Page 185 of 337 FirstFirst ... 85135175183184185186187195235285 ... LastLast
Results 1,841 to 1,850 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #1841
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Belly Dancers!

    Training the belly for dance is a cumbersome task of body art and science!
    Dancing to the tune with rhythm has been a masterly art for these belly dancers!
    A fantastic belly dance can be enjoyed in From Russia with Love /Goldfinger starring Sean Connery / The Man with the Golden Gun with Roger Moore as James Bond 007!
    In Tamil it has been a rare event to witness such a belly dance....remember ammammaa keladi thozhi....!?







    Last edited by sivajisenthil; 8th January 2016 at 11:24 PM.

  2. Thanks Russellmai thanked for this post
    Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1842
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    Bhakthi - Harichandra 1968

    From Harichandra(1968)

    kaasiyil vaazhum karuNaik kadale kadaikkkaN paaraai........

    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  5. Likes Russellmai liked this post
  6. #1843
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    MArma veeran dubbed in hindi as Piya milan

    here is a fantastic number by PS in hindi (dance by Vaijayanthimala)


  7. Likes Russellmai liked this post
  8. #1844
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy: Dinamani

    டி.ஆர். ராஜகுமாரி: 1.செக்ஸ் அப்பீள்!



    1941. பனிக்காற்றோடு பவனி வரும் தை மாத வெயில். ஆற்றங்கரை மரங்கள் கூடுதல் குளிர்ச்சியை வீசின. அதன் நிழலில் ஆயிழைகளின் மாநாடு.வீட்டுக்குப் போக மனமில்லாமல் ஒன்று கூடி களித்தார்கள். இடையில் குடத்தோடு அசைந்தாடி இளம் சிட்டுகள் மெல்ல நடை பழகினர்.

    ‘நீ என்ன தான் ஒயிலா நடந்தாலும் அவளை மாதிரி இல்லடி. அவ இடுப்புல குடத்தோட எத்தனை அழகு சொட்ட வர்றா தெரியுமோ...! ’

    ‘என்னோட அண்ணா இத்தோட நாற்பது தடவைக்கு மேலே ‘கச்ச தேவயானி’ பார்த்துட்டான்! ’

    ‘என் அண்ணா மட்டும் என்ன குறைச்சலாவா பார்த்துருக்கான்...? படிப்பை மொத்தமா மூட்டை கட்டி வெச்சிட்டான் ... சதா ராஜகுமாரி... ராஜகுமாரிங்கிற ஜெபம் தான். ’

    சென்னை ராஜதானி என்கிற பாரதத்தின் பாதி தேசம் முழுமையும், கையில்லா ரவிக்கையில் (ஸ்லீவ் லெஸ்) கவர்ச்சியாகத் தோன்றிய டி.ஆர். ராஜகுமாரியின் திருநாமம் சொல்லி மகிழ்ந்தது.



    ‘கச்ச தேவயானி’யில் வெகு ஜோராக ‘யானை சவாரியும்’ செய்திருப்பார் டி.ஆர்.ராஜகுமாரி.

    பட்டு மெத்தையில் துயில் கொண்ட பாக்கியவான்கள்... காட்டு பங்களா மைனர்கள்... வயல் வரப்போர கயிற்றுக் கட்டில் மிராசுகள், கட்டாந்தரையில் உடம்பை சாய்த்த கூலிகள்... என ஒருவர் பாக்கி இல்லை. மீசை முளைத்த எல்லாரும் ‘ராஜகுமாரி மோகம்’ கொண்டு திரிந்தனர்.

    அதுவரையில் தமிழர்கள் காணாத திருநாள்! திரை பிம்பங்களாலும் இளமையை வீரிட்டெழச் செய்ய முடியும் என்பதை ஆண்கள் முதன் முதலாக உணர்ந்தார்கள்.

    ராஜகுமாரி பற்றி அறிந்து கொள்வதற்காகவே எழுத்து கூட்டிப் பத்திரிகைகளை வாசித்தனர் படிக்காத பண்ணையார்கள்.

    ‘டி.ஆர். ராஜகுமாரியின் முழு பெயர் ‘தஞ்சாவூர் ரங்கநாயகி’ ராஜகுமாரி. 1922 மே 5 - வெள்ளிக்கிழமை அன்று பிறந்தவர்.

    கலைகளில் கொடி கட்டிப் பறந்த ‘தஞ்சை குஜலாம்பாளின்’ குடும்ப வாரிசு! ரங்கநாயகி - ராஜகுமாரியின் தாயார், மற்றும் தஞ்சை குஜலாம்பாளின் இரண்டாவது மகள்.’

    என்கிறத் தகவல் தெரிந்தவர்கள் உள்ளம் பூரித்துப் போனார்கள்.

    நிராகரிக்கப்பட்டவர்கள் நிகழ்கால வரலாறாவது... கோடியில் ஓரிருவருக்கே கிட்டும் அதிர்ஷ்டம்! டி.ஆர். ராஜகுமாரியும் எடுத்த எடுப்பில் ஏற்கப்படாமல் தூக்கி எறியப்பட்ட ஏந்திழை!

    கே.அமர்நாத் - முதல் ஸ்டண்ட் சினிமா ‘மின்னல் கொடி’யை உருவாக்கியவர். இயக்குநர்களின் யுகத்தைத் தொடங்கி வைத்தவர். அன்றைய நட்சத்திரங்களின் சிம்ம சொப்பனம். அவரிடம் டி.ஆர். ராஜகுமாரி நடிப்பதற்குச் சந்தர்ப்பம் கேட்டுச் சென்றார்.

    உனக்கு அழகும் இல்லை. நடிப்பும் வராது என்று விடை கொடுத்தார் கே. அமர்நாத்.

    டி.ஆர். ராஜகுமாரியின் சித்தி எஸ்.பி. எல். தனலட்சுமி சினிமா ஹீரோயின். ஹாலிவுட் டைரக்டர் எல்லிஸ் ஆர். டங்கன் இயக்கிய படம் ‘காளமேகம்’. அதில் நாதஸ்வர மேதை திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளைக்கு ஜோடியாக நடித்துக்கொண்டிருந்தார்.

    தனலட்சுமி ‘ராஜாயி’யை டங்கனிடம் அறிமுகப்படுத்தி வாய்ப்பு கேட்டார்.

    ‘கருப்பு ரோஜா’ ராஜாயியை காமெடி ரோலில் நடிக்க வைப்பதாகக் கூறினார் டங்கன்.

    ராஜாயியும் தனலட்சுமியும் ஏமாற்றத்தில் அதிர்ந்தார்கள். நாயகி அந்தஸ்தை மாத்திரமே அவர்கள் நாடிச் சென்றிருந்தனர்.

    ‘குமார குலோத்துங்கன்’ படத்தைத் தயாரித்த ‘டெக்கான் சினிடோன்’ ராஜாயியை ஹீரோயின் ஆக்கியது. சி.டி. கண்ணபிரான் - டி.ஆர்.ராஜகுமாரியின் முதல் கதாநாயகன்.

    ‘குமார குலோத்துங்கன்’ படத்தில் நடிக்கும் போது எனக்கு ராஜலட்சுமி என்று பெயர். வீட்டில் செல்லமாக ராஜாயி என்று அழைப்பார்கள். அந்தக் காலத்தில் திருமதி டி.பி. ராஜலட்சுமி பிரபலமாக இருந்தார்.

    எனவே ‘குமார குலோத்துங்கன்’ தயாரிப்பாளர் ராஜாராவ் எனக்கு ராஜகுமாரி என்று பெயர் வைத்தார். அந்தப் பெயரே நிலைத்தது. நல்லதொரு புகழையும் எனக்கு வாங்கிக் கொடுத்தது. குமார குலோத்துங்கன் முதலில் வெளிவரவில்லை என்பதில் எனக்குக் கொஞ்சம் வருத்தம்.’- டி.ஆர். ராஜகுமாரி.

    குமார குலோத்துங்கன் நீண்ட காலம் முடங்கிக் கிடந்தது. டி.ஆர். ராஜகுமாரியின் இரண்டாவது டாக்கி ‘மந்திரவாதி’. நேஷனல் மூவிடோன் படைப்பு. மார்க்கோனி என்கிற இத்தாலிய இயக்குநர் டைரக்ட் செய்தார். ராஜகுமாரிக்கு இணை எஸ். டி. சுப்பையா.

    தடங்கல்களின் தாயகத்தில் இருந்தவருக்கு சித்தி மூலம் சொர்க்கத்தின் தாழ்ப்பாள் திறந்தது.

    தனலட்சுமியைத் தனது படத்துக்காக ஒப்பந்தம் செய்யச் சென்றார் கே. சுப்ரமணியம். வாய்ப்பு வாசல் தேடி வந்திருக்கிற பரவசம்! தனலட்சுமியின் குரலில் உற்சாகத்தின் ஆனந்தத் தாண்டவம்!

    ‘அடியே ராஜாயி... சீக்கிரமா காபி கொண்டு வா...’ என்றவர் அக்கால வழக்கப்படி தாம்பூலத்தட்டையும் இயக்குநர் அருகே நகர்த்தினார்.

    காபியை ஏந்தி வந்த காரிகை ராஜாயி - சுப்ரமணியத்தின் கண்களில் சுடர் விட்டுப் பிரகாசித்தார்.

    கே. சுப்ரமணியம் என்கிற கலைச் சிற்பிக்கு மாத்திரமே தெரிந்திருந்தது... அந்தப் பூவிலும் வாசம் உண்டு என்று!

    இனி தனலட்சுமி தேவையில்லை. ‘ராஜாயியே நாயகி’ என்கிற முடிவு டைரக்டரின் நெஞ்சை நிறைத்தது.



    கிண்டி வேல் பிக்சர்ஸ் ஸ்டுடியோ. அரிதார நிபுணர் ஹரிபாபு. அவரிடம் ராஜாயிக்கு ஒப்பனை செய்ய உத்தரவிட்டார் சுப்ரமணியம்.

    புதுமுகத்தைக் கண்டதும் எகிறினார் ஹரிபாபு. ‘அவளுக்கு என்னால் மேக் அப் போட முடியாது. இது திரைக்கேற்ற முகமே அல்ல. நிச்சயம் தேறாது...’ என்று மனக் கொதிப்பில் பதைபதைத்தார்.

    ‘கே. சுப்ரமணியத்துக்குப் பைத்தியம் பிடித்திருக்க வேண்டும். இல்லாவிடின் தியாகராஜ பாகவதர் போன்ற சூப்பர் ஸ்டார்களை அறிமுகப்படுத்தியவர்... இந்தப் பெண்ணிடம் ஏமாந்து போவாரா..?’

    கே.சுப்ரமணியத்தின் வைராக்கியமே வென்றது. ராஜாயி மீது வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை.

    ‘வேல் பிக்சர்ஸ் ஸ்டுடியோவில் கச்ச தேவயானி படமாகியது. நன்றாகப் பாடத் தெரிந்த டி.ஆர். ராஜகுமாரியைத் துணிந்து அதில் கதாநாயகியாக நடிக்க வைத்தார் கே.சுப்ரமணியம்.

    டி.ஆர். ராஜகுமாரியின் நடையில் ஒரு விதமான கோணல் அமைந்திருப்பதைக் கவனித்து விட்டு, அவரது இடுப்பில் படம் முழுவதும் தொடர்ந்து இருக்குமாறு ஒரு குடத்தை ஏற்றினார் டைரக்டர்.

    குடமும் இடுப்புமாக டி.ஆர்.ஆர். நடந்து வந்ததில் அவரது கோணல் தெரியாமல் போயிற்று. - கொத்தமங்கலம் சீனு.(கச்ச தேவயானி ஹீரோ)

    டி.ஆர். ராஜகுமாரி கதாநாயகியாக நடித்ததில் கச்ச தேவயானி முதலில் வெளியானது. குமார குலோத்துங்கன், மந்திரவாதி இரண்டும் பின் தங்கின.

    அசுரர்களின் குல குரு சுக்ராச்சாரியார். அவரது அன்பு மகள் கச்ச தேவயானியின் புராணக் கதை திரையில் ஓடியது. டி.ஆர். ராஜகுமாரி தோன்றும் முதல் காட்சி. தன் தேன் குரலில்

    ‘குளிர்ப் பசுஞ்சோலை... ஆனந்த நீரோடை... பார்க்கப் பார்க்கத் திகட்டுவதில்லை’ என்று தித்திக்கத் தித்திக்கப் பாடியவாறு அன்ன நடை நடந்தார்.

    இயற்கையின் எழிலைச் சொல்லும் பாடல். நாயகியின் இளமை அழகையும் உள்ளூர நெய்யாக உருக்கி வார்க்கப்பட்ட வரிகள்.

    ஹீரோயின் இடுப்பில் இருந்த குடத்தில் தண்ணீர் தளும்பியதைப் போல் ரசிகர்களின் நெஞ்சமும் இன்பத்தில் தத்தளித்தது.

    டி.ஆர். ராஜகுமாரியின் அறிமுகப்படலமே வெகு அமர்க்களமாக அமைந்தது.

    ‘மவுத் டாக்’ என்பார்கள் கோலிவுட் பண்டிதர்கள். அடிப்படைக் கல்வி வளர்ச்சி அறவே இல்லாத அடிமைகளின் தேசம்...

    பாமர மக்களின் வாய் வழியாகவே மகுடம் சூட்டப்படாத மகாராணியாக ஓர் இரவில் உயர்ந்து நின்றார் டி.ஆர். ராஜகுமாரி!

    1941 ஜனவரி 9. சென்னை கெயிட்டி தியேட்டரில் திரையிடப்பட்டு வெள்ளிவிழா கொண்டாடியது கச்ச தேவயானி. அங்கு மட்டுமல்ல தென்னாடெங்கும் பல நகரங்களில் நூறு நாள்களை அநாயாசமாகக் கடந்தது.

    ‘கோயில் சிற்பம், ஸ்வப்ன மோகினி, தந்த பொம்மை, ஆடும் மயில், கூவும் குயில்’ என்றெல்லாம் செல்லம் கொஞ்சி எழுதின சஞ்சிகைகள்.

    டி.ஆர்.ராஜகுமாரியை கனவில் மொய்த்தார்கள் யுவன்கள். நேரில் காணவும் தவம் கிடந்தார்கள்.

    ‘செக்ஸ் அப்பீல்’ என்கிற சொல் முதன் முதலாக சபை ஏறியது. நமது கலாசாரம் பண்பாட்டுக்கு ‘இனக்கவர்ச்சியைத் தூண்டும் ஆடைகள்... அங்க அசைவுகள்... முக பாவங்கள்... கொண்ட டாக்கிகள் தேவையா இல்லையா...?’

    என்று நாடு முழுவதிலும் பட்டி மன்றங்கள் நடந்தன.

    எல்லிஸ் ஆர்.டங்கன் முந்திக் கொண்டார். தனது ‘சூர்ய புத்திரி’ படத்தில் டி.ஆர். ராஜகுமாரியைத் தொடர்ந்து நாயகியாக்கி, அவரது ‘திடீர் புகழில்’ நல்ல லாபம் பார்த்தார்.

    சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் இரு படங்களில் ஒப்பந்தம் செய்தது. 1. சதி சுகன்யா. 2. மனோன்மணி

    மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி. ஆர். சுந்தரம். தனது நிறுவனத்தில் கலைஞர்களில் யார் ஒழுங்கீனமாக நடந்தாலும், கட்டி வைத்து சவுக்கால் அடிக்கும் ஆளுமை மிக்கவர்.

    டி.ஆர். சுந்தரத்தின் கீழ் பணியாற்றியவர் எம்.ஏ. வேணு. பின்னாளில் சிவாஜி, என்.டி.ஆர்.- பத்மினி நடித்த ‘சம்பூர்ண இராமாயணம்’ தயாரித்தவர். தனது எம்.ஏ.வி. பிக்சர்ஸில் முக்தா சீனிவாசனை இயக்குநராக ’முதலாளி’ படம் மூலம் அறிமுகப்படுத்தியவர்.

    டி.ஆர். ராஜகுமாரி குறித்து எம்.ஏ. வேணு-

    ‘சதி சுகன்யா’ அவுட்டோர் ஷூட்டிங் தொட்டியத்தில் காவேரி கரையில் நடைபெற்றது. கவர்ச்சியான கச்சைகள் அணிந்து முழு மேக் அப்பில் டி.ஆர். ராஜகுமாரி வருவார்.

    யாருக்கும் எவ்விதமான தொல்லையும் தராதவர். மிகப் பிரபலமாக இருந்தாலும் எல்லாருடனும் பண்புடன் பழகுவார்.

    அது வேண்டும் இது வேண்டும் என்றெல்லாம் தயாரிப்பு நிர்வாகிகளைத் தொந்தரவு கொடுக்க மாட்டார். தண்ணீர் டம்ளர்களைக் கூட வீட்டிலிருந்து தருவித்து வருவார்.

    கம்பெனி தரும் டிபன் மற்றும் சாப்பாட்டை எதிர்பார்க்காமல், சொந்த சமையற்காரரை வைத்து வித விதமான சிற்றுண்டி, மற்றும் மதிய உணவு வகைகளைச் செய்து, பெரிய பெரிய கேரியர்களில் தன்னோடே எடுத்து வருவார்.

    ஏதாவது ஸ்பெஷல் அயிட்டங்கள் கொண்டு வந்தால் யூனிட் முழுமைக்கும் அதனைப் பரிமாறச் சொல்வார்.

    ஒருநாள் காமிராமேனுடன் டி.ஆர்.ராஜகுமாரி, தனது சாப்பாட்டைப் பகிர்ந்து கொண்டார்.

    நான் விளையாட்டாக ஒளிப்பதிவாளரிடம்,

    ‘ என்னய்யா... ஹீரோயின் உங்களுக்கு மட்டும்தான் வீட்டுப் பதார்த்தங்களை சப்ளை செய்வாரா...?

    டி.ஆர். ராஜகுமாரி உங்களை காக்கா பிடிக்கிறார் போலிருக்கிறது... என்றேன்.

    கதை வசனகர்த்தா சாரி, முதலாளியிடம் உடனடியாக அதை வத்தி வைத்து விட்டார்.

    காவிரி நதியில் விளையாடியவாறே முதலாளி டி.ஆர். எஸ். என்னிடம்,

    ‘டேய் வேணு... என்னடா சொன்னாய் டி.ஆர்.ராஜகுமாரியை... என்றவர், கரையோரம் நீளமாக வளர்ந்திருந்த கொடிக் கம்பைப் பிடுங்கி அடி அடியென அடித்து என்னை வெளுத்து வாங்கினார்.’

    -------------

    பல்வேறு பெருமைகளின் கலங்கரை விளக்கம் ‘மனோன்மணி!’

    ‘ பி.யூ. சின்னப்பா - டி.ஆர். ராஜகுமாரி’ இணைந்த முதல் படம். தமிழ்நாட்டுக்குத் தனியார் தொலைக்காட்சிகள் வரும் வரை டூரிங் டாக்கீஸ்களில் இடைவிடாமல் ஓடியது.

    லட்சங்களைத் தாண்டித் தமிழில் மிக அதிக பொருட்செலவில் தயாரான முதல் பிரம்மாண்டச் சித்திரம்!

    ‘லார்டு லிட்டன்’ எழுதிய ரகசிய வழி (‘சீக்ரெட் வே’) பேராசிரியர் சுந்தரம் பிள்ளையால் ‘மனோன்மணி’ என்று தழுவப்பட்டது.

    டி.ஆர். ராஜகுமாரி - பாண்டிய மண்டலத்தின் இளவரசி மனோன்மணி. பி.யூ. சின்னப்பா - நாயகியின் சொப்பனத்தில் தோன்றிய காதலன் - ‘சேர மன்னன் புருஷோத்தமன்’. இருவரும் கனவிலேயே காதலிக்கும் புதுமைக் கதை!

    வில்லன் டி.எஸ். பாலையா - பாண்டிய மந்திரி குடிலன்.

    டி.எஸ். பாலையாவால் ஏற்படும் இடையூறுகளைக் கடந்து பி.யூ. சின்னப்பாவும்- டி.ஆர். ராஜகுமாரியும் கை பிடிப்பது க்ளைமாக்ஸ். மனோன்மணியை மிக்க கவனத்துடன் டி.ஆர். சுந்தரமே இயக்கினார்.

    1942 நவம்பர் 11- தீபாவளி தினத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது மனோன்மணி.



    ‘கண்டேன் கண்டேன் என் காதல் கனியைக் கண்டேன்’, ‘மோகன மாமதனா’,

    ‘வானமுதே மான் விழியே உனைக் காண்பேனோ’, ‘உன்றனுக்கோர் இணையாவோர் உலகில் இல்லை’

    என்றெல்லாம் டி.ஆர். ராஜகுமாரி- பி.யூ. சின்னப்பா பாடிய காதல் கீதங்கள் தென்னாடெங்கும் தேன்மழை பொழிந்தன.

    மனோன்மணியின் வரலாறு காணாத வசூலால் ‘தமிழ் சினிமாவின் முதல் கனவுக்கன்னி’ என்று டி.ஆர். ராஜகுமாரிக்குக் கீரிடம் சூட்டினார்கள் ரசிகர்கள் !

    டி.ஆர். ராஜகுமாரியுடன் இணைந்து நடித்து பி.யூ. சின்னப்பா அடைந்த புகழின் சிகரத்தை, தாமும் கடக்க வேண்டும் என்று எம்.கே. தியாகராஜ பாகவதரும் விரும்பினார்.

    அவரது ஆணையின் பேரில் கோவை பட்சிராஜா ஸ்டுடியோ, டி.ஆர். ராஜகுமாரியைத் தேடிப் பட்டணம் வந்தது.

    டி.ஆர். ராஜகுமாரி பதம் பிடித்து ஆட, எம்.கே. தியாகராஜ பாகவதரின் ‘சிவகவி’ உருவானது. பிரபல இயக்குநர் ராஜா சாண்டோவை நீக்கி விட்டு, பட்சி ராஜா முதலாளி ஸ்ரீராமுலு நாயுடுவே ஆர்வத்துடன் முதன் முதலாக சிவகவியை டைரக்டு செய்தார்.

    டி.ஆர். ராஜகுமாரியை வர்ணித்து இரு பாடல்களைப் பாடினார் ஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜ பாகவதர்.

    1. ‘வதனமே சந்திர பிம்பமோ... மலர்ந்த சரோஜமோ... ’ என்றைக்குக் கேட்டாலும் தித்திக்கும்.

    2. ‘கவலையைத் தீர்ப்பது நாட்டியக்கலையே... கணிகையர் கண்களே மதன் விடும் கணையே’

    என்ற ‘நாட்டக்குறிஞ்சி’ ராகப் பாடலும் சூப்பர் ஹிட் ஆனது.

    சிவகவியின் மகோன்னத வெற்றி மேலும் டி.ஆர்.ராஜகுமாரியின் மவுஸைக் கூட்டியது.

    டி.ஆர்.ராஜகுமாரியால் தாமும் பெருத்த செல்வம் பெற வேண்டும் என்று ஜூபிடரும் துடிதுடித்தது.

    1943 ஜூலையில் பி.யூ. சின்னப்பா - டி.ஆர். ராஜகுமாரி ஜோடி நடிக்க ‘குபேர குசலா’ பக்திச் சித்திரத்தை வெளியிட்டது.

    ஆர். எஸ். மணி ‘குபேர குசலா’ படத்தை இயக்கினார்.

    குபேர குசலாவில் பி.யூ. சின்னப்பாவும் பாகவதருக்குப் போட்டியாக, டி.ஆர். ராஜகுமாரியைப் போற்றித் தன் பங்குக்குக் கம்பீரக் குரலில்

    ‘நடையலங்காரம் கண்டேன்!

    அன்னப்பேடையும் பின்னடையும்... பொற்கொடி இவள் மலரடி

    நடையலங்காரம் நளின சிங்காரம்’ என்று பாடினார்.

    ‘ராஜகுமாரியின் நாட்டியம் வெகு அழகு. நாயகியின் நடிப்பிலும் நல்ல ‘நகாஸ்’ என்று விசிறிகளின் அபரிதமான ஆதரவு கிடைத்தது. ஜூபிடருக்கும் அபரிதமான ஐஸ்வர்யம்!

  9. Likes Russellmai liked this post
  10. #1845
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    பம்பாய் மிட்டாய்.....ஜெமினிகணேசன்!

    Bambaai Mittai song ,,,,most popular in GG starrer Neethipathi...but this song was sung and enacted by the then ace singer actor KR Ramaswami....Nostalgia kindled on bambaai mittai.......wrist watches, rings, ...the lon stick holder on which this mittai is wrapped,,,


    ஜெமினிகணேசன் கே ஆர் ராமசாமி நடிப்பில் வெளிவந்த நீதிபதி திரைப்படத்திலிருந்து ...
    ஜெமினிக்கு மிக வித்தியாசமான ரோல் !

    பம்பாய் மிட்டாய் ....சிறுவயதில் இந்த மாதிரி ஜவ்வு மிட்டாயை இழுத்து இழுத்து கடிகாரமகவும் மோதிரமாகவும் கையில் கட்டிவிடுவார்கள்...பள்ளிப் பருவத்தில் இலந்தைவடை, பம்பாய் மிட்டாய், மாங்காய் சீவல், குச்சி ஐஸ், பலகையில் பாட்டிமார்கள் ஒட்டிவைத்து பள்ளிக்கூடவாசலில் விற்கும் ஜம்பர் மிட்டாய் ...குச்சிமிட்டாய் குருவிரொட்டி ....என்ன......ஞாபகங்களை தூண்டி விட்டேனோ!?





  11. Likes Russellmai liked this post
  12. #1846
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    ballroom dance! reminding Fred Astaire and Ginger Rogers!





    Ballroom dance with ice skating!! amazing!!

    Last edited by sivajisenthil; 10th January 2016 at 08:09 AM.

  13. #1847
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Just a jolly titile!

    A hilarious presentation on the present trend of youth to become bodybuilders like Arnold!!

    ஜிம்முக்குப் போன ஜெமினி கணேசன் ...கலாய்!

    Gymmukkup pona gemini ganesan!!


  14. #1848
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    Bhakthi - First superstar MKT in Rajamukthi

    From Rajamukthi(1948)

    unnai allaal oru thurumbu asaiyumo.........

    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  15. Likes rajeshkrv, Russellmai liked this post
  16. #1849
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Russian Ballet! In tamil there was one actress who was trained in ballet dancing...?Laila?





    Last edited by sivajisenthil; 14th January 2016 at 08:14 AM.

  17. #1850
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy: Tamil Hindu


    சினிமா எடுத்துப் பார் 41: கமலும் ரஜினியும் இணைந்து நடித்தது எந்தப் படம்?

    எஸ்பி.முத்துராமன்

    புவனா ஒரு கேள்விக்குறி ஷூட்டிங் கில் வாத்தியார் லட்சுமி நாரா யணனை ரஜினிக்கு வசனம் சொல் லித் தர சொல்லிவிட்டு, ஒளிப்பதிவாளர் பாபுவும் நானும் செட்டுக்குள் சென்று லைட்டிங் வேலைகளைக் கவனிக்கச் சென்றோம். திடீரென்று ரஜினியைக் காணவில்லை. எங்கே என்று தேடிய போது ஒரு புரொடெக்*ஷன் பையன் ரஜினி வாசல் பக்கம் போய்க் கொண் டிருக்கிறார் என்றார். அப்போது ரஜினி யிடம் கார் இல்லை. எங்கள் நிர்வாகியை அனுப்பி உடனே அழைத்து வரச் செய் தோம். வந்தவரிடம் என்ன விஷயம் என்று கேட்டோம். பாலசந்தர் சார் படத்துல மொத்த வசனமுமே இவ்வளவுதான் இருக்கும். நீங்க ஒரு காட்சிக்கே இவ்வளவு வசனம் கொடுக்குறீங்க. என்னால பேசி நடிக்கிறது கஷ்டம் என்றார். முழு வசனத்தையும் ஒரே ஷாட்டில் எடுக்க மாட்டோம். பிரிச்சுப் பிரிச்சுதான் எடுப்போம். உங்களால எவ்வளவு பேச முடியுமோ, அதையும் உங்க ஸ்டைல்ல பேசுங்க, போதும் என்றதும் ஒப்புக்கொண்டார்.

    கதைப்படி சிவகுமார் தவறு செய்து விட்டு வருவார். அதனை தெரிந்து கொண்ட ரஜினி அவரை கண்டிப்பார். அதற்கு சிவகுமார், பத்தோடு பதி னொண்ணு விட்றா என்பார். உடனே ரஜினி கடப்பாரையை முழுங்கிட்டு சுக்குத் தண்ணி குடிச்சா அது செரிக் காது. வயித்த கிழிச்சுக்கிட்டு வெளியே வரும் என்று அழுத்தமாகச் சொல்வார். அன்றைக்கே பஞ்சு அருணாசலம் எழுதிய பஞ்ச் டயலாக் அது. ரஜினி சொன்ன ஸ்டைலில் அது மக்களிடம் கைத்தட்டலை பெற்றது. அன்றைக்கு தமிழ் வசனம் பேச பயந்த அதே ரஜினி தான் இன்றைக்கு சும்மா அதிரு துல்ல என பஞ்ச் வசனம் பேசி அதிர வைக்கிறார். அதற்குக் காரணம் ரஜினி யின் ஈடுபாடு, உழைப்பு, முயற்சிதான்!

    புவனா ஒரு கேள்விக்குறி படத்தில் ரஜினி, மீரா இருவரும் காதலர்கள். இருவரும் விழியிலே மலர்ந்தது/உயிரிலே கலந்தது/பெண்ணென்னும் பொன்னழகே/ அடடா எங்கெங்கும் உன்னழகே என்ற டூயட் பாடுவார்கள். பாடலை எழுதியவர் பஞ்சு அருணா சலம்; இசையமைத்தவர் இளையராஜா. அதில் இருந்த இனிமை இன்றும் இனிக் கிறது. என்றும் இனிக்கும். ஒரு காட்சியில் மீராவை மாடு துரத்தும், அதை பார்த்த ரஜினி அவரை காப்பாற்றப் பின் தொடர்ந்து ஓடுவார். மீரா, ஒரு பாழ் கிணற்றில் விழுந்துவிடுவார். ரஜினி கிணற்றில் குதித்து மீராவை தூக்குவார்.

    இந்தக் காட்சிக்காக கிணறு கிடைக்கா மல் தேடி அலைந்தோம். கடைசியில் காட்சிக்குப் பொருத்தமான கிணறு போரூர் அருகே கிடைத்தது. ஷூட்டிங் சமயத்தில் ரஜினியும் மீராவும் கிணற்றில் இருந்து வெளியே வரும்போது, ஒரே துர்நாற்றம். எங்களால் அருகில் நிற்க முடியவில்லை. மொத்த யூனிட் ஆட்களும் தண்ணீரை ஊற்றி அவர் களை சுத்தம் செய்தோம். நாங்கள் படமாக்கிய கிணற்றில்தான் மொத்த போரூர் சாக்கடை நீரும் வந்து சேர்கிறது என்பது பிறகுதான் தெரிந்தது. எதுவுமே விசாரிக்காமல் உங்களை கிணற்றில் குதிக்க வைத்தது என் தப்புதான் என்று ரஜினியிடம் மன்னிப்பு கேட்டேன். உடனே ரஜினி, சார் அதையெல்லாம் விடுங்க. காட்சி நல்லா வந்திருக்கா, அதை சொல்லுங்க என்றார். அதுதான் ரஜினி. அவரின் பெருந்தன்மைக்கு நாங்கள் நன்றி சொன்னோம்.

    தடாவில் ஒரு பாடல் காட்சியைப் பட மாக்க புறப்பட்டோம். அங்கு படப்பிடிப்பு சமயத்தில் திடீரென பிளே பேக் மெஷின் கெட்டுப்போனது. அது இருந்தால்தான் பாட்டைப் போட்டு பாடல் காட்சியைப் படமாக்க முடியும். எவ்வளவோ முயற் சித்தும் சரிசெய்ய முடியவில்லை. முழு யூனிட்டும் சென்னைக்குப் போய் அடுத்த நாள் படப்பிடிப்புக்கு வந்தால் செலவு அதிகமாகும். ரஜினியை மட்டும் சென்னைக்குச் சென்று வர ஏற்பாடு செய்துவிட்டு, நாங்கள் அனைவரும் அங்கேயே தங்க முடிவு செய்தோம்.

    அப்போது ரஜினி, நீங்க எல்லாரும் இங்கே தங்குறப்ப நான் மட்டும் ஏன் சென்னைக்குப் போயிட்டு வரணும் என்றார். இங்கே எந்த அடிப்படை வசதி யும் இல்லை; அதோ அந்த டீக் கடைக் காரர் சப்பாத்தி செய்து தருவதாகக் கூறியுள்ளார்; அந்த வீட்டு மொட்டை மாடி யில் படுக்கப் போகிறோம் என்றோம். அதற்கு ரஜினி, நீங்கள்லாம் என்ன செய்றீங்களோ, அதையே நானும் செய்து கொள்வேன் என்று கூறி எங்களோடு டீக்கடை சப்பாத்தியைச் சாப்பிட்டு, மொட்டை மாடியில் உறங்கி, ஆற்றில் குளித்து முடித்து படப்பிடிப்புக்கு வந்து விட்டார். ஹீரோ என்கிற உணர்வு துளியும் இல்லை அவருக்கு. அன்று முதல் இன்று வரை அதே மாதிரிதான் பழகு கிறார். நிறைய புகழ் வந்துவிட்ட பிறகும் ஒருபோதும் அதை தலையில் தூக்கி வைத்துக் கொள்வதில்லை. கேமரா வுக்கு முன்னால் மட்டுமே நடிக்கிறார். கேமராவுக்கு பின்னால் மனிதநேயமுள்ள மனிதராக நடக்கிறார். பொய் சொல்லும் பழக்கமே இல்லாதவர். அவரு டைய 25 படங்களை இயக்கியிருக்கிறேன் என்பதில் எங்கள் குழுவுக்கு பெரிய மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியை தி இந்து மூலம் வாசகர்களுடன் பகிர்ந்து கொள் வதில் இன்னும் மகிழ்ச்சி!

    சுமித்ராவிடம் தவறாக நடந்து கொண்ட சிவகுமார், ஒருகட்டத்தில் அவரை கை கழுவி விடுவார். இதை அறிந்த ரஜினி சுமித்ராவை அழைத்துக் கொண்டுபோய் வாழ வைப்பார். ஊர் உலகத்துக்காக இருவரும் கணவன் - மனைவியாக நடிப்பார்கள். ஒருகட்டத் தில் ரஜினி, ஏன் நாம் நடிக்க வேண்டும்? உண்மையான கணவன் மனைவியாக ஆகிவிட்டால் என்ன? என்று சுமித்ரா விடம் கேட்பார். அதற்கு சுமித்ரா உங்கள நான் தெய்வமா நினைக்கிறேன். நான் அழுகிப் போன பூ. என் தெய்வத்துக்கு அழுகின பூவை அர்ப்பணிக்க விருப்ப மில்லை. உங்க மேல இருக்கும் நம் பிக்கையிலதான் என் அறை கதவைக்கூட மூடுறதில்லை. ஒரு திரையை மட்டும் போட்டு வெச்சிருக்கேன். நான் சொல் றதை ஏத்துக்கலன்னா நீங்க எப்போ வேணும்னாலும் என் அறைக்குள்ள வரலாம் என்று சொல்லிவிட்டு அறைக் குள் போய்விடுவார்.

    ரஜினி அப்போது அசந்துபோய் ராஜா என்பார்/மந்திரி என்பார்/ராஜ்ஜியம் இல்லை ஆள. என்று பாடுவார். காட்சி யின் கருத்தாழத்தை அந்தப் பாடல் உணர்த்தும். ரஜினி சுமித்ரா இருவரின் நடிப்பும் அசத்தலாக இருக்கும். பஞ்சு அருணாசலத்தின் வரிகளும் இளைய ராஜாவின் இசையும் கதையை கண் முன் கொண்டுவந்து நிறுத்திவி்டும். புவனா ஒரு கேள்விக்குறி பெரும் வெற்றி பெற் றது. ரஜினிக்கு ஸ்டைல் மட்டும்தான் தெரியும் என்று நினைத்த மக்கள் அவரை சிறந்த குணச்சித்திர கதாநாயகனாக ஏற்றுக்கொண்டார்கள். பத்திரிகைகள் பாராட்டின. ரஜினியின் வெற்றிப்படிகளில் புவனா ஒரு கேள்விக்குறியும் ஒன்று.

    கமலையும் ரஜினியையும் மாறி மாறி இயக்கும் சிறந்த வாய்ப்புகளை நான் பெற்றவன். இருவரைப் பற்றியும் மாறி மாறி எழுதப் போகிறேன். ஒரு படத்தில் என் இயக்கத்தில் கமலும் ரஜினியும் இணைந்து நடித்தார்கள். அது எந்தப் படம்?

  18. Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •