Page 354 of 401 FirstFirst ... 254304344352353354355356364 ... LastLast
Results 3,531 to 3,540 of 4009

Thread: Makkal Thilagam MGR - PART 17

  1. #3531
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    கடந்த 28ம் தேதி முதல் நமது இதய தெய்வத்தின் பட்டிக்காட்டு பொன்னையா வண்ணப்படத்தை கோவை டிலைட் திரை அரங்கில் திரையிட்டுள்ளனர். இதே திரை அரங்கில் சில மாதங்களுக்கு முன்பு திரையிட்டு 10 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இன்று காலையில் திரையரங்கில் நான் எடுத்த படங்கள் நண்பர்கள் பார்வைக்கு
    Last edited by ravichandrran; 29th November 2015 at 10:49 PM.

  2. Thanks siqutacelufuw thanked for this post
    Likes orodizli, siqutacelufuw liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #3532
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    பொறாமையால் நயவஞ்சக எண்ணம் கொண்டவர்கள் உண்மைகளை என்னதான் மறைத்தாலும் அது வெளியே வாராமல் போகாது. நடிகர் சங்கம் உருவாகவும் வளர்ச்சி அடையவும் தனது சொந்தப் பணத்தை போட்ட உத்தமத் தலைவன் நம் புரட்சித் தலைவர். நடிகர் சங்கத்துக்கு அது செயல்பட தனது வீட்டையே கொடுத்து உதவியிருக்கிறார்.

    அவர் நடிகர்சங்க வளர்ச்சிக்கு உதவியதும் நிலம் வாங்க பணம் கொடுத்ததும், புரட்சித்தலைவர்தான் " ஸ்டார் நைட் " நடத்தச் சொன்னதாக வி(வரம் தெரியாத) கே. (கேனையர்கள் என்று மக்களை நினைத்த) ராமசாமி பச்சையாக புளுகியிருப்பதும் ஆதாரத்துடன் தெரிய வந்துள்ளது. நடிகர் சங்க வெப்சைட்டிலேயே இது சம்பந்தமான தகவல்கள் உள்ளது.



    1955-ம் ஆண்டில் தி.நகர் ஹபிபுல்லா சாலையில் 22 கிரவுண்டு நிலம் பதிவுக்கட்டனமும் சேர்த்து அப்போது, 75,000/- ரூபாய். அதற்கு தேவைப்பட்ட தொகையை எல்லா கலைஞர்களிடமும் சேர்த்து வசூலித்தும் 35,000/- ரூபாய்தான் வசூலாகியுள்ளது. மீதியுள்ள 40,000/- ரூபாயை கிருஷ்ணா பிக்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்து தனது 3 படத்துக்கான சம்பளத்தில் இருந்து பெற்று 40,000/- கொடுத்துள்ளார். அதாவது, எல்லா நடிகர்களும் பணம் போட்டும் (அதிலும் நம் பொன்மனத் தலைவர் பணம் கொடுத்திருப்பார்) 75,000/- வசூலாகாததால், மீதி 40,000/-த்தை (அதாவது பாதித் தொகைக்கு மேல்) தொகையை தனது சொந்தப் பணத்தில் இருந்து கொடுத்து நிலம் வாங்க உதவி இருக்கிறார் பொன்மனச் செம்மல். 1955-ல் 40,000/- என்பது இன்றைக்கு பல கோடிகளுக்கு சமம்.

    கல்லுக்கும் கருணை காட்டும் தங்கமனம் கொண்ட நம் தலைவர் மீது வி(வரம் தெரியாத). கே (கேனையர்கள் என்று மக்களை நினைத்த) ராமசாமி என்ற நன்றி கெட்ட, பொறாமை கொண்ட பொய்யன், நடிகர் சங்க கட்டிடம் கட்டியதால் ஏற்பட்ட கடனை அடைக்க, புரட்சித் தலைவர் நட்சத்திர இரவு நடத்தச் சொன்னதாக பச்சையாக புளுகியிருக்கிறார்.

    ஆனால், உண்மையாக நடந்தது யாதெனில், கட்டிடம் கட்ட ஸ்டேட் பாங்கில் வாங்கிய 18 லட்சம் கடனுக்கு மாதா மாதம் 8,000 ரூபாயும் வருடத்துக்கு ஒருமுறை ‘ஸ்டார் நைட்’ (நட்சத்திர இரவு) நடத்தி 1,00,000 கொடுப்பதாக, அப்போது நடிகர் சங்க பொறுப்பில் இருந்தவர்கள் வங்கிக்கு எழுத்து மூலம் உத்தரவாதம் கொடுத்திருக்கிறார்கள். அதில் ராமசாமியும் ஒருவர்.. அதன்பேரில்தான் கடன் வாங்கியிருக்கிறார்கள்.

    கட்டடம் கட்டப்படுவதற்கு முன்பே "ஸ்டார் நைட்" நடத்துவதாக வங்கியில் உத்தரவாதம் கொடுத்துள்ளார்கள். ஆனால், கட்டிடம் கட்டி முடித்து விட்டு கடனை அடைக்க முடியாததால் என்ன செய்யலாம்? என்று புரட்சித் தலைவரிடம் கேட்டதாகவும் அவர்தான் ‘ஸ்டார் நைட்’ நடத்தச் சென்னதாகவும் சொல்லியிருக்கிறார் இந்த அண்டப்புளுகன், ஆகாசப்புளுகன் ராமசாமி. கடனை அடைக்க முடியாமல் போனதற்கு அவ்வளவு பெரிய கட்டடம் கட்டியும் வருமானம் வரவில்லை என்பதுதான் காரணம் என்பதும் தெரிய வந்துள்ளது.

    நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் பொறுப்புக்கு வந்தபிறகு, நடிகர் சங்க சொத்து தானமாக நடிகர் சங்க அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட பத்திரத்தை ஆய்வு செய்திருக்கிறார். அதில் நடிகர் சங்க நிலத்துக்கு, நடிகர் சங்கத்துக்கு எந்த பாத்தியதையும் இல்லை என்று எஸ்.எஸ். ராஜேந்திரன் கண்டுபிடித்திருக்கிறார். பின்னர்தான் பத்திரத்தை பொதுக் குழு தீர்மானம் மூலம் ரத்து செய்து நிலத்தை மீட்டிருக்கிறார் என்பதும் இப்போது ஆதாரபூர்வமாக தெரிய வந்துள்ளது.

    கடனை அடைக்க முடியாத நிலையிலும், அரசு மூலம் நடிகர் சங்கத்துக்கு 5 லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறார் கொடை வள்ளல் புரட்சித் தலைவர்.

    இதையல்லாம், நாங்கள் சொல்லவில்லை. நடிகர் சங்க வெப் சைட்டிலேயே நடந்த உண்மைகளை கூறியிருக்கிறார்கள்.

    நாங்களே "ஸ்டார் நைட்" நடத்தி கடனை அடைக்கிறோம் என்று பாங்கில் எழுதி உத்தரவாதம் கொடுத்து விட்டு, புரட்சித் தலைவர்தான் 'ஸ்டார் நைட்' நடத்தச் சொன்னார் என்று பச்சை பொய்யன் ராமசாமி கூறியிருப்பது யாரையோ திருப்திப்படுத்தவே !

    அதையும் திரியில் பதிவு செய்திருக்கின்றனர். புரட்சித் தலைவர் மீது ஏதாவது புகார் என்றால் அது அநியாய பச்சை பொய்யாக இருந்தாலும் திரியில் போட வேண்டியதன் காரணமே பொறாமை, காழ்ப்புணர்ச்சி, மக்கள் திலகத்தின் புகழை தாங்கி கொள்ள முடியாத வயிற்றெரிச்சல்தான் காரணம்.
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------

    மேலே கூறப்பட்ட உண்மை விவரங்கள் சம்பந்தமாக நடிகர் சங்கம் வெப்சைட்டில் கொடுத்துள்ளனர். அது பொதுமக்கள் பார்வைக்கு:

    http://nadigarsangam.org/

    தொடக்கமும் வளர்ச்சியும் :

    1930 மற்றும் 1940 வருடங்களில் புகழ் பெற்ற திரைப்பட தயாரிப்பாளரும் மற்றும் இயக்குனருமான திரு கே.சுப்பிரமணியம், 1950ஆம் ஆண்டு 'தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை' என்ற அமைப்பினை மேலும் சில திரைத்துறை சார்ந்த வல்லுனர்களுடன் சேர்ந்து நிறுவினார். இதுதான் நடிகர்களை ஒன்றிணைக்க, அவர்தம் வாழ்வு சிறக்க, இடப்பட்ட முதல் விதை ஆகும். அவர் இன்று நாட்டிய உலகில் தலை சிறந்து விளங்கும் பத்மபூஷன் பத்மா சுப்ரமணியம் அவர்களின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த அமைப்பை தொடர்ந்து, நடிகர்களின் நல்வாழ்வை மனதில் கொண்டு, திரு. தி என் சிவதாணு, மற்றும் ஆர் எம் சோமசுந்தரம் போன்ற கலைஞர்களால் 1952 ஆம் ஆண்டு 'தென்னிந்திய துணை நடிகர்கள் சங்கம்' என்ற அமைப்பு தொடங்கப்பட்டது.

    இந்த அமைப்பை பற்றியும் அதன் உயர்ந்த குறிக்கோளையும் பற்றி, அப்போது முன்னணி கதாநாயகனாக இருந்த மக்கள் திலகம் திரு எம் ஜி ராமசந்திரன் அவர்களிடம் எடுத்து உரைக்கப்பட்டது. அவரிடம் இருந்து வந்த உடனடி கேள்வி அமைப்பின் செயலாளர்களை திகைப்படைய செய்தது. அவர் கேட்ட கேள்வி 'நானும் இந்த அமைப்பில் உறுப்பினர் ஆகலாமா?' இந்த மாபெரும் மனிதர் கேட்ட ஒரு கேள்வியின் விளைவுதான் 'தென்னிந்திய நடிகர் சங்கம்' என்ற மாபெரும் அமைப்பு. . இன்று வரை இந்த அமைப்பு. இசை நாடக நடிகர்கள், சமூக நாடக நடிகர்கள், திரைப்பட நடிகர்கள் என அனைத்து வகை கலைஞர்களையும் உள்ளடக்கி அவர்கள் வாழ்க்கை மேம்பட சிறப்புடன் செயல்படுகிறது.

    நம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள், தானும் ஒரு உறுப்பினராக ஆனதோடு மட்டுமல்லாமல், 1952ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்கம், சங்கங்களுக்கான சட்டத்திற்கு உட்பட்டு, பதிவு செய்யப்படுவதற்கு வேண்டிய அனைத்தையும் செய்து உதவினார்.

    இவ்வாறு தொடங்கப்பட்ட 'தென்னிந்திய நடிகர் சங்கம்' சுருக்கமாக, நடிகர் சங்கத்தின் அலுவல்களை கவனிக்க இடம் இல்லாத சூழ்நிலை. அப்போது லாயிட்ஸ் சாலையில் அமைந்துள்ள அ.இ.அ.தி.மு.க. அலுவலகம் அன்று எம் ஜி ஆர் அவர்களின் இல்லமாக இருந்தது. அந்த இல்லத்திலேயே ஒரு பாகத்தை சங்கத்தின் பணிகளை மேற்கொள்ள, எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி பெரும் மனதுடன் ஒதுக்கி தந்தார். 1952 முதல் 1954 வரை சங்கப்பணிகள் அங்கிருந்தே மேற்கொள்ளப்பட்டன. திரை வானில் கொடிகட்டி பறந்த அனேக கலைஞர்கள் சங்கத்தின் உறுப்பினர் ஆனார்கள்.

    சங்கத்தின் பணிகள் மேலும் சிறக்க நிரந்தர இடம் தேவை என்பதை உறுப்பினர்கள் உணர்ந்து, இடம் தேட ஆரம்பித்தனர். ஜெமினி மேம்பாலம் அருகில் இருந்த 'சன் தியேட்டர்ஸ்' இடமும் தற்போது உள்ள ஹபிபுல்லா சாலை இடமும் பரிசீலிக்கப்பட்டது. மேம்பாலமும் அருகிலிருந்த பிரதான சாலையும் பின்னாளில் விரிவு படுத்தப்படும்போது, சிரமம் வரலாம் எனக் கருதி, ஹபிபுல்லா சாலையில் உள்ள இடமே முடிவு செய்யப்பட்டது. சுமார் 22 கிரவுண்டுகளை உள்ளடக்கிய இந்த இடம் பதிவு கட்டணம் உட்பட ரூபாய் 75,000/- மதிப்பில் வாங்கப்பட்டது. இந்த இடத்தை வாங்குவதற்கு ரூபாய் 35,000/- அனேக கலைஞர்களிடம் இருந்து நன்கொடையாக பெறப் பட்டது. மேலும், கூடுதல் தேவையான ரூபாய் 40,000/- த்தை நம் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் அவர்கள், தன் 3 திரைப்படங்களின் சம்பளத்தை 'கிருஷ்ணா பிக்சர்ஸ்' நிறுவனத்திடம் இருந்து பெற்று, நெருக்கடியான சூழ்நிலையில் இந்த சங்கத்துக்கு உதவினார். இப்படி ஒரு தனிமனிதனின் தியாகத்தையும், ஏனைய பல முன்னணி நடிகர்களின் உழைப்பையும் தாங்கி இந்த மாபெரும் சங்கம் வளர்ந்தது.

    1972 வரை நடிகர் சங்கம் ஒரு கூரை வேய்ந்த கட்டிடத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள், தலைவராக பொறுப்பேற்ற பின், நடிகர் சங்கத்திற்கு நிரந்தர கட்டிடம் தேவை என்பதை உணர்ந்து அனைவரும் சேர்ந்து ஒரு மனதாக முடிவு செய்து வங்கியில் ரூபாய் 22 லட்சம் கடன் வாங்கப்பட்டது. கட்டிடமும் கட்டி முடிக்கப்பட்டது.

    காலபோக்கில் நிரந்தர அல்லது தொடர்ந்த வருமானம் இல்லாத நிலையில், கடனை திருப்பி செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. அந்த தருவாயில் கூட, நம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் ரூபாய் 5 லட்சம் கொடுத்து உதவினார் மேலும் பலர், இயன்ற அளவு உதவி செய்து இந்த அமைப்பு சிறந்து விளங்க பாடுபட்டனர்.


    http://nadigarsangam.org/index.php/sifa/nigalvugal

    1971 வரை தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு ஒரு கொட்டகை (SHED) மட்டும் இருந்தது. அங்கே சின்னதாக ஒரு அலுவலகம் செயல்பட்டு வந்தது. 1971ல் சிவாஜி கணேசன் தலைமை பதவியேற்று, புரட்சி தலைவர் 'பாரத்' பட்டம் பெற்றதற்காக பாராட்டு விழா நடத்தும் போது சங்கத்திற்கு கட்டிடம் கட்டப்பட வேண்டும், அதுவரை தம்பி சிவாஜி கணேசன் அவர்கள் தான் தலைவராக இருக்கவேண்டும் என்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் கூடியிருந்த உறுப்பினர்கள் மத்தியில் கேட்டுக் கொண்டார்.

    சிவாஜி கணேசன் அவர்கள் தலைவராகவும், திரு மேஜர் சுந்தர்ராஜன் அவர்கள் பொதுச் செயலாளராகவும், வி.கே.ராமசாமி அவர்கள் பொருளாளராகவும், பொறுப்பேற்று, சங்க கட்டிடம் கட்ட ஸ்டேட் வங்கியில் ரூ 18,00,000/- கடனாக பெறப்பட்டது. வங்கியில் கடன் வாங்கும் போது, வங்கி கடனை அடைக்க, மாதா மாதம் ரூ 8000/- மும், வருடத்திற்கு ஒரு முறை 'ஸ்டார் நைட்' நிகழ்ச்சி நடத்தி ரூ 1,00,000/- கொடுப்பதாகவும் எழுத்து மூலமாக கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் சங்கத்தில் சரியான வருமானம் இல்லாத காரணத்தால் சங்க கடனை அடைக்க முடியாமல் நாளுக்கு நாள் வட்டியும், அசலும் அதிகமானது. வங்கியில் கடன் பெற்று இப்போது இடிக்கப்படும் முன்பு இருந்த கட்டிடத்தை கட்டினர். ஆகஸ்ட் மாதம் 1979 ல் "புரட்சி தலைவர்" முதலமைச்சர் ஆனவுடன் கட்டிடம் அவர் கையால் திறந்து வைக்க பட்டது.

    1979ல் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்கள் கடனை அடைக்க அரசிடம் நிதி கோரப்பட்டது. அரசு மூலம் அவரும் ரூ.5 லட்சம் நிதி வழங்கினார். இருப்பினும் கடன் அடைக்கப்படவில்லை. அசலுடன் வட்டி நாளுக்கு நாள் அதிகம் ஆகியது. ஏன் கடன் அடைக்கப்படவில்லை என்றால். வங்கி கடன் கட்டும் அளவுக்கு கட்டப்பட்ட கட்டிடத்தினால் வருமானம் வரவில்லை. வட்டியும் அசலும் கட்டாமல் கடன் வளர்ந்து வந்தது. 1,400 பேர் அமரக் கூடிய அரங்கம், பிரிவியு தியேட்டர் இருந்தும் வங்கி கடனை திருப்பி செலுத்த வருமானம் வரவில்லை.

    பின்னர் திரு. எஸ்.எஸ்.ராஜேந்திரன் தலைமை பொறுப்புக்கு வந்தார். நடிகர் சங்க சொத்து தானமாக நடிகர் சங்க அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட பத்திரத்தை ஆய்வு செய்து அதில் நடிகர் சங்க நிலத்திற்கு நடிகர் சங்கத்திற்கு எந்த பாத்தியதையும் இல்லை என்பதை கண்டுபிடித்து, திரு. சிவாஜி கணேசன் அவர்களிடம் அதை தெரிவித்து, அந்த தான பத்திரத்தை பொதுக்குழு தீர்மானம் மூலம் ரத்து செய்து, நிலத்தை மீட்டார். அப்போது கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் போதிய வருமானம் வராததால் வங்கி கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில், கடன் தொகை வளர்ந்து கொண்டே வந்தது.
    -------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

    திரியை படிக்கும் பொதுமக்களே, உண்மைகளை புரிந்து கொண்டீர்களா?

    இனிமேலாவது பொய்யர்கள் புரட்சித் தலைவர் மீது அவதூறு பரப்புவதை நிறுத்தட்டும்.

    நாய்கள் குரைத்து சூரியனில் தூசு படியாது
    சத்தியத்தாய் பெற்றெடுத்த உத்தமத் தலைவனாம் எங்கள் புரட்சித் தலைவன் மீது என்றைக்கும் மாசு படியாது.
    Last edited by makkal thilagam mgr; 29th November 2015 at 11:21 PM.

  5. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  6. #3533
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  7. #3534
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  8. #3535
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  9. Likes orodizli liked this post
  10. #3536
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  11. #3537
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  12. #3538
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  13. #3539
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  14. #3540
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •