Page 5 of 337 FirstFirst ... 345671555105 ... LastLast
Results 41 to 50 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #41
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    மின்மினி கீதங்கள் !!
    இரவில் ஒளிரும் சிறகுகளின் துணைகொண்டே இறைவன் படைப்பதிசயமான மின்மினிப் பூச்சிகள் இரை தேடிச் செல்கின்றன!!
    இந்த மின்மினிகளுக்கு ஒப்பான கண்மணிகளைத் தேடும் கிண்கிணிகள்!!






    [url]https://www.youtube.com/watch?v=Yoo_WkRIgYU
    Last edited by sivajisenthil; 18th September 2015 at 07:51 PM.

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #42
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு - முதலில் எட்டாயிரம் , எட்டமுடியாத எண்ணிக்கை - இந்த இலக்கை நீங்கள் அடைந்ததிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் - ஒவ்வொரு பதிவும் பாதுக்காக வேண்டியவை - மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டுபவை . இதற்கு பின் எவ்வளவு உழைப்பு ! ஆத்மார்த்தமான கருத்துக்கள் - அலுவுலகத்தில் ஏற்பட்ட மனகசப்புக்களையும் ஒரு புறம் ஒதுக்கி வைத்து , தன்னை முழுவது ஈடுபடுத்திக்கொண்டு பதிவு போடுவது என்பது சாதாரணமான விஷயம் அல்ல - மிகுந்த மன உறுதி வேண்டும் . உங்கள் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தி பதிவுகளை இடுங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .

    பாலாவின் பதிவுகளில் இன்று சிகரம் /பொட்டு வைத்தது போல சுமதி என் சுந்தரியின் பாடல் - உங்கள் வர்ணனை 25 வயதாக தெரியும் ந .தி யை 18 வயதுக்கும் குறைவாக ஆக்கிவிட்டது . இனி வரும் பதிவுகளில் இந்த பதிவில் உள்ள அளவிற்கு ஈர்ப்பு சக்தி இருக்குமா என்று தெரியவில்லை . பாலாவின் பாடல் அருமை என்றால் அதை தனக்குத்தான் என்று மாற்றிக்கொண்ட ந .தி யின் நடிப்பு , பாடலுக்கு வெகு பொருத்தமான இசை - எதிலுமே குறை இல்லாத பாடல் என்றால் இந்த பாடலைத்தான் சொல்ல வேண்டும். மிகவும் ரசித்து படித்தேன் - மிக்க நன்றி வாசு ..

  5. #43
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    கார்மேகத்தினூடே மறைந்து தோன்றும் நிலவாட்டம் ரம்மியமே !

    மோகனப் புன்னகை சிந்திடும் நிலவே மேகத்திலே நீ மறையாதே.... ! வணங்காமுடியில்.....


  6. Likes Russellmai liked this post
  7. #44
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    சி.செ..

    இந்த மின்மினிக்குக் கண்ணில் ஒரு மின்னல் வந்தது என் கண்ணே

    அஞ்சலி அஞ்சலி அஞ்சலி மின்னும் மின்மினி மின்மினி மின்மினி

    மின்சாரம் இல்லாமல் மிதக்கின்ற தீபம் போல்
    மேனி கொண்ட மின்மினிகள் அதிசயமே

    **


    இன்னொன்று ஒரு படம் தான் நினைவுக்கு வருகிறது.,. கொஞ்சம் பத்துவருடம் இருக்குமா..
    *
    அவள் இளம்பெண்.. பெற்றோர்களால் கல்யாணம் நிச்சயிக்கப் பட்டு கல்யாண நாளை எதிர் நோக்கி இருப்பவள்..அப்போது வருகிறான் வீட்டிற்குஒரு வாலிபன்..

    கலகலப்புக்கும் சுறுசுறுப்புக்கும் சொந்தக்காரனான அந்த வாலிபனின் தந்தை அந்தப் பெண்ணின் தந்தையின் நெருக்கமான நண்பர்..

    சிலதினங்களில் அந்த வாலிபனுக்கு வேலை கிடைக்கிறது.. கல்யாணப் பெண்ணின் எண்ணத்தில் அவன் எப்படியோ விழுந்துவிடுகிறான்..அவனது பேச்சு, நடத்தை எல்லாம் நல்லவிதமாக ஆக்கி முதலில் நட்பாக பின் எப்படியோ தெரியாமல் பூக்கும் பூ ஒன்றிருக்கிறதேகாதல்..அதுவே அழையா விருந்தாளி போல் அவள் மனதுள் நுழைந்து சப்பணம் போட்டு உட்கார்ந்துகொண்டுவிடுகிறது..

    இந்தப் பெண்கள் இருக்கிறார்களே.. காதல் வயப்படும் வரை தான்கொஞ்சம் குழம்புவார்கள், வெட்கம் சோகம் நாணம் எல்லாம் கொண்டு தன்னுணர்வுகளை பின்னுக்கு இழுத்து உயரத்தில் வைத்திருப்பார்கள்..காதல் வயப்பட்டால்..அம்புட்டு தான்.. மடைதிறந்த வெள்ளம் தான்..

    இவளுக்கும் பொசுக்கென வெளிப்பட்டு ஹீரோவிடம் சொல்கிறாள்..

    அரே பையா.. நான் உன்னைக் காதலிக் நீ என்னைக் கண்டிப்பாகக் காதலித்துக் கல்யாணம் செய்யவேண்டும் புரிஞ்சுதா..

    வாலிப ஹீரோவுக்கோ தயக்கம்.. அவனுடைய தந்தை சொல்லியனுப்பியஹ்டே அது தான்.. நீ எதுவும் என் நண்பனின் மனம் நோகச்செய்யக் கூடாது என்று

    மறுத்து அவள் வீட்டைவிட்டே கிளம்பி விடலாம் என்று பார்த்தால் அவனால் முடியவில்லை..

    சூழ் நிலையில் அவனும் அவளூம் ஒரு கல்யாண ஃபங்க்ஷனுக்குச் செல்லவேண்டி வருகிறது..

    அங்கென்ன.. வரவேற்பில் பாடலும் பாடப்படுகிறது.. கல்லும் கசியும் வண்ணம் அந்தப் பெண் பாடுகிறாள்..

    ஒரு தடவை சொல்வாயா
    உன்னை எனக்குப் பிடிக்கும் என்று
    ஒரு பார்வை பார்ப்பாயா
    உன்னை எனக்கு பிடிக்கும் என்று
    காதல் ஒரு புகையைப் போல
    மறைத்து வைத்தால் தெரிந்துவிடும்
    காதலில் தான் பூக்கள் மோதி
    மலைகள் கூட உடைந்துவிடும்
    உன்னை ஒளிக்காதே என்னை வதைக்காதே
    என்றும் இதயத்தில் இலக்கணம் கிடையாதே

    அவனும் பாடுகிறான்..

    நதியில் தெரியும் நிலவின் உருவம்
    நதிக்குச் சொந்தமில்லை
    நினைப்பதெல்லாம் நடக்கும் வாழ்க்கை
    யாருக்கும் அமைவதில்லை
    உனக்கும் எனக்கும் விழுந்த முடிச்சு
    தானாய் விழுந்ததில்லை
    உலக உருண்டை உடையும் போதும்
    காதல் உடைவதில்லை
    மின்மினி தேசத்து சொந்தக்காரன்
    விண்மீன் கேட்பது தவறாகும்
    வரலாற்றில் வாழ்கின்ற காதல் எல்லாம்
    வலியோடு போராடும் காதல் தானே

    *

    இதில்

    மின்மினி தேசத்துச் சொந்தக்காரன்
    விண்மீன் கேட்பது தவறாகும்

    வரி அப்போதே நோட் பண்ணியிருந்தேன் சி.செ..வெகு அழகான வரிகள்..

    பாடல் வரிகள் வைரமுத்து என நினைக்கிறேன்.. மிகச் சரியாக அந்தவாலிபனின்வேதனை வெளிப்பட்டிருக்கும்..
    *
    படம் வசீகரா.. விஜய் ஸ்னேகா..





    *
    Last edited by chinnakkannan; 18th September 2015 at 09:06 PM.

  8. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellmai, eehaiupehazij liked this post
  9. #45
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    *

    தர்ம சங்கடம் என்றால் என்ன..

    *
    ஒரு அருமையான பாடகர்..எல்லாவற்றிலும் எக்ஸ்பர்ட்.. உதாரணம் இவர் என்று சொல்லும் அளவுக்குப்பிரபலமான ஆள்..

    எல்ல்லோருக்கும் ஒரு வடிகால் தேவைப்படும்..அதுவும் ஜீனியஸாக இருப்பவர்களுக்கு..

    இவருக்கு அழகான குடும்பம் மனைவி மீது ப்ரியம், ஆனால் இசை ரசிகை அவள் மீதும் ப்ரியம்…. எவ்ளோ ஞானம் சங்கீதத்தைப் பற்றி என உள்ளுக்குள் வியப்பு..

    ஒரு நாள் பொதேல் என அவளிடம் விழ, அவளும் கொஞ்சம் சில நாள் யோசித்து அவரை அங்கீகரிக்க…

    இவருக்குக் குடும்பமும் வேண்டும், இவளும் வேண்டும்

    இவர் வீட்டம்மாவிற்கு வீட்டில் வார்க்கும் தோசை, பாடகரின் உடல் நலன் அது மட்டுமே உலகம்..

    அதில் இன்னொருத்தி வருகிறாள் எனத் தெரியும்போது முடிவெடுக்கிறாள்..

    என்ன முடிவு.. பாடகர் பாடிக்கொண்டிருக்கிறார்..வருகிறேன் என்று சொன்ன மனம் கவர்ந்தவளைக் காணோம்..நாற்காலி காலியாயிருக்கிறது.. பாடவும் ஆரம்பித்தாகி விட்டது.. ஒரு வேலையாள் ஓடோடி வந்து காதில் ஏதோசொல்ல.. ஆரம்பித்த பாட்டை நிறுத்தவில்லை அவர்..

    கண்களில் மட்டும் வெள்ளம்..

    பாடுவது ஆனந்த நடனம் கேட்டசேதியோ வேறாயிற்றே.. தர்ம சங்கடம் என்பது இது தானோ..





    கொஞ்சம் குட்டிப் பாட்டாக இருந்தாலும் வெகு டச்சிங்க்..

  10. #46
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    ananda natanam

    chinnakkaNNan: Here is a song about Siva's dance.

    aananda natanam aadinaar.......

    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  11. Likes madhu, eehaiupehazij liked this post
  12. #47
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    ஆனந்த நடனம் continues...


  13. Thanks Russellmai thanked for this post
    Likes eehaiupehazij liked this post
  14. #48
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    இசையும் கதையும்..

    *

    சின்னக் கண்ணன்.

    *

    கலர்ஸ்..

    *

    ஸினாப்ஸிஸ்..

    *
    1. நான்

    2 அவள்

    3. பிரச்னைகள் உருவாகும் சூழல்

    4 கோபம் ஊடல்

    5 கல்யாணத் தடை வருமோ

    6 சிக்கல்கள் தீர்த்தது யாரோ

    7 திருப்பங்களை வாழ்க்கை என மாற்றிவிடலாமா

    8 வண்ணம் மாறுது நெஞ்சம் மாறுமா..

    9 என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே

    10 முடிவுரையா முன்னுரையா.. அல்லது அத்தியாயங்கள் தொடருமா யானறியேன்..இப்போதைக்கு இவ்வளவு தான்..
    Last edited by chinnakkannan; 19th September 2015 at 01:01 AM.

  15. #49
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    *
    இசையும் கதையும்..

    *

    சின்னக் கண்ணன்.

    *

    கலர்ஸ்..

    *
    1. நான்.
    ****************.
    *

    ஹாய்…..

    ஏன் உங்கள் புருவங்கள் மேல் போகின்றன..

    அது சரி நாலு நாள் தாடியும் கொஞ்சம் சிவந்த கண்களும் குமுறும் உள்ளமும் கொண்டு ஒரு நடுத்தர வயது உருவம் டபக்கென ஹாய் சொன்னால் ஆகத்தான் செய்யும்..

    இதுவரை நான் எப்படி என்று என்னைப் படைத்தவனுக்கே தெரியாது.. என்னை எழுதுபவனைச் சொல்லவில்லை.. பிரம்மனைச் சொல்கிறேன்.

    என் வாழ்க்கையில் அடித்த சுழல்களை, துன்பங்களை, சோகங்களை, அழுகைகளை எல்லாம் நான் பேசப்போவதில்லை..இப்போதும் துன்பத்தில் மனவருத்தத்தில் இருக்கிறேனே அதைப்பற்றியும். சொல்லப்போவதில்லை.. இன்பம் என்றால் எதிரொலிக்கும் இடத்தில் கத்தி கத்தி.. நான் ஹாப்பி எனச் சொல்லலாம்..மற்றவர்களும் கேட்கலாம்.. துயரங்கள் என்பது மனதுக்குள் புதைத்துக்கொள்வது தானே … மீனழுத கண்ணீர் போல..பழைய உவமையோ..

    கொஞ்சம் யோசித்துப் பார்த்தால்…

    கருவறையுள்ளே சிறு சிசுவாகத் தோற்றமுங்கொண்ட கணமென்ன
    கவிதைச் சுவையாய் முதன்முறை மழலையில் அம்மாவென்ற கணமென்ன
    சரசரவென்றே செல்லும் பாம்பைத் தள்ளியோடிய கணமென்ன
    சலசலவென்றே சிரித்திடுமாற்றில் சில்லென மூழ்கிய கணமென்ன

    பரபரவென்றே தெருவிலே ஓடிப் பாவையர் பார்த்த கணமென்ன
    படபடவெனவே தாளினில் கிறுக்கி அவரிடம் கொடுத்த கணமென்ன
    கரகரவெனவே காதிலே நரை அழையாமல் வந்த கணமென்ன
    கலகலப்பெல்லாம் குறைந்தே ஈசன் நினைப்பெலாம் வந்த கணமென்ன…

    ஹல்லோ..பயந்துட்டீங்களா..

    இது என் இளமைப்பருவத்தில் நான் எழுதிப்பார்த்தது.. இப்போ எனக்குக் காதில் நரையெல்லாம் வரவில்லை.. ஐயாம் ஸ்டில் யங்க்..எஸ்..

    இதுல பாருங்க.. நான் இப்படித் தான்.. கலகலப்பானவன்.. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதவன்..ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்ட் ஆசாமி..பாருங்கள் அறிமுகப் படுத்திக்கொள்ளாமலே பேச ஆரம்பித்துவிட்டேன்..

    முதன் முறையாக சீரும் சிறப்புமாகத் தான் பிறந்தேன்..வைணவக் குடும்பம்..என் அப்பா தீவிர பெருமாள் பக்தர்.. பிறந்த இடம் மதுரை தான்..

    என்னை வரப்ரசாதமாகவெல்லாம் கொஞ்சவில்லை..பத்தோடு ஒண்ணு பதினொண்ணு என்பது போல் மூன்றோடு ஒன்று நாலு.. ஏற்கெனவே இரண்டு அக்கா ஒரு அண்ணன்.. ஸோ கடைக்குட்டி..

    இத்துடன் போதும் என நினைத்தாரோ என்னவோ புண்ணியாவாசனத்தின் (பெயர் சூட்டும் செரிமனி) போது அவர் அம்மாவிடம் (என்பாட்டி) சுந்தர ராஜ ஸ்ரீனிவாச நவனீத கிருஷ்ணன்னு பேர் வச்சுடும்மா எனச் சொல்ல பாட்டி அவரை முறைத்து மனதுக்குள் நற நறத்து தரையில் விரிந்து சிரித்துக்கொண்டிருந்த நெற்கோலத்தில் என் முழுப்பெயரையும் எழுதி என்னை தொப்பென்று போட்டு “இவளே ஒரு திக்கான காப்பி கொண்டா” எனக் கேட்டு வாங்கி குடித்துவிட்டு ஆசுவாசப் படுத்திக் கொண்டார்.. நான் வீறிட்டு அழுதேன்.. கொய்ங்க் என சர்க்கரையை எடுத்து வாயில் தீட்டிவிட்டு விட்டனர்..

    அப்புறமென்ன செல்லமே செல்லம் சின்னக்குட்டி பட்டுக்குட்டி என வரும் சினிமாப்பாட்டை போல எல்லாரும் என்னைச் சீராட்டிப்பாராட்ட நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து கல்லூரியில் சேரும் காலகட்டமும் வந்தாயிற்று எனக்கு..

    எஸ்.. நான் கட் கட் கட்டிளங்காளை.. நீஈஈஈளமான பெல்பாட்டம் பேண்ட், சட்டை அணிந்தால் முதல் இரண்டுபட்டன் கள் கழட்டி விட்டு இளவயது வாலிபர்கள் அலைந்து திரிந்த காலம் அது எனலாம்..அல்லது அவ்வண்ணம் சினிமாவில் காட்டிய காலம் எனலாம்..

    மதுரையில் எனக்குப் பிடித்த பலப் பல விஷயங்களில் உணவுவகைகளில் முதலாவது சித்திரை வீதியில் இருக்கும் நாகப்பட்டணம் நெய்மிட்டாய்க்கடையில் கிடைக்கும் அல்வா.. இரண்டாவது இரண்டாவது..என்னிதயத்தில் இனிக்கும் அவளின் கனி இதழ்..

    எஸ் நான் காதலில் விழுந்துவிட்டேனே மம்மி…

    அவளது அப்பா ரசனைக்காரர்… எனில் அவளுக்கு ப் பெயரும் இட்டுவிட்டார் ரசனையுடன்.. மைவிழி..

    ஓ அவ பேர் சொல்றப்பத் தான் என் பேரும் நான் சொல்லலைங்கறது என் நினைவுக்கு வருது..அதாவது ஷார்ட்டான என் பேரு..சுந்தரா.. நைஸ் இல்லியா..

    ஹச்சோ நான் என்ன செய்வேன் நினைவு பறந்து அவள் அழகில் என் நெஞ்சம் மிதக்கிறதே.. அந்தப் பாட்டு பாடிக்கொள்ளட்டுமா…





    கலையோ சிலையோ
    இது பொன் மான் நிலையோ
    பனியோ பூங்கிளியோ
    நிலம் பார்க்க வந்த நிலவோ..

    ஆடாத தேர் கோலம் தடை போட்டதோ
    அறியாத உள்ளம் என்றும் மலராகுமோ
    வடிவமோ கன்னிக்கோலம்
    வாலிபம் பூமழை..

    இப்படித் தான் அவ இருந்தாங்க..

    அவளது அறிமுகம் வரும் திங்கள் சொல்கிறேன்..அதுவும் என்னவெனில் நான் முழி முழி என முழித்துக்கொண்டிருந்த தருணத்தில் சிறகுகள் இல்லாத சின்னத் தேவதையாக வந்து எனக்கவள் அருளிய கதை..

    அப்புறம், வரட்டா...

    (தொடரும் – வாரம் இரு முறை)

  16. Likes madhu, eehaiupehazij liked this post
  17. #50
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ராஜ்ராஜ்சார்..நடனம் ஆடினார் சுதா ரகு நாதன் குரல் பாடல் வெகு அழகு ரசித்துக் கேட்டேன் ..மிக்க நன்றி

    ராகதேவன்.. ஆனந்த நடனம் தொடர்ந்தமைக்கு நன்றி..மோகன்லால் மோனிஷா.. இப்போது தான் பார்க்கிறேன் கேட்கிறேன்..மிக்க நன்றி..வெகு அழகிய பாடல்ங்க..மோனிஷா தானே.. ஆண்டவன் சீக்கிரம் அவரை எடுத்திருக்க வேண்டாம்..ம்ம்..

    சந்தோஷமான கர்னாடிக் நடனப் பாடல்கள் என்று பார்த்தால் எனக்கு இப்போது நினைவுக்கு வருவது சப்தபதி தான்..

    நெமிலிகி நெர்ப்பின நடதளிரே... சபிதா பொம்மிடிப்பட்டி.. நடுவில் குழலோசை ஊடுருவ நின்று அகங்காரம் அழகு கொண்ட மயிலாய் நடைபயிலும் அழகு..



  18. Thanks raagadevan thanked for this post
    Likes eehaiupehazij liked this post
Page 5 of 337 FirstFirst ... 345671555105 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •