நடக்க, (அபாரம் ஸ்ரீதேவி! என்னமாய் பசங்களை மேய்த்துக் கொண்டு, அதே சமயம் டயர்டாக தள்ளு வண்டியில் ஒரு குழந்தையை வைத்து தள்ளிக் கொண்டு நடந்து வருகிறார்!) கமல் அதே இளமையுடன், குறும்புடன், கழுத்தில் தொங்கும் பிளாஸ்க்குடன் ஒளிந்திருந்து பார்க்கும் ராவைக் கலாய்க்க பேன்ட்டை லூஸ் செய்து உள்ளாடையில் ஏதோ காட்டி வெறுப்பேற்ற அய்யோ! மதுண்ணா! சிரிச்சி சிரிச்சி கண்ணுல ஜலம் வந்துடுச்சு. சின்னா! நல்லா என்ஜாய் பண்ணி பாருங்க.

    Last edited by vasudevan31355; 23rd October 2015 at 11:31 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  17. Likes Russellmai, RAGHAVENDRA liked this post
  18. #940
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ஹரே ராதா ஹரே கிருஷ்ணா படத்தில் இன்னொரு அட்டகாசமான பாட்டு ஒன்னு உண்டு.

    பாலா, ஜானகி பாடும் இன்னொரு அமர்க்களம்.

    யாரம்மா தொட்டதோ
    ஏன் சும்மா துள்ளுதோ
    சிறு இடை உன் கொடியிடை

    ஓயாம எங்குதோ
    உன்னைத்தான் தேடுதோ
    துடிக்குதே ஹோய் கொதிக்குதே

    கையேதும் கொய்யாத பழமோ ஹோய்
    கொத்தாது கிளி என்றும் விடுமோ
    கடிச்சே பார்க்கும் பொழுதோ

    சும்மாதான் கும்மாளப் பாட்டோ ஹோய்
    சிறு பூவில் தேனுண்ணும் வண்டோ
    இது போல் இது போல் உண்டோ

    இளையராஜாவின் மறக்க முடியாத இன்னொரு 'டப்' பாடல்.

    http://shakthi.fm/ta/album/show/84b86888

    தெலுங்கில் ஆடியோ மட்டும்.

    Last edited by vasudevan31355; 23rd October 2015 at 01:03 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  19. Likes Russellmai, RAGHAVENDRA liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •