Page 374 of 401 FirstFirst ... 274324364372373374375376384 ... LastLast
Results 3,731 to 3,740 of 4009

Thread: Makkal Thilagam MGR - PART 17

  1. #3731
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மழை வெள்ளம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் உடமைகளையும் விட்டு வைக்கவில்லை.


  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3732
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  4. #3733
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  5. #3734
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  6. #3735
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Sathya VP View Post
    நம் தெய்வத்தின் வீட்டை பாதுகாக்காத யாராக இருந்தாலும் சரி..அவர்களை நிச்சயம் நம் தெய்வம் (எம்ஜியார்) தண்டிப்பார். ஆட்சியில் அமரவும், புகழ் அடையவும் நம் தலைவர் தேவை..அவர் வாழ்ந்த வீடு இன்று குட்டிச்சுவர்..நன்றி கெட்ட மனிதர்கள்..நமது உயிர் உள்ள இடம் நமது உடல் கிடையாது..அது ராமாவரம் தோட்டத்தில் உள்ளது...என்னை மிகவும் பதித்த செய்தி இது..என்னால் சாபம் மட்டும்தான் கொடுக்கமுடிகிறது...காலம் நிச்சயம் பதில் சொல்லும்..காத்திருப்போம்..

  7. #3736
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர். முதன் முறையாக முதல்வராக பதவியேற்ற சில மாதங்களிலேயே தமிழகத்தின் தலைநகரில் அன்றைய நிலவரப்படி வரலாறு காணாத வெள்ளம். சென்னை நகரே முழுகக் கூடிய அபாயம். கிட்டத்தட்ட இதே போன்ற சூழல் நிலவியது. இதே ஆர்.கே.நகரில் மக்களின் குமுறல் ஒலிக்கத் தொடங்கியது.

    அப்போது அதிமுகவும் நடிகர் திலகம் சார்ந்த காங்கிரஸும் எதிரெதிர் நிலைப்பாட்டில் இருந்த நேரம்.

    ஆர்.கே.நகரில் ராஜசேகரன் களமிறங்கி ஒரு வீட்டின் வாசலில் திண்ணையில் படுத்து வெள்ள நிவாரணப்பணிகளை முன்னின்று செய்து மக்களின் இன்னலைத் தீர்ப்பதில் முனைப்புடன் ஈடுபட்டார். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது, உணவு மற்றும் அதியாவசியப் பொருட்கள் வழங்குவது, என எந்தெந்த வகையில் உதவி தேவைப்பட்டாலும் உடனுக்குடன் செய்து கொடுத்தார். இதே போல சிவாஜி மன்றத்தினர் தமிழகம் முழுதும் தீவிரமாக அவரவர் பகுதியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டனர்.

    இன்றைக்கும் ஆர்.கே.நகர் மக்களின் நினைவில் ராஜசேகரனின் அபாரமான சேவை பசுமையாக உள்ளது. எம்.ஜி.ஆர். கட்சியாயிற்றே என சுணக்கம் காட்டவில்லை நடிகர் திலகம். தன்னுடைய ரசிகர் மன்றங்களை முழுதும் மக்கள் பணியில் ஈடுபடச் செய்தார்.

    அது மட்டுமா, ஒரு வார்த்தை அரசாங்கத்தைப் பற்றிக் குறை கூறிக் கொண்டிருக்காமல், களத்தில் இறங்கி நடிகர்களை ஒருங்கிணைத்து அன்றைய நிலவரப்படி ரூ 1 கோடிக்கும் மேல் வசூல் செய்து நிவாரணப் பணிக்கு அளித்தார். மக்கள் பணத்தில் அதிகம் செலவு செய்யக் கூடாது என சக நடிகர்களுக்கும் அறிவுறுத்தி அனைவருமே ரயிலில் மூன்றாம் வகுப்பில் கட்டை இருக்கையில் தான் பயணம் செய்தனர். எம்.ஜி.ஆர். ஆட்சி ஆயிற்றே, நான் ஏன் செய்ய வேண்டும் என நினைக்கவில்லை, அரசைக் குறை கூறி்க் கொண்டிருக்கவில்லை. அங்கு நடிகர் திலகத்தின் கண் முன் தெரிந்தது மனித நேயம் மட்டுமே அரசியல் அல்ல. அது மட்டுமல்ல தனிப்பட்ட முறையிலும் தன் பங்களிப்பைத் தரத் தவறவில்லை. அரசுக்கு நிவாரண நிதி வழங்கியதோடு நிற்காமல், அன்னை இல்லத்திலும் ஏழைகளுக்கு அந்த வெள்ள நீர் வடியும் வரையில் அன்னதானம் செய்தார்கள்.

    சும்மாவா நாங்கள் சொல்கிறோம் நடிகர் திலகத்தை மக்கள் தலைவர் என்று.

    அரசியலிலும் சரி, தொழிலிலும் சரி போட்டியாளர்களாயிருந்தாலும் அந்த அந்த கடுமையான மழை வெள்ள நேரத்தில், சிவாஜியும் எம்.ஜி.யாரும் மக்களுக்கு ஆபத்து என்கிற போது ஓடி வந்தார்கள், தங்களுடைய உணர்வில் செயற்கைத் தனமில்லாமல் உள்ளன்போடு மக்கள் பணியில் ஈடுபட்டார்கள், உதாரண புருஷர்களாயிருந்தார்கள். நல்லெண்ணத்தோடு வாழ்ந்தார்கள். நல்ல வழியையே காட்டினார்கள்.

    இனிமேல் கனவில் கூட அப்படிப்பட்ட காலம் வராது. அது ஒரு பொற்காலம்.

    Courtesy - facebook

    rks

  8. Likes sss liked this post
  9. #3737
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியான செய்தி .

    சென்னை மழை வெள்ளத்தில் மக்கள் திலகத்தின் ராமாவரம் இல்லத்தில் இருந்து அவருடைய பொக்கிஷங்கள் அடித்து செல்லப்பட்டது அறிந்து மிகவும் வேதனை யாக உள்ளது . ராமாவரம் வீட்டில் இருந்தவர்கள் மக்கள் திலகத்தின் பொக்கிஷங்களை உரிய பாதுகாப்புடன் வைக்க தவறி விட்டார்கள் .

  10. #3738
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் நடித்த 30 திரைப்படங்களின் கோவை விநியோகஸ்தரும் எனது அன்பு நண்பருமான திரு உலகப்பன் அவர்களின் கோவை அலுவலகம் சென்றேன். அப்போது எடுத்த புகைப்படம்.
    Last edited by ravichandrran; 9th December 2015 at 09:52 PM.

  11. #3739
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "ஒளி விளக்கு"- காவியம்- உலக நடிகர்களில் "100"- நூறாவது திரைப்பட ம் - மிக முக்கிய பங்கு மக்கள் திலகம் அவர்கள் வாழ்வில் அமைந்தது போல யாருக்கும் அமைய வில்லை... மறு வெளியிடுகளில் இடைவெளி அன்றி பட்டையை கிளப்புவது இவர்தம் காவியங்கள் மட்டுமே...

  12. #3740
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சிரித்து வாழ வேண்டும் படத்தில் பொழுதுபோக்கு விடுதி நடத்தி வந்த ரஹ்மான் பாய் ஆக வரும் மக்கள் திலகம், இன்ஸ்பெக்டர் ராமுவாக வரும் பொன்மனச் செம்மலின் ஆலோசனைப்படி அந்த விடுதியை மூடி விடுவார். அங்கு வேலை செய்தவர்கள் கட்டில், மேஜைகளை எல்லாம் எடுத்துச் சென்று விடுவார்கள். கடைசியில் விடுதி காலியாக கிடக்கும். நகைச்சுவை நடிகர் வீரப்பன் வந்து ரஹ்மான் பாயிடம் தலையை சொறிந்து கொண்டே அவர் கையை பிடித்து விரலில் போட்டிருக்கும் மோதிரத்தை ஆசையாக பார்ப்பார். உடனே, ஏழைகளுக்கு அள்ளித் தரும் மக்கள் திலகம் புன்னகையுடன் அந்த மோதிரத்தை கழட்டி அவரிடம் கொடுத்து விடுவார். அவரும் வாங்கிக் கொண்டு போய்விடுவார்.

    பிறகு, விடுதியில் ரஹ்மான் பாய் மட்டுமே தனியே நிற்பார். முழங்கையை கொஞ்சம் உயரமான மேடை மீது ஊன்றியபடி சாய்ந்து நிற்பார். சோகமான நிலையிலும் என்ன ஒரு சொக்க வைக்கும் ஸ்டைல் போஸ்?

    அப்போது, இன்ஸ்பெக்டர் ராமுவாக வரும் புரட்சித் தலைவர், விடுதிக்கு வருவார். சூழ்நிலையை பார்த்து நிலைமையை புரிந்து கொண்டு கண்களில் கோத்திருக்கும் நீருடன் அழுகையை அடக்கிக் கொண்டு ‘ரஹ்மான் பாய்...’ என்று அழைத்துக் கொண்டே விடுதி வாசலில் இருந்து கைகளை நீட்டியபடி ஓடி வருவார். எதிர்பக்கத்தில் இருந்து ‘ராமு பையா..’ என்று கூவிக் கொண்டே ரஹ்மான் பாயாக வரும் மக்கள் திலகம் ஓடிவருவார். இருவரும் அணைத்துக் கொண்டு கண்கலங்குவார்கள். வசனமே இல்லாமல் இரண்டு பேரின் எண்ண ஓட்டங்களை மக்கள் திலகம் காண்பித்திருப்பார். என்னை இந்த காட்சி மிகவும் கவர்ந்தது. ஒவ்வொரு முறை இந்த காட்சியை பார்க்கும்போதும் நம்மையறியாமல் அழுகை வரும்.

    தனக்கென்று வேண்டி விரும்பி எந்த பொருளையும் வைத்துக் கொள்ளாமல் எல்லாருக்கும் அள்ளிக் கொடுத்த வள்ளல், தனது ராமாவரம் தோட்டத்து வீட்டையும் வாய் பேச முடியாத, காது கேளாத குழந்தைகளுக்கு அளித்து விட்டார்.

    கொல்ல வந்த துப்பாக்கி குண்டுக்கும் தனது தொண்டையில் அடைக்கலம் கொடுத்த கலியுக கர்ணனாம் நம் தலைவர், இதுவரை வெள்ளத்துக்கும் மழைக்கும் தனது பொருளை எதுவும் கொடுக்காமல் இருந்தார். இப்போது, அதையும் செய்துவிட்டார். தான் பயன்படுத்திய கிராமபோன் போன்றவற்றை மழை, வெள்ளத்துக்கு காணிக்கையாக அளித்து விட்டார். செய்தி படித்தபோது ரொம்ப மனசு வருத்தமாக இருந்தது.

    செய்தியை சன் டிவி நியூசில் பார்த்தபோது சிரித்து வாழ வேண்டும் படக் காட்சியும் வெள்ளத்துக்கும் தனது பொருட்களை புரட்சித் தலைவர் கொடுத்து விட்டார் என்பதும்தான் என் நினைவுக்கு வந்தது.

    1985 ஆம் ஆண்டில் அப்போது ஒருமுறை ராமாவரம் தோட்டத்தில் மழையால் வெள்ளம் புகுந்தது. அப்போது, பொன்மனச் செம்மலுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தது. அப்படியும் தோட்டத்தில் இருந்து வெளியேற மறுத்தவரை மற்றவர்கள் வற்புறுத்தி அழைத்து சென்று ஓட்டலில் தங்க வைத்தனர்.

    ராமாவரம் தோட்டத்தில் இருந்து மக்கள் திலகம் பயன்படுத்திய சில பொருட்கள் வெள்ளத்தில் போனாலும் புரட்சித் தலைவரின் நினைவு இல்லத்தில் அவர் பயன்படுத்திய தொப்பி, கண்ணாடி, வாட்ச், பூட்ஸ், வேட்டி, ஜிப்பா, பேனா, படங்களின் வெற்றி விழா கேடயங்கள் உள்பட பல பொருள்கள் எந்த பாதிப்புக்கும் ஆளாகாமல் நமக்கெல்லாம் காட்சி கொடுத்துக் கொண்டிருப்பது நமக்கு பெரிய ஆறுதல். அதையெல்லாம், மறுபடியும் ஒருமுறை போய் பார்த்தால்தான் மனசு திருப்தியாக இருக்கும்.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •